
Official Page of Thoothukudi City Municipal Corporation.Stay connected for updates at https://nitter.cf/t.co/lVgtPw6rV8; for grievances #Whatsapp +917397731065
Thoothukkudi, India
Joined September 2015
- Tweets6.9K
- Following56
- Followers4.5K
- Likes135
தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டலத்துக்குட்பட்ட பிரிவு 14, வார்டு எண் 34, ஆசிரியர் காலனி பகுதியில் கொசுக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் புகைபரவல் பணி மாநகராட்சிப் பணியாளர்களால் மேற்கொள்ளப்பட்டது.
2
62
தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டலத்துக்குட்பட்ட பிரிவு 06, வார்டு எண் 21, நந்தகோபாலபுரம் கிழக்குப் பகுதியில் உள்ள குப்பைகள் கொட்டும் இடம் (GVP Point) சீரமைக்கப்பட்டு, அப்பகுதியை அழகுபடுத்தும் வகையில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
1
54
தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டலத்துக்குட்பட்ட பிரிவு 02, வார்டு எண் 04, சுந்தரவேல்புரம் மேற்கு மற்றும் அம்பேத்கர் நகர் ஆகிய பகுதிகளில் பொதுவெளியில் குப்பைகளைக் கொட்டிய நபர்களின் முகவரிகள் கண்டறியப்பட்டு, மாநகராட்சி விதிகளின்படி அபராத நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பொதுமக்கள் பொது இடங்களில் குப்பைகளைக் கொட்டுவதைத் தவிர்த்து, மாநகராட்சியின் குப்பை சேகரிப்பு வாகனங்களிடம் முறையாகக் குப்பைகளை ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
1
54
தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டலத்துக்குட்பட்ட பிரிவு 06, வார்டு எண் 21, அழகேசபுரம் 2-வது தெருவில் கொசுக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் புகைபரவல் பணி மாநகராட்சிப் பணியாளர்களால் மேற்கொள்ளப்பட்டது.
1
51
தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டலத்துக்குட்பட்ட பிரிவு 10, ஜார்ஜ் சாலை பகுதியில் அமைந்துள்ள அம்மா உணவகத்தில் உணவு தயாரிக்கும் முறை, உணவுப் பொருட்களின் தரம், சமையலறையின் தூய்மை மற்றும் பராமரிப்பு, பொதுமக்களுக்கு உணவு வழங்கும் முறை உள்ளிட்டவை குறித்து சுகாதார அலுவலரால் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், உணவகத்தின் செயல்பாடுகள் மற்றும் சுகாதாரப் பராமரிப்பு தொடர்பாகவும் ஆய்வு செய்யப்பட்டது.
1
57
தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டலத்துக்குட்பட்ட அம்பேத்கர் நகர் பகுதியில் அமைந்துள்ள நுண்ணுயிர் உரமாக்கும் மையத்தின் (MCC) செயல்பாடுகள் மற்றும் பராமரிப்புப் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையர் திருமதி. சி. ப்ரியங்கா, இ.ஆ.ப. அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
1
63
தூத்துக்குடி மாநகராட்சி அம்பேத்கர் நகர் மற்றும் கிருஷ்ணராஜபுரம் பகுதிகளில் அமைந்துள்ள வார்டு அலுவலகத்தில், பணியாளர்களின் வருகைப் பதிவேடு, தூய்மைப் பணியாளர்களுக்கான காலை உணவு விநியோகம் மற்றும் நடைபெற்று வரும் தூய்மைப் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையர் திருமதி. சி. ப்ரியங்கா, இ.ஆ.ப. அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
1
52
தூத்துக்குடி மாநகராட்சி கிருஷ்ணராஜபுரம் பிரதான இணைப்புச் சாலையில் நிறைவடைந்த பராமரிப்புப் பணிகளை மாநகராட்சி கண்காணிப்புப் பொறியாளர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
1
52
தூத்துக்குடி மாநகராட்சியில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தின் கீழ், காலை உணவு தயாரிக்கும் பணிகள், பள்ளிகளுக்கு உணவு எடுத்துச் செல்லும் பணிகள் மற்றும் உணவுத் தயாரிப்புக் கூடம் ஆகியவற்றை மாநகராட்சி கண்காணிப்புப் பொறியாளர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
2
52
தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டலத்துக்குட்பட்ட பாளையங்கோட்டை பிரதான சாலையில் இரவு நேரத் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், சேகரிக்கப்பட்ட குப்பைகளை நான்கு வகைகளாகத் தரம் பிரிக்கும் பணிகளும் மாநகராட்சிப் பணியாளர்களால் மேற்கொள்ளப்பட்டன.(23/11/26)
1
42
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட வணிகக் கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் (RWH) தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின்போது, மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் இல்லாத மற்றும் முறையாகப் பராமரிக்கப்படாத வணிகக் கட்டிடங்களின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு, மழைநீர் சேகரிப்பு அமைப்புகளைப் புதிதாக அமைக்கவும், ஏற்கனவே உள்ள அமைப்புகளைச் சீரமைத்துப் பராமரிக்கவும் அறிவுறுத்தப்பட்டது.
2
71
தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டலத்துக்குட்பட்ட பிரிவு 18, வார்டு எண் 53, முத்தையாபுரம் – திருச்செந்தூர் பிரதான சாலையின் இருபுறங்களிலும் காணப்பட்ட மணல் குவியல்கள் அகற்றப்பட்டு, சாலையோரப் பகுதிகளைச் சமன் செய்து தூய்மைப்படுத்தும் பணி நிறைவு செய்யப்பட்டது.
1
60
தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டலத்துக்குட்பட்ட பிரிவு 15, வார்டு எண் 37, ஸ்ரீ சாரதா நர்சிங் மற்றும் தொடக்கப்பள்ளியில் மாநகராட்சி சார்பில் மாணவ, மாணவியர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திடக்கழிவு மேலாண்மை விதிகள் (SWM) 2026, டெங்கு கொசுக்களைத் தடுக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் வழிமுறைகள், மழைநீர் சேகரிப்பின் அவசியம், மரக்கன்றுகள் நடுதல் மற்றும் பசுமைத் தூத்துக்குடி திட்டம் உள்ளிட்ட பல்வேறு பொதுநலத் திட்டங்கள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பொது சுகாதாரம் மற்றும் தூய்மையான, பசுமையான மாநகரத்தை உருவாக்குவதில் மாணவர்களின் பங்கு குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி அனிமேட்டர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
2
73
தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டலத்துக்குட்பட்ட பிரிவு 14, வார்டு எண் 37, சங்கரபுரம் 1-வது குறுக்குத் தெருவில் வீடுகளுக்கு வழங்கப்பட்டுள்ள பாதாளச் சாக்கடை வீட்டிணைப்புகள் தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளால் நேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
1
78
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட அன்னை வேளாங்கண்ணி நகர் கிழக்குப் பகுதி மற்றும் மேற்குப் பகுதியில் பாதாளச் சாக்கடைத் திட்டத்தின் (UGSS) கீழ் வழங்கப்பட்டுள்ள வீட்டிணைப்புகள் மற்றும் அவற்றின் செயல்பாடுகள் குறித்து மாநகராட்சி உதவிச் செயற்பொறியாளர் (AEE) அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
2
69
தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டலத்துக்குட்பட்ட பிரிவு 08, வார்டு எண் 29, மீனாட்சிபுரம் பகுதியில் கொசுக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் வெளிப்புற புகைபரவல் பணி மாநகராட்சிப் பணியாளர்களால் மேற்கொள்ளப்பட்டது.
1
58
தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டலத்துக்குட்பட்ட vikasa பள்ளியில் மாநகராட்சி அதிகாரிகளால் மாணவ, மாணவியர்களுக்கு டெங்கு காய்ச்சல் பரவுவதைத் தடுக்கும் வழிமுறைகள் மற்றும் குப்பைகளை நான்கு வகைகளாகத் தரம் பிரித்து வழங்குவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
2
68
தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டலத்துக்குட்பட்ட பிரிவு 10, வார்டு எண் 46, பாத்திமா நகர் 5-வது மற்றும் 6-வது தெருக்களில் கொசுக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் வெளிப்புற புகைபரவல் பணி மாநகராட்சிப் பணியாளர்களால் மேற்கொள்ளப்பட்டது.
1
56
தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டலத்துக்குட்பட்ட பிரிவு 03, வார்டு எண் 08, திரேஸ்புரம் உப்புச் சங்கம் பிரதான சாலையில் பொதுவெளியில் குப்பை கொட்டிய நபரின் முகவரி கண்டறியப்பட்டது. மேலும், கிழக்கு மண்டலத்துக்குட்பட்ட பிரிவு 07, வார்டு எண் 25, சந்தன மாரியம்மன் கோவில் தெருவில் பொதுவெளியில் குப்பை கொட்டிய நபரின் முகவரியும் கண்டறியப்பட்டு, இருவர் மீதும் மாநகராட்சி விதிகளின்படி அபராத நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
2
59


















