kalaranjan kanagalingam retweeted
🙏 அடையாளம் காண உதவுங்கள் – மனிதநேயத்துடன் பகிருங்கள்!
திருவனந்தபுரம் – அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தபோது தவறி விழுந்து காயமடைந்த சுமார் 35 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர், ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுயநினைவின்றி சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரது பெயர், முகவரி மற்றும் குடும்பத்தினர் குறித்த எந்தத் தகவலும் இதுவரை கிடைக்கவில்லை.
இந்தப் பெண்ணின் உறவினர்களைக் கண்டறிந்து, அவரை குடும்பத்தினருடன் மீண்டும் இணைக்க உங்கள் உதவி தேவைப்படுகிறது.
அவரை அடையாளம் தெரிந்தவர்கள் அல்லது ஏதேனும் தகவல் அறிந்தவர்கள் உடனடியாகத் தொடர்புகொள்ளவும்.
📞 தொடர்பு எண்: 7845452834
ஒரு சிறிய பகிர்வு ஒரு குடும்பத்தின் நீண்ட தேடலுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம். மனிதநேயத்துடன் இந்தத் தகவலை அதிகம் பகிர்ந்து உதவுங்கள்.
🙏 உங்கள் பகிர்வு ஒரு உயிரின் குடும்பத்தை மீண்டும் இணைக்க உதவலாம்
kalaranjan kanagalingam retweeted
செந்தமிழன்
SENTHAMIZHAN SEEMAN🐯
@Seeman4TN
Ban lift ஆவது high court ஆவது. I urge TN govt to make a special amendment regarding this . @Seeman4TN
kalaranjan kanagalingam retweeted
வரலாறு திரிக்கப்படக் கூடாது என்பதற்காக எனது நிலையிலிருந்து கீழிறங்கி,!
"....வரலாறு எப்போதும் நேர்மையாகப் போராடியவர்களையும், துணிச்சலாக எதிர்த்து நின்றவர்களையுமே நினைவில் வைத்துக்கொள்கிறது. முகமூடி அணிந்து கொண்டு முதுகில் குத்தும் நயவஞ்சகர்களைக் காலம் தானாகவே அடையாளம் காட்டி ஒதுக்கிவிடும்..."
போராட்டம் மற்றும் வரலாறு சார்ந்த செய்திகளை நான் பதிவு செய்யும் போதெல்லாம், "ஐயா இவற்றை ஆவணமாக்குங்கள்", "உங்களைப் போன்றவர்கள் எமக்குப் பலம்", "உங்களோடு உரையாடுவது எமக்குப் பெருமை" என்று புகழ்ந்துரைத்தவர்கள் பலர் உண்டு. ஆயினும், தனிமனிதர்களின் விருப்பு வெறுப்புகளையும், புகழுரைகளையும் கடந்து நான் கொள்கை வழி நிற்பவன். அதனால்தான், இன்றும் பல சவால்களுக்கும் கொலை அச்சுறுத்தல்களுக்கும் மத்தியிலும் உண்மையோடும் உறுதியோடும் பொதுவெளியில் நிற்கின்றேன். எந்தவொரு போலியான முகவரிகளுக்குப் பின்னாலும் முகத்தை மறைத்துக்கொண்டு கருத்துச் சொல்பவன் அல்லன் நான்.
எனது நிலையிலிருந்து கீழிறங்கி, முகமற்ற அடையாளங்களுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு அவதூறு பரப்புபவர்களுக்கு ஒவ்வொரு முறையும் பதிலளிக்க வேண்டிய தேவை எனக்கு இல்லை. ஆயினும், வரலாற்று உண்மைகள் திட்டமிட்டுத் திரிக்கப்பட்டு, பொதுவெளியில் தவறான பிம்பங்கள் கட்டமைக்கப்பட்டுவிடக் கூடாது என்ற வரலாற்றுப் பொறுப்புணர்வின் காரணமாகவே இந்தப் பதிவை முன்வைக்கிறேன். ஒவ்வொரு மனிதனுக்குப் பின்னாலும் ஒரு மறுபக்கம் இருக்கின்றது என்பதைக் களத்தில் நேரடியாகக் கண்டவன் என்ற அடிப்படையிலேயே எனது கருத்துக்களை நான் பதிவு செய்கிறேன்.
1979ஆம் ஆண்டு முதல், 2009ஆம் ஆண்டு கே.பி. பத்மநாதன் கைது செய்யப்படும் வரை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தோடு இணைந்து பயணித்தவன் நான். 2009 மே 17ஆம் திகதி தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் வீரச்சாவடைந்தார் என்ற கசப்பான வரலாற்று உண்மையை, களத்தில் நின்ற தளபதி சூசை மற்றும் தளபதி ஜெயம் ஆகியோரின் நேரடி வாக்குமூலங்களின் அடிப்படையில், தமிழீழ விடுதலைப் புலிகளின் உத்தியோகபூர்வப் பிரதிநிதியாக அனைத்துலகத்திற்கு அறிவித்தவனும் நானே.
அதுமட்டுமல்ல, தேசியத் தலைவரின் வீரச்சாவிற்குப் பின்னர் எமது தேசத்தின் அடுத்தகட்ட இலக்கை எவ்வாறு முன்னெடுப்பது என்பதைத் தீர்மானிப்பதற்காக, 2009 மே 24ஆம் திகதி சுவிட்சர்லாந்தில் உலகத் தழுவிய தமிழ் அமைப்புகளின்(விபு) ஒன்றுகூடல் ஒன்றை இயக்கத்தின் சார்பில் ஒருங்கிணைத்தேன். அந்த வரலாற்று முயற்சி சிலரின் சுயநலன்களால் நிராகரிக்கப்பட்ட பின்னரும் நான் மௌனமாகிவிடவில்லை; "உலகத் தமிழினமே உனக்கு ஒரு மடல்" என்ற வரலாற்று அறிக்கையினை வெளியிட்டு, 2009 மே 15 முதல் 18 வரை தேசியத் தலைவருக்கும், போராளிகளுக்கும், எமது மக்களுக்கும் என்ன நடந்தது என்பதை எவ்வித ஒளிவுமறைவுமின்றி உலகிற்குத் தெளிவுபடுத்தினேன்.
கடந்த பதினேழு ஆண்டுகளாக, தேசியத் தலைவரின் வீரச்சாவை மறுப்பவர்களையும், கோடைகாலக் கொண்டாட்டங்களாகவும் கொத்துரொட்டி விருந்துகளாகவும் நினைவேந்தல்களைக் கொச்சைப்படுத்தியவர்களையும், இயக்கத்தின் பெயரைத் தவறாகப் பயன்படுத்துபவர்களையும் ஒருசேர விமர்சித்து வருகிறேன்.
2009-க்குப் பின்னர் எந்தவொரு பிரிவினைக் குழுக்களோடும் இணைந்து பயணிக்காமல், அனைவரையும் ஒருங்கிணைக்கும் முயற்சிகளை முன்னெடுப்பதற்காக உருவாக்கப்பட்ட செயற்பாட்டுக் குழுவில் நின்று பயணிப்பவன் நான். அன்று இயக்கம் எனக்குத் தந்த பணி எதுவோ, அதனைக் கொள்கை வழிதவறாமல், "தலைவரோடு இருந்தவன், தலைவரோடு பயணித்தவன்" என்ற உன்னத இறுமாப்போடு கூட்டாக இணைந்து முன்னெடுத்து வருகிறேன்.
2009 வரை ஒரு மாபெரும் விருட்சமாக மரம் இருந்தது. அந்த மரம் சாய்ந்து வீழ்ந்த நிலையில், அந்த மரத்தின் வேர்களைக் கருகாமல் நிமிர்த்துவதை விடுத்து, விழுந்த மரத்தின் கருகிய கொப்புக்கள் கிளை முளைத்துவிட்டதாகச் சொல்லி மக்கள் மத்தியில் தம்மைப் "புலிகள்" என அடையாளப்படுத்திக் கொள்ளும் போதெல்லாம் அதனை எதிர்த்தும் விமர்சித்தும் வருகிறேன். 2009-க்குப் பின் புலிகளின் பெயரால் முன்வைக்கப்படும் எந்தவொரு உரிமைகோரல்களையோ, அவர்கள் வழங்கும் அறிக்கைகளையோ அல்லது பட்டங்களையோ நான் ஒருபோதும் ஏற்றுக்கொண்டு ஆதரித்தவன் அல்லன்.
கொத்துரொட்டிக்கும் அற்ப சலுகைகளுக்கும் விலைபோகும் கூட்டத்தோடு என்னை இணைத்துப் பேசுவதற்கு எவருக்கும் தகுதியில்லை. வரலாற்றின் சாட்சியாக நின்று உழைத்தவன் என்ற தார்மீக பலத்தோடு சொல்கிறேன்—எனது பயணம் எப்போதும் கொள்கை வழிநின்ற தேச விடுதலைக்கானது மட்டுமே!
புலிகளின் தாகம் தமிழீழத்தாயகம்
kalaranjan kanagalingam retweeted
தமிழீழ தேசிய கொடி நாள்
Tamil Eelam national flag day
21 November 2026
Liverpool 🇬🇧🇬🇧🇬🇧
kalaranjan kanagalingam retweeted
திருமாவளவன் எனும் யோக்கியன் வரான்!!
விடுதலை சிறுத்தையில் இன்னும் எத்தனை தமிழர்கள் இருக்கறிங்க..
இன்னும் உங்களை நீங்கள் தமிழன் என்று சொன்னால் உடனே செத்துவிடுங்கள். அல்லது தமிழன் என இனி எப்போதும் சொல்லி பெருமைக் கொள்ளாதிர்கள்..
kalaranjan kanagalingam retweeted
தலைவரின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி கலசப்பாக்கம் சட்டமன்றத் தொகுதி தலைமை அலுவலகத்தில் குருதிக்கொடை முகாம் வெகு சிறப்பாக நடைபெற்றது இதில் கட்சி உறவுகளும் பொதுமக்களும் கலந்துகொண்டு 26அலகு குருதி கொடையாக கொடுக்கப்பட்டது👍
kalaranjan kanagalingam retweeted
1) தனது காதலி மதிவதனிக்காக பத்துப்பேரைச் சுட்டுக்கொன்ற தலைவரான பிர/பா/க/ர ன் வீட்டு மண்ணை கள ஆய்வின் போது எடுத்துச்சென்றார் தொல் திருமாவளவன். இவர் 2009 தமிழினப்படுகொலையின்போது கொங்கிரஸ்+திமுக கூட்டணியை விட்டு வெளியேறியவர் என்பதும், திமுக அணியினர் மகிந்த இராஜபக்சவைச்

















