இரா.சரவணன் (@erasaravanan) header
இரா.சரவணன் (@erasaravanan) profile picture

முன்னாள் பத்திரிகையாளன்... கத்துக்குட்டி, உடன்பிறப்பே, நந்தன் படங்களின் இயக்குநர்...

Chennai
Joined July 2014
Photo by இரா.சரவணன் (@erasaravanan)Photo by இரா.சரவணன் (@erasaravanan)Photo by இரா.சரவணன் (@erasaravanan)Photo by இரா.சரவணன் (@erasaravanan)Photo by இரா.சரவணன் (@erasaravanan)Photo by இரா.சரவணன் (@erasaravanan)Photo by இரா.சரவணன் (@erasaravanan)Photo by இரா.சரவணன் (@erasaravanan)Photo by இரா.சரவணன் (@erasaravanan)Photo by இரா.சரவணன் (@erasaravanan)
‘நந்தன்’ படம் பார்த்து சசிகுமாரிடம் கண் கலங்கிய தலித் பஞ்சாயத்து தலைவர்கள்… படத்தில் காட்டப்பட்டுள்ள அத்தனை காட்சிகளும் தங்கள் வாழ்வில் நடந்த நிஜங்களாக ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறார்கள். நிஜ நந்தன்களின் கண்ணீர், நிச்சயம் உங்கள் மனதை உலுக்கும்… #Nandhan #நந்தன்
131
1,455
92
5,624
260,720
மதிய உணவுக்குப் பிறகான மயக்க நேரம்… சூரி அண்ணன் போன் பண்ணினார். “அண்ணே… நம்ம வீட்ல ஒரு விசேஷம்…” என்றார். “என்னிக்குன்னு சொல்லுங்கண்ணே… ஓடியாந்துர்றேன்…” என்றேன். “நீங்க வந்துடுவீங்க… இருந்தாலும் அழைப்பிதழ் கொடுக்கனுமில்ல…” என்றார் சம்பிரதாயமாய். “அண்ணன்… நான் உங்க வீட்ல ஒருத்தன். மற்றவங்களுக்கு அழைப்பு வைக்கவே உங்களுக்கு நேரம் பத்தாது. எனக்கு அழைப்பு அனுப்பனும்னு நினைச்சீங்கன்னா, வாட்ஸாப் பண்ணுங்க போதும். தயவுபண்ணி நேரம் ஒதுக்கி நேர்ல வராதீங்க…” என்றேன் கெஞ்சலாய். “வரவான்னு கேட்டா நீங்க இப்படித்தான் சொல்வீங்கன்னு தெரியும். அதான் வாசல்ல காரை நிறுத்திட்டு உங்ககிட்ட பேசிட்டே வந்தேன். கதவைத் திறங்க…” ஓடிப்போய் அலுவலகக் கதவு திறந்தால், அழைப்பிதழோடு நிற்கிறார் சூரி அண்ணன். அவர் சகோதரரின் மகள் திருமணம். என் மனைவி கலா வரும்வரை காத்திருந்து அழைப்பிதழ் கொடுத்தார். கிராமத்தில் இருக்கும் என் அம்மாவுக்கு போன் பண்ணி, நலம் விசாரித்து திருமணத்திற்கு வரச் சொன்னார். வந்தோம், அழைப்பிதழ் வைத்தோம் எனக் கடந்திருக்கலாம். ஆனால், கொஞ்சமும் மாறாத வாஞ்சையும் பேரன்புமாய் ஒரு மணி நேரத்துக்கும் மேலாகப் பேசிக் கொண்டிருந்தார். “நீங்க நிறைய பேருக்கு அழைப்பிதழ் கொடுக்க வேண்டி இருக்கும். தயவுபண்ணி கிளம்புங்கண்ணே…” என அவரைத் தள்ளிக்கொண்டு காருக்கு வந்தேன். “சென்னையில உங்களுக்குத்தான் அண்ணே முதல் அழைப்பு. இனிதான் மற்றவங்களுக்குக் கொடுக்கனும்...” என்றார் கார் ஏறும் முன். அப்படியே கட்டிக் கொண்டேன். ‘மண்டாடி’யின் வானளாவிய வெற்றிகூட அண்ணனைக் கொஞ்சம்கூட மாற்றவில்லை!
18
56
10
1,036
105,356
மாமன்னன் ராஜராஜனின் 1041வது சதய விழாவில் ‘தண்ணீரும் தன்னிகரற்ற மன்னன் ராஜராஜனும்’ என்கிற தலைப்பில் பேசினேன். “நிழல் விழாத கோபுரம், 80 டன் எடை கொண்ட ஒரே கல் என்றெல்லாம் கற்பனைக் கதைகளைப் பரப்பாமல், மாமன்னன் ராஜராஜன் நீர் மேலாண்மையில் காட்டிய தீவிரத்தைப் பேசுங்கள். ஏராளமான நீர் நிலைகளை உண்டாக்கி வானம் பொய்த்தாலும் பூமி செழிக்கும் சூழலைச் செய்து காட்டியவன் ராஜராஜன். எளிய வருமானம் கொண்ட வீட்டில் ஒரு தாய் எப்படி பணத்தை அரிசிப் பானை, கடுகு டப்பா, ட்ரங்கு பெட்டி, சுருக்குப்பை எனப் பல இடங்களில் சேமித்து வைத்து நெருக்கடியைச் சமாளிக்கிறாளோ, அதைப்போல் பெய்கிற மழையை ஏரி, குளம், குட்டை, ஊரணி, கண்மாய் எனப் பல்வேறு வடிவங்களில் பாதுகாத்து வைத்தவன் ராஜராஜன். போரில் காட்டிய ஆர்வத்தைக் காட்டிலும் அவன் நீரில் காட்டிய அக்கறை அதிகம். ஒரு பயிரின் சல்லி வேர்களைப் போல் நம் மண்ணின் கடைக்கோடி வரை கிளை வாய்க்கால்கள் நீள அவனே காரணம். வயல்களில் நாம் நடுகிற நாற்றுக்கும், நாம் உண்ணுகிற ஒவ்வொரு கவளச் சோற்றுக்கும் மாமன்னன் ராஜராஜனுக்கு நன்றி சொல்ல வேண்டும். ‘நீரைக் காக்க யார் அக்கறை காட்டுகிறார்களோ… அவர்களின் பாதங்களை என் தலையில் சுமக்கவும் நான் தயார்’ என்றான் ராஜராஜன். அவனுடைய வாரிசுகளாக, வம்சாவழிகளாக வந்த நாம் இன்றைக்கு என்ன செய்து கொண்டிருக்கிறோம்? குளம், குட்டைகளைத் தூர்க்கிறோம். ஏரிகளில் வீடு கட்டுகிறோம். நீர் நிலைகள் யாவையும் ஆக்கிரமிக்கிறோம். பணம் கொடுத்து பாட்டில்களில் நீர் வாங்கிக் குடிக்கும் நிலை வந்த பிறகும் நீர் மேலாண்மையில் நாம் இவ்வளவு பின்தங்கி இருக்கலாமா? பெரிதாக ஒன்றுமில்லை… சொட்டிக் கொண்டிருக்கும் தண்ணீர்க் குழாயை இறுக்கமாக மூடுவதுகூட நீங்கள் ராஜராஜனுக்குச் செய்யும் நன்றிக் கடன்தான்!” எனப் பேசினேன். நேர நெருக்கடியால் முக்கிய கோரிக்கை ஒன்றை முன்வைக்க முடியாமல் போய்விட்டது. அது: “மழை நீர் சேகரிப்பு, இலவச ஆடு, மாடு உள்ளிட்ட திட்டங்களை ராஜராஜன் செயல்படுத்தினான். அவற்றைப் பின்பற்றித்தான் இப்போதைய அரசுகளும் அத்தகைய திட்டங்களைச் செயல்படுத்துகின்றன. அதைப்போல் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே ‘ஏரி வாரியம்’ அமைத்து நீரைக் காத்தவன் ராஜராஜன். அதைப் பின்பற்றி ஏரி வாரியத்தை அமைத்து அதில் நீராதாராங்களைக் காக்கவும் மீட்கவும் போராடுகிற தம்பி நிமல் ராகவன் போன்றோரை தமிழக அரசு நியமிக்க வேண்டும்” சதய விழா நடந்த இரு நாட்களும் பெருமழை பெய்யாமல் அட்சதை போடுவதைப் போல் அவ்வப்போது தூறல் போட்டது வானம். நீர் காத்த மன்னனின் பிறந்த நாளுக்கு வானம் சொன்ன வாழ்த்து அது!
3
12
1
67
6,164
தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் இரா.விஜய் சரவணன் ரசிகர் மன்றத் தலைவராக இருந்தபோது எனக்கு நல்ல பழக்கம். தயக்கமற்ற அவருடைய பேச்சும், மன்ற மனநிலையைத் தாண்டிய மக்கள் நல ஆர்வமும் அப்போதே பிடிக்கும். அதனால் அவ்வப்போது ஜூனியர் விகடனில் தஞ்சாவூர் குறித்த கட்டுரைகளை எழுதுகிறபோது விஜய் சரவணனிடமும் கருத்து கேட்டு வெளியிடுவேன். கால ஓட்டத்தில் நான் சினிமா பக்கம் வந்துவிட்டேன். பல கட்சிகள் அழைத்தபோதும் எந்தப் பக்கமும் போகாமல் விஜய் சரவணன் விஜய் பக்கமே உறுதியாக நின்றார். த.வெ.க அரசியல் கட்சியாகத் தீவிரமானபோதே நான் விஜய் சரவணனின் பங்களிப்பைத் தேடினேன். காரணம், கூட்டத்தை ஒருங்கிணைப்பதிலும் உரியவர்கள் வரும்வரை எல்லோரையும் கட்டிப் போடும் விதமாய்ப் பேசுவதிலும் விஜய் சரவணன் வல்லவர். விஜய் சாரின் அரசியல் சுற்றுப் பயணத்தில் விஜய் சரவணன் செய்திருக்க வேண்டிய ரோல் அண்ணன் ராஜ்மோகன் வசம் போயிருந்தது. பின்னர் தேர்தல் விஜய் சரவணனுக்கு தஞ்சாவூரில் சீட் கிடைத்தது. பலரிடமும் அவருடைய வெற்றி குறித்து விசாரித்துக்கொண்டே இருந்தேன். ஒருமித்த டெல்டா மாவட்டங்களில் த.வெ.க.வுக்கு பெரிய செல்வாக்கு இல்லாமல் போன நிலையிலும், தஞ்சையில் 17,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் விஜய் சரவணன். ‘நிச்சயம் அமைச்சர்’ என அத்தனை பேரும் ஆருடம் சொன்ன நிலையில், திடீரென அவர் சம்பந்தப்பட்ட வீடியோ ஒன்று வெளியாகி எல்லோர் கணிப்பையும் தவிடு பொடியாக்கியது. அமைச்சரவை பட்டியலில் விஜய் சரவணன் பெயர் இல்லை. சட்டமன்றக் கூட்டத் தொடரில் ஒருநாள் விஜய் சரவணன் நெஞ்சுயர்த்திப் பேசிய போதுதான் பலரும் அவரை வியந்து பார்த்தார்கள். அவருடைய சமீபத்திய பேட்டியும் பிரமிக்க வைத்தது. தஞ்சாவூர் மாமன்னன் ராசராசனின் 1041வது சதய விழாவின் அழைப்பிதழைக் கொடுப்பதற்காக குழுத் தலைவர் என்.எஸ்.சரவணனுடன் நம் அலுவலகம் வந்தார் விஜய் சரவணன். இயக்குநர் இரா.சரவணனை பார்க்க வந்தவர், என்னைக் கண்டதும் ஷாக்கானார். ஜூ.வி.யில் பணியாற்றிய காலத்தில் பழகிய நாங்கள் அதன் பிறகு பேசிக்கொள்ளவில்லை. பழைய நினைவுகளைக் கடகடத்தோம். “நான் உங்களோட ‘உடன்பிறப்பே’ படத்துக்கு அடிமை. எனக்கு நாலு அக்காக்கள்… அதனாலேயே அந்தப் படத்தைப் பார்க்கிறப்ப எல்லாம் கண் கலங்கிடும். அதை டைரக்ட் பண்ணியவரே நீங்கதான்னு இப்போதான் தெரியுது” என்றார். மன்ற நிர்வாகியாய் இருந்தவரைச் சட்டமன்ற உறுப்பினராய் நான் பார்த்ததும், ஒரு பத்திரிகையாளராய் இருந்தவரை இயக்குநராய் அவர் பார்த்ததும் ‘அடடா’ என்றிருந்தது. அடுத்த நிமிடத்தின் ஆச்சர்யம் என்னவென்று ஒளித்து வைப்பதில்தானே உலகின் சுவாரஸ்யம் இருக்கிறது!
24
64
11
640
122,930
எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்பதை அரசியலிலும் சினிமாவிலும் கணிக்கவே முடியாது. ‘கத்துக்குட்டி’ பட ரிலீஸ்க்குப் பிறகு கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் அலைந்து அல்லாடிய எனக்கு, சூர்யா சாரின் அலுவலகம் திறந்தது அப்படித்தான். “மேனேஜர் தங்கதுரை சாரை போய் பாருங்களே…” என்றார் ஒருவர். எல்லா கதவுகளையும் தட்டியாகிவிட்டது. அவர் அலுவலகத்திலும் போய் நின்றேன். நிமிர்ந்தவர், “எவ்வளவு நேரம் கதை சொல்வீங்க?” என்றார். “எவ்வளவு நேரத்துல சார் சொல்லனும்?” என்றேன். “ஐடியா மட்டும் சொல்லுங்க…” என்றார். சொல்லத் தொடங்கினேன். அவர் கட் சொல்லும் வரை கதை போகட்டும் என முக்கால் மணி நேரம் சொன்னேன். அவர் முகத்தில் எந்த ரியாக்‌ஷனும் இல்லை. கிளம்பு என்பதற்குள் கிளம்பிவிடுவது தான் நாகரிகம். வந்துவிட்டேன். அப்போதெல்லாம் கால்நடை காலம்தான்… லக்‌ஷ்மண் ஸ்ருதி சிக்னலில் ஒரு வாகனம் உரச வந்து, தட்டுத் தடுமாறி மீள்வதற்குள் பெரும் பாடாகிவிட்டது. வீடு நோக்கி நடந்தேன். தலை கிறுகிறுக்க, லேசான மயக்கம் வந்தது. கொஞ்சம் தண்ணீர் குடித்தால் தேவலாம் போலிருந்தது. நம்மையும் மீறி விழுந்து விடுவோமோ எனச் சுதாரித்துச் சாலையின் ஓரத்திற்கு வந்தேன். ஒரு நாளும் உடல்நிலை இந்த நிலைக்கு ஆளானதில்லை. மனைவிக்கு போன் பண்ண நினைத்தேன். எனக்கு போன் வந்தது. ‘ட்ரீம் வாரியர்ஸ்’ நிறுவனத்தின் எஸ்.ஆர்.பிரகாஷ் சார் அழைத்தார். “சார்…” எனச் சொல்லக்கூடச் சக்தி இல்லை. அதற்காக அவர் காத்திருக்கவும் இல்லை. “சரவணன், அப்படி என்ன கதை சொன்னீங்க? கல்லு மாதிரி இருக்கிற மனுஷன் தங்கதுரை… அவரையே கதற வைச்சிட்டீங்களே…” என்றார். மயக்கமும் தாகமும் இறக்கைகளாக மாறி சட்டென இந்த உடல் பறந்த வேகம் இருக்கிறதே… எங்கிருந்து எனர்ஜி வந்ததோ… “என்ன சார் சொல்றீங்க?” என்றேன். “தங்கதுரை சார் உங்க கதையைக் கொண்டாடிட்டார். நாளைக்கு ஜோதிகா மேடம்கிட்ட நீங்க கதை சொல்றீங்க…” என்றார். எப்போது வீடு வந்தேன், எப்படி வந்தேன் என்பதெல்லாம் தெரியாது. இற்று விழுகிற அளவுக்குச் சோர்ந்து கிடந்த இந்த உடல், சில சொற்களில் துள்ளிக் கிளம்பிய மாயம், எனக்கு இன்றைக்கும் ஆச்சர்யம். வாழ்நாள் முழுக்க பிரகாஷ் சாரை நான் மறக்க முடியாததற்குக் காரணம், அன்றைக்கு அவர் ஊற்றியது உயிர்த்தண்ணீர்! பிறகு 2D ராஜா சாரின் கைவண்ணத்தில் சசிகுமார், ஜோதிகா, இமான், வேல்ராஜ், சமுத்திரக்கனி, சூரி எனப் படம் பிரமாண்டமாக மாறியது. திரைக்கு வந்திருந்தால் ‘உடன்பிறப்பே’யின் வெற்றி வேறு விதமாக இருந்திருக்கும். கொரோனா பாதிப்பால் படம் ஓடிடியில் வெளியானது. ‘உடன்பிறப்பே’ ரிலீஸாகி இன்றோடு ஐந்தாவது வருடம்… பாராட்டாக, விமர்சனமாக படம் கலவையான கருத்துகளைப் பெற்றாலும், எத்தனையோ குடும்பங்களை அந்தப் படம் இணைத்து வைத்ததில் எல்லையில்லா மகிழ்ச்சி. இன்றைக்கும் உலகின் ஏதோவொரு மூலையில் இருந்து வருகிற போன், கண்ணீரோடு படம் குறித்துப் பேசும்; உருகும். எப்படியோ என் எண் வாங்கி அண்ணன்களின் அருமையைச் சொல்லிக் கலங்கிய பெண்களும், தங்கைகளை எண்ணி உடைந்த அண்ணன்களும் அதிகம். காவல் துறையில் கோலோச்சிய ஜாஃபர் சேட் சார் வீட்டுக்குச் சமீபத்தில் போனேன். எப்போதும் மலர்ந்த புன்னகையும் மரியாதையுமாய் அழைக்கும் அவர் மனைவி அமைதியாக நின்றார். “காரணம் நீங்கதான் சரவணன்… உங்களோட ‘உடன்பிறப்பே’ இப்போதான் டி.வி.யில் ஓடினச்சு. அந்தப் படம் பார்க்கிறப்ப எல்லாம் அவங்க கலங்கிடுவாங்க…” என்றார் சார். “எத்தனை தடவை ‘உடன்பிறப்பே’ பார்த்தாலும் என்னால தாங்க முடியாதுப்பா…” என்றார் மேடம். நெகிழ்ந்து போனேன். முன்னணி சினிமாகாரர் ஒருவர் சொன்னதுதான் முத்தாய்ப்பு: “என் சித்தப்பா மகள் கோவக்காரி. குடும்ப சண்டையில முறைச்சுக்கிட்டு பேச மாட்டா. கல்யாணத்துக்குக்கூட கூப்பிடலை. பத்து வருசத்துக்கும் மேல ஆகிடுச்சு. திடீர்னு அவகிட்ட இருந்து போன். தேம்பித் தேம்பி அழுவுறா… எந்தச் சாமி கண் திறந்தச்சோன்னு பேசி முடிச்சேன். அப்புறம்தான் சித்தி சொன்னாங்க… ‘உடன்பிறப்பே’ படம் பார்த்துட்டுத்தான் போன் பேசினான்னு… ஒரு படம் இதைவிட வேறென்ன சரவணன் பண்ணனும்?” என்றார். இன்று ‘உடன்பிறப்பே’யின் ஐந்தாவது வருடம் என்பதை என் மனைவி கலாவிடம் சொன்னேன். எந்தப் பதிலும் சொல்லாமல் சமையற்கட்டுக்குள் நுழைந்தார். “படம் எடுக்கிறது முக்கியம் இல்ல… அந்த மாதிரி வாழனும். அப்புடி எந்தம்பி என்ன தப்பு பண்ணிட்டான்? வருசக்கணக்குல அவன்கிட்ட பேசாம இருக்குறவரு, படத்துல மட்டும் எல்லா உறவுகளும் ஒண்ணா இருக்கனும்னு போதனை பண்ணுவாராம்?” எனக்கும் சேர்த்துப் பாத்திரங்கள் அடி வாங்கின. #Udanpirappe #உடன்பிறப்பே @SasikumarDir
26
54
1
521
34,429
நான் பார்த்த முதல் சினிமா பிரமுகர் நரியங்காடு சுப.அருணாச்சலம் தேவர். நான் ஆறாம் வகுப்பு படிக்கும்போது, “அவரு அப்பவே நளினியை நடிக்க வைச்சு படம் எடுத்தவர்…” என்று சொல்வார்கள். அப்போதிருந்தே அவர் மீது பெரிய மரியாதை. நளினியை முக்கிய பாத்திரமாக வைத்து அவர் தயாரித்த ‘ஜாதிப்பூக்கள்’ என்கிற படம் ரிலீஸாகாமல் போய்விட்டது. அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், விவசாயத்தின் பக்கம் திரும்பி, பெருநிலக்கிழாராகக் கட்டி ஆண்டார். கல்லூரிக் காலத்தில்தான் அவரை நெருங்கிப் பேசுகிற அளவுக்குத் தைரியம் வந்தது. “ஏம்பா நீங்க எடுத்த படம் ரிலீஸாகலை?” எனக் கேட்டேன். “திரையில நம்ம பெயர் தெரியிறதுக்கெல்லாம் பெரிய அதிர்ஷ்டம் வேணும்டா…” என்றார். அந்த வார்த்தைகளில் இருந்த வலி எனக்குப் புரிந்தது. 2015ல் என் முதல் படமான ‘கத்துக்குட்டி’ ரிலீஸானபோது திரையில் முதல் பெயராய், “நன்றி - சுப.அருணாச்சலம் தேவர், நரியங்காடு” என்றுதான் போட்டிருந்தேன். பட்டுக்கோட்டையில் படம் பார்த்தவர்கள் அவருக்குத் தகவல் சொல்ல, போன் பண்ணினார். “நா உனக்கு ஒண்ணுமே பண்ணலையேடா… ஏம்பேரை ஏன் போட்டே?” என்றார். “நான் படம் பண்ணனும்னு எந்தளவுக்கு ஆசைப்பட்டேனோ அந்தளவுக்கு உங்க பேர் திரையில தெரியனும்கிறதும் என்னோட ஆசைப்பா…” என்றேன். நெகிழ்ந்து போனார். தீவிர முருக பக்தரான அவர் என்னை வீட்டிற்கு அழைத்து திருநீறு பூசிவிட்டு,“ஒண்ணு சொல்றேன்… சினிமா எப்பேர்ப்பட்ட ஆளையும் இடறி விட்ரும்… ரொம்ப கவனமா இருக்கனும். அந்த முருகன் உனக்கு துணையிருப்பான்…” என்றார். அந்த அறிவுரைதான் இன்றளவும் சினிமாவில் என்னைக் கவனமாக வழிநடத்துகிறது. சொந்த ஊரில் 9 செண்ட் இடம் வாங்கி வீடு கட்ட முடிவெடுத்த காலம்… அந்த இடத்தில் மனை அமையவில்லை. அதற்குப் பின்னால் இருந்த அருணாச்சலம் அவர்களின் இடத்தில்தான் மனை இருந்தது. 3 செண்ட் இடம் கேட்டு அவரிடம் போனேன். “காசெல்லாம் வேணாம்டா… மனை எங்கே இருக்கோ அங்கேயே வீட்டைக் கட்டிக்க...” என்றார். அவர் கொடுத்த நம்பிக்கையில் வீட்டைக் கட்டிவிட்டோம். மூன்று வருடங்களுக்கு முன்னால், அவருக்கு உடல்நிலை தளரத் தொடங்கியது. அவர் பட்டாவில் எங்களின் பாதி வீடு இருந்தது. அதனால் முறையாக அந்த இடத்தை எழுதி வாங்கிக் கொள்ளச் சொல்லி சராசரி மனிதர்கள் அறிவுறுத்தினார்கள். நான் ரொம்பவே தயங்கினேன். விஷயமறிந்து அவரே என்னை அழைத்தார். “நீ அந்தத் தோப்பையே வைச்சுக்கடா…” என்றார். எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. “நெலம்கிறது எப்பவும் ஒருத்தனோட கையில இருக்காது. வேற ஆட்களோட கைக்கு மாறுறப்ப உன்னோட வீட்டை காலி பண்ணச் சொல்லி பிரச்னை செய்வாங்க. அதனால தோப்பை நீயே வைச்சுக்கடா…” என்றார். “அவ்வளவு பணம் எங்கிட்ட இல்லையேப்பா…” என்றேன். “நிலம் வாங்க பணம் அவசியம் இல்லடா. தைரியந்தான் வேணும்… இப்போதைக்கு இருக்கிற பணத்தைக் கொடு. அப்புறம் என் பிள்ளைகள் காலத்துல செட்டில் பண்ணு. உனக்கும் ஒரு இலக்கு இருக்கனும். அப்பதான் நீ ஒழுங்கா சம்பாரிப்ப…” என்றார். சசிகுமார் சாரிடம் ஓடிவந்து விஷயத்தைச் சொன்னேன். “அப்பேர்ப்பட்ட மனிதர் கொடுக்கிறதை மறுக்க வேணாம். வாங்கிக்கங்க…” எனச் சொல்லிப் பணம் கொடுத்து அனுப்பினார் சசிகுமார். மொய் விருந்து வைத்தும் கடன் வாங்கியும் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் மீதத் தொகையைக் கொடுத்து முடித்தோம். இத்தனைக்கும் கைமேல் மொத்த பணத்தையும் கொடுத்து அந்த நிலத்தை வாங்க அப்போதே ஆட்கள் போட்டி போட்டார்கள். பிறருக்கு நல்ல லாபத்திற்கு விற்கும் வாய்ப்பிருந்தும் எனக்கு அந்த நிலத்தை ஏன் கொடுத்தார்? ஒரு நாள் வாய்விட்டுக் கேட்டேவிட்டேன். “நீ மரஞ்செடி கொடின்னு ஆர்வப்படுற பய… நெலத்தை கூறுபோட்டு வித்துட மாட்டே… அதான்டா…” என்றார். கலங்கிப் போனேன். நிலம் அளந்தபோது ஒன்றரை செண்ட் பத்திரம் ஆகாமல் போக, கடந்த மாதம் அதற்காகப் பேராவூரணி வந்தார். தளர்ந்த அவர் உடல்நிலை பார்த்து, “அந்த இடம் உங்க பேர்லேயேகூட இருக்கட்டுமேப்பா… இதுக்காக ஏன் கிளம்பி வந்தீங்க?” என்றேன். “யாருக்கும் எந்தக் குறையும் வைக்காம நான் கெளம்பனும்டா…” எனச் சிரித்தார். இவ்வளவு சீக்கிரத்தில் கிளம்புவார் என நினைக்கவே இல்லை. எங்கள் வட்டாரத்திற்கே புகழின் அடையாளமாக நின்ற ஆலமரம் சாய்ந்தது. பாரம்பரியச் சிறப்பாய் வீசிய சந்தனப் பூங்காற்று ஓய்ந்தது. அஞ்சலி செலுத்தி, அவர் நினைவாய் அவர் கொடுத்த தோப்பில் பத்து மரக்கன்றுகளை நட்டேன். பத்தாவது கன்றை ஊன்றி மண் அள்ளிப் போட்டபோது, சட்டெனக் கொட்டத் தொடங்கியது மழை. பெருவாழ்வு வாழ்ந்த ஒரு மனிதன் மண்ணும் மழையுமாய் எப்போதும் எங்கள் நெஞ்சில் நிலைத்திருப்பார்! #சுப_அருணாச்சலம் #அருணாச்சலம்_தேவர் #அருணாச்சலம் #நரியங்காடு
34
78
3
554
21,270
இரா.சரவணன் retweeted
என்னோட அடுத்த படமும் நந்தன் மாதிரி கண்ணுக்கு முன்னாடி நடந்த நிகழ்வு தான் - இயக்குனர் & பத்திரிகையாளர் இரா சரவணன் #EraSaravanan #TamilCinema #Kollywood #Viral #TouringTalkies
3
30
2,416
இரா.சரவணன் retweeted
கமல் சார் மட்டும் வினோத்தோட அந்த கதையை பண்ணியிருந்தா வேற லெவலா இருந்திருக்கும் - இயக்குனர் & பத்திரிகையாளர் இரா சரவணன் #KamalHaasan #HVinoth #EraSaravanan #TamilCinema #Kollywood #TouringTalkies
3
26
2
208
13,610
இரா.சரவணன் retweeted
தீரன் படத்துக்காக இரத்தம் வேர்வை சிந்தி உழைச்சாரு வினோத் - இயக்குனர் & பத்திரிகையாளர் இரா சரவணன் #HVinoth #EraSaravanan #TamilCinema #Kollywood #TouringTalkies
8
58
4,027
இரா.சரவணன் retweeted
நான் சொன்ன பட்ஜெட்டை விட கம்மியாவே அந்த படம் பண்ணி கொடுத்தேன் - இயக்குனர் & பத்திரிகையாளர் இரா சரவணன் #EraSaravanan #TamilCinema #Kollywood #Viral #TouringTalkies
2
19
1,988
இரா.சரவணன் retweeted
நந்தன் படதுக்காக சசிகுமார் சார்ர ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன் - இயக்குனர் & பத்திரிகையாளர் இரா சரவணன் #Sasikumar #EraSaravanan #Nandhan #TamilCinema #Kollywood #TouringTalkies
1
3
36
4,084
இரா.சரவணன் retweeted
Director Era. Saravanan about #KH233 Project 🎬🔥: “I read the script of the film that H. Vinoth was supposed to direct with #KamalHaasan sir. If Kamal sir had done that film, it would have turned out to be a terrific commercial film. Even Kamal sir’s Introduction Scene was written brilliantly by Vinoth🔥. At one point, when the project was moving towards the next stage, Vinoth was a little down emotionally.” Follow 👉 @FilmyBowlTamil
9
19
5
66
8,491
இரா.சரவணன் retweeted
#EraSaravanan About #HVinoth's #KamalHaasan Project: Vinoth called me and said, ‘I’ve written a story for Kamal Sir.’ He invited me to his office and gave me the script to read. After reading it, I told him, ‘Sir, if Kamal Sir had done this film, it would have been a huge commercial success. After finishing the script, I hugged Vinoth and told him, ‘The way you’ve written Kamal Sir’s introduction is something else. There’s nothing complicated about it — just, ‘He gets up from his chair, Sir.’ But the way you have written it and imagined how it would be filmed is beyond imagination. How did you think of something like this, Vinoth? It’s superb!’ However, the project never moved to the filming stage. After that, the #Vijay Sir project came along. #KH233
37
5
769
102,834
இரா.சரவணன் retweeted
பாதிக்கப்பட்ட மக்களையே 'நந்தன்' படத்துல நடிக்க வைச்சேன் - இயக்குனர் & பத்திரிகையாளர் இரா சரவணன் #EraSaravanan #Nandhan #TamilCinema #Kollywood #Viral #TouringTalkies
3
1
32
2,564
இரா.சரவணன் retweeted
#JanaNayagan Discussion & Post-Release Reception “I was extremely happy that #HVinoth had committed to doing a #ThalapathyVijay film. He brought me in a car to the airport and then to Cochin. I asked him what the matter was, and he told me we were going for the #Vijay sir film discussion. With #HVinoth, 1 AD and 1 manager, we did 32 days of story discussions for the film. The original story #HVinoth had for #CMVijay was extraordinary, but when he had to remake and adapt #BhagavanthKesari, we didn’t know how far we could adapt it. I watched “Bhagavanth Kesari”; it was a good film. During the discussion, he told me we were adapting that film. #HVinoth also liked that film. However, we didn’t know how the adaptation would stand the weight of #Vijay sir’s last farewell film. For #Balayya, it’s okay, but for #ThalapathyVijay, we have to see. I even asked him to convey this to #Thalapathy. But #HVinoth sir told me, #CMVijay had confirmed “Bhagavanth Kesari” adaptation as his last farewell film. We can’t ask for any changes. We had already sat down in a company and lost 9 months. We can’t miss this chance, so we did it. The discussion with Vinoth is very different. If we’re doing a scene with a politician, he’ll ask about all the politicians we’ve met in our lives. We will discuss and talk, and when we transform it into a scene, it’ll be surprising. We had 32 days of discussion. Vinoth is a director who wanted to tell all the knowledge he has through cinema what’s happening around us, how big politics is handling us, whose children are we, who’s deciding what we need to do. But I’ll tell Vinoth, the knowledge and information you’re giving in the movie is overloaded. I know you’re socially conscious; even #Valimai had this problem. But he was sure that, when it’s #ThalapathyVijay sir’s last film, we have to tell all this knowledge and information. His intention is that, after watching the movie, are people getting enhanced? Are people becoming more cautious? That responsibility he’ll always have. But I told him that responsibility is an issue. He was sure that this film shouldn’t be criticised like #Valimai. There is a deleted scene; it’s an extraordinary scene about how 2 societies tackle an issue, but he couldn’t keep it in the final cut. When doing a big film, we can’t do everything as we envisioned. The original story Vinoth told me for #ThalapathyVijay was different. The way the story changed was different. It was adapted into #BhagavanthKesari, and then there were some changes in the adaptation. I was excited to see what he was going to give in the final output. He was waiting for my phone call. After watching the film 3 times, I told him there was a lag with the 3-hour runtime no matter how much knowledge you’re trying to give, it won’t stand. He told me, “If we reduce the length now, it’ll be wrong.” “ - #EraSaravanan @erasaravanan
11
3
112
20,951
இரா.சரவணன் retweeted
#HVinoth was supposed to do #KH233. I read the story in his office, in a room. If #KamalHassan had done that film, it would’ve been a great commercial hit. I hugged Vinoth after reading the story and said, “What an intro for Kamal sir.” The intro sequence is just Kamal Hassan sir standing up after sitting down, but the way he wrote it and the way I imagined him filming it would’ve been extraordinary. Vinoth asked me, “Is it really good?” I told him it’s a superb 👌 story. However, a story that was celebrated couldn’t go to the next stage. I was very saddened by it. Even Vinoth got very exhausted. — #EraSaravanan @erasaravanan
1
11
121
16,418
இரா.சரவணன் retweeted
மீத்தேன் அபாயத்தை வைச்சு நான் எடுத்த படம் தான் கத்துக்குட்டி - இரா சரவணன் #EraSaravanan #Kathukkutty #TamilCinema #Kollywood #TouringTalkies
1
3
26
2,097
இரா.சரவணன் retweeted
அவமானங்கள்ல இருந்து தான் சினிமாவை கத்துகிட்டேன் - இயக்குனர் & பத்திரிகையாளர் இரா சரவணன் #EraSaravanan #TamilCinema #Kollywood #Viral #TouringTalkies
9
63
6,110
இரா.சரவணன் retweeted
சசிகுமார் சார் முதல் BALL-யே சிக்ஸர் அடிச்சவரு..‌. இயக்குனர் & பத்திரிகையாளர் இரா சரவணன் #Sasikumar #EraSaravanan #TamilCinema #Kollywood #TouringTalkies
17
138
14,468
இரா.சரவணன் retweeted
'உடன்பிறப்பே' கதையை கேட்டு சீமான் அழுதுட்டாரு -இயக்குனர் & பத்திரிகையாளர் இரா சரவணன் #Seeman #Udanpirappe #EraSaravanan #TamilCinema #Kollywood #TouringTalkies
2
18
223
18,311
இரா.சரவணன் retweeted
ஊர் செல்லும் பாதையில் முட்கள் இருந்ததேயில்லை- அம்மா உன் புன்சிரிப்பு பூமெத்தை என் காலடி தாங்கும்! என் நாளைய மறுதின வருகைக்கான உணவு தயாரிக்க இன்றே பலமுறைதொலைபேசும் உன் அழைப்பற்ற நாட்கள் கடந்து வருடங்கள் ஆறாகிவிட்டன- காத்திருக்கும் நீயற்ற அந்த நீள் இருக்கை உன் உழைப்பின் கனம் தாங்கிக் களைத்திருக்கிறது! நீ அயர்ந்துறங்கும் மெத்தைமடிப்புகள் சலவைப் படுத்த முடியாத உன் உரையாடல்களின் நினைவூட்டலுடன் உயிர்த்திருக்கின்றன! அஞ்சலிக்கென கொண்டு வரப்படுகின்ற பிச்சிப் பூ பந்துகள்- மாலைகள் நீ எடுத்து வந்து நட்டு வைத்த செடிகளின் பெயரற்ற முகவரிகளைத் தாங்கி வருகின்றன! படையலுக்கென்று சமைத்த பலகாரங்கள் உன் தேர்ந்த கைமணமற்றுக் கண்ணீரில் தன் உப்பைச் சரிசெய்து கொள்கின்றன! ரசித்து நீ அருந்தும் காபி நுரையற்றதாய் வெறுமையில் ததும்பும் இந்த நாள் வந்திருக்கவே வேண்டாம்:( அன்பைச் சுமந்து ‘ அன்னமிட்ட கைகளுக்கு அன்பு செய்த கண்களுக்கு உன்னை விட்டுப் போவதற்கு உள்ளமில்லை மகளே’ என எனைத் தேற்ற நீ் அவ்வப்போது பாடும் திரைப்படப் பாடல் எங்கோ ஒலிக்க- ‘அம்மா’வெனத் தனிமையில் அழைத்து உன் புகைப்படத்திற்கு முத்தமிடுகிறேன்- எச்சிலும் கண்ணீரும் கனக்கும் அதன் முன் காலக் கரையான் கைகட்டி நிற்கட்டும்!
6
11
129
4,673