M Nachiappan retweeted
இன்றைய தினம், அமரர் அருள்மாமணி N.T.S. ஆறுமுகம் பிள்ளை அவர்களின் கொள்ளுப் பேரனும், நகரத்தந்தை அமரர் நா. ஆறு. நாகராஜன் பிள்ளை அவர்களின் பேரனும், அன்பு அண்ணன் திரு. நா. இராமேஸ்வரன் அவர்களின் மகனுமாகிய, மணமகன் திரு. நாகராஜன் ராமேஸ்வரன் – மணமகள் டாக்டர் தக்ஷிணா காந்தவாசன் ஆகியோரின் திருமண விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தியதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
கல்வி, சமூகப் பங்களிப்பு என பாரம்பரிய சிறப்புகளைக் கொண்ட அமரர் அருள்மாமணி N.T.S. ஆறுமுகம் பிள்ளை அவர்கள் குடும்பத்தின் பெருமைமிகு மரபினை, மணமக்களும் தொடர்ந்து போற்றிப் பாதுகாத்து, அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் செல்ல வேண்டும்.
மணமக்கள் ஒருவருக்கொருவர் துணையாக, அன்பும் புரிதலும் நிறைந்த மகிழ்ச்சியான இல்லற வாழ்வை அமைத்துக்கொண்டு, அனைத்து வளங்களும் நலன்களும் பெற்று, பல்லாண்டு நீடூழி வாழ மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தேனாறு... மீட்பு பணியின் முழுமையான விவரம் தெரிந்து கொள்ள இந்த வீடியோவை முழுமையாக பார்க்கவும்!
#sivagangai #karaikudi #thenaru #wetheleaders #annamalai #riverrestoration #bethechange #waterbody #ThenarRiver
@annamalai_k @WTLFoundation
உலகப் புகழ் பெற்ற சிராவயல் மஞ்சுவிரட்டு ஏற்பாட்டாளர் திரு KKRS வேலுச்சாமி அம்பலம் அவர்களுடன் சிராவயல் மஞ்சுவிரட்டு திடலை பார்வையிட்டு விழா நிகழ்ச்சிகள் குறித்து கேட்டறிந்தோம். ஊர் மக்களும், இளைஞர்களும் தலைவர் திரு அண்ணாமலை அவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என விருப்பம் தெரிவித்தனர்.
@annamalai_k @WTLFoundation
M Nachiappan retweeted
We have seen the last of this wonderful person as a player!
His retirement today from the IPL as a player reflected his signature way of saying Goodbye to us - unassuming and on his own terms!
Thank you MSD for being who you are and for entertaining and educating us!
M Nachiappan retweeted
நேற்று, திருச்செந்தூர் சூரசம்ஹார விழாவின்போது, இந்து சமய அறநிலையத்துறை குழு உறுப்பினரான திரு.வேல்முருகன், தமிழக முதலமைச்சருக்கு “அரோகரா”, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருக்கு "அரோகரா" என முழக்கமிட்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. முருகப்பெருமானின் திருவிழாவையும், பக்தி முழக்கங்களையும் அரசியல் புகழ்ச்சிக்குப் பயன்படுத்துவது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல.
“அரோகரா” என்பது முருகப்பெருமானை போற்றிப் பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் எழுப்பும் புனிதமான முழக்கம். அந்த இறை முழக்கத்தை அரசியல் தலைவர்களுக்காகப் பயன்படுத்துவது ஆன்மிக மரபுகளைக் கொச்சைப்படுத்துவதுடன், முருகப்பெருமானை வழிபடும் கோடிக்கணக்கான பக்தர்களின் உணர்வுகளையும் புண்படுத்தும் செயலாகும்.
இந்து சமய அறநிலையத்துறையின் குழு உறுப்பினராக இருப்பவரே இத்தகைய செயலில் ஈடுபடுவது முற்றிலும் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. பக்தர்களின் நம்பிக்கையையும் வழிபாட்டு மரபுகளையும் அவமதிக்கும் வகையிலான இதுபோன்ற செயல்களைத் தவிர்க்குமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு தமிழக முதலமைச்சர் திரு @TVKVijayHQ அவர்கள் அறிவுறுத்த வேண்டும்.
சஷ்டி விரதம் இருக்கும் அனைத்து முருக பக்தர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். திருச்செந்தூர் செந்தில் ஆண்டவனின் அருளில் அனைவரது வாழ்வும் நிறைவாகட்டும்!
வெற்றி வேல்! வீர வேல்!
M Nachiappan retweeted
இன்றைய தினம் கோவையில் நமது APJ Centre for Ethics and Politics மையத்தில், மாணவர்களின் கனவுகள், அவர்களின் குடும்பப் பொருளாதாரச் சூழலால் ஒருபோதும் தடைபடக்கூடாது என்ற உயரிய நோக்கத்துடன், TNPSC aspirants முன்னிலையில் நமது @WTLFoundation சார்பில், ஏற்றம் அகாடமி (Etram Academy) academy.wetheleader.org/ என்ற புதிய கல்வித் தளத்தை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
இதன் தொடக்கமாக, தமிழ்நாடு அரசுப் பணிகளுக்கான TNPSC Group 4 தேர்வு மற்றும், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய அளவிலான TN NMMS உதவித்தொகைத் தேர்வு என இரண்டு முக்கியத் தேர்வுகளுக்கும், தரமான பயிற்சியை முற்றிலும் இலவசமாக இந்தத் தளம் மூலம் வழங்கவிருக்கிறோம். தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளிலும் பாடங்கள், சிறு காணொளிப் பாடங்கள், பயிற்சி வினாக்கள், முந்தைய ஆண்டு வினாத்தாள்கள், மாதிரித் தேர்வுகள் என மாணவர்கள் முழுமையாக தயாராவதற்கு, இந்தத் தளம் உதவும்.
தரமான கல்வி என்பது வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே உரிய வாய்ப்பாக இருக்கக்கூடாது; ஒவ்வொரு மாணவரின் உழைப்புக்கும் திறமைக்கும் சமமான வாய்ப்பு கிடைக்க வேண்டும். அந்த இலக்கை நோக்கிய எங்களின் மற்றுமொரு முன்னெடுப்புதான் நமது ஏற்றம் அகாடமி. மாணவர்கள் அனைவரும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தங்கள் கனவுகளை நனவாக்க நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
academy.wetheleader.org/ (1/2)
தேனாறு ஆற்றை மீட்டு சுத்தப்படுத்தி மேற்கொள்ளப்பட்டு வரும் புத்துயிர்ப்பு பணிகளின் நிலவரம் குறித்து தலைவர் திரு அண்ணாமலை அவர்களுக்கு நானும் எக்ஸ்னோரா தலைவர் திரு செந்தூர் பாரி அவர்களும் விரிவாக எடுத்துரைத்தோம். காரைக்குடியில் களப்பணியாற்றிடும் வீ த லீடர்ஸ்
வழக்கறிஞர் திரு செல்வகணபதி, திரு N கார்த்திக் மற்றும் திரு AT கார்த்திகேயன் ஆகியோர் உடன் இருந்தனர்.
@annamalai_k @WTLFoundation
M Nachiappan retweeted
முன்னாள் ஐபிஎஸ் அலுவலரும் We The Leaders அமைப்பின் தலைவருமான அண்ணன் திரு. அண்ணாமலை அவர்களை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தேன். நிகழ்கால அரசியல் நிகழ்வுகள் குறித்தும் எதிர்காலத் திட்டங்கள் பற்றியும் நட்புரீதியாக கலந்துரையாடினோம். அப்போது, புதுச்சேரியை வளர்ச்சியடைய வைக்க நான் தீட்டிய திட்டங்கள் குறித்த ‘Rising Puducherry'புத்தகத்தைப் பரிசளித்தேன்.
#ljk #jcm #Puducherry #risingpuducherry #PoliticalMeeting
M Nachiappan retweeted
India's youth aren’t short on capability; they need a bridge between education and economic opportunity. By aligning state policies, granting institutions autonomy, and deepening industry collaboration, we can turn our demographic dividend into a powerful engine of global economic leadership.
We the Leaders Foundation has Youth Skilling and Empowerment as our priority agenda, and Here’s our policy paper for Youth Skilling and Empowerment.
wetheleader.org/files/policy…
மாற்றம் நம்மிடமிருந்து தொடங்கட்டும்,
இளைஞர்களின் எதிர்காலம் சிறக்கட்டும்.
எனது இனிய நண்பர், மாலைமுரசு TV ஊடகவியலாளர் திரு பரத்குமார் அவர்கள், எதிர்பாராவிதமாக, உயிரிழந்த செய்தி, மிகுந்த அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளிக்கிறது.
பத்திரிகைத் துறையில் தனது பணியை சிறப்பாகச் செய்து வந்த, திரு பரத்குமார் அவர்களின் திடீர் மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சக பத்திரிகையாளர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவரது ஆன்மா சாந்தியடைய, இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
ஓம் சாந்தி!
அன்புத் தலைவர் திரு அண்ணாமலை அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!
For the second consecutive year, I returned to Goa to take on the Ironman 70.3 challenge. I am glad to have crossed the finish line once again.
There were moments when excruciating pain and relentless cramps made every step an uphill battle. Crossing the finish line made every bit of the struggle worthwhile.
The journey continues to make me a better version of myself!
Heartiest congratulations to all participants who took up the challenge this year, and a special shout-out to the volunteers of this world-class organisation, Ironman 70.3 Goa, for making the event memorable.
M Nachiappan retweeted
தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள் என்ற உயரிய லட்சியத்துடன் வாழ்ந்து, இன்றும் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் தெய்வத்திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் குருபூஜை நாளான இன்று, நமது We The Leaders சார்பில் பசும்பொன்னில் அமைந்துள்ள அவரது திருக்கோவிலில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
ஐயாவின் தியாகமும் புகழும் என்றென்றும் நிலைத்திருக்கும்!
முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் ஜெயந்தி மற்றும் குருபூஜை நாளான இன்று, வீத லீடர்ஸ் சார்பில் தலைவர் திரு அண்ணாமலை அவர்களின் அறிவுறுத்தலின்படி இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் அமைந்துள்ள தேவர் திருமகனாரின் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தி வணங்கினேன்.
@annamalai_k @WTLFoundation
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் ஜெயந்தி மற்றும் குருபூஜை நாளான இன்று, வீத லீடர்ஸ் சார்பில் தலைவர் திரு அண்ணாமலை அவர்களின் அறிவுறுத்தலின்படி இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் அமைந்துள்ள தேவர் திருமகனாரின் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தி வணங்கினேன். இந்நிகழ்ச்சியில் என்னோடு திரு தரணீ முருகேசன், திரு பாண்டுரங்கன், திரு வசந்த ராஜன், திரு மகா சுசீந்திரன், திரு சோழன் பழனிசாமி மற்றும் திரு பண்ணைவயல் இளங்கோ ஆகியோர் கலந்து கொண்டனர்.
@annamalai_k @WTLFoundation
M Nachiappan retweeted
நமது We The Leaders அமைப்பின் சார்பில், முதன்மைச் சேவகர் திரு. அண்ணாமலை அவர்களின் அறிவுறுத்தலின்படி, சிவகங்கை மாவட்டத்தின் முக்கிய நீராதாரமான தேனாற்றைத் தூய்மைப்படுத்தும் பணி கடந்த 10 நாட்களாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதுவரை 8 கி.மீ. தொலைவுக்கு ஆறு தூய்மைப்படுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள 40 கி.மீ. தொலைவும் அடுத்த 60 நாட்களுக்குள் தூய்மைப்படுத்தப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட உள்ளது. இப்பணியின் மூலம் 90,000 ஏக்கருக்கும் அதிகமான விவசாய நிலங்கள் பயன்பெறும்.
மேலும், ஆற்றைத் தூய்மைப்படுத்தி, நீரோட்டத்திற்குத் தடையாக உள்ள சீமைக்கருவேல மரங்கள் மற்றும் கழிவுகளை அகற்றுவதன் மூலம், மழைக்காலங்களில் வெள்ளநீர் சீராகச் செல்வதற்கு வழிவகுப்பதுடன், வெள்ளப் பாதிப்புகள் குறைகிறது.
இயற்கையைப் பாதுகாக்கும் நோக்கில், பல்வேறு மாவட்டங்களிலும் நமது தலைவர்கள் நீர்நிலைகளைத் தூய்மைப்படுத்துதல், மரக்கன்றுகளை நடுதல் உள்ளிட்ட மக்கள் நலன் சார்ந்த சுற்றுச்சூழல் பணிகளை முன்னெடுத்து வருகின்றனர். இவர்களின் இத்தகைய முயற்சிகள், எதிர்காலத் தலைமுறையினருக்குத் தூய்மையான சுற்றுச்சூழலையும் வளமான நீர்வளத்தையும் உறுதிசெய்யும்.
வீத லீடர்ஸ் சார்பாக தலைவர் திரு K அண்ணாமலை IPS அவர்களின் வழிகாட்டுதலில் காரைக்குடி தேனாறு மீட்புப்பணியை - தூர்வாரும் பணியை திரு N கார்த்திக் @karthikconnectz,
வழக்கறிஞர் திரு செல்வகணபதி
மற்றும் திரு AT கார்த்திகேயன் ஆகியோருடன் சென்று பார்வையிட்டோம்.
@annamalai_k @WTLFoundation
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் நடைபெற்ற மாமன்னர்கள் மருது சகோதரர்களின் 225 வது குருபூஜை விழாவில் வீத லீடர்ஸ் அமைப்பின் சார்பில் தலைவர் திரு அண்ணாமலை அவர்களின் அறிவுறுத்தலின்படி கலந்து கொண்டு மரியாதை செலுத்தினேன். இந்நிகழ்ச்சியில் என்னோடு திரு தரணீ முருகேசன், திரு பாண்டுரங்கன், திரு மகா சுசீந்திரன், திரு சோழன் பழனிசாமி, டாக்டர் ஆனந்த் மற்றும் திரு ராமேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
@annamalai_k @WTLFoundation
M Nachiappan retweeted
அறிவிப்பு
வரும் அக்டோபர் 27ஆம் தேதி சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில் நடைபெற உள்ள மாவீரர்கள் மருது பாண்டியர்களின் 225 ஆவது குருபூஜை விழாவில், நமது We The Leaders அமைப்பின் சார்பில் கலந்து கொள்ள,
1. திரு. தரணி முருகேசன்,
2. திரு. நாச்சியப்பன்,
3. திரு. பாண்டுரங்கன்,
4. திரு. மகா சுசீந்திரன்,
5. திரு. சோழன் பழனிசாமி,
6. டாக்டர் ஆனந்த்,
7. திரு ராமேஸ்வரன்
ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாவீரர்கள் மருது பாண்டியர்கள் புகழ் ஓங்குக!





















