Report of the High-Level committee to study the Impact of NEET on Medical Admissions in Tamil Nadu.
#DrAKRajanCommitteeReport 🧵
𝓢𝓪𝓷𝓴𝓪𝓻 retweeted
இது பாசிசமா பாயாசமா?
@timesofindia நாளேட்டின் அருண் ராம் அவர்கள் த.வெ.க.வினரின் குற்றப் பட்டியலைத் தொகுத்து, அதுகுறித்து முதலமைச்சர் விஜய் அவர்கள் வாய்திறக்க மறுப்பதை விமர்சித்துக் கட்டுரை எழுதியிருந்தார்.
உடனே, அவரது சமூக வலைத்தளப் பக்கத்தில் இருந்து பதிவுகள் நீக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருக்கிறார்.
யாருடைய நடவடிக்கையால் இது நிகழ்ந்திருக்கிறது? தமிழ்நாடு அரசின் சைபர் கிரைம் பிரிவுதான் இதன் பின்னணியில் இருக்கிறதா?
கடந்த ஆட்சிகளின்போதும் அவர் விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார். அப்போது நடக்காதது இப்போது மட்டும் எப்படி நடக்கிறது? யாருடைய உத்தரவினால் நடக்கிறது?
இந்தியாவிலேயே அதிகம் விற்பனையாகும் ஒரு நாளேட்டின் ஆசிரியருக்கே இதுதான் நிலையா?
விமர்சனங்களை ஏற்றுக்கொள்வோம் என்று கூறியவரால், ஊடகங்களில் வெளியான குற்றங்களைத் தொகுத்து வெளியிட்டதையே பொறுத்துக் கொள்ள முடியவில்லையா?
த.வெ.க. என்பது மற்றுமொரு கட்சியும் அல்ல, மாற்றமும் அல்ல, அது குற்றவாளிகளின் Wholesale கூடாரம் என்பதைச் சுட்டிக்காட்டி இருக்கிறது இந்த @timesofindia கட்டுரை.
தூய சக்தி ❌
தூ சக்தி ✅
#TVKFails
𝓢𝓪𝓷𝓴𝓪𝓻 retweeted
புது லாட்ஜ்
அதே பிராத்தல்.
After eight years in print journalism, including five memorable years at The Times of India, I’m embarking on a new chapter.
I’m delighted to share that I’ve joined Times Now as a Special Correspondent, covering Tamil Nadu.
My years at TOI have been a defining part of my journey, giving me the opportunity to build deep sources, pursue investigations, break stories, develop a strong understanding of the craft and produce well-researched, legally sound stories. I’m grateful to everyone who has been part of that journey, especially the people of Chennai who’s been a great support.
At Times Now, I look forward to bringing that experience to a new medium and taking on the responsibility of covering Tamil Nadu across politics, governance, crime, civic issues, development and everything that matters to the state.
A new newsroom. A new medium. A wider canvas. Looking forward to what’s ahead.
𝓢𝓪𝓷𝓴𝓪𝓻 retweeted
22 ஆண்டுகால அநீதிக்கு முடிவு!
OBC இடஒதுக்கீட்டில் ஒருவருடைய பெற்றோரின் சம்பளத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு அவரைக் கிரீமிலேயர் பிரிவில் சேர்த்து இடஒதுக்கீட்டு உரிமையை மறுக்கக் கூடாது என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது. 22 ஆண்டுகால அநீதிக்கு முடிவு கட்டும் வகையில், OBC இடஒதுக்கீட்டு உரிமையை மீட்டெடுத்த உச்சநீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை பிரதமர் விரைந்து நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்!
- திமுக மூத்த வழக்கறிஞர் வில்சன் எம்.பி வலியுறுத்தல்!
#PWilson #DMK #Reservation #OBCReservation #SupremeCourt #India #KalaignarSeithigal
𝓢𝓪𝓷𝓴𝓪𝓻 retweeted
இப்போதெல்லாம் என்னென்னவோ வித்தியாசமான செய்திகளைக் கடந்து போக வேண்டியிருக்கிறது!
சில மாதங்களுக்கு முன்பு, சென்னையில் (ரெட் ஹில்ஸ் சாலை) நடுரோட்டில் போதையில் இருந்ததாகக் கூறப்பட்ட இரண்டு சிறுமிகள், அங்கிருந்தவர்களிடம் தகராறில் ஈடுபட்ட வீடியோ ஒன்று வைரலானது ஞாபகம் இருக்கிறதா? அந்த வீடியோ இன்றுவரை சமூக வலைதளங்களில் ஒரு Troll Material ஆகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அந்தச் செய்தியைக்கூட சுலபமாகக் கடந்துவிடலாம். ஆனால், அந்தச் சிறுமி தொடர்பாக இப்போது வெளியாகியிருக்கும் செய்திதான் தலைசுற்ற வைக்கிறது...
இந்தச் சம்பவத்தில் இரண்டு விதமான மோசடிகள் அரங்கேறியுள்ளது..
முதல் சம்பவம்:
40 வயதான சுரேஷ் கண்ணன் என்பவர், தனது வயதை மறைத்து, புகைப்படத்தை எடிட் செய்து, 25 வயது இளைஞராகத் தன்னைத் திருமணத் தகவல் இணையதளத்தில் அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
அதன் மூலம் நெய்வேலியைச் சேர்ந்த பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இரு வீட்டாரும் திருமணம் குறித்துப் பேசும் அளவுக்கு விஷயம் சென்றிருக்கிறது. நிச்சயதார்த்தத்துக்குப் புடவை எடுக்க அந்தப் பெண்ணின் வங்கிக் கணக்குக்கு ஒரு லட்சம் ரூபாயைக்கூட அனுப்பியிருக்கிறார்.
ஒருகட்டத்தில், மாப்பிள்ளையை நேரில் பார்க்க வேண்டும் என்று அந்தப் பெண் சொல்லியிருக்கிறார். நேரில் வந்தவரைப் பார்த்த பிறகுதான் தான் ஏமாற்றப்பட்டிருப்பது அந்தப் பெண்ணுக்குத் தெரியவந்திருக்கிறது.
திருமணத்தை நிறுத்தியதோடு, அந்த ஒரு லட்சம் ரூபாயையும் பெண் வீட்டார் திருப்பிக் கொடுத்திருக்கிறார்கள்.
ஆனால், அந்தப் பெண்ணை விடாமல் தொடர்ந்து தொல்லை கொடுத்திருக்கிறார் சுரேஷ் கண்ணன். தனது அக்காவுக்குத் தொல்லை கொடுப்பதை நிறுத்தும்படியும், இல்லையென்றால் போலீஸில் புகார் கொடுப்பதாகவும் எச்சரித்திருக்கிறார் அவரது தம்பி ஸ்ரீராம்.
இரண்டாவது சம்பவம்:
இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ் கண்ணன், அந்தப் பெண்ணைப் பழிவாங்குவதற்காக அவரது தம்பியை(ஶ்ரீராம்) போக்சோ வழக்கில் சிக்க வைக்கத் திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது.
அதுவும் ஒரு காவலரின் உதவியோடு!
இதற்காக 17 வயது சிறுமி (நடுரோட்டில் போதையில் தகராறு செய்து வைரலான அந்த சிறுமி தான் அது) ஒருவரிடம் ரூ.6 லட்சம் தருவதாகப் பேரம் பேசியிருக்கிறார்கள். இன்ஸ்டாகிராம் மூலமாக ஸ்ரீராமிடம் அறிமுகமாகி, மூன்று மாதங்கள் பழகிய அந்தச் சிறுமி, கடந்த ஆகஸ்ட் 23-ம் தேதி சென்னையில் உள்ள ஒரு மாலுக்கு அவரை வரவழைத்திருக்கிறார்.
பின்னர், ஸ்ரீராம் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார். அவர் மீது போக்சோ வழக்கும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இதற்காகக் காவல்துறையினருக்கு ரூ.5 லட்சத்துக்கும் அதிகமாக லஞ்சம் கொடுக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
ஆனால், ஸ்ரீராமைக் கைது செய்வதற்கு முன்பாக, அந்தச் சிறுமி சாலையில் போதையில் தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படும் வீடியோ வைரலாகியிருக்கிறது. இதையடுத்து, அவரைக் கைது செய்யும் நடவடிக்கையை நிறுத்தி வைத்திருக்கிறார்கள் போலீஸார்.
இப்போது திருமண மோசடி வழக்கில் சுரேஷ் கண்ணனைக் கைது செய்து விசாரித்தபோதுதான் இந்தச் சதித்திட்டம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.
இதையடுத்து, திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் விஜயலட்சுமி, காவலர் வசந்தராஜா ஆகிய இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.
கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்...
அன்று அந்த வீடியோ வெளியாகாமல் இருந்திருந்தால்? இந்தச் சதித்திட்டம் வெளிச்சத்துக்கு வராமல் போயிருந்தால்? எந்தத் தவறும் செய்யாத இளைஞர், போக்சோ வழக்கில் இன்று சிறையில் இருந்திருக்கக்கூடும் அல்லவா?
குழந்தைகளைப் பாலியல் வன்கொடுமைகளிலிருந்து பாதுகாக்க உருவாக்கப்பட்ட ஒரு சட்டத்தை, தனிப்பட்ட பழிவாங்கலுக்காகப் பயன்படுத்த முயன்றிருக்கிறார்கள். அதற்காக ஒரு 17 வயது சிறுமியையும் பயன்படுத்தியிருக்கிறார்கள். இந்தச் சதிக்கு காவல்துறையினரே உடந்தையாக இருந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
இந்த மாதிரியெல்லாம் நடக்குமா? பணம் கொடுத்தால் ஒருவருடைய ஒட்டுமொத்த வாழ்க்கையையும் அழித்துவிட முடியுமா?
நியாயம் கிடைக்கும் என்று நம்பி யாரிடம் போகிறோமோ, அவர்களே பணத்துக்காக அநியாயத்துக்குத் துணைபோனால், பிறகு யாரைத்தான் நம்புவது?
𝓢𝓪𝓷𝓴𝓪𝓻 retweeted
ஸ்டாலின் இடம் 95 MLA க்கள் இருந்த போது கூட கழுதை பேரம் பண்ணி ஆட்சி அமைக்க முயற்சி பண்ணலை.
உன் ஓ லை மருத்துவக்கல்லூரியில் வச்சுக்க. எல்லாவனும் விசில் அடிப்பான்.
திமுகவின் குதிரை பேரம்: ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ள ஸ்டாலின்!
”உங்கள் மீது ஊழல் வழக்கு பதியலாம்” என்று உச்ச நீதிமன்றத்தால் சான்றளிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் நேரு இல்ல திருமணத்தை இன்று நடத்தி வைத்து பேசிய முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான திரு. ஸ்டாலின் தன்னையும் அறியாமல் தான் இப்போது திரை மறைவில் செய்துகொண்டிருக்கிற வேலைகளை பற்றிய ஓர் ஒப்புதல் வாக்குமூலத்தை மைக் முன் மக்களிடம் அளித்திருக்கிறார்.
“விரைவில் நமது ஆட்சி உதயமாகத்தான் போகிறது. விரைவில் நல்ல சூழல் அமைய இருக்கிறது. அதற்கு நீங்கள் தயாராக இருக்க வேண்டும்” என்று பேசியிருக்கிறார் முன்னாள் முதலமைச்சர்.
2026 ஏப்ரல் மாதம் நடந்த பொதுத் தேர்தலில் மக்கள் 35% வாக்குகளையும் 108 இடங்களையும் கொடுத்து மாண்புமிகு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அண்ணன் விஜய் அவர்களை, தமிழ்நாட்டின் முதலமைச்சராக தேர்வு செய்திருக்கிறார்கள். அதுமட்டுமல்ல... 2021- முதல் 2026 வரை சீன் ஆட்சி நடத்தி வந்த ஸ்டாலினை அவரது சொந்த தொகுதியான கொளத்தூர் தொகுதி மக்களே தோற்கடித்துவிட்டார்கள்.
மக்களின் தீர்ப்பை மதித்து மதச்சார்பற்ற கொள்கையில் நம்பிக்கை வைத்துள்ள காங்கிரஸ், இடது சாரிகள், விசிக, முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவோடு தமிழ்நாடு இதுவரை கண்டிராத கூட்டணி ஆட்சியை அமைத்து வெற்றிகரமாக நடத்தி வருகிறார் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்.
அண்மையிலே தாராபுரம், மதுராந்தகம் ஆகிய இரண்டு தொகுதி இடைத்தேர்தலிலும் கூட மக்கள், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை வெற்றி பெற வைத்து, நமது சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்தி உள்ளனர்.
ஆனாலும், கடந்த மே மாதத்தில் இருந்தே... இந்த ஆட்சி மூன்று மாதம் நீடிக்காது. ஆறு மாதம் நீடிக்காது என்றெல்லாம் சித்தரஞ்சன் சாலை இல்லத்தில் உட்கார்ந்து பித்து பிடித்தது போல சோழி உருட்டிக் கொண்டிருந்த ஸ்டாலின் அவர்கள்... அதிகாரம் பறிபோன பதற்றத்திலும் பரிதவிப்பிலும் இந்த ஆட்சியை கவிழ்க்க பல்வேறு முயற்சிகளை செய்து பார்த்தார். அது தொடர்பான குதிரை பேர வழக்கு கூட இப்போது நீதிமன்றத்திலே நடந்து வருகிறது.
ஆனால் நம் மீது குதிரை பேரம் என்ற பொய்ப் புகாரை கடந்த ஆறு மாதமாக சொல்லிக் கொண்டிருக்கும் ஸ்டாலின்... உண்மையிலேயே தனது ஓய்வுக் காலத்தை குதிரை பேர முயற்சியில்தான் தீவிரமாக செய்துகொண்டிருக்கிறார் என்பதை இன்றைய அவரது திருமண விழா பேச்சு காட்டுகிறது.
விரைவில் நமது ஆட்சி உதயமாகத்தான் போகிறது என்றால் என்ன அர்த்தம்? 2026 இல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அரசு 2031 வரை பதவியில் இருக்க வேண்டும் என்பதுதான் சட்டமும் ஜனநாயகமும். ஆனால் ஆறுமாத முடிவிலேயே விரைவில் திமுக ஆட்சி உதயமாகும் என்று ஸ்டாலின் பேசுகிறார் என்றால், அவர் நடத்தும் குதிரை பேர முயற்சிகள் ஒவ்வொரு கட்டமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது என்று அவர் திமுக நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் சொல்கிறாரா? குதிரை பேரம் நடத்துவது யார் என்பது இப்போது மக்களுக்கு தெரிந்துவிட்டது.
பள்ளிக் கல்வி, நகராட்சி நிர்வாகம், பொதுப்பணித்துறை என்று எல்லா துறையிலும் உலக மகா ஊழல் செய்துவிட்டு... நூல்களில் கூட ஏ.ஐ. ஊழல் செய்துவிட்டு மக்கள் முன் தலைகுனிந்து நிற்க வேண்டிய சூழலில் இருக்கும் ஸ்டாலின், அதற்கு மாறாக... “விரைவில் நமது ஆட்சி உதயமாகப் போகிறது” என்று பகிரங்கமாக பேசுகிறார் என்றால் என்ன அர்த்தம்?
ஆளுங்கட்சியாக இருந்து ஊழல் செய்தது போக எதிர்க்கட்சியாக இருக்கும்போதும் ஊழல் செய்துகொண்டிருக்கிறார், குதிரை பேரம் நடத்திக் கொண்டிருக்கிறார் என்பதைத்தானே இது காட்டுகிறது. இதுகுறித்து முன்னாள் முதலமைச்சர், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உரிய விளக்கம் அளிக்க வேண்டும்.
@TVKVijayHQ | @TVKPartyHQ | @TVKHQITWingOffl | @BussyAnand
#தமிழகவெற்றிக்கழகம் #TVK
𝓢𝓪𝓷𝓴𝓪𝓻 retweeted
பொதுப்புத்தி மனப்பான்மையில் இருந்தோ சொந்த விருப்பு வெறுப்புகளின் அடிப்படையிலோ கண்மூடித்தனமான கருத்துருவாக்கம் செய்ய முயல்வது அல்ல பத்திரிகையாளரின் பணி!
சமூகத்தின் சிந்தனைப் போக்கே சீரழியும் நிலையிலும் அதனைச் செதுக்கி, பக்குவப்படுத்தும் பெரும் பணிதான் ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடகத்துறையின் பணி.
அதனாலேயே, மற்ற மூன்று தூண்களைவிடவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக ஊடகங்களின் பணி கருதப்படுகிறது.
நேர்மையும், அஞ்சாமையும், உண்மையைக் கண்டறியும் ஆர்வமும் உழைப்பும் பொறுமையும் கொண்டு கடமையாற்றிடும் பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் #NationalPressDay வாழ்த்துகள்!
𝓢𝓪𝓷𝓴𝓪𝓻 retweeted
த.வெ.க. என்பது மற்றுமொரு கட்சியும் அல்ல, மாற்றமும் அல்ல, அது குற்றவாளிகளின் Wholesale கூடாரம் என்பதைச் சுட்டிக்காட்டி இருக்கிறது இந்த @timesofindia கட்டுரை.
தூய சக்தி ❌
தூ சக்தி ✅
#TVKFails
𝓢𝓪𝓷𝓴𝓪𝓻 retweeted
மேகதாது அணை கட்டுவதை யாராலும் தடுக்க முடியாது எனப் பிரதமர் முன்னிலையில் பேசியுள்ளார் கர்நாடக முதலமைச்சர்.
தமிழ்நாட்டின் உயிர்ப் பிரச்சினையான காவிரி விவகாரத்தில், இனியும் அமைதி காக்காமல் தமிழ்நாடு அரசு செய்ய வேண்டியவற்றை வலியுறுத்தி மாண்புமிகு @CMOTamilnadu அவர்களுக்கு நான் எழுதியுள்ள கடிதம்:
#Cauvery #Mekedatu #DeltaFarmers
𝓢𝓪𝓷𝓴𝓪𝓻 retweeted
அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் மீது த.வெ.க. அரசுக்கு ஏன் காழ்ப்பு?
உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்த பின்னரும் கல்விக் கட்டணத் தொகையை விடுவிக்காமல் மாணவர்களை அலைக்கழித்து மனஉளைச்சலுக்கு ஏன் உள்ளாக்குகிறீர்கள்?
இந்தக் கல்வியாண்டில், வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்ற 164 மாணவர்களில் 65 பேருக்கு மட்டுமே இதுவரை உதவித்தொகை விடுவிக்கப்பட்டு இருப்பதாக RTI மூலம் பெறப்பட்ட பதிலில் அம்பலம் ஆகியுள்ளது.
மீதமுள்ள அனைத்து மாணவர்கள் மீதும் என்ன பழி போட இந்த அரசு உத்தேசித்துள்ளது?
இப்படி மாணவர்களை வதைத்தால், இனி இந்தத் திட்டத்தை நம்பி எப்படி பட்டியல், பழங்குடியின மாணவர்கள் தங்கள் அயலக உயர்கல்விக் கனவை நோக்கி உழைப்பார்கள்?
#DravidianModel அரசால் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்ட ஒரு நல்ல திட்டத்தைச் சிதைப்பதில் த.வெ.க. அரசுக்கு ஏன் இத்தனை வெறி? துறையின் பெயரில் சேர்த்த சமூகநீதியை நடைமுறையில் காணமுடியவில்லையே!
@TOIChennai
Delay in disbursal of scholarship funds by TN govt leaves SC/ST students struggling abroad
timesofindia.indiatimes.com/…
Download the TOI app now:
timesofindia.sng.link/Cqhd4/…
𝓢𝓪𝓷𝓴𝓪𝓻 retweeted
நம் திராவிட மாடல் ஆட்சியில் மேம்படுத்தப்பட்ட அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்டத்தின் கீழ் ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்களுக்கு வழங்க வேண்டிய கல்வி உதவித்தொகையை வழங்காமல் இழுத்தடிக்கிறது இந்த சோப்ளாங்கி அரசு.
சமூக நீதித்துறை என்று பெயர் மாற்றிவிட்டு, அண்ணல் அம்பேத்கர் பெயரிலான திட்டத்தைக் குழித்தோண்டி புதைக்கும் இந்த கோமாளி ஆட்சியாளர்களை வன்மையாக கண்டிக்கிறேன்.
இந்தாண்டு 365 மாணவர்களை தேர்வு செய்துவிட்டு, 64 பேருக்கு மட்டுமே உதவித்தொகை விடுவிக்கப்பட்டுள்ளது. திட்டத்தில் தேர்வாகியும் வெளிநாடு சென்று படிக்க முடியாமல் மாணவர்கள் பலர் தவிப்பில் உள்ளனர்.
இந்தத் திட்டத்தை நம்பி பிள்ளைகளை வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்த பெற்றோர்கள் நகைகளை அடகு வைத்தும் - வட்டிக்கு கடன் வாங்கியும் கட்டணம் செலுத்தி வருகின்றனர்.
வழக்கம் போல பில் வரவில்லை - Mail வரவில்லை என்று ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் மீது பழி போட்டு, அவர்களின் கல்வியை முடக்காமல், அந்த மாணவர்களுக்குச் சேர வேண்டிய கல்வி உதவித்தொகையை இந்த Dummy முதலமைச்சர் உடனடியாக விடுவிக்க வேண்டும்.
𝓢𝓪𝓷𝓴𝓪𝓻 retweeted
திமுகவை விமர்சிக்கிறேன் என திராவிட இயக்கத்தின் கடவுள் மறுப்புக் கொள்கையை கேள்விக்குள்ளாக்க நினைக்கிறார் மாணிக்கம் தாகூர்.
பண்டிட் ஜவஹர்லால் நேரு தன்னை கடவுள் மறுப்பாளர் என பிரகடனப்படுத்தியது மாணிக்கம் தாகூருக்குத் தெரியுமா?
𝓢𝓪𝓷𝓴𝓪𝓻 retweeted
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தகாத message அனுப்பிய குற்றச்சாட்டில் த.வெ.க MLA அருள் விக்னேஷை இந்த Dummy CM இன்னமும் பாதுகாப்பது ஏன்?
கோரிக்கை வைத்தவரை அடித்து துன்புறுத்திய துணை சபாநாயகர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு என்ன காரணம்?
இது ஆட்சியா? இல்லை, த.வெ.க-வினர் அத்துமீறுவதற்காக அமைக்கப்பட்டிருக்கும் அலங்கோல syndicate-ஆ?
Dummy CM-க்கு, தப்பு செய்யும் தன் கட்சிக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க துணிச்சல் இல்லை.
ஆனால், அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் - த.வெ.க MLA-க்களுடன் ஆலோசனைக்கூட்டம் என்று வேக வேகமாக Diversion politics-ல் இறங்குகிறார்.
ஆலோசனைக் கூட்டத்தில், அனல் கக்கினார் - அக்கினி குழம்பை அள்ளி ஊற்றினார் என்று Online Mafia-வையும், Paid பேரில்லா பிச்சைகளையும் வைத்து Reels ஓட்டினால் மக்கள் மறந்துவிடுவார்களா?
மவுன முதலமைச்சருக்கு மனசாட்சி இருந்தால் தவறு செய்யும் உங்கள் கட்சிக்காரர்களை கட்டி வையுங்கள். இல்லை மக்கள் சக்தி தட்டி வைக்கும்.






























