Pinned Tweet
Spot the odd one out , where are we heading ? @CMOTamilnadu
அமரன் retweeted
எம்ஜியார் போல ஒரு நடிகர் தமிழ் நாட்டு முதல்வர் ஆவது என்பது இனிமேல் நடக்காத காரியம் என்று தான் நான் கடந்த 20-30 வருடங்களாக நினைத்திருந்தேன்.
காரணம், எல்லோருக்கும் பரவலான கல்வி. அந்தக் கல்வியால் மக்களுக்குக் கிடைத்த எக்ஸ்போஷரால், சினிமாவில் வருவதெல்லாம் நிஜ வாழ்வில் நடக்காது என்று உணர்ந்த ஒரு கற்றறிந்த தலைமுறை தான் இங்கு இருக்கிறது என்று எண்ணியது, தவிர சினிமா என்னும் பொழுது போக்குத் தொழிலையும், அரசியல் என்ற மிக அத்தியாவசியமான செயல்முறையையும் படித்த இந்தத் தலைமுறையினர் குழப்பிக் கொள்ள மாட்டார்கள் என்று நினைத்தது.
தவிர விஜயகாந்த், கமல்ஹாசன் போன்ற நடிகர்களின் தோல்வி, மற்றும் திமுக கூட்டணிக்குக் கிடைத்த தொடர் நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல் வெற்றிகள், பாஜகவை ஒதுக்கி ஒன்றுமில்லாமல் வைத்திருந்தது, ஆகியவை தமிழ்நாடு சரியான பாதையில் தான் போய்க் கொண்டிருக்கிறது என்ற எண்ணத்தைக் கொடுத்தது.
ஆனால், விஜயின் வருகை தான் இதெல்லாம் வெறும் பூச்சு என்பதையும், அடியாழத்தில் மக்கள் 70-80 களில் இருந்த கல்வியறிவு குறைந்த மக்களைவிட சிந்தனாசக்தி அற்றவர்களாக, கல்வியின் பலன் எள் முனையளவும் சிந்தனையை மேம்படுத்தாத மக்களாகத் தான் வாழ்ந்து வருகிறார்கள் என்ற உண்மையைச் செவிட்டில் அறைந்து சொல்லி இருக்கிறது.
எம்ஜியாரைத் தேர்வு செய்ததில் கூட ஒரு நியாயம் இருக்கிறது. அவர் வெறும் நடிகராக மட்டும் இல்லை, ஒரு தத்துவத்தை, கொள்கையைத் தன் படங்களின் மூலம் பல ஆண்டுகள் பரப்பியவராக, நேரடி அரசியலில் பங்கு பெற்றவராக, அரசு இயந்திரத்தை அருகில் இருந்து பார்த்தவராக, அனுபவம் பெற்றவராக இருந்திருக்கிறார். அவருடன் அனுபவசாலிகளும் உடன் இருந்தார்கள். அவரால் ஒரு அரசைத் திறம்பட நிர்வாகம் செய்ய இயலும் என்று மக்கள் நம்பியதில் ஒரு நியாயம் இருக்கிறது. ஜெயலலிதாவுக்கும் கட்சியில் ஆட்சியில் அனுபவம் இருந்தது. வெறும் சினிமா நடிகை என்று மட்டும் சொல்லி விட முடியாது. கொபசெவாக நியமித்ததில் ஆரம்பித்து, அரசியலில் கொஞ்சமாவது அனுபவம் பெற்றவராக, அரசியல் அறிந்தவர்களால் அரசியல் கற்பிக்கப் பட்டவராக இருந்தார்.
ஆனால், பிரச்சாரம் செய்யக்கூடப் பொறுப்பில்லாமல் லீவு எடுத்துக் கொண்டு வீட்டில் படுத்துகொண்டிருந்த ஒருவரை, ஆறு மணிக்கு மேல் வெளியே காணவே இயலாத ஒருவரை, 20 தொகுதிக்கு மேல் மக்களைச் சென்று சந்திக்காத ஒருவரை, வேட்பாளர்களாக அதிக பட்சமாக கிரிமினல்களையும், பொய்யர்களையும், சுத்தமாக அரசு இயந்திரம் என்றால் என்ன, அரசியல் என்றால் என்ன என்றே அறியாத தற்குறிகளையும் நியமித்த ஒருவரால் அரசை நடத்த முடியும் என்று நம்பி இந்த மக்கள் வாக்களித்திருக்கிறார்களே, அதுவும் கடந்த 106 வருடங்களில் தமிழகம் காணாத மிகச் சிறந்த அரசை நடத்தியவர்களைத் தூக்கி எறிந்து வாக்களித்திருக்கிறார்களே, இந்த மக்களை என்ன சொல்வது?
சத்தியமாக இவ்வளவு முட்டாள்களாக இந்த மக்கள் இருப்பார்கள் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை! இவர்களுக்குக் கல்வி என்ன தான் செய்தது என்ற கேள்வி மனதிற்குள் ஓடிக்கொண்டே இருக்கிறது....
- Swaminathan Poornachandran
அமரன் retweeted
"எதிர்க்கட்சியாக திமுக சிறப்பாக செயல்படும்" என்று ஒரு உருட்டு, சொல்லி வைத்த மாதிரி பாண்டேவில் இருந்து மணி வரைக்கும் எல்லா விமர்சகர்களும் மீடியாக்களும் இதே கருத்தை பரப்புகிறார்கள், ஆனால் இது ஒரு பெரிய உண்மையை மறைப்பதற்கான சிறிய உண்மை, எதிர்க்கட்சியாக திமுக சிறப்பாக செயல்படும் என்றால் ஆளுங்கட்சியாக சிறப்பாக செயல்படாதா?
உண்மையில் தமிழ்நாட்டு வரலாற்றில் ஆளுங்கட்சியாக மிகச் சிறப்பாக செயல்பட்டது திமுக தானே, சுயமரியாதை திருமணம், பெண்களுக்கு சொத்துரிமை, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு தொடங்கி இன்றைக்கு தமிழ்நாட்டில் கை கொடுக்கும் தொழிற் பூங்காக்கள் சிப்காட் எல்காட் டைடல் பார்க் போன்றவை எல்லாம் திமுக ஆளுங்கட்சியாக செயல்பட்டு போடப்பட்ட திட்டங்கள் இல்லையா? ஏன் இப்போது முதல்வர் விஜய் திறந்து வைக்கும் மெட்ரோ, பெரியார் அறிவுலகம் போன்ற அடுக்குமாடி நூலகங்கள் எல்லாம் திமுக ஆட்சி காலத்தில் போடப்பட்ட திட்டங்கள்தானே,
ஆனா இந்த நயவஞ்சகமான பத்திரிக்கையாளர்கள் எல்லாம் திமுக எதிர்க்கட்சியாக இருந்தால் சிறப்பாக செயல்படும் அதுதான் ஜனநாயகத்திற்கு நல்லது என்பது போல உருட்டுகிறார்கள்,
உண்மையில் திமுக ஆளும் கட்சியாக இருக்கும் போதுதான் ஜனநாயகத்திற்கு நல்லது ஏனென்றால் அப்போதுதான் மொத்த மீடியாக்களும் அரசியல் விமர்சகர்களும் ஆக்டிவா கண்கொத்திப் பாம்பாக இருக்கின்றன, ஒரு திமுக கிளை செயலாளர் ஒன்றுவிட்ட சொந்தக்காரன் செய்த தவறுக்கு கூட முதல்வர் பதவி விலக வேண்டும் என்று இழுத்து வைத்து பேசுவார்கள், அந்த அளவுக்கு ஆக்டிவாக ஊடகங்கள் வினையாற்றும்
அதே தவெக ஆளும்கட்சியாக இருக்கும் இந்த காலகட்டங்களில் பாருங்கள், 9 மீனவர்கள் புயலில் சிக்கி இறந்திருக்கிறார்கள் அரசு காப்பாற்றவில்லை என்று மீனவர்கள் போராடுகிறார்கள் ஆனாலும் ஜாலியாக ஆந்திராவுக்கு ஜோடியாக திருமணத்திற்கு சென்று வர முடிகிறது, எந்த மீடியாக்களும் முதலவர் விஜயை நெருக்கடிக்கு நெருக்கடிக்கு உள்ளாக்கவில்லை,
ஒரு பெண் குழந்தை காணாமல் போய் ஒரு மாதம் ஆகிறது, இதுவரை சிறிய துப்பு கூட கிடைக்கவில்லை, நாள் தவறாமல் தினந்தோறும் கொலைகள் நடக்கிறது, தவெக பொறுப்பாளர் மெத்தபைன் கடத்துகிறார், துணை சபாநாயகர் மனு கொடுக்க வந்தவரை அடிக்கிறார், தவெக எம்.எல்.ஏ பெண் ஐ.ஏ.எஸ் ஆபிசருக்கு தொந்தரவு கொடுக்கிறார் இவ்வளவுக்கு பிறகும் முதல்வருக்கு எந்த நெருக்கடியும் கொடுக்காமல் ஆணி அடிக்கப்பட்ட தகர தட்டிகளுக்கு வெளியே நிறுத்தப்படுவதை பெருமையாக கருதுகின்றன மொத்த மீடியாக்களும்,
யோசித்துபாருங்கள் இப்படி ஒரு அரசியல் சூழலில் திமுக ஆளுங்கட்சியாக ஸ்டாலின் முதல்வராகவும் இருந்திருந்தால் இந்த மீடியாக்களை இப்படித்தான் ரியாக்ட் செய்திருக்குமா? பாண்டேவும் மணியும் இப்படித்தான் வருடிக் கொண்டிருப்பார்களா?
உண்மையில் மீடியாக்களும் மொத்த அரசியல் விமர்சகர்களும் ஆக்டிவாக இருப்பது திமுக ஆளுங்கட்சியாக இருக்கும் காலத்தில்தான் எனவே திமுகவை ஆளும் கட்சியாக வைப்பதுதான் ஜனநாயகத்திற்கும் ஆட்சி நிர்வாகத்திற்கும் சிறப்பாக இருந்திருக்கிறது என்பதுதான் கடந்தகால தமிழ்நாட்டு வரலாறு..
#copied
அமரன் retweeted
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தகாத message அனுப்பிய குற்றச்சாட்டில் த.வெ.க MLA அருள் விக்னேஷை இந்த Dummy CM இன்னமும் பாதுகாப்பது ஏன்?
கோரிக்கை வைத்தவரை அடித்து துன்புறுத்திய துணை சபாநாயகர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு என்ன காரணம்?
இது ஆட்சியா? இல்லை, த.வெ.க-வினர் அத்துமீறுவதற்காக அமைக்கப்பட்டிருக்கும் அலங்கோல syndicate-ஆ?
Dummy CM-க்கு, தப்பு செய்யும் தன் கட்சிக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க துணிச்சல் இல்லை.
ஆனால், அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் - த.வெ.க MLA-க்களுடன் ஆலோசனைக்கூட்டம் என்று வேக வேகமாக Diversion politics-ல் இறங்குகிறார்.
ஆலோசனைக் கூட்டத்தில், அனல் கக்கினார் - அக்கினி குழம்பை அள்ளி ஊற்றினார் என்று Online Mafia-வையும், Paid பேரில்லா பிச்சைகளையும் வைத்து Reels ஓட்டினால் மக்கள் மறந்துவிடுவார்களா?
மவுன முதலமைச்சருக்கு மனசாட்சி இருந்தால் தவறு செய்யும் உங்கள் கட்சிக்காரர்களை கட்டி வையுங்கள். இல்லை மக்கள் சக்தி தட்டி வைக்கும்.
அமரன் retweeted
ரசிகர்களை, பெண்களை கொதிநிலையிலேயே வைத்திருக்க தான் பேசிய வசனங்கள், பஞ்ச்லைன்கள், மாடுலேஷன்கள் எல்லாம் தனக்கு எதிராகவே திரும்பும் என ஒரு நொடி கூட நினைத்திருக்க மாட்டார்.
விஜய் பாணியிலேயே சொல்வதென்றால்,
"பயமா இருக்கா? இனிமே இன்னும் பயங்கரமா இருக்கும்".
அமரன் retweeted
Justice Kurien Joseph குழுவை கலைக்கும் நாடகத்தை எப்படி சதித்தனமாக தவெக அரசு அரங்கேற்றியது என்பதை, அந்தக் குழுவில் உழைத்த Research scholar வாஞ்சிநாதன் விளக்குகிறார் - இந்த அரசு பாஜக வின் trojan horse என்பதற்கான நேரடி சாட்சியம்.
அமரன் retweeted
மாநில உரிமைகள் என்றாலே தமிழ்நாடு என்று இந்திய அளவில் நமக்கு இருக்கும் பெருமையை அற்ப அரசியலுக்காகச் சிதைத்திருக்கிறது த.வெ.க. அரசு!
இந்தியா முழுவதிலும் இருந்து அறிவார்ந்த ஆன்றோர்கள் தெரிவித்து வரும் கண்டனங்களே த.வெ.க.வின் இழிவான அரசியலை அம்பலப்படுத்திவிட்டன.
நீதியரசர் குரியன் ஜோசப் அவர்களும், திரு. அஷோக் வர்தன் ஷெட்டி அவர்களும், பேரா. மு. நாகநாதன் அவர்களும் மேற்கொண்ட பணியில் யாரும் குறைகாணவும் முடியாது, அதனை வேறு எவரைக் கொண்டும் நிறைவுசெய்யவும் முடியாது.
இத்தகைய சிறப்பான பெருமக்கள் கொண்ட குழுவை அமைத்த பெருமை எனக்கு எப்போதும் இருக்கும், இதனைப் பாதியில் கலைத்த சிறுமைதான் த.வெ.க. அரசின் மேல் காலத்துக்கும் நிலைக்கும்!
The TVK government has damaged Tamil Nadu’s proud reputation as India’s leading voice for State rights, all for petty politics!
The condemnation from eminent voices across India has exposed the TVK government’s disgraceful politics.
No one can find fault with the remarkable work of Justice Kurian Joseph, Thiru. Ashok Vardhan Shetty and Prof. M. Naganathan. Nor can anyone else replace them and complete the work they began.
I will always be proud of having constituted such a distinguished Committee. The TVK government will forever bear the shame of having disbanded it midway!
#StateRights #Federalism
அமரன் retweeted
நேர்முக அரசியலின் தாக்கத்தைவிட மறைமுக அரசியலின் தாக்கம் மிகவும் ஆபத்தானது.அது ஒரு மாநிலத்தின் அடிப்படை கொள்கை கோட்பாடுகளை சின்னாபின்ன மாக்கி வளர்ச்சியை குன்றச்செய்து அழிக்கும் புதைகுழியாகும். வன்மத்தைக் காட்டிலும் கொடியது சூழ்ச்சியும் சாணக்கியத்தனமும்.
"Heroes are forgiven. Governments have to answer". Sad state of democracy
Sharing my latest article for @TheSouthfirst, expanding on the #WALIAIT series.
This examines the mechanisms of how routine administrative work & baseline social etiquette are systematically transformed into personal miracles by #TVK sympathisers on social media. More importantly, it explores what this manufactured devotion ultimately costs democratic scrutiny & public accountability.
"Heroes are forgiven. Governments have to answer".
Article 🔗: thesouthfirst.com/opinion/ho…
#WALIAIT #TNPolitics #Governance #Agnotology #TVK #TamilNadu
48
அமரன் retweeted
வரலாறு என்னை விடுதலை செய்யும்... இது எங்கு ஆற்றிய உரை தெரியுமா? - ஆதவன் தீட்சண்யா
முழு காணெளி: youtu.be/YePa46RYq9A
#Theekkathir | #FidelCastro | #Cuba
எடுக்கறது யானையும் இல்ல அடிக்கிறது ராஜாவும் இல்ல ஆனா அந்தக் தற்குறித்தனமா @TVKVijayHQ confidence தா உங்கள வாழ்வச்சிட்டு இருக்கு.நம்ப ஒரு கும்பல் இருக்கற வர உங்க காட்டுல மழை. இதுவும் தமிழ்நாடு பாக்கணும். எல்லாம் பட்டதானே புரியும்.உயிர் போற நிலையில இளிச்சவாயன் @arivalayam வருவான்
ஊழல் நடந்துள்ளது என்று அமைச்சர் குற்றச்சாட்டு முன் வைத்துள்ளார் அடுத்த கட்டம் என்ன ?
யார் மீது எல்லாம் வழக்கு பதியப்படும் ?
யார் எல்லாம் கைது செய்யப்படுவார்கள் ?
இதுவரை இது குறித்து என்ன விசாரனை நடந்துள்ளது ?
இதற்கு எல்லாம் பதில் வேண்டும் வெறுமனே A4 பேப்பரை காட்டி ஊழல் நடந்துள்ளது என்று குற்றச்சாட்டு சொல்லி விட்டு கடந்து செல்லாமல் அடுத்து என்ன ? என்பதையும் முழுமையான விசாரனை அறிக்கையையும் வெளியிட வேண்டும்.
@imrajmohan
1
50
யோக்கிய சிகாமணி @Vaikooffl "போர்வாள்" இப்போ அதிகாரத்தில் இருக்கும் அரசை நடவடிக்கை எடுக்க சொல்லி கேட்கலாமே
புது யுகத்தின் தீர்க்கதரிசி, தென் கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ், சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை, அறியாமை, மூடநம்பிக்கை, அர்த்தமற்ற சம்பிரதாயம், இழிந்த வழக்கங்கள் ஆகியவற்றின் கடும் எதிரி” என்று யுனெஸ்கோவின் சிறப்புமிகு விருதைப் பெற்ற அறிவு ஆசான் தந்தை பெரியார் பெயரில் கோவையில் அமைந்துள்ள பெரியார் அறிவுலகத்திற்கு நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் நடந்துள்ள இமாலய ஊழல் எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்களால் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.
சமூகச் சீர்திருத்த இயக்கம் கண்ட தலைவர் பெயரால் அமைந்துள்ள நூலகத்தில் குப்பையில் வீசி எறியப்பட வேண்டிய நூல்களை கொள்முதல் செய்து பகல் கொள்ளை அடித்து இருப்பது கடும் கண்டனத்திற்கு உரியது ஆகும்.
இது போன்ற வெட்க கேடான நிகழ்வு உலக வரலாற்றில் இது வரை நடைபெற்றது இல்லை.
அகல்விளக்கு பதிப்பகம்’ என்ற பெயரில் வெளியிட்ட 1,800 நூல்கள் வாங்கப்பட்டுள்ளன.
அகல்விளக்கு பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட ’நாலடியார் வாழ்வின் வழிகாட்டி’ (ஆசிரியர்: சூர்யா பாலு) என்னும் 300 பக்க நூலின் விலை ரூ. 1,445. அந்த பதிப்பகத்தின் ஒவ்வொரு நூலும் பலமடங்கு அதிக விலையில்தான் இருக்கின்றன. பிற பதிப்பகங்கள் இதே பக்கங்களை கொண்ட நூல்களை ரூ. 350-க்குதான் விற்கிறார்கள்.
தனலட்சுமி அர்ஜுன் என்பவர் எழுதிய ’தமிழ்நாடு ஒரு பார்வை’ நூலில், தமிழ்நாட்டின் முதன்மை முதலமைச்சராக முத்துவேலு சுப்பையா அய்யர் (1947) என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அகல்விளக்கு பதிப்பகத்தின் எல்லா நூல்களும் இப்படிதான் இருக்கின்றன.
அகல்விளக்கு பதிப்பகம் போலவே பீனிக்ஸ் பதிப்பகம் வெளியிட்டுள்ள நூல்களும் தவறான தகவல்களுடன் நூற்றுக்கும் மேல் இடம்பெற்றுள்ளன.
பெரியார் அறிவுலகம் உள்ளிட்ட புதிய நூலகங்களுக்கான நூல் பரிந்துரைக் குழு அமைக்கப்பட்டு, கடந்த தி.மு.க. ஆட்சியில் 5.11.2025 தேதியிட்ட அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. அக்குழுவில் நவீன இலக்கியங்கள் மற்றும் திறனாய்வு நூல்களைப் பரிந்துரைக்கும் குழுவில் இடம்பெற்றிருந்த பேராசிரியர் பெருமாள் முருகன் அவர்களே, பெரியார் அறிவுலகத்திற்கு நூல் கொள்முதல் செய்யப்பட்டதில் ஊழல் நடந்துள்ளதை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளார்.
பெரியார் அறிவுலகம் உள்ளிட்ட நூலகங்களுக்கு நூல்களை ரூ. 50 கோடி மதிப்பீட்டில் கொள்முதல் செய்ய பரிந்துரை குழு அமைத்து கடந்த நவ. 5, 2025 அன்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.
அதன்படி, இணையவழியில் கூட்டத்தில் நூல் பரிந்துரைக் குழுவில் இடம்பெற்ற 112 உறுப்பினர்கள் கலந்துகொண்டு கொள்முதல் செய்வதற்கான நூல்களை பரிந்துரை செய்யதுள்ளனர்.
இதன் பின்னர், ஜன. 9, 2026 அன்று அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற நூல் தேர்வுக் குழு உறுப்பினர்கள் கூட்டத்தில், 112 நூல் பரிந்துரைக்குழு உறுப்பினர்களால் பரிந்துரைக்கப்பட்ட நூல்களை ஆய்வு செய்யப்பட்டு, கொள்முதல் செய்வதற்கான இறுதிப் பட்டியல் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.
பின்னர், பதிப்பகங்களுடன் பேச்சுவார்த்தை, விலை நிர்ணயம் உள்ளிட்ட அடுத்தடுத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு பிப். 2, 2026 அன்று நூல்களுக்கான கொள்முதல் ஆணை வழங்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் பெரியார் அறிவுலகத்திற்கு 60,266 நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டன.
திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட பரிந்துரைக் குழு உறுப்பினர்களால் பரிந்துரைக்கப்பட்ட புத்தகங்கள் என்னென்ன? அதிலிருந்து அரசு இறுதி செய்த புத்தகங்கள் என்னென்ன?
எத்தனை கொள்முதல் ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன? ஒவ்வொரு கொள்முதல் ஆணையிலும் எந்தெந்த புத்தகங்கள் இடம் பெற்றிருந்தன?
தவறான தகவல்கள் இடம்பெற்றிருப்பதாக கூறப்படும் புத்தகங்கள் எவை? அவை என்ன விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டது?
அகல்விளக்கு மற்றும் பீனிக்ஸ் பதிப்பகங்களின் புத்தகங்கள் எந்தக் கொள்முதல் ஆணையில் இடம் பெற்றன? எந்த தேதியில் கொள்முதல் செய்ய ஆணை வெளியிடப்பட்டது?
சர்ச்சைக்குரிய பதிப்பகங்களின் புத்தகங்களுக்கு விலை நிர்ணயம் செய்தது யார்?
அகல்விளக்கு மற்றும் பீனிக்ஸ் பதிப்பகங்களுக்கான தொகை எந்தெந்த வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டது?
இந்தப் பதிப்பகங்களின் உரிமையாளர்கள் யார், யார்? எந்த முகவரியிலிருந்து இயங்குகின்றன?
இவை ஒவ்வொன்றும் எந்தெந்தத் தேதிகளில் நடைபெற்றது?
விஸ்வரூபம் எடுக்கும் இந்த வினாக்களுக்கு கடந்த கால திமுக ஆட்சியில் பொறுப்பில் இருந்து இயக்கிய
யோக்கிய சிகாமணிகள் பதில் அளிக்க வேண்டும்.
அறிவுசார் சமூகத்தை உருவாக்க அச்சாணியாக விளங்கும் நூலகத்திற்கு நூல்கள் வாங்கியதில் கொள்ளையடித்தக் கும்பலை கூண்டில் ஏற்றி தண்டிக்க வேண்டும்.
பெரியார் அறிவுலகத்தில் இடம் பெற்றுள்ள குப்பை நூல்களை துடைத்து எறிந்து , பகுத்தறிவு பகலவன் பெரியார் பெயரை காப்பாற்ற வேண்டும்.
வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
தாயகம்
சென்னை
7-11-26
29
அமரன் retweeted
அன்பின் துரைமுருகன்களே!
நாங்கள் திமுகவிற்காக எப்படி வேண்டுமானலும் சண்டை செய்வோம்! எங்கள் அரசியலே திமுக தான்!
ஆனால் திமுக என்ற பெயரில் ஒழிந்து கொண்டு அதன் கொள்கைகளை காற்றில் பறக்க விடுவதை பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டோம்!
அமரன் retweeted
புத்தக ஊழலின் நோக்கம் பட்டவர்த்தனமாக வெளிப்பட்டுள்ளது. திட்டம் இதுதான் என புலப்பட்டுவிட்டது. இந்தக் கருத்துக் கட்டமைப்பினால் அறிவுலகம் என்றும் தன் தரத்தை இழக்காது. சதிகள் வெளிச்சத்திற்கு வரும். #TVKVijayFails
#TVKdisaster
அமரன் retweeted
State Rights❌
Theatre Rights✅
#BREAKING | ஒன்றிய - மாநில உறவுகள் குறித்து ஆராய்வதற்காக திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவை கலைத்தது தவெக அரசு.
#SunNews | #KurianJoseph | #Vijay | #TVK
அமரன் retweeted
இத்தனை நாட்கள் விட்டு வைத்திருந்ததே வியப்புதான்!
பாஜகவுக்கு பிடிக்காத, ஆர்.எஸ்.எஸ்.கொள்கைக்கு நேர் எதிரான 'மாநில உரிமை மீட்புக் குழு' ஒன்று த.வெ.க அரசில் எப்படி உயிர் வாழும்? எப்படி வாழ விடுவார்கள்?
பேரறிஞர் அண்ணாவின் 'மாநில சுயாட்சி' இனி இங்கே கோரிக்கை அளவில் கூட இருக்காது.
TVK Govt has ordered the dissolution of the High-Level Committee constituted by the previous DMK government to examine Centre-State relations.
The committee had submitted its first report to the Chief Minister in February this year.
While the committee was working on preparing its second report, the state government has now issued an order dissolving it































