PMK Karthick (@PmkKarthick2) header
PMK Karthick (@PmkKarthick2) profile picture

மருத்துவர் அய்யா,மருத்துவர் சின்னைய்யா,மாவீரர் காடுவெட்டியார். பாட்டாளி மக்கள் கட்சி 💙💛❤

Joined October 2019
Photo by PMK Karthick (@PmkKarthick2)Photo by PMK Karthick (@PmkKarthick2)Photo by PMK Karthick (@PmkKarthick2)Photo by PMK Karthick (@PmkKarthick2)Photo by PMK Karthick (@PmkKarthick2)Photo by PMK Karthick (@PmkKarthick2)Photo by PMK Karthick (@PmkKarthick2)Photo by PMK Karthick (@PmkKarthick2)Photo by PMK Karthick (@PmkKarthick2)Photo by PMK Karthick (@PmkKarthick2)
இன்னல் இருள் மறைந்து இன்ப ஒளி நிறைய தீப ஒளி வகை செய்யட்டும்! வண்ண ஒளிகளின் திருவிழாவான தீபஒளித் திருநாளை தமிழ்நாட்டிலும், உலகின் பிற பகுதிகளிலும் கொண்டாடும் அனைவருக்கும் எனது உளமார்ந்த தீப ஒளி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். கொண்டாட்டங்கள் எப்போதும் மகிழ்ச்சியானவை; அனைவராலும் விரும்பப்படுபவை. அத்தகையக் கொண்டாட்டங்களில் தீப ஒளிக்கு சிறப்பான இடம் உண்டு. தீபஒளித் திருநாள் என்றாலே மகிழ்ச்சியும், கொண்டாட்டமும் தான் நினைவுக்கு வரும். புத்தாடை அணிந்து, மத்தாப்புக் கொளுத்தி, பிற மத நண்பர்களுக்கும், அண்டை வீட்டாருக்கும் இனிப்பு வழங்கும் வழக்கம் நட்பை வலுப்படுத்துவதுடன், நல்லிணக்கத்தையும் தழைக்கச் செய்கிறது. இது தான் தீப ஒளித் திருநாளின் சிறப்பு ஆகும். மக்கள் கொண்டாடும் அனைத்து திருநாள்களுக்கும் ஒரு வரலாறு உண்டு. தீமையை நன்மை அழித்ததன் கொண்டாட்டம் தான் தீப ஒளித் திருநாள் என்று கூறப்படுகிறது. அந்த வரலாற்றின்படி தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் தீப ஒளித் திருநாளாக அமைய வேண்டும். தமிழ்நாட்டு மக்கள் எதிர்கொள்ளும் அனைத்து இன்னல்களையும் போக்கி, வாழ்வை வண்ணமயமாக்கும் வகையில் அனைத்து நன்மைகளையும் தீப ஒளி திருநாள் வழங்க வேண்டும் என்பது தான் எனது விருப்பமாகும். தமிழ்நாடும், தமிழ்நாட்டு மக்களும் இப்போது எதிர்கொள்ளும் வறட்சி, வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு உள்ளிட்ட எல்லா சிக்கலும் இன்றுடன் கரைய வேண்டும். மக்கள் வாழ்வில் மகிழ்ச்சி நிறைய வேண்டும். மக்களிடையே அன்பு, நட்பு, நல்லிணக்கம், சகோதரத்துவம் ஆகியவை மலர வேண்டும்; போட்டி, பொறாமை, பகைமை, வெறுப்பு போன்றவை விலக வேண்டும் என்று கூறி மீண்டும் ஒருமுறை வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். #HappyDiwali #deepavali #PMK
19
65
2
268
4,240
விடுதலைப் போராட்ட வீரரும், சமூக விடுதலைப் போராளியுமான தேவர் திருமகனாரின் குருபூசை நாளில் அவரின் தியாகத்தையும், பெருமையையும் நினைவு கூர்வோம்! ஏராளமான பெருமைகளையும், சிறப்புகளையும் கொண்டவரும், தேசியமும், தெய்வீகமும் எனது இரு கண்கள் என்று அறிவித்து அதன்படி வாழ்ந்தவருமான விடுதலைப் போராட்ட வீரர் பசும்பொன் முத்துஇராமலிங்கத் தேவரின் 119-ஆம் பிறந்தநாளும், 64-ஆம் குருபூசை நாளும் இன்று கொண்டாடப்படும் நிலையில் அவரை போற்றி வணங்குகிறேன். இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றையும், தமிழ்நாட்டு அரசியலையும் தேவர் திருமகனாரை தவிர்த்து விட்டு எழுத முடியாது. காந்தியின் தலைமையை ஏற்று காங்கிரஸ் கட்சியில் பயணம் செய்த தேவர் பெருமகனார், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களையே தம்மை வழிநடத்திச் செல்லும் தளபதியாக கருதினார். காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கான தேர்தலில் நேதாஜியை வீழ்த்த காந்தியடிகள் உள்ளிட்ட தலைவர்கள் முயன்ற போது, தென்னிந்தியா முழுவதும் ஆதரவைத் திரட்டி நேதாஜியை வெற்றி பெறச் செய்த பெருமை தேவர் பெருமகனாருக்கு உண்டு. இந்திய விடுதலைக்காக காங்கிரசின் அங்கமாகவும், நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் சீடராகவும் இருந்து அவர் நடத்திய போராட்டங்கள் வியக்கத்தக்கவை. நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் தலைமையிலான இந்திய தேசிய இராணுவத்திற்குத் தமிழகத்திலிருந்து பெரும் படையைத் திரட்டி அனுப்பியவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஆவார். உள்ளூர் மக்களின் உரிமைகளையும், கண்ணியத்தையும் காப்பதற்காக அவர் நடத்திய போராட்டங்கள் பட்டியலிட முடியாதவை.சென்னை மாகாணத்தில் ஒரு சமூகத்தையே பிறப்பின் அடிப்படையில் குற்றவாளிகளாக்கும் குற்றப்பரம்பரை சட்டத்தை ஒழிக்க வேண்டும் என்பதற்காக ஆங்கிலேயர் ஆட்சியிலும், விடுதலை இந்தியாவிலும் போராடி அவர் பெற்ற வெற்றி ஈடு இணையற்றது. தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளை நிலைநிறுத்த நடத்தப்பட்ட ஆலய நுழைவுப் போராட்டத்திற்கு துணை நின்றது, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தமது நிலங்களை வழங்கியது, தொழிற்சங்க தலைவராக இருந்து தொழிலாளர்களுக்கு உரிமைகளை வென்றெடுத்துக் கொடுத்தது என மக்களுக்காக அவர் நடத்திய போராட்டங்களும், பெற்ற வெற்றிகளும் ஏராளம். தமிழ்நாட்டில் அனைத்து தேசியக் கட்சிகளாலும், அனைத்து மாநிலக் கட்சிகளாலும் போற்றப்படும் பெரும் தலைவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள் தான். அதற்கு காரணம் நாட்டின் விடுதலைக்காகவும், சமூக விடுதலைக்காகவும் அவர் ஆற்றிய பணிகள் தான். அததகைய மகத்தான வரலாறு கொண்ட அவரது தியாகத்தையும், பெருமைகளையும் இன்றைய தலைமுறையினருக்காக நினைவு கூர்ந்து போற்றுவோம்! #DevarJayanthi
17
170
4
1,010
14,142
திருத்தணியை சேர்ந்த வன்னியர் சமுதாய இளைஞர் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் 119 ஜெயந்தி விழாவை முன்னிட்டு. போதை பொருள் இல்லாத தமிழகம் வேண்டியும் பெண்கள் பாதுகாப்பு வேண்டியும் திருத்தணியில் இருந்து பசும்பொன் வரை நடைபயணம் வந்துகொண்டிருக்கிறார்....👍
4
62
3
310
5,538
ஆயுத பூசை, சரஸ்வதி பூசை வாழ்த்துகள்! உழைப்புக்கும், உயர்வுக்கும் துணை நிற்கும் கருவிகளுக்கு மரியாதை செலுத்தும் ஆயுத பூசை, கல்வி  மற்றும் கலைகளைத் தொடங்குவதற்கு உகந்த நாளாகக் கருதப்படும் சரஸ்வதி பூசை ஆகியவை இன்றும், நாளையும் கொண்டாடப்படும் நிலையில், அவற்றைக் கொண்டாடும் அனைத்துத்  தரப்பு மக்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உழைப்பையும், தொழிலையும் கொண்டாடுவதுடன் அதற்கு உறுதுணையாக இருக்கும் கருவிகளுக்கு நன்றி செலுத்துவது தமிழர்களின் தனிப்பண்பு. அதேபோல், கல்வியே அழிக்க முடியாத செல்வம்; அதுவே வாழ்வில் ஏற்றத்தை வழங்கும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கைக் கொண்டவர்கள் தமிழ்நாட்டு மக்கள். ஆயுதபூசையும், சரஸ்வதி பூசையும் கொண்டாப்படும் இந்த நாள்களில், தமிழ்நாட்டில் கல்வி, தொழில், வேலைவாய்ப்பு ஆகியவை அனைவருக்கும் வசமாக வேண்டும் என்று மீண்டும் ஒருமுறை வாழ்த்துகிறேன். #ayudhapooja | #saraswatipuja
5
46
3
189
4,006
I have never witnessed weather conditions like these before. What we are experiencing is a stark reminder that climate change is real, and its effects can no longer be ignored. With climate change and climate phenomena such as El Niño influencing weather patterns, we must remain alert, take scientific warnings seriously, and strengthen our preparedness for extreme weather events. When I filmed this video last night, I felt nature is sending us a warning. We must listen, act responsibly, and protect our people and our planet. #ClimateChange #ElNiño #ClimateAction #EnvironmentalAwareness
36
104
9
621
60,850
பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து! பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் @NainarBJP அவர்களின் பிறந்தநாளையொட்டி, அவருக்கு எனது உளமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் நல்ல உடல்நலத்துடன் நூறாண்டு வாழ்ந்து, நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் தொண்டாற்ற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
1
26
1
106
12,400
"இயக்குனர் சிகரம்" கே.பாலசந்தர் அவர்களின் மகளும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளருமான புஷ்பா கந்தசாமி அவர்களின் இல்லத்தில் நடைபெற்ற நவராத்திரி கொலு விழாவில் கலந்து கொண்ட போது. உடன் மருத்துவர் N.சிவகடாட்சம், எழுத்தாளர் சாந்தகுமாரி சிவகடாட்சம் அவர்கள்.! #Navarathri #Festival #Chennai
6
44
1
490
27,195
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் நெய்தல் மீட்சி மற்றும் பாதுகாப்பு பணிகள் என்ற பெயரில், உலக வங்கிக் கடன் ரூ.21 கோடி செலவில், 3 கி.மீ நீளத்திற்கு சுற்றுச்சுவர் மற்றும் நடைபாதை அமைக்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சதுப்பு நிலத்தை மீட்பதற்கு பதிலாக, அப்பகுதியில் வெள்ளத்தை ஏற்படுத்தி பேரழிவை உருவாக்கும் இத்திட்டம் நடைபெறும் பகுதியை பார்வையிட்டு, செய்தியாளர்களை சந்தித்த போது.! இடம்: சாய் கணேஷ், பள்ளிக்கரணை, சென்னை #SavePallikaranaiWetland #Pallikaranai #PasumaiThaayagam #PMK
6
54
1
240
6,766
இன்று, ஈரோடு - டெக்ஸ்வேலி பகுதியில் நடைபெற்ற, "பனை இயற்கை திருவிழா" நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாற்றிய போது. இந்நிகழ்ச்சியில் சக்தி மசாலா நிறுவனர் டாக்டர் பி. சி..துரைசாமி அவர்கள், இணை நிறுவனர் டாக்டர் சாந்தி துரைசாமி அவர்கள் உள்ளிட்ட சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பாமக மற்றும் பசுமைத்தாயகம் பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
1
26
76
1,179
சென்னை பெருங்களத்தூர் ஜிகேஎம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 26வது பட்டமளிப்பு விழாவில், கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றிய போது! முன்னதாக கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
6
30
189
3,301
கோவையில், தமிழ்நாடு தோட்டத் தொழிலதிபர் சங்கத்தின் 73-ஆவது ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாற்றிய போது.! இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு தோட்டத்தொழிலதிபர் சங்கத் தலைவர் வினோதன் கந்தையா அவர்கள், தென்னிந்திய தோட்டத்தொழிலதிபர் சங்கம் துணைத் தலைவர் அணில் மேத்யூ அவர்கள், தமிழ்நாடு தோட்டத்தொழிலதிபர் சங்க துணைத் தலைவர் சந்தீப் சிங் சித்து அவர்கள், செயலாளர் பிரதீப் சுகுமார் அவர்கள் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.!
3
26
122
2,357
PMK Karthick retweeted
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான அண்ணன் மருத்துவர் திரு @draramadoss அவர்களுக்கு, இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அண்ணன் திரு @draramadoss அவர்கள், நல்ல உடல்நலத்துடன், நீண்ட ஆயுளுடன், தனது மக்கள் பணிகளைத் தொடர, இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
23
395
2
2,509
85,927
PMK Karthick retweeted
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரான நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் அன்புச் சகோதரர் டாக்டர் @draramadoss அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். சமூக நீதி, சுற்றுச்சூழல், மதுவிலக்கு என தமிழ்நாட்டின் பல்வேறு முக்கிய விவகாரங்களில் காத்திரமான கருத்துக்களை எடுத்துரைத்து வரும் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி அவர்கள், ஆரோக்கியத்தோடு மக்கள் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள இந்த இனிய நாளில் வாழ்த்துகிறோம்! @TVKVijayHQ | @TVKPartyHQ | @TVKHQITWingOffl | @BussyAnand #தமிழகவெற்றிக்கழகம் #TVK
28
541
39
3,598
189,469
தமிழ்நாட்டில் மதுவையும், அதனால் ஏற்படும் கேடுகளையும் ஒழிக்கும் நோக்கத்துடன் "மது இல்லாத் தமிழகம்" (Alcohol Free Tamil Nadu) என்ற புதிய இயக்கத்தை சென்னையில் தொடங்கி உரையாற்றிய போது.! #AlcoholFreeTamilNadu #SowmiyaAnbumani #PasumaiThaayagam
4
34
1
85
1,148
சௌமியா அன்புமணியை கொண்டாடும் விவசாயிகள் 📈🔥❤️ #pmk #sowmiyaanbumani #vivasayam #tamilnews #anbumaniramadoss
15
1
39
716
காந்தியடிகளின் பிறந்தநாளான இன்று "மது இல்லாத் தமிழகம்" என்ற புதிய இயக்கம் தொடக்கம்.! தமிழ்நாட்டில் மதுவையும், அதனால் ஏற்படும் கேடுகளையும் ஒழிக்கும் நோக்கத்துடன் மது இல்லாத் தமிழகம் (Alcohol Free Tamil Nadu) என்ற புதிய இயக்கத்தை மகாத்மா காந்தியடிகளின் பிறந்தநாளான இன்று அவரின் திருவுருவ சிலைக்கும், கர்மவீரர் காமராஜர் அவர்களின் நினைவு நாளையொட்டி, அவரின் திருவுருவ சிலைக்கும் மாலை அணிவித்து, தொடங்கிய போது. #AlcoholFreeTamilNadu #SowmiyaAnbumani #PasumaiThaayagam
2
36
93
1,137
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாட்டாளி சமூகம் ஊடகப் பேரவை பொறுப்பாளர், அன்புத்தம்பி வெங்கடேசன் அவர்கள், முனைவர் சௌமியா அன்புமணி MLA அவர்களை வரவேற்று பேசிய காணொளி.! 🌱💛 #சௌமியாஅன்புமணி #PMK #பாட்டாளிமக்கள்கட்சி #திருவண்ணாமலை
2
22
84
1,506
காந்தியடிகளின் பிறந்தநாளான இன்று "மது இல்லாத் தமிழகம்" என்ற புதிய இயக்கம் தொடக்கம்.! தமிழ்நாட்டில் மதுவையும், அதனால் ஏற்படும் கேடுகளையும் ஒழிக்கும் நோக்கத்துடன் மது இல்லாத் தமிழகம் (Alcohol Free Tamil Nadu) என்ற புதிய இயக்கத்தை மகாத்மா காந்தியடிகளின் பிறந்தநாளான இன்று அவரின் திருவுருவ சிலைக்கும், கர்மவீரர் காமராஜர் அவர்களின் நினைவு நாளையொட்டி, அவரின் திருவுருவ சிலைக்கும் மாலை அணிவித்து, தொடங்கிய போது. #AlcoholFreeTamilNadu #SowmiyaAnbumani #PasumaiThaayagam
2
35
111
1,101
காந்தியடிகளின் பிறந்தநாளான இன்று "மது இல்லாத் தமிழகம்" என்ற புதிய இயக்கம் தொடக்கம்.! #AlcoholFreeTamilNadu #SowmiyaAnbumani #PasumaiThaayagam
24
66
2
234
3,010
திருவண்ணாமலை கிரிவலப் பாதை, அடி அண்ணாமலை வருணலிங்கம் மற்றும் அத்தியந்தல் நிருதிலிங்கம் ஆகிய இரு இடங்களில், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் MP அவர்களின் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூபாய் 40 லட்சம் மதிப்பீட்டில், மகளிர் மற்றும் ஆடவருக்கு கட்டப்பட்டுள்ள இரண்டு புதிய சுகாதார வளாகங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக துவக்கி வைத்து உரையாற்றிய போது.! #Thiruvannamalai | #PMK
2
31
1
81
1,901