திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பயணம் தொய்வில்லாமல் தொடரும்.
இதுவரை மக்களுக்காகச் சிறப்பான ஆளும்கட்சியாகச் செயல்பட்ட தி.மு.க. - இனி சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும்
நன்றி தலைவரே 🖤❤️
மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்!
கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஏராளமான திட்டங்களை உருவாக்கி, தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சியை வழங்கினோம். தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் உயர்த்தினோம். தேர்தல் களத்தில் எங்களது சாதனைகளைச் சொல்லியே வாக்குகளைக் கேட்டோம்.
மக்களுக்குச் செய்து கொடுத்த நலத்திட்டங்கள் தொடருவதற்கு வாக்கு கேட்டு நாங்கள் பரப்புரை செய்தோம்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரித்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நான் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்க மறந்தவர்களுக்கும் சேர்த்தே ஆட்சி நடத்தினேன்.
அனைத்து மக்களுக்கும் உண்மையாக இருந்தேன். நான் எனது மனச்சாட்சிப்படியே செயல்பட்டேன்.
நான் எனது சக்தியை மீறி உழைத்தேன். என்னைப் போன்றே களத்தில் உழைத்த என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி!
எங்களோடு தோளோடு தோள் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள்
அனைவருக்கும் நன்றி !
எனது அரசியல் பொதுவாழ்வில் அதிகப்படியான வெற்றியையும் பார்த்துள்ளேன்; தோல்விகளையும் சந்தித்துள்ளேன்.
எனவே இலட்சியமும் கொள்கையும்தான் முக்கியமே தவிர, வெற்றி தோல்விகள் மட்டுமல்ல என்று செயல்படக் கூடியவன் நான்.
அதனால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பயணம் தொய்வில்லாமல் தொடரும்.
இதுவரை மக்களுக்காகச் சிறப்பான ஆளும்கட்சியாகச் செயல்பட்ட தி.மு.க. - இனி சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும்.
நிக்காம ஓடு ஓடு பாட்டு பாடினது யாருக்குனு இப்ப தான் புரியுது 😂😂
சிறை பாதுகாப்பில் எந்தவித தொய்வும் ஏற்படக்கூடாது - விஜய்
Few minutes later
கோவை மத்திய சிறையிலிருந்து கைதி தப்பியோட்டம்
nitter.cf/News18TamilNadu/status…
இந்த சோப்ளாங்கி ஆட்சியில் புழல், தேனியைத் தொடர்ந்து கோவை மத்தியச் சிறையில் இருந்தும் ஒரு கைதி தப்பிச் சென்றுள்ளார்.
அடுத்து பாளையம்கோட்டையா? சேலமா? எனக் கைதிகள் inky pinky ponky போட்டுத் தப்பிச் செல்லும் அளவுக்கு Dummy முதலமைச்சரின் ஆட்சி லட்சணம் இருக்கிறது.
தோல்வி பயத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளுக்கு முதலமைச்சர் ஓடுகிறார்.
மறுபுறம் கைதிகளோ, இது கையாலாகாத அரசு என தெரிந்து கொண்டு சிறையில் இருந்து ஓட்டம் எடுக்கின்றனர்.
இனி பணியிடமாற்றம், சஸ்பெண்ட் செய்யவேண்டும் என்றால் முதலமைச்சர் தன்னைத் தானே தான் செய்துகொள்ள வேண்டும்.
'மெத்' அரசின் மெத்தனப் போக்கால் தமிழ்நாட்டு மக்களின் பாதுகாப்பு தொடர்ந்து கேள்விக்குறி ஆகி வருவதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
#LawAndOrder #Coimbatore #TVKFails
வழக்கம் போல ஸ்டிக்கர் தான். ஆனால் எந்த செய்தி நிறுவனமும் முழுமையாக செய்தி வெளியிடவில்லை
கொரோனா காரணமாக 2 ஆண்டுகள் போட்டி தேர்வுகள் நடத்த முடியாத சூழ்நிலை வந்தது
2021 ஆட்சிக்கு வந்த திமுக அரசு இந்த பெருந்தொற்று காரணமாக போட்டித் தேர்வுக்கு தயாரான மாணவர்கள் வயது மூப்பின் காரணமாக அரசு பணிகளில் சேர்வது தடை வந்துவிடக் கூடாது என்பதால், வயது வரம்பை 2 ஆண்டுகள் உயர்த்தியது
அந்த அரசாணை 5 ஆண்டுகள் மட்டுமே. கடந்த மாதத்துடன் (13.09.2026) அது முடிந்து விட்டது. எனவே இப்போது புதிய அரசாணை மூலம் முன்பு வழங்கிய 2 ஆண்டுகள் வயது உச்ச வரம்பு சலுகை 5 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது
இதுவும் நிலையான மாற்றம் அல்ல. 2031 அக்டோபர் வரை மட்டுமே இந்த வயது உச்ச வரம்பு செல்லும்.
FYI @saysatheesh
எந்தெந்த பிரிவினருக்கு எவ்வளவு வயது வரம்பு உயர்வு?
#Group1Exam | #TNPSC | #TNGovt | #CMVijay | #TNPSCExam
/இனி
யார் முதல்வராகனும் என்றாலும் திருமா வை கூட்டணிக்கு அழைக்கனும்..
ராசியானவர் தலைவர் திருமா.
தனுஷ்க்கும் இது பொருந்தும்/
அமைச்சர் காலை முதல் ஜெனரேட்டர்ல ஓடினதாகவும், 7-8 நிமிசம் மாற்றுவதற்கு ஆனதால் மின் தடை ஏற்பட்டது சொல்றார்
TANGEDCO 4.20pm to 5.35pm Gen ஓடுச்சு. 1.5 நிமிசம் தான் மின் தடை சொல்றாங்க
இப்ப யார் சொல்றதை நம்புறது மக்களே 🤦
மதுரை அருள்மிகு மீனாட்சியம்மன் கோவிலில் 350 கே வி ஏ (KVA) மின் பளு கொண்ட உயர் அழுத்த மின் இணைப்பு (HT SC) உள்ளது. மேலும் அவசர காலங்களுக்காக இரண்டு 125 கே வி ஏ (KVA) திறன் கொண்ட மின்சார ஜெனரேட்டர்கள் உள்ளன.
நாளை மிக முக்கிய பிரமுகர்களின் வருகையை முன்னிட்டு மதுரை மின்சார ஆய்வாளர் கோவில் வளாகத்தை ஆய்வு செய்து, கோவில் மின்சாரப் பிரிவு மூலம் சில பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.
அதன்படி, கோவில் மின்சாரப் பிரிவு, மாலை 4.20 மணிக்கு மின் வழங்கலை ஜெனரேட்டர் மின் இணைப்பிற்கு மாற்றியது. பணிகள் நிறைவடைந்த பின், மாலை 5.35 மணிக்கு மின் மின்வாரிய தொகுப்பிற்கு இணைப்பு மாற்றப்பட்டது. இதற்கு 1.5 நிமிடங்கள் மட்டுமே ஆனது.
அருள்மிகு மீனாட்சியம்மன் கோவிலுக்கு செல்லும் மின்வாரிய தொகுப்பில் எந்தவித மின்தடையும் ஏற்படவில்லை.
ஜூலை 3
முதல்வரின் அதிகாரப்பூர்வ X பக்கத்தின் (cmotamilnadu) பதிவு மற்றும் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் (tndiprnews) பதிவு இரண்டிலும் News தமிழ் 24x7 தொலைக்காட்சியின் இயக்குநர் என்றே குறிப்பிட்டுள்ளது
WARNING | அவதூறு பரப்புவோருக்கு எச்சரிக்கை!
நியூஸ் தமிழ் 24x7 சேனலின் இயக்குநர்களாக திரு. சகிலன், திரு. ஐயம்பெருமாள் நாக மாணிக்கம் மற்றும் திரு. குமரன் ஆகியோர் மட்டுமே பதவி வகித்து வருகின்றனர்
தற்போது சமூக ஊடகங்களில் சில விஷமிகள் பிரேம் என்பவரை நியூஸ் தமிழ் 24x7 இயக்குநர் என திட்டமிட்டு அவதூறு பரப்பி வருகின்றனர்
இதுபோன்று நியூஸ் தமிழ் 24x7 மீது பொய்யான வதந்திகளை பரப்பும் நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்
- நியூஸ் தமிழ் 24X7 நிர்வாகம்
#NewsTamil24x7
Hi @BalaKri02455000 @TVKJayHQ
கடந்த திமுக ஆட்சியில் 2024 டிசம்பர் மாதம் உங்களுக்கு அளித்த பதிலில் சொன்னபடி, 2025-26 Rural Development துறையின் Operations and Maintenance Deficit Grant Fund (OMDGF) இருந்து ₹10.85 லட்சம் மதிப்பில் உங்கள் தெருவிற்கு நிரந்தர சிமெண்ட் சாலை அமைக்க டெண்டர் விட்டு இறுதி செய்யப்பட்டு உள்ளது
Tender details
PROVIDING CEMENT CONCRETE ROAD TO PONNIYAMMAN KOIL STREET IN MEDAVAKKAM PANCHAYAT
Tender ID 5806/2023/B1, dt. 18.02.2026
Reference No 2026_RDTN_661982_1
டெண்டர் முடிவில் ₹10.64 லட்சம் என்ற அளவில் Bhavani Amman Enterprises தேர்வாகி உள்ளது.
தேர்தல் காரணமாக அப்போது நிதி விடுவித்து இருக்க மாட்டார்கள்
உங்கள் MLA @EcrPSaravanann மற்றும் அமைச்சர் @BussyAnand அவர்களிடம் இதற்கு உரிய நிதி ஒதுக்க சொன்னால் உடனடியக பணிகள் தொடங்கலாம்
அண்ணன் ஆட்சிக்கு வந்த பின் பல டெண்டர் ரத்து செய்யப்படுகிறது. உங்கள் தெருவுக்கான சாலை டெண்டர் ரத்து பட்டியலில் இல்லாமல் இருக்க அருள்மிகு பொன்னியம்மன் அருள் உங்களுக்கு கிடைக்கட்டும்
FYI @UpdatesChennai @Vasisubha1 @PriyankaSmile01 @RaavananDeepak @ScorpionSu58042 @TVKpulse @kaaviyaTVK
மதிப்பிற்குரிய @EcrPSaravanann ஐயா, வணக்கம்! 🙏
நிரந்தர சிமெண்ட் கான்கிரீட் சாலை அமைக்கக் கோரி இன்று (29.10.2026) தங்கள் அலுவலகத்தில் நேரடியாக மனு அளித்துள்ளோம். மேலும், Namma Sholinganallur இணையதளம் மூலமாகவும் புகார் பதிவு செய்துள்ளோம்.
வெறும் "100 மீட்டர் நீளமும் 20 அடி அகலமும்" கொண்ட இந்தச் சாலையைப் பயன்படுத்தும் சுமார் 70 குடும்பங்கள், ஒவ்வொரு மழைக்காலத்திலும் பல ஆண்டுகளாக மிகுந்த சிரமங்களைச் சந்தித்து வருகிறோம்.
தற்போது மழையில்லாத வறண்ட காலமாக இருப்பதால், சாலையை நிரந்தரமாக அமைக்க இதுவே சரியான தருணம். எனவே, தாங்கள் மனுவின் அடிப்படையில் விரைந்து நடவடிக்கை எடுத்து, நிரந்தர சிமெண்ட் கான்கிரீட் சாலை அமைத்துத் தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இந்த நீண்டகாலப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கிடைத்தால், சுமார் 70 குடும்பங்களும் தங்களுக்கு என்றென்றும் நன்றியுடன் இருப்போம்.
தங்களின் விரைவான நடவடிக்கையை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம், ஐயா! 🙏
---
Respected @EcrPSaravanann Sir, greetings! 🙏
Today (29 October 2026), we submitted a physical petition at your office requesting the construction of a permanent cement concrete road. We have also raised an online complaint through the Namma Sholinganallur portal.
Around 70 families using this road, which is just "100 metres long and 20 feet wide", have been facing tremendous hardship during every monsoon for many years.
As the weather is currently dry, this is the ideal time to construct the permanent road. We sincerely request you to take prompt action based on our petition and arrange for the construction of a permanent cement concrete road.
A permanent solution to this long-pending issue would bring great relief to all 70 families, and we would remain forever grateful for your support.
We sincerely look forward to your prompt action, Sir! 🙏
@CMOTamilnadu @BussyAnand
@Tambaram_Corp @DISTRICTCPT
Dear @UpdatesChennai @Vasisubha1 @PriyankaSmile01 @RaavananDeepak @ScorpionSu58042 @TVKpulse @kaaviyaTVK could you please help this request reach maximum? it's just a 100 meter length road.. Thank you in advance!
Prince retweeted
5 ஆயிரம் கோடி ரூபாய் மக்கள் பணத்தைக் கொள்ளை அடித்த BLM பிரேம்குமாருக்கும் தூய சக்தி முதலமைச்சருக்கும் என்ன தொடர்பு?
தனியார் கூட்டுறவு நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி மக்கள் முதலீடு செய்த பணத்தை தன்னுடைய சொந்தக் கணக்கிற்கு வரவு வைத்துக் கொண்டதாக பிரேம்குமார் என்பவரை கேரள காவல்துறை கைது செய்துள்ளது.
இந்த பிரேம்குமார் கடந்த ஜூலை மாதம் தான் இங்கிருக்கும் Dummy CM-ஐ சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறார். மேலும், த.வெ.க-வின் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு பிரேம்குமாருக்கு சொந்தமான பேருந்துகள் தான் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.
முக்கியமாக சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்து, நம்பிக்கை வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்பாக ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பிரேம்குமாரின் பேருந்துகளிலேயே அழைத்து வரப்பட்டனர்.
பிரேம்குமாருக்கும் முதலமைச்சருக்கும் இருக்கும் நெருக்கத்தைப் பார்க்கும் போது, அந்த நபருக்கும் - ஆளுங்கட்சிக்கும் இடையே இருக்கும் தொடர்பு என்ன?
அப்படி எந்த “விவகாரமான”தொடர்பும் இல்லை எனில், ஏன் அவசர அவசரமாக, முதலமைச்சரும் - கைது செய்யப்பட்டுள்ள நபரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தமிழ்நாடு காவல்துறை உதவியோடு சமூக வலைத்தள பக்கத்தில் இருந்து அகற்ற வேண்டும்?
MLA-க்களை Purchase செய்வது, Sofa அனுப்புவது, இடைத்தேர்தல்களில் வாரி இறைத்தது என்று த.வெ.க.வின் முறைகேடான அரசியல் செயல்பாடுகளுக்கும் இவருக்கும் தொடர்பு இருக்கிறதா?
இதையெல்லாம் CBI, SFIO, ED போன்ற ஒன்றிய அரசின் தன்னாட்சி அதிகாரம் கொண்ட விசாரணை அமைப்புகள் தலையிட்டு விசாரிக்க வேண்டும் - கைதான பிரேம்குமாருக்கும், த.வெ.க தலைமை முதல் முக்கிய நிர்வாகிகள் வரைக்கும் இருக்கும் தொடர்பை கண்டறிய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
எப்பவாதுன்னா தெரியாம பேசினதா எடுத்துக்கலாம்.. எப்போதுமேவா 🤦
முதலமைச்சர் கோப்பைக்கான நிதி ஒதுக்கீடு குறித்து அமைச்சர் @AadhavArjuna பேசியதும்
கடந்த ஆண்டு முதலமைச்சர் கோப்பைக்கான பரிசளிக்கும் விழாவில் அன்றைய துணை முதல்வரும் இன்றைய எதிர்க்கட்சித் தலைவரான @Udhaystalin பேசியதும்
2 நாட்களுக்கு முன் ₹41.5 என்ற விலை.அதிகம் என்பதால் Short/26-27/RA/85 டெண்டர் ரத்து செய்யப்பட்டது போல
இன்றைய Short/26-27/RA/89 டெண்டர் விலையும் ₹35 என்ற அதிக விலை என்பதால் ரத்து செய்யப்படும் என்று அமைச்சர் @CTR_Nirmalkumar அறிவித்துள்ளார்
மீண்டும்.. மீண்டுமா..?
மின் கொள்முதலில் மீண்டும் அதிகபட்ச விலையான ₹35 வரை கொடுத்து வாங்க இருக்கிறீர்களா அமைச்சர் @CTR_Nirmalkumar
தமிழ்நாடு அரசின் TANGEDCO மின் கொள்முதல் செய்வதற்கான Short/26-27/RA/89 Reverse Auction இன்று மதியம் 3 மணிக்கு முடிந்து விலை தெரிய வந்துள்ளது
நவம்பர், டிசம்பர், ஜனவரி என 3 மாதங்களுக்கு மின் கொள்முதல் செய்ய ₹10.5 முதல் அதிகபட்சம் ₹35 கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஆனால் நேற்று இதே Reverse Auction ல் குஜராத் மாநிலம் ₹10 குறைவான விலையில் மின் கொள்முதல் செய்ய இருக்கிறது
தமிழ்நாடு அரசு மட்டும் ஏன் கூடுதல் விலை செலுத்த வேண்டும் என்பது புரியவில்லை.
மாண்புமிகு முதல்வர் அவர்கள் இதன் மீது கவனம் செலுத்தி கூடுதல் விலையில் மின் கொள்முதல் செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மீண்டும்.. மீண்டுமா..?
மின் கொள்முதலில் மீண்டும் அதிகபட்ச விலையான ₹35 வரை கொடுத்து வாங்க இருக்கிறீர்களா அமைச்சர் @CTR_Nirmalkumar
தமிழ்நாடு அரசின் TANGEDCO மின் கொள்முதல் செய்வதற்கான Short/26-27/RA/89 Reverse Auction இன்று மதியம் 3 மணிக்கு முடிந்து விலை தெரிய வந்துள்ளது
நவம்பர், டிசம்பர், ஜனவரி என 3 மாதங்களுக்கு மின் கொள்முதல் செய்ய ₹10.5 முதல் அதிகபட்சம் ₹35 கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஆனால் நேற்று இதே Reverse Auction ல் குஜராத் மாநிலம் ₹10 குறைவான விலையில் மின் கொள்முதல் செய்ய இருக்கிறது
தமிழ்நாடு அரசு மட்டும் ஏன் கூடுதல் விலை செலுத்த வேண்டும் என்பது புரியவில்லை.
மாண்புமிகு முதல்வர் அவர்கள் இதன் மீது கவனம் செலுத்தி கூடுதல் விலையில் மின் கொள்முதல் செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எல்லாருக்கும் இது அதிர்ச்சியா இருக்கலாம். எப்போது அணி மாறினார்களோ அப்பவே இந்த கொள்கை எல்லாம் புதைச்சிட்டாங்க.
முன்னாடி ஒரு காதல் ஜோடி விவகாரம் (அப்படி தான் செய்தி போட்டாங்க) அப்ப சொன்னது தான்
/டெக்னிகலா வேணா சப்போர்ட் பண்ண முடியும். பொலிட்டிகலா இப்ப நாம வந்து பண்ண முடியாது./
nitter.cf/NewsTamilTV24x7/status…
இதையே தான் நாகப்பட்டினம் பள்ளி மாணவன் விவகாரத்திலும் விசிகவின் தவெக அரசு அமைச்சர் வேறு விதமாக சொல்லி இருக்கார்
பாமக உள்ள வந்து விசிக வெளிய வந்தால் வேண்டும் என்றால் மீண்டும் கொள்கை புடலங்காய் வியாபாரம் ஆரம்பிப்பார்கள்
5 மணிக்கு கைது பண்ணுங்கனு முதல்வர் சொல்லமாட்டார்...அது MODE OF OPERATION - கலையரசன் கைது குறித்து திருமாவளவன் கருத்து
ArrestNews | PoliticalStatement
#Thirumavalavan #Kalaiyarasan #VCK #Newstamil24x7
Prince retweeted
த.வெ.க. ஆட்சியில் வரலாறு காணாத விலைவாசி உயர்வை அம்பலப்படுத்தியதற்காக #DravidianModel ஆசிரியர் கலையரசன் அவர்கள் சட்டவிரோதமாகக் கைது: த.வெ.க. அரசின் உச்சகட்ட பாசிசம்!
சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் (MIDS) உதவிப் பேராசிரியராக உள்ள முனைவர் கலையரசன் அவர்களை நேற்று அதிகாலை, சீருடை அணியாத காவலர்கள் சட்டவிரோதமாகக் கைது செய்து, வாடகை வாகனத்தில் ஏற்றிச் சென்ற செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளானேன். கைது செய்யப்பட்டவர் சாதாரண நபரோ, குற்றப் பின்னணி கொண்டவரோ இல்லை.
திரு. கலையரசன் அவர்கள் தமிழ்நாட்டின் முதன்மையான ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரியும் பேராசிரியர். இந்தியாவின் தலைசிறந்த பல்கலைக்கழகமான JNU-வில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகமான கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் பதிப்பித்த "The Dravidian Model" நூலின் ஆசிரியர்களில் ஒருவர். ஒன்றிய அரசின் திட்டக்குழுவில் பொறுப்பு வகித்தவர். தமிழ்நாடு அரசின் பொருளாதார ஆய்வறிக்கையைத் தயார் செய்வதில் பங்களித்தவர். எல்லாவற்றுக்கும் மேல், தமிழ்நாடு முதலமைச்சர் தலைவராக இருக்கும் தமிழ்நாடு காலநிலை மாற்ற நிர்வாகக் குழுவின் உறுப்பினராக இப்போதும் இருப்பவர்.
அப்படிப்பட்டவரைத் தெரியாமல் கைது செய்துவிட்டோம் என்று கூறுவது நம்பும்படி இல்லை. செய்யாத குற்றத்திற்காக, அடிப்படை உரிமைகள் அனைத்தையும் மறுத்து, அவரது செல்போனைப் பறித்து, கைது செய்து அலைக்கழித்ததைச் சாதாரணச் செயலாக எவரும் கடந்துபோக முடியாது. குற்றவாளிகளை எல்லாம் கூத்தடிக்க விட்டுவிட்டு, கல்வியாளர்களை அச்சுறுத்திப் பார்ப்பது எவ்வளவு பெரிய அசிங்கம்?
திரு. கலையரசன் அவர்கள் ஏன் கைது செய்யப்பட்டார்? Dravidian Model என்ற பதத்தை முன்வைத்து, திராவிட ஆட்சியால் தமிழ்நாடு அடைந்த வளர்ச்சியை உலகம் முழுவதும் பறைசாற்றியதற்காகவா? த.வெ.க. ஆட்சி அமைந்த பிறகுதான், தமிழ்நாடு இதுவரை சந்தித்திராத விலைவாசி உயர்வைச் சந்தித்துள்ளது என்ற உண்மையைச் சொன்னதற்காகவா?
முட்டாள்களால் நிறைந்த த.வெ.க.வுக்கும் கல்விக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது அனைவரும் அறிந்ததுதான். ஆனால், கல்வியாளர்களைக் கைது செய்து மிரட்டும் அளவுக்கு அறிவின் மீது ஒவ்வாமை கொண்டவர்களாக இவர்கள் நடந்துகொள்வார்கள் என நிச்சயமாக நினைக்கவில்லை. பாசிசத்தில் பா.ஜ.க.வையும் மிஞ்சிவிடுவார்கள் என்பதைத்தான் இந்தக் கைது காட்டுகிறது. முதலமைச்சரின் ஒப்புதலோடும் உயரதிகாரிகளின் அனுமதியோடும்தான் இந்த அத்துமீறல் நடக்கிறதா?
முனைவர் கலையரசன் அவர்கள் எந்தக் கட்சியையும் சார்ந்தவர் அல்ல. கடந்த ஆட்சிக்காலத்திலும், அவர் சுதந்திரமாகத் தன்னுடைய விமர்சனக் கருத்துகளை முன்வைத்திருக்கிறார். ஆனால், இந்தத் தரங்கெட்ட த.வெ.க. ஆட்சியோ, எங்கள் ஆட்சியைப் பற்றியோ நிர்வாகத் தோல்விகளைப் பற்றியோ ஊடகங்களில் உண்மையைப் பேசினால் விளைவுகள் மோசமாக இருக்கும் என்று மிரட்டும் ரவுடி அரசாகச் செயல்பட்டுள்ளது. இப்படிப்பட்ட அரசிற்கு ஆதரவு அளித்துக் கொண்டு இருக்கும் கட்சிகள், இந்த அநியாயத்தைக் கண்டும் காணாமல் இருப்பது ஏன்? இதுதான் இவர்கள் பாசிசத்தை எதிர்த்துக் கேள்வி கேட்கும் அரசியலா?
புகழ்பெற்ற பேராசிரியர் மீது பொய்யான குற்றச்சாட்டைப் புனைந்து, அவரை அலைக்கழித்து, துன்புறுத்திய த.வெ.க. அரசின் பாசிச செயல் கடும் கண்டனத்துக்குரியது. தமிழ்நாடு காவல்துறையும், அதற்குப் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் அவர்களும் முனைவர் கலையரசன் அவர்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்!
Prince retweeted
Kalaiyarasan A, an economist and Associate Professor at Madras Institute of Development Studies was picked up by Tamil Nadu Police at 5 in the morning today purportedly on a baseless and fabricated story.
@CMOTamilnadu should enquire into the circumstances around the unlawful detention of Kalaiyarasan.
கட்டுக்கட்டாக பணம் வாங்கப்படும் நிகழ்வு நடந்தது 2020
அன்றைய அதிமுக அரசின் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தான் இன்றைய தவெக அரசின் வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சராக இருக்கும் மாண்புமிகு @KASengottaiyan அவர்கள்
நந்தகுமார் கடந்த 15 ஆண்டுகளாக பள்ளிக் கல்வித் துறையில் ஊழல் நடப்பதாக சொல்லி இருந்தார்
ஆனால் அரசக்குமார் உடன் இருந்த இளங்கோவன் கொடுத்த புகாரில் மட்டும் தான் FIR பதிவு செய்து விசாரணை நடைபெற்று கைதுகள் நடக்கிறது
நந்தகுமார் சொன்னபடி அதிமுக ஆட்சிக் காலம் முதல் நடந்த ஊழலை வெளிக்கொண்டு வர முழுமையான விசாரணை நடத்தி இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உட்பட அனைவரும் கைது செய்யப்பட வேண்டும்
தொடவும் மாட்டேன்
தொட்டவனை விடவும் மாட்டேன்
செய்விங்களா சிஎம் சார்.!
2020-ல் ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக கூறி கட்டுக்கட்டாக பணம் வாங்கும் BDO டிரைவர்! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!
Viral Video | BDO | BDO driver | Corruption | Viral News | Bribe
#Newstamil24x7 #TeacherJob #Kallakurichi
TANGEDCO வெளியிட்ட 2 Short Term Tender
Short/PP-46 மூலம்
பிப்ரவரி - 2880 MW / day
மார்ச் - 2000 MW / day
ஏப்ரல் - 3200 MW / day
மே - 3200 MW / day
ஜூன் - 2000 MW / day
ஜூலை - 2000 MW / day
Short/PP-48 மூலம்
நவம்பர் - 1400 MW / day
டிசம்பர் - 700 MW / day
ஜனவரி - 2800 MW / day
வாங்க முடிவு செய்துள்ளார்கள். இதற்கான இறுதிநாள் 23.10.2026 மற்றும் 28.10.2026 ஆனால் இன்னும் இதற்கான முடிவுகள் அறிவிக்கப்படவில்லை.
அதே சமயம் 2 Reverse Auction (RA) பட்டியலில் உள்ளது
Short/26-27/RA/89
Short/26-27/RA/78
மேலே குறிப்பிட்ட PP-46 & PP-48 டெண்டருக்கான Reverse Auction என்பதா என்று உறுதி செய்ய முடியவில்லை. இந்த 2 RA நாளை மற்றும் நாளை மறுநாள் வருகிறது.
அமைச்சர் நேற்று அறிவித்தபடி PP-47 டெண்டர் விலை அதிகம் என்பதால் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது
தமிழ்நாடு அரசு மற்றும் துறை அமைச்சர் அவர்கள் கூடுதல் விலை கொடுத்து வாங்குவதை தவிர்க்க வேண்டிய நடவடிக்கை எடுக்க வேண்டும். PP-46 மற்றும் PP-48 குறித்த முடிவுகளை வெளிப்படைத் தன்மையுடன் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்
இது குறித்து எதுவும் தகவல் இருந்தால் பதிவு செய்யுங்கள் @Im_kannanj
Source
PP-46
tneb.tnebnet.org/attach/gedc…
PP-47
tneb.tnebnet.org/attach/gedc…
PP-48
tneb.tnebnet.org/attach/gedc…
RA Listed
mstcecommerce.com/auctionhom…
மாண்புமிகு அமைச்சர் திருமிகு @jagadeshwarioff அவர்களை "ஜில்லா ஜெகதீஸ்வரி" என குறிப்பிட்டுள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன்
@writersamas @PttvNewsX இனி வரும் காலங்களில் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் என்ற வகையில் குறிப்பிட வேண்டுமே தவிர இப்படி அடைமொழியை தவிர்க்க வேண்டும்
This quoted post is unavailable.








































