எம். கே. சிவாஜிலிங்கத்தின் இறுதிக்கிரியைகள் வல்வெட்டித்துறை ஊறணி இந்து மயானத்தில், உள்நாட்டு, வெளிநாட்டு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பெருந்திரளான மக்களின் பங்கேற்புடன் நடைபெற்றன. அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வல்வெட்டித்துறை நகரில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருந்தன.
தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான நியாயப்பாடுகளைச் சிங்கள மொழியில் விளக்குவதற்காகப் பல தசாப்தங்களாகத் தொடர்ந்து முயற்சித்த, வடக்கைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், வல்வெட்டித்துறை நகர சபையின் தலைவருமான எம்.கே. சிவாஜிலிங்கம் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.
விசாரணைப் பணிகள் இடைநிறுத்தப்பட்ட இலங்கையின் மூன்றாவது பெரியதாகக் கருதப்படும் மாத்தளை மனிதப் புதைகுழி தொடர்பான விசாரணைகளை மீண்டும் ஆரம்பிக்குமாறு காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்ப ஒன்றியம் விடுத்த கோரிக்கை தொடர்பான வழக்கு விசாரணை ஜனவரி 13ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அனோஜன் சிவராசாவுக்கு எதிரான வழக்கைத் தொடர்ந்து முன்னெடுக்கப் போவதில்லை என சவுதி அரச தரப்பு சட்டத்தரணிகள் தீர்மானித்ததைத் தொடர்ந்து, அவரை விடுதலை செய்ய அந்நாட்டு உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. 2 வாரங்களுக்குள் அனோஜனை இலங்கைக்கு அழைத்து வர @HMVijithaHerath எதிர்பார்த்துள்ளார்.
தையிட்டி திஸ்ஸ விகாரையில் இன்று சமய ஊர்வலமும் வழிபாட்டு நிகழ்வும் நடைபெற்ற நிலையில், அதில் பங்கேற்பதற்காக தென்னிலங்கையிலிருந்து நூற்றுக்கணக்கான பௌத்தர்கள் பேருந்துகளில் அழைத்து வரப்பட்டிருந்தனர். இந்தப் பின்னணியில் விகாரையை அகற்றுமாறு தமிழர்கள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.
பலாலியில் இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் உள்ள காணி விடுவிக்கப்பட்ட பின்னர், அந்த மண்ணிலேயே இறுதியாகக் கண்மூட வேண்டும் என 36 ஆண்டுகளாக போராடி, ஆசை நிறைவேறாமலேயே உயிர் நீத்த, 83 வயது தம்பித்துரை இளையகுட்டியின் பூதவுடல், காணி விடுவிப்பு போராட்டக் களத்திற்கு நேற்று கொண்டுவரப்பட்டது.
ஐ.நா. நிபுணர்கள் சட்டமூலம் குறித்து எச்சரிக்கை விடுத்து ஒரு வாரத்திற்கும் குறைவான காலப்பகுதியில், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளும் உரிமைகள் குழுக்களுமே ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலத்திற்கு (POCB) எதிர்ப்புத் தெரிவிப்பதாக @anuradisanayake தெரிவிக்கின்றார்.
வலுவான அரச இயந்திரத்தை உறுதிப்படுத்தி, புதிய பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்துவதற்காகப் பழைய சட்டங்களை மாற்றியமைத்து, புதிய நிறுவனக் கட்டமைப்பை நிறுவும் வகையில், ‘பழைய துருப்பிடித்த கட்டமைப்புகளிலிருந்து வெளியே வருமாறு’ @anuradisanayake, JVP-வுடன் இணைந்த தொழிற்சங்கங்களிடம் கோரிக்கை.
பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட மூலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக சுகாதாரம், மின்சாரம், தபால் உள்ளிட்ட பல்வேறு சேவைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசாங்கம் முன்மொழிந்துள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலத்தைத் திருத்துமாறு வலியுறுத்தியுள்ள ஐ.நா நிபுணர்கள், PSTA தொடர்பாகத் தமது கரிசனைகளை முன்வைத்து 2026 பெப்ரவரியில் அனுப்பிய கடிதத்திற்கும் இதுவரை பதில் கிடைக்கவில்லை என வருத்தம் தெரிவித்துள்ளனர்.
யாழ். கந்தரோடை தொல்லியல் தளத்தில் புத்தர் சிலை ஒன்று நிறுவப்பட்டுள்ளதாக முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து, தான் அங்கு சென்றபோது அவ்வாறான சிலை எதுவும் இருக்கவில்லை என வலி. வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா பிரகாஷ் தெரிவிக்கின்றார்.
பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படாத அரச பெருந்தோட்டக் காணிகளைத் தனியார் நிறுவனங்களுக்குக் குத்தகைக்கு வழங்கும் நடவடிக்கையை உடனடியாக நிறுத்துமாறு வலியுறுத்தும் எமது கோரிக்கை குறித்து, பெருந்தோட்ட அமைச்சின் செயலாளர் அளித்த பதிலில் தமக்கு நம்பிக்கையில்லை என, ஜீ.சுரேஸ் தெரிவிக்கின்றார்.
அரச பெருந்தோட்ட நிறுவனங்களின் கீழ் உள்ள பயிரிடப்படாத காணிகளைத் தனியார் முதலீட்டாளர்களுக்கு வழங்கும் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிராக, மலையக மக்கள், குடிமை சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சுக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேய்ச்சல் நிலங்களைச் சிங்களக் குடியேறிகள் ஆக்கிரமிப்பதால் பால் பண்ணையாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக சுட்டிக்காட்டி, மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக திரண்ட பெருந்திரளான தமிழர்கள், இந்த பிரச்சினைக்கு அரசாங்கம் உடனடித் தீர்வை வழங்க வேண்டுமென வலியுறுத்தினர்.
இலங்கையின் வடக்கில் உள்ள தமிழர்கள், கடந்த 36 ஆண்டுகளாக இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் உள்ள 6,000 ஏக்கருக்கும் அதிகமான காணிகளை விடுவிக்கக் கோரி, பலாலி சந்தி மற்றும் வசாவிளான் சந்தியில் சிங்கள மொழியில் கோஷங்களை எழுப்பித் தமது போராட்டத்தை முன்னெடுத்தனர்.
திலீபன் நினைவுத்தூபியை அகற்றுவது தொடர்பில்: தடைசெய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினரை நினைவுகூரும் வகையில் அவரது உருவப்படத்தை வைப்பதற்காக அமைக்கப்பட்ட தற்காலிகக் கட்டமைப்பை அகற்றுவது தொடர்பில் யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வருக்கு இலங்கை பொலிஸார் அறிவித்தல் விடுத்துள்ளனர்.
முல்லைத்தீவு விமானப்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரோஹிங்கியா அகதிகளில் 60 பேர் சிறுவர்களாக உள்ள நிலையில், அவர்களுக்கு எவ்விதமான கல்வி வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இலங்கை ஜனாதிபதி, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி விஜித் கே. மலல்கொடவை @HRCSriLanka-இன் புதிய தலைவராக நியமித்துள்ளார்.
எஸ்.வை.எம். கோமஸ், ஏ.எல்.ஏ. அசீஸ், கலாநிதி எஸ்.எஸ்.எஸ்.பி.டி.எச். ஜயவர்தன மற்றும் பேராசிரியர் தங்கமுத்து ஜெயசிங்கம் ஆகியோர் ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாவர்.
2014 ஒக். 29 அன்று, பதுளை, கொஸ்லாந்தை, மீரியபெத்த தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவில் வீடுகளை இழந்த சில குடும்பங்களுக்கு இன்று வரை வீடுகள் வழங்கப்படாமையை கண்டித்தும், மலையகத் தமிழ் மக்களுக்கான காணி உரிமையை வலியுறுத்தியும், அப்புத்தளை நகரில் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
UPDATE; இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்தபோது, நாட்டின் பிரதான சர்வதேச விமான நிலையத்தில் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினால் (CTID) கைது செய்யப்பட்ட கிருஷ்ணகுமார் கந்தசாமியை மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் சொந்தப் பிணையில் விடுவித்துள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற போரிலிருந்து 17 ஆண்டுகளுக்கு முன்னர் தப்பிச் சென்ற தமிழரான கிருஷ்ணகுமார் கந்தசாமி, இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய நிலையில் அரசாங்கம் அவரை 'கடத்தியுள்ளது' என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் @skajendren குற்றஞ்சாட்டியுள்ளார்.












