
Engineer | Rationalist | Investor💰| Music lover 🎧 | Firewall | Click here 👉🏻#FoxPattu | Retweets are not endorsements | Handled by Admin
X
Joined March 2017
- Tweets30.7K
- Following2.2K
- Followers3.9K
- Likes26.1K
Pinned Tweet
📚 படிப்பின் முக்கியத்துவத்தை விளக்கும் காணொளி.
இதை விட இன்னும் பெஸ்டா காட்டுறவனுக்கு லைஃப் டைம் செட்டில்மென்ட்ரா 💵
சோலி முடிஞ் 🤭☺️
הליכוד:
הבחירות במדינת ישראל נגנבו על ידי מפלגות ערביות שתומכות בטרור ובחיסול המדינה היהודית באמצעות עבירות פליליות חמורות של שוחד, איומים, אלימות, זיופים ושימוש בתוכנות אסורות להמרצת מצביעים.
מפלגת הליכוד מעבירה למשטרה, לשב״כ ולוועדת הבחירות מאות עדויות וראיות על גניבת בחירות בקלפיות ערביות רבות- אלפי מעטפות עם כסף מזומן ופתקי רע״ם, איומים ואלימות כלפי חברי הקלפי, ריבוי מצביעים מאחורי הפרגוד, הצבעות בזהות כפולה, פערים בין מספר המעטפות למספר המצביעים, שימוש בתוכנות המרצה אסורות ועוד.
אנו דורשים מהמשטרה ומהשב״כ חקירה יסודית בגין גניבת הבחירות על ידי המפלגות הערביות ומיצוי הדין עם העבריינים.
אנו דורשים מוועדת הבחירות התייחסות מיידית לחקירת העבירות הפליליות הללו שפגעו באופן קיצוני בטוהר הבחירות בישראל ובתוצאות הבחירות.
זו פגיעה חמורה בדמוקרטיה הישראלית ובזכות הבחירה של אזרחי ישראל. גופי האכיפה מוכרחים לפעול ביד קשה ובאופן מיידי.
இது தான் நாம்ம ஆட்களோட பிரச்சனை. அவன் விஷயத்த விட்டு டிரெயில் பாக்குறான். நாமளே தரவுகளோடு எடுத்து போட்டு அடிக்கிறோம். உடனே தவெக உஷார் ஆகி இன்னும் கம்மியா நெகோசியேட் பண்றான்.
ஆனா ஒன்னு சொல்லிக்க ஆசைப்படுறேன். தப்பி தவறி இவங்கள மீண்டும் கூட்டணில இணைச்சீங்கனா தாலி அறுப்பு அணி, எங்க கழகத்த நாங்க தான்டா அடிப்போம் குரூப்ப விட சாதாரண தொண்டன் கூட சந்திரமுகியா மாறி கழகத்த கடிப்பது உறுதி.
அய்யய்யோ தற்குறிகள் டிரிக்கர் ஆகிடுவாங்களே 🤭
லியோ வசூலை உடைத்த ஜெயிலர் 2.. ரஜினியின் 700 கோடி சாம்ராஜ்ஜியம்! Only One SuperStar!
puthiyathalaimurai.com/cinem…
#Jailer2 | #Leo | #Rajinikanth | #Vijay
Hahaha.. Read all posts in this link 🔗
You’ll understand how Kishore K Samy writing and spinning stories.
Replying to @sansbarrier
DMK pressurised rented house owners .
But dmk being ruling party couldn't stop registration of new house .
Appro vera enna kadai ?
பூனை கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருண்டுவிட்டது என்று என்று எண்ணி கொண்டதாம்.
அப்படி இருக்கு இந்த ஆளு பேசுறது லூசு தனமா. 🤦🏻♂️
கண்ணதாசன் எழுதுன புக்ல, நான் என்பதற்கு பதிலா அவன் என்று குறிப்பிடுகிறேனு முன்னுரைல சொல்லி இருக்கார். இதே புத்தகத்துக்கு உள்ளே அவன் திருட்டு ரயில் ஏறி விட்டான் என்று எழுதி இருப்பார்,அதாவது நான் திருட்டு ரயில்ல வந்தேன். இதை தான் கலைஞர் வந்தார் என்று பொய் பரப்புனாங்க.
அடேங்கப்பா.. இப்போ தவெக அரசை பற்றி எதுவும் சொல்ல மாட்டீங்க. இதுவே திமுக ஆட்சியா இருந்து இருந்தா கால்ல சலங்கை கட்டி ஆடி இருப்பீங்க தானே.
ஏன் இந்த டபிள் ஸ்டாண்டர்ட்? நான் நடுநிலை இல்லைனு சொல்லிடுங்க கண்டுக்காம போய்டறோம்.
உலகம் ரொம்ப மோசமா இருக்கு. கதவ திறந்து வச்சிட்டு தூங்குனோம்னு சொல்றாங்க.
இந்தியால குழந்தைகள் பாதுகாப்பு குறித்து பெற்றோர்களே அலட்சியமாக இருந்தா அரசும் அப்படி தானே இருக்கும்?
நம்மால முடிஞ்ச வரை குழந்தைகளை எவ்வளவு பாதுகாப்பா பார்க்கணுமோ,அவ்ளோ பார்க்கணும்.
I am not blaming the mother ,but parental negligence is the beginning of major crimes .
ஒம்மால டோய் - 3
மானமும் அறிவும்
‘மனிதருக்கு’அழகு!
- தந்தை பெரியார்
நடிகர் @actorvijay அவர்களின்
ஊழல் பட்டியல் 3
…..,……………………………………
யோக்கியன் வரான் சொம்ப எடுத்து உள்ள வை என்னும் கதையாக
#தவெக தலைவரும் நடிகருமான விஜய் ஊழலற்ற ஆட்சி குறித்து பிதற்றுகிறார்.
ஆனால்,அரசுக்கு கட்ட வேண்டிய வரியை கட்டாமல் ஏமாற்றுவதும்
ஒரு வகையில் ஊழல் தான்.
ஏற்கனவே நடிகர் விஜய் செய்த இரு மோசடித்தனத்தை அம்பலப்படுத்தினோம்.
இதோ மூன்றாவது மோசடி.
கோடிகளை விட்டுவிட்டு வந்ததாக சொல்லும் அந்த விஜய், அந்த கோடிகளுக்கு உரிய வரியை நேர்மையோடு கட்டினாரா என்பதை பார்ப்போம்..
ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு கார் வழக்கு:
இங்கிலாந்து நாட்டிலிருந்து ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் (Rolls Royce Ghost) சொகுசு காரை இறக்குமதி செய்கிறார் நடிகர் விஜய். அந்த வாகனத்துக்கு இறக்குமதி வரியை செலுத்துவிட்டு பதிவு செய்ய கோருகிறார். ஆனால் நுழைவு வரியும் விதிக்கப்படுகிறது. இதனை எதிர்த்து நடிகர் விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் 16.7.2012 அன்று வழக்கு (WP-18385/2012) தொடர்ந்தார்.
சுமார் 9 ஆண்டுகள் நிலுவையில் இருந்த இந்த வழக்கில், 8.7.2021ல் தனி நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் அளித்த தீர்ப்பில், 2012ஆம் ஆண்டு விதிக்கப்பட்ட நுழைவு வரி சரி தான் என்றும், அதனை உடனே கட்டும்படியும் உத்தரவிட்டார். 11 பக்கங்கள் கொண்ட அந்த தீர்ப்பில் நீதிபதி சுப்ரமணியம் பதிவு செய்துள்ள கருத்துகளை பத்திவாரியாக..
3 - மனுதாரர் விஜய் தனது மனுவில் அவரது தொழிலைப் பற்றி எங்குமே குறிப்பிடாதது ஆச்சர்யமளிக்கிறது. மனுவில் இந்த தரவு எதுவும் இல்லை.
4 - புகழ் பெற்ற திரைப்பட நடிகரான மனுதாரர், அவருக்கான வரியை உரிய நேரத்தில் சரியாக செலுத்த வேண்டும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறார்
7 - மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள நடிகரை அவர்கள் ‘ரியல் ஹீரோ’ என கருதுகின்றனர். அதனால் ‘ரீல் ஹீரோ’ போல செயல்பட கூடாது. வரி ஏய்ப்பு என்பது தேசவிரோத, சட்டவிரோத செயல்பாடாக கருதப்பட வேண்டும்
8 - சமூக நீதியையும், ஊழல் எதிர்ப்பையும் தங்கள் படங்களில் காட்டுபவர்கள், சட்டத்துக்கு புறம்பாக வரி ஏய்ப்பில் ஈடுபடுகின்றனர்
9 - இத்தகைய உயர்நிலையில் உள்ளவர்கள் நிஜ ஹீரோக்களாக வரியை செலுத்தினால் தான் அரசியலமைப்பு சொல்லும் சமூக நீதியை வென்றெடுக்க முடியும். நுழைவு வரியை செலுத்த மறுத்து, 9 ஆண்டுகள் வழக்கை நடத்துவதை பாராட்ட முடியாது
10 - சட்டப்பூர்வமாக சாமானிய மக்கள் செயல்பட வேண்டும் எதிர்பார்க்கப்படும் சமூகத்தில், பணக்காரர்கள் வரி செலுத்த மறுத்தால் அரசியலமைப்பின் நோக்கத்தை அடைய முடியாது
11 - தனது லட்சக்கணக்கான ரசிகர்கள் காசு கொடுத்து பார்த்த பணத்திலிருந்து சொகுசு காரை வாங்கி, அதற்கு நுழைவு வரி கட்ட மறுப்பதை ஏற்க முடியாது. இந்த நாட்டின் உயர்ந்த மனிதர்கள் தங்களிடமுள்ள பணம், ஏழைகளின் ரத்தத்தினால் தான் சேருகிறதேயொழிய வானத்திலிருந்து பொழிவதில்லை என்பதை உணர வேண்டும்
14 - 2012ஆம் ஆண்டு விதிக்கப்பட்ட நுழைவு வரியை மனுதாரர் 2 வார காலத்திற்குள் செலுத்த வேண்டும்
15 - முதலைமைச்சரின் கோவிட் நிவாரண நிதிக்கு மனுதாரர் விஜய் ரூ.1 லட்சத்தை அபராதமாக செலுத்த உத்தரவிடுகிறேன்
தீர்ப்பில் தனி நீதிபதி தெரிவித்த கருத்துகளை நீக்கும்படி, விஜய் தரப்பு மேல்முறையீடு (WA-1810/2021) சென்றது. விஜய் குறித்து சொல்லப்பட்ட கருத்துகளை நீக்கி
இரு நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா & முகமது ஷஃபிக் அமர்வு25.1.22ல் உத்தரவிட்டது. மாநிலங்கள் நுழைவு வரி விதிப்பது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பொதுவான வழக்கு நிலுவையில் இருந்ததாலேயே வரி செலுத்துவதை தவிர்த்தார் எனும் வாதத்தை நீதிமன்றம் ஏற்றது.ஆனாலும்,
வரி கட்டுவதற்கு உத்தரவிட்டதால்
வேறு வழியே இல்லாமல் கட்டி தொலைத்துள்ளார் நடிகர் விஜய்.
அதாவது, இறக்கப்பட்டுள்ள காருக்கு வரி கட்டாமலே அரசாங்கத்தை ஏமாற்றலாம் என்பது தான் விஜய்யின் நோக்கம்.
திருட்டு அம்பலமாகி மாட்டிக்கொண்டதால் வரி கட்டியுள்ளார்.
ஒரு நடிகர் என்பதை பயன்படுத்தி இத்தனை முறைகேடுகளை செய்த
இந்த நபர் அதிகாரத்துக்கு வந்தால் எத்தனை ஊழல்கள்,முறைகேடுகள் செய்வார்?
இந்த லட்சணத்தில் யோக்கியன் வேடம் வேறு.
உண்மையான தீய சக்தி விஜய் தான்.
அவரை நம்பி போகிறவர்கள்
நிலைமை தான் பாவம்.
- வன்னி அரசு
துணைப்பொதுச்செயலாளர்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
6.3.2026
ஒம்மால டோய் - 2
மானமும் அறிவும்
‘மனிதருக்கு’அழகு!
- தந்தை பெரியார்
நடிகர் விஜய் ஊழல் - 2
‘குட்டி ஸ்டோரி’ புகழ் நடிகர் விஜய்யின் ஊழல் ஸ்டோரி!
’பிகில்’ பட வருமானம் தொடர்பாக 5.2.2020ல் நடிகர் விஜயின் @TVKVijayHQ பனையூர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. அப்போது அவர் ‘மாஸ்டர்’ பட ஒளிப்பதிவில் நெய்வேலியில் இருந்ததால், அங்கிருந்து சென்னையில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்து வரப்பட்டு விசாரிக்கப்பட்டார்.
இந்த சோதனையின்போது ’[email protected]’ என்ற ஒரே Apple IDல் நடிகர் விஜய் பயன்படுத்தி வந்த Apple IPhoneX மற்றும் lPAD Pro சாதனங்களை கைப்பற்றி வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அந்த சாதனங்களில் இருந்த தரவுகளில் ஒன்று, வேறொரு Samsung மொபைலில் குறிப்புகள் எழுத்தப்பட்டிருந்த ஒரு படத்தை தனது IPhone மூலம் 18.11.2017 அன்று எடுத்த புகைப்படம். இதில் இருந்த தரவுகளின் அடிப்படையில் விரிவான கேள்விகளை கேட்டு விஜய்க்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
அதிகாரிகள் அனுப்பிய முதல் நோட்டீசுக்கு 6.2.2020ல் விஜய் அளித்த பதில்,
’இது எனது மொபைலில் எடுக்கப்பட்ட பிரிண்ட் அவுட் தான். நான் முதலீடு செய்துள்ள நிலங்கள் பற்றிய தரவு அதில் உள்ளது. தி.நகர் பாண்டி பஜாரில் மூன்றரை கிரவுண்டில் ரூ.23 கோடி, பனையூர் 3வது அவென்யூ மூன்று கிரவுண்டில் ரூ.6.5 கோடி, நீலாங்கரை Kazura Garden 4 கிரவுண்டில் ரூ.5 கோடி, 2127 சதுர அடியில் அடையார் அலுவலக ஃபிளாட்டில் ரூ.2 கோடி, படூர் 2 ஏக்கர் 65 செண்ட் நிலத்தில் ரூ.15.5 கோடி ஆகிய தரவுகள் உள்ளன. அதிலுள்ள மற்ற நில முதலீடுகள் குறித்து உடனடியாக நியாபகத்தில் இல்லை. ஒரு வார காலத்திற்குள் அந்த விவரங்களை அளிக்கிறேன்’என்றார்.
நடிகர் விஜயின் மொபைலிலிருந்து அதிகாரிகள் கைப்பற்றிய அந்த படத்தில், விஜய் வாங்கிய சொத்துக்களின் விவரம், அதன் மதிப்பு மற்றும் அவை வாங்கப்பட்ட தேதி ஆகியவை குறிப்பிடப்பட்டிருந்தது.
5 அசையா சொத்துக்களில் மொத்தம் ரூ.52 கோடியை முதலீடு செய்துள்ளதாக விஜய் ஒப்புக்கொண்டதன் அடிப்படையிலும், ஒரு வாரத்திற்குள் விஜய் சமர்ப்பித்த மற்ற சொத்து முதலீடுகளையும் ஆராய்ந்ததில் பல முரண்பாடுகளை வருமான வரித்துறை அதிகாரிகள் கண்டறிந்தனர். கைப்பற்றப்பட்ட படத்தில் குறிப்பிடப்பட்ட சொத்தின் மதிப்பைவிட அந்த சொத்து ஆவணத்தில் உள்ள மதிப்பு குறைவாக இருந்துள்ளது.
அதாவது தி.நகரில் உள்ள நிலம் மற்றும் கட்டிடத்தை 11.12.2014 அன்று ரூ.16 கோடிக்கு வாங்கியதாக சொத்து ஆவணம் சொல்கிறது. ஆனால், விஜயின் மொபைலில் கைப்பற்றப்பட்ட குறிப்பில் அந்த சொத்தின் மதிப்பு ரூ.23 கோடி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இரண்டுக்கும் ரூ.7 கோடி வித்தியாசம்.
இதே போன்று ஆவணங்களின்படி விஜய் வாங்கிய 4 சொத்துகளின் மதிப்பு
ரூ.33 கோடி என்று இருந்தாலும், கைப்பற்றப்பட்ட குறிப்பில் அவற்றின் மதிப்பு ரூ.50 கோடியாக எழுதப்பட்டிருந்தது. ஆக ரூ.16 கோடிக்கு விஜயிடம் எந்த கணக்கும் இல்லை என்பது தான் வருமான வரித்துறையினரின் குற்றச்சாட்டு.
இந்த முரண்பாடு குறித்து அதிகாரிகள் அனுப்பிய இரண்டாவது நோட்டீசுக்கு 12.3.20ல் நடிகர் விஜய் இப்படி பதில் அளித்தார்..
“சொத்துக்களை வாங்குவதற்காக கேட்டபோது அதன் உரிமையாளர்கள் சொன்ன முதற்கட்ட விலையை தான் கைப்பற்றப்பட்ட குறிப்பில் நான் எழுதியுள்ளேன். உரிமையாளர்களிடம் எனது குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி முதற்கட்ட விலையிலிருந்து குறைத்து வாங்குவர். அந்த விலையை நான் பிறகு குறிப்பில் எழுதவில்லை” என்றார்.
முதல் நோட்டீசுக்கும் இரண்டாவது நோட்டீசுக்கும் சுமார் ஒரு மாதம் இடைவெளி என்பதால் விஜயின் பதிலை முன்னரே கணித்திருந்த அதிகாரிகள், இரண்டாவது நோட்டீசில் இன்னொரு கேள்வியையும் கேட்டிருந்தனர்..
’கைப்பற்றப்பட்ட குறிப்பில் 2016ல் வாங்கப்பட்ட பொதூர் சொத்தின் மதிப்பு ரூ.15.50 கோடி என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த குறிப்பை 2016ல் தான் நீங்கள் எழுதியிருக்க முடியும். தி.நகர் சொத்து 2014லும், நீலாங்கரை Kazura Garden சொத்து 2013லும் வாங்கப்பட்டன. ஆனால் 2016ல் பொதூர் சொத்து குறித்து எழுதும்போது ஏற்கனவே வாங்கப்பட்டிருந்த சொத்துக்களின் உண்மையான மதிப்பு திருத்தப்படாமல், ஏன் சொத்தின் ஆஃபர் விலையையே குறிப்பிட்டுள்ளீர்கள்?’
திரைப்படங்களில் கருப்புப் பண வில்லன்கள் அளிக்கும் வழக்கமான பதிலை தான் ஹீரோ விஜய் இதற்கும் அளித்தார் - ‘அந்த சொத்துக்கள் ஏற்கனவே வாங்கப்பட்டுவிட்டதால், அவற்றின் விலையை குறிப்பில் திருத்துவதற்கு மறந்து போயிருப்பேன்’ என்பதே அந்த பதில்.
முதல் நோட்டீசுக்கு அளித்த பதிலில், கைப்பற்றப்பட்ட குறிப்பில் இருப்பது முதலீட்டு செய்த சொத்துக்களின் மதிப்பு என்று பதிலளித்தார் விஜய். ஒரு மாதத்துக்கு பின்னர் இரண்டாவது நோட்டீசுக்கான பதிலில், அவை சொத்துக்களின் மதிப்பு அல்ல, அவற்றை வாங்குவதற்கு முன்னர் பெறப்பட்ட முதற்கட்ட விலை என்று பல்டி அடித்தார்.
இதனை மறுத்து, விஜயின் அலுவலகம் இயங்கிவரும் அடையாறு ஃபோர் சீசன்ஸ் வீட்டை 2007ல் ரூ.1.45 கோடிக்கு வாங்கப்பட்டதாக சொத்து ஆவணம் சொல்கிறது. ஆனால், விஜய் தனது மொபைலில் எழுதி வைத்திருந்த குறிப்பில் அதன் விலை ரூ.2 கோடி எனக் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் 2007ல் வாங்கிய சொத்தின் விலையை கூட குறித்து வைத்துள்ளார் விஜய் என்பது தெளிவாகிறது. ஆஃபர் விலையை தான் குறித்துள்ளேன், வாங்கிய சொத்தின் மதிப்பு அல்ல என விஜய் சொல்வது ஏற்க முடியாது. விஜய் எழுதி வைத்துள்ளது தான் அந்த சொத்துக்களின் உண்மையான மதிப்பு என்று அமலாக்கத்துறை வாதிட்டது.
Unexplained Investment என்ற பெயரில் இந்த தொகையை 2014-15 முதல் 2017-18 வரை அந்தந்த கணக்கீட்டு ஆண்டுகளின் வருமானத்தில் சேர்த்தது வருமான வரித்துறை. இதனை எதிர்த்து விஜய் தாக்கல் செய்த மனுவில் அவருக்கு சாதகமாக மேல்முறையீட்டு அதிகாரி தீர்ப்பளித்தார். மேல்முறையீட்டு அதிகாரியின் தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி, வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் (ITAT) அதிகாரிகள் மேல்முறையீடு செய்தனர். அங்கு தான் மேலே விவரிக்கப்பட்டுள்ள இந்த வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்றதாக ஆவணங்கள் கூறுகிறது.
விஜய் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை வருமான வரித்துறை அதிகாரிகள் முழுமையாக விசாரிக்கவில்லை. ஆவணங்களில் கண்டறியப்பட்ட முரண்பாடுகளை மட்டும் வைத்து, சந்தேகத்தின் அடிப்படையில் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளது. கூடுதல் ஆதாரங்கள் தேவைப்படுகிறது என்று சொல்லி மேல்முறையீட்டு அதிகாரியின் தீர்ப்பையே 3.12.2024ல் தீர்ப்பாயமும் உறுதி செய்தது.
ஓரளவு அடிப்படை நிதி நிர்வாகம் தெரிந்தவர்கள் இந்த வழக்கு விவரங்களை பார்த்தாலே, ’சொத்துக்களில் கருப்பு பண முதலீடு’ நடைபெற்றுள்ளதை புரிந்துக்கொள்வார்கள். இவ்வளவு ஆதாரங்கள் கிடைத்தும் குற்றத்தை நிரூபிக்க மிகவும் அடிப்படையான விசாரணையை கூட வருமான வரித்துறை நடத்தாமல் ‘கோட்டை’ விட்டுள்ளது தெளிவாகும். இந்த பிழை தெரியாமல் நடந்தது அல்ல. டெல்லி முதலாளிகளின் கண்ணசைவில் அதன் கூலிப்படையான வருமானத்துறை செய்துள்ள ‘சமரசத்தால்’ நடிகர் விஜய் தப்பிக்க விடப்பட்டுள்ளார்.
இப்போது புரிகிறதா?
பாஜகவால் இயக்கப்படுகிற ஒரு நபர் தான் நடிகர் விஜய் என்பது.
- வன்னி அரசு
துணைப்பொதுச்செயலாளர்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
28.2.2026
(நடிகர் விஜய்யின் ஊழல் கதை தொடரும்)
@TVKPartyHQ
@BussyAnand
@AadhavArjuna
ஒம்மால டோய் - 1
மானமும் அறிவும்
‘மனிதருக்கு’அழகு!
- தந்தை பெரியார்
#தூய_ஆட்சி பேசும் விஜய்: வரி ஏய்ப்பு செய்யவா ரசிகர் மன்றங்களை பயன்படுத்தினார்?
#தவெக தலைவரும் நடிகருமான விஜய் @TVKVijayHQ அவர்கள் ஒவ்வொரு மேடையிலும் தூய ஆட்சி தருவதாக பிதற்றி வருகிறார். சினிமா பஞ்ச் டயலாக் போல தீய ஆட்சி- தூய ஆட்சி என உரத்து பேசுகிறார். ஆனால், தூய ஆட்சி தருவதற்கு முதலில் நடிகர் விஜய் அடிப்படையில் தூய்மையானவரா? வரி ஏய்ப்பு மூலம் அரசாங்கத்தை ஏமாற்றுவது அதுவும் தனது ரசிகர் மன்றத்தை வரி ஏய்ப்புக்காக பயன்படுத்தியது அம்பலமாகியுள்ளது.
சமீபகாலமாக, தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கும் தவெக நிர்வாகிகள் ரசிகர் மன நிலையிலேயே இருக்கிறார்களே தவிர, அரசியல்படுத்தப்படவில்லை என்பதே உண்மை. அதை உறுதிப்படுத்தும் விதமாக,
நேற்று தவெக @TVKPartyHQ சார்பில் திரு.ஆனந்த் வெளியிட்ட அறிக்கையே சான்று.
சமீபத்தில், நியூஸ் 18 தொலைக்காட்சி மற்றும்
தந்தி தொலைக்காட்சி விவாதத்தில் நான் பங்கேற்ற போது,நடிகர் விஜய் திட்டமிட்டு செய்த ஊழல் மற்றும் வரி ஏய்ப்பு குறித்து பேசிய போது தவெக நிர்வாகிகள் இல்லை இல்லை என கோபப்பட்டனர். இதோ ஆதாரங்களோடு அம்பலப்படுத்துகிறேன். வரி ஏய்ப்பும் ஊழல் வகை தான்.
இதோ நடிகர் விஜய் செய்த ஊழல் 1...
கடந்த 2015 ஆம் ஆண்டு நடிகர் விஜய் நடித்த ’புலி’ திரைப்படம் அக். 1ஆம் தேதி வெளியானது. அதற்கு முதல் நாள் செப். 30ஆம் தேதி நடிகர் விஜய், நடிகைகள் நயன்தாரா, சமந்தா மற்றும் புலிபடத்தின் தயாரிப்பாளர்கள் இடங்களில் வரி ஏய்ப்பு சந்தேகத்தில் வருமானத்துறை சோதனை நடத்தியது.
அச்சோதனையின் போது, புலி படத்திற்கு சம்பளமாக ரூ.16 கோடிக்கான காசோலையோடு ரூ.5 கோடியை பணமாக பெற்றதாக அதிகாரிகளிடம் ஒப்புக்கொண்டார் விஜய். 2015-16 நிதியாண்டில் கூடுதலாக ரூ.10 கோடியுடன் மொத்தம் ரூ.15 கோடியை பணமாக பெற்றதாக ஒப்புக்கொண்டுள்ளார். காசோலைக்கு மட்டுமே மூலத்தில் வரிபிடித்தம் செய்யப்பட்டிருந்தது(TDS). பணமாக பெற்ற தொகை கணக்கில் காட்டப்படாததை அதிகாரிகள் கண்டறிந்தனர்.
இதனைத் தொடர்ந்து, 2015-16 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான அறிக்கையை 29.07.16ல் தாக்கல் செய்யும் போது, 2015ல் அதிகாரிகள் சோதனையில் கண்டறிந்த பணமாக பெற்ற ரூ.15 கோடியை சேர்த்து மொத்தம் சுமார் ரூ.35,42,91,890-ஐ வருமானமாக கணக்கு காண்பித்தார் விஜய்.
அதில் செலவுகளாக, சொத்துக்களுக்கான தேய்மானமானம் - ரூ.89,07,814 & ‘பட வெளியீடு & ரசிகர் மன்ற செலவுகள்’ எனும் தலைப்பில் - ரூ.2,92,44,825 இரு கணக்குகள் காட்டப்பட்டுள்ளதை வரி மதிப்பீட்டு அதிகாரி ஏற்க மறுத்து விரிவான விளக்கத்தை நடிகர் விஜயிடம் கோரினார்.
புலி பட தயாரிப்பு நிறுவனம் தனது சம்பளத்தின் ஒரு பகுதியை ரொக்கமாக தந்த ரூ.5 கோடியில், விஜய் ரசிகர் மன்றங்களின் உறுப்பினர்களுக்கு ரூ.2 கோடியை தயாரிப்பு நிறுவனமான SKT Studios தந்துவிட்டது. பாக்கி ரூ.92,44,825-ஐ ரசிகர் மன்ற செலவுகளுக்கு தானே பணமாக கொடுத்தாக விளக்கம் அளித்தார் விஜய்.
இந்த விளக்கத்தை ஏற்க மறுத்த மதிப்பீட்டு அதிகாரி, தேய்மானமாக சொல்லப்பட்ட தொகையில் 20 சதவிகிதத்தையும் (ரூ.17,81,562), தயாரிப்பு நிறுவனம் மன்ற உறுப்பினர்களுக்கு தந்ததாக சொன்ன ரூ.2 கோடியையும், அதே மன்றங்களுக்கு விஜய் தந்ததாக சொன்ன தொகையில் 70 சதவிதத்தையும் (ரூ.64,71,377) வருமான வரி கணக்கிற்குள் கொண்டு வந்தார்.
மொத்தம் ரூ.38,25,44,829 வருமானத்துக்கான வரியையும், வருமானத்தை மறைத்ததற்கு தனியே அபராதத்தையும் கட்டும்படி 30.12.2017ல் விஜய்க்கு உத்தரவிட்டார்.
தேய்மான தொகையை வருமான கணக்கில் சேர்த்ததை மட்டும் தவிர்த்து, ரசிகர் மன்ற செலவுகள் தொடர்பான உத்தரவை எதிர்த்து வருமான வரித்துறையில் 25.01.2018ல் மேல்முறையீடு செய்தார் விஜய்.
விஜய் வீட்டில் நடந்த சோதனையில் கண்டறியப்பட்டு, அவரால் ஒப்புக்கொள்ளப்பட்ட கணக்கில் வராத ரொக்கம் ரூ.5 கோடியின் ஒரு பகுதி தான், ரசிகர் மன்ற உறுப்பினர்களுக்கு தயாரிப்பு நிறுவனம் தந்த ரூ.2 கோடி என்ற விஜயின் வாதம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதாவது கணக்கில் காட்டப்படாத பணமாக இருந்தாலும், ஒரே பணத்திற்கு இருமுறை வரிவிதிக்க முடியாது என்பதே.
வரி மதிப்பீட்டு அதிகாரி கணக்கில் எடுத்துக்கொண்ட 70 சதவிகிதத்திலிருந்து குறைத்து 50% மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்ளலாம் என்று மேல்முறையீட்டு அதிகாரி உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து, வருமான வரித்துறை சார்பில் வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் (ITAT) மேல்முறையீடு செய்யப்பட்டது.
அங்கே வருமான வரித்துறை முன்வைத்த வாதங்களை பார்ப்போம்..
விஜய் வீட்டில் 2015ல் வருமான வரித்துறை சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ.5 கோடி கண்டறியப்பட்டு, அதனை அவரும் ஒப்புக்கொண்ட பின்னர், பின்யோசனையாக (afterthought), மன்ற செலவுகளுக்கு தனது சம்பளத்திலிருந்து ரூ.2 கோடியை படத்தின் தயாரிப்பு நிறுவனம் செலவிட்டதாக இப்போது விஜய் சொல்வது நம்பமுடியாத கதை, ஏற்றுக்கொள்ள முடியாது.
அதுவும், முந்தைய கணக்கீட்டு ஆண்டுகளில்
2013-14: ரூ.5,05,019
2014-15: ரூ.4,76,440
2015-16: ரூ.7,24,971
என ரசிகர் மன்ற பட வெளியீட்டு செலவுகள் கணக்கு காட்டப்பட்டுள்ள நிலையில், இந்த குறிப்பிட்ட ஆண்டில் மட்டும் ரூ.92,44,825
செலவாகியுள்ளதாக சொல்கிறார் விஜய். இதற்கு உரிய விளக்கம் எதையும் அவர் அளிக்கவில்லை என்று வருமான வரித்துறை வாதிட்டது.
இந்த இரு மேல்முறையீட்டு வழக்குகளிலும், தான் நேரடியாக மன்றங்களுக்கு ரொக்கமாக தந்ததாக சொன்ன ரூ.92,44,825-க்கு உரிய கணக்கு தாக்கல் செய்ய முடியாததற்கு விஜய் சொன்ன காரணம்:
பேனர். கட்-அவுட் கட்டுவதற்கும், பூஜை செய்வதற்கும், இனிப்புகள் & பரிசுப் பொருட்கள் தருவதற்கும், கேஸ் பலூன், மாலை, ஆரத்தி, பால் அபிஷேகம், மலர்கள் உள்ளிட்ட செலவுகளுக்கும், ஆதரவற்ற இல்லங்களின் குழந்தைகளுக்கு இலவச டிக்கெட் கொடுப்பது போன்றவற்றில் செலவிடப்பட்டது.
அந்த குறிப்பிட்ட ஆண்டில் பட வெளியீட்டின்போது ரசிகர்களின் அனைத்து செலவுகளையும் முடிந்தளவு தானே ஏற்றுக்கொள்ள விஜய் விரும்பியதால், இவ்வளவு பெரிய தொகையை செலவு செய்தார். மேலும், விஜய் அளித்த ரசிகர் மன்ற உறுப்பினர்களின் பட்டியலின் அடிப்படையில் தயாரிப்பு நிறுவனம் ரூ.2 கோடியை அந்த பட்டியலில் உள்ள ரசிகர்களுக்கு தந்ததாக ஒப்புக்கொண்டு கடிதம் அளித்துள்ளது. அந்த கடிதத்தை வருமான வரித்துறை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று விஜய் தரப்பு வாதிட்டது.
சோதனையில் கணக்கில் வராத ரொக்கம் கண்டறியப்பட்ட பின்னர், ரசிகர் மன்ற செலவுகளாக அதனை நடிகர் விஜய் கணக்கு காட்டிய ரூ.2,92,44,825-ல் 50% மட்டுமே செலவாக கணக்கிட்டு, மீதமுள்ள 50%க்கு வருமான வரி செலுத்த வேண்டும் என்று 22.12.2021ல் வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் தீர்ப்பளித்தது.
இந்த கட்டத்தில் தான் 10.08.2022ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்கிறார் நடிகர் விஜய். அதன் வழக்கு எண்: WP-21006/2022.
கணக்கில் காட்டப்படாத பணம் மீது அபராதம் விதிக்க பின்பற்றப்பட்ட நடைமுறை, அதற்குரிய சட்டவிதிகள் சொல்லும் காலவரையறைக்குள் நடத்தப்படவில்லை. அதனால் அபராதம் விதித்தது செல்லாது என்று தான் நீதிமன்றத்தை விஜய் அணுகினார்.
2022ல் விசாரித்த நீதிபதி Dr.அனிதா சுமந்த் வருமான வரித்துறை அபராதம் வசூலிப்பதற்கு இடைக்கால தடை விதித்தார். 3 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கின் தீர்ப்பை தான் கடந்த 6.2.26ல் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அளித்தார்.
கணக்கில் காட்டப்படாத பணம் மீது வருமான வரித்துறை விதித்த அபராதம் குறித்து விஜய் தரப்பு எந்த எதிர்ப்பையும் பதிவு செய்யவில்லை என்று நீதிபதி தீர்ப்பில் குறிப்பிடுகிறார். நடிகர் விஜய் கணக்கில் காட்டாத பணத்தின் மீது விதிக்கப்பட்ட அபராதம், உரிய சட்டவிதிகள் சொல்லும் காலவரையறைக்குள் தான் விதிக்கப்பட்டுள்ளது. அதனால் விஜயின் மனுவை தள்ளுபடி செய்கிறேன். காலவரையறை தொடர்பான வாதத்தை தவிர்த்து வேறு ஏதேனும் வாதங்கள் இருந்தால், உரிய சட்ட அமர்வில் மனுதாரர் தீர்வை பெற்றுக்கொள்ளலாம் என்று விரிவாக தீர்ப்பளித்துள்ளார்.
நடிகர் விஜயின் புலி படத்தை தயாரித்து, சம்பளமாக விஜய்க்கு ரூ.16 கோடி காசோலைகளுடன் கணக்கில் வராமல் ரொக்கமாக ரூ.5 கோடியை தந்து,
அதில் விஜய் அளித்த ரசிகர் மன்ற உறுப்பினர்களின் பட்டியலில் இருந்தவர்களுக்கு ரூ.2 கோடியை தனியே தந்த SKT Studios, அன்றைய காலகட்டத்தில் நடிகர் விஜயின் மேனேஜராக இருந்த திரு.பி.டி.செல்வக்குமார் நிர்வகித்தது.
இந்த வழக்கையும் அதில் வைக்கப்பட்ட வாதங்ளையும் உற்று கவனித்தால், நடிகர் விஜய் தனது ரசிகர் மன்றங்களை கருப்பு பணத்தை வெள்ளையாக்கும் நிறுவனமாக பயன்படுத்தி வந்துள்ளாரா என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாததாகிறது.
இது குறித்து நடிகர் விஜய் வாய் திறப்பாரா?
அடுத்த ஊழல் பட்டியல் நாளை தொடரும்.
- வன்னி அரசு
துணைப்பொதுச்செயலாளர்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
27.2.2026
இந்த ஆளு பதவி சுகம் கண்டுவிட்டார். அதனால் திட்டி பேசி தற்குறியோடு பயணம் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்துவிட்டார்.
இவர்களுக்கு பெரிதாக ஓட்டு வங்கியும் இல்லை என்பதை நடந்து முடிந்த இடை தேர்தல் காட்டி இருக்கிறது.
Bio: Bharat, Hinduism & Temple
~ நீ ஊதவே வேண்டாம்
Conspiracy theory:
Heard DMK doing many things to bring bad name to TVK Government like disrupting Power, Water, Rice hoarding and creating scarcity.
Time for stern actions, if true.
@CMOTamilnadu
உங்களையே அவ்ளோ கீழ்த்தரமா பேசி இருக்கு. ஆனா கண்டன பதிவு போட்டு இருக்கீங்க 😐
நல்லவரா இருங்க, ஆனா அநியாயத்துக்கு இப்டி 😑
நடந்து முடிந்த தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலின்போது தொடரப்பட்ட வழக்கு காரணமாக, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் திருமதி கார்த்திகா அவர்களைத் த.வெ.க. அரசு கைது செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.
ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பெண்கள் பொதுவாழ்க்கையில் ஈடுபடுவதை, கொள்கை மாறுபாடுகளுக்கு அப்பால் வரவேற்று ஊக்கமளிக்க வேண்டும். அத்தகையோரைக் கைது செய்து அச்சுறுத்துவதன் மூலமாக இந்த அரசு எதைச் சாதிக்கப் போகிறது?
கடந்த காலங்களில் திருமதி கார்த்திகா அவர்கள் தி.மு.கழகத்தையும் அதன் கொள்கைத் தலைவர்களையும் விமர்சனம் செய்த தருணங்களில், அதைக் கொள்கை வழிநின்று தக்க பதிலளித்து தெளிவை ஏற்படுத்துவோம் என்ற வகையில் அணுகினோமே தவிர, பெண் தலைவர்களைச் சிறையில் அடைத்து வாய்ப்பூட்டு போட நாங்கள் நினைத்தது இல்லை. ஆனால், சகிப்புத்தன்மையும் ஜனநாயக உணர்வும் இல்லாத சர்வாதிகார அரசாகத் த.வெ.க. அரசு நடந்துகொள்கிறது.
இடைத்தேர்தலில் த.வெ.க. அரசு அதிகார துஷ்பிரயோகம் செய்ததை நாடே பார்த்தது. அதைத் தட்டிக் கேட்டதற்காக நா.த.க. நிர்வாகிகளைக் கைது செய்து அலைக்கழிப்பது கொடுங்கோன்மையும் குறுகிய மனப்பான்மையும் ஆகும்.
ஜாமீனில் வெளிவரத்தக்க சாதாரண வழக்குகளுக்காக, கைது நடவடிக்கையில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகள் நீதிமன்றக் கண்டனத்துக்கு ஆளாவார்கள். த.வெ.க.வின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளுக்குக் காவல்துறை அதிகாரிகள் துணைபோகக் கூடாது.
நாட்டையே உலுக்கியுள்ள கொடிய போதை மருந்து கடத்தல் வழக்கில் த.வெ.க. நிர்வாகியும் அவரது கூட்டாளிகளும் கைது செய்யப்பட்ட சம்பவத்தைத் திசைதிருப்பவும் தனது நிர்வாகத் தோல்விகளை மறைக்கவும் இத்தகைய கைது நடவடிக்கையில் த.வெ.க. அரசு ஈடுபடுகிறது. மறுபுறம், செய்தியாளர்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்தவர்களும், கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குத் துணைபோனவர்களும் த.வெ.க.வில் இருப்பதாலேயே வெளியில் சுற்றித் திரிகிறார்கள்.
குற்றவாளிகளைக் காப்பாற்றி, போராடுவோரைக் கைது செய்வதில் தற்போது ரெண்டே ரெண்டு பேருக்கு நடுவில்தான் போட்டியே. ஒன்று டெல்லி பா.ஜ.க., இன்னொன்று தமிழ்நாட்டில் த.வெ.க.! உங்கள் பாசிசம் பாயாசம் நாடகம் எல்லாம் நாளுக்கு நாள் பல்லிளித்துக் கொண்டே வருகிறது.
திருமதி கார்த்திகா அவர்களையும் அவரது கட்சியினரையும் நிபந்தனை இன்றி விடுதலை செய்ய வேண்டும்!






















