
ALT ஆவடி மாநகராட்சி சார்பில், மண்டலம் 1, வார்டு 2, முத்தாபுதுப்பேட்டை MES சாலையில் நடைபெற்ற மருத்துவ முகாமை சுகாதார ஆய்வாளருடன் இணைந்து ஆய்வு செய்தனர். இம்முகாமில் 32 பேர் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்றனர். மேலும், டெங்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நபரின் இல்லத்தில் மருத்துவ அலுவலருடன் இணைந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. டெங்கு கொசு உற்பத்தியாகும் இடங்களைக் கண்டறிந்து அழிக்கும் பணிகள் (DBC) சரிபார்க்கப்பட்டதுடன், கொசு மருந்து தெளிக்கும் பணிகளும் ஆய்வு செய்யப்பட்டன. @CMOTamilnadu #DenguePrevention #MedicalCamp #DBC #cmotamilnadu

ALT ஆவடி மாநகராட்சியின் வரிகளை QR Code, GPay, PhonePe மற்றும் UPI போன்ற டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை முறைகள் மூலம் எளிதாகவும் பாதுகாப்பாகவும் செலுத்தலாம். சொத்து வரி, காலிமனை வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம் மற்றும் பாதாள சாக்கடை வரி உள்ளிட்ட வரிகளை வீட்டிலிருந்தே எளிதாகச் செலுத்தி, உடனடி ரசீதையும் பெற்றுக்கொள்ளலாம். பொதுமக்கள் தங்களுக்குரிய வரிகளை உரிய காலத்தில் செலுத்தி, ஆவடி மாநகராட்சியின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ALT ஆவடி மாநகராட்சி சார்பில், தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் வகையில், 17 கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, 193 கிலோ நெகிழிப் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், விதிமுறைகளை மீறிய கடைகளுக்கு ரூ.63,300 அபராதம் விதிக்கப்பட்டது. நெகிழிப் பயன்பாட்டைத் தவிர்த்து, சுற்றுச்சூழலைப் பாதுகாக்க பொதுமக்களும் வணிகர்களும் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ALT ஆவடி மாநகராட்சி சார்பில், மண்டலம் 4, வார்டு 23-ல் டெங்கு காய்ச்சலைத் தடுக்கும் வகையில், வாகனங்கள் மூலம் கொசு மருந்து தெளிக்கும் (Vehicle Fogging) பணி மேற்கொள்ளப்பட்டது. பொதுமக்கள் தங்கள் சுற்றுப்புறங்களைத் தூய்மையாகப் பராமரித்து, டெங்கு தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். @CMOTamilnadu

ALT ஆவடி மாநகராட்சியின் சார்பில், டெங்கு காய்ச்சல் பரவலைத் தடுக்கும் வகையில், மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் தேவையற்ற டயர்களை அகற்றுதல், தேங்கியுள்ள நீரை அகற்றுதல் மற்றும் டெங்கு கொசு உற்பத்தியாகும் இடங்களைக் கண்டறிந்து அழிக்கும் பணிகள் (DBC) மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் தங்கள் வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களைத் தூய்மையாக வைத்துக்கொள்வதுடன், தேவையற்ற நீர் தேக்கத்தைத் தவிர்த்து, டெங்கு தடுப்பு நடவடிக்கைகளுக்கு மாநகராட்சியுடன் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். @CMOTamilnadu

ALT ஆவடி மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (TNPCB) இணைந்து, காமராஜர் நகர் மெயின் ரோடு மற்றும் என்.எம். ரோடு பகுதிகளில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருட்களுக்கு எதிராக தீவிர ஆய்வு மேற்கொண்டன. இந்நடவடிக்கையில், 193 கிலோ தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 17 வணிக நிறுவனங்களுக்கு மொத்தம் ரூ.63,300 அபராதம் விதிக்கப்பட்டது.

ALT ஆவடி மாநகராட்சியின் சார்பில், மண்டலம் 3, வார்டு 46-க்கு உட்பட்ட RCM பார்க் பகுதியிலும், மண்டலம் 1, வார்டு 18, நேரு நகர், IAF மெயின் ரோடு, GVP பாயிண்ட் பகுதியிலும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பொதுமக்களும் மாநகராட்சியின் தூய்மைப் பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ALT ஆவடி மாநகராட்சி சார்பில், 19.11.2026 அன்று காலை 8.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை, வார்டு 9, 41, 40 மற்றும் 21 ஆகிய பகுதிகளில் மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளன. பொதுமக்கள் இம்மருத்துவ முகாம்களைப் பயன்படுத்தி, தேவையான மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் சுகாதார சேவைகளைப் பெற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ALT ஆவடி மாநகராட்சி, வார்டு 5-க்கு உட்பட்ட வேல்டெக் மெட்ரிகுலேஷன் பள்ளியில் தகவல், கல்வி மற்றும் விழிப்புணர்வு (IEC) நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில், தூய்மையின் முக்கியத்துவம், முறையான கழிவு மேலாண்மை மற்றும் சுற்றுப்புறத்தைச் சுகாதாரமாகப் பராமரிப்பது குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், பொறுப்பான கழிவு அகற்றும் நடைமுறைகளைப் பின்பற்றவும், தூய்மை குறித்த விழிப்புணர்வைச் சமூகத்தில் பரப்பவும் மாணவர்கள் ஊக்குவிக்கப்பட்டனர்.



















