Yuvan retweeted
Congratulations on an incredible IPL career, Dhoni bhai. It's been fun sharing the field and so many memories with you over the years. Much respect!
Yuvan retweeted
We have seen the last of this wonderful person as a player!
His retirement today from the IPL as a player reflected his signature way of saying Goodbye to us - unassuming and on his own terms!
Thank you MSD for being who you are and for entertaining and educating us!
Yuvan retweeted
திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது என்பது காலங்காலமாகப் பின்பற்றப்பட்டு வரும் வழிபாட்டு மரபு. மக்களின் மத நம்பிக்கையோடும், பாரம்பரியத்தோடும் தொடர்புடைய இந்த நடைமுறையை, அரசியல் காரணங்களுக்காகத் தடுத்து நிறுத்துவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.
கடவுள் மறுப்பு என்ற போலியான பிம்பத்தைக் கட்டமைப்பதற்காக, முந்தைய திமுக அரசு கையாண்ட அதே அணுகுமுறையை தற்போதைய தவெக அரசும் தொடர்வது முற்றிலும் ஏற்புடையதல்ல.
மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தெளிவான உத்தரவு பிறப்பித்த பிறகும், அந்த உத்தரவைச் செயல்படுத்துவதற்குப் பதிலாக மேல்முறையீடுகள் மூலமும் நிர்வாகத் தாமதங்கள் மூலமும் விவகாரத்தைத் தொடர்ந்து இழுத்தடிப்பது நீதித்துறையின் உத்தரவுகளுக்கும், பக்தர்களின் உரிமைகளுக்கும் எதிரானது. அரசின் பொறுப்பு பிரச்சனையை நீட்டிப்பதல்ல, சட்டத்தின் அடிப்படையில் தீர்வை உறுதிப்படுத்துவதே.
அனைத்து மதங்களையும் சேர்ந்த மக்கள் சகோதரத்துவத்துடனும் நல்லிணக்கத்துடனும் வாழ்ந்து வரும் திருப்பரங்குன்றத்தில், தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்கி அமைதியைக் குலைக்கும் நடவடிக்கைகளுக்கு மாநில அரசே காரணமாகிவிடக் கூடாது. வருடம் ஒரு நாள், பக்தர்கள் ஒரு குழுவாக அமைதியாகச் சென்று, தீபம் ஏற்றுவதில், யாருக்கு என்ன பிரச்சனை வந்துவிடப் போகிறது.
காலங்காலமாகத் தொடரும் வழிபாட்டு உரிமையை இனியும் அரசியல் மற்றும் நிர்வாகக் காரணங்களைக் கூறி முடக்காமல், உயர்நீதிமன்ற உத்தரவை மதித்து, இந்த விவகாரத்திற்கு தவெக அரசு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
Yuvan retweeted
மனு அளிக்க வந்த ஒரு சாமானியர் தாக்கப்பட்ட சம்பவமும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் வெளியிட்ட காணொளியைத் தொடர்ந்து, தன் மீது தாக்குதல் நடைபெறவில்லை என்று அவரையே வாக்குமூலம் அளிக்க நிர்பந்தித்ததாக வெளியாகியுள்ள தகவல்களும் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன.
துணை சபாநாயகர் பொறுப்பில் இருக்கும் துறையூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. ரவி சங்கர் அவர்களும், சட்டத்தைக் காக்க வேண்டிய காவல்துறை ஆய்வாளரும் இத்தகைய செயல்களில் ஈடுபட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் வன்மையான கண்டனத்திற்குரியவை.
தாக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒருவருக்கு நீதி வழங்குவதற்குப் பதிலாக, தாக்குதலே நடக்கவில்லை என்று அவரையே சொல்ல வைப்பது எந்த வகையான சட்டம் ஒழுங்கு?
அதிகாரம் என்பது மக்களின் குரலை ஒடுக்குவதற்கான கருவி அல்ல. காவல்துறை என்பது அதிகாரத்தில் இருப்பவர்களின் விருப்பங்களுக்கு ஏற்ப செயல்படும் அமைப்பும் அல்ல.
பாதிக்கப்பட்ட திரு. கார்த்திக் குமார் அவர்களுக்கு நீதி கிடைப்பதை தவெக அரசு உறுதி செய்ய வேண்டும். இச்சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது பாரபட்சமற்ற விசாரணை நடத்தி, தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Yuvan retweeted
“ADAVADI GANG” ON THE WAY❤️🔥
Alapparai starting prandsss…😜
TEASER FROM TOMORROW – 3 PM! ⏳
Directed by @VJSiddhuOG
Produced by @IshariKGanesh
Stay tuned for what’s coming next. 👀
@IshariKGanesh @kushmithaganesh @Music_Siddhu @natty_nataraj @PradeepERagav @dineshkrishnanb @meevinn @prosathish @VickyStunt_dir @Azarchoreo @keerthivasanA @ambaninsk @kav_pandian #sushantprasad
#Dayangaramupdate #VelsFilmInternational #VelsMusicInternational
Yuvan retweeted
For the second consecutive year, I returned to Goa to take on the Ironman 70.3 challenge. I am glad to have crossed the finish line once again.
There were moments when excruciating pain and relentless cramps made every step an uphill battle. Crossing the finish line made every bit of the struggle worthwhile.
The journey continues to make me a better version of myself!
Heartiest congratulations to all participants who took up the challenge this year, and a special shout-out to the volunteers of this world-class organisation, Ironman 70.3 Goa, for making the event memorable.
Yuvan retweeted
ஆன்மீகமும், தேசிய உணர்வும் சமூகப் பற்றும் ஒருங்கே கொண்ட தெய்வத் திருமகனார் ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் குருபூஜை தினம் இன்று.
சுதந்திரப் போராட்ட வீரராகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்த மக்கள் தலைவராகவும் விளங்கியவர் ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்.
தன்னலமற்ற பொதுவாழ்வு, அஞ்சாத நெஞ்சம், உறுதியான கொள்கைப்பற்று, தெய்வ பக்தி ஆகியவற்றின் அடையாளமாகத் திகழ்ந்த தேவர் பெருமகனாரின் வாழ்க்கை வருங்காலத் தலைமுறையினருக்கு என்றும் வழிகாட்டியாக இருக்கும்.
Yuvan retweeted
ஆட்டோ கட்டணங்களை உயர்த்தியுள்ளது தமிழக அரசு. இதனால் எந்த பயனும் ஏற்படப்போவதாக தெரியவில்லை. நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை தான் ஆட்டோ ஓட்டுனர்கள் வாங்குவதாக கற்பனையிலேயே இன்னும் அரசும், அதிகாரிகளும் இருப்பது வேடிக்கையே. வாய்க்கு வந்த படி கட்டணம் கேட்பது, பயணிகளை மரியாதை இல்லாமல் பேசுவது, அழைக்கும் இடத்திற்கு வர மறுப்பது, சீருடை அணியாமல் வாகனம் செலுத்துவது, ஆபத்தான முறையில் வாகனம் செலுத்துவது என பல்வேறு விதிமீறல்களை அலட்சியமாக செய்வது வாடிக்கையாகி விட்ட நிலையில், எவ்வளவு கட்டணம் விதித்தால் என்ன? பயணிகளின் இடர்பாடுகள் அகலப்போவதில்லை.
நாராயணன் திருப்பதி.
Yuvan retweeted
பள்ளிக் கல்வித்துறை தொடர்பான முறைகேடு குற்றச்சாட்டின் அடிப்படையில், முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டுள்ள நடவடிக்கையை வரவேற்கிறோம். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.
கடந்த 2023 ஆம் ஆண்டு, நாங்கள் DMK Files வெளியிட்டபோது, தமிழ்நாட்டில் நோபல் ஸ்டீல் நிறுவனத்தின் ₹1,000 கோடி முதலீடு தொடர்பாக நாம் எழுப்பிய கேள்விகளுக்கு அன்றைய திமுக அரசு உரிய விளக்கம் அளிக்கவில்லை. அந்த முதலீடும் தமிழகத்துக்கு வரவில்லை, முறைகேடான முதலீடு என்ற எங்கள் குற்றச்சாட்டுக்கும் இன்றுவரை பதில் இல்லை.
திரு. அன்பில் மகேஷ் தொடர்பான உதயநிதி ஸ்டாலின் பெயரிலான அறக்கட்டளை, நோபல் குழுமத்தின் மற்றொரு நிறுவனமான நோபல் பிரிக்ஸ் நிறுவனம் இயங்கி வந்த அதே முகவரியில் இயங்கி வந்ததாகக் கூறப்பட்ட தகவலுக்கும் இன்று வரை பதில் இல்லை. நோபல் பிரிக்ஸ் நிறுவனத்திற்கும் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளைக்கும் இடையே என்ன தொடர்பு? அந்த நிறுவனத்தின் ₹1,000 கோடி முதலீடு தொடர்பான கேள்விகளுக்கு என்ன பதில்?
இந்த விவகாரத்திலும் தவெக அரசு வெளிப்படையான விசாரணை நடத்தி, உண்மைகளை மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
நேத்து வரைக்கும் மாநிலத்துல அண்ணாமலைன்னு சொன்னான். இப்ப விஜய்க்கு வந்துருக்கான். நாளைக்கு தனுஷக்கிட்ட போயிட்டு அப்புறம் பிரதீப் ரங்கநாதன் வரைக்கும் கூட போக வாய்ப்பிருக்கு. ம்யூட்ல போட்டுட்டு கடந்து போங்க மக்களே.
Yuvan retweeted
வெள்ளையர்களை விரட்டியடித்த வீரச்சகோதரர்கள் மருது பாண்டியர்களின் தியாகத்தையும், துணிச்சலையும் அவர்களின் 225-ஆம் நினைவு நாளில் போற்றி வணங்குவோம்!
உலகையே நடுங்க வைத்த ஆங்கிலேயர்களை ஓட ஓட விரட்டியடித்த வீரத்தின் விளைநிலம் மருது சகோதரர்கள், சதியால் வீழ்த்தப்பட்டு தூக்கிலிடப்பட்டதன் 225-ஆம் நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்படும் நிலையில், அவர்களின் வீரத்தையும், தியாகத்தையும் நான் போற்றி வணங்குகிறேன். தாய்நாட்டைக் காப்பதற்காக எந்த தியாகத்திற்கும் தயாராக இருந்த மருது பாண்டியர்களின் வரலாறு இன்றைய இளம் தலைமுறையினருக்கு கொண்டு செல்லப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
பெரிய மருது, சின்ன மருது எனப்படும் இவர்கள் 1785 முதல் 1801 வரை நம் மண்ணை அடிமைப்படுத்தி ஆண்டுவந்த ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஆயுதம் தாங்கி வீறுகொண்டு போராடினார்கள். பீரங்கி போன்ற அதிநவீன ஆயுதங்களுடன் போரிட வந்த வெள்ளையர்களை வேல்கம்பும், வீச்சரிவாளும் வைத்து ஓடஓட விரட்டிய பெருமை கொண்டவர்கள் மருது சகோதரர்கள்.
வீரபாண்டிய கட்டபொம்மனின் சகோதரர் ஊமைத்துரைக்கு அடைக்கலம் தந்ததற்காக 1801ம் ஆண்டு சிவகங்கை மீது ஆங்கிலேயர்கள் போர் தொடுத்தனர். சதித்திட்டங்கள் மூலம் சிவகங்கையை சுற்றி வளைத்த ஆங்கிலேயர்களிடம் இருந்து அவர்கள் தப்பிவிடுகின்றனர். மருது சகோதரர்களை பிடிக்க முடியாததால் ஆத்திரத்தில் காளையார் கோவில் கோபுரம் இடித்து தள்ளப்படும் என்று ஆங்கிலேய படைகள் அறிவித்தன. ஆசை, ஆசையாக கட்டிய கோபுரம் இடிக்கப்பட்டுவிட கூடாது என்ற காரணத்தால் இறுதியாக ஆங்கிலேய படைகளிடம் மருது சகோதரர்கள் சரணடைந்தனர். அதன்பின்னர் அவர்களை திருப்பத்தூரில் ஆங்கிலேயர்கள் தூக்கிலிட்டனர். 1801-ஆம் ஆண்டில் மருது பாண்டியர்கள் நடத்தியது தான் வெள்ளையர்களுக்கு எதிரான முதல் விடுதலைப் போர் ஆகும்.
மருது சகோதரர்கள் நினைத்திருந்தால், ஆங்கிலேயர்களுக்கு ஒத்துழைத்து அரச வாழ்க்கையை வாழ்ந்திருக்கலாம்; ஆனாலும் அது அடிமை வாழ்க்கை தான் என்பதை அவர்கள் உணர்ந்திருந்தார்கள். ஆங்கிலேயர்கள் பிடியிலிருந்து தப்பிய நிலையில் அவர்கள் வேறு நாடுகளுக்கு சென்றிருக்கலாம். ஆனால், தங்களின் நாடு வெள்ளையர்களின் கைகளில் சிக்கிவிடக் கூடாது என்பதற்காக இறுதி வரை போராடினார்கள்; தாங்கள் தப்பிச் சென்றால் காளையார் கோவில் கோபுரத்தை வெள்ளையர்கள் இடித்து தள்ளிவிடுவார்கள் என்பதால், அதைக் காப்பதற்காக சரணடைந்து உயிரை ஈந்தனர். இது தான் தியாகத்திற்கான சான்று ஆகும்.
வீரம், துணிச்சல், தியாகம் உள்ளிட்டவற்றுக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்த மருது சகோதரர்கள் தேசப்பற்றுக்கு முன்னுதாரணம் ஆவர்.அவர்களின் வீரத்தையும், தீரத்தையும், தியாகத்தையும் இந்த நாளில் நினைவு கூர்வோம்; மண்ணைக் காக்க எந்த தியாகத்தையும் செய்ய தயாராவோம்.
Yuvan retweeted
ஆங்கிலேயே ஆதிக்கத்திற்கு எதிராக வீர முழக்கமிட்டு, தாய்மண்ணின் இறையாண்மையையும், தன்னுரிமையையும் காக்கத் தங்கள் இன்னுயிரையே ஈகம் செய்து, விடுதலை வேட்கையை விதைத்த வீரத்தின் திருவுருவங்கள், மாமன்னர்கள் மருது சகோதரர்களின் நினைவுதினத்தில், அவர்களின் தியாகத்தையும், தீரத்தையும் நினைவுகூர்ந்து, போற்றி வணங்குகின்றேன்.
Yuvan retweeted
அடிமைத்தனத்தை எதிர்த்து,
அந்நிய ஆதிக்கத்தைத் தகர்த்து
அடக்குமுறைக்கு அடிபணியாத
அடங்க மறுத்த வீரத்தின்
அடையாளங்கள்!
சீறி வந்த வெள்ளையனின்
சிரங்களைக் கொய்து
சிங்கமென போரிட்ட சிவகங்கைச் சீமையின் சரித்திர சின்னங்கள்!
வாளின் முனையில் வீரத்தையும்,
வாழ்வின் முடிவில் தியாகத்தையும்
வரலாற்றில் பதித்தவர்கள்!
மாமன்னர்கள் மருது சகோதரர்களின் 225-வது குருபூஜை நாளில் தியாக நினைவுகளைப் போற்றி வணங்கி புகழ் வணக்கம் செலுத்துவோம்! 🙏
#மருது_சகோதரர்கள்
Yuvan retweeted
தாய்நாட்டின் விடுதலைக்காக தம் இன்னுயிரைத் தியாகம் செய்த, சிவகங்கைச் சீமையை ஆண்ட மருது சகோதரர்களின் நினைவு நாளில், அவர்தம் ஒப்பற்ற வீரத்தையும், அளப்பரிய தியாகத்தையும் போற்றி எனது வீரவணக்கத்தைச் செலுத்துகிறேன்.
இந்தியாவின் முதல் சுதந்திரப் போருக்கு முன்னதாகவே, ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்து, அனைவரையும் விடுதலைப் பாதையில் ஒன்றிணைக்கும் வகையில், 'ஜம்புத் தீவு பிரகடனத்தை' முழங்கிப் போராடிய மருது சகோதரர்களின் அர்ப்பணிப்பு போற்றுதலுக்குரியது.
விடுதலை உணர்வைத் தமிழ் மண்ணில் விதைத்த மருது சகோதரர்களின் வீரவரலாறு தலைமுறைகளைக் கடந்தும் நிலைத்திருக்கட்டும்!
#CMJosephVijay



























