S.Kalyanasundaram (@SKDMKTJ) header
S.Kalyanasundaram (@SKDMKTJ) profile picture

S.Kalyanasundaram - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்

Joined May 2020
Photo by S.Kalyanasundaram (@SKDMKTJ)Photo by S.Kalyanasundaram (@SKDMKTJ)Photo by S.Kalyanasundaram (@SKDMKTJ)Photo by S.Kalyanasundaram (@SKDMKTJ)Photo by S.Kalyanasundaram (@SKDMKTJ)Photo by S.Kalyanasundaram (@SKDMKTJ)Photo by S.Kalyanasundaram (@SKDMKTJ)Photo by S.Kalyanasundaram (@SKDMKTJ)Photo by S.Kalyanasundaram (@SKDMKTJ)Photo by S.Kalyanasundaram (@SKDMKTJ)
இன்று பிறந்தநாள் காணும் கழக இளைஞரணி செயலாளர், மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் திரு. @Udhaystalin அவர்களை வாழ்த்தி மகிழ்கிறோம்.🖤❤️
1
3
15
257
பெண் அதிகாரிகளுக்கே பாதுகாப்பில்லாத சூழலும், போதை கலாச்சாரத்தால் படுகொலைகளும் பெருகும்போது, டம்மி விஜய் என்ன செய்து கொண்டிருக்கிறார்? #WakeUpVijay
2
68
S.Kalyanasundaram retweeted
தங்கம் வாங்க ஆசைப்பட்ட ஏழை மக்கள், இன்று ஒரு வேளை அரிசிக்கே ஏங்கும் நிலை! நிர்வாகம் என்றால் என்னவென்றே தெரியாத மூடர் கூட்டத்தின் ஆட்சி! இந்தியாவிலேயே இல்லாத அளவுக்கு அதிக விலையாக ₹37-க்கு மின்சாரம் வாங்கும் 'சோப்ளாங்கி' அரசு! இதுதான் மக்களின் வேதனை ஆட்சி!
11
245
9
434
6,564
S.Kalyanasundaram retweeted
த.வெ.க. ஆட்சியில் வரலாறு காணாத விலைவாசி உயர்வை அம்பலப்படுத்தியதற்காக #DravidianModel ஆசிரியர் கலையரசன் அவர்கள் சட்டவிரோதமாகக் கைது: த.வெ.க. அரசின் உச்சகட்ட பாசிசம்! சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் (MIDS) உதவிப் பேராசிரியராக உள்ள முனைவர் கலையரசன் அவர்களை நேற்று அதிகாலை, சீருடை அணியாத காவலர்கள் சட்டவிரோதமாகக் கைது செய்து, வாடகை வாகனத்தில் ஏற்றிச் சென்ற செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளானேன். கைது செய்யப்பட்டவர் சாதாரண நபரோ, குற்றப் பின்னணி கொண்டவரோ இல்லை. திரு. கலையரசன் அவர்கள் தமிழ்நாட்டின் முதன்மையான ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரியும் பேராசிரியர். இந்தியாவின் தலைசிறந்த பல்கலைக்கழகமான JNU-வில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகமான கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் பதிப்பித்த "The Dravidian Model" நூலின் ஆசிரியர்களில் ஒருவர். ஒன்றிய அரசின் திட்டக்குழுவில் பொறுப்பு வகித்தவர். தமிழ்நாடு அரசின் பொருளாதார ஆய்வறிக்கையைத் தயார் செய்வதில் பங்களித்தவர். எல்லாவற்றுக்கும் மேல், தமிழ்நாடு முதலமைச்சர் தலைவராக இருக்கும் தமிழ்நாடு காலநிலை மாற்ற நிர்வாகக் குழுவின் உறுப்பினராக இப்போதும் இருப்பவர். அப்படிப்பட்டவரைத் தெரியாமல் கைது செய்துவிட்டோம் என்று கூறுவது நம்பும்படி இல்லை. செய்யாத குற்றத்திற்காக, அடிப்படை உரிமைகள் அனைத்தையும் மறுத்து, அவரது செல்போனைப் பறித்து, கைது செய்து அலைக்கழித்ததைச் சாதாரணச் செயலாக எவரும் கடந்துபோக முடியாது. குற்றவாளிகளை எல்லாம் கூத்தடிக்க விட்டுவிட்டு, கல்வியாளர்களை அச்சுறுத்திப் பார்ப்பது எவ்வளவு பெரிய அசிங்கம்? திரு. கலையரசன் அவர்கள் ஏன் கைது செய்யப்பட்டார்? Dravidian Model என்ற பதத்தை முன்வைத்து, திராவிட ஆட்சியால் தமிழ்நாடு அடைந்த வளர்ச்சியை உலகம் முழுவதும் பறைசாற்றியதற்காகவா? த.வெ.க. ஆட்சி அமைந்த பிறகுதான், தமிழ்நாடு இதுவரை சந்தித்திராத விலைவாசி உயர்வைச் சந்தித்துள்ளது என்ற உண்மையைச் சொன்னதற்காகவா? முட்டாள்களால் நிறைந்த த.வெ.க.வுக்கும் கல்விக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது அனைவரும் அறிந்ததுதான். ஆனால், கல்வியாளர்களைக் கைது செய்து மிரட்டும் அளவுக்கு அறிவின் மீது ஒவ்வாமை கொண்டவர்களாக இவர்கள் நடந்துகொள்வார்கள் என நிச்சயமாக நினைக்கவில்லை. பாசிசத்தில் பா.ஜ.க.வையும் மிஞ்சிவிடுவார்கள் என்பதைத்தான் இந்தக் கைது காட்டுகிறது. முதலமைச்சரின் ஒப்புதலோடும் உயரதிகாரிகளின் அனுமதியோடும்தான் இந்த அத்துமீறல் நடக்கிறதா? முனைவர் கலையரசன் அவர்கள் எந்தக் கட்சியையும் சார்ந்தவர் அல்ல. கடந்த ஆட்சிக்காலத்திலும், அவர் சுதந்திரமாகத் தன்னுடைய விமர்சனக் கருத்துகளை முன்வைத்திருக்கிறார். ஆனால், இந்தத் தரங்கெட்ட த.வெ.க. ஆட்சியோ, எங்கள் ஆட்சியைப் பற்றியோ நிர்வாகத் தோல்விகளைப் பற்றியோ ஊடகங்களில் உண்மையைப் பேசினால் விளைவுகள் மோசமாக இருக்கும் என்று மிரட்டும் ரவுடி அரசாகச் செயல்பட்டுள்ளது. இப்படிப்பட்ட அரசிற்கு ஆதரவு அளித்துக் கொண்டு இருக்கும் கட்சிகள், இந்த அநியாயத்தைக் கண்டும் காணாமல் இருப்பது ஏன்? இதுதான் இவர்கள் பாசிசத்தை எதிர்த்துக் கேள்வி கேட்கும் அரசியலா? புகழ்பெற்ற பேராசிரியர் மீது பொய்யான குற்றச்சாட்டைப் புனைந்து, அவரை அலைக்கழித்து, துன்புறுத்திய த.வெ.க. அரசின் பாசிச செயல் கடும் கண்டனத்துக்குரியது. தமிழ்நாடு காவல்துறையும், அதற்குப் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் அவர்களும் முனைவர் கலையரசன் அவர்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்!
173
2,687
64
5,508
273,429
சீர்குலைந்த சட்டம் ஒழுங்கு, முடங்கிப்போன நிர்வாகம், மக்களை வாட்டி வதைக்கும் விலைவாசி உயர்வு எனத் தமிழ்நாட்டைத் துயரத்தில் தள்ளிவிட்டு, பொறுப்பின்றி உறங்கிக் கொண்டிருக்கும் த.வெ.க. அரசைத் தட்டி எழுப்ப வேண்டிய நேரம் இது! மக்களின் வேதனை, நாளை @DMKWomensWing நடத்தவுள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் உரிமைக் குரலாக ஓங்கி ஒலிக்கட்டும்! மக்கள் விரோத த.வெ.க. அரசுக்குப் பாடம் புகட்டுவோம்!
சொந்த புத்தியும் இல்லாமல், சொல் புத்தியும் இல்லாமல் சட்டம்-ஒழுங்கைச் சீரழித்துவிட்ட சோப்ளாங்கி த.வெ.க. அரசு! நாளை @DMKWomensWing நடத்தவுள்ள ஆர்ப்பாட்டம், தறிகெட்டு ஓடும் த.வெ.க. அரசுக்கான Wake-up call! முதலமைச்சரையும் தூங்கி வழியும் ஆட்சி நிர்வாகத்தையும் எழுப்ப முயற்சிப்போம்! ஆளத் தெரியாத அரசுக்குப் பாடம் புகட்டுவோம்! #TVKfails
75
416
10
1,227
23,830
S.Kalyanasundaram retweeted
வரலாறாய் வாழ்ந்து, வீரத்துக்கும் தியாகத்துக்கும் எடுத்துக்காட்டாக நிலைத்து நிற்கும் பசும்பொன் திருமகனாரைப் போற்றுகிறேன்! 🔷 விடுதலைப் போரில் நேதாஜியுடன் இணைந்து செயலாற்றிய தீரர்! 🔷 குற்றப் பரம்பரைச் சட்டத்தை எதிர்த்து, பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் உரிமைகளுக்காகப் போராடிய போராளி! 🔷 உழவர்களின் நலனுக்காகவும் தொழிலாளர்களின் உரிமைகளுக்காகவும் சங்கங்களை நிறுவியவர்; போராடிச் சிறை சென்ற தியாகி! 🔷 சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் மக்களுக்காகக் குரல் கொடுத்த மாண்பாளர்! “பத்தரை மாற்றுத் தங்கம்! பசும்பொன் சிங்கம்!” என்று மக்களால் போற்றப்பட்ட பசும்பொன் திருமகனாரின் புகழ் வாழ்க!
72
761
17
2,686
83,165
அடக்குமுறைக்கு எக்காலமும் அஞ்சாமல், திராவிடக் கொள்கைகளால் கூர்தீட்டப்பட்ட ஜனநாயகக் குரலாய் ஒலித்த திரு. முரசொலி செல்வம் அவர்களின் நினைவு நாள் இன்று. அண்ணாரின் புகழை போற்றி வணங்குவோம்.🙏
4
5
522
S.Kalyanasundaram retweeted
100 நாள் சாதனை என இந்த அரசு பெருமை பேசும் இதே நேரத்தில், தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு இந்த 100 நாளில் எந்த அளவுக்கு மோசமாகியிருக்கிறது என்பதற்கு இந்தச் சம்பவங்களே சாட்சி. மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர் திரு @Udhaystalin அவர்கள் #நாசமாகும்தமிழ்நாடு
12
391
26
695
11,812
S.Kalyanasundaram retweeted
கழகத்துக்கும் தலைவர் கலைஞருக்கும் தன் இறுதிமூச்சு வரை உண்மையாக இருந்த களங்கமில்லாத திராவிடத் தீரர் முரசொலி மாறன் அவர்களின் பிறந்தநாளில் அவரது பங்களிப்புகளைப் போற்றி வணங்குகிறேன். அண்ணாவின் தம்பியாக அவர் ஆற்றிய உரைகளும் எழுதிய நூல்களும் நம் இயக்கத்தின் இளைய தலைமுறையினர் ஒவ்வொருவரும் பயின்றாக வேண்டிய பாடப்புத்தகங்கள். ஓர் எளிய தஞ்சை டெல்டா மைந்தன் டெல்லி வரை சென்று தடம் பதித்தார். பின்பு தோகா வரை சென்று இந்தியா மட்டுமில்லாமல், உலகின் வளரும் நாடுகள் அனைத்துக்காகவும் வாதாடினார். எத்தனை உயரம் சென்றாலும் அந்தப் புகழை எல்லாம் கலைஞருக்கே காணிக்கையாக்கிய #முரசொலிமாறன் அவர்களின் புகழ் வாழிய வாழியவே!
45
728
8
2,408
81,101
தலைவர் கலைஞர் அவர்களின் மனசாட்சி திரு. முரசொலி மாறன் அவர்களின் 93-வது பிறந்தநாளில் அண்ணாரின் புகழை போற்றி வணங்குகிறேன். #MurasoliMaran93
2
2
153
Shri S Kalyanasundaram (@SKDMKTJ), Hon'ble MP (RS), calls on Smt @nsitharaman at Parliament House.
1
12
1
95
9,512
S.Kalyanasundaram retweeted
சென்னை திருவொற்றியூரில் போதைப்பொருள் புழக்கத்தைத் தட்டிக்கேட்டதால், அரசுப்பள்ளியில் +2 படித்து வந்த மாணவர் தனுஷ், 30 பேர் கொண்ட கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. கோவையில் போதை கும்பலை தட்டிக் கேட்டதற்காக கல்லூரி மாணவர் அமுதன் கொலை செய்யப்பட்ட, அடுத்த சில தினங்களில் சென்னையிலும் இத்தகைய கொடூரம் நடந்திருக்கிறது. சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் இந்த அரசு எந்த அளவுக்கு தோற்றுக் கொண்டிருக்கிறது என்பதற்கு தமிழ்நாட்டிலே தொடரும் கொலைகளே சாட்சி. போதைப் பொருள் பயன்படுத்துவதையோ – விற்பதையோ அம்பலப்படுத்தினால், அவர்கள் கொலை செய்யப்படுவார்கள் என்பது, ஒட்டுமொத்த சமூகத்திற்கும் விடப்படும் எச்சரிக்கை. நிர்வாகத்திறனற்ற இந்த கோமாளி சர்க்காரை கண்டு சமூக விரோதிகளுக்குத் துளியும் பயமில்லை என்பதே இதற்கு காரணம். குறிப்பாக, பள்ளிகளில் – கல்லூரிகளில் இத்தகைய சம்பவங்கள் நடப்பதை அரசு கண்டும் காணாமல் வாயை மூடிக் கொண்டு இருப்பது வெட்கக்கேடு. மாணவர் தனுஷ் கொலை வழக்கில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும். இத்தகைய தொடர் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி கல்லூரிகளில் போதைப் பொருள் பயன்பாடு இருக்கிறதா? அதற்கு என்ன காரணம்? இதன் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதை எல்லாம் உரிய முறையில் விசாரித்து இந்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், வன்முறை எதற்கும் தீர்வல்ல என்பதை உணர்த்தும் வகையில் மாணவர்கள் மத்தியில் Counselling வழங்கி போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். #சட்டம்_ஒழுங்கு
107
1,349
18
2,817
156,682
23-06-26 கழகத் தலைவர் மாண்புமிகு @mkstalin அவர்களை மாநிலங்களவை உறுப்பினர் கழக சட்டத்திட்ட திருத்த குழு தலைவர் திரு @SKDMKTJ அவர்கள் மரியாதை நிமித்தம் சந்தித்தபோது.
1
3
460
Thanks for your warm wishes sir...!
Warm birthday greeting to Rajya Sabha MP from Tamil Nadu, Thiru @SKDMKTJ. Wishing you a long, healthy, and fulfilling life.
1
1
299
Thanks for your warm wishes sir...!
Tamil Nadu से राज्यसभा सांसद, मेरे साथी आदरणीय श्री @SKDMKTJ जी को जन्मदिन की हार्दिक शुभकामनाएँ! प्रभु से प्रार्थना है कि आप स्वस्थ एवं प्रसन्नचित रहें और राष्ट्र निर्माण एवं समाज सेवा में अपना अमूल्य योगदान देते रहें।
230
அன்புச் சகோதரர் அவர்களின் அன்பான வாழ்த்துகளுக்கு நன்றி.
இன்று பிறந்தநாள் காணும் கழக சட்டத்திட்ட திருத்தக்குழுத் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அருமை அண்ணன் திரு@SKDMKTJ அவர்களுக்கு இனிய நல்வாழ்த்துகள்!
1
1
3
271
Thanks for your warm wishes sir...!
Warm birthday wishes to Shri S. Kalyanasundaram ji, Rajya Sabha MP from Tamil Nadu. Prayers for your good health and prosperity. தமிழ்நாட்டின், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு S. கல்யாணசுந்தரம் எம்.பி. அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். தாங்கள் நல்ல உடல் நலமும், நீண்ட ஆயுளும் பெற பிரார்த்தனை செய்கிறேன். @SKDMKTJ
1
172
தஞ்சை மாவட்டத்திற்கு உட்பட்ட திமுக முன்னாள் இந்நாள் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர் திருமதி ரேவதி இ.ஆ.ப அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தோம். தஞ்சை மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய அத்தியாவசிய பணிகள் குறித்து கோரிக்கை விடுத்தோம்.
2
200
“நவீன தமிழகத்தின் சிற்பி” முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 103- வது பிறந்தநாளை முன்னிட்டு, வலையப்பேட்டை மாங்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கலைஞர் கோட்டத்தில், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் திருவுருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம். #கலைஞர்103
1
98
S.Kalyanasundaram retweeted
தலைவரின் பிறந்தநாள்! தமிழினத் தலைவரின் பிறந்தநாள்!! மூப்படைந்து சக்கர நாற்காலியில் உட்கார்ந்த பின்பும் ஓய்வின்றி, தனது இறுதி மூச்சுவரை, தமிழினத்திற்காக - தமிழ்நாட்டு மக்களின் உயர்வுக்காக உழைத்திட்ட உன்னதத் தலைவர்! என்னை என்றும் இயக்கும் தலைவர் கலைஞர் அவர்களே… வெற்றியைத் தலையிலும், தோல்வியை நெஞ்சிலும் ஏற்றாமல், சோதனைக் கடல்களைச் சோர்வின்றி நீந்திக் கடந்த உங்களது ஆற்றல் என்னிடமும் இருக்கிறது. நீங்கள் நிறைந்தபோது, உங்களின் ஆற்றலை வேண்டினேன். அந்த ஆற்றலோடு தொடர் வெற்றிகளைப் பெற்று, தமிழ்நாட்டை வரலாறு போற்றும் முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்றோம். இப்போது, வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறோம். எனினும் உங்களது ஆற்றல், என்னோடு மட்டுமல்ல, நீங்கள் உணர்வூட்டி வளர்த்தெடுத்த ஒவ்வொரு உடன்பிறப்பிடமும் இருக்கிறது. உறுதியாய்ச் சொல்கிறோம்… மீண்டும் வெற்றிச் சரிதத்தை எழுதுவோம்! உதயசூரியனின் ஒளியால் தமிழ்நாட்டைச் சூழ்ந்து வரும் இருளை விரட்டியடிப்போம்! #KalaignarForever
286
3,436
129
9,267
115,863