ஈழத்தமிழர்கள் மீது இலங்கையில் நடாத்தப்பட்ட இனப்படுகொலைகள்
1956 – 2009
1 இக்கினியாகலை படுகொலை 05.05.1956.
150 பேர் உயிரிழப்பு.
2 1956 இனப்படுகொலை 01.05.1958. 300க்கு மேல் உயிரிழப்பு
3 தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை 10.01.1974. 9 பேர் உயிரிழப்பு
4 1977 இனப்படுகொலை
1978. 1500 க்கு மேல் உயிரிழப்பு
5 பெரியபுல்லுமலை இனப்படுகொலை 20.05.1980. 25 பேர் உயிரப்பு
6 1981 இனப்படுகொலை 1981. எண்ணிக்கை தெரியவில்லை
7 யாழ்நூலக எரிப்பு 01.06.1981. சுமார் 90 ஆயிரம் நூல்கள் சாம்பலாகின.
8 1983 இனப்படுகொலை 23.07.1983. 3000 க்கு மேல் உயிரிப்பு
9 வெலிக்கடை சிறைச்சாலை படுகொலை 25.07.1983. 35 பேர் உயிழப்பு.
10 திருநெல்வேலி படுகொலை 24,25.07.1983. 51 பேர் உயிழப்பு.
11 சம்பல்தோட்டம் படுகொலை 1984. 55 பேர் உயிரிழப்பு.
12 சுன்னாகம் காவல்நிலைய படுகொலை 08.01.1984. 19 பேர் உயிரிழப்பு.
13 சுன்னாகம் சந்தை படுகொலை 28.03.1984. 9 பேர் உயிரிழப்பு.
14 மதவாச்சி-ரம்பாவா படுகொலை 09.1984. 15 பேர் உயிரிழப்பு
15 திக்கம் படுகொலை 16.09.1984.16 பேர் உயிரிழப்பு.
16 ஒதியமலை படுகொலை 01.12.1984. 32 பேர் உயிரிழப்பு.
17 குமுழமுனை படுகொலை 02.12.1984. 6 பேர் உயிரிழப்பு.
18 செட்டிகுளம் படுகொலை 02.12.1984. 52 பேர் உயிரிழப்பு.
19 மன்னார் படுகொலை 04.12.1984. 200 க்கு மேல் உயிரிழப்பு
20 கொக்கிளை கொக்குதொடுவாய் படுகொலை 15.12.1984. 131 பேர் உயிரிழப்பு.
21 முள்ளிய வளை படுகொலை 16.01.1985. 17 பேர் உயிரிழப்பு.
22 வட்டக்கண்டல் படுகொலை 30.01.1985. 52 பேர் உயிரிழப்பு.
23 புதுக்குடியிருப்பு-ஐயன் கோவிலடி படுகொலை 21.04.1985. 30 பேர் உயிரிழப்பு
24 வல்வை 85 படுகொலை 10.05.1985. 70 பேர் உயிரிழப்பு
25 திருகோணமலை படுகொலை 1985 03.05.1985- 50 பேர் உயிரிழப்பு
26 நெடுந்தீவு குமுதினி படகு படுகொலை 15.05.1985. 36 பேர் உயிரிழப்பு.
27 கிளிவெட்டி படுகொலை 1985 01.01.1985- 150 பேர் உயிரிழப்பு
28 திரியாய் படுகொலை 08.08.1985. 10 பேர் உயிரிழப்பு
29 சாம்பல்தீவு படுகொலை 04.08.1985 – 09.08.1985. 383 பேர் உயிரிழப்பு.
30 வயலூர் படுகொலை 24.08.1985. 50 பேர் உயிரிழப்பு.
31 நிலாவெளி படுகொலை 16.09.1985. 30 க்கு மேல் உயிரிழப்பு
32 பிரமந்தனாறு படுகொலை 02.10.1985. 11 பேர் உயிரிழப்பு
33 கந்தளாய் படுகொலை 09.11.1985. 6 பேர் உயிரிழப்பு
34 முதூர் கடற்கரைசேனை படுகொலை 8.11.1985 – 10.11.1985. 30 பேர் உயிரிழப்பு
35 வங்காலை தேவாலய படுகொலை 06.01.1986. 9 பேர் உயிரிழப்பு
36 கிளிநொச்சி தொடருந்து நிலைய படுகொலை 25.01.1986. 12 பேர் உயிரிழப்பு
37 உடும்பன்குளம் படுகொலை 19.02.1986 130
38 ஈட்டி முரிஞ்சான் படுகொலை 19.03.1986 – 20.03.1986 20
39 பெரிய புல்லுமலை படுகொலை 08.05.1986
10.11.1986 18
24
40 அனந்தபுரம் ஏவுகணை தாக்குதல் 04.06.1986 5
41 கந்தளாய் படுகொலை 04,05,06.1986 50 க்கு மேல்
42 மண்டைதீவு கடல் படுகொலை 10.06.1986 33
43 செருவில் படுகொலை 12.06.1986 21
44 தம்பலகாமம் படுகொலை 12.11.1985. 34
45 பரந்தன் விவசாயிகள் படுகொலை 28.06.1986 7
46 பெருவெளி அகதிகள் முகாம் படுகொலை 15.07.1986 48
47 தண்டுவான் பேருந்து படுகொலை 17.07.1986 17
48 முதூர் மணல்சேனை படுகொலை 18.07.1986 14
49 அடம்பன் படுகொலை 12.10.1986 20
50 பெரிய பண்டி விரிச்சான் படுகொலை 15.10.1986 2
51 கொக்ககட்டிச்சோலை படுகொலை 28.01.1987 133
52 பட்டித்திடல் படுகொலை 26.04.1987 17
53 தோணிதட்டமடுபடுகொலை 27.05.1987 13
54 ஆலவாய் கோவில் படுகொலை 29.05.1987 40
55 மூளாய் மருத்துவமனை படுகொலை 05.11.1987 5
56 கிழக்கு பல்கலைக்கழகப் படுகொலை 23,24.05.1990 226
57 சம்மாந்துறை படுகொலை 10.06.1990 37
58 வீரமுனை படுகொலை 20.06.1990-15.08.1990 233
59 சித்தாண்டி படுகொலை 20,27.07.1990 137
60 பரந்தன் சந்தை படுகொலை 24.07.1990 15
61 பொத்துவில் படுகொலை 30.07.1990 125
62 திராய்கேணி படுகொலை 06.08.1990 90 க்கு மேல்
63 கல்முனை படுகொலை 11.08.1990 62
64 துறைநீலாவணை படுகொலை 12.06.1990 60
65 ஏராவூர் மருத்துவமனை படுகொலை 12.08.1990 10
66 கோரவெளி படுகொலை 14.08.1990 15
67 சேனகன் படுகொலை 26.08.1990 4
68 நெல்லியடி சந்தை படுகொலை 29.08.1990 16
69 சத்துருக்கொண்டான் படுகொலை 09.09.1990 205
70 நட்பிட்டிமுனை படுகொலை 10.09.1990 23
71 வந்தாறு மூலை படுகொலை 05&23.09.1990 174
72 ஒட்டுசுட்டாள் படுகொலை 27.11.1990 12
73 புல்லுமலை படுகொலை 1984- 110
74 புதுக்குடியிருப்பு சந்தி படுகொலை 30.01.1991 28
75 உருத்ர புரம் படுகொலை 04.02.1991 9
76 வங்காலை படுகொலை 17.02.1991 5
77 வட்டாக்கச்சி படுகொலை 28.02.1991 9
78 வந்தாறு மூலை படுகொலை 09.06.1991 10
79 கொக்கக்கட்டிச் சோலை படுகொலை 12.06.1991 220 க்கு மேல்
80 கிண்ணியடிபடுகொலை 12.07.1991 13
ஈழம் Lens retweeted
கல்லறை மேனியர் கண் திறப்பார்களே இந்த கார்த்திகை மாதத்திலே...
தாயக விடுதலைக்காக தங்கள் இன்னுயிரை ஈகம் செய்த முப்பதினாயிரத்திற்கும் மேற்பட்ட மாவீரர்களின் தியாகங்களும், இப்போராட்ட காலத்தில் கொல்லப்பட்ட2 லட்சத்திற்கு மேற்பட்ட மக்களில் குறிப்பாக 2009ஆம் ஆண்டு 1,46,679. பொது மக்களின் இழப்புக்களும் ஒவ்வொரு தமிழரின் மனதிலும் விடுதலைத்தீயை மூட்டியுள்ளது.
காலம் காலமாக சிங்களப் பேரினவாதிகளால் ஏமாற்றப்பட்ட கசப்பான வரலாறுகளை நினைவிற்கொண்டு எமது விடுதலைப் பயணத்தைத் தொடர்வோம்.
இவ்வுலகில் இறந்தவர்களுக்காக அழுதவர்கள் மத்தியில், அழுதவர்களுக்காக இறந்தவர்கள் இவர்கள் என்கிற உணர்வோடும் ஏக்கத்தோடும் அவர்களின் நினைவுகளை வலிகளோடு சுமந்தாலும் , அவர்களின் கனவுகள் மெய்ப்பட எஞ்சியவர்களாக நாம் உள உறுதியோடு லட்சியத்தை நோக்கி நகர்ந்து கொண்டே இருப்போம்.
#மாவீரதெய்வங்கள்
#வீரத்துறவிகள்
#அறிவோம்ஈழம்
#தமிழீழதேசியமாவீரர்நாள்நவம்பர்27
#தலைவர்72
#பிரபாகரம்
சாட்டி மாவீரர் துயிலும் இல்லக் காணி உரிமையாளருக்கான கடிதம்
மதிப்பிற்குரிய காணி உரிமையாளர் அவர்களுக்கு,
சாட்டி, வேலணை,
யாழ்ப்பாணம்.
எமது பிள்ளைகள் உறங்கும் சாட்டி மாவீரர் துயிலும் இல்லப் புனித பூமியை நினைவேந்தல் நிகழ்வுகளுக்காக விட்டுத்தருமாறு கண்ணீர் மல்கும் உருக்கமான வேண்டுகோள்.
மதிப்பிற்குரிய ஐயா
வணக்கம்.
மிகுந்த மனவேதனையோடும், உங்களின் தாய்மையுள்ளம் கொண்ட தமிழ் நெஞ்சத்தின் மீது வைத்திருக்கும் ஆழமான நம்பிக்கையோடும் இக்கடிதத்தை உங்கள் பாதங்களில் சமர்ப்பிக்கின்றோம்.
உங்களுக்குத் தெரியாததல்ல; எமது இனம் தலைநிமிர்ந்து வாழவேண்டும் என்பதற்காகவும், நாம் அனைவரும் சுயமரியாதையோடு எமது சொந்த மண்ணில் நிம்மதியாக மூச்சுவிட வேண்டும் என்பதற்காகவும், தங்களின் இளமைக் கனவுகளையும், ஆசைகளையும், குடும்ப உறவுகளையும் துறந்து பல்லாயிரக்கணக்கான எமது பிள்ளைகள் தங்களின் இன்னுயிர்களை ஈகம் செய்தார்கள். அவர்கள் விதைக்கப்பட்ட இந்தச் சாட்டி மண், வெறும் நிலப்பரப்பு அல்ல ஐயா; அது எமது இனத்தின் ஆன்மா உறங்கும் புனித கோவில்.
இன்று அவர்களின் கல்லறைகள் சிதைக்கப்பட்டு, அடையாளங்கள் அழிக்கப்பட்ட நிலையிலும், பெற்ற பிள்ளைகளைப் பறிகொடுத்துத் தவிக்கும் தாய்மார்களும், தமக்காக உயிர்கொடுத்த உறவுகளை நெஞ்சில் சுமக்கும் எமது மக்களும் வருடத்திற்கு ஒருமுறை—நவம்பர் 27 அன்று—அந்த மண்ணில் ஒரு சுடரேற்றி, கண்ணீர் சிந்தி, தங்களின் துயரங்களை இறக்கிவைக்கிறார்கள். அந்த ஒரு நாள் விளக்கேற்றல்தான் அந்தப் பெற்றோர்களுக்கு ஆறுதலையும், எமக்கு எமது வரலாற்றின் நினைவுகளையும் தந்துகொண்டிருக்கிறது.
இந்த நிலம் சட்டப்படி உங்களுக்குச் சொந்தமானது என்பதை நாங்கள் முழுமையாக ஏற்றுக்கொள்கிறோம். ஒரு காணி உரிமையாளராக உங்களுக்கு இருக்கும் உரிமையையும், உணர்வுகளையும் நாங்கள் ஒருபோதும் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால், அந்த மண்ணுக்கு அடியில் உறங்கிக்கொண்டிருப்பது எமது இரத்தமும் சதையுமான பிள்ளைகள். உங்கள் உடன்பிறப்புகள். அவர்கள் உங்களுக்காகவும், எங்களுக்காகவும்தான் தங்களின் உயிரைக் கொடுத்தார்கள்.
ஒரு தமிழனாக, எமது மண்ணின் மைந்தனாக உங்கள் இதயத்தில் ஈரமும், எமது இனத்தின் மீதான பாசமும் நிச்சயம் இருக்கும் என்று நாங்கள் திடமாக நம்புகிறோம். எந்தவொரு அரசியல் காழ்ப்புணர்ச்சியோ, அழுத்தங்களோ உங்களின் தமிழ் உணர்வை மறைத்துவிடக் கூடாது என்பதே எமது தாழ்மையான பிரார்த்தனை. எமது பிள்ளைகள் உறங்கும் இடத்தில் விளக்கேற்றுவதற்குத் தடையாக நிற்பது, வரலாற்றில் எமது மனங்களை ஆறாத ரணமாக்கிவிடும்.
அங்கே உறங்கிக் கொண்டிருக்கும் பிள்ளைகளை நினைத்து ஒரு நிமிடமாவது நிம்மதியாக கண்ணீர் சிந்தி அழுவதற்காக தமது பிள்ளைகளுக்கு விளக்கேற்றி அஞ்சலித்து தன் பிள்ளைக்கு விரும்பிய உணவுகளை சமைத்து படைத்து தங்கள் துயரத்தை வெளிப்படுத்த நினைக்கும் பிள்ளையின் தாய்க்கும் தந்தைக்கும் அந்த நாளில் தனது பிள்ளையோடு உறவாடி கதைபேசி சந்தோசப்பட நினைக்கும் அந்த பெற்றவர்களின் உணர்வுகளை மதிக்காது விடுவது மனிதமாண்பாகும்.
தன்னுடைய தாயை தந்தையை சகோதரங்களை காண்பதற்காய் மண்ணுக்குள் புதைந்து கிடந்தபடி தவித்துக்கொண்டிருக்கும் அந்த குழந்தைகளுக்கு நாம் என்ன கைமாறு செய்யப்போகிறோம். இளமை இன்பங்களை மறந்து நமது விடுதலைக்காக தங்கள் உயிர்களை கொடுத்த அவர்களுக்கு அந்த ஒரு நாளாவது விளக்கேற்றி அஞ்சலிப்பது நமது கடமையல்லவா....
ஆகவே, தயவுகூர்ந்து உங்களின் பெருந்தன்மையாலும், மனிதநேயத்தாலும், தமிழ் உணர்வாலும் இந்தப் புனித பூமியை மாவீரர் துயிலும் இல்ல நினைவேந்தல் நிகழ்வுகளுக்காக விட்டுத்தந்து உதவுமாறு இருகரம் கூப்பி, கண்ணீர் மல்க உங்களை மன்றாடிக் கேட்டுக்கொள்கிறோம்.
பெற்றோர்களின் கண்ணீரைத் துடைக்கும் உங்களின் இந்த உயரிய செயல், எமது இனத்தின் வரலாற்றில் என்றும் நன்றியுடன் நினைவுகூரப்படும். உங்களின் நல்ல பதிலுக்காகவும், பெருந்தன்மைக்காகவும் ஏங்கியிருக்கும் எமது மக்களின் சார்பாக மீண்டும் ஒருமுறை உங்களைப் பணிந்து வேண்டுகிறோம்.
நன்றி.
இங்ஙனம்,
தங்களின் நல்லுள்ளத்தை நம்பியிருக்கும்
விதைக்கப்பட்ட பிள்ளைகளின் பெற்றோர்கள்
#மாவீரர்நாள்_2026
#ஈழத்தின்குரல்
தாய்ப்பசு துப்பாக்கியால் சுட்டுக் கொலை! தாயைத் தேடி அதே இடத்தில் சுற்றித்திரியும் பச்சிளம் கன்று!
மனிதநேயம் எங்கே போய்க்கொண்டிருக்கிறது?
மட்டக்களப்பு மயிலத்தமடு – மாதவனை பகுதியில் மீண்டும் ஒரு பசு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி மிகவும் வேதனையளிக்கிறது.
தாயை இழந்த கன்று, என்ன நடந்தது என்பதை அறியாமல் தனது தாயைத் தேடி அதே இடத்தில் சுற்றித்திரியும் காட்சி மனதை உருக்குகிறது.
கால்நடைகளை நம்பி வாழும் பண்ணையாளர்களின் வாழ்வாதாரம் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருவதாகக் கூறப்படும் நிலையில், இதற்கு எப்போது முற்றுப்புள்ளி வைக்கப்படும்?
சில முக்கியமான கேள்விகள்:
* கால்நடைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது யாருடைய பொறுப்பு?
* பண்ணையாளர்களின் முறைப்பாடுகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன்?
* நீதிமன்றத் தீர்ப்புகள் நடைமுறைப்படுத்தப்படுவது எப்போது?
* அப்பாவி கால்நடைகள் கொல்லப்படுவதற்கு எப்போது நீதி கிடைக்கும்?
இது வெறும் ஒரு பசுவின் உயிரிழப்பு மட்டுமல்ல; ஒரு குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்கும், மனிதநேயத்திற்கும் விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்.
அரசாங்கமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் இந்தச் சம்பவத்தை அலட்சியப்படுத்தாமல், உடனடியாக விசாரணை நடத்தி, குற்றவாளிகள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.
தாயைத் தேடும் அந்தக் கன்றுக்கு நீதி கிடைக்கட்டும்! பண்ணையாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படட்டும்!
மனிதநேயம் வெல்லட்டும்! நீதி நிலைநாட்டப்படட்டும்!
#ஈழத்தின்குரல்
3
50
ஈழம் Lens retweeted
கார்த்திகை தீபமாக மாவீரர்கள்....
தாய்த் தமிழகத்தில் ஏற்றப்படும் கார்த்திகை தீபம் என்பது வேறு, தமிழீழ தாயகத்தில் இந்த மாதத்தில் ஏற்றப்படும் தீபம் என்பது வேறு, உறவுகளின் வேண்டுகோளுக்கு இணங்க அது குறித்த விடயங்களை தரவுகள் அடிப்படையில் இந்த பதிவில் அறியத் தருகிறோம்.
பயிற்சி – தந்திரம் – துணிவு – வெற்றி என சத்தியம் சாட்சியாக, வரலாறு வழிகாட்டியாக துணிந்து போராடிய பு*லிகளைப் பார்த்துப் உலகமே பெருமிதம் கொள்ள, இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது என்ற வரலாற்றைப் படைத்து களப்பலியான மாவீரர்களின் வித்துடல்கள் கிடைக்கப்பெற்றதும், அது ஓரிடத்திற்கு கொண்டு வரப்படுகிறது. பதனிடப்பட்ட அந்த வித்துடல்களுக்கு சீருடை அணியப்படும்.
அதே நேரத்தில் அந்த மாவீரர்களின் விபரங்கள் உறுதிசெய்யப்பட்டு, அவர்களின் சுயவிவரக் கோப்பின் அடிப்படையில் அவர்கள் பங்குகொண்ட களச்சமர்கள், சேவை காலம், தேசப் பணிகள் உட்பட பல விடயங்கள் கருத்தில் கொள்ளப்பட்டு அணித் தலைவர், பொறுப்பாளர், போர்முனைக் கட்டளைத் தளபதி உட்பட அவர்களின் இராணுவ நிர்வாக அலகுடன் தொடர்புடையவர்களின் அறிக்கையிடலின் பிரகாரம் தலைமைச் செயலகத்தின் ஊடாக தலைவரின் அனுமதி பெறப்பட்டு, மாவீரர் பணிமனை ஊடாக பதவி நிலை வழங்கப்படுவது இயக்கத்தின் நெறிமுறை.
வித்துடல் பேழையில் மாவீரர்களின் பெயரும் பதவிநிலையும் பொறிக்கப்பட்ட பிறகு, மாவட்ட அரசியல் துறை மூலம் பிரதேச மற்றும் படையணி, அல்லது பிரிவுப் போராளிகளின் துணையோடு வித்துடல்கள் அடங்கிய பேழைகள் இராணுவ மரியாதையுடன், அவர்கள் தம் பெற்றோர் அல்லது உறவினர் வீட்டிற்கு எடுத்துச் செல்லப்படும். வீட்டு வணக்க நிகழ்வுகள் முடிந்தபின், வீரவணக்க நிகழ்விற்காக வித்துடல்கள் ஒரு பொது மண்டபம் அல்லது மாவீரர் மண்டபத்திற்கு அல்லது அவர்கள் கற்ற பாடசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு பொது மக்களின் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு , அதன்பின் வீரவணக்கக்கூட்டம் நடத்தப்படும்.
முதற்கண் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, அடுத்ததாக ஈகைச்சுடர் பின்பு வித்துடலுக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு பெற்றோர் மனைவி, கணவன், பிள்ளைகள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்பட்டும். இறுதியாக இயக்கத்தின் மரியாதையுடன் வாத்தியங்கள் முழங்க, வித்துடல்கள் துயிலும் இல்லத்திற்கு அலங்கரிக்கப்பட்ட ஊர்திகளில் இராணுவ மரியாதையுடன் சென்று சேரும்.
அங்கு, ஏற்கனவே தயார் நிலையில் உள்ள பிரத்யேக மேடையில் இறக்கி வைக்கப்பட்ட பிறகு, தேசியத்தின் கொடி அரை கம்பத்தில் பறக்க விடப்படும், பின்னர் அக வணக்கம், உறுதிமொழி, நினைவுரை என அந்த இடமே மிகுந்த அமைதியோடு காணப்படும்.
இறுதியில், வித்துக்குழிகளில் ஒன்றன்பின் ஒன்றாக வித்துடல்கள் இறக்கப்பட்டு மலர்கள் தூவி மறைக்கப்படும். அதன் பிறகு மாவீரர்களின் குடும்பங்களுக்கு அவர்களின் விவரங்கள் அடங்கிய படம் வீடுகளில் வைத்து பூசிக்க வழங்கப்படும்.
இவ்வாறாக, ஆண், பெண், சாதி, மதம் என எந்த ஒரு பேதங்கள் இன்றி மண்ணிற்காகவும், மக்களுக்காகவும் தாயக விடுதலை களத்தில் தங்களது இன்னுயிர்களை ஆகுதியாக்கி வீரகாவியமான மாவீரர்களின் தியாகங்களை அதே உணர்வு ஓர்மைப்பாட்டுடன் , மாவட்டங்கள் வாரியாக கல்லறைகளில் விதைத்து, வீரப்போர் புரிந்த தமிழ் மறவர்களாக, புதிய சமுதாயத்தின் முன்னோடிகளாக வாழ்ந்து காட்டி, ஏற்றத்தாழ்வுகளற்ற, சமூகநீதி நிலவும் சமுதாயமொன்றைத் தமிழர் தாயகப்பகுதியில் கட்டியெழுப்பும் தேசச்சிற்பிகளான அவர்களின் கனவுகளை சுமந்து, லட்சியத்தை வென்று முடிக்க, இறைமை கொண்டு ஏற்றப்படும் தீபங்களே இந்த கார்த்திகை தீபங்கள்.
எனவே, இந்த உலகில் இதுவரை இறந்தவர்களுக்காக அழுதவர்கள் மத்தியில் அழுதவர்களுக்காக இறந்தவர்கள் இவர்கள் என்கிற உணர்வோடும், ஏக்கத்தோடும் அவர்களின் நினைவுகளை வலிகளோடு சுமந்தாலும், அவர்களின் கனவுகள் மெய்ப்பட எஞ்சியவர்களாக நாம் உள உறுதியோடு தொடர்ந்து களமாடுவோம்.
தமிழரின் தாகம், தமிழீழத் தாயகம்.!
#அறிவோம்ஈழம்
#தமிழீழதேசியமாவீரர்நாள்_நவம்பர்27
#தமிழகவாழ்வுரிமைக்கட்சி
#தலைவர்72
#வீரத்துறவிகள்
#பிரபாகரம்
ஈழம் Lens retweeted
தமிழீழம் என்ற புனித இலட்சியத்திற்காக தம்மையே தந்தவர்கள் மாவீரர்கள். அந்த மகத்தான மனிதர்களுக்குள்ளும் காதல் இருந்தது. அதிலும் மேலாக தாய் மண் மீதான காதல் நின்று நிலைத்திருந்தது .
( எம் தேசத்தின் காதலர்களின் உண்மை கதை ஒன்று )
#மாவீரர்நாள்2026
#தமிழீழம்
இன்று முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லத்தை தூய்மைப்படுத்தும் செயற்பாடுகள் நடைபெற்றன இவற்றில் பள்ளிக்கூடா நாச்சிக்குடா இரணைமாதா நகர் பகுதிகளை சேர்ந்த மக்கள் மேற்கொண்டு இருந்தார்கள்.
#மாவீரர்நாள்_2026
#ஈழத்தின்குரல்
ஈழம் Lens retweeted
கொத்துரொட்டிக்கும் அற்ப சலுகைகளுக்கும் விலைபோகும் கூட்டத்தோடு என்னை இணைத்துப் பேசுவதற்கு எவருக்கும் தகுதியில்லை.
நினைவேந்தலுக்காக எழுச்சி கொள்ளும் முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லம் ...
#மாவீரர்நாள்_2026 #ஈழத்தின்குரல்
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் - சர்வதேச நீதியைக் கோரி யாழில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம்!
செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான விசாரணைகளின் போது நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால அறிக்கையை முற்றாக நிராகரிப்பதாகத் தெரிவித்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் சர்வதேச நீதியை வலியுறுத்தி மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அரியாலை தபால்கட்டைச் சந்தியில் இன்று (17.11.2026) முற்பகல் 10.30 மணியளவில் ஆரம்பமான இப்போராட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
செம்மணி மனித புதைகுழி தொடர்பான விசாரணைகள் வெளிப்படைத்தன்மையுடனும், சுயாதீனமான முறையிலும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உண்மையான நீதி கிடைக்க சர்வதேச விசாரணைப் பொறிமுறை அவசியம் என்றும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் வலியுறுத்தினர்.
மேலும், நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால அறிக்கை தொடர்பில் தமது அதிருப்தியை வெளிப்படுத்திய போராட்டக்காரர்கள், செம்மணி விவகாரத்தில் உண்மைகள் முழுமையாக வெளிக்கொணரப்பட்டு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
சர்வதேச நீதிக்கான கோரிக்கையை முன்வைத்து முன்னெடுக்கப்பட்ட இப்போராட்டத்தில் பல்வேறு தரப்பினரும் ஒன்றிணைந்து தமது கவனயீர்ப்பை வெளிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.
#செம்மணி
#ஈழத்தின்குரல்
செம்மணி போராட்டத்தில் உச்சக்கட்ட எதிர்ப்பு பேராசிரியர் ராஜ் சோமதேவாவின் உருவ பொம்மை மற்றும் இடைக்கால அறிக்கை தீயிட்டுக் கொளுத்தப்பட்டன!
செம்மணி - சித்துப்பாத்தி மனித புதைகுழிக்கு சர்வதேச நீதி விசாரணை கோரி இன்று (17.11.2026) முன்னெடுக்கப்பட்ட மாபெரும் போராட்டத்தின் போது, பேராசிரியர் ராஜ் சோமதேவாவின் உருவ பொம்மையும், அவரது மூன்றாவது இடைக்கால அறிக்கையும் செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தின் முன் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன.
#செம்மணி
#ஈழத்தின்குரல்
வலிகளின் சாட்சியாய் வீதியில் நிற்கும் உறவுகள் - ஒரு தாயின் கண்ணீருக்கு எப்போது விடை?
👉👉Full video : ▶▶▶youtu.be/yDpCXYNQiqI?si=UaRl…
#ஈழத்தின்குரல்
கிளிநொச்சியில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்ணுக்கு நீதி வேண்டி ஆர்ப்பாட்டம்
நீதியின் முன் இவர்களுக்கான தண்டணை என்ன?
#ஈழத்தின்குரல்
2
123























