AG (@DMK4_TN) header
AG (@DMK4_TN) profile picture

திமுக ⚫🔴🌅

Tamilnadu
Joined March 2021
Photo by AG (@DMK4_TN)Photo by AG (@DMK4_TN)Photo by AG (@DMK4_TN)Photo by AG (@DMK4_TN)Photo by AG (@DMK4_TN)Photo by AG (@DMK4_TN)Photo by AG (@DMK4_TN)Photo by AG (@DMK4_TN)Photo by AG (@DMK4_TN)Photo by AG (@DMK4_TN)
எனது தாத்தா 1971 சட்டமன்றத் தேர்தலில் இருந்து வாக்களித்து வருகிறார். இந்த தேர்தலுக்கான அவரது மதிப்பீடு இதோ ☺️🙏
40
31
3
180
கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் கைது ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய்கள் என்பது போல, கள்ளக்குறிச்சி த.வெ.க. சட்டமன்ற உறுப்பினரின் ஒழுங்கீனத்தை மறைத்து, அவரைப் பாதுகாக்க பொய் மேல் பொய்களைக் கூறினார்கள். அமைச்சர்கள் முதல் கூட்டணிக்கட்சித் தலைவர்கள் வரை வரிந்து கட்டிக் கொண்டு புகாரை மறுத்து, அருள் விக்னேஷுக்கு Conduct Certificate வழங்கும் வேலையில் இறங்கினார்கள். பாதிக்கப்பட்ட அதிகாரியை மனதளவில் உடைக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் இழிவான பிரசாரம் மேற்கொண்டார்கள். அத்தனை அழுத்தங்களையும் எதிர்கொண்டு, அந்த இரும்புப் பெண்மணி தைரியமாகப் புகார் அளித்தார். உயர்நீதிமன்றம், மகளிர் ஆணையம் போன்ற அமைப்புகளின் சீற்றத்தால் வேறு வழியின்றி இப்போது TVK MLA கைது செய்யப்பட்டிருக்கிறார். 119 நாட்களாக இதில் நடவடிக்கை எடுக்காமல், சமரசமாகச் செல்ல அழுத்தம் கொடுத்தவர்களும் நடவடிக்கைக்கு உள்ளாக வேண்டும். சட்டப்படி நியாயமான நீதி விசாரணை நடத்தப்பட்டு, தவறிழைத்த அனைவரும் தண்டிக்கப்படும் வரை நாங்கள் ஓயமாட்டோம்!
206
1,263
48
2,790
79,590
சார், இவன் விஜய் டிவி ராமர் மாதிரி பேசுவார் சார்.. ~ டேய் பன்றா..
30
706
36
3,152
36,353
தொகுதி மறுவரையறையால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து இந்தியாவிலேயே முதன் முதலில் குரல் எழுப்பியது தி.மு.க.தான்! நியாயமான மறுவரையறை என்ற கோரிக்கையுடன் அகில இந்தியத் தலைவர்களை ஒன்றிணைத்து முதன் முதலில் கூட்டம் நடத்தப்பட்டதும், சென்னையில்தான். தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தின்படியும், நியாயமான தொகுதி மறுவரையறைக்கான கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானங்களின்படியும், நாம் முன்வைத்த உறுதியான கோரிக்கைகள்: • நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டால், எக்காரணத்தைக் கொண்டும், தமிழ்நாட்டின் பங்கு தற்போதுள்ள 7.18%-ல் இருந்து குறையக் கூடாது! • 1971 மக்கள்தொகை அடிப்படையில், மாநிலங்களுக்கு இடையேயான நாடாளுமன்றப் பிரதிநிதித்துவ விகிதாசாரத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு, முன்னர் நிலைப்படுத்தப்பட்டவாறே, அடுத்த 25 ஆண்டுகளுக்கும் எந்தவித மாற்றமும் செய்யப்படக் கூடாது! எடுத்த இந்த இரண்டு நிலைப்பாட்டிலும் தி.மு.க. இன்றும் என்றும் உறுதியாக இருக்கிறது. இந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை, சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை! ஊடகங்களில் பரப்பப்படும் ஊகங்களும், முதுகுகுத்திகளின் முணுமுணுப்புகளும் எங்களது இந்த நிலைப்பாட்டை எந்த விதத்திலும் அசைத்துப் பார்க்காது. பதவிக்காகக் கொள்கையை உதறிவிட்டுச் செல்லும் மானமற்ற, நன்றிகெட்ட கூட்டத்தினர் இதனை உணர வேண்டும். தமிழ்நாட்டின் நலனைக் கழகம் ஒருபோதும் விட்டுக்கொடுக்காது. கொண்ட கொள்கையில் இருந்து தடம் மாறாது! The DMK was the first in India to raise its voice against the dangers of delimitation! It was only in Chennai that political leaders from across the country came together for the first time to demand fair delimitation. In keeping with the resolution passed by the Tamil Nadu Legislative Assembly and the resolutions adopted at the Joint Action Committee meeting for #FairDelimitation, we put forth two categorical demands: • If the number of parliamentary constituencies is increased, under no circumstances should Tamil Nadu’s existing 7.18% share of seats in the lower house be reduced! • The existing proportion of parliamentary representation among States, as determined on the basis of the 1971 Census and frozen earlier, must remain frozen for another 25 years! The DMK stands firm on these two demands and will continue to do so. There is no change in our position, and there is no question of any compromise! Neither the speculations being circulated in the media nor the wails of backstabbers can shake our resolve. The shameless and ungrateful lot who abandoned their principles for positions of power must realise this. The DMK will never compromise on Tamil Nadu’s interests. Nor will it depart from its principles!
732
2,839
677
9,335
879,250
கொள்கைப் பாதையில் உழைப்பை அடையாளமாக்கி, மக்கள் பணியுடன் இலட்சியப் பயணத்தில் சிறந்திடத் தம்பி @Udhaystalin-க்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்! சிந்தனைகளால் வளம் பெற்ற தமிழ்ச் சமூகத்தின் எதிர்காலம் காட்சிப் பிழைகளால் தடம் மாறிடாமல் காக்க வேண்டிய பெரும் பொறுப்பைக் காலம் நம்மிடம் வழங்கியுள்ளது. கழத்தின் ரத்த நாளமாக நான் வளர்த்த இளைஞரணியின் கொள்கைப் பணியில் இனித் தேவை வேகமல்ல, பெரும் பாய்ச்சல்! Let your work define you! உழைப்பால் உயர்ந்திடு! இலட்சியப் பாதையில் முன்னேறு! கொள்கையின் வெற்றியில் உன் வாழ்வின் வெற்றியைக் கண்டிடு! #HBDUdhay
387
1,641
114
5,972
109,979
பிறந்த நாளை முன்னிட்டு எந்நாளும் அன்போடு வழிநடத்தும் கழகத்தலைவர் - பாசமிகு அப்பாவிடமும் - அரவணைத்து ஊக்குவிக்கும் அம்மாவிடமும் இன்று காலை வாழ்த்துப் பெற்றேன். அம்மா - அப்பாவுக்கு அன்பும் - முத்தங்களும்!
740
1,736
150
8,685
189,141
Now who’s making these gifs 😭
11
531
9
2,725
35,544
கழகத்தலைவர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி, மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு.ராஜேந்திர அர்லேகர் அவர்களை இன்று சந்தித்து, இந்த சோப்ளாங்கி ஆட்சியில் சீரழிந்து வரும் சட்டம் ஒழுங்கு தொடர்பாகவும் – சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு ஆளுங்கட்சி நிர்வாகிகளே காரணமாக இருந்து வருவதையும் சுட்டிக்காட்டி புகார் மனு அளித்தோம். பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு பாலியல் ரீதியான தொந்தரவு கொடுத்த ஆளுங்கட்சி எம்.எல்.ஏ அருள் விக்னேஷை இதுவரை கைது செய்யாத நிலையில், இந்த வழக்கை சி.பி.ஐ வசம் ஒப்படைக்க இந்த அரசிற்கு ஆளுநர் அவர்கள் வழிகாட்டுதல் வழங்க வேண்டும். 116 நாட்களுக்கு முன்பே சம்பந்தப்பட்ட பெண் அதிகாரி தலைமைச் செயலாளரிடம் புகாரளித்தும், நீதிமன்றம் சொல்லும் வரை அதன் மீது வழக்குப்பதிவு செய்யவில்லை. தலைமைச் செயலாளர், தான் பெற்ற புகாரை முதலமைச்சரிடம் சொன்னாரா? அப்படி சொல்லி இருந்தால் முதலமைச்சர் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அது தொடர்பாகவும், இந்த சம்பவத்தில் உண்மையில்லை - புகார் வரவில்லை என்று சொன்ன சட்ட அமைச்சர் போன்றவர்கள் மீதும் சட்ட நடவடிக்கை தேவை. மனு கொடுக்க சென்றவரை அடித்து துன்புறுத்திய சம்பவத்தில் ரவிசங்கர் மீது நடவடிக்கை வேண்டும். ஆளுங்கட்சி நிர்வாகிகளால் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகள் – காணாமல் போகும் குழந்தைகள் – தொடரும் காவல் நிலைய மரணங்கள் - போதை பொருள் கடத்தலில் ஈடுபடும் ஆளுங்கட்சி நிர்வாகிகள் இப்படி தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கிற்கு மிகப்பெரிய சவாலாக இந்த ஆளுங்கட்சியினர் இருந்து வருகின்றனர். எனவே, இந்த சம்பவங்கள் தொடர்பாக முதலமைச்சரிடம் உரிய விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆளுநர் அவர்களிடம் வலியுறுத்தினோம். @Dayanidhi_Maran @DrKalanidhiV @nrelango_dmk
756
1,149
126
3,290
226,868
மாண்புமிகு எதிர்கட்சித் தலைவர் அண்ணன் @Udhaystalin அவர்களின் இந்த ஒரு செய்தியாளர் சந்திப்புக்கே பயந்திட்டியா @actorvijay @TVKVijayHQ குமாரு? ஓடி ஒப்பாரி வைக்கிர! @arivalayam @DMKITwing @dmk_youthwing @DMKWomensWing #KallakurichiTVKMLA
188
547
15
1,554
25,518
பெண் IAS அதிகாரி ஒருவருக்கு ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பிய ஆளுங்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷை கைது செய்ய வேண்டுமென தமிழ்நாடு காவல்துறை DGP-இடம் தி.மு.கழகம் சார்பில் இன்று புகார் மனு அளித்தோம். பாதிக்கப்பட்ட அதிகாரி ஜூலை மாதமே தலைமைச் செயலாளரிடம் புகாரளித்தும், அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று சட்ட அமைச்சர் நிர்மல்குமார் பொய் பேசி பேட்டி கொடுத்தார். இந்த சம்பவத்தில், புகாரளித்து 116 நாட்கள் ஆகியும், உயர்நீதிமன்றம் சொன்ன பிறகே இந்த டம்மி முதலமைச்சரின் அரசு வழக்குப்பதிவு செய்துள்ளது. மற்றவர்களை பாய்ந்து பாய்ந்து கைது செய்யும் காவல்துறை, அருள் விக்னேஷை கைது செய்யவில்லை. அவரை கைது செய்ய வேண்டும். குற்றத்தை மறைத்தை குற்றத்திற்காக தலைமைச் செயலாளர் - சட்ட அமைச்சர் ஆகியோரையும் விசாரிக்க வேண்டும் - சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று DGP-யிடம் புகாரளித்தோம். இதே போல, கோரிக்கை அளிக்க வந்த ஒருவரை துணை சபாநாயகர் ரவிசங்கர் கடுமையாக தாக்கி இருக்கிறார். இதில் தாக்குதலுக்கு ஆன நபர் காவல் நிலையத்தில் புகாரளித்தும் இதுவரை வழக்குப்பதிவு செய்யவில்லை. ஆகவே துணை சபாநாயகர் மேல் உடனே வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் அளித்தோம். ஆளுங்கட்சிக்காரர்களின் atrocity-ஐ டம்மி முதலமைச்சரும் அவர் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையும் இனியும் வேடிக்கை பார்க்கக் கூடாது என்ற தமிழ்நாட்டு மக்களின் குரலை ஊடக நண்பர்களிடம் எடுத்துரைத்தோம்.
608
2,313
77
4,641
123,447
நீ என்ன ஒழுங்கான்னு எம்.எல்.ஏ. திருப்பி கேப்பார்னு விஜய்க்கு பயம் -எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி #TVK #TVKVijay‌ #KallakurichiMLA #SPARK
101
1,757
122
4,763
324,053
எதிர்க்கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க ஜெட் வேகத்தில் செயல்படும் தவெக அரசு, தவெகவினர் என்றால் ஆமை வேகத்தில் நகர்கிறது! எதிர்க்கட்சித் தலைவர் திரு. @Udhaystalin தொடங்கி, நாதகவைச் சேர்ந்த பெண் ஒருவரை இரவு உடையிலேயே கைது செய்தது வரை, ‘Gen Z DMK’-ல் செயல்பட்ட இளைஞர்கள் எனத் தன்னைக் கேள்வி கேட்ட பலரையும் இரவு, அதிகாலை என்று பாராமல் அராஜகமாகக் கைது செய்தது இந்த அரசு. தற்போது, தனது கட்சி சட்டமன்ற உறுப்பினர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தும், இன்னும் அவரைக் கைது செய்யாமல் காலத்தை கடத்திக் கொண்டிருக்கிறது பெண்களின் பாதுகாவலர் என்று வாக்கு வாங்கிய @TVKVijayHQ அரசு.
265
1,430
44
3,874
90,608
இந்த டூமாங்கோலி இருக்கும் போதே தீபம் ஏத்த முடியலியே... முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இருக்கும் போது ஏத்தனும்னு நினைச்சீங்க பாருங்க🤣🤣 silly guys..
56
184
18
852
16,376
We’ve set the bar so high! 🖤❤️ #DMK4TN #TheDMK #Tamilnadu
21
470
10
1,774
39,989
AI Edit-ஆ இருந்தாலும் கடைசியில் உண்மைதான் போல . கட்சியாடா இது தூ..#virtualwarriors மானங்கெட்ட பசங்களா..
21
726
17
2,976
91,958
உங்க அண்ணன், உங்க தாய்மாமன் என டயலாக் பேசும் முதலமைச்சருக்கு நான்கு மாதங்களுக்கு முன்பே மாவட்ட ஆட்சியர் புகார் கொடுத்தது தெரியுமா, தெரியாதா? தேசிய மகளிர் ஆணையமும், உயர்நீதிமன்ற நீதிபதியும் தலையிட்ட பின்னர்தான் ஒரு மாவட்ட ஆட்சியரின் புகாரே பதியப்படும் என்றால் தமிழ்நாட்டில் நடப்பது ஆட்சியா, இல்லை வேறெதுவுமா? போடாத கமெண்டுக்காக, பேராசிரியரின் முகவரியைத் தேடிக் கண்டுபிடித்து அதிகாலையில் கடத்திச் செல்லத் தெரிந்த காவல்துறைக்கு, முதலமைச்சர் விஜய் அவர்களின் பொடனிக்குப் பின்னாலேயே இருந்துகொண்டு தவறிழைத்த MLA-வைக் கைது செய்யத் தெரியவில்லையா? கூட்டுப் பாலியல் வன்கொடுமைப் புகாரில் சிக்கிய ஸ்ரீவைகுண்டம் MLA மீதும், மைதானத்தில் போதை மாத்திரை நசுக்கிய அமைச்சர் மீதும் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் த.வெ.க.வில் மற்றவர்களுக்கு பயம் இருந்திருக்கும். மாறாக, என்ன செய்தாலும் நாம் காப்பாற்றப்படுவோம், புகார் அளித்த பெண்களைத்தான் கட்சியில் இருந்து நீக்குவார்கள் என்ற மோசமான முன்னுதாரணங்களை முதலமைச்சர் விஜய் அனுமதித்துவிட்டார். அந்த தைரியத்தில்தான் ஒட்டுமொத்த மாவட்டத்தின் தலைமைப் பொறுப்பை வகிக்கும் அதிகாரியிடமே எல்லை மீறியிருக்கிறார் த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர். 'த.வெ.க. பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும்' என்று சொல்லி ஆட்சிக்கு வந்தார்கள். இன்று, த.வெ.க.வினரின் தொல்லையில் இருந்து பாதுகாப்பு தேடிப் பெண்கள் ஓடும் நிலைக்குத் தமிழ்நாடு தள்ளப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது. இந்த வழக்கிலாவது உறுதியான நடவடிக்கை எடுத்தால்தான் இப்படியான சம்பவங்களை எதிர்காலத்தில் தடுக்க முடியும். நான்கு மாதகாலமாக ஒரு குற்றவாளியைப் பாதுகாக்க எல்லா வழிகளையும் பயன்படுத்திய மாநில அரசு - இப்படிப்பட்ட MLA-வை அழைத்து “தீபாவளி பரிசு” கொடுத்த முதலமைச்சரின் தலைமையில் உள்ள மாநில அரசு இனி இந்த வழக்கை விசாரிப்பது சரியாக இருக்காது. எனவே, மாநில அரசு தாமாகவே இந்த வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும். சட்டமன்ற உறுப்பினரின் ஒழுங்கீனம் குறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்த பின்பும் நடவடிக்கை எடுக்காமல் மூடிமறைத்த தலைமைச் செயலாளர் மீதும், மாவட்ட ஆட்சியருக்கு அழுத்தம் தந்த அமைச்சர்கள் மீதும் நடவடிக்கை பாய வேண்டும். கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும். #TVKFails #Arrest_ArulVignesh
396
4,121
135
9,216
267,911
ஆளுங்கட்சியைச் சேர்ந்த MLA-வின் ஒழுங்கீனமான செயல் குறித்து மாவட்ட ஆட்சியர் முறையாகப் புகார் அளித்திருக்கும் செய்தி 'தி இந்து' நாளேட்டில் இன்று வெளியாகியிருக்கிறது. இத்தகைய ஒரு சம்பவம் நடைபெற்றதாக பல வாரங்களுக்கு முன்பு செய்திகள் வெளிவரத் தொடங்கியபோதே, முதலமைச்சரும் தலைமைச் செயலாளரும் மாவட்ட ஆட்சியரை அழைத்துப் பேசி இருக்க வேண்டும். அவருக்கு உறுதுணையாக அரசு இருக்கும் என்ற நம்பிக்கையை அளித்திருக்க வேண்டும். தவறிழைத்த சட்டமன்ற உறுப்பினரைக் கண்டித்து, சட்டநடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். பெண்களின் பாதுகாப்பிற்கும், ஆட்சி மாண்பிற்கும் முக்கியத்துவம் அளிக்கும் எந்த ஒரு அரசும் இதைத்தான் செய்திருக்கும். ஆனால், தன் கட்சி சட்டமன்ற உறுப்பினரையும் தன் மைனாரிட்டி அரசையும் காப்பாற்றினால் போதும் என்ற நோக்கத்தில் இவர்கள் இந்த சம்பவத்தை மறைக்க அனைத்து வகைகளிலும் முயற்சித்ததால்தான், பாதிக்கப்பட்ட பெண் அலுவலர் முறையாகப் புகார் அளிக்கவே இத்தனை நாட்கள் ஆகியிருக்கின்றன. ஒரு மாவட்ட ஆட்சியருக்கே இந்த நிலைமை என்றால் தமிழ்நாட்டில் வாழும் சராசரிப் பெண்களின் நிலை எப்படி இருக்கும் என்ற கேள்வி கவலை அளிக்கிறது. இதில், பதவிக்கு மாரடிக்கும் சில கட்சித் தலைவர்கள் பாதிக்கப்பட்டவரின் பக்கம் நிற்காமல், MLA பாவம் என்று முட்டு கொடுத்தது கேவலத்தின் உச்சம். பல்வேறு வகைகளிலும் இந்த சம்பவம் அரசின் கவனத்திற்கு வந்த பிறகும், இந்த அரசு நடவடிக்கை எடுக்காமல் நீதிமன்றத்திலும் பொய் சொல்கிறார்கள் என்பது கடும் கண்டனத்துக்குரியது. பாலியல் குற்றங்களிலும், போதைப் பொருள் கடத்தலிலும், கொள்ளைச் சம்பவங்களிலும் த.வெ.க.வினர்தான் அதிகம் ஈடுபடுகிறார்கள் என நாங்கள் தொடர்ந்து சொல்லி வருவது ஒவ்வொரு நாளும் உண்மையாகி வருகிறது. இனியும் தாமதிக்காமல், கள்ளக்குறிச்சி த.வெ.க. சட்டமன்ற உறுப்பினரைக் கைது செய்து விசாரிக்க வேண்டும்.
401
3,801
172
7,336
279,087
DMK வோட அந்த 3 பைலை ஓபன் பண்றதுக்குள்ள! சொந்த கட்சிக்காரனுங்க 30 File Ahஉருவாக்கிட்டானுங்க! காலம் எவ்வளவு வேகமா சுத்துதுல? 🤣
21
753
15
3,821
40,058
ஆளுங்கட்சியின் பாலியல் பொறுக்கிகளை பாதுகாக்க தான் ஆட்சி நடத்துகிறாரா Dummy CM? கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆளுங்கட்சி MLA அருள் விக்னேஷ் ஆபாச Message-ஏ அனுப்பவில்லை என்று பச்சைப்பொய் சொல்லி வந்த இந்த கையாலாகா ஆட்சியாளர்களின் முகத்தில் கரி பூசி இருக்கிறது இன்றைய The Hindu நாளிதழ் செய்தி. இந்த சம்பவத்தில் ஒரு மாதம் முன்பே தலைமைச் செயலாளரிடம் தொலைபேசி வாயிலாக சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் புகார் அளித்த நிலையில், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதுமட்டுமின்றி, ஆட்சியரிடம் இருந்து எந்த புகாரும் வரவில்லை என்று உயர் நீதிமன்றத்திலேயே இந்த அரசு நேற்று பொய் சொல்லியிருக்கிறது. இவ்வாறு பாதிக்கப்பட்ட பெண் ஆட்சியர், தலைமைச் செயலாளரிடம் தொலைபேசியில் புகார் அளித்துள்ளார் என்பது முதலமைச்சருக்கு தெரியாதா? அதை முதலமைச்சரிடம் தலைமைச் செயலாளர் மறைத்தாரா? அல்லது அது தெரிந்தும் எம்.எல்.ஏ- வையும் தனது அரசையும் காப்பாற்றுவதற்காக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்கவில்லையா? இதில் எது உண்மை என்பதை முதலமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும். ஒருவேளை அந்த செய்தி மறைக்கப்பட்டிருந்தால், பாதிக்கப்பட்ட ஆட்சியருக்கு துணையாக நிற்காமல், குற்றத்தை மறைத்து, குற்றவாளியை பாதுகாக்க துணை போன தலைமைச் செயலாளர், பொது துறை செயலாளர், முதலமைச்சர் அலுவலக ஐ.ஏ.எஸ் அதிகாரிகளையும், முதலமைச்சர் உடனே விடுப்பில் அனுப்ப வேண்டும். அப்போது தான், இந்த புகாரின் மீது நியாயமான முறையில் விசாரணை நடைபெறும். இந்த சம்பவத்தில் இனியும் தாமதிக்காமல் சம்பந்தப்பட்ட MLA-வை உடனே கைது செய்து விசாரிக்க வேண்டும்.
777
2,850
150
6,330
257,887
ஐயோ பாவம்! யாரு? காங்கிரஸ் கட்சி….
74
537
34
1,792
26,684
திராவிட இயக்கத்தின் அறிவுப் பெட்டகம் முரசொலி மாறன் அவர்களின் நினைவு நாள்: தலைவர் கலைஞரால் ஆளாக்கப்பட்டு, அவரது அன்பையும் அசைக்க முடியாத நம்பிக்கையையும் பெற்றவர் முரசொலி மாறன் அவர்கள். கலைஞரின் கண்ணசைவுக்கேற்பத் தலைநகர் டெல்லியில் கழகத்தின் அரசியல் நகர்வுகளைத் திறம்பட மேற்கொண்டு அவரது மனசாட்சி என்று பெயரெடுத்தவர். ஒன்றிய அமைச்சராக இந்தியாவுக்கே பெருமை தேடித் தந்த அறிவுக்கூர்மைக்குச் சொந்தக்காரர். அத்தானாக என் மேல் அன்பு காட்டி, என் மிசா சிறைவாசத்தின்போதும் உடனிருந்து, அரசியல் பயணத்திலும் ஆலோசனைகளைக் கூறி நெறிப்படுத்தியவர் மாறன் அவர்கள். மாநில உரிமைகளை மீட்டெடுக்க நாம் அமைத்த உயர்மட்டக் குழு கலைக்கப்பட்டு இருக்கும் இன்றைய அரசியல் சூழலில், மாறன் அவர்கள் பேருழைப்பைச் செலுத்தி எழுதிய மாநில சுயாட்சி எனும் நூலை நாம் அனைவரும் மீள்வாசிப்புக்கு உட்படுத்த வேண்டும். தாம் ஆற்றிய உரைகளாலும், இயற்றிய நூல்களாலும், தீட்டிய வரலாறுகளாலும், இறுதி வரை இறுகப் பற்றிக் கொண்ட கொள்கைகளாலும் நம் இயக்கத்தின் அறிவுப் பெட்டகமாகத் திகழ்ந்த முரசொலி மாறன் அவர்களின் பங்களிப்புகளை நன்றியோடு இந்நாளில் நினைவு கூர்கிறேன்.
85
1,013
10
3,411
107,061