M.K.Stalin (@mkstalin) header
M.K.Stalin (@mkstalin) profile picture

President of the DMK | Belongs to the Dravidian stock

Joined October 2013
Photo by M.K.Stalin (@mkstalin)Photo by M.K.Stalin (@mkstalin)Photo by M.K.Stalin (@mkstalin)Photo by M.K.Stalin (@mkstalin)Photo by M.K.Stalin (@mkstalin)Photo by M.K.Stalin (@mkstalin)Photo by M.K.Stalin (@mkstalin)Photo by M.K.Stalin (@mkstalin)Photo by M.K.Stalin (@mkstalin)Photo by M.K.Stalin (@mkstalin)
கேள்விகள் இல்லாத சமுதாயத்தை உருவாக்குவது நல்லாட்சியல்ல; கேள்விகளுக்குப் பதிலளிக்கும் நிர்வாகத்தை உருவாக்குவதுதான் நல்லாட்சி! விமர்சனங்களை உள்வாங்கித் தமது தவறுகளைத் திருத்திக்கொள்வதுதான் ஜனநாயகத்தின் மாண்பு! விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியது கருத்துகளால்; காவல்துறை நடவடிக்கைகளால் அல்ல! Fake ID-யின் Comment-ஐக் காரணமாகச் சொல்லி, அதிகாலையில் காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பேராசிரியர் கலையரசன் அவர்கள், தமக்கு நேர்ந்த அநீதிக்கு எதிராக உரிமைக்குரல் எழுப்பி வெளிவந்திருப்பதற்கு எனது வாழ்த்துகள்! சதியில் ஈடுபட்ட விர்ச்சுவல் விஷமிகளைக் கண்டறிவதோடு, அத்துமீறிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதும் அவசியம் என்பதை அரசுக்கு நினைவூட்டுகிறேன்.
92
1,240
31
3,570
100,223
மீண்டும் மீண்டுமா?? #TVKFails
#BreakingNews | கைதி தப்பியோட்டம் சென்னை கொளத்தூரில் போலீஸார் பாதுகாப்பில் இருந்த கைதி தப்பியோட்டம்; புழலில் 8 வயது சிறுமிக்கு பா*யல் தொல்லை கொடுத்ததாக கைதான ஆட்டோ ஓட்டுநர், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் தப்பியோட்டம் Accused Escape | TN Police | 31 October 2026 #Chennai #Kolathur #NewsTamil24x7
191
2,061
94
5,943
186,754
தமிழ்நாடெங்கும் இன்று @DMKWomensWing நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில், கட்சி சார்பற்ற மகளிரும் பெருந்திரளாகக் கலந்துகொண்டு தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். தங்கள் வீடுகளின் EB Bill-ஐயும் மளிகை Bill-ஐயும் பார்த்து, இந்த ஆட்சி மீது பெண்கள் பெரும் கோபத்தில் இருக்கின்றனர். விலைவாசி ஏற்றத்தால் ஏழை மக்கள் விக்கித்து நிற்கிறார்கள். போதாக் குறைக்கு, பெண்களுக்கு எதிரான குற்றங்களும் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன. தங்கள் வீட்டுப் பிள்ளைகளை வீட்டுக்கு வெளியே விளையாட விடவே அச்சப்படும் அளவுக்குச் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப் போயுள்ளதையும் அவர்கள் செய்திகளில் தினம்தினம் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். விமர்சனம் செய்வோரை வேட்டையாடுவதிலும், இடைத்தேர்தல் நடக்கவுள்ள தொகுதிகளில் Show காட்டுவதிலும் முதலமைச்சருக்கு இருக்கும் கவனம் ஆட்சி நிர்வாகத்திலும் இருக்க வேண்டும் என்பதற்கான எச்சரிக்கை மணியைத் தமிழ்நாட்டுப் பெண்கள் அடித்துவிட்டனர். அவர்களின் #WakeUpCall-க்குச் செவிசாய்ப்பது அரசின் கடமை! #TVKFails #PriceRise #LawAndOrder
121
1,059
48
2,410
52,227
வரலாறாய் வாழ்ந்து, வீரத்துக்கும் தியாகத்துக்கும் எடுத்துக்காட்டாக நிலைத்து நிற்கும் பசும்பொன் திருமகனாரைப் போற்றுகிறேன்! 🔷 விடுதலைப் போரில் நேதாஜியுடன் இணைந்து செயலாற்றிய தீரர்! 🔷 குற்றப் பரம்பரைச் சட்டத்தை எதிர்த்து, பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் உரிமைகளுக்காகப் போராடிய போராளி! 🔷 உழவர்களின் நலனுக்காகவும் தொழிலாளர்களின் உரிமைகளுக்காகவும் சங்கங்களை நிறுவியவர்; போராடிச் சிறை சென்ற தியாகி! 🔷 சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் மக்களுக்காகக் குரல் கொடுத்த மாண்பாளர்! “பத்தரை மாற்றுத் தங்கம்! பசும்பொன் சிங்கம்!” என்று மக்களால் போற்றப்பட்ட பசும்பொன் திருமகனாரின் புகழ் வாழ்க!
69
727
17
2,636
79,509
சொந்த புத்தியும் இல்லாமல், சொல் புத்தியும் இல்லாமல் சட்டம்-ஒழுங்கைச் சீரழித்துவிட்ட சோப்ளாங்கி த.வெ.க. அரசு! நாளை @DMKWomensWing நடத்தவுள்ள ஆர்ப்பாட்டம், தறிகெட்டு ஓடும் த.வெ.க. அரசுக்கான Wake-up call! முதலமைச்சரையும் தூங்கி வழியும் ஆட்சி நிர்வாகத்தையும் எழுப்ப முயற்சிப்போம்! ஆளத் தெரியாத அரசுக்குப் பாடம் புகட்டுவோம்! #TVKfails
725
2,765
228
6,280
292,603
பெண்கள், குழந்தைகள், முதியோர் என யாருமே பாதுகாப்பாக இல்லாத மாநிலமாகத் தமிழ்நாட்டை மாற்றிவிட்ட முதலமைச்சர், மக்களின் கவனத்தையும் - ஊடகங்களின் Breaking News-ஐயும் திசைதிருப்ப Roadshow நடத்தலாமா? Raidshow நடத்தலாமா? எனச் சிந்தித்துக் கொண்டிருக்கிறார். ஊழல் பெருச்சாளிகளை எல்லாம் பேரக் குதிரைகளாக மாற்றி தன் கட்சியில் இணைத்துக் கொண்டிருக்கும் த.வெ.க. எனும் “TN Branch Washing Machine”, தி.மு.க. ஆட்சியின் முன்னாள் அமைச்சர்களை மட்டும் குறிவைத்து நடத்திக் கொண்டிருக்கும் “Vettri Vendetta Politics” திட்டம், வழக்கம் போல் சட்டத்தின் முன் தோற்று, மக்கள் முன் தலைகுனிந்து நிற்கும்! திருச்சி கிழக்கு இடைத்தேர்தலுக்கான ரீல்ஸ் விடியோக்களைத் தயாரிக்கவும் - முதலமைச்சர் மேடையில் punch dialogue என்ற பெயரில் பல modulation-இல் காட்டுக்கத்து கத்தவும் நடத்தப்படும் இந்த ரெய்டுகளைக் கண்டு தி.மு.க.வின் கடைக்கோடிக் தொண்டரின் கால் நகம் கூட அஞ்சாது! சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, துருப்பிடித்துவிட்ட நிர்வாகம், வாட்டி வதைக்கும் விலைவாசி உயர்வு என மக்களை பாதித்துக் கொண்டிருக்கும் இந்த த.வெ.க. ஆட்சியைக் கண்டு, தமிழ்நாடு மட்டுமல்ல இந்திய நாடே எள்ளி நகைக்கிறது. இதை எல்லாம் மறைக்க, தி.மு.க.வினருக்கு வாய்ப்பூட்டு போடலாம் என்று நினைக்கிறீர்கள். இனி இன்னும் இன்னும் வேகமாகத் த.வெ.க. அரசின் வண்டவாளங்களைத் தண்டவாளம் ஏற்றுவோம்!
#JUSTNOW | திருச்சியில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர் #SunNews | #DVACRaid | #KNNehru
251
1,323
80
2,904
164,415
த.வெ.க. ஆட்சியில் வரலாறு காணாத விலைவாசி உயர்வை அம்பலப்படுத்தியதற்காக #DravidianModel ஆசிரியர் கலையரசன் அவர்கள் சட்டவிரோதமாகக் கைது: த.வெ.க. அரசின் உச்சகட்ட பாசிசம்! சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் (MIDS) உதவிப் பேராசிரியராக உள்ள முனைவர் கலையரசன் அவர்களை நேற்று அதிகாலை, சீருடை அணியாத காவலர்கள் சட்டவிரோதமாகக் கைது செய்து, வாடகை வாகனத்தில் ஏற்றிச் சென்ற செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளானேன். கைது செய்யப்பட்டவர் சாதாரண நபரோ, குற்றப் பின்னணி கொண்டவரோ இல்லை. திரு. கலையரசன் அவர்கள் தமிழ்நாட்டின் முதன்மையான ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரியும் பேராசிரியர். இந்தியாவின் தலைசிறந்த பல்கலைக்கழகமான JNU-வில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகமான கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் பதிப்பித்த "The Dravidian Model" நூலின் ஆசிரியர்களில் ஒருவர். ஒன்றிய அரசின் திட்டக்குழுவில் பொறுப்பு வகித்தவர். தமிழ்நாடு அரசின் பொருளாதார ஆய்வறிக்கையைத் தயார் செய்வதில் பங்களித்தவர். எல்லாவற்றுக்கும் மேல், தமிழ்நாடு முதலமைச்சர் தலைவராக இருக்கும் தமிழ்நாடு காலநிலை மாற்ற நிர்வாகக் குழுவின் உறுப்பினராக இப்போதும் இருப்பவர். அப்படிப்பட்டவரைத் தெரியாமல் கைது செய்துவிட்டோம் என்று கூறுவது நம்பும்படி இல்லை. செய்யாத குற்றத்திற்காக, அடிப்படை உரிமைகள் அனைத்தையும் மறுத்து, அவரது செல்போனைப் பறித்து, கைது செய்து அலைக்கழித்ததைச் சாதாரணச் செயலாக எவரும் கடந்துபோக முடியாது. குற்றவாளிகளை எல்லாம் கூத்தடிக்க விட்டுவிட்டு, கல்வியாளர்களை அச்சுறுத்திப் பார்ப்பது எவ்வளவு பெரிய அசிங்கம்? திரு. கலையரசன் அவர்கள் ஏன் கைது செய்யப்பட்டார்? Dravidian Model என்ற பதத்தை முன்வைத்து, திராவிட ஆட்சியால் தமிழ்நாடு அடைந்த வளர்ச்சியை உலகம் முழுவதும் பறைசாற்றியதற்காகவா? த.வெ.க. ஆட்சி அமைந்த பிறகுதான், தமிழ்நாடு இதுவரை சந்தித்திராத விலைவாசி உயர்வைச் சந்தித்துள்ளது என்ற உண்மையைச் சொன்னதற்காகவா? முட்டாள்களால் நிறைந்த த.வெ.க.வுக்கும் கல்விக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது அனைவரும் அறிந்ததுதான். ஆனால், கல்வியாளர்களைக் கைது செய்து மிரட்டும் அளவுக்கு அறிவின் மீது ஒவ்வாமை கொண்டவர்களாக இவர்கள் நடந்துகொள்வார்கள் என நிச்சயமாக நினைக்கவில்லை. பாசிசத்தில் பா.ஜ.க.வையும் மிஞ்சிவிடுவார்கள் என்பதைத்தான் இந்தக் கைது காட்டுகிறது. முதலமைச்சரின் ஒப்புதலோடும் உயரதிகாரிகளின் அனுமதியோடும்தான் இந்த அத்துமீறல் நடக்கிறதா? முனைவர் கலையரசன் அவர்கள் எந்தக் கட்சியையும் சார்ந்தவர் அல்ல. கடந்த ஆட்சிக்காலத்திலும், அவர் சுதந்திரமாகத் தன்னுடைய விமர்சனக் கருத்துகளை முன்வைத்திருக்கிறார். ஆனால், இந்தத் தரங்கெட்ட த.வெ.க. ஆட்சியோ, எங்கள் ஆட்சியைப் பற்றியோ நிர்வாகத் தோல்விகளைப் பற்றியோ ஊடகங்களில் உண்மையைப் பேசினால் விளைவுகள் மோசமாக இருக்கும் என்று மிரட்டும் ரவுடி அரசாகச் செயல்பட்டுள்ளது. இப்படிப்பட்ட அரசிற்கு ஆதரவு அளித்துக் கொண்டு இருக்கும் கட்சிகள், இந்த அநியாயத்தைக் கண்டும் காணாமல் இருப்பது ஏன்? இதுதான் இவர்கள் பாசிசத்தை எதிர்த்துக் கேள்வி கேட்கும் அரசியலா? புகழ்பெற்ற பேராசிரியர் மீது பொய்யான குற்றச்சாட்டைப் புனைந்து, அவரை அலைக்கழித்து, துன்புறுத்திய த.வெ.க. அரசின் பாசிச செயல் கடும் கண்டனத்துக்குரியது. தமிழ்நாடு காவல்துறையும், அதற்குப் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் அவர்களும் முனைவர் கலையரசன் அவர்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்!
172
2,660
64
5,477
269,092
தூத்துக்குடி கந்தன் காலனியில் வீட்டில் தனியாக இருந்த சசிகலா எனும் பெண்மணி வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார் தூத்துக்குடியில் 4 நாட்களில் 7 கொலைகள்! இதற்கு என்ன விநோத விளக்கத்தை மாவட்டக் காவல்துறையினர் வெளியிடப் போகின்றனர்? வெளியில்தான் பாதுகாப்பில்லை, நிம்மதியாக யாரும் நடமாட முடியவில்லை என்று பார்த்தால், வீட்டுக்குள் இருக்கவே அச்சமடையும் நிலைக்கு மக்களைத் தள்ளியதுதான் த.வெ.க.வின் சாதனையா? #LawAndOrder #Thoothukudi
News Tamil Breaking || கொ*ல நகரமாகிறதா தூத்துக்குடி மாவட்டம்? Thoothukudi | Police Investigation | 28 Oct 2026 #NewsTamil24x7 #CrimeNews
151
1,579
31
3,022
102,766
❓ 97 இலட்சம் வாக்காளர்கள் பட்டியலில் ஏன் இல்லை? ❓ வாக்காளர் நீக்கங்கள் தேர்தல் முடிவுகளை மாற்றியதா? ❓ தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை எங்கே? இவை வெறும் கேள்விகளல்ல; ஜனநாயகத்தின் அடித்தளத்தையே உலுக்கும் குற்றச்சாட்டுகள்! 🔷 ஞானேஷ் குமாரைப் பதவிநீக்கம் செய்ய நடவடிக்கை 🔷 SIR ரத்து 🔷 மீண்டும் வாக்குச்சீட்டு முறை உள்ளிட்ட கோரிக்கைகளுடன் மாண்புமிகு குடியரசுத் தலைவருக்கு மனு அனுப்பியுள்ளேன். வாக்குரிமை என்பது சலுகையல்ல; அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமை! ஒவ்வொரு வாக்கும் கணக்கில் வர வேண்டும். ஒவ்வொரு வாக்காளரின் உரிமையும் காக்கப்பட வேண்டும். நமது கேள்விகளுக்குப் பதில் வேண்டும்! ஜனநாயகத்திற்கு நீதி வேண்டும்! #SaveDemocracy #StopSIR
#WATCH | மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பதிலாக, பழையபடி வாக்குச்சீட்டு முறையில் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும்! மக்களுக்குத் தேர்தல்களின் மீதான நம்பிக்கையை மீட்டெடுக்கவும், தேர்தல் முடிவுகள் நியாயமாக அமைந்திடவும் வாக்குச்சீட்டு முறை வேண்டும்! அனைத்து மாநிலங்களிலும் தேர்தலுக்கு முன்பாக அவசரகதியில் நடத்தப்பட்ட S.I.R. முழுமையாக ரத்து செய்யப்பட வேண்டும்! - டி.ஆர்.பாலு எம்.பி, திருச்சி சிவா எம்.பி வலியுறுத்தல்! #TRBalu | #Trichysiva | #Kalaignarseithigal
188
1,375
32
2,722
107,801
சிறை, பள்ளி, சாலை, நீதிமன்றம் என எங்கும் பாதுகாப்பில்லை! இதைப் பற்றி எல்லாம் முதலமைச்சருக்கு அக்கறை இல்லை. அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல் இல்லை. குற்றவாளிகளுக்கு பயமில்லை. த.வெ.க. ஆட்சி இருக்கும் வரை தமிழ்நாட்டுக்கு விடிவே இல்லை! #LawAndOrder #TVKFails
#JustNow || சென்னை அடையாறில் பட்டப்பகலில் இளைஞரை வெட்டிக் கொலை செய்த 3 பேர் கொண்ட கும்பல் தப்பிச்சென்ற காட்சி #Chennai | #Adyar | #PolimerNews | #PolimerNews
265
2,012
62
5,015
191,221
Breaking Bad தொடர்ந்து, தமிழ்நாட்டில் Prison Break-உம் தொடங்கிவிட்டது! ஜாமினில் வெளிவரும் குற்றவாளிகளைத்தான் கண்காணிப்பதில்லை என்று நினைத்தேன். சிறைக்குள் இருக்கும் கைதிகளையும் தப்பிக்க விடும் இலட்சணத்தில்தான் இந்த ஆட்சி இருக்கிறது. புழல் சிறையில் இருந்து 2 கைதிகள் தப்பி ஓடிய அதிர்ச்சியில் இருந்து நாம் மீள்வதற்குள், தேனி மாவட்டச் சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பியுள்ளனர். ஒரேயடியாக இத்தனை கைதிகள் தப்பிப்பது 1995-க்குப் பிறகு இதுதான் முதல்முறை என்கிறார்கள். பாதுகாப்பு ஏற்பாடுகளும், கண்காணிப்பு வசதிகளும் மேம்பட்ட 2026-இல் இப்படி நடப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. வெளியில் இருக்கும் குற்றவாளிகள் சுதந்திரமாகக் குற்றங்களைப் புரிகிறார்கள். உள்ளே இருக்கும் கைதிகளும் தைரியமாகத் தப்பிச் செல்கிறார்கள். மொத்தத்தில், ஒன்றுக்கும் உதவாத good for nothing அரசாக இந்த மூடர்கூடத் த.வெ.க. அரசு இருக்கிறது. இவர்கள் மக்களைக் காக்கப் போவதில்லை. மக்களே அவர்களைக் காத்துக் கொள்ள வேண்டிய அவல நிலைக்குத் தமிழ்நாடு சென்றுவிட்டது.
680
3,600
464
9,733
1,049,855
அரசியல் காழ்ப்புணர்வோடு முன்னாள் அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களைக் கைது செய்துள்ள த.வெ.க. அரசுக்குக் கடும் கண்டனம்! தன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வந்த திரு. அன்பில் மகேஸ் அவர்களைக் கைது செய்திருப்பதன் மூலம், சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கின் அவலட்சணத்தையும், அழுகிக் கொண்டிருக்கும் நிர்வாகச் சீர்கேட்டையும் சில நாட்களுக்கு மறைத்து, மக்களின் கவனத்தைத் திசைதிருப்பிவிடலாம் என்று ஆளும் அரசு நினைக்கிறது. அன்பில் மகேஸ் அவர்கள் தன் மீதான குற்றச்சாட்டுகளைச் சட்டப்படி எதிர்கொள்வார். அதேசமயம், இதுபோன்ற கைது நடவடிக்கைகளால் மக்களின் கோபத்தைத் திசைதிருப்பித் தப்பித்துக்கொள்ளலாம் என்று நினைக்கும் த.வெ.க. அரசின் எண்ணம் நிச்சயம் ஈடேறாது!
1,053
2,373
247
6,495
736,774
பட்டப்பகலில் வெட்டவெளியில் தொடரும் கொலைகள் 🚨 சேலத்தில் பகல் நேரத்தில் பொது இடத்திலேயே கொலை நடந்திருக்கிறது. 🚨 மதுரையில் மாயமான சிறுவன் சடலமாக மீட்கப்பட்டிருக்கிறான். 🚨 காணாமல் போன செஞ்சி சிறுமி எங்கே என்பது இப்போது வரை மர்மமாகவே இருக்கிறது. 🚨 வீடியோ கேம்கள், ஹாரர் திரைப்படங்களை மிஞ்சும் அளவுக்குத் தமிழ்நாட்டில் குற்றங்கள் பெருகி வருகின்றன. 🚨 த.வெ.க. ஆட்சியில் Free Run கிடைத்தது போல குற்றவாளிகள் அச்சமின்றிக் குற்றச் செயல்களைப் புரிகிறார்கள். 🚨 தினமும் கொலைகளை எண்ணும் கொடிய நிலையில் தமிழ்நாடு இருக்கிறது. 🚨 சட்டம் ஒழுங்குக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்பதுபோல, முதலமைச்சர் ஏன் மவுனமாக இருக்கிறார்? சட்டம் ஒழுங்கு பற்றி வாய் கிழியப் பேசுவதில் வல்லவரான அவர் இப்போது ஏன் வாயே திறப்பதில்லை? 🚨 சட்டம் ஒழுங்கு சீர்கேட்டைக் கண்டித்து, வரும் சனிக்கிழமை (அக்டோபர் 31) தமிழ்நாடு முழுவதும் @DMKWomensWing சார்பில் போராட்டம் நடத்தப்படும்! #LawAndOrder
168
2,030
41
3,533
105,935
த.வெ.க. ஆட்சியில் Wild Wild Tamil Nadu..! கடந்த இரு மாதங்களாகத் தமிழ்நாட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நடைபெற்று வரும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை மற்றும் சிறுவர்கள் மாயமாகும் சம்பவங்களால் பொதுமக்கள் பீதியில் உறைந்து போயுள்ளனர். இதை முன்பே கணித்துத்தான், "இது என்ன நாடா இல்லை காடா?" என நாஸ்ட்ரடாமஸ் போல தேர்தலுக்கு முன்பு விஜய் அவர்கள் பேசினாரா? 'துப்பாக்கி ஹீரோ' எனத் திரையில் பார்த்ததை நம்பி வாக்களித்த மக்களே, குற்றங்களைத் தடுக்கத் 'துப்பில்லாத ஹீரோ' எனப் பேசத் தொடங்கிவிட்டனர். கோட் சூட் - பட்டு வேட்டி சட்டை அணிவதும், கான்வாயில் வந்து செல்வதும் மட்டும்தான் முதலமைச்சரின் பணி என்ற மூடநம்பிக்கையில் இருந்து எப்போது விடுபடுவார் திரு. விஜய்? முதமைச்சருக்கான அலுவலகத்தையும், இல்லத்தையும் தயார் செய்வது தொடர்பான வேலைகளைத் தவிர, ஆறு மாத த.வெ.க. ஆட்சியில் உருப்படியாக வேறு ஒன்றுமே நடந்ததாகத் தெரியவில்லை. தனது சொகுசைப் பற்றி இருக்கும் அக்கறையில் சிறிதேனும் பொதுமக்கள், குழந்தைகளின் பாதுகாப்பில் முதலமைச்சருக்கு இருக்க வேண்டும். கொலைக்களமாகவும் குற்றவாளிகளின் வேட்டைக்காடாகவும் தமிழ்நாடு மாறி வருவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
155
2,223
73
4,247
136,468
வாக்களிக்காதவர்கள் மட்டுமல்ல, வாக்களித்தவர்களும் புலம்பும் ஆட்சியாக த.வெ.க. ஆட்சி இருக்கிறது!
371
1,480
57
3,553
95,465
மண்ணின் மானம் காத்த மருதிருவருக்கு மானமிகு வீரவணக்கம்! புறநானூற்றுத் தமிழர் வீரத்துக்கு இலக்கணமாக ஆங்கிலேயரை எதிர்த்து நின்று போர் புரிந்த சிவகங்கைச் சீமையின் சீற்றமிகு காளைகள் பெரிய மருது அவர்களும் சின்ன மருது அவர்களும். இந்தியர் அனைவரும் வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையோடு போராடினால் அந்நியர் ஆட்சியை அடியோடு அகற்றிடலாம் என அனைவருக்கும் முன்பே 'ஜம்புத்தீவு பிரகடனம்' வழியாக முழங்கிய சமூக நல்லிணக்க வீரர்கள் மருது சகோதரர்கள். உயிரைத் தியாகம் செய்து விடுதலை உணர்வை விதைத்த அந்தப் போராளிகளின் நினைவு நாளில் அவர்களுக்கு என் வீரவணக்கம்! #MarudhuBrothers
24
553
4
1,692
41,284
அல்லற்பட்டு ஆற்றாது அழும் கண்ணீர் இது என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும். #PriceRise #Inflation
"விலைவாசியைக் குறைங்க, விலைவாசியைக் குறைங்க!" - சாலையில் படுத்து தர்ணாவில் ஈடுபட்ட பெண்ணால் பரபரப்பு! Sivagangai | Price Hike | Vilaivasi | Protest #WomanProtest #Inflation #NewsTamil24x7
520
2,715
103
6,736
303,646
நீர் மேலாண்மை, நில மேலாண்மை, ஆட்சி நிர்வாகம், கட்டடக்கலை, படைவலிமை, போர்த்திறன் எனப் பலவற்றிலும் மாபெரும் உயரங்களை எய்தி, தமிழர் பெருமையை உலகறியச் செய்தவர் மாமன்னர் இராசராசச் சோழன்! அவரது பிறந்தநாளினை ஆண்டுதோறும் அரசு விழாவாகக் கொண்டாடிட, 2022-ஆம் ஆண்டு திராவிட மாடல் அரசில் வெளியிட்ட அறிவிப்பிற்கிணங்க, 1041-ஆவது சதய விழா இன்று கொண்டாடப்படுகிறது. மேலும், துறைவாரியாகச் சோழர் காலச் சிறப்புகளை இக்காலத் தலைமுறையினரின் கண்முன் கொண்டு வரவேண்டும் என்ற பேரார்வத்துடன் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில் சுமார் 56 கோடி ரூபாய் செலவில் சோழர் அருங்காட்சியகம் அமைக்க #DravidianModel ஆட்சியில் விதையை ஊன்றியிருக்கிறோம். அந்த விதை மரமாகிட வேண்டும்! பழக்க தோஷத்தில் அந்தத் திட்டத்தையும் த.வெ.க. அரசு குறுகிய பார்வையுடன் இரத்து செய்து, தமிழர் வரலாற்றை இருட்டடிப்பு செய்திட மாட்டார்கள் என நம்புவோம். இராசராசச் சோழனின் சதய விழா தஞ்சையில் சிறப்புற நடந்தேறுக! அரசர்க்கரசரின் புகழ் வாழ்க! #RajaRajaChola #Cholas
75
760
15
2,199
63,565
காவல்துறை: சட்டத்தை நிலைநாட்டும் அமைப்பு மட்டுமல்ல; நமது சமூகத்தின் நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு அரண்! காவலர்கள் ஆற்றும் கடமையையும் அவர்களது அளப்பரிய தியாகத்தையும் #PoliceCommemorationDay-இல் நன்றியோடு நினைவுகூர்வோம்! மக்களின் பாதுகாப்புக்காகவும் அமைதியான வாழ்வுக்காகவும் ஆபத்துகளை எதிர்கொண்டு, அர்ப்பணிப்புணர்வோடு கடமையாற்றி இன்னுயிர் ஈந்த காவலர்கள் அனைவருக்கும் எனது வீரவணக்கம்!
80
685
17
2,595
103,405
நூற்றாண்டு வரலாற்றுப் பெருமைகொண்ட ABP குழுமத்தின் ‘@abpnadu’, 24 மணி நேர ஒளிபரப்பைத் தமிழில் தொடங்கியிருப்பதற்கு மனமார்ந்த வாழ்த்துகள்! செய்திகளை முந்தித் தரும் வேகத்தைவிட, உண்மையை உறுதிசெய்து தரும் பொறுப்பே ஊடகத்தின் உயர்ந்த அறம்! அதிகாரத்திற்கு அஞ்சாமல், மக்களின் குரலாகவும் சமூகத்தின் மனச்சாட்சியாகவும் திகழ்ந்து, ஊடக அறத்துடன் ‘ABP நாடு’ மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்!
தமிழ் டிஜிட்டல் செய்தித்துறையில் புதிய அத்தியாயம் நூற்றாண்டு பெருமைகொண்ட ABP குழுமம் 24*7 தமிழ் செய்தித் தொலைக்காட்சியாக இன்று கால் பதித்தது. ABP நாடு YouTube தளத்திலும் ABP Live - Official App மற்றும் Smart TV - களிலும் காணலாம்! Live : youtube.com/live/f0cRTVIzvY4 #ABPLIVE #24X7 #Live #NewsChannel #abpnadu
72
363
68
1,265
132,103