
#திருவள்ளுர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் | #அம்பத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் | முன்னாள் கழக #எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் | https://nitter.cf/t.co/ITvy6b56nd
Chennai, India
Joined March 2020
- Tweets1.2K
- Following20
- Followers1.4K
- Likes872
தேசப்பற்றையும், தெய்வீகத்தையும் வாழ்வின் இரு கண்களாகக் கொண்டு, தியாகத்தையும் நேர்மையையும் தனது வாழ்வியல் நெறியாகக் கொண்ட போற்றுதலுக்குரிய தெய்வீகத் திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் குருபூஜை பெருநாளில், அவருடைய பெரும் வாழ்வையும் புகழையும் போற்றி வணங்குவோம்
Ambattur V.Alexander - SayYEStoWomenSafety&AIADMK retweeted
தேசப்பற்றையும், தெய்வீகத்தையும் வாழ்வின் இரு கண்களாகக் கொண்டு, தியாகத்தையும் நேர்மையையும் தனது வாழ்வியல் நெறியாகக் கொண்ட போற்றுதலுக்குரிய தெய்வீகத் திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் குருபூஜை பெருநாளில், அவருடைய பெரும் வாழ்வையும் புகழையும் போற்றி வணங்குகிறேன்.
#தேவர்ஜெயந்தி மற்றும் #குருபூஜை பெருநிகழ்வினை முன்னிட்டு, மதுரை தெப்பக்குளத்தில் உள்ள மாமன்னர்கள் மருது சகோதரர்களின் திருவுருவச் சிலைக்கு மரியாதை செலுத்திவிட்டு, இராமநாதபுரம் மாவட்டம், #பசும்பொன் புண்ணிய மண்ணில் அமைந்துள்ள தெய்வத் திருமகனாரின் திருக்கோவிலுக்கு சென்று, @AIADMKOfficial சார்பில்
மாண்புமிகு அம்மா அவர்களால் வழங்கப்பட்ட 13.5 கிலோ தங்கக் கவசத்தால் தரிக்கப்பட்ட அவர்தம் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து வணங்கினேன்.
“மனிதனை உயர்ந்தவர், தாழ்ந்தவர்
என ஒழுக்கத்தின் அடிப்படையில்
மதிக்க வேண்டுமே தவிர,
வேறு எந்த அடிப்படையிலும் அல்ல”
என்ற அவரது உயரிய சிந்தனை என்றும் மனிதகுலத்திற்கு வழிகாட்டட்டும்.
#MuthuramalingaThevar #ThevarJayanthi
@AIADMKOfficial
Ambattur V.Alexander - SayYEStoWomenSafety&AIADMK retweeted
மாண்புமிகு புரட்சித்தலைவி #அம்மா அவர்களின் நல்லாசியுடன்,
மாண்புமிகு கழக பொதுச் செயலாளர், புரட்சித்தமிழர் அண்ணன் திரு @EPSTamilNadu அவர்களின் ஆணைக்கிணங்க,
திருவள்ளூர் தெற்கு மாவட்டம், ஆவடி மேற்கு பகுதி கழக சார்பில், @AIADMKOfficial 55-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம்
நாள் : 23-10-2026, வெள்ளிக்கிழமை
இடம் : பட்டாபிராம் (எம்ஜிஆர் சிலை அருகில்)
@SAbdulrahim_off @Gayatri_Raguram
#55YrsOfAIADMK
#என்றென்றும்_அஇஅதிமுக
#ThiruvallurSouthDistrict
என் உயிரினும் மேலான கழக உடன்பிறப்புகளே!
புரட்சித் தலைவரின் தியாகத்தால் உருவாகி, புரட்சித் தலைவி அம்மா அவர்களின் தீரத்தால் கட்டிக் காக்கப்பட்ட நம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், 54 ஆண்டுகாலப் பெருமைமிகு வரலாற்றை நிறைவு செய்து, 55-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்தப் பொன்னான தருணத்தில், என் பேரன்பிற்குரிய கழக உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது இதயபூர்வமான நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்!
“இன்னும் நூறாண்டுகள் ஆனாலும் இந்த இயக்கம் மக்களுக்காகவே இயங்கும்!” என்று நம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் முழங்கிய வரலாற்றுப் பிரகடனத்தை நனவாக்கும் உறுதியோடு, நமது வெற்றிப் பயணத்தைத் தொடர்வோம்!
இதற்கு முன்பு எத்தனையோ எதிரிகளையும், துரோகிகளையும் எதிர்கொண்டு வெற்றிகண்ட என் அன்பிற்குரிய கழகத் தோழர்களே! புரட்சித் தலைவரின் இரத்தத்தின் இரத்தங்களே!
இன்றைக்கு நம் முன்னால் எழுந்திருக்கும் புதிய அரசியல் சவால்களையும், ஜனநாயக விரோத சக்திகளையும், மக்கள் விரோத ஆட்சியையும் ஜனநாயக வழியில் எதிர்கொண்டு வீழ்த்திட, ஒற்றுமையோடும், உறுதியோடும் களமிறங்கிட வேண்டும் என்று அறைகூவல் விடுக்கிறேன்!
புரட்சித் தலைவர் காட்டிய பாதையில் ! புரட்சித் தலைவி அம்மா அவர்கள் வகுத்துத் தந்த இலட்சிய வழியில்! தமிழகத்தின் உரிமைகளைக் காத்து, மீண்டும் நல்லாட்சி மலர்ந்திட ஒன்றுபட்டு உழைப்போம்!
#55YrsOfAIADMK
#என்றென்றும்_அஇஅதிமுக
@AIADMKOfficial
102
#வாக்களிப்பீர்_இரட்டைஇலை 🌱
#வெல்லட்டும்_இரட்டைஇலை
@EPSTamilNadu @AIADMKOfficial – at Maduranthakam, India
நான் பெரிய அரசியல்வாதியின் வாரிசோ, மிகப் பெரிய சினிமா நட்சத்திரமோ கிடையாது.
நான் உங்களில் ஒருவன். உங்க ஊருல, தெருவுல, வீட்டுல, நீங்க தினசரி சாதாரணமா பாக்குற அண்ணன், அப்பா, சித்தப்பா, பெரியப்பா மாதிரி, எளிய மனிதன், இந்த எடப்பாடி பழனிசாமி.
எனக்கு நம்ம மக்கள் படுற கஷ்டம் தெரியும், நம்ம ஜனத்தோட அன்றாட வாழ்க்கை தெரியும், நம்மளோட பிரச்சனைகளை தெரியும்.
ஆனா எனக்கு அதுக்கு மொழியில் பக்கம் பக்கமாக, ரசிகர்களை மயக்குற மாதிரி, போலி வசனங்கள் பேசத் தெரியாது.
ஏன்னா, நான் கீழ இருந்து வந்தவன். அதனாலதானோ என்னவோ, மற்ற எல்லா கட்சி தலைவர்களை விட, இந்த விவசாயி பழனிசாமிக்கு எதிரா, அத்தனை சூழ்ச்சிகள்.
எனக்கு பின்னால், 100 வருடத்திற்கு இந்த இயக்கம் இருக்கும்ணு சொன்ன, புரட்சி தலைவி அம்மாவின் சின்னம், இந்த இரட்டை இலை.
இதை காப்பாத்த நினைச்சது நம்முடைய தவறா? இல்ல, உங்களை போல சாதாரண குடும்பத்தில் பிறந்தது என்னோட தவறா?
புரட்சி தலைவரும், புரட்சித் தலைவியும், கட்டிக்காத்த இந்த இயக்கம், சுயநலவாதிகளின் சூழ்ச்சிக்கு பலியாக கூடாதுன்னு, இந்த நிமிடம் வரை நானும், தலைவரின் ரத்தத்தின் ரத்தங்களும், போராடிட்டு இருக்கிறோம்.
ஆனால்... அதற்கு எதிராக எத்தனை சோதனைகள்?
எத்தனை சூழ்ச்சிகள்?
எத்தனை துரோகங்கள் ?
இந்த இயக்கத்தை சூறையாட எத்தனை நாடகங்கள்?
இன்று இந்த இரட்டை இலையை விமர்ச்சனம் செய்ய நினைக்கிற தமிழக வெற்றிக் கழகத்துக்கு கூட, நாம கரூர் விவகாரத்துல நல்லதுதானே நினைச்சோம்?
அதான் நாம செய்த குற்றமா ? அதுக்கான பிரதிபலனாதான் நம்ம MLA-க்களை பேரம்பேசி திருடிட்டு போக பாக்குறாங்களா?
உயிரை கொடுத்து உழைத்த 6,000 கட்சி நிர்வாகிகளைப் பற்றியோ, இவங்களை நம்பி வெற்றிபெற வைத்த லட்சக்கணக்கான மக்களைப் பத்தியோ ஒரு நிமிடம் யோசிச்சிருந்தாகூட, இப்படி செய்ய மனசு வந்துருக்குமா?
அன்பு மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி மக்களே, நாங்க நியாயம் கேட்கிறோம்.
அன்பு பெரியோர்களே, தாய்மார்களே, சகோதர-சகோதரிகளே, உங்ககிட்ட நியாயம் கேட்கிறோம்.
புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி சார்பில் உங்களிடம் நியாயம் கேட்கிறோம்.
இதற்கான தீர்ப்பை நீங்களே கொடுங்க. நீங்க கொடுக்கப்போற தீர்ப்பு, இனி MLA-க்களை, குதிரை பேரத்தில் விலை பேசும் த.வெ.க-வுக்கும், விலை போக நினைச்ச துரோகிகளுக்கும், வாழ்நாள் பாடமாக, இந்த பச்சை துரோகத்துக்கு முற்றுப்புள்ளியாக இருக்கட்டும்.
எனவே, அக்.6 அன்று,
#வாக்களிப்பீர்_இரட்டைஇலை 🌱
#வெல்லட்டும்_இரட்டைஇலை
@AIADMKOfficial
Ambattur V.Alexander - SayYEStoWomenSafety&AIADMK retweeted
தனது ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பு சிறப்பாக இருப்பதாக இன்றைய முதல்வர் வாய்கிழிய பேசிய பிரச்சாரக் கூட்ட மேடையின் பந்தலைப் பிரிப்பதற்குள்ளேயே மதுராந்தகம் பகுதியில் ஒரு மாற்றுத் திறனாளி சிறுமி பாலியல் வன்கொடுமை ஆளாகியிருக்கும் அவலம் அரங்கேறி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
மதுராந்தகம் அருகே கொங்கரை பகுதியில் 5-ம் வகுப்பு படிக்கும் மாற்றுத் திறனாளி சிறுமி, வீடு புகுந்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஒரு சிறுமிக்கு தனது சொந்த வீட்டிலேயே பாதுகாப்பு இல்லாத ஒரு பொல்லாத ஆட்சியை நடத்தும் இன்றைய முதல்வர், எந்த முகத்தை வைத்துக் கொண்டு பெண்கள் பாதுகாப்பைப் பற்றி பேசுகிறார்?
“அண்ணன், தாய் மாமன்” என்று தனக்கு Branding செய்துகொள்ளும் இந்த நடிப்பு முதல்வர், பாதிக்கப்பட்ட இந்த சிறுமிக்கு அண்ணனாகவோ, தாய் மாமனாகவோ இருந்தால் இப்படி ஒரு நிகழ்வை நடக்க விட்டிருப்பாரா?
ஆட்சி என்பது கவர்ச்சியான வார்த்தைகளால் நடத்துவது அல்ல-
ஆட்சி என்பது செயல்!
மதுராந்தகத்தில் மீண்டும் தேர்தல் பிரச்சாரம் என்ற பெயரில் கால் வைக்கப் போகும் முதல்வர், இது போன்ற கொடூர சம்பவங்களுக்கான விளக்கத்தை அளிப்பாரா?
அல்லது, வழக்கம் போல பிற கட்சிகளை நோக்கி வெறும் காற்றில் வாள் சுழற்றுவது மட்டும் தானா?
Reels Content-காக மட்டுமே ஆட்சியை நடத்தி, Real Action- ல் எதுவும் இல்லாத, தமிழகப் பெண்கள் மற்றும் சிறுமிகள் பாதுகாப்பில் Compromise செய்துள்ள இன்றைய பொய்க்கால் குதிரை அரசுக்கு எனது கடும் கண்டனம்.
மதுராந்தகம் சிறுமி பாலியல் வழக்கில் தொடர்புள்ள குற்றவாளிகள் அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial
Ambattur V.Alexander - SayYEStoWomenSafety&AIADMK retweeted
ஜெம் கிரானைட்ஸ் வீரமணி பாலியல் வழக்கில் நாளுக்கு நாள் வருகின்ற செய்திகள் மிகுந்த அதிர்ச்சி அளிக்கின்றன.
இத்தனை ஆண்டுகளாக, பல சிறுமிகள் பாலியல் சீண்டலுக்கு ஆளாகி இருப்பது என்பது, ஒரு சமூகமாக வெட்கித் தலைகுனிய வேண்டிய அவலம்.
இதுபோன்ற Sensitive-ஆன, பல ஆண்டுகள் வெளி உலகிற்கு தெரியாமல் இருந்த ஒரு விஷயம், தற்போது பொதுவெளியில் வந்திருக்கும் போது, காவல்துறை இந்த வழக்கை எந்தவித Pressure-ம் இன்றி கையாள வேண்டும்.
தற்போது, தொடர்ந்து பல்வேறு ஆதாரங்கள், சாட்சியங்கள் காவல்துறை விசாரணையின் ஊடாக இந்த வழக்கில் சிக்கி உள்ளதாக செய்திகளில் வந்துள்ளன.
பெண்கள், சிறுமிகள் தொடர்பான பாலியல் குற்றங்களை அதற்குரிய தன்மையோடு அணுக வேண்டும் என்பதை @AIADMKOfficial தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
பெண்களுக்கு எதிரான இந்த பாலியல் குற்றம் புரிந்தவர்கள் யாராக இருந்தாலும், அது எவ்வளவு “பெரிய இடமாக” இருந்தாலும், இந்த சுதந்திர சமூகத்தில் எந்த ஒரு இடமும் அளிக்க கூடாது.
இந்த வழக்கில் யாருக்கு தொடர்பு இருந்தாலும், இதனை மறைக்க துணை நின்றது எவ்வளவு பெரிய அதிகாரமாக இருந்தாலும், அனைவர் மீதும் பாரபட்சம் இன்றி அரசு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@AIADMKITWINGOFL
Ambattur V.Alexander - SayYEStoWomenSafety&AIADMK retweeted
தமிழக மக்கள் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் தன்மான உணர்வை விதைத்து, சமூகநீதி, சமத்துவம், சுயமரியாதை, மாநில உரிமைகள் என திராவிட இயக்கத்தின் கொள்கைகளை மக்கள் இயக்கமாக வளர்த்தெடுத்த ஒப்பற்ற தலைவர் நம் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள்.
அதிகாரத்தை விட கொள்கையையும்,
பதவியை விட மக்களையும்,
தனிமனிதப் புகழை விட சமூகத்தின் முன்னேற்றத்தையும் முன்னிறுத்திய அண்ணாவின் அரசியல் வாழ்வு, தலைமுறைகள் கடந்து வழிகாட்டும் கலங்கரை விளக்கம்.
தமிழினத்தின் தன்மானக் குரலான நம் கொடியாகவும் கொள்கையாகவும்
என்றும் வீற்றிருக்கும்
பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களை, அவர்தம் பிறந்தநாளில் போற்றி வணங்குகிறேன்.
மக்கள் நலனுக்கு முற்றிலும் எதிரான ரீல்ஸ் அரசியல் மோகத்தில் இருந்து தமிழகத்தை விடுவித்து, தமிழகத்தின் வளர்ச்சியை கட்டமைக்கும் நம் #அண்ணாயிசம் ஆட்சியை மீண்டும் நிறுவிட இந்நாளில் உறுதியேற்போம்!
வாழ்க அண்ணா நாமம்!
#CNAisourDNA
@AIADMKOfficial
Ambattur V.Alexander - SayYEStoWomenSafety&AIADMK retweeted
Warm birthday wishes to our Hon’ble Prime Minister Thiru. @narendramodi Avl.
Your decisive leadership and unwavering commitment to the nation continue to strengthen India’s progress and prosperity.
Wishing you good health, long life and continued strength in the service of our nation.
@PMOIndia
@AIADMKOfficial
Ambattur V.Alexander - SayYEStoWomenSafety&AIADMK retweeted
ஆயிரம் ஆண்டுகளாக வேரூன்றியிருந்த சாதிய ஆதிக்கத்தையும்,
சமூக ஏற்றத்தாழ்வுகளையும், மூடநம்பிக்கைகளையும் எதிர்த்து, சுயமரியாதை- பகுத்தறிவு- சமத்துவம்- சமூகநீதி எனும் நான்கு தூண்களின் மீது புதிய எழுச்சிமிகு சமூகத்தைக் கட்டமைக்கப் போராடியவர் தந்தைப் பெரியார் அவர்களின் பிறந்தநாளில், அவர்தம் பெரும் புகழைப் போற்றி வணங்குகிறேன்.
அவரது போராட்டம் ஒரு தனிமனிதருக்கு எதிரானதல்ல; ஆதிக்கத்திற்கு எதிரானது.
அவரது குரல் ஒரு காலத்திற்கானதல்ல; சமத்துவம் நிலைநாட்டப்படும் வரை தொடர வேண்டிய குரல்.
“பிறப்பால் உயர்வு – தாழ்வு இல்லை; மனிதன் மனிதனாக மதிக்கப்பட வேண்டும்” என்ற சமூகநீதிப் பாதையைத் தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் சமூக வாழ்வில் ஆழமாகப் பதித்த பெரியாரின் வழியில் என்றும் நடந்திட உறுதியேற்போம்.
#PeriyarForever
@AIADMKOfficial
Ambattur V.Alexander - SayYEStoWomenSafety&AIADMK retweeted
விநாயகப் பெருமானின் திருவருளால் 'நாடெங்கும் நலமும்; வீடெங்கும் வளமும் பெருகட்டும்' என்று மனதார வாழ்த்தி; அனைவருக்கும் அன்பும் அமைதியும், நலமும், வளமும் நிறைந்த வாழ்வை அருள வேண்டுமென்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தித்து,
வினை தீர்க்கும் தெய்வமாகவும்;
முழுமுதற் கடவுளாகவும் விளங்கும், விநாயகப் பெருமான் அவதரித்த
#விநாயகர்சதுர்த்தி திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள். @AIADMKOfficial
Ambattur V.Alexander - SayYEStoWomenSafety&AIADMK retweeted
புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டினப்பாக்கம் கடற்கரையை ஒட்டிய சாந்தோம் சாலையில், காலம் காலமாக வசித்து வரும் மீனவர்கள், பொதுமக்களின் குடியிருப்புகள், பள்ளிகள், வாகன போக்குவரத்து நெரிசல் என்று மிகவும் நெருக்கடியான பகுதியாகும்.
இடநெருக்கடி, வாகனப் போக்குவரத்து நெரிசல் இல்லாத இடத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்பட வேண்டும் என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், ஆட்சியில் இருந்த காலங்களில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களும், புரட்சித் தலைவி அம்மா அவர்களும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்கள்.
விவசாயிகள் பிரச்சனை, பொதுமக்களின் சமூக நலப் பிரச்சனைகள் இருக்கும் இத்தருணத்தில், கடுமையான நிதி நெருக்கடி, கடன் சுமையில் சிக்கித் தவிக்கும் இந்த நிலையில், கடன் வாங்கி ரூ. 1,200 கோடி செலவு செய்து பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவது தற்போது அவசியமற்றது.
புதிய தலைமைச் செயலகம் கட்ட வேண்டாம் என்று @AIADMKOfficial கூறவில்லை. தமிழகத்தின் நிதிநிலை சீரான பின்பு, போக்குவரத்து நெரிசலற்ற, மக்களுக்கு பாதிப்பு இல்லாத இடத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்ட உத்தேசிக்கலாம். தற்போதைய நிலையில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவது தேவையற்றது. எனவே, இத்திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று த.வெ.க. அரசின் முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu
Ambattur V.Alexander - SayYEStoWomenSafety&AIADMK retweeted
தனது எழுத்தாலும், சிந்தனையாலும், புரட்சிகரமான கருத்துகளாலும் தமிழ்ச் சமூகத்தில் புதிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, விடுதலை உணர்வு, அச்சமின்மை, சமத்துவம், பெண்கள் முன்னேற்றம், தமிழ்ப்பற்று ஆகிய விழுமியங்களை விதைத்த முண்டாசுக் கவிஞர் மகாகவி பாரதியாரின் நினைவு நாளான இன்று, அவர்தம் பெரும் புகழைப் போற்றிப் வணங்குகிறேன்.
@AIADMKOfficial
Ambattur V.Alexander - SayYEStoWomenSafety&AIADMK retweeted
ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலித்து, சமூகத்தில் தீண்டாமை நீங்கி சமத்துவம் தழைக்க பாடுபட்டவரும், தனது இளம் வயதிலேயே பிரிட்டிஷ் அரசுக்கு எதிராகப் போராடியவரும், இந்திய சுதந்திரத்திற்காக குரல் கொடுத்தவரும், இந்திய ராணுவத்தில் பணியாற்றியவரும், 'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தில் பங்கேற்று சிறை சென்றவருமான சுதந்திரப் போராட்டத் தியாகி திரு. இம்மானுவேல் சேகரன் அவர்களின் 69-ஆவது நினைவு நாளான இன்று, அவர்தம் தியாகத்தைப் போற்றி வணங்குகிறேன்.
@AIADMKOfficial
Ambattur V.Alexander - SayYEStoWomenSafety&AIADMK retweeted
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.
அவர்களின் பேரன்பிற்குரிய
மூத்த அரசியல்வாதியும்,
தமிழ்த் திரையுலகின் புகழ்பெற்ற தயாரிப்பாளருமான மறைந்த முன்னாள் அமைச்சர் திரு. ஆர்.எம். வீரப்பன் அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாளில், அவரது நினைவைப் போற்றி வணங்குகிறேன்.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.
அவர்களின் கொள்கைகளையும்,
மக்கள் நலச் சிந்தனைகளையும் முன்னெடுத்துச் சென்ற திரு. ஆர்.எம். வீரப்பன் அவர்தம் பங்களிப்பு என்றும் நினைவுகூரத்தக்கது.
அவரது பொதுவாழ்வும், திரைத்துறைக்கான பங்களிப்பும் தமிழக வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும்.
#RMV100 @AIADMKOfficial
@SathyaJyothi
Ambattur V.Alexander - SayYEStoWomenSafety&AIADMK retweeted
அந்நிய ஆதிக்கத்திற்கு எதிராகத் துணிந்து நின்று, சுதேசி கப்பல் நிறுவனத்தைத் தொடங்கி, தமிழர்களின் தொழில் வலிமையையும் தேசிய உணர்வையும் உலகறியச் செய்த சுதந்திரப் போராட்ட வீரர், சுதந்திரத்திற்காகச் சிறை, செக்கிழுத்தல் என கொடுமைகளைத் தாங்கியும், தம் கொள்கையிலிருந்து பின்வாங்காத தியாகச் செம்மல், கப்பலோட்டிய தமிழர் வ. உ. சிதம்பரனார் அவர்களின் பிறந்த நாளான இன்று,
அவர்தம் பேரும் புகழைப் போற்றி வணங்குகிறேன்.
@AIADMKOfficial
Ambattur V.Alexander - SayYEStoWomenSafety&AIADMK retweeted
ஒழுக்கத்தையும், தன்னம்பிக்கையையும், வாழ்வின் உயர்ந்த மதிப்புகளையும் ஒருங்கிணைக்கும் கல்வி அறிவைக் கற்றுத் தந்து, ஒவ்வொரு மாணவனின் எதிர்காலத்தையும் வடிவமைக்கும் அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் எனது நெஞ்சார்ந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்களுக்கான நல்வழி அரசியலை @AIADMKOfficial எனும் பேரியக்கம் வாயிலாக நமக்குக் கற்றுத் தந்த அரசியல் ஆசான்களான நம் இதயதெய்வங்கள் புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோரை இந்நாளில் போற்றி வணங்குகிறேன்.
#TeachersDay
@AIADMKOfficial
Ambattur V.Alexander - SayYEStoWomenSafety&AIADMK retweeted
அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க த.வெ.க. கூட்டணி அரசை வலியுறுத்தல்!
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
Ambattur V.Alexander - SayYEStoWomenSafety&AIADMK retweeted
நாடு போற்றும் அறிவும், மக்கள் போற்றும் அன்பும், பதவிகள் வந்த போதெல்லாம் பணிவும் நிறைந்த இந்தியாவின்
மேனாள் குடியரசுத் தலைவர்,
பாரத ரத்னா டாக்டர். ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் நினைவு நாளில், அவர்தம் பெரும் புகழை வணங்குகிறேன்.
“கனவு காணுங்கள்; அந்தக் கனவுகளை நனவாக்க உழையுங்கள்” என்ற
அவரது உயரிய சிந்தனை,
இன்றும் இளைஞர்களுக்கு வழிகாட்டும் ஒளிவிளக்காகத் திகழ்கிறது.
அவரது எளிமை, தேசப்பற்று, அறிவியல் பங்களிப்பு மற்றும் இளைஞர்கள் மீதான நம்பிக்கை என்றும் நம் மனங்களில் நிலைத்திருக்கும்.
@AIADMKOfficial





























