🌄 retweeted
திருப்பத்தூர் மாவட்டம் தோரணம்பதி அருகே பட்டப்பகலில் இரட்டைக்கொலை நடந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
பல்லாவரத்தில் ஆகாஷ் எனும் இளைஞர் நேற்றிரவு வெட்டிக்கொலை செய்யப்பட்டிருக்கிறார்.
இதற்கும் போலீஸ் DGP-ஐ விட்டு புள்ளிவிவரங்களைச் சொல்ல வைத்து சமாளிக்கப் போகிறாரா Dummy CM?
ஆட்சிக்கு வந்த நாள் முதல் சட்டம் ஒழுங்கிற்கு சவக்குழி வெட்டும் வேலையை மட்டுமே இந்த சோப்ளாங்கி அரசு செய்து கொண்டிருக்கிறது.
இனியாவது, பழிபோடும் Tactics-ஐயும், Reels Optics-ஐயும் விட்டு விட்டு, சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட இந்த Dummy முதலமைச்சர் முன் வர வேண்டும்.
🌄 retweeted
திராவிட இயக்கத்தின் தொடக்கப்புள்ளி நீதிக்கட்சி உருவான நாள் இன்று!
சமூகநீதி - பெண் விடுதலை - சுயமரியாதை - மாநில உரிமை - மொழி உரிமை ஆகியவற்றை தமிழ்நாட்டின் அரசியல் அடையாளமாக்கியது நீதிக்கட்சி.
நீதிக்கட்சியின் வழியில் இந்த அடையாளங்களை வளர்த்தெடுத்தது திராவிட முன்னேற்ற கழகம்.
தமிழ்நாட்டின் இப்பெருமைகளை அழிக்கத்துடிக்கும் Reels சோப்ளாங்கிகளின் முயற்சிகளை முறியடிப்போம்.
நீதிக்கட்சி காட்டிய கொள்கை பாதையில் இன்னும் உறுதியோடு நடைபோடுவோம்.
#JusticeParty
🌄 retweeted
#நீதிக்கட்சி பிறந்தது தமிழ்ச்சமூகம் சந்தித்த அநீதிகளைத் தகர்ப்பதற்காக!
தந்தை பெரியார் விதைத்த சுயமரியாதை, பேரறிஞர் அண்ணா முழங்கிய மாநில உரிமை, முத்தமிழறிஞர் கலைஞர் நிலைநாட்டிய சமூகநீதி எனப் பரிணமித்த திராவிட இயக்கம், தமிழ்நாட்டின் வரலாற்றையும் ஒவ்வொரு குடும்பத்தின் எதிர்காலத்தையும் மாற்றியெழுதியது!
இன்று ‘மாற்றம்’ என்ற பெயரில் ஆட்சிக்கு வந்தவர்கள், மாநில உரிமைகளையும் சமூகநீதியையும் பின்னுக்குத் தள்ள முயலும் சூழலில், திராவிட இயக்கத்தின் தேவை முன்னெப்போதையும்விட அதிகரித்துள்ளது. நூற்றாண்டுப் போராட்டத்தால் வென்றெடுத்த உரிமைகளை, ஓர் ஆட்சியின் தவறுகளுக்குப் பலிகொடுத்துவிடக் கூடாது!
பெற்ற உரிமைகளைக் காப்போம்!
மறுக்கப்படும் உரிமைகளை வெல்வோம்!
திராவிடச் சிந்தனையைத் தலைமுறைகள் கடந்து வலுப்படுத்துவோம்!
#JusticeParty
🌄 retweeted
குறுவை போச்சு! சம்பாவும் கருகுது! Survival Mode-இல் தவிக்கும் விவசாயிகளுக்கு, Silent Mode-இல் உள்ள CM-இன் பதில் என்ன?
காவிரியில் 11 TMC தண்ணீர் கேட்ட தவெக அரசின் இரண்டு மனுக்களும் தள்ளுபடி! நாகையில் குறுவை சாகுபடிப் பரப்பு சுமார் 94% சரிவு! இன்று சம்பா பயிரைக் காப்பாற்ற விவசாயிகள் தண்ணீரையே விலைக்கு வாங்கும் அவலம்!
🌾 காவிரி நீருரிமையை நிலைநாட்ட என்ன செய்தீர்கள்?
🌾 பயிர்களைக் காப்பாற்ற என்ன திட்டம்?
🌾 பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் எப்போது?
🌾 விவசாயிகளுக்கு முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி எப்போது?
முதலமைச்சர் அவர்களே…
அனைத்துக்கட்சிக் கூட்டத்தை உடனடியாகக் கூட்டுங்கள்! தீர்மானங்களை நிறைவேற்றி, பிரதமரைச் சந்தித்து முறையிடுவோம்!
விவசாயிகளின் கண்ணீரைவிட உங்களது Ego பெரிதல்ல. பொறுப்புகளைத் தாரைவார்த்துவிட்டு Zero Accountability-யுடன் சொகுசாக இருக்கலாம் என்று எண்ணாமல், விவசாயிகளின் கண்ணீருக்குப் பதில் சொல்லுங்கள்!
#Cauvery #DeltaFarmers #TVKfails
🌄 retweeted
இந்தியாவிலேயே மிகப் பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்கள் ஒன்றிய அரசின் அமைப்புகளால் தமிழ்நாட்டில் பிடிக்கப்படும் நிலையில், அவற்றில் இருந்து மக்களையும் ஊடகங்களையும் திசைதிருப்பவே முன்னாள் அமைச்சர் மூர்த்தி அவர்களைக் குறிவைத்து ரெய்டு நடத்தப்படுகிறது.
கையாலாகாத த.வெ.க. ஆட்சியின் சட்டம் ஒழுங்கு சீர்கேடும், த.வெ.க.வினரின் குற்றச் செயல்களும், சட்டமன்ற உறுப்பினர்களின் ஒழுங்கீனமும் சந்தி சிரிக்கும் ஒவ்வொரு முறையும் தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது ரெய்டு நடத்துவது வாடிக்கையாகி விட்டது.
அரசியல் காரணங்களுக்காகத் த.வெ.க. அரசு தொடரும் பொய் வழக்குகளை நீதிமன்றத்தில் சட்டப்படி எதிர்கொண்டு கழகம் வெல்லும்.
ஆறு மாத ஆட்சியில் சொல்லிக் கொள்ள எந்தச் சாதனையும் இன்றி, மக்களின் அவநம்பிக்கையை மட்டுமே சம்பாதித்துள்ள முதலமைச்சர் விஜய் அவர்கள் இனியும் 'தி.மு.க., தி.மு.க.,' என உச்சரித்து ஏமாற்றுவதைத் தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளாது.
#TVKfails
🌄 retweeted
Greece நாட்டில் கடந்த வாரம் நடைபெற்ற சன் குழுமத்தின் தலைவர் அண்ணன் கலாநிதி மாறன் அவர்களின் அன்பு மகளும், Sun Network-ன் செயல் இயக்குநருமான #KavyaMaran - இசை அமைப்பாளர் சகோதரர் @anirudhofficial ஆகியோரின் திருமண விழாவில் குடும்பத்தினரோடு பங்கேற்று மணமக்களை வாழ்த்தினோம்.
இல்வாழ்வில் அடியெடுத்து வைத்துள்ள காவ்யா - அனிருத் இணையர் தமிழ் போல் - இசை போல் பல்லாண்டு வாழ்க!
🌄 retweeted
நோட்டீஸ் அனுப்பி வழக்கு போடுவேனு சொன்னா பயந்திடுவேன், பிரஸ் மீட் பண்ணமாட்டேன்னு நினைக்கிறீங்களா மாண்புமிகு @AadhavArjuna அவர்களே!
வழக்கெல்லாம் வழக்கம்போல நாங்க நீதிமன்றத்துல சந்திப்போம்.
பிரச்சனைக்கு பதில் சொல்லாம நோட்டீஸ் விடுரது கேஸ் போட்டுடு வேன்னு மிரட்ரது இப்படி பண்ணா எனக்கு உங்கள, உங்க கட்சியை, உங்க ஆட்சியை பார்த்தா சிரிப்பு தான் வருது.
எனக்கு இந்த நேரத்துல ஒரு Dialogue தான் நினைவுக்கு வருது..
என்ன நீங்க பயந்துட்டீங்களா குமாரு?
@arivalayam @DMKITwing @dmk_youthwing @DMKWomensWing @DMKNRIWing
🌄 retweeted
சட்டம் - ஒழுங்கு தோல்வியை மறைக்க தொடர்பில்லா புள்ளி விவரம் சொல்லி உண்மை நிலவரத்தை மறைக்கும் டம்மி அரசை வன்மையாக கண்டிக்கிறேன். #LawandOrder
🌄 retweeted
இது பாசிசமா பாயாசமா?
@timesofindia நாளேட்டின் அருண் ராம் அவர்கள் த.வெ.க.வினரின் குற்றப் பட்டியலைத் தொகுத்து, அதுகுறித்து முதலமைச்சர் விஜய் அவர்கள் வாய்திறக்க மறுப்பதை விமர்சித்துக் கட்டுரை எழுதியிருந்தார்.
உடனே, அவரது சமூக வலைத்தளப் பக்கத்தில் இருந்து பதிவுகள் நீக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருக்கிறார்.
யாருடைய நடவடிக்கையால் இது நிகழ்ந்திருக்கிறது? தமிழ்நாடு அரசின் சைபர் கிரைம் பிரிவுதான் இதன் பின்னணியில் இருக்கிறதா?
கடந்த ஆட்சிகளின்போதும் அவர் விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார். அப்போது நடக்காதது இப்போது மட்டும் எப்படி நடக்கிறது? யாருடைய உத்தரவினால் நடக்கிறது?
இந்தியாவிலேயே அதிகம் விற்பனையாகும் ஒரு நாளேட்டின் ஆசிரியருக்கே இதுதான் நிலையா?
விமர்சனங்களை ஏற்றுக்கொள்வோம் என்று கூறியவரால், ஊடகங்களில் வெளியான குற்றங்களைத் தொகுத்து வெளியிட்டதையே பொறுத்துக் கொள்ள முடியவில்லையா?
த.வெ.க. என்பது மற்றுமொரு கட்சியும் அல்ல, மாற்றமும் அல்ல, அது குற்றவாளிகளின் Wholesale கூடாரம் என்பதைச் சுட்டிக்காட்டி இருக்கிறது இந்த @timesofindia கட்டுரை.
தூய சக்தி ❌
தூ சக்தி ✅
#TVKFails
🌄 retweeted
இந்திய விடுதலைப்போரில் தன்னலம் பாராமல் போராடிய கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் அவர்களின் நினைவு நாள் இன்று.
அந்நியர்களை நிலைகுலையச் செய்யும் வகையில் சுதேசி கப்பல் நிறுவனத்தைத் தொடங்கிய சரித்திர சாதனைக்குச் சொந்தக்காரர்.
வ.உ.சி அவர்களின் உறுதி கண்டு அஞ்சிய ஆங்கிலேயர்கள், அவர் மீது ஏவிய அடக்குமுறைகள் ஏராளம்.
செக்கிழுத்த செம்மல் வ.உ.சி அவர்களின் தியாகத்தையும் - போர்க்குணத்தையும் போற்றுவோம்!
#VOC #வஉசிதம்பரனார்
🌄 retweeted
நம் நாட்டின் விடுதலைக் கனவுகளுக்குத் திசைகாட்டிய கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் அவர்களுக்குப் புகழ்வணக்கம்!
🚢 சுதேசிக் கப்பலைச் செலுத்தியவர்!
✊ உழைக்கும் மக்களின் உரிமைக்காகக் குரல்கொடுத்தவர்!
🔥 செக்கிழுத்துச் சிதைக்கப்பட்டபோதும் சிந்தனையில் சுதந்திரத்தைச் சுமந்தவர்!
📚 சிறைக்கொட்டடியிலும் செந்தமிழைச் செழிக்கச் செய்தவர்!
நமது #DravidianModel அரசில், அத்தகைய தியாகச் செம்மலின் புகழைப் போற்றி, அவரது சிந்தனைகளை அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் செல்லப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டோம்! அந்த முயற்சிகளுக்குத் தற்போதுள்ள ‘U-Turn’ அரசில் எக்காரணம் கொண்டும் தொய்வு ஏற்பட்டுவிடக் கூடாது.
நம் மண்ணில் அவர் பதித்த கொள்கைத் தடம் காலத்தால் என்றும் அழியாது!
#VOC #VOChidambaranar #சிதம்பரனார்
🌄 retweeted
Some journeys are not just about victories and trophies; they are about the memories, emotions and inspiration left behind. MS Dhoni is one such legend.
For Chennai, he is not just a cricketer. He is our beloved THALA! From the roaring crowds of Chepauk to unforgettable victories in yellow, Dhoni has become an inseparable part of Chennai’s identity.
His leadership, humility, calmness and passion have inspired millions. He taught us that true greatness is not just about winning, but about leading with courage and putting the team first.
You may retire from cricket, Thala, but you will never retire from our hearts.💛
Once a Thala, Forever a Thala!
🌄 retweeted
In the era of the IPL, one man who has given millions of people across Tamil Nadu countless unforgettable memories is now stepping away from the field.
Fans of CSK will miss those iconic helicopter shots, brilliant stumpings, exceptional captaincy and the composure with which he turned difficult situations into memorable victories.
Thank you @msdhoni, for all the beautiful memories and incredible moments. Tamil Nadu, especially Chennai, will always hold a special place in its heart for you.
As you take on a new role as the mentor of CSK, my very best wishes.
🌄 retweeted
Dhoni gave #Chennai much more than trophies. He gave us an emotion that united generations and forged a bond that transcended cricket.
As the saying goes, all good things must come to an end. We only wish we had one last chance to give Tamil Nadu's beloved adopted son the farewell he so richly deserved.
Thank you, @msdhoni, for the countless moments of joy, the glorious triumphs and the memories we will cherish forever. Wishing you the very best in your new innings as #CSK's mentor. 💛
#MSDhoni #MSD #Dhoni #IPL
OFFICIAL ANNOUNCEMENT 🦁💛
A once-in-a-lifetime player.
A new role. A bond that lasts forever 💛
Mahendra Singh Dhoni takes charge as the Team Mentor of Chennai Super Kings!
Through countless victories, challenging times, and memories that will stay in our hearts forever, MS has been at the heart of our journey from the very beginning.
From leading us to glory to guiding the next generation of Super Kings, Thala will always be a part of our identity. And Chennai will always be his home.
Read more : chennaisuperkings.com/news/n…
#WhistlePodu
🌄 retweeted
பொதுப்புத்தி மனப்பான்மையில் இருந்தோ சொந்த விருப்பு வெறுப்புகளின் அடிப்படையிலோ கண்மூடித்தனமான கருத்துருவாக்கம் செய்ய முயல்வது அல்ல பத்திரிகையாளரின் பணி!
சமூகத்தின் சிந்தனைப் போக்கே சீரழியும் நிலையிலும் அதனைச் செதுக்கி, பக்குவப்படுத்தும் பெரும் பணிதான் ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடகத்துறையின் பணி.
அதனாலேயே, மற்ற மூன்று தூண்களைவிடவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக ஊடகங்களின் பணி கருதப்படுகிறது.
நேர்மையும், அஞ்சாமையும், உண்மையைக் கண்டறியும் ஆர்வமும் உழைப்பும் பொறுமையும் கொண்டு கடமையாற்றிடும் பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் #NationalPressDay வாழ்த்துகள்!
🌄 retweeted
Dummy CM காவல் நிலையங்களில் ஆய்வு செய்த பிறகும் காவல் மரணங்கள் தொடருவதை வன்மையாக கண்டிக்கிறேன்.
மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் லாரி எரிந்தது தொடர்பாக புகார் அளிக்க சென்ற பாலகிருஷ்ணன் என்பவர் காவல் நிலையத்திலேயே மரணம் அடைந்திருக்கிறார்.
புகாரளித்த பாலகிருஷ்ணனை சட்டத்துக்குப் புறம்பாக இரவில் விசாரணைக்கு அழைத்தது ஏன்? விசாரணைக்குச் சென்றவர், காவல் நிலைய கழிவறையில் தற்கொலை செய்து கொண்டார் என்றால், அந்த அளவுக்கு என்ன நெருக்கடி ஏற்பட்டது?
பாலகிருஷ்ணனின் உடலைக்கூட காட்டாமல் அவசர அவசரமாக Post - Mortem செய்ய அனுப்பியதாக அவரின் உறவினர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள்.
இந்த அவசரத்திற்கு என்ன காரணம்? விசாரணை என்ற பெயரில் காவலர்களே அவரை அடித்துக் கொன்றார்களா?
இந்த கேள்விகளுக்கு எல்லாம் துறைக்குப் பொறுப்பு வகிக்கும் டம்மி முதலமைச்சர் பதில் அளிக்க வேண்டும் என்று மதுரை மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
எனவே, முறையாக விசாரித்து, இந்த மரணத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலகிருஷ்ணனின் மரணத்துக்கு நீதி கிடைப்பதை இந்த அரசு உறுதி செய்ய வேண்டும்.
இதே போல, 100 நாள் வேலை முறையாக வழங்கப்படவில்லை என்று கடலூர் மாவட்டம் புதுப்பேட்டையில் புகாரளிக்க சென்ற பெண் ஒருவர், காவல் நிலையத்திலேயே தீக்குளித்துள்ளார்.
இந்த சம்பவத்தில் காரணமானவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அப்பெண்ணின் உறவினர்கள் போராடி வருகின்றனர்.
தன் துறையில் நடக்கும் அவலங்களுக்குப் பொறுப்பேற்கவோ - நடவடிக்கை எடுக்கவோ வக்கின்றி, Punch Dialog பேசி ஆட்சி நடத்தும் இந்த Dummy முதலமைச்சர், Rotten stage-ல் சட்டம் ஒழுங்கை எப்போது காப்பாற்றுவார்?
🌄 retweeted
மகிழ்ச்சியின் வடிவமாக வலம் வரும் மழலைச் செல்வங்கள் அனைவருக்கும் என் இனிய குழந்தைகள் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தூய அன்பையும் - தன்னிகரில்லா கனவுகளையும் சுமந்து நிற்கும் குழந்தைகளின் எதிர்காலம் சிறக்க என்றைக்கும் துணை நிற்போம்.
ஒவ்வொரு குழந்தையும் அறிவின் துணையோடு வாழ்வில் வென்று சமூகத்தை உயர்த்த என் அன்பும் - வாழ்த்தும்!
#HappyChildrensDay
🌄 retweeted
Children are the future of any society or nation, and safeguarding every child is the duty of any elected govt. Every DMK government has always treated this as a priority. Happy Children's Day Greetings. #ChildrensDay
🌄 retweeted
மேகதாது அணை கட்டுவதை யாராலும் தடுக்க முடியாது எனப் பிரதமர் முன்னிலையில் பேசியுள்ளார் கர்நாடக முதலமைச்சர்.
தமிழ்நாட்டின் உயிர்ப் பிரச்சினையான காவிரி விவகாரத்தில், இனியும் அமைதி காக்காமல் தமிழ்நாடு அரசு செய்ய வேண்டியவற்றை வலியுறுத்தி மாண்புமிகு @CMOTamilnadu அவர்களுக்கு நான் எழுதியுள்ள கடிதம்:
#Cauvery #Mekedatu #DeltaFarmers
🌄 retweeted
குழந்தைகளுக்குச் சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதன் முதல் படி, அவர்களுக்கு மகிழ்ச்சியான நிகழ்காலத்தை உறுதிசெய்வதுதான்!
அதற்காகத்தான், திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக்காலங்களில் தடுப்பூசித் திட்டங்கள் முதல் சத்துணவில் முட்டை, மாணவர்களுக்கு இலவசப் பேருந்துப் பயணம் வரை ஏராளமான திட்டங்களைச் செயல்படுத்தினோம்!
அந்தப் பயணத்தின் தொடர்ச்சியாக, நமது #DravidianModel ஆட்சியில்,
🥗 ஊட்டச்சத்தை உறுதிசெய்
🤝 அன்புக்கரங்கள்
🍽️ முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்
🏡 இல்லம் தேடிக் கல்வி
🔢 எண்ணும் எழுத்தும்
🔬 வானவில் மன்றம்
💉 வளரிளம் பெண்களுக்கான கருப்பைவாய்ப் புற்றுநோய்த் தடுப்பூசித் திட்டம்
எனக் குழந்தைகளின் உடல்நலம், கல்வி, அறிவியல் ஆர்வம், தனித்திறன்கள் ஆகியவற்றை மேம்படுத்தும் பல்வேறு திட்டங்களை உருவாக்கிச் செயல்படுத்தினோம்!
குழந்தைகளின் தனித்திறன்கள் வளரவும், அவர்கள் விரும்பிய பாதையில் பயணிக்கவும் பொறுப்புடன் துணைநிற்போம்!
திரைகளின் வெளிச்சத்தைத் தாண்டி, அறிவின் வெளிச்சத்தில் அவர்களின் உலகம் விரியட்டும்!
இனிய #ChildrensDay வாழ்த்துகள்!






























