@TThenarasu

Member of the Legislative Assembly - Tiruchuli | Belongs to the Dravidian stock

Chennai
Joined January 2013
இன்று விருதுநகர் வடக்கு மாவட்டச் செயற்குழு கூட்டம், மாவட்டக் கழக நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர கழக செயலாளர், மாநகர மேயர், ஒன்றிய, நகர, பகுதி மற்றும் பேரூர்க் கழகச் செயலாளர்கள், நகராட்சித் தலைவர் மற்றும் அணிகளின் அமைப்பாளர்கள் ஆகியோரின் பங்கேற்புடன் நடைபெற்றது. கழகத் தலைவர் அவர்களின் அறிவுரைப்படி, கழக மறுசீரமைப்புப் பணிகள் குறித்து கழக நிர்வாகிகளுடன் இல்கூட்டத்தில் கலந்துரையாடி அவர்களின் ஒப்புதலைப் பெற்றோம். இக்கூட்டத்தில், விருதுநகர் மாவட்டத்திற்குரிய தலைமைக் கழகப் பிரதிநிதிகளான தம்பி திரு. கலை கதிரவன் எம்.எல்.ஏ. மற்றும் தம்பி திரு. இன்பா ரகு ஆகியோர் பங்கேற்று சிறப்புரை ஆற்றினர். @mkstalin @Dr_KalaiKathir @Inba_AN_Ragu
24
1
109
1,984
தமிழர் நாகரிகத்தின் தொன்மையையும் பெருமையையும் பறைசாற்றும் ஆதிச்சநல்லூரின் விலைமதிப்பற்ற தொல்லியல் சான்றுகள் மழைநீரால் சேதமடையும் நிலையில் இருப்பது வாடிக்கையாகி விட்டது. இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் உள்ள ஒன்றிய பாஜக அரசும், இந்திய தொல்லியல் அளவீட்டுத் துறையும் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு நிலுவையில் உள்ள கட்டுமானப் பணிகளை விரைந்து முடித்து, ஆதிச்சநல்லூரின் தொன்மையான வரலாற்றுச் சான்றுகளைப் பாதுகாக்க வேண்டும். தமிழர் வரலாற்றைப் பாதுகாப்பதில் இத்தகைய அலட்சியம் இனியும் தொடரக்கூடாது!
7
201
2
479
6,136
தாராபுரம்,மதுராந்தகம் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்ட கழக வேட்பாளர்களை ஆதரித்து வாக்களித்த அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். வெற்றிவாய்ப்பை இழந்தாலும் கழக நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும், கூட்டணிக் கட்சியினரும் ஆற்றிய கடும் உழைப்பு எதிரணியினரைத் திணறடித்தது என்பதை யாராலும் மறுக்க முடியாது. குறிப்பாக தாராபுரம் தொகுதியில், விருதுநகர் மாவட்டக் கழகத்திற்காக ஒதுக்கப்பட்ட அலங்கியம் ஊராட்சியில் கடும் உழைப்பைச் செலுத்திய கழக நிர்வாகிகளுக்கும், பரப்புரைகளின்போது அன்பையும் ஆதரவையும் அள்ளித் தந்த வாக்காளப் பெருமக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி. தோல்விகளால் ஒருநாளும் நமது ஆற்றல் வீழ்ந்ததில்லை; தமிழ்நாட்டிற்கான உரிமைப் போராட்டத்தில் நமது பணியும் ஓய்ந்ததில்லை. நமது ஆருயிர்த் தலைவர் அவர்களின் வழியில் கொள்கைப் பயணத்தைத் தொடர்வோம், தமிழ்நாட்டின் உரிமைகளைக் காப்போம்!
11
210
4
861
8,860
ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி உரிமைக்காகவும், சமூகச் சமத்துவத்திற்காகவும் தன் உயிரையே ஈந்த விடுதலைப் போராட்ட வீரர், தியாகி இமானுவேல் சேகரனார் அவர்களின் பிறந்தநாள் இன்று! அவரை நினைவு கூர்ந்து அடிமைத் தளைகளை அறுத்தெறிந்து சமத்துவ சமுதாயம் படைக்க உறுதியேற்போம்!
4
59
1
312
4,286
பெண்களுக்கான 'தோழி விடுதிகள்' உலக வங்கியின் பாராட்டைப் பெறுகிறது; விளிம்புநிலை பழங்குடியின மாணவர்கள் நாட்டின் தலைசிறந்த உயர்கல்வி நிறுவனங்களில் தடம் பதிக்கிறார்கள்! கழக ஆட்சியில் தலைவர் தளபதியார் அவர்கள் விதைத்த திராவிட மாடல் நல்விளைச்சல்கள் இன்றும் சர்வதேச அளவில் போற்றப்படுகின்றன! சொல் அல்ல, சாதனை ஒன்றே கழகத்தின் வரலாறு!
நமது #DravidianModel அரசின் சாதனைகள் பற்றி, நேற்று என் நெஞ்சை நெகிழ வைத்த இரு செய்திகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். 1) worldbank.org/en/news/featur… 2) newindianexpress.com/states/…
3
310
3
776
6,179
மூன்று மாதங்களாகத் தொடர்ந்து சரியும் தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி வருவாய், செப்டம்பரில் மட்டும் 5% வீழ்ச்சியடைந்துள்ளது! ஒரு மாநிலத்தில் வசூலிக்கப்படும் மொத்த ஜிஎஸ்டி என்பது, அதன் மொத்த பொருளாதார நடவடிக்கைகளை பிரதிபலிப்பதாகும். எனவே, மாநிலத்திற்குள் நடைபெறும் பொருட்கள் மற்றும் சேவைகளின் பரிவர்த்தனைகள் தொடர்ந்து குறைவது குறித்தும், உள்நாட்டு பொருளாதாரச் செயல்பாடுகள் குறித்தும் இதனால் முக்கியமான கேள்விகள் எழுகின்றன. வரி விகிதக் குறைப்புக்குப் பிறகும் இந்தச் சரிவு தொடர்கிறது. ஆனால், உண்மையான பொருளாதார நிலையைப் பேசாமல் 'Post Settlementக்குப் பிறகு 17% உயர்வு ஏற்பட்டுள்ளது என்ற கணக்கை மட்டும் முன்வைத்து சமூக வலைதளங்களில் பல காணொளிகளைக் கொண்டு சிலர் இதை நியாயப்படுத்தி வருகின்றனர். 17% பிந்தைய வருவாய் உயர்வைக் காட்டிக் குழப்புவது உண்மையை மறைக்காது. மாநிலத்திற்குள் வரி வசூல் ஏன் தொடர்ந்து குறைகிறது என்பதற்கு பதில் சொல்லாமல், வெளிமாநிலங்களில் இருந்தும் இறக்குமதி மூலமாகவும் பெறப்படும் பொருட்கள் மீதான IGST வருவாய் எண்ணிக்கையைக் காட்டுவது எந்த வகையிலும் நமது மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி நிலைக்கான முழுமையான விளக்கம் அல்ல! வருவாய் எண்ணிக்கைகளில் விளையாடுவதை விட்டுவிட்டு, தமிழ்நாட்டின் உள்நாட்டு பொருளாதாரம் ஏன் தேய்கிறது என்பதற்கு தவெக அரசு பதில் சொல்ல வேண்டும்!
17
322
5
734
9,796
நெஞ்சில் நிலைத்த சுவடுகளை விதைத்துச் சென்றவர் அம்மா. அன்பும் ஆக்கமும் தந்த உங்கள் நினைவை வணங்குகிறேன்!
9
48
573
5,817
தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் கழக வெற்றி வேட்பாளர் S. சுகன்யா அவர்களை ஆதரித்து இறுதிக்கட்டப் பரப்புரையை அலங்கியம் ஊராட்சியில் மேற்கொண்டோம். இந்நிகழ்வில் அண்ணன் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன், தாராபுரம் ஒன்றிய செயலாளர் திரு. செந்தில்குமார் உள்ளிட்ட கழக முன்னணியினர், விருதுநகர் வடக்கு மற்றும் தெற்கு மாவட்டக் கழக நிர்வாகிகள், அலங்கியம் ஊராட்சி கழக முன்னணியினர், கழக நிர்வாகிகள், தோழமைக்கட்சி நண்பர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். மக்கள் காட்டும் பேராதரவு தாராபுரத்தில் உதிப்பது உதயசூரியன் தான் என்பதை உறுதிப்படுத்துகிறது. @KKSSRR_DMK
7
70
359
5,016
தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாள் நெருங்கி வரும் சூழலில் ஆற்ற வேண்டிய இறுதிக்கட்டப் பணிகள் குறித்து அலங்கியம் ஊராட்சியில் கழக நிர்வாகிகள் மற்றும் கழக தோழர்களுடனான கலந்துரையாடல் நிகழ்வில் பங்கேற்றோம். விருதுநகர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் அண்ணன் திரு. கே.கே. எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன், சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் திரு. கடற்கரை ராஜ் உள்ளிட்ட நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். தாராபுரத்தில் மீண்டும் உதயசூரியன் ஒளிவீசும்! @KKSSRR_DMK
2
56
1
245
3,437
நினைவுகளை விட்டு நீங்கா உணர்வுகளை விதைத்தவர் அம்மா. அம்மாவின் நினைவு நாளில் அவரது நினைவிடத்தில் அனைவரும் இணைந்து அஞ்சலி செலுத்தினோம். அவர் உலகில் இல்லை என்பது உண்மையாயினும், உணர்வாய், உயிராய் என் உள்ளத்தில் நிறைந்திருக்கிறார். அவரைப் போற்றி வணங்குகிறேன்!
4
32
255
5,099
காலம் நகர்ந்துகொண்டே இருக்கிறது. ஆனால், நினைவில் தேங்கிவிட்ட அம்மாவுடனான அன்பின் பொழுதுகள் மட்டும் எப்போதும் நகர்வதில்லை. எவ்வளவு உயரம் பறந்தாலும், எவ்வளவு தொலைவு சென்றாலும், திரும்பி வருவதற்கொரு கூடு உண்டு; அந்தக் கூட்டில் அம்மா இருக்கிறார் என்ற மனம் நிறைந்த தைரியத்தோடும், ஆசுவாசத்தோடும் கடந்த அந்த நாட்கள், இன்று கண்முன்னே நிழலாக வந்து செல்கின்றன. கதகதப்பான குரலில் ” கண்ணு…” என்று அழைக்கும் அந்த ஒரு வார்த்தையை மீண்டும் ஒருமுறை கேட்க மாட்டோமா என்ற ஏக்கம் இன்னும் என் உயிரைவிட்டு அகலவே இல்லை. காணாத ஏக்கம் என் கண்ணிரண்டில் தேங்கி நின்றாலும், வீட்டின் ஒவ்வொரு மூலையிலும், பழகிப்போன ஒவ்வொரு பொருளிலும், ஒவ்வொரு காலைப் பொழுதின் ஒளி நிறைந்த அமைதியிலும் அம்மா இன்னும் இருக்கிறார்.
5
59
499
5,464
தாராபுரத்தில் நேற்றைய தினம் ஆர்ப்பரிக்கும் மக்கள் கடலின் நடுவே கழகத் தலைவர் ஆற்றிய எழுச்சியுரை கழக வேட்பாளர் திருமிகு S. சுகன்யா அவர்களின் வெற்றியை உறுதி செய்தது. அந்த எழுச்சிமிக்க கூட்டத்தில் கழக முன்னோடிகள்,கழக உடன்பிறப்புகளுடன் இணைந்து பங்கேற்றதில் மகிழ்ச்சி.
1
103
1
511
5,116
தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் நமது வெற்றி வேட்பாளர் S. சுகன்யா அவர்களை ஆதரித்து, கழகத் தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் பங்கேற்ற பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டோம். மாபெரும் மக்கள் வெள்ளத்தில் கழகத் தலைவர் ஆற்றிய எழுச்சி உரை, இந்த விளம்பர ஆட்சியின் அவலங்களையும் அதனால் பொதுமக்கள் படும் துயரங்களையும் மிகத் தெளிவாக எடுத்துரைத்தது. திரண்டிருந்த பொதுமக்களின் பேராரர்வமும் பேராதரவும், தாராபுரம் தொகுதி திமுக வசம் தான் என்பதை அறுதியிட்டு நிரூபித்துவிட்டது. @mkstalin
3
99
2
363
4,708
அலங்கியமான உத்தம சோழ நல்லூர்! தாராபுரம் இடைத்தேர்தல் பணிகளுக்காக அலங்கியம் ஊராட்சியில் பொறுப்பேற்றுக்கொண்டு, கடந்த இரு வாரங்களாகத் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றோம். இப்பணிகளுக்கு இடையில், வரலாற்றின் போக்கில் அலங்கியம் குறித்த இரண்டு ஆவணங்களைக் காணும் வாய்ப்பு எனக்கு எதிர்பாராத வகையில் கிடைத்தது. ஒன்று, பதிமூன்றாம் நூற்றாண்டைச் சார்ந்த ஒரு துண்டுக் கல்வெட்டு! இரண்டாவது, 1958-ம் ஆண்டிலேயே அன்றைய கழகத் துணைப் பொதுச் செயலாளர் ஐயா என்.வி. நடராசன் அவர்கள் அலங்கியத்தில் கழகக் கொடியேற்றி உரையாற்றிய நிகழ்வின் துண்டுப் பிரசுரம்! முதலாவதாக, 800 ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்றும் 'அலங்கியம்' என்ற பெயரே இந்த ஊருக்கு நிலைத்திருக்கிறது என்பதை, கொங்குச் சோழ மன்னனான வீரராஜேந்திரன் காலத்தைச் சேர்ந்த இந்தக் கல்வெட்டைப் படித்தபோது அறிந்து மகிழ்ந்தேன். “ஸ்வஸ்திஸ்ரீ வீரராஜேந்திர தேவற்கு யாண்டு… பொங்கலூர்க்கா நாட்டில் அலங்கியமா(ன)… ராசேந்திர அதியமானென அவிநாசி ஆளுடைய… பெருங்கணைச் செல்வியார் ஸ்ரீபண்டாரத்து.. (பொன்)னறக் கொண்டு மண்ணற விற்ற நீர்நிலமாவது காராண்மைக் காணி அரை மாவும் குறையும் நிபட்ட…” என்பது அந்தக் கல்வெட்டின் பாடம். கலியுக கன்னீஸ்வரர் அல்லது திண்டீஸ்வரர் கோவில் என அழைக்கப்படும் இவ்வூர் சிவாலயத்தின் கருவறைக்கு முன்னர், தரைத்தளத்தில் பதிக்கப்பட்டுள்ள இந்தக் கல்வெட்டு, இந்த ஊரைச் சேர்ந்த வீரனான ராசேந்திர அதியமான் என்பவர் அவிநாசியில் உள்ள கோவிலுக்கு நிலக்கொடை வழங்கிய விவரத்தினைத் தெரிவிக்கின்றது. காலப்போக்கில் மன்னனும், மக்களும், நிலத்தின் எல்லைகளும் மறைந்து போயின; ஊரின் பெயரில் ஒட்டியிருந்த உத்தம சோழ நல்லூர் என்ற பெயரும் கூட மறைந்து போய்விட்டது. ஆனால், அலங்கியம் மட்டும் இன்றும் நிலைத்திருக்கிறது. இரண்டாவதாக, அலங்கியத்தின் இயக்க வரலாற்றில் 1958ம் ஆண்டு முதல் அழியாத கல்வெட்டாக அமைந்துவிட்ட அந்தக் கொடியேற்று விழா நிகழ்வில் பங்கேற்று, அந்தப் பெருமையுடன் இன்று தாராபுரம் நகரில் கழகத் தலைவர் அண்ணன் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் உரையைக் கேட்கத் தனது 92-ம் வயதிலும் துடித்துக் கொண்டிருக்கும் பெரியவர் ஐயா அய்யனார் அவர்களுடன் உரையாடும் வாய்ப்பினைப் பெற்றேன். இளமையிலிருந்து தன் உடலில் ஓடும் 'திராவிட ரத்தம்' குறித்து உணர்ச்சி பொங்கக் குறிப்பிட்ட ஐயா அவர்கள், பதினேழு கழகத் தொண்டர்களை மட்டும் கொண்டு அலங்கியத்தின் காங்கிரஸ் கோட்டையைத் தகர்த்த வரலாற்றை எனக்கு விளக்கினார்கள். உவகையும், உற்சாகமும், உணர்ச்சியும் ஊட்டிய உரையாடல் அது. கால வெள்ளத்தில் கரைந்துபோகாமல் அலங்கியம் நிலைத்து நின்று நெஞ்சினிக்கும் வரலாற்றுச் செய்திகளை நமக்கு உணர்த்துவது போலவே, தள்ளாத வயதிலும் கழகத்திற்காக தளராமல் பணியாற்றிட வேண்டும் என்ற உணர்வு மிக்க ஐயா அய்யனார் போன்ற முன்னோடிகளின் உன்னதமான உழைப்பால், தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகளும் கழக வெற்றியினை உறுதி செய்து வரலாற்றில் இடம் பெறும் என்பதே அந்த உரையாடல் எனக்கு உணர்த்திய செய்தி! @mkstalin
12
177
7
581
18,088
நாட்டின் விடுதலைக்கு தொண்டாற்றியவர், கல்வியில் சிறந்த தமிழ்நாடு உருவாவதற்கு அடித்தளமிட்டவர், மழலைகளின் கல்விக்கு உணவு ஒரு தடையாகிவிடக் கூடாது என உணவளித்தவர், பச்சைத் தமிழர் என தந்தை பெரியாரால் புகழப்பட்டவர், பொதுவாழ்வில் எளிமையையும் நேர்மையையும் இலக்கணமாகக் கொண்டு வாழ்ந்த பெருந்தலைவர் காமராசர் அவர்களின் நினைவுநாளில் அவரின் பெருந்தொண்டைப் போற்றி வணங்குகிறேன்.
4
29
114
2,542
அகிம்சையும் சகோதரத்துவமுமே இந்த மண்ணின் உண்மையான வலிமை என்பதை உலகிற்கு உணர்த்திய தேசத் தந்தை அண்ணல் காந்தியடிகளின் பிறந்தநாளில் அவரது அறநெறிப் பாதையை நினைவுகூர்வோம். மதவாதப் பிரிவினைகளைக் கடந்து, மனிதநேயமும் சமூக ஒற்றுமையும் தழைத்தோங்கும் சமத்துவச் சமுதாயத்தைப் பாதுகாத்திட இந்நாளில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்ற உறுதியேற்போம்!
1
10
56
1,679
தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தலில் கழகத்தின் வெற்றி வாய்ப்பை உறுதி செய்யும் வகையில் பரப்புரை மேற்கொள்ள தாராபுரத்திற்கு வருகை தந்திருக்கும் கழகத் தலைவர் தளபதியார் அவர்களைக் கழக உடன்பிறப்புகளுடன் இணைந்து வரவேற்றோம். தலைவர் அவர்களுக்கு மக்கள் அளித்த உற்சாக வரவேற்பு, தாராபுரத்தில் உதிக்கப் போவது உதய சூரியன்தான் என்பதை மெய்ப்பித்தது. @mkstalin
11
115
3
617
5,549
தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் வெல்லப்போகும் கழக வேட்பாளர் S. சுகன்யா அவர்களை ஆதரித்து அலங்கியம் ஊராட்சியில் வாக்குச் சேகரிக்க வருகை தந்த தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர், சட்டமன்ற உறுப்பினர் மரியாதைக்குரிய அண்ணியார் திருமிகு. பிரேமலதா விஜயகாந்த் அவர்களைக் கழக நிர்வாகிகளுடன் இணைந்து வரவேற்றோம். @PremallathaDmdk
5
272
2
1,945
50,756
உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் ஐயா பழ. நெடுமாறன் அவர்களின் இளைய மகனும், புத்தத் துறவியுமான திரு. மாணிக்கம் அவர்கள் மறைவுற்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். தன் வாழ்நாளெல்லாம் தமிழ்ச் சமூகத்திற்காகவும் தமிழ்த் தேசியத்திற்காகவும் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட முதுபெரும் தலைவர் ஐயா பழ. நெடுமாறன் அவர்களுக்கு, பாசமிகு மகனை இழந்து நிற்கும் இந்தத் துயரமான தருணத்தில் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
5
9
92
4,981
திமுக ஆட்சிக் காலத்தில் நாட்டின் பிற மாநிலங்களை விஞ்சி, இரட்டை இலக்க வளர்ச்சியோடு ஜி.எஸ்.டி வசூலில் சாதனை படைத்த தமிழ்நாட்டின் நிதி நிலைமை, இன்று தொடர்ந்து மூன்று மாதங்களாகக் குறைந்து, -5% வரை சரிவைச் சந்தித்திருப்பது வேதனையளிக்கிறது. நாட்டின் பிற மாநிலங்கள் தொடர் தொழில் வளர்ச்சியைக் காணும்போது, தமிழ்நாட்டில் மட்டும் உற்பத்தி முடங்கி, நுகர்வு சுருங்கி வருவது நிர்வாகக் கோளாறின் வெளிப்படையான அடையாளம். தொழில் முதலீடுகளையும் நிதி மேலாண்மையையும் தொலைநோக்குப் பார்வையோடு கையாண்ட திராவிட மாடல் ஆட்சியின் வழிகாட்டுதல் இன்றி, பொருளாதாரத்தை முடக்கியுள்ள இந்த சீர்கேட்டிற்கு ஆளும் அரசு என்ன பதில் சொல்லப் போகிறது?
51
620
14
1,175
38,089