தமிழீழத் தேசியக் கொடி நாள் 2026
Tamileelam National Flag day 2026
கனடாவின் Brampton நகரபிதா Patrick Brown அவர்களது தலைமையில் “தமிழீழத் தேசியக்கொடி நாள்” நிகழ்வுகள் தமிழீழத் தேசியக்கொடியேற்றலோடு நிகழ்விருக்கிறது.
நாள்: சனிக்கிழமை, நவம்பர் 21, 2026
நேரம்: காலை 10:00 மணி முதல் 11:00 மணி வரை
இடம்: Ken Whillans Square, Community Flag Pole, 41 Main St S, Brampton, ON L6W 2C4.
📞 மகாஜெயம் +1 (647) 262-5587
அனைவரும் வருக, கொடியேந்தி எழுக..!
உலகத்தமிழர் உரிமைக் குரல்
Voice of Global Tamil Rights
1996இல் 19 வயதில் கைதாகி 31 ஆண்டுகள் தொடர்ந்து சிறைவாசம் அனுபவிக்கும் தமிழ் அரசியற் கைதி வி. பார்த்தீபன் (குட்டி) மயக்கம் அடைந்துள்ளார் எனவும் சிறை நிர்வாகம் போதிய கவனமின்றி இருப்பதாகவும் அறிகிறோம்.
கொழும்பு புதிய மகசின் சிறையில் G - Cell இல் இருக்கும் அவரின் உடல் நிலை தொடர்பில் ஆவன செய்வதோடு விரைவில் அவரை மருத்துவமனையில் அனுமதிக்க முயற்சிக்குமாறு தமிழ் அரசியற் செயற்பாட்டாளர்களை வேண்டுகிறோம்.
@GGPonnambalam @ImShritharan
தமிழர்சேனையின் 50 வது ஆண்டுவிழா மற்றும் சிறப்பு நூல் வெளியீடு...!
22.11.2026 ஞாயிறு பி.ப 2.30 - Soest
தலைவனையும் தமிழர்சேனையின் சிறப்பையும், மாவீரரையும் போற்றுவோம் வாரீர்..!
தொடர்பு: பாபு - +49 176 41648852
30.10.1986 - யாழ் மத்திய கல்லூரியின் வெள்ளைச் சீருடையில் விழுந்த சிவப்பு புள்ளி...
ஒரு ஆசிரியரின் நினைவுக் குறிப்பிலிருந்து...
பாடசாலை மணி அடித்திருக்கும். Smith Block-ல் கரும்பலகையில் சுண்ணாம்பு எழுத்துக்கள். வெளியே யாழ் கோட்டையின் திசையில் இருந்து ஒரு சத்தம்... முதலில் ஒன்று, பிறகு பல... சரமாரியாக.
நான் அப்போது தரம் 1 கூட இல்லை. பள்ளிக்கு மிக அருகில் வீடு. என் வயது 4 அல்லது 5. ஆனால் அந்த சத்தம் என் குருதியில் ஏறியது. இன்று 2026-ல், இதே யாழ் மத்திய கல்லூரியில் ஆசிரியராக நிற்கிறேன். ஆனால் அந்த நாளின் வடு இன்னும் ஆறவில்லை.
அவன் பெயர் பொன். விபுலானந்தன்.
மாணவத் தலைவன். Prefect. வெள்ளை சீருடை அணிந்த அந்த அண்ணன், எங்கள் எல்லோருக்கும் ஒரு அண்ணன்.
30.10.1986 அன்று துப்பாக்கி வேட்டுக்கள் கோட்டையில் இருந்து வெடித்தபோது, Smith Block-ல் இருந்த நூற்றுக்கணக்கான சிறு பிள்ளைகள் சிதறி ஓடவில்லை. காரணம், வாசலில் ஒருவன் இரு கைகளையும் விரித்து நின்றான்.
"சத்தம் போடாமல் இருங்கள்... அமைதியாக இருங்கள்... பயப்படாதீர்கள்..."
அவன் தன் உயிரைப் பற்றி யோசிக்கவில்லை. அவன் கண்களில் தன் தம்பிகளை காக்க வேண்டும் என்ற ஒரே தீ.
அப்போது தான் அந்தக் குண்டு பாய்ந்தது.
அவன் சரிந்து விழுந்தான்.
புலம்பெயர்ந்த தேசத்தில் இருந்து "வடக்கின் பெரும் போர்" துடுப்பாட்டம் பார்க்க வந்தபோது ஒருவர் சொன்னார்:
"நாங்கள் அவனை தூக்கினோம் மாஸ்டர். ஆரம்பப் பிரிவு வாசல் வழியாக வைத்தியசாலைக்கு ஓடினோம். அவன் வெள்ளைச் சீருடை முழுவதும் இரத்தத்தில் தோய்ந்து சிவப்பாக மாறி இருந்தது. வெள்ளைச் சீருடை சிவப்பானதை அன்று தான் முதன்முதலில் பார்த்தோம். காப்பாற்றத் துடித்தோம்... ஆனால் அந்த செய்தி எங்கள் தலையில் பேரிடியாக விழுந்தது - விபுலானந்தன் இல்லை."
இது ஒரு மரணத்தின் கதை அல்ல, இது ஒரு தலைமைத்துவத்தின் கதை.
உண்மையான மாணவத் தலைவன் என்பவன் Badge குத்தியவன் அல்ல. துப்பாக்கி சத்தத்தில் தன் நண்பர்களை விட்டு ஓடாமல், இரு கைகளையும் விரித்து அரணாக நின்றவன்.
பாடப் புத்தகங்கள் தலைமைத்துவத்திற்கு பல வரையறைகள் சொல்லும். ஆனால் யாழ் மத்திய கல்லூரி 30.10.1986 அன்று ஒரு புதிய வரையறையை எழுதியது - அதன் பெயர் விபுலானந்தன்.
Smith Block இன்னும் இருக்கிறது. ஆனால் அந்த வாசலில் நின்ற அந்த கைகள் இல்லை. அந்த குரல் இல்லை.
வெள்ளைச் சீருடையின் பின்னால் எவ்வளவு பெரிய தியாகம் இருக்கிறது என்று பலருக்குத் தெரியாது. படிப்பு மட்டும் வாழ்க்கை அல்ல, சக மனிதனுக்காக நிற்கும் தைரியம் தான் வாழ்க்கை.
பொன். விபுலானந்தன் - 30.10.1986..
நீ இறக்கவில்லை அண்ணா. யாழ் மத்திய கல்லூரியின் ஒவ்வொரு வெள்ளைச் சீருடையிலும், ஒவ்வொரு Prefect Badge-லும், ஒவ்வொரு ஆசிரியரின் நினைவிலும் நீ வாழ்கிறாய்.
உன் இரத்தம் தோய்ந்த சீருடை தான் எங்கள் கல்லூரியின் மிகப் பெரிய கொடி.
ஆழ்ந்த அஞ்சலிகளுடன்,
உன் தம்பி
@30sec2remember
எமது Whatsapp செய்தித்தளம்.
whatsapp.com/channel/0029VaV…
இவ்விணைப்பை அழுத்தி இணைக. (உங்களது இலக்கங்களைப் பிறர்காணவியலாது)
கட்டுக்கதைகளிலும், Novel என்ற உருட்டல்களிலும் தங்கியிருப்பதை விட்டு வெளிவந்து, எமது வரலாறுகளை நாமே எழுதுவோம். அவற்றிலிருந்து எம்மை நாமே வளர்த்தெடுப்போம். இனிவரும் தமிழ்ச்சந்ததிக்கு எம்பெருமைகளை எடுத்தியம்புவோம்.
எமது இனத்தின் தொன்மையும் வரலாறும் எழுத எழுதத் தீரா வகையில் கொட்டிக்கிடக்கிறது. சோழர்களுக்குப் பிறகு பண்டாரவன்னியன் தொடங்கி எங்கள் தனிப்பெரும் அதிமானுடனுடான தலைவர் வரைக்குமான ஆயிரமாயிரம் வரலாறுகளை நாமே எழுதுவோம், ஆவணமாக்குவோம், பதிப்பிப்போம், பரப்புவோம்.
தனியே ஆவணப்படுத்தலில் மட்டும் நின்றுவிடாது, தமிழர்களினது போரியலை, வீரத்தை, நன்னெறியொழுக்கத்தை, பண்பாட்டு வழக்கங்களை, தடங்களை, மாவீரரை, தலைவரை, த/மி/ழீ/ழத்தைப்பற்றித் தொடர்ந்து எழுதி அச்சிட்டுப் பரப்புவதோடு;
தமிழினத்தின் உயர்மதிப்பிலிருந்து துளியும் வழுவாத, நேர்மையும் நீதியும் பிறழாத, எமது போராட்டத்தையும் மாவீரரையும், அடையாளங்களையும் எள்ளளவிலும் விட்டுக்கொடாத, தன்னலம் மறந்த, தனித்துநின்று இயங்கக்கூடியதான ஒரு அச்சுப்பதிவு நிறுவகத்தை உருவாக்கியுள்ளோம்.
"#உலகத்தமிழர்பதிப்பகம்" எனும் பெயரில் கடந்த தைப்பொங்கலன்று முறைப்படி பதிவுசெய்யப்பட்டு, இயங்கத் தொடங்கியிருக்கிறது எமது வரலாறுகளைக் கடத்துவதற்கான ஒரு நீரோடை.
தெளிந்த, நெறிமுறை பிறழாத வரலாறுகளையும் கட்டுரைகளையும் தொகுத்து அச்சிட்டுப் பரப்புவதோடு, ஆற்றல்மிக்க புதிய தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிப்பதே எமது முதன்மை நோக்கமாகும்.
இதுவரை 7 நூல்களை வெளியிட்டு, எட்டாவது நூலாக எதிர்வரும் 22.11.2026 அன்று "புலிப்பண்பாடு" வெளிவருகிறது.
தமிழ் மட்டுமன்றி English, Deutsch எழுத்துருக்களிலும் வரலாறுகள் பதிப்பக்கப்படவுள்ளன.
வாருங்கள், இணைந்து பயணிப்போம்.
கருத்துப்பகுதியில் எமது Twitter இணைப்பு:
(படம்: எமது முதற்பதிப்பான நந்திக்கடல் பேசுகிறது. தொகுப்பு: ஜெரா )
2020 ஆம் ஆண்டு வெண்பா புத்தகசாலை நடாத்திய கணிப்பில், அதிகம் விரும்பிவாசிக்கப்பட்ட 5 நூல்களில் இரண்டாவது இடத்தைப் பெற்ற நூல் இதுவாகும்.
தமிழ்நாட்டுக்கு வந்து, தமிழ்ச் செல்வி என்று பெயர் வைத்துக் கொண்டு, தமிழ்நாட்டிலேயே பணியாற்றி, தமிழைத் தாழ்த்துவது.
இதுதான் திராவிடம்.
"கன்னடத்திற்கு இருப்பது போல் இலக்கண, இலக்கியங்கள் வரலாற்று சிறப்புகள் எதுவும் தமிழ் மொழிக்கு கிடையாது.
-சென்னை பல்கலைக்கழகப் பேராசிரியர் "தமிழ்ச்செல்வி"
காலக்கொடுமை .
இதை இட்லின்னு சொன்னால் சட்னி கூட நம்பாது...
தொல்காப்பியத்தின் காலம் தெரியுமா..?
தமிழர்களின் வரி பணத்தில் சம்பளம் வாங்கி கொண்டு .
தமிழை பழிக்கும் இந்த மாதிரியான
ஜென்மங்களை வேடிக்கை பார்க்க பழகிவிட்டான்..
கருணாநிதி சொன்ன
சோற்றால் அடித்த பிண்டங்களான தமிழர்கள்.
பதிவு: சந்திரன் ராஜா
Watch the full video in comment box
Voice Of Global Tamil Rights retweeted
எங்கள் முதலாவது வெளியீடு
#நந்திக்கடல்பேசுகிறது
தொகுப்பு: ஜெரா
@VoiceCounts1 அமைப்பால் 2019 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட முதல் நூல் …
2020 அதிகம் விரும்பி வாசிக்கப்பட்ட 5 ஈழத்துப்படைப்புகளில் ஒன்று !
#voicepublishers #book #நந்திக்கடல்
#நந்திக்கடல்பேசுகிறது
Where Is Krishnakumar, Who Returned to Sri Lanka from India? The Sri Lankan Government Must Respond Immediately!
Mr. Krishnakumar, who left Sri Lanka in 2009 due to the prevailing situation in the country, had been detained at the Tiruchirappalli (Trichy) detention camp in India.
Around 2015, he was convicted and sentenced in connection with a case filed against him in India. Even after completing his sentence, he continued to remain in detention for several years.
Subsequently, Mr. Krishnakumar made efforts to return to Sri Lanka. Yesterday evening (26 October 2026), he was repatriated to Sri Lanka.
He departed India at approximately 4:00 PM yesterday on a SriLankan Airlines flight. Before his departure, he personally contacted me and informed me that he was returning to Sri Lanka.
He was expected to arrive in Sri Lanka between approximately 5:45 PM and 6:00 PM. However, since his arrival, there has been no communication from him whatsoever. His family has also received no information regarding his whereabouts.
We have strong reasons to suspect that he may have been arrested upon his arrival in Sri Lanka.
The Sri Lankan government has publicly invited Sri Lankans living abroad, particularly those residing as refugees or being held in detention camps in India, to return to their homeland.
However, if a person returning to his own country can disappear without even being able to make a single telephone call to his family, how can other Sri Lankan refugees living in India have the confidence to return?
Where is Krishnakumar? Has he been arrested? If so, on what charges was he arrested? Where is he currently being detained?
The Sri Lankan government and the relevant security authorities must immediately provide clear answers to these questions.
I urge Members of Parliament, civil society activists, and human rights defenders to give their immediate attention to this matter.
Disclose the truth about Mr. Krishnakumar’s whereabouts immediately!
Thank you.
Rajkumar Rajeevkanth
ஈழத்தமிழர்களை நாடுகடத்தும் தமிழக அரசு.
இலங்கை அரசுக்குத் திருப்பி அனுப்பப்படும் ஈழத்தமிழர்களின் உயிருக்கும் பாதுகாப்புக்கும் எவ்வித உத்தரவாதமும் இல்லை என்பதற்கு கிருஷ்ணகுமாரின் சம்பவமே கண்கூடான சாட்சி. இதே ஆபத்து திரு. சுபாஷ்கரன் அவர்களுக்கும் நிகழ தமிழ்நாடு அரசு வழிவகுத்துவிடக் கூடாது!
சட்டப் பாதுகாப்பு மற்றும் மனித உரிமை அம்சங்கள்: கடந்த ஆண்டு இந்திய அரசால் கொண்டுவரப்பட்ட 'Immigration and Foreigners (Exemption) Order, 2025' விதிகளின்படி, 2015 ஜனவரி 19-க்கு முன்னர் இந்தியாவில் தஞ்சம் புகுந்த ஈழத்தமிழர்கள் எவ்வித சட்டச் சிக்கலுமின்றி இந்தியாவிலேயே தொடர்ந்து வசிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்தச் சட்டப் பாதுகாப்புத் தகுதி திரு. சுபாஷ்கரன் அவர்களுக்கும் முழுமையாகப் பொருந்தும்.
எமது முதன்மையான வேண்டுகோள்:
1) நாடுகடத்தல் உத்தரவைத் திரும்பப் பெறுக!
திரு. சுபாஷ்கரன் அவர்களை வலுகட்டாயமாக இலங்கைக்கு நாடுகடத்தப் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவை அரசும் காவல்துறையும் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.
2) குடும்பத்தோடு வாழ அனுமதி வழங்குக! அவரைச் சிறப்பு முகாமிலிருந்து உடனடியாக விடுதலை செய்து, சென்னையில் உள்ள அவரது மனைவி மற்றும் குழந்தைகளுடன் இணைந்து வாழ அனுமதிக்க வேண்டும்.
3) தஞ்சமளிக்கும் கடமையைக் காக்க வேண்டும்!
2009 தமிழீழ இனப்படுகொலைக்குப் பிறகு தாய்த்தமிழ்நாட்டை முழுமையாக நம்பி வந்தவர்களைக் கைவிடுவது வரலாற்றுப் பிழையாகும். ஈழத்தமிழர்களின் உயிருக்கும் வாழ்வுக்கும் பாதுகாப்பளித்து அரவணைக்க வேண்டிய பொறுப்பு தமிழ்நாடு அரசுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் உண்டு.
தாய்த்தமிழக அரசே...!
ஈழத்தமிழர் சுபாஷ்கரன் அவர்களின் உயிரைக் காக்க உடனடியாக நடவடிக்கை எடுங்கள்!
#SaveSubashkaran #StopDeportation #EelamTamils #JusticeForSubashkaran #TamilNaduGovt #StandWithEelamTamils
CONGRATULATIONS MAYOR @patrickbrownont
ON YOUR LANDSLIDE RE-ELECTION AS MAYOR OF BRAMPTON!
Your recognition of the Tamileelam National Flag and support for a Tamil Genocide Monument reflect meaningful steps toward honouring Tamil identity, remembrance, and justice.
Wishing you continued success as you lead Brampton toward a stronger, more inclusive future!
வலிகாமத்திலிருந்து வன்னிவரை - நூல்வெளியீடு
#மாமனிதர்நாவண்ணன்
உலகம் பல மனிதர்களை அடையாளப்படுத்துகிறது. சிலரை மட்டும்தான் இந்த உலகம் தனது அடையாளங்களில் ஒன்றாக மாற்றிவிடுகிறது. தமிழினத்திலே பிறந்த அந்த அதிமானுடனை இவ்வுலகம் எமது அடையாளமாக மாற்றிவிட்டது.
அவர் யாரிடமிருந்தும் எதையும் எதிர்பார்க்கவில்லை, யாரும் தன்னை முன்மொழிவார்கள் எனக் காத்திருக்கவுமில்லை. ஆனால் ஒட்டுமொத்தத் தமிழர்களின் தேவையையும் தன்சுமையாக எண்ணிக்கொண்டார்.
"சாவு வரும்போது வரட்டும்", என்று கூறிக்கொள்ளும் அந்த அதிமானுடன் அந்த நொடியின் பிறப்புவரை வேறு எதையும் சிந்தித்ததில்லை. தன்னுடைய வாழ்வை இனத்தின் பெருமைமிகு அடையாளமாக இந்தஉலகம் மாற்றும் என்பதைக்கூட அவர் சிந்தித்தில்லை.
அவர் உருவாக்கிய பண்பாடு வழியே அவர் நடந்தார், வாழ்ந்துகாட்டினார். இந்த இனத்தின் முதன்மை ஒழுக்கசீலராக, அறத்தில் மேம்பட்ட மானுடனாக, இயற்கையின் நேசனாக, இனத்தின் வலிகளையெல்லாம் தனது நெஞ்சில் ஏந்திக்கொண்டவராக வாழ்ந்த அவர், இறுதிவரை தனது பண்பாட்டிற்கு இழுக்கு நேர அனுமதித்தில்லை.
அப்பண்பாட்டின் வழி இந்த இனமும் உலகெங்கும் நிமிரவேண்டும் என உள்ளார்ந்து இயங்கினார். அப்பாண்பாட்டின் வழியே இளைஞர்களை வழிநடாத்தினார். எவ்வித இழிபழக்கமுமற்ற சமூகத்தையும், அச்சமூகத்திலிருந்து வீரமிக்க இளைஞர் குழாமையும் அப்பண்பாட்டின் வழி கட்டியெழுப்பினார். போரிலும், கல்வியிலும், அறிவியலிலும் உலகிற்கே முன்னோடியான அவர்கள், போரில் வீழும்போது விதையாக்கினார். அவர்களையே இனத்தின் வணங்குதலுக்குரிய மேன்மக்களாக மக்களிடம் கையளித்தார்.
அப்பண்பாடுதான் எம்மினத்தை இன்றுவரை தாங்கிப்பிடித்திருக்கும் அத்திவாரம்.
அதுதான் #புலிப்பண்பாடு.
தவிபு களின் 50 வது ஆண்டு நிறைவையொட்டி, தேசியத்தலைவரினதும் அவர் கட்டியெழுப்பிய படையினதும் உளவியல் மற்றும் சித்தாந்தப் பக்கங்களை நாம் சிந்திக்காத கோணத்தில் வடித்திருக்கிறார் பிர.சட்டகம் புகழ் கலாநிதி சேதுராமலிங்கம்.
உலகத்தமிழர் உரிமைக்குரல் Voice of Global Tamil Rights அமைப்பின் பதிப்பகமான #உலகத்தமிழர்பதிப்பகம் @ulagapathippu , மாவீரர் வாரமான #Nov 22 முதல் உலகெங்கும் பெருமையோடு வெளியீடு செய்யும் ஒரு "பிரவாகப்படைப்பு...!"
#புலிப்பண்பாடு
#தமிழினத்தின் #அடுத்த #பரிணாமம்
தேசியத்தலைவர்
பிரபாகரன் படத்துடன் தனது முதல் பட்டத்தை பெற்றார் தமிழகத்தைச்சேர்ந்த செல்வன் சந்துரு.ஈன்ற பொழுதிலும் தன்மகனை சான்றோன் என கேட்ட தாய் எனும் நெகழ்ச்சியோடு வாழ்த்து உரித்தாகட்டும்...
#தலைவர
#மேதகு
#பிரபாகரன்
#பட்டதாரி
#பின்தொடர்பவர்கள்
@highlight















