Sakthi (@SakthiCongress) header
Sakthi (@SakthiCongress) profile picture

State Coordinator - @TNCCITSMDept

Joined July 2018
Photo by Sakthi (@SakthiCongress)Photo by Sakthi (@SakthiCongress)Photo by Sakthi (@SakthiCongress)Photo by Sakthi (@SakthiCongress)Photo by Sakthi (@SakthiCongress)Photo by Sakthi (@SakthiCongress)Photo by Sakthi (@SakthiCongress)Photo by Sakthi (@SakthiCongress)Photo by Sakthi (@SakthiCongress)Photo by Sakthi (@SakthiCongress)
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திரு. ப. மாணிக்கம் தாகூர் எம்.பி. அவர்கள் தலைமையில், வட சென்னை மேற்கு, புதுக்கோட்டை தெற்கு, திருவள்ளூர் வடக்கு, தென் சென்னை மத்திய மாவட்டங்களின் மாவட்டப் பார்வையாளர்கள் மற்றும் மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவர்களுடனான மாவட்ட அமைப்பு மறுசீரமைப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் திரு. பீட்டர் அல்போன்ஸ், நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சசிகாந்த் செந்தில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கே. ஜெயக்குமார், மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் திரு. சிரஞ்சீவி, திரு. எஸ்.டி. நெடுஞ்செழியன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், கட்சி அமைப்பை மறுசீரமைக்கும் பணிகளைத் திறம்பட ஒருங்கிணைப்பது மற்றும் மாவட்ட அளவில் கட்சியின் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக ஆலோசனைகள் வழங்கப்பட்டன. #TNCongress @s_kanth
2
13
1
22
1,180
பெரியார் நூலகமா? ஊழல் கணக்குப் புத்தகமா? புத்தகங்கள் அறிவைப் பெருக்க வேண்டும்… ஆனால் புத்தகங்கள் வாங்குவதிலேயே ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தால், அது தமிழ்நாட்டிற்கே தலைகுனிவு!
🤖 Made with AI
1
6
11
253
தமிழ்நாடு காங்கிரஸ் SC துறைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள திரு. ஆர். செந்தமிழ்ச்செல்வன் மற்றும் செயல் தலைவர்களாக நியமிக்கப்பட்டவர்கள் இன்று தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திரு. மாணிக்கம் தாகூர் அவர்கள் தலைமையில் நடந்த விழாவில் பதவியேற்றனர். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர்கள், பாராளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகளுடன் கலந்து கொண்டு எனது வாழ்த்துக்களை தெரிவித்தேன்.
7
25
51
1,614
Super !!!
'Teleprompter Nirbhar' Modi 🙃
4
9
16
304
எங்கே போனது அந்த 56 அங்குல மார்பு? 😏 @BJP4TamilNadu @NainarBJP
🤖 Made with AI
7
8
176
புதியதாகப் பொறுப்பேற்றிருக்கும் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்! 💐 வாருங்கள், அனைவரும் ஒன்றிணைந்து பயணிப்போம். ஒற்றுமையுடன் இணைந்து பணியாற்றி, நமது இலக்குகளை அடைவோ
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு மல்லிகார்ஜூன் கார்கே, அன்னை சோனியா காந்தி, அன்பு தலைவர் திரு ராகுல் காந்தி ஆகியோரின் நல்லாசியோடும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி - சமூக ஊடக துறையின் தலைவர் திருமதி. சுப்ரியா ஷ்ரினேட் அவர்களின் அனுமதியோடும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு மாணிக்கம் தாகூர் ப MP அவர்களின் ஒப்புதலோடும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளவர்களை தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக துறையின் கீழ் கண்ட பதவிகளுக்கு நியமிக்கப்படுகிறார்கள். #TNCongress #TNCCITSM
5
9
16
353
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திரு. ப. மாணிக்கம் தாகூர் எம்.பி. அவர்கள் தலைமையில், திருச்சி வடக்கு, விருதுநகர் மேற்கு, நாகர்கோவில் மாநகராட்சி மாவட்டங்களின் மாவட்டப் பார்வையாளர்கள் மற்றும் மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவர்களுடனான மாவட்ட அமைப்பு மறுசீரமைப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் திரு. பீட்டர் அல்போன்ஸ், மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் திரு. வி.ஆர். சிவராமன், திரு. எஸ்.டி. நெடுஞ்செழியன், மாண்புமிகு சுற்றுலாத் துறை அமைச்சர் திரு. செ. ராஜேஷ்குமார், நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு. ராபர்ட் புரூஸ், திரு. விஜய் வசந்த் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், கட்சி அமைப்பை மறுசீரமைக்கும் பணிகளைத் திறம்பட ஒருங்கிணைப்பது மற்றும் மாவட்ட அளவில் கட்சியின் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக ஆலோசனைகள் வழங்கப்பட்டன. #TNCongress
18
33
947
Live தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி SC துறைத் தலைவர் மற்றும் செயல் தலைவர்கள் பதவியேற்கும் நிகழ்ச்சி nitter.cf/i/broadcasts/2nQByAZzm…
1
14
18
1,083
தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி. துறைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள திரு. ஆர். செந்தமிழ்ச்செல்வன், செயல் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ள திரு. ஆர். கலைச்செல்வன், திரு. பி.வி. தமிழ்செல்வன், திரு. வி. சரவணகாந்தி, திரு. ஜெ.எஸ். ஆறுமுகம் ஆகியோர் இன்று (5.11.2026) வியாழக்கிழமை காலை 11.00 மணியளவில், சென்னை சத்தியமூர்த்தி பவனில் பதவியேற்றனர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்கள் திரு. கே.வி. தங்கபாலு, திரு. சு. திருநாவுக்கரசர், மாண்புமிகு சுற்றுலாத் துறை அமைச்சர் திரு. செ. ராஜேஷ்குமார், நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு. எஸ். சசிகாந்த் செந்தில், திரு. ராபர்ட் புரூஸ், திரு. விஜய் வசந்த், சட்டமன்ற உறுப்பினர் திரு. டி.டி. பிரவீன், தமிழ்நாடு காங்கிரஸ் பொருளாளர் திரு. ரூபி மனோகரன், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் திரு. ஆ. கோபண்ணா, திரு. ஜி.ஜி. பிரின்ஸ், எஸ்.சி. துறை முன்னாள் தலைவர் திரு. எம்.பி. ரஞ்சன்குமார் மற்றும் மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், சர்க்கிள் மற்றும் வட்டத் தலைவர்கள், அவர்களது நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் அனைத்து நிலைப் பிரதிநிதிகள், முன்னணி அமைப்புகள், துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள், அவர்களது நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனோம் . #TNCongress
5
42
89
1,859
மைக் தயார்… மோடி ஜி, நீங்கள் தயாரா? விவாத மேடை தயாராகிவிட்டது! கேள்விகள் காத்திருக்கின்றன! மக்களின் குரல் ஒலிக்கத் தயாராக இருக்கிறது! மோடி ஜி, விவாதத்தை எதிர்கொள்ளத் தயாரா? #ModiJi #Debate #RahulGandhi #மோடிஜி_விவாதத்திற்கு_வாருங்கள்
🤖 Made with AI
2
6
1
12
337
गोकुल में दूध उत्पादकों ने भाजपा को हरा दिया। तो भाजपा ने चुनाव के बाद नियम बदल दिए - 4 डायरेक्टर ठूँसो, 12 को 16 बनाओ, बहुमत चुराओ। ये दूध उत्पादकों के वोट की चोरी है - जनादेश में मिलावट। भाजपा इतनी हताश हो चुकी है कि हर जगह सत्ता बचाने के लिए किसी भी हद तक जा रही है। दूध उत्पादकों का वोट चुराने वाले याद रखें - किसान भूलता नहीं।
The Maharashtra government is brazenly attempting to subvert the democratic mandate of milk producers at the Gokul Milk Federation by using legislative changes to manipulate the composition of an elected board. In the 19 October elections, the Congress-led panel won 13 of 25 seats, securing a majority over the Mahayuti’s 12. After Mahayuti-backed directors stalled the chairman’s election by remaining absent, the Bombay High Court directed a fresh election on 10 November. Instead of allowing the elected board to function, the state Cabinet has approved a proposal to nominate four government directors with voting rights, potentially altering the electoral arithmetic and overturning the mandate of milk producers. The larger question is whether a government can change the rules after an election simply because it does not like the result. We are challenging this decision in the Supreme Court to defend the democratic mandate and the autonomy of cooperative institutions.
721
8,768
210
30,029
933,498
பாராளுமன்றத்துக்கு வரவே பயமா? ராகுல் காந்தி வந்துவிடுவாரோ என்ற பயத்தில் மோடியும் அமித் ஷாவும் பாராளுமன்றத்தையே மறந்துவிட்டார்களா? யாருக்கு பயம்? யார் ஓட்டம்? 🔥 #RahulGandhi #Parliament #Modi #AmitShah
🤖 Made with AI
தன்னைத்தானே அசிங்கப்படுத்திக்கொள்ள முன்கூட்டியே அறிவிப்பு விடும் கலையை @rahulgandhi அவர்களிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும்!
2
8
223
Soon this going to happen in India
2026 US midterm election results
166
வாக்காளர் பட்டியலில் ‘3 கோடி ஊடுருவல்காரர்கள்’ நீக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய உள்துறை அமைச்சர் @AmitShah கூறிவரும் பொய்ப் பிரச்சாரம் அம்பலமாகியுள்ளது. ஏறத்தாழ 10 கோடி வாக்காளர்கள் தீவிரத் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டு, பல்வேறு மாநிலங்களின் தலைமைத் தேர்தல் அதிகாரிகள் அளித்த உத்தியோகபூர்வ தரவுகளின்படி கண்டறியப்பட்ட சந்தேகத்திற்குரிய வெளிநாட்டினரின் எண்ணிக்கை வெறும் 1,600 மட்டுமே! தேர்தல் ஆணையத்தின் இந்த அதிகாரப்பூர்வ உண்மையை அப்பட்டமாக மறைத்துவிட்டு, 3 கோடி பேர் ஊடுருவல்காரர்கள் என்று அமித் ஷா அவர்கள் கட்டவிழ்த்துவிட்டுள்ள அபாண்டமான அவதூறு இந்திய ஜனநாயகத்தின் மீதான நேரடித் தாக்குதலாகும். அமித் ஷா குறிப்பிடும் இந்த ‘3 கோடி ஊடுருவல்காரர்கள்’ எப்போதிருந்து இந்தியாவில் வசிக்கிறார்கள், எந்தத் தேர்தல்களிலிருந்து வாக்களித்து வருகிறார்கள் என்பதை உள்துறை அமைச்சர் நாட்டுக்கு விளக்கத் தயாரா? ஒருவேளை இவர்கள் SIR நடைமுறைக்கு முன்பிருந்த தேர்தல்களில் வாக்களித்திருந்தால், கடந்த 2014, 2019 மற்றும் 2024 ஆகிய பொதுத்தேர்தல்களின் முடிவுகளும், அந்தத் தேர்தல்கள் மூலம் அமைந்த மோடி தலைமையிலான ஒன்றிய அரசுகளும் சட்டபூர்வமானவைதானா என்ற அடிப்படைக் கேள்வியை எழுப்புகிறேன். 2014 முதல் மத்தியில் பாஜகதான் ஆட்சியில் இருக்கிறது; 2019 முதல் நாட்டின் எல்லைப் பாதுகாப்பிற்கும் உள்நாட்டுப் பாதுகாப்புக்கும் உள்துறை அமைச்சராக அமித் ஷாவும், ஆளும் ஒன்றிய பாஜக அரசும்தான் முழுமுதற் பொறுப்பேற்க வேண்டும். பத்தாண்டுகளுக்கும் மேலாக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துகொண்டு நாட்டின் எல்லைகளையும் தேர்தல் கட்டமைப்புகளையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தீர்களா? இந்த 3 கோடி ஊடுருவல் என்பது உங்களது இமாலய நிர்வாகத் தோல்வியா அல்லது வரவிருக்கும் தேர்தல் தோல்வி பயத்தில் புனையப்படும் அப்பட்டமான பொய்க் கதையா? உண்மையில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட அதிகாரப்பூர்வ பதில்களில், கர்நாடகா, ஜார்க்கண்ட், மேகாலயா, கேரளா, கோவா, மிசோரம் என ஆய்வு செய்யப்பட்ட மாநிலங்களின் தலைமைத் தேர்தல் அதிகாரிகள் உறுதிப்படுத்தியிருப்பது வெறும் 1,600 பேர் மட்டுமே 'சந்தேகத்திற்குரிய வெளிநாட்டினர்' என்பதுதான். நவம்பர் 1 அன்று நடைபெற்ற INDIA கூட்டணிப் பேரணியில் திரண்ட லட்சக்கணக்கான மக்களின் பெருங்கடலைக் கண்டு பாஜக தலைமை நிலைகுலைந்து போயிருக்கிறது. மக்களின் இந்த மாபெரும் சமூகநீதி மற்றும் ஜனநாயக எழுச்சிக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் திணறிப்போய், மக்களின் கவனத்தைத் திசைதிருப்புவதற்காகவே இத்தகைய நச்சுப் பொய்களை அமித் ஷா அள்ளி வீசி வருகிறார். வெறும் வாய்ச்சவடால் பேசி மடைமாற்றப் பார்க்காமல், எதிர்க்கட்சிகளும் மக்களும் எழுப்பும் இந்த நியாயமான கேள்விகளுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா பதில் சொல்ல வேண்டும். #TNCongress
7
34
1
57
2,138
सिंहासन ख़ाली करो कि जनता आती है 🔥🇮🇳 📍रामलीला मैदान, नई दिल्ली
3,909
3,645
390
18,949
269,136
முதுநிலை மருத்துவக் கலந்தாய்வில் கோடிகளில் கட்டணம் செலுத்தும் EWS விண்ணப்பதாரர்கள்: சமூக நீதியைச் சூறையாடும் பாஜக-ஆர்.எஸ்.எஸ்-ன் போலிச் சான்றிதழ் முறைகேடுகள் குறித்து சிறப்புப் புலனாய்வு விசாரணை நடத்த வேண்டும்! மோடி–அமித் ஷா தலைமையிலான பாஜக அரசில் சமூக நீதி எத்தகைய மோசடிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது என்பதற்கு முதுநிலை மருத்துவக் கலந்தாய்வில் தொடர்ந்து அரங்கேறும் EWS சான்றிதழ் முறைகேடுகளே நேரடிச் சான்றாகும். கடந்த 2025-ஆம் ஆண்டில், ஆண்டு வருமானம் ₹8 லட்சத்திற்குள் இருப்பதாகக் கூறி EWS சான்றிதழ் பெற்ற சுமார் 140 விண்ணப்பதாரர்கள், ஆண்டுக்கு ₹48.5 லட்சம் முதல் ₹62.5 லட்சம் வரை கட்டணம் கொண்ட தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ₹1 கோடிக்கும் அதிகமான கட்டணப் படிப்புகளைப் பெற்றது அம்பலமானது. அந்தப் பகிரங்க முறைகேட்டின் மீது எந்தவித உறுதியான நடவடிக்கையோ கடுமையான தணிக்கையோ எடுக்காமல் ஒன்றிய பாஜக அரசு மெத்தனமாக வேடிக்கை பார்த்ததன் விளைவாக, இப்போது 2026-ஆம் ஆண்டிலும் 100-க்கும் மேற்பட்ட EWS சான்றிதழ் வைத்திருப்பவர்கள் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ₹1.8 கோடி முதல் ₹2.1 கோடி வரையிலும், சில இடங்களில் ₹4 கோடி வரையிலும் செலவழித்து சுயநிதி இடங்களை வெளிப்படையாகவே கைப்பற்றியுள்ளனர். குடும்பத்தின் ஆண்டு மொத்த வருமானம் ₹8 லட்சத்திற்குள் இருப்பதாக அரசு அலுவலகங்களில் சான்றிதழ் பெறும் ஒருவரால், பல கோடி ரூபாய் கட்டணம் செலுத்த முடிகிறது என்றால், மோடி–அமித் ஷா ஆட்சியில் EWS வருமானச் சான்றிதழ்கள் எவ்வித சரிபார்ப்புமின்றி விநியோகிக்கப்படுகின்றன என்ற உண்மை வெட்டவெளிச்சமாகியுள்ளது. நவி மும்பை டி.ஒய். பாட்டீல் மருத்துவக் கல்லூரியில் மகளிர் மருத்துவப் பிரிவு (MS Ob-Gyn) இடமும், பெங்களூரு ராஜராஜேஸ்வரி கல்லூரியில் ரேடியோ-டயக்னாசிஸ் (MD Radio-diagnosis) இடமும் முறையே ₹2 கோடி மற்றும் ₹1.8 கோடி கட்டணத்தில் 70,000-க்கும் அதிகமான தரவரிசை பெற்ற EWS விண்ணப்பதாரர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. தகுதியுள்ள ஏழை எளிய மாணவர்களுக்குக் கிடைக்க வேண்டிய சமூகப் பாதுகாப்பைப் பணம்படைத்தவர்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, முறைகேடாகப் பெற்ற சான்றிதழ்களின் மூலம் உயர் மருத்துவ இடங்களைக் கைப்பற்றுவதை ஒன்றிய அரசு அனுமதிப்பது நிர்வாகத் தோல்வியின் உச்சமாகும். இது விளிம்புநிலை ஏழை மக்களுக்கான இடஒதுக்கீடாகச் செயல்படாமல், பாஜக அரசின் நிர்வாகக் கண்மூடித்தனத்தால் பெருஞ்செல்வந்தர்கள் சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி ஏழைகளின் உரிமைகளைப் பறிக்கும் திட்டமிட்ட மோசடியாக மாறியுள்ளது. முறையான கள ஆய்வோ நிதித் தணிக்கையோ இன்றி போலி EWS சான்றிதழ்களை அள்ளித் தரும் இந்த முறைகேட்டு வலையமைப்பை முறியடிக்க ஒன்றிய அரசு இதுவரை எந்தத் துணிச்சலான நடவடிக்கையையும் எடுக்கவில்லை. அதிகார வர்க்கத்தின் ஆசியோடு பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான மருத்துவ இடங்கள் போலிச் சான்றிதழ்கள் மூலம் கொள்ளையடிக்கப்பட்டு வரும் இந்த மாபெரும் கல்வி ஊழலின் பின்னணியில் மோடி–அமித் ஷா அரசின் அரசியல் ஆதரவும் நிர்வாகத் தோல்வியுமே ஆணிவேராக உள்ளன. எனவே, நாடு தழுவிய அளவில் அரங்கேறி வரும் இந்த மெகா EWS சான்றிதழ் முறைகேடுகள் மற்றும் பல கோடி ரூபாய் கொள்ளை குறித்து உடனடியாகச் சிறப்புப் புலனாய்வு விசாரணைக்கு மோடி–அமித் ஷா அரசு உத்தரவிட வேண்டும். வருமான உச்சவரம்பு மற்றும் சொத்து விபரங்களை வெளிப்படைத்தன்மையுடன் தீவிரமாகத் தணிக்கை செய்து, மோடி–அமித் ஷா அரசு உத்தரவிட வேண்டும். வருமான உச்சவரம்பு மற்றும் சொத்து விபரங்களை வெளிப்படைத்தன்மையுடன் தீவிரமாகத் தணிக்கை செய்து, பணபலத்தாலும் போலிச் சான்றிதழ்களாலும் அபகரிக்கப்பட்ட அனைத்து மருத்துவ இடங்களையும் உடனடியாகப் பறிமுதல் செய்ய வேண்டும்; மோடி–அமித் ஷா அரசின் அரசியல் ஆசியோடும் அதிகாரத்தின் துணையோடும் ஏழை மாணவர்களின் எதிர்காலத்தைக் கொள்ளையடிக்கும் பாஜக–ஆர்.எஸ்.எஸ் நிழல் மாபியாக்கள் மற்றும் அவர்களுக்குத் துணைபோகும் அதிகாரிகள் மீது கடும் குற்றவியல் நடவடிக்கை எடுப்பதோடு, பறிக்கப்பட்ட அந்த இடங்களை தகுதியுள்ள ஏழை எளிய மாணவர்களுக்கே உரிய முறையில் மறுஒதுக்கீடு செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன். #TNCongress #EWSLoot
1
34
62
2,025
Sakthi retweeted
When democracy is under attack, silence is not an option.
300
4,467
74
17,504
205,508
What bro !!! It's very wrong Bro @ECISVEEP
5
10
332