யாருடன் திருமணத்திற்கு போனார் என்பதைப் போல யாருடைய திருமணத்திற்கு போனார் என்பதும் பேசு பொருள் தான். ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் முதலமைச்சர் போயிருக்கிற ஒரே திருமண நிகழ்வு இது தான். ஆட்சிக்கு வருவதற்கு முன்னும் இதே குடும்பத்தின் திருமண நிகழ்வுக்கு தான் சென்றார்.
இந்த வார நக்கீரனின் அட்டைப்பட வாசகத்தை தான் மீண்டும் சொல்லவேண்டியிருக்கிறது..
"ரெட்டிகளின் ஆதிக்கம்"
Packiarajan Se retweeted
அண்ணன் சீமான் பிறந்தநாளில் வாழ்த்துவோம்..!
நவம்பர் 08, 2026
அண்ணனிடம் உங்களுக்கு என்ன பிடிக்கும்?
தமிழ்மீது கொண்ட காதலா?
தலைவர் வழி நடக்கும் அறமா?
சிந்தனையைத் தூண்டும் பேச்சா?
பல்லுயிர்க்குமான அரசியலா?
அலைபேசியை எடுங்க…
அண்ணன் மீதான அன்பைச் சொல்லுங்க!
2 நிமிடங்களுக்குள், தெளிவான ஒலி, ஒளியுடன் உங்கள் காணொளியைப் பதிவு செய்து அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்:
[email protected]
தேர்ந்தெடுக்கப்படும் சிறப்பான காணொளிகள் எங்கள்தேசம் வலையொளியில் வெளியாகி, உலகத் தமிழர்களைச் சென்றடையும்!
திரைப்படங்களை பாராட்டும் அதே நேரத்தில் திரைப்படம் என்பது மனித வாழ்வின் ஒரு பகுதிதானே தவிர, மனித வாழ்வே திரைப்படம் அல்ல! பொழுதுபோக்கு என்பது மனிதனுக்குத் தேவையான ஓய்வுதானே தவிர, அதுவே மனிதனின் ஒட்டுமொத்த வாழ்க்கையாகிவிடக் கூடாது என்பதை ஆரம்பம் முதல் சொல்லிவருபவர் அண்ணன் சீமான். அதை இந்த அறிக்கையின் மூலம் மீண்டும் கூறியிருக்கிறார்.
"கடந்த இரண்டு நாளாக அவருக்கு அறிவுரை வழங்கிய சில மூளை வீங்கிகள் இனியாவது அதை நிறுத்துவார்கள் என்று நம்புகிறேன்.."
போதைக்கும், பொழுதுபோக்குக்கும் முன்னுரிமை கொடுத்து எந்தச் சமூகம் வாழ்ந்து, வளர்ந்திருக்கிறது? இதுதான் தமிழகத்துக்கு நீங்கள் கொண்டுவருவதாகச் சொன்ன மாற்றமா முதலமைச்சர் அவர்களே?
@CMOTamilnadu @TVKVijayHQ
புதிய திரைப்படங்கள் வெளியாகும்போது அதிகாலை 6 மணி முதல் நாளொன்றுக்கு ஆறு காட்சிகள் வரை திரையிட அனுமதி அளித்துள்ள தமிழ்நாடு அரசின் அறிவிப்பு அதிர்ச்சியளிக்கிறது. ஒரு நாட்டின் மக்களை அறிவிலும், ஆற்றலிலும் சிறந்தவர்களாக உருவாக்க வேண்டிய அரசு, அதிகாலையிலேயே அவர்களை திரையரங்குகளுக்கு அழைப்பதை முதன்மையான சாதனையாகக் கருதுவது வெட்கக்கேடானது.
திரைப்படம் என்பது அறிவியலின் அழகான குழந்தை; ஆகச்சிறந்த கலை வடிவம்; அது மக்களுக்கு நல்ல கருத்துகளைச் சொல்லக்கூடிய ஆற்றல்மிக்க ஊடகம் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. திரைப்படக் கலைஞர்களின் உழைப்பையும், திரைத்தொழிலை நம்பி வாழும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது. அதேநேரத்தில், திரைப்படம் என்பது மனித வாழ்வின் ஒரு பகுதிதானே தவிர, மனித வாழ்வே திரைப்படம் அல்ல! பொழுதுபோக்கு என்பது மனிதனுக்குத் தேவையான ஓய்வுதானே தவிர, அதுவே மனிதனின் ஒட்டுமொத்த வாழ்க்கையாகிவிடக் கூடாது. ஒரு சமூகத்தின் வரலாறு, இலக்கியம், பண்பாடு, அறிவியல், அரசியல், பொருளாதாரம் என அனைத்தையும் திரையுலகத்தைச் சுற்றியே கட்டமைக்க நினைப்பது எத்தகைய ஆபத்தான போக்கு? திரைப்படத்தையே வரலாறாகவும், திரைக்கதையையே வாழ்க்கையாகவும், திரைநாயகர்களையே தலைவர்களாகவும் கருதும் மனநிலையிலிருந்து இளைய தலைமுறையை மீட்டெடுக்க வேண்டிய அரசே திரைமோகத்தில் மேன்மேலும் மூழ்கச் செய்வது பொறுப்புள்ள செயல்தானா?
தமிழ்நாட்டில் இதுவரை நடைமுறையில் இருந்த திரைப்படக் காட்சி நேரங்களில் என்ன குறை இருந்தது? வார இறுதி நாட்களிலும், விழாக் காலங்களிலும், விடுமுறை நாட்களிலும் கூடுதல் காட்சிகளைத் திரையிடும் நடைமுறை ஏற்கனவே இருந்ததுதானே? அதில் என்ன சிக்கல்? அவ்வாறு திரையிடப்பட்டபோதுதானே பல திரைப்படங்கள் கோடிக்கணக்கான ரூபாய்களை வசூலித்துக் குவித்தன? இப்போது புதிதாக அதிகாலை 6 மணிக்கே காட்சிகளைத் தொடங்க வேண்டிய தேவை என்ன வந்துவிட்டது? ஒரு வாரத்திற்கு இரண்டு புதிய திரைப்படங்கள் வெளியாகின்றன. அந்தப் படங்கள் திரையரங்குகளை விட்டு வெளியேறுவதற்குள் அடுத்தடுத்த திரைப்படங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. ஒவ்வொரு புதிய திரைப்படத்திற்கும் அதிகாலை முதலே காட்சிகளைத் தொடங்கினால், மக்கள் எப்போது படிப்பார்கள்? எப்போது உழைப்பார்கள்? எப்போது தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்வார்கள்? எப்போது தங்களது அறிவையும் ஆற்றலையும் வளர்த்துக்கொள்வார்கள்? நாள் முழுவதும் திரையரங்குகளிலேயே அமர்ந்திருந்தால் ஒரு சமூகம் எப்படி முன்னேறும்?
அதிகாலை எழுந்து படியுங்கள்! உடற்பயிற்சி செய்யுங்கள்! நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள்! நூலகங்களுக்குச் சென்று நல்ல நூல்களை வாசியுங்கள்! அறிவை விரிவாக்குங்கள்! உடலையும் உள்ளத்தையும் உறுதிப்படுத்துங்கள்! உழைத்து உயருங்கள்! என்று இளைய தலைமுறையை வழிநடத்த வேண்டிய அரசு, அதிகாலை எழுந்து திரைப்படம் பார்க்கச் செல்லுங்கள் என்று ஊக்குவிப்பதுதான் அறிவார்ந்த சமூகத்தை உருவாக்கும் ஆட்சிமுறையா? 'காலை எழுந்தவுடன் படிப்பு' என்று பாடினான் நம் பாட்டன் பாரதி. ஆனால், இன்றைய ஆட்சியாளர்களோ காலையில் எழுந்தவுடன் திரைப்படம் பார்க்கச் சொல்கிறார்கள். இதுதான் தமிழ்நாட்டின் இளைய தலைமுறைக்கு தவெக அரசின் வழிகாட்டுதலா? தமிழ்நாட்டில் எத்தனையோ நூலகங்கள் இருக்கின்றன. அவற்றை மேம்படுத்தி, மாணவர்களையும் இளைஞர்களையும் ஒவ்வொரு நாளும் குறைந்தது அரை மணி நேரமாவது வாசிக்க வைக்க என்ன திட்டத்தை உருவாக்கியிருக்கிறது தவெக அரசு? ஊர்தோறும் உடற்பயிற்சிக் கூடங்களையும் விளையாட்டுத் திடல்களையும் உருவாக்குவதற்கு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது தவெக அரசு? இளைஞர்களின் திறமைகளை வளர்க்கவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், தொழில் முனைவோரை ஊக்குவிக்கவும் இவ்வளவு வேகமாக முடிவெடுக்காத தவெக அரசு, திரைப்படக் காட்சிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் மட்டும் இத்தனை ஆர்வம் காட்டுவது ஏன்?
மனிதனின் அறிவாற்றலையும், உடலாற்றலையும் உழைப்பில் ஈடுபடுத்தி, உற்பத்தியைப் பெருக்கி, பொருளாதாரத்தை உயர்த்தி, வேலைவாய்ப்புகளை உருவாக்கி, தன்னிறைவான சமூகத்தைக் கட்டியெழுப்புவதுதானே ஓர் அரசின் முதன்மையான கடமை? அதை விடுத்து, திரைப்படக் காட்சிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதால் மட்டும் நாட்டில் வேலைவாய்ப்புகள் பெருகிவிடுமா? விலைவாசி குறைந்துவிடுமா? மக்களின் வறுமை ஒழிந்துவிடுமா? கல்வித்தரம் உயர்ந்துவிடுமா? அறிவாற்றல் வளர்ந்துவிடுமா? நாட்டின் பொருளாதாரம் மேம்பட்டுவிடுமா? ஏற்கனவே, தவெக அரசு ஆட்சிக்கு வந்தவுடன் டாஸ்மாக் மதுக்கடைகளின் நேரத்தை அதிகப்படுத்தியுள்ளது. இணைய வழி மதுவிற்பனை, உணவக மதுக்கூடம் என்று மதுவிற்பனையை அதிகப்படுத்தியுள்ளது.
இளைஞர்களை நல்வழிப்படுத்த வேண்டிய அரசு, போதையை அதிகரிப்பதிலும், பொழுதுபோக்கை விரிவுபடுத்துவதிலேயே தனது கவனத்தைச் செலுத்துவது என்ன மாதிரியான புரட்சிகரமான ஆட்சி நிர்வாகம்? திரைப்படத்திற்கும், போதைக்கும் பொழுதுபோக்குக்கும் முன்னுரிமை கொடுத்து எந்தச் சமூகம் வாழ்ந்து வளர்ந்திருக்கிறது? இதுதான் தமிழகத்துக்கு நீங்கள் கொண்டுவருவதாகச் சொன்ன மாற்றமா, முதலமைச்சர் அவர்களே? ஒரு நாட்டின் வளர்ச்சியைத் திரைப்படங்களின் வசூலைக் கொண்டு மட்டும் அளவிட முடியாது. அந்த நாட்டின் மக்கள் பெற்றுள்ள கல்வி, அறிவு, உடல்நலம், வேலைவாய்ப்பு, பொருளாதாரத் தன்னிறைவு ஆகியவற்றைக் கொண்டுதான் அளவிட முடியும் என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.
ஆகவே, புதிய திரைப்படங்களுக்கு அதிகாலை 6 மணி முதல் ஆறு காட்சிகள் வரை திரையிட அனுமதியளித்துள்ள முடிவை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். திரைப்படக் காட்சிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் காட்டும் அக்கறையை, பள்ளிகளின் கல்வித்தரத்தை உயர்த்துவதிலும், நூலகங்களை மேம்படுத்துவதிலும், விளையாட்டுத் திடல்களை உருவாக்குவதிலும், புதிய தொழில்களைத் தொடங்குவதிலும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதிலும் காட்டி மக்கள் நலனையும், சமூக முன்னேற்றத்தையும் முதன்மைப்படுத்தி ஆட்சி நடத்த வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
ஒரு பதிவு அதுவும் அரசியலாக விமர்சித்து பதிவிட்டாலே வந்து வண்டை வண்டையாக திட்டி பதில் போடும் தவெக virtual warriors எவனும் பாஜக சமூக ஊடக பக்கங்களில் dummy CM என பங்கமாக கலாய்த்து போடும் வீடியோகோ இல்லை மோசமாக சித்திரித்து போடும் படங்களுக்கோ வாயை திறக்கவில்லை. நம்மையே இந்த திட்டு திட்டிருக்கானுங்க இதுக்கெல்லாம் என்ன பண்ணியிருப்பானுங்கனு யோசிச்சு அதுல போய் பார்த்தா வாயையும் பேக்கையும் மூடிட்டு அங்க பதிலே போடாமல் வந்திருக்கானுங்க..
அவங்க தலைவர் மாதிரியே மாப்பிள்ளைகளுக்கு மேலே உள்ளவர்களை பார்த்தா அவ்ளோ பயம்..
மனிதர்களை அவர்களது இயல்போடும் உணர்வுகளோடும் ஏற்றுக்கொள்கிற மனப்பக்குவத்தை வளர்ப்பதே கலையின் உயர்ந்த பணி. புறக்கணிக்கப்படும் மனிதர்களின் வலியை உணரவும், அவர்களது அன்பையும் வாழ்வுரிமையையும் மதிக்கவும் வைக்கிற படைப்புகள் காலத்தின் தேவையாகின்றன. புறக்கணிக்கப்பட்ட மக்களின் குரலாக கலை மாறும்போது அது புனிதமாகிறது. அந்த வகையில், பார்வையாளனின் மனச்சாட்சியோடு உரையாடும் படைப்பாக ‘டோரதி’யைப் படைத்திருக்கும் தம்பி கார்த்திக் சுப்புராஜின் படைப்புத் துணிவுக்கும் மனிதநேயத்திற்கும் எனது அன்பும் பாராட்டுகளும்!
பேசத் துணியாத கதையைப் பேரழகுத் திரைக்காவியமாக்கிய ‘டோரதி’ படக்குழுவினருக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்!
அன்புத்தம்பி கார்த்திக் சுப்புராஜ் எழுத்து இயக்கத்தில், இசை இறைவன் இளையராஜா இசையில் வெளிவந்திருக்கும் டோரதி திரைப்படத்தை கண்டேன். 1990களில் சாதிய வன்முறை நிலவும் கிராமப்புற தமிழ்நாட்டைப் பின்னணியாகக் கொண்டு சமூகம் பேசத் தயங்குகிற, பலரும் சொல்லத் துணியாத இயற்கையின் பாலியல் மாற்றத்தை பற்றிய கதையைக் கையில் எடுத்து, அதனை உணர்வும் உயிர்ப்பும் நிறைந்த அழகிய திரைப்படைப்பாக உருவாக்கியிருக்கும் அன்புத்தம்பி கார்த்திக் சுப்புராஜை எவ்வளவு பாராட்டினாலும் தகும்!
மனிதர்களை அவர்களது இயல்போடும் உணர்வுகளோடும் ஏற்றுக்கொள்கிற மனப்பக்குவத்தை வளர்ப்பதே கலையின் உயர்ந்த பணி. புறக்கணிக்கப்படும் மனிதர்களின் வலியை உணரவும், அவர்களது அன்பையும் வாழ்வுரிமையையும் மதிக்கவும் வைக்கிற படைப்புகள் காலத்தின் தேவையாகின்றன. புறக்கணிக்கப்பட்ட மக்களின் குரலாக கலை மாறும்போது அது புனிதமாகிறது. அந்த வகையில், பார்வையாளனின் மனச்சாட்சியோடு உரையாடும் படைப்பாக ‘டோரதி’யைப் படைத்திருக்கும் தம்பி கார்த்திக் சுப்புராஜின் படைப்புத் துணிவுக்கும் மனிதநேயத்திற்கும் எனது அன்பும் பாராட்டுகளும்!
ஒரு கதையைத் தேர்ந்தெடுப்பதில் தொடங்கி, அதற்குரிய திரைமொழியை உருவாக்குவது வரை, படைப்பாளனின் பொறுப்புணர்வு வெளிப்பட வேண்டும். சொல்ல வந்த கருத்தின் ஆழமும், அதைச் சொல்லும் விதத்தின் அழகும் ஒன்றிணையும்போதுதான் சிறந்த திரைப்படம் பிறக்கிறது. அத்தகைய அக்கறையோடு இப்படத்தை உருவாக்கியிருக்கும் தம்பியின் கலைப்பயணம் மேலும் பல உயரங்களைத் தொடட்டும்!
இப்படம் இசை இறைவன், எங்கள் அன்பிற்கும் பெருமதிப்பிற்குமுரிய ஐயா இளையராஜா அவர்களின் அளப்பரிய இசைப்பேராற்றலால், திரையில் சொல்லப்படும் உணர்வுகளுக்கு உயிரூட்டி, ஒரு சிறந்த திரைப்படத்தைக் காவிய அனுபவமாக உயர்த்துகிறது! காலங்கள் மாறலாம்; தலைமுறைகள் மாறலாம்; இசையை ரசிக்கும் முறைகளும் மாறலாம். ஆனால், மனித மனத்தின் ஆழத்தை தொட்டு உணர்வினை உசுப்பும் எங்கள் இசை இறைவனின் இசை வலிமை என்றும் மாறுவதில்லை. இன்றைய தலைமுறையும் ரசித்து மகிழும் பாடல்களை வழங்கியிருக்கும் இசை இறைவனின் படைப்பாற்றல் நம்மை மீண்டும் வியக்க வைக்கிறது. தலைமுறைகளைக் கடந்து தமிழர்களின் உணர்வுகளோடு பயணிக்கும் அவரது இசைக்கு தமிழினம் என்றும் கடமைப்பட்டிருக்கிறது.
தனது கதாபாத்திரத்தின் உணர்வுகளை உள்வாங்கி, அதற்கு உயிர்கொடுத்திருக்கும் அன்புத்தம்பி சனத் நடித்திருக்கிற விதம் பெரிதும் பாராட்டத்தக்கது. ஒரு மனிதரின் அக உலகத்தைப் பார்வையாளனிடம் கொண்டுசேர்ப்பதற்கு நுட்பமான நடிப்பும் ஆழமான புரிதலும் வேண்டும். ஒவ்வொரு காட்சியாக நகரும் திரைக்கதையில் பாலின மாற்றத்தை படிப்படியாக தனது ஆகச்சிறந்த நடிப்பின் மூலம் வெளிப்படுத்தியிருக்கும் தம்பிக்கு எனது பாராட்டுகள். இயல்பான நடிப்பின் வழியே தனது கதாபாத்திரத்திற்கு நம்பகத்தன்மையையும் உணர்வுச் செறிவையும் அளித்திருக்கிறார் அன்புத்தம்பி ரிஷிகாந்த். கதையோடு ஒன்றிப்போகும் அவரது நடிப்பும், உணர்வுகளை வெளிப்படுத்தும் நேர்த்தியும் அவரது திறமைக்கு சான்று. தனது அனுபவமும் நடிப்பாற்றலும் அசாத்திய உடல் மொழியும் கொண்டு கதாபாத்திரத்திற்கு வலுசேர்த்து விசில் வீரைய்யாவாக வாழ்ந்திருக்கிறார் அன்புத்தம்பி முத்துகுமார். ஒரு பாத்திரத்தின் தன்மையை உணர்ந்து, அதற்குரிய அழுத்தத்தைத் திரையில் கொண்டுவரும் அவரது திறன் பாராட்டுக்குரியது. டோரதியாக வரும் நடிகை கீர்த்தி சுரேஷ், கதாபாத்திரத்தின் உணர்வுகளுக்கு முதன்மையளித்துத் தனது நடிப்பால் படைப்பிற்கு மேலும் அழகுசேர்த்திருக்கிறார். ஒளியையும் நிழலையும் உணர்வுகளின் மொழியாக்கி, கதையின் சூழலுக்குள் நம்மையும் அழைத்துச் செல்லும் ஒளிப்பதிவாளர் திரு கதாபாத்திரங்களின் மனவோட்டத்தையும், சொல்லப்படாத வலிகளையும் காட்சிகளின் வழியே உணர்த்தி, படைப்பிற்கு மேலும் உயிரூட்டியிருக்கிறார். அத்தோடு இப்படைப்பைச் சாத்தியப்படுத்திய தயாரிப்பாளர்கள், படத்தொகுப்பு உள்ளிட்ட அனைத்துத் தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர்கள் என அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அடிப்படைவாதம், ஆணாதிக்கம், சாதியம், வன்முறை , ஆவணக் கொலைகள் போன்ற சகிக்க முடியாத கொடூரங்களும் அநீதிகளும் பெருகி , ஆழமாகப் பதிந்துள்ள ஓர் உலகில், சிறுவயதிலிருந்தே பிரிக்கமுடியாத நண்பர்களாக வளரும் இரு இளைஞர்களின் வாழ்க்கையின் ஊடாக அனைத்தையும் காட்டி பாலியல் பாகுபாடு, திருநர் சமூகத்தின் அகநிலை என மனிதர்களைப் புரிந்துகொள்ளவும், இதுவரை தமிழ்த்திரையில் விரிவாக பேசப்படாத மூன்றாம் பாலினத்தவரின் உலகை பொதுச் சமூகம் நேர்மையாக அறிந்து கொள்ளவும், எல்லாவற்றையும் தாண்டி நம்மோடு சரிசமமாக வாழும் சக மனிதரை உளப்பூர்வமாக நேசிக்கவும், துயர் சூழ்ந்த அவர்களது வாழ்வை ஏற்று மதிக்கவும் துணைநிற்கும் இதுபோன்ற மதிப்பு மிகுந்த படைப்புகள் தமிழ்த்திரையில் மேலும் பெருகட்டும்!
ஏற்கனவே திரையரங்கில் மாபெரும் வெற்றி பெற்ற "டோரதி" இப்போது தொலைக்காட்சிகளிலும் வெளியாகி அனைவரது பெரும் வரவேற்பிற்கு உள்ளாகி வருவது எனக்கு நெகிழ்வை தருகிறது.
'டோரதி’ மக்களின் பேரன்பைப் பெறட்டும்!
அற்புதமான கலைப் படைப்புகள் மூலம் தன்னை தமிழ்த் திரையின் பெருமைமிக்க அடையாளங்களில் ஒருவராக நிலைநிறுத்தி வருகிற தம்பி கார்த்திக் சுப்புராஜின் முயற்சிகள் என்றும் வெற்றியால் மிளிரட்டும் !
- சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
#Dorothy @karthiksubbaraj @ilaiyaraaja @iam_rishikanth @Sananth__ @KeerthyOfficial
வென்ற பிறகு கிராமம் கிராமமாக வருவேன் என்று சொன்னவர் ஆட்சிக்கு வந்த இந்த 6 மாதத்தில் நலத்திட்ட உதவிகள் செய்ய அதிகம் சென்றது இடைத்தேர்தல் வந்த தொகுதிகளுக்கு மட்டுமே..
"ஒரு வாட்டி முடிவு பண்ணிட்டா என் பேச்சை நானே கேட்க மாட்டேன்" என அவர் போக்கிரியில் சொன்னது உண்மை தான் போல..
தவெக சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் 125 நாள் வேலைதிட்டத்தின் கீழ் வரும் வேலைக்கே 20% கமிஷன் கேட்பதாக அந்த மாவட்டத்தின் ஒப்பந்தகாரர்கள் சங்கம் சொல்லுகிறது. விஜய் ஆட்சியில் ஒரு எம்எல்ஏவே 20% கேட்கிறாரென்றால் அமைச்சர்கள், அவரை சுற்றி இருக்கிற பவர் சென்டர்கள் எவ்வளவு கமிஷன் கேட்பார்கள்..
இது தானா தூய ஆட்சி @CMOTamilnadu ?? ஊழல் இல்லாத ஆட்சி என இனி பிம்பம் கட்டாதீர்கள்..
#TVKFailsTN
மக்கள் பணத்தை தொடவும் மாட்டேன் தொடவிடவும் மாட்டேன் ஆனால் கடைசி நேரத்தில் விழா நடக்கும் இடம் மாற்றி கோடி ரூபாய்யை வீணடிப்பேன்.. - இப்படிக்கு வீணாபோன சக்தி…
அனைவருக்கும் நமது உயிரினும் மேலான தாய்நிலமாம் தமிழ்நாடு நாள் வாழ்த்துகள்...
பெயர் வைத்த நாளை கொண்டாடும் குழப்பத்தை ஒழித்து மாநிலம் உருவான நாளைக்கொண்டாட உண்மையான தமிழ்தேசிய ஆட்சி நாம் தமிழர் ஆட்சி அமைய இன்றைய நாளில் உறுதியேற்போம்..
#தமிழ்நாடுநாள்_நவம்பர்1
சீமான் அண்ணன் போடியிடுகிறேன் என்று அறிவித்த அடுத்த நாளில்
ஊரில் பள்ளிகள் ஆயிரம் இருக்க அம்பை பள்ளியில் முதல்வர் குழந்தைகள் நாள் கொண்டாட போகிறாராம்..
ஆட்சிக்கு வந்து 6 மாதங்கள் ஆகபோகிறது திடிரென மாஞ்சோலை மக்களை அமைச்சர்கள் படையோடு முதல்வர் சந்திக்க போகிறாராம்..
அங்கே போய் சர்ப்பரைசாக அந்த தொகுதிக்கு பல நலத்திட்டங்கள் அறிவிக்கயிருக்கிறாராம்..
கடந்த தேர்தலிலும் மதுரை வந்து இறங்கியவர் அங்கே பிரச்சாரம் செய்யாமல் காரைக்குடி வந்து பிரச்சாரம் செய்தார்.. சட்டசபைக்குள் சீமான் அண்ணன் இருக்கக்கூடாது எவ்வளவு மெனக்கெடுகிறார் விஜய்..
இந்த சண்டை நல்லாத்தான் இருக்கு!!!
தென்மாவட்டத்தில் இருக்கும் ஏறக்குறைய 39 தொகுதிகள் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்களை பின்பற்றும் மக்கள் அதிகம் வாழும் தொகுதிகள் அதில் அதிகமான தொகுதிகள் தவெக வென்றிருக்கிறது.. அந்த மக்களுக்கு தவெக தரும் மரியாதை என்னவென்றால் முதல்வரோ அவருக்கு அடுத்தப்படியாக இருப்பவர்களோ பசும்பொன் வராமல் புறக்கணித்ததோடு ஐயா தேவரின் முழு பெயரைக்கூட குறுப்பிடாமல் நினைவு கூறுவது தான்…
தேவை தான் மக்களே உங்களுக்கு!!!
இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக தீரமிகு போராட்டத்தை முன்னெடுத்தவர்; நேதாஜி சுபாஷ் சந்திர போஸுக்கு பக்கபலமாக இருந்து வலிமையான விடுதலைப் படையைக் கட்டியவர்.
மக்கள் மனங்களில் போற்றத்தக்கத் தலைவராகவும் மக்கள் மன்றங்களில் வியக்கத்தக்க ஆளுமையாகவும் விளங்கியவர்.
எளிய மக்களின் முன்னேற்றம் மற்றும் சமய நல்லிணக்க சமூகத்திற்காக தன் வாழ்வை அர்ப்பணித்த பசும்பொன் முத்துராமலிங்கம் பெருமகனார் புகழைப் போற்றுவோம்.
Packiarajan Se retweeted
தவெக அரசு அமைந்த
ஒரே மாதத்தில் இருந்து தொடர்ந்து கூறிக்கொண்டுள்ளேன்..
@tnpoliceoffl ன் செயல்பாடு
மிகச்சிறப்பானதாக மாறியுள்ளது 👌
பேராசிரியர் கலையரசன் விவகாரத்தில்
புகார் கொடுத்தது யார் ?
தெரியாது
Online,Email,in person என எந்த முறையில் புகார் பெறப்பட்டது ?
தெரியாது
முறைப்படி புகாருக்கு CSR வழங்கப்பட்டதா ?
தெரியாது
வெறும் புகைப்படத்தை வைத்து முகவரியை கண்டறிந்தது எப்படி ?
தெரியாது
பம்மல் காவல்துறை-
சைபர் க்ரைம் பிரிவின் உதவியை கோரி முறைப்படி கடிதம் கொடுத்ததா ?
தெரியாது
Instagram கமெண்ட் தொடர்பான புகாரை
விசாரிக்க உத்தரவிட்டது யார்
JC யா ? DC யா, AC யா ?
தெரியாது
சம்மந்தப்பட்ட புகார் மனுவை விசாரிக்க நியமிக்கப்பட்ட IO யார் ?
தெரியாது
புகார் தொடர்பாக காவல்நிலையத்தில் FIR
பதியப்பட்டதா ?
தெரியாது
இன்ஸ்டாகிராமில் கமெண்ட் செய்த ID-ன்
Profile Picture-ன் முகவரியை போலீஸாருக்கு கொடுத்தது யார் ?
தெரியாது
கலையரசன் வீட்டிற்கு அதிகாலை 5 மணிக்கு போக உத்தரவிட்டது யார் ?
தெரியாது
மஃப்டியில் சென்ற போலீஸார் Law & Order போலீஸா ? Special Team ஏதேனுமா ?
தெரியாது
கலையரசனை கடத்திச்செல்ல பயன்படுத்திய காருக்கு வாடகை செலுத்தியது யார் ?
தெரியாது
கடத்தலுக்கு பயன்படுத்திய கார்
பம்மல் காவல்நிலையம் சார்பில்
முறைப்படி வாடகைக்கு எடுக்கப்பட்டதா ?
தெரியாது
Night Duty- போலீஸார்
வாடகைக்காரை எடுத்துச்சென்று,
கலையரசனை கடத்தி வர சென்றது
T-4 Shankar Nagar, Pammal
SHO-விற்கு தெரியுமா ?
தெரியாது
முறைப்படி Instagram-நிறுவனத்திடம் இருந்து காவல்துறை சார்பில் முறைப்படி தரவுகள் பெறப்பட்டதா ?
தெரியாது
கலையரசனை கடத்திச்சென்ற போலீஸார்
யாரிடம் அந்த தகவல்களை பரிமாறினர் ?
தெரியாது
சரி…யார் கலையரசனை விடுவிக்க உத்தரவிட்டது ?
தெரியாது
இப்படி இந்த சம்பவத்தில் நடந்த
எதுவுமே யாருக்கும் தெரியாது..
எந்த கேள்விகளுக்கும் பதில் இல்லை
ஆனாலும் 4 Followers இருக்கும் ஒரு Instagram Fake ID பதிவிட்ட ஒரு மோசமான கமெண்ட்-க்காக நேரம் காலம் பார்க்காமல் சட்டத்தை நிலைநாட்ட காவல்துறை உழைத்துள்ளது,
உண்மையிலேயே பாராட்டுக்குரிய
செயல் 👏👏
வாழ்த்துக்கள் @tnpoliceoffl 💐
தமிழ்நாட்டுக் கொடியை உலகெங்கும் கொண்டு செல்வோம்…
தமிழ்நாடு நாள் வாழ்த்துகள்!
( நவம்பர் 01, 2026 | ஐப்பசி 15 )
உலகெங்கும் பரவி வாழும் என் உயிருக்கினிய தாய்த்தமிழ் உறவுகளுக்கு அன்பு வணக்கம்..!
உலகின் முதல் மொழியான தமிழ்மொழியை தாய்மொழியாக கொண்ட தொல்குடியான நம் தமிழினத்தின் தாயக நிலப்பரப்பு, தமிழ்நாடு என்கிற வரையறுக்கப்பட்ட நிலப்பரப்பாக மட்டும் இல்லாமல், தமிழர்கள் என்ற தனித்த தேசிய இனம் நிலைத்து வாழும் நிலப்பகுதியாகவும் இருந்து வருகிறது. தனக்கென தனித்த இலக்கண செறிவுமிக்க இலக்கியம், தொன்றுதொட்ட வரலாறு, கலை, பண்பாடு என வாழ்வியல் விழுமியங்கள் அத்தனையும் கொண்டு தமிழர் என்கின்ற தேசிய இனம் வரலாற்றுத் தொடர்ச்சியோடு இந்த நிலப்பரப்பில் வாழ்ந்து மற்ற தேசிய இனங்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்கின்றது.
இந்திய ஒன்றிய அரசு 1956ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தை மொழிவாரியாக பிரித்த நாளான ஐப்பசி 16 (01.11.1956) ஆம் நாள்தான் தமிழ்நாடு என்கின்ற நமது தாயக நிலம் சட்டப்படி வரையறுக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட திருநாளாகும். அதன்படி, சென்னை மாகாணத்திலிருந்த மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகள் பேசிய பகுதிகளைக் கொண்டு, கேரளா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா மாநிலங்கள் உருவாயின. இந்த உருவாக்கத்தின் போது தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளும் பக்கத்து மாநிலங்களுக்குத் தாரைவார்க்கப்பட்டு விட்டன. தொன்றுதொட்ட நம் வரலாறு நமக்கு வரையறுத்த தமிழக எல்லைகளை மீட்கும் போராட்டத்தில் எண்ணற்ற எல்லை மீட்புப் போராளிகள் உயிர்நீத்தனர். குமரித்தந்தை தாத்தா மார்சல் நேசமணி, வடவெல்லை காவலர் தாத்தா மா.பொ.சிவஞானம்தொடங்கி தெற்கெல்லை – வடக்கெல்லை காத்த போராளிகளின் தன்னலமற்ற ஈகம் காரணமாகப் பறிக்கப்பட்ட தமிழர் எல்லை பகுதிகளில் பெரும்பகுதி மீட்கப்பட்டது. தமிழ்நாடு, தமிழகம், தமிழர் தேயம் எனும் சொல்லாடல்கள் மூலம் முதுபெரும் காலத்திலேயே தமிழர் தாயகம் பெருமையோடு அழைக்கப்பட்டதையும் பழந்தமிழ் இலக்கியங்கள் நமக்கு அறியத் தருகின்றன.
சென்னை மாகாணத்திற்கு ‘தமிழ்நாடு’ எனப்பெயரிடக் கோரி, தனி நபராக பெருந்தமிழர் ஈகி தாத்தா சங்கரலிங்கனார் அவர்கள் 76 நாட்கள் சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டம் மேற்கொண்டு கோரிக்கை நிறைவேற்றப்படாமலே இறந்தார். அவருடைய ஈகம் ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவாக, அதன்பின் சென்னை மாகாண முதல்வராக இருந்த பேரறிஞர் அண்ணா அவர்கள் கடந்த 1968 ஆம் ஆண்டு தமிழர்கள் வாழ்ந்த சென்னை மாகாணப்பகுதியின் பெயரை ‘தமிழ்நாடு’ எனப் பழந்தமிழ் இலக்கியத்தில் உள்ளபடி மீண்டும் மாற்றினார்.
ஆங்கிலேயர் ஆட்சியில் நிர்வாக வசதிக்காக மெட்ராஸ் மாகாணம் என மற்ற தேசிய இனங்கள் வாழும் நிலப்பரப்போடு சேர்த்து நிர்வகிக்கப்பட்ட நம் தாய்நிலம் அவற்றிலிருந்து விடுபட்டு தமிழ்நாடு எனத் தனித்த பெருநிலமாக உருவெடுத்த நாளான ஐப்பசி 16 (01.11.1956) ஆம் நாளினை ‘தமிழ்நாடு நாளாக’ அறிவிக்க வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்களின் நீண்ட கால கோரிக்கையாகும். நாம் தமிழர் கட்சியும், தமிழ் அறிஞர் பெருமக்களுக்கும், தமிழ்த்தேசிய உணர்வாளர்களும் ஐப்பசி 16 (01.11.1956) ஆம் நாளினை தமிழ்நாடு நாள் என அறிவித்திட வேண்டுமென தொடர்ந்து குரல் எழுப்பி வந்தனர். அதன் விளைவாக கடந்த 2019ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசால் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி 15 (01.11.2019) ஆம் நாள் தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டது. பின்னர் வந்த திமுக அரசு தமிழ்நாடாய் மீண்டும் உருவெடுத்த நாளை விடுத்து, தமிழ்நாடு என மீண்டும் பெயர் வைத்த நாளை தமிழ்நாடு நாளாகக் கொண்டாடப்படும் என நம்முடைய கடுமையான எதிர்ப்பினையும் மீறி வலிந்து திணித்தது. அதையே தற்போதையே தவெக அரசும் அப்படியே தொடர்வதுதான் பெருங்கொடுமை.
தமிழ்த்தேசிய அரசியல் புத்தெழுச்சிப் பெற்று, புரட்சிகர அரசியல் மாற்றம் தமிழ் மண்ணில் ஏற்படும் நாளில் தமிழ்நாடு நாள் குழப்பநிலை துடைத்து எறியப்படும். உயிரினும் மேலான நமது தாயக நிலம் இந்திய ஒன்றிய அரசால் தனித்த மொழிவழி மாநிலமாக அங்கீகரிக்கப்பட்ட நாளையே தமிழ்நாடு நாளாக போற்றிக்கொண்டாடிட வேண்டியது ஒவ்வொரு தமிழரின் இனமானக்கடமையாகும். வழக்கம்போல இந்த ஆண்டும் நாம் தமிழர் கட்சி, ஐப்பசி 15 (01.11.2026) ஆம் நாளையே தமிழ்நாடு நாளாக தமிழ்நாடு முழுவதும் பேரெழுச்சியாகக் கொண்டாடவிருக்கின்றது.
ஆகவே, என் உயிருக்கினிய தம்பி தங்கைகள், தாய்த்தமிழ் உறவுகள் அனைவரும், தமிழர் தாய் நிலம், தமிழ்நாடாக உருப்பெற்ற ஐப்பசி 15 (01.11.2026) தமிழ்நாடு நாள் அன்று, தத்தம் பகுதியில் நம்முடைய மூவேந்தர்களின் இலட்சினைகளை பொறித்த தமிழ்நாட்டுக்கொடியை சிறு கொடிகளாக அச்சிட்டு கொடுத்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி, எல்லை மீட்புப் போராளிகளுக்கு மலர்வணக்கம் செலுத்தி பேரெழுச்சிமிக்கத் திருவிழாவாகக் கொண்டாடுவோம்!
அதோடு, நம்முடைய தாத்தா புரட்சிப்பாவலர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள், “மணக்க வரும் தென்றலிலே, குளிரா இல்லை? தோப்பில் நிழலா இல்லை! தணிப்பரிதாம் துன்பமிது தமிழகத்தின் தமிழ்த் தெருவில் தமிழ்தான் இல்லை”என்று வருந்திப்பாடி 70 ஆண்டுகளைக் கடந்தும், அதைவிட மோசமான அவலநிலை இன்றும் நீடிப்பதுதான் வரலாற்றுப் பெருந்துயரம். தமிழ்நாட்டில் தமிழ்த்தாய்க்கு நிகழ்ந்துவரும் அப்பேரவலத்தை, பெருந்துயரைத் துடைத்து, ‘எங்கும் தமிழ், எதிலும் தமிழ்’ என்ற நிலையை உருவாக்கிட தமிழ்நாடு நாள் அன்று, என்னுடைய உயிருக்கினிய உறவுகள், அன்புத்தம்பி தங்கைகள், அருகில் உள்ள சிறு கடைகள், வணிக நிறுவனங்கள் அனைத்திலும் தாய்த்தமிழில் பெயர்பலகை வைக்க அன்புடன் கோரிக்கை வைப்போம்.
தமிழ்நாடு முழுவதிலும் 234 சட்டமன்றத்தொகுதிகளிலும் வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர்ப்பலகை, அறிவிப்பு பலகை வைப்பதற்கான கோரிக்கையை துண்டறிக்கையில் அச்சடித்து அருகில் உள்ள அனைத்து கடைகளிலும் வழங்குவோம். அதனை நாம் பிறந்த பெருமைமிக்க தமிழ்ப்பேரினத்திற்கான இனமான கடமையாக எண்ணி தமிழ்நாடு நாளில் செயல்படுத்துவோம் என்று கூறிக்கொண்டு,
உங்கள் அனைவருக்கும் அன்பு நிறைந்த ‘தமிழ்நாடு நாள்’ வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பெரிதும் மகிழ்கிறேன்.
புரட்சி வாழ்த்துகளுடன்,
- சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
தம்பி கலையை இறுதி ஈழப்போர் நடந்துகொண்டிருந்த காலகட்டத்திலிருந்து அறிவேன். டெல்லி பல்கலைகழக மாணவராய் இருந்து தமிழர்களின் அணைத்து பிரச்சனைக்கும் தலைநகரிலிருந்து போராடி தன்னாலான எல்லா முயற்சியும் செய்தவர். எம்.எஸ்.எஸ் பாண்டியன்க்கு பிறகு தமிழ் அறிவுத்தளத்தில் குறுப்பிட வேண்டிய ஒருவர். சித்தாந்த முரண்களை கடந்து அரசியலில் இயங்கும் எல்லா கட்சிக்கும் அதன் தலைமைக்கும் அறிந்தவர். அவரை தவெக அரசின் காவல்துறைக்கு யார் என்று தெரியவில்லை. எந்த பின்புலத்தையும் விசாரிக்காமல் போலி இன்ஸ்டா முகப்பு படத்தை வைத்து கைது செய்யும் அளவிற்கு உளவுத்துறையின் லட்சணம் இருக்கிறது.
கோமாளிகளின் ஆட்சியில் அறிவர்களுக்கு இது தான் நிலை.
பேராசிரியர் தம்பி கலையரசனை அதிகாலையில் அழைத்துச் சென்று அச்சுறுத்துவதா? காவல்துறை மக்களுக்கானதா? ஆளுங்கட்சிக்கானதா?
@CMOTamilnadu @TVKVijayHQ
சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் (MIDS) இணைப் பேராசிரியரும், பொருளாதார ஆய்வாளருமான அன்புத்தம்பி கலையரசனை, ஓர் போலி இன்ஸ்டாகிராம் பதிவைக் காரணமாகக் கூறி அதிகாலையில் வீட்டிலிருந்து காவல்துறையினர் அழைத்துச் சென்றதாக அவர் அளித்துள்ள புகார் பெரும் அதிர்ச்சியளிக்கிறது. எல்லாநிலையிலும் இந்திய ஒன்றிய பாஜக அரசை கனகச்சிதமாகப் பின்பற்றும் தவெக அரசின் ஆணவப்போக்கை கண்டிக்கிறேன். மேலும் புகாரின் அடிப்படையைக்கூட விளக்காமல், தனது தரப்பை எடுத்துரைக்க வாய்ப்பளிக்காமல் அவரை குற்றவாளிபோல் நடத்திய காவல்துறையின் செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
காவல்துறைத் தலைமை இயக்குநருக்குத் தம்பி கலையரசன் எழுதியுள்ள கடிதத்தில், அக்டோபர் 28 அதிகாலை ஐந்து மணியளவில் சாதாரண உடையில் வந்த மூன்று காவலர்கள், தனது கைப்பேசியைப் பறித்துக்கொண்டு, புகார் நகலையோ முதல் தகவல் அறிக்கையையோ காட்டாமல் வாடகைக் காரில் அழைத்துச் சென்றதாகவும், குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கக்கூட உடனடியாக வாய்ப்பளிக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். ஒரு பேராசிரியரை இவ்வாறு பயங்கரவாதி போல நடத்த வேண்டிய அவசரமும் அவசியமும் என்ன?
பல்லாவரம் தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் குறித்த இழிவான பதிவு இடம்பெற்றதாகக் கூறப்படும் இன்ஸ்டாகிராம் கணக்கிற்கும் தனக்கும் தொடர்பில்லை என்றும், தனக்கு இன்ஸ்டாகிராம் கணக்கே இல்லை என்றும் தம்பி கலையரசன் தெளிவுபடுத்தியுள்ளார். அவரது புகைப்படத்தைப் பயன்படுத்திய வேறொரு பெயரிலான கணக்கின் பதிவுக்காக அவரையே அழைத்துச் சென்றிருக்கிறார்கள் என்பதிலிருந்தே அவரின் அண்மை நேர்காணலுக்காகப் போடப்பட்டதுதான் இந்தப் பொய்யாக புனையப்பட்ட வழக்கு என்பது உறுதியாகிறது.
அவரின் உலக பொருளாதார அறிவும், இந்திய பொருளாதாரக் கொள்கை பற்றிய புரிதலும் நாம் யாவரும் அறிந்ததே. இந்நிலையில் தமிழ்நாட்டின் விலைவாசி உயர்வு தொடர்பான அவரது தர்க்கரீதியான கருத்தை சகித்துக்கொள்ளாமல், அவரை காவல்துறை கொண்டு முடக்க நினைப்பது பச்சை அயோக்கியத்தனமாகும். இதையேதான் இந்திய ஒன்றிய பாஜக அரசும், அண்மையில் ஜன்தர்மந்தர் போராட்டத்தில் அறிவுசார் ஆய்வாளர்களையும் மாணவர்களையும் மிரட்டி ஒடுக்க பொய்வழக்குகளைப் புனைந்து ஒடுக்குமுறையை ஏவியது.
பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் குறித்த ஓர் இன்ஸ்டாகிராம் பதிவுக்காக அதிகாலையிலேயே இவ்வளவு வேகமாகச் செயல்படும் காவல்துறை, என் மீதும் நாம் தமிழர் கட்சியினர் மீதும் தொடர்ச்சியாகப் பரப்பப்படும் அவதூறுகளில் இதே வேகத்தைக் காட்டாதது ஏன்? என் மீதான அவதூறுகள் தொடர்பாக நீதிமன்றம் தலையிட்டு வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட வேண்டிய நிலை ஏற்பட்டதே ஏன்? அதன் பிறகு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? விசாரணை எந்த நிலையில் உள்ளது? தொடர்புடையவர்கள் மீது என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது? காவல்துறை வெளிப்படையாக விளக்குமா?
எங்களையும் எங்கள் கட்சியினரையும் தவெகவினர் மிகக் கீழ்த்தரமாகவும் ஆபாசமாகவும் சமூக வலைத்தளங்களில் எழுதுவதை எல்லாம் எதில் சேர்ப்பது? அவற்றின் மீது அளிக்கப்படும் புகார்களுக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? ஆளுங்கட்சியினரைப் பற்றிய பதிவென்றால் உடனடி நடவடிக்கை; ஆளுங்கட்சியினர் பிறரை இழிவுபடுத்தினால் அமைதியா? சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது நடைமுறையில் இருக்கிறதா?
அவதூறையும் ஆபாசத்தையும் யார் பரப்பினாலும் அதனை ஆதாரங்களின் அடிப்படையில் விசாரிக்க வேண்டும். அதேவேளை, அரசியல் விமர்சனத்தையும் மாற்றுக்கருத்தையும் குற்றமாகக் கருதி, ஒரு குற்ற வழக்கை உருவாக்க, போலி கணக்கு மூலம் ஒருவரை அதிகாலை அழைத்துச் சென்று மிரட்ட முற்படுவது, சனநாயகதிற்கு விடுக்கப்படும் சவாலாகும். ஆளுங்கட்சியின் விருப்பத்தை நிறைவேற்றுவது காவல்துறையின் கடமையல்ல; சட்டப்படி மக்களின் உரிமைகளைக் காப்பதே அதன் கடமை!
ஒன்றிய பாஜக அரசுபோல் காவல்துறையை ஏவல் துறையாகப் பயன்படுத்துவதுதான் தவெகவின் நல்லாட்சியா? தம்பி ஜோசப் விஜயின் தூய ஆட்சியா? இவ்விவகாரத்தில் முந்தைய அரசுகள் குப்பை என்றால், இந்த அரசு அழுகிய குப்பையாக இருக்கிறது. ஆட்சிக்கு வந்த ஆறே மாதத்தில், ஒன்றிய பாசக அரசைபோல் அடக்குமுறையை ஏவிவிட்டு, ஜனநாயக விரோதப்போக்கை கையிலெடுப்பது வெட்ககேடானது!
தம்பி கலையரசன் அளித்துள்ள புகார் மீது நடுநிலைமையுடன் விசாரணை நடத்தப்பட வேண்டும். அவரது புகைப்படத்தைத் தவறாகப் பயன்படுத்திய கணக்கை இயக்கியவர் யார் என்பதைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரை அழைத்துச் சென்ற நடவடிக்கைக்கு யார் உத்தரவிட்டார்கள், என்ன ஆதாரத்தின் அடிப்படையில் செயல்பட்டார்கள் என்பதையும் விசாரித்து, தவறிழைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
அறிவுத்தளத்தில் இயங்குவோரையும் பொதுவெளியில் கருத்துரைப்போரையும் அச்சுறுத்தும் இத்தகைய அணுகுமுறையைத் தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும். புகார் அளிப்பவரின் கட்சியைப் பார்த்து நடவடிக்கை எடுக்கும் காவல்துறையின் மக்களாட்சி விரோதப் போக்கிற்கு முற்றுப்புள்ளி வைத்து, அனைவருக்கும் சமமான சட்டப் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
Packiarajan Se retweeted
ஆற்றையே நுரைக்க வைக்கும் சோப்பு, ஷாம்புவின் பெயரை அமைச்சர் வெளியிடுவாரா?
ஆறுகளில் நுரை பொங்கி வழிவதைப் பார்த்து மக்கள் அச்சப்படுகிறார்கள்; சுற்றுச்சூழல் அமைச்சர் ராஜீவ் அவர்களோ, மக்கள் பயன்படுத்தும் சோப்பு, ஷாம்புவைக் காரணமாகக் காட்டி விளக்கம் அளிக்கிறார். சுற்றுச்சூழலைக் காக்க வேண்டியவரின் விளக்கத்தைக் கேட்டு சிரிப்பதா, ஆறுகளின் நிலையை எண்ணி அழுவதா என்றே தெரியவில்லை!
ஒரு ஆற்றுப் படுகையையே மூடும் அளவுக்கு இவ்வளவு நுரையைத் தள்ளும் சோப்பையும் ஷாம்புவையும் கண்டுபிடித்த அந்த அறிவாளி யார்? அதன் பெயர் என்ன? ஒரு குடம் தண்ணீரில் குளித்தால் ஓர் ஆறு முழுவதும் நுரை வரும் அளவுக்குத் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டதா? அந்த அற்புதமான கண்டுபிடிப்பை அமைச்சர் மக்களுக்கு அறிமுகப்படுத்துவாரா?
தமிழ்நாட்டில் மக்கள் குளிக்கும் தண்ணீரெல்லாம் காவேரிக்குத்தான் செல்கிறதா? எல்லா வீடுகளின் குளியலறைக் குழாய்களையும் நொய்யலிலும் காவேரியிலும் நேரடியாக இணைத்துவிட்டார்களா? மக்கள் நேற்றுதான் சோப்புப் போட்டுக் குளிக்கத் தொடங்கினார்களா? ஷாம்பு இப்போதுதான் சந்தைக்கு வந்திருக்கிறதா?
ஆலைக்கழிவுகள் ஆற்றில் கலக்கின்றன என்ற சந்தேகம் ஒரு குழந்தைக்குக்கூட எழுகிறபோது, சுற்றுச்சூழல் அமைச்சருக்கு மட்டும் அது ஆய்வுக்குரிய முதன்மைக் கேள்வியாகத் தோன்றவில்லையா? சாயப்பட்டறைகள், தொழிற்சாலைகள், கழிவுநீர் வெளியேறும் இடங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்து, நீர் மாதிரிகளின் பரிசோதனை முடிவுகளை வெளியிடுவதுதானே அமைச்சரின் பொறுப்பு?
சோப்பு, ஷாம்பு கலந்த வீட்டுக் கழிவுநீர்தான் காரணம் என்றாலும், அதுவும் சுத்திகரிக்கப்படாமல் ஆற்றில் கலப்பது அரசின் நிர்வாகத் தோல்விதானே? அந்த விளக்கத்தைச் சொல்வதன் மூலம் தமது துறையின் தோல்வியை அமைச்சரே ஒப்புக்கொள்கிறாரா?
மக்கள் கேட்பது, “எந்தச் சோப்பில் அதிக நுரை வரும்?” என்ற விளம்பர விளக்கமல்ல; “எங்கள் ஆற்றில் என்ன கழிவு கலக்கிறது? அதைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?” என்பதற்கான பதில்!
தவறு செய்யும் ஆலைகள் மீது நடவடிக்கை எடுப்போம் என்று சொல்வதுடன் நிறுத்திக்கொள்ளாமல், ஆய்வு செய்யப்பட்ட ஆலைகள் எத்தனை, கண்டறியப்பட்ட விதிமீறல்கள் என்னென்ன, நடவடிக்கைக்கு உள்ளான நிறுவனங்கள் எவை என்பதையும் அமைச்சர் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். நுரைக்கான காரணத்தை ஆய்வறிக்கை சொல்லட்டும்; அமைச்சரின் ஊகம் தீர்மானிக்க வேண்டாம்!
ஆற்றைக் காப்பாற்ற வேண்டிய அரசு, மக்கள் குளிப்பதைக் குற்றமாக்கிக் கொண்டிருக்கக்கூடாது. கழிவுநீர் கலக்கும் வழிகளை அடையுங்கள்; சுத்திகரிப்பு நிலையங்களின் செயல்பாட்டை உறுதிசெய்யுங்கள்; விதிமீறும் ஆலைகள் மீது நடவடிக்கை எடுங்கள்! மக்கள் சோப்புப் போட்டுக் குளிப்பார்கள் என அரசு தனது பொறுப்பைக் கைகழுவக்கூடாது!
இத்தகைய விளக்கங்களை அளிப்பவரை வைத்துத்தான் அரசு சுற்றுச்சூழலைப் பாதுகாக்கப் போகிறதா? விளங்கும்!
@CMOTamilnadu @TVKVijayHQ
Sir post @VanniTamizhVCK
ஜூனியர் விகடன் பேட்டியில் நாம் தமிழர் கார்த்திகா: வன்னி அரசு குற்றச்சாட்டை புறந்தள்ளுகிறோம் - ஜூ.வி பேட்டியில் கார்த்திகா, நாம் தமிழர் கட்சி
👉 vikatan.com/government-and-p…
#JuniorVikatan #Magazine
Packiarajan Se retweeted
திருச்சி முகாமிலிருந்த ஈழத்தமிழர் தம்பி கிருஷ்ணகுமாரை இலங்கைக்கு நாடுகடத்தி இனவெறி அச்சுறுத்தலுக்கு தள்ளுவதா? தம்பி சுபாஸ்கரனையும் நாடுகடத்த முயல்வது கொடுங்கோன்மை!
2016ஆம் ஆண்டு முதல் கடந்த 10 ஆண்டுகளாக திருச்சி முகாமில் அடைக்கப்பட்டிருந்த ஈழத்தமிழர் கிருஷ்ணகுமாரை, இந்தி ஒன்றிய – தமிழ்நாடு அரசுகள் வலுக்கட்டாயமாக இலங்கைக்கு நாடுகடத்தியுள்ளது சிறிதும் மனச்சான்றற்ற கொடுங்கோன்மையாகும். மற்றொரு தம்பி சுபாஸ்கரனையும் வலுக்கட்டாயமாக இலங்கைக்கு நாடுகடத்த இந்திய ஒன்றிய அரசு முயல்வதும், அதற்கு தமிழ்நாடு அரசு துணைநிற்பதும் வன்மையான கண்டனத்துக்குரியது.
இலங்கையை ஆளும் சிங்கள இனவாத அரசின் கோர இன அழிப்புக்கு ஆளாகி, இனப்படுகொலையை எதிர்கொண்டு, அளவில்லா அழிவுகளுக்கும், இழப்புகளுக்கும் முகங்கொடுத்து வீட்டை இழந்து, நாட்டை இழந்து, உறவுகளைப் பறிகொடுத்து, உரிமைகளும், உடைமைகளும் அற்றுப்போய் நிர்கதியற்ற நிலையில் இப்பூமிப்பந்தில் உயிர்வாழ்வதற்கு ஒரு இடம் கிடைக்காதா? என ஏக்கத்தோடும், தவிப்போடும் பத்து கோடி தமிழ் மக்களின் தாயகமாக விளங்கும் தாய்த்தமிழகத்தை நாடிவந்த ஈழச்சொந்தங்களை, இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசும், தமிழ்நாட்டை ஆளும் தவெக அரசும் மனிதநேயம் சிறிதுமின்றி வலுக்கட்டாயமாக இலங்கைக்குத் திருப்பி அனுப்புவது வன்மையான கண்டனத்துக்குரியது.
அடிப்படை உரிமைகள், வாழ்விட வசதிகள் என ஏதும் வழங்காமல் அடிமைகள் போலத் திறந்தவெளி சிறைச்சாலைகளான முகாம்களில் அடைத்துவைத்த போதிலும் உயிர்ப்பாதுகாப்பு என்ற ஒன்றாவது இருந்தது. தற்போது அதனையும் பறிக்கும் விதமாக ஈவு இரக்கமற்று இனவாத நாடான இலங்கைக்கு அனுப்புவது கொலைக்களத்திற்கு அனுப்புவதற்கு ஒப்பாகும்.
தமிழினத்திற்கு யாதொரு தொடர்புமில்லாத பிரிட்டன், பிரான்சு, ஜெர்மனி போன்ற ஐரோப்பிய நாடுகளும், கனடா, ஆஸ்திரேலியா போன்ற மேலை நாடுகளும் தம்மை நாடிவந்த தமிழ் மக்களுக்கு அடைக்கலமளித்து, அரவணைத்து, ஆதரித்து அனைத்துவித அடிப்படை உரிமைகளையும் உறுதி செய்து வாழ்வளிக்கின்றன. அந்நாட்டின் விளையாட்டு வீரர்களாக, அரசியல் பிரதிநிதிகளாக வாய்ப்பு வழங்கப்பட்டு மிகுந்த மரியாதையுடன் வாழ்விக்கப்படுகின்றனர். அரபு நாடுகளும் திறமை வாய்ந்த விளையாட்டு வீரர்களுக்குச் சிறப்பு குடியுரிமை வழங்கி பெருமைபடுத்துகின்றன. ஆனால்,. பத்து கோடி தமிழர்கள் தனித்த பெரும் தேசிய இனமாக, நிலைத்து நீடித்து வாழும் இந்நாட்டில், எங்கள் தொப்புள்கொடி உறவுகளான ஈழச்சொந்தங்கள், கல்வி - விளையாட்டில் சிறந்து விளங்கினாலும் அவர்களுக்கான உரிய அங்கீகாரத்தைத் தராமல் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் என விரட்டுவது தமிழ்த்தேசிய இனத்தையே அவமதிப்பதாகும்.
இலங்கையிலிருந்து வந்த ஈழச்சொந்தங்கள் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களா? பாகிஸ்தான், பங்களாதேசிலிருந்து அகதிகளாக வந்த இந்துக்களைச் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களென இந்நாடு கருதுமா? சீனாவிலிருந்து அகதிகளாக வரும் திபெத்திய மக்களை அவ்வாறு கூறி துரத்துமா? திபெத்தியர்களுக்கு இந்நாடு அளிக்கும் வசதிகள், சலுகைகள் என்னென்ன? அவர்களிடம் காட்டும் அக்கறை, பரிவு, பற்றில் நூற்றில் ஒரு பங்குகூட, நாட்டுக்குப் பெருத்த பொருளாதாரப் பங்களிப்புகளைச் செய்யும் தமிழ்ப்பேரினத்தின் தொப்புள்கொடி உறவுகளான ஈழத்தமிழர்களிடம் காட்ட மறுப்பதேன்? அவர்கள் தமிழர்கள் என்பதற்காக இந்த நாடு எந்தக் கூடுதல் சலுகையும் அளிக்காவிட்டாலும், குறைந்தபட்சம் நம்மைப் போன்ற இரத்தமும் சதையும் கொண்ட சக மனிதர்கள் என்ற அடிப்படையிலாவது அவர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்கி இருக்கலாமே?
இனவெறி நாடான இலங்கைக்குத் துணைநின்று ஈழத்தாயகத்தை முற்றாகச் சிதைத்தழித்து, தமிழர்களை நாடற்றவர்களாக்கி, அவர்கள் ஏதிலியாக காரணமான இந்திய அரசு, இன்றைக்கு தஞ்சம் கேட்டு நிற்கையில், அவர்கள் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் எனக்கூறி துரத்துவது எவ்வகையில் நியாயமாகும்? குறைந்தபட்சம் அவர்கள் செல்ல விரும்பும் நாட்டிற்காவது செல்ல அனுமதிக்கலாமே? அதைக்கூட மறுப்பது எவ்வகையில் நியாயம்? இந்திய ஒன்றிய அரசின் செயலை தமிழ்நாட்டை ஆளும் தவெக அரசு தடுக்கத்தவறி வேடிக்கைப்பார்ப்பது தமிழினத்திற்கு செய்கின்ற துரோகமாகும். இதுதான் தவெக அரசு தமிழர்களை பாதுகாக்கும் முறையா? பெருங்கொடுமை!
ஆகவே, ஈழத்தமிழர் கிருஷ்ணகுமாரை இனவாத நாடான இலங்கைக்கு நாடுகடத்தி இனவெறி அச்சுறுத்தலுக்குள் தள்ளியதுபோல, தம்பி சுபாஷ்கரனையும் திருப்பி அனுப்பும் முடிவை இந்திய ஒன்றிய அரசும், தமிழ்நாடு அரசும் உடனடியாகக் கைவிட வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி





























