முத்துக்குமார் | Muthukumar 🇮🇳🇸🇪 (@Rtr_Muthukumar) header
முத்துக்குமார் | Muthukumar 🇮🇳🇸🇪 (@Rtr_Muthukumar) profile picture

வாழ்க்கையை ரசித்து வாழும் 'திருநெல்வேலி' காரன்... Belong to Dravidian Stock! 🖤❤️ PhD @ LTU | Masters @ KTH | Sverige

Stockholm, Sweden
Joined May 2016
Photo by முத்துக்குமார் | Muthukumar 🇮🇳🇸🇪 (@Rtr_Muthukumar)Photo by முத்துக்குமார் | Muthukumar 🇮🇳🇸🇪 (@Rtr_Muthukumar)Photo by முத்துக்குமார் | Muthukumar 🇮🇳🇸🇪 (@Rtr_Muthukumar)Photo by முத்துக்குமார் | Muthukumar 🇮🇳🇸🇪 (@Rtr_Muthukumar)Photo by முத்துக்குமார் | Muthukumar 🇮🇳🇸🇪 (@Rtr_Muthukumar)Photo by முத்துக்குமார் | Muthukumar 🇮🇳🇸🇪 (@Rtr_Muthukumar)Photo by முத்துக்குமார் | Muthukumar 🇮🇳🇸🇪 (@Rtr_Muthukumar)Photo by முத்துக்குமார் | Muthukumar 🇮🇳🇸🇪 (@Rtr_Muthukumar)Photo by முத்துக்குமார் | Muthukumar 🇮🇳🇸🇪 (@Rtr_Muthukumar)Photo by முத்துக்குமார் | Muthukumar 🇮🇳🇸🇪 (@Rtr_Muthukumar)
நெஞ்சம் நெகிழ்கிறது தலைவரே! உங்களுடைய இந்த ஒரு வாழ்த்து போதும் வாழ்நாளிற்கும். தங்களைப் போன்று அயராது உழைக்க, இந்த வாழ்த்து மென்மேலும் ஊக்குவிக்கிறது. தங்கள் சொற்படி ஒரு Guide ஆக என் இளையோருக்கு இருப்பேன் என்று உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி நவில சொற்கள் இல்லை தலைவரே!🙏 – at Sweden
எனக்குச் சமர்ப்பிக்கிறேன்னு சொல்றதை விட, உங்க பெற்றோருக்குச் சமர்ப்பிக்கிறதுதான் சரியா இருக்கும். உங்களை மாதிரி படிச்சு முன்னேற விரும்புற இளைஞர்களுக்கு நீங்க ஒரு guide-ஆ இருந்து வழிகாட்டுனீங்கனா அதுதான் எனக்கு மகிழ்ச்சி. நீங்க இன்னும் பெரிய உயரங்களை அடையவும் புகழைப் பெறவும் வாழ்த்துகள் தம்பி!
29
534
3
1,986
45,958
முத்துக்குமார் | Muthukumar 🇮🇳🇸🇪 retweeted
DMK-வோட core USP, branding, identity, ideology-ஐ உருவி எடுத்துட்டா... என்ன இருக்கும்னு யோசிச்சுப் பாருங்க. infact, திமுகவை மற்ற கட்சிகள் போல ஆக்குவதுதான் RSS plan... அது சரியா நடந்திட்டு இருக்கு... அப்புறம் இந்த மாதிரி Hindu majoritarian politics தொடர்ந்தா... முதல்ல அந்நியப்பட்டுப் போகப்போறது வேற யாரும் இல்ல... கலைஞர்தான்... அண்ணா கூட அவ்வளவு நாத்திகத்தைப் பேசியிருப்பார்னு தோணல... ஆனா கலைஞரின் முழு வாழ்வும் majoritarian அரசியலுக்கு எதிரானது... பகுத்தறிவைக் கொண்டது. கலைஞர் இல்லாத திமுகவும் அதிமுகவும் ஒண்ணு... இந்த ரெண்டுல எதைத் தேர்ந்தெடுப்பாங்கன்னு நீங்களே முடிவு பண்ணுங்க...
Replying to @rajeshk41
Seem like going in correct way
4
16
2
67
3,729
பண்டு நான் எழுதிய பதிவு: தீபாவளி தமிழர் விழாவா? nellaikumaran.blogspot.com/2…
1
10
220
வாழும் வரை குருதிக் கொடை! வாழ்ந்த பின் கருவிழிக் கொடை! 9வது முறை; இங்கே எங்கள் நாட்டில் 4ம் முறை. #geblod @geblod – at Stockholm, Sweden
2
30
543
முத்துக்குமார் | Muthukumar 🇮🇳🇸🇪 retweeted
State Rights❌ Theatre Rights✅
#BREAKING | ஒன்றிய - மாநில உறவுகள் குறித்து ஆராய்வதற்காக திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவை கலைத்தது தவெக அரசு. #SunNews | #KurianJoseph | #Vijay | #TVK
349
2,392
128
6,373
417,074
முத்துக்குமார் | Muthukumar 🇮🇳🇸🇪 retweeted
பல லட்சங்களோ ஓரிரு கோடிகளோ, கோவை நுலக புத்தகக் கொள்முதல் ஊழலை தமிழ்நாடு அரசு நினைத்தால் ஓரிரு மணி நேரங்களில் வெளிக்கொண்டுவர முடியும். செய்வார்கள் என்று காத்திருப்போம். ஆனால் இந்த பிரச்சனையில் கவனப்படுத்தவேண்டிய ஒன்று இப்பிரச்சனையின் தலைப்பு. 1. கோவை புதிய நூலகத்தில் பெரும் ஊழல்' 2. கோவை பெரியார் நூலக புத்தகக் கொள்முதலில் பெரும் முறைகேடு' 3. AI புத்தகங்களால் நிரம்பி வழியும் பெரியார் நூலகம் 4. பெரியார் நூலகத்திற்கு தகுதியற்ற புத்தகங்களை கொள்முதல் செய்தது யார்? இப்படி எல்லாம் வைத்திருக்க வேண்டிய தலைப்பை எப்படி தலைப்பிட்டிருக்கிறார்கள். "கோவை பெரியார் அறிவுலகத்தில் பெரும் ஊழல்" என்று திட்டமிட்டு கட்டமைத்திலுக்கிறார்கள். இந்த தலைப்பை திரும்ப திரும்ப பதியவைக்க முனைகிற ஆர்எஸ்எஸ் கூட்டு மனசாட்சிகளின் நுட்பமான முயற்சி இது. தமிழ்நாட்டின் அனைத்து அறிவுசார் முயற்சிகளின் மீதும் சேற்றை வீச ஒரு பெரும் கூட்டமைப்பே இயங்கி வருகிறது. இந்த ஆட்சியில் வள்ளுவருக்கும் வள்ளலாருக்கும் திருநீறு இட்டார்கள். இப்போது பெரியார் அறிவுலகத்தை கீழ்மைப்படுத்தும் வேலையில் இறங்கியிருக்கிறார்கள். கண்ணுக்கு தெரிந்த தவெக வாயிலாக, நம் கண்களுக்கு அகப்படாதவர்கள் தமிழ்நாட்டை சூறையாடிக் கொண்டிருக்கிறார்கள்.
136
430
34
990
38,838
வெட்கங்கெட்டவனுங்க!
This quoted post is unavailable.
4
127
முத்துக்குமார் | Muthukumar 🇮🇳🇸🇪 retweeted
பெரியார் அறிவுலகத்தில் அகல் விளக்கு மற்றும் பீனிக்ஸ் பதிப்பகத்தின் போலியான நூல்களில் மட்டும் ஜூன் மாதம் என்று முத்திரை இடப்பட்டுள்ளது என்று அங்கிருக்கும் தோழர்கள் தெரிவிக்கிறார்கள். மற்ற பதிப்பக நூல்கள் மார்ச் மாத முத்திரையோடு உள்ளன. அவை சரியான விலையில் உள்ள சரியான முகவரி உள்ள பதிப்பகத்தின் நூல்கள். ஒரு தேர்வுக்குழு நூல்களைத் தேர்வு செய்து முடித்த பிறகு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் மாநில அரசின் நிர்வாகம் சென்ற பிறக்கு அகல் விளக்கை ஏற்றி இருக்கிறார்கள். இதனைக் கண்டுபிடிப்பது மிக மிக எளிது. இந்த அரசு என்ன செய்யப் போகின்றது என்று பார்ப்போம். உறுதியான நடவடிக்கைகளுக்கு அழுத்தம் கொடுப்போம். - கவிஞர் தம்பி, சீர் வாசகர் வட்டம்
16
327
12
548
23,435
முத்துக்குமார் | Muthukumar 🇮🇳🇸🇪 retweeted
திமுக ஆட்சியில் திறக்கப்பட்ட நூலகங்களுக்கு வராத பிரச்சினை, பெரியார் அறிவுலகத்திற்கு வந்திருக்கிறது அது எப்படி? இந்த குற்றத்தில் ஈடுபட்டது யார்?
57
160
10
451
10,514
Interesting 🤔
எழுத்தாளர் "திரிஷா விஜய்" அவர்கள் எழுதி அகல் விளக்கு பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட "அதிகாரத்தின் நிழலில் இந்தியாவில் துன்புறுத்தலின் அரசியல்" புத்தகம். இப்போது பெரியார் அறிவுலகு நூலகத்தில் இருக்கிறது. யாருங்க அந்த எழுத்தாளர் "திரிஷா விஜய்" மிகப்பெரிய அரசியல் ஆய்வாளரா இருப்பாரோ?
131
கழகத்தின் உயிர்ப்பு கடைக்கோடி தொண்டர்களிடமே 🖤❤️ – at Luleå, Sverige
வெறும் கொடியேந்தி நிற்பவர்களல்ல; கொள்கையேந்தி வாழ்பவர்கள்தான் தி.மு.க.வினர்! அதற்கு எடுத்துக்காட்டாகத் திகழும் மதிப்பிற்குரிய காசி அவர்களைச் சந்தித்தேன். தந்தை பெரியாரின் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு, முரசொலியைத் தனது அரசியல் பாடசாலையாக்கி, சாதி மறுப்புத் திருமணத்தை மனமுவந்து வரவேற்று, பெருமிதத்துடன் கொண்டாடிய அவரது கண்களில் கலைஞரின் சிரிப்பைக் கண்டேன்! கொள்கைகள் என்பவை மேடைகளில் பேசுவதற்கு மட்டுமல்ல; வாழ்ந்து காட்டுவதற்கும் என்பதை உணர்த்தும் இலட்சக்கணக்கான காசிகளைக் கொண்டது திராவிட முன்னேற்றக் கழகம்! உழைப்பாலும் தியாகத்தாலும் கழகத்தை வளர்த்தெடுத்த இத்தகைய தொண்டர்களின் வாழ்விலிருந்து, கழகத் தலைவரான நான் உட்பட, தலைமை முதல் கடைக்கோடித் தொண்டர் வரை, மூத்த முன்னோடிகள் முதல் புதிதாகக் களம் காணும் இளைஞர்கள் வரை, அனைவரும் கற்றுக்கொள்ள ஏராளம் இருக்கிறது! அன்புநிறை காசி அவர்களை வழியனுப்பிய பின்னும், அவருடனான உரையாடல் உள்ளத்தில் தொடர்ந்துகொண்டே இருக்கிறது… #DMKForever #Udanpirappu @krithika_writes
1
8
37
673
முத்துக்குமார் | Muthukumar 🇮🇳🇸🇪 retweeted
Indian Americans constitute barely 1.5% of the US population and roughly 1% of its eligible electorate. Their votes can certainly swing closely contested seats, but attributing a nationwide electoral verdict to this tiny demographic is quite a statistical leap. And there’s another little problem: the numbers quoted are from a pre-election survey of voting intentions, not actual votes cast. It establishes neither how people voted nor why they voted that way. Turning a small demographic’s polling preferences into a grand narrative of national revenge is quite a feat. A little electoral mathematics and an elementary understanding of polling methodology would have helped before that dramatic headline!
The Revenge of the Indian American. TRUMP COSIED UP TO PAK. BERATED INDIA AND INDIAN AMERICANS. Big mistake. They voted to punish him.
1
7
23
1,061
முத்துக்குமார் | Muthukumar 🇮🇳🇸🇪 retweeted
தெளிவாகவும் உளவியல் ரீதியாகவும் விளக்கி கூறி உள்ளார்.. 🫂 நேரம் கிடைக்கும் போது பாருங்க.. 🙏
16
774
8
2,523
67,030
அகம் தணக்கிறது! – at Luleå, Sverige
"தமிழா அறிவு கொள்! பகுத்தறிவைப் பயன்படுத்து! அறிவுதான் இறுதியில் வெல்லும்; உறுதியாய் வெல்லும்!" என்று சொன்ன பெரியாரின் #அறிவுலகம்-தான் இன்றும் என்றும் தேவை. #PeriyarArivulagam #Kovai #Library
3
42
562
இங்கே இருப்பதுல பாதிக்கு மேல இல்லை என்றால் 99% பூமர் ஆசிரியர்களாகத்தான் இருக்கிறார்கள்! இவர்களை எல்லாம் அழைத்துச்சென்று Pedagogy வகுப்பு எடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன். கைகளில் வண்ண வண்ண கயிறுகள் கட்டுவதை கண்டிப்பாக தடுக்க வேண்டும்; ஆனால் முடி வெட்டுவதை அல்ல! – at Luleå, Sverige
அமைச்சர் மாண்புமிகு ஜெகதீஸ்வரி அவர்கள்,முடியை சரியாக வெட்டி வராத மாணவர்களை மொட்டை அடித்து விடுங்கள் என்று கூறிய கருத்து விவாதமாகி இருக்கிறது.. கூறிய விதம் வேண்டுமானால் தவறாக தோன்றலாம் ஆனால் ஏதோ மாணவர் சமுதாயத்திற்கு எதிரான கருத்தை கூறிவிட்டதாக பேசத்தேவையில்லை. தோற்றத்தை வைத்து குணத்தையும் நடத்தையையும் தீர்மானிப்பது பிற்போக்குத்தனமான அணுகுமுறைதான்.தோற்றம் என்பது என்ன பல்,நிறம்,உடல் குறைபாடுகள்,கண்பார்வை,உயரம் இதுதான் தோற்றம் இதை வைத்துதான் ஒரு மாணவனை கிண்டல் செய்வதோ குணாதிசயங்களை தீர்மானிப்பது கூடாது.சிகை அலங்காரம் என்பது அப்படி அல்ல. ஒரு பள்ளியில் ஒரு ஆசிரியைக்கும் மாணவனுக்குமான தொலைபேசி உரையாடல் பதிவு வெளியாகி வைரலானது. அந்த உரையாடலில் உனது வகுப்பு தோழன் கீழ் ஜாதிடான்னு டீச்சர் சொல்லும் போது எல்லோரும் சமம் தானே டீச்சர் என்று அந்த மாணவன் பதில் கூறினான். அந்த மாணவனை நீயா நானா நிகழ்ச்சியில் கோபிநாத் அவர்கள் கலந்து கொள்ள வைத்து அவருடைய முடிவெட்டு எப்படி இருக்குது பாருங்கள் புள்ளிங்கோ கட்டிங்காகத்தான் இருக்கிறது.. ஆனால் அவனது உள்ளமோ வெள்ளை பார்த்தீர்களா என்று சிலாகித்து கூறினார். அந்த ஆசிரியைக்கும் மாணவனுக்குமான உரையாடலை அந்த ஆசிரியை மாற்றி வைக்க வேண்டும் என்பதற்காக மாணவர்கள் போட்ட திட்டம் தான் என்பது கோபிநாத் அவர்களுக்கு தெரியாது.இந்த பேச்செல்லாம் மேடை அலங்காரத்துக்கு வேண்டுமானால் நன்றாக இருக்கலாம். நன்னடத்தை என்பது சில ஒழுங்குகளில் இருந்துதான் துவங்குகிறது.ஒவ்வொரு மாணவனும் தனி மாணவனாக அவனை உற்று நோக்கும்போது சிறந்த மாணவனாக இருப்பான் அதுவே பத்து பேர் கொண்ட குழுவில் சேரும் போது அவனுடைய நடத்தை மாற்றம் நிச்சயமாக தெரியும். பதின்ம வயது குழுவில் ஒரு மாணவன் முக்கால் பேண்ட் போடும்போது,சீரற்ற சிகை அலங்காரம் செய்யும் போது,டாட்டு போடும்போது,கையில் வளையம்,காதில் வளையம் போடும் போது அந்த மாணவனை தெரிந்தோ தெரியாமலோ பலபேர் கவனிக்க துவங்குவார்கள் அதனைப் பார்த்து இதுதான் கெத்து இதுபோல நாமும் செய்ய வேண்டும். எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைக்க வேண்டும் என்று மற்ற மாணவர்களும் அதையே செய்வார்கள் பிறகு அந்த கெத்து குழு மனப்பான்மை படிப்பை தாண்டி பல்வேறு செயல்களைச் செய்யும். "கெத்து" காமிக்கிறேன் என்ற பெயரில் மாணவர்கள் செய்யும் அட்டகாசங்கள் சொல்லி மாளது. ஒரு சமுதாயம் நன்றாக இருப்பதற்கு சட்டதிட்டங்கள் கட்டுப்பாடுகள் எப்படி அவசியமோ அதுபோல ஒரு பள்ளி,மாணவ சமுதாயம் நன்றாக இருப்பதற்கு சில கட்டுப்பாடுகள் அவசியம் தான்.. இதில் உங்களுக்கு ஏதேனும் மாற்று கருத்து உண்டா??
3
271
தாத்தா இருவரும் தி.க.வில் இருந்தவர்கள். ஜவுளி வியாபாரத்திற்கு இலச்சினையும் கறுப்பு சிவப்பு வண்ணத்தில் அடித்தனர். அப்பாவுக்கு அதனுடைய முழுத் தாக்கம்! அன்று தொட்டு இன்று வரை தீபாவளி கிடையாது. நான் முழுமையாக மதம் நீங்கியதால் கண்டு கொள்வதே கிடையாது. ஆனால் இங்கே பொதுச் செயலாளர்? – at Luleå, Sverige
🔸தி.மு.க. பொதுச் செயலாளர் என்ற பொறுப்பில் உள்ள நண்பர் துரைமுருகன் இல்லத்தில் சமஸ்கிருத மந்திரங்களுடன் புரோகிதத் திருமணமா? 🔸தி.மு.க. தலைவர் தலைமையில் திருமணம் என்று அழைப்பிதழ்! 🔸தந்தை பெரியார், அண்ணா, கலைஞர் உள்ளிட்ட தலைவர்களின் படங்களும் அழைப்பிதழில்! 🔸தி.மு.க.வுக்கும், தலைவருக்கும் இழுக்கல்லவா? 🔸இரட்டை நிலை இனி தொடராமல் தி.மு.க. தலைவர் தடுத்திட வேண்டும்! தி.மு.க.வின் பொதுச்செயலாளராக சில ஆண்டுகளாகப் பதவி வகித்துவரும், முன்னாள் அமைச்சர் துரைமுருகன் அவர்களுடைய பேத்தியும், வேலூர் தொகுதி தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் கதிர்ஆனந்த் அவர்களின் மகளுமான செந்தாமரை திருமணம், மானமிகு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் நடத்தி வைப்பதாக அழைப்பிதழ் அனுப்பப்பட்டு, அத்திருமண அழைப்பிதழில் பெரியார், அண்ணா, கலைஞர், மு.க.ஸ்டாலின், அவரது துணைவியார், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் படங்களும் அச்சிடப்பட்டுள்ளன. 🔸தி.மு.க. பொதுச் செயலாளர் இல்லத்தில் சமஸ்கிருத வேத மந்திரம் முழங்க புரோகிதத் திருமணமா? 1.11.2026 அன்று காலை நடைபெற்ற ஆடம்பரத் திருமணத்தில், ‘சமஸ்கிருத வேத மந்திரம் முழங்க நடந்த துரைமுருகன் இல்லத் திருமணம்’ என்ற செய்தி இன்றைய ‘நாளேடு ஒன்றில்’ வந்திருப்பதுடன், சமூக வலைத்தளங்களையும் ஆக்கிரமித்துள்ளது. இப்படி இரட்டை நிலைப்பாட்டுடன் கொள்கைக்கு அவமதிப்பு ஏற்படுத்திய நடப்புக்காக திராவிட இயக்க தமிழர் பேரவைத் தலைவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன், டாக்டர் செந்தில்குமார் (முன்னாள் எம்.பி.) ஆகியோர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் ‘இதயம் வலிக்கிறது’ என்றும், ‘கொள்கைப் பிடிப்புள்ள ஓர் இயக்கத்தில், இப்படி நடப்பதற்கு மனம் உடன்படவில்லை’ என்றும் தமது கருத்துகளை மென்மையாக தெரிவித்துள்ளனர்! இதன்மூலமே இச்செய்தி அறிந்த நாம், பெரிதும் வேதனையும், வெட்கமும் அடைகிறோம். 🔸புரோகிதத் திருமணம் என்றால் தி.மு.க. தலைவர் தலைமையில் என்று அழைப்பிதழ் போடுவானேன்? புரோகித முறையில்தான் தங்கள் வீட்டுத் திருமணம் நடைபெறும் நிலை உள்ளது என்றால், அதற்கேன் தி.மு.க. தலைவர் தலைமையில் அவர் நடத்தி வைப்பதுபோல், திராவிட இயக்கத் தலைவர்கள் படமும் போட்ட அழைப்பிதழ் எதற்காக? அதுவும், தி.மு.க.வில் இரண்டாவது பொறுப்பில் உள்ள நமது அன்பிற்குரிய பொதுச்செயலாளர் இல்ல நிகழ்வில், தி.மு.க. தலைவருக்கும், இயக்கத்திற்கு இந்த இரட்டை செயல்முறை மூலம் இழுக்கைத் தேடித் தரலாமா? நண்பர் துரைமுருகன் சுமார் 45 ஆண்டுகளுக்குமேல் தி.மு.க.வில் உள்ளவர். நாடறிந்தவர். அவரது பொது வாழ்க்கைக்கே இது ஒரு தீராத களங்கம் அல்லவா? ஒரு குடம் பாலானால் என்ன? ஒரு துளி (ஆரிய) விஷம் பட்டால்! ‘பாலின் வெண்மையா பேசப்படும்! சற்று சிந்தித்திருக்க வேண்டாமா? தனி மனிதர்களைவிட இயக்கம் முக்கியம், இயக்கத்தைவிட கொண்ட கொள்கை, லட்சியம் மிக முக்கியம் அல்லவா? கட்டு்ப்பாடு அவற்றைவிட மிக முக்கியம். புரோகிதத் திருமணம்தான் என்றால், அதனை அறிவு நாணயத்துடன் தலைவரிடம் தெரிவித்து, அந்த வழியில் வெளிப்படையாக நடத்தியிருக்கலாமே! 75 ஆண்டுகால திராவிட முன்னேற்றக் கழகம், வெறும் அரசியல் கட்சி அல்ல; பகுத்தறிவு, சுயமரியாதைக் கொள்கைகளைச் செயல்படுத்திட, ஆட்சியைப் பயன் படுத்துவது என்ற உறுதியுடன் உருவான தனித்தன்மையான ஒன்றாகும். அறிஞர் அண்ணா, கலைஞர் போன்ற தலைவர்கள் பாதை போட்டுத் தந்த இயக்கம். 🔸சுயமரியாதைத் திருமண முறையைத் தந்தை பெரியார் அறிமுகப்படுத்தினார்; முதலமைச்சர் அண்ணா சட்ட வடிவம் கொடுத்தார் பார்ப்பனப் புரோகிதர்களை, சமஸ்கிருத மந்திரங்களைத் தவிர்த்து, சுயமரியாதைத் திருமண முறையை அறிமுகப்படுத்தியவர் தந்தை பெரியார். தாம் முதலமைச்சராகப் பொறுப்பிலிருந்த குறுகிய ஆட்சிக் காலத்திலும் அதற்குச் சட்ட அங்கீகாரம் பெற்றுத் தந்து, அதனைத் தம் முத்தான மூன்று வரலாற்றுச் சாதனைகளுள் ஒன்றாக நிறுவியவர் அறிஞர் அண்ணா. அவர்களைத் தலைவர்களாகக் கொண்ட இயக்கத்தின் பொதுச்செயலாளர் பொறுப்பில் இருப்பவர், அக்கொள்கையில் இருந்து வழுவலாமா? எனவே, இதனை திராவிடர் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது. எது கிடைக்கும், தி.மு.க.வைத் தாக்க என்று காத்திருக்கும் எதிரிகளுக்கு, இப்படிப்பட்ட செய்தி, வெறும் வாய்க்குக் கிடைத்த அவல் போன்றதுதானே? 🔸தி.மு.க. தலைவரின் கவனத்துக்கு தி.மு.க. தலைவரும், இயக்கமும் இதுபோன்ற இரட்டை நிலை நடவடிக்கைகள் இனி தொடரா வண்ணம் கவனத்துடன் பார்ப்பது – தடுப்பது மிகவும் அவசியம், அவசரம்! - கி.வீரமணி தலைவர், திராவிடர் கழகம் சென்னை 3.11.2026
3
3
1
42
951
பெருமூச்சு மட்டும் தான் விட முடிகிறது – at Luleå, Sverige
இந்த தேர்தலில் வெற்றி பெற்று திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்திருந்தால் எப்படியும் இந்த மாதத்தில் 8000 கூப்பன் வழங்கப்பட்டிருக்கும். மகளிர் உரிமைத்தொகை 2000 கொடுக்கப்பட்டிருக்கும். அதை வைத்து தீபாவளி வியாபாரம் களைகட்டி இருக்கும். தமிழ்நாடு முழுவதுமே ஒரு சிறப்பான பொருளாதார சுழற்சி ஏற்பட்டிருக்கும். நான் முதல்வன் திட்டம் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு GATE தேர்வு பயிற்சி விரிவுபடுத்தப்பட்டு தமிழ்நாட்டு மாணவர்களின் வேலைவாய்ப்பு அரசு நிறுவனங்களிலும் சரி பன்னாட்டு நிறுவனங்களிலும் சரி உறுதிப்படுத்தப்பட்டு இருக்கும். தொழில் முன்னேற்றம் ஏற்பட அறிவிக்கப்பட்ட டைடல் பார்க்குகள் வேலை துரிதப்படுத்தப்பட்டு இருக்கும்.
1
6
330
முத்துக்குமார் | Muthukumar 🇮🇳🇸🇪 retweeted
இதை விட மூட நம்பிக்கை உலகத்திலேயே கிடையாது..விஜயை வச்சு செஞ்ச மதிவதனி #vijay #cmvijay #mathivathani #kuruvi #DMK #tvk #TVKFails #DMK4TN #UdhayanidhiStalin #Stalin #MKStalin
6
204
5
470
8,555
முத்துக்குமார் | Muthukumar 🇮🇳🇸🇪 retweeted
//சமரசம் பண்ணி ஜெயிச்சானுங்கன்னா கூட பரவால்ல அதுவும் நடக்கல// 💯 தேர்தல் அரசியல்ல களத்துல சமரசம் ok ஆனா அடிப்படை கொள்கைல சமரசம் செஞ்சு நம்ம அவன மாறியே இறங்கனும் புடுங்கனும் சொல்ரவங்களுக்கு ஒன்னுதான் திருப்பி திருப்பி சொல்றேன் நம்ம அவன மாறி மாறுனா அவன்தான் ஜெயிப்பான் Dot ஒரு தேர்தல் தோல்விதான் அடைஞ்சிருக்கோம் தடுமாறாதிங்க
This //இவ்வளவு வக்கணையா இதெல்லாம் சமரசம் பண்ணி ஜெயிச்சானுங்கன்னா கூட பரவால்ல. கட்சி தலைவர் முக ஸ்டாலினை கூட அவரோட தொகுதியில ஜெயிக்க வைக்க முடியல. உங்க தொகுதிலையும் பெரிய அளவுல ஜெயிக்கவும் முடியல. போயும் போயும் இந்த கும்பல் கிட்ட தோத்துட்டு உக்காந்துட்டு மத்தவனுக்கு களப்பணி பத்தி பாடம் வேற.// Forever question 😭
59
3
185
5,056
முத்துக்குமார் | Muthukumar 🇮🇳🇸🇪 retweeted
சனாதனம் வகுத்த *பிறப்பின் அடிப்படையிலான சாதி திணிப்பு இல்லயாம் *சுயசாதி திருமணங்கள் திணிப்பு இல்லயாம் *ஒரு பார்ப்பனர் தான் மனப்பாடம் செய்த சமஸ்கிருத பாடல்களை ஒப்புவித்து, தாலி எடுத்து கொடுத்து நடத்தும் திருமண முறை திணிப்பு இல்லயாம் சுயமரியாதைத் திருமணத்தை திணிப்புங்கறாங்க. சங்கிகளை விடுங்க திராவிடம் பேசுபவர்கள் இப்படி பேசுவதற்கு வெட்கப்பட வேண்டும். இந்த அடிப்படை புரிதல் கூட இல்லாமல் தான் திராவிட அரசியல் பேசறீங்களா? விசில் சத்தம் நம் வீடுகளிலே கூட ஏன் கேட்டுச்சுனு புரியுதா?
29
30
2
134
4,167