@kbcpim

Twitter handle of K.Balakrishnan, CPI(M), CCM. | @TNCPIM | @CpimSpeak

Chennai, India
Joined October 2014
கே.பாலகிருஷ்ணன் - K Balakrishnan retweeted
சாதிவாரி கணக்கெடுப்புக்கு #CPIM ஆதரவு! - #CPIM சட்டமன்றக்குழுத் தலைவர் தோழர் ஆர்.செல்லசுவாமி எம்.எல்.ஏ., #TNAssembly
7
19
1,006
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அவர்கள் இன்று 64 வயதை நிறைவு செய்கிறார். அவருக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். @thol
1
28
1
204
15,946
சமூகநீதி, சமத்துவம், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகள் மற்றும் மதச்சார்பின்மையைப் பாதுகாக்கும் அரசியல் போராட்டத்தில் நீண்ட காலமாக உறுதியுடன் செயல்பட்டு வருபவர் திருமாவளவன்.
1
1
6
488
அவர் நல்ல உடல் நலனுடன் நீண்ட காலம் செயல்பட வேண்டுமென எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். - கே. பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர், சி.பி.ஐ(எம்).
1
4
81
தமிழ் திரையுலகின் மிகச் சிறந்த திரைக்கதை ஆசிரியர்கள், இயக்குநர்கள், நடிகர்களில் ஒருவரான கே. பாக்யராஜ் அவர்களின் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது. அன்னாரின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், திரையுலகினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
1
2
1,113
பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக தனது திரைப்பயணத்தைத் தொடங்கிய அவர், சிறு வேடங்களில் தோன்றி, புதிய வார்ப்புகள் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். பின்னர் சுவரில்லாத சித்திரங்கள் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி, தனித்துவமான திரைக்கதை பாணியை உருவாக்கினார்.
177
திருவள்ளூர் மாவட்டத்தில், அம்மோனியா கசிவின் காரணமாக 9 தொழிலாளர்கள் பலியாகினர். பாதிப்படைந்த தொழிலாளர்கள் ராஜீவ் காந்தி மற்றும் ஸ்டான்லி மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர்.
1
2
2
11
2,521
அம்மோனியா கசிவால், பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு நீதி கேட்டு வரும் 25.06.2026 அன்று, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. நானும் பங்கேற்கிறேன்.
1
68
மனித நேய உணர்வு கொண்ட பொதுமக்கள் அனைவரும் இப்போராட்டத்துக்கு ஆதரவளிக்க கேட்டுக் கொள்கிறேன். - கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக் குழு.
47
தமிழ்நாட்டில் NEET Super Speciality (NEET SS) படிப்புகளுக்கான அரசு மருத்துவர்களின் சேவை ஒதுக்கீட்டு இடங்களில் காலியாக உள்ள இடங்களை அனைத்திந்திய ஒதுக்கீட்டிற்கு மாற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
5
5
7
2,395
தமிழ்நாட்டு நலனுக்கும்,‌ உச்சநீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்புகளின் நோக்கத்திற்கும் முரணானதாக உள்ளது. எனவே, தமிழ்நாடு அரசு விரைந்து செயல்பட்டு, அரசு சேவை மருத்துவர்களுக்கான 50% சேவை ஒதுக்கீட்டைப் பாதுகாக்க வேண்டும்.
1
297
நமது மாணவர்களின் கல்வி உரிமை பாதிக்கப்படுவதை அனுமதிக்க‌ முடியாது. தமிழ்நாட்டிற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடங்கள் தமிழ்நாட்டு மருத்துவர்களால் நிரப்பப்படுவதை உறுதி செய்ய வேண்டும். — கே. பாலகிருஷ்ணன்
2
268