Mylai Velu (@mylaivelu71) header
Mylai Velu (@mylaivelu71) profile picture

மக்கள் பணி... மனநிறைவான பணி..💪 Chennai Southwest district secretary DMK and Ex.Member of Legislation assembly mylapore Constituency

Chennai.mylapore
Joined June 2019
Photo by Mylai Velu (@mylaivelu71)Photo by Mylai Velu (@mylaivelu71)Photo by Mylai Velu (@mylaivelu71)Photo by Mylai Velu (@mylaivelu71)Photo by Mylai Velu (@mylaivelu71)Photo by Mylai Velu (@mylaivelu71)Photo by Mylai Velu (@mylaivelu71)Photo by Mylai Velu (@mylaivelu71)Photo by Mylai Velu (@mylaivelu71)Photo by Mylai Velu (@mylaivelu71)
வெட்கமாயில்லையா..... ஒரு அரசியல் அதிகாரியான பெண்ணுக்கு இந்த ஆட்சி எப்படிப்பட்ட மன உளைச்சலை ஏற்படுத்திருக்கிறது என்பதை கொஞ்சம் கூட உணராமல் எப்படி இவர்கள் பேட்டி கொடுக்கிறார்கள். திமுக வை பற்றி படித்துவிட்டு பிறகு பேசுங்கள். கவர்னரை எதிர்ப்போம்; அரசியலமைப்பை அல்ல. ஆளுநரின் தவறான அரசியல் தலையீட்டை எதிர்ப்பது வேறு; அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய வழியில், மக்கள் நலனுக்காக ஆளுநரிடம் மனு அளிப்பது வேறு. ஒரு பெண் அதிகாரி மீது நிகழ்ந்ததாகக் கூறப்படும் பாலியல் தொந்தரவு விவகாரத்தில், அரசு உரிய வேகத்தில் செயல்படாதபோது, நீதிக்காக கிடைக்கும் ஒவ்வொரு அரசியலமைப்பு கதவையும் தட்டுவது எதிர்க்கட்சியின் கடமை. அதை “லோக்பவனைச் சுற்றிச் சுற்றி வருகிறார்” என்று கேலி செய்வது, பெண்களின் பாதுகாப்புக் கேள்வியையே சிறுமைப்படுத்துவதாகும். தி.மு.க. ஆளுநர் பதவியை அல்ல; அந்தப் பதவியின் வரம்பை மீறி, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் உரிமைகளில் தலையிடும் செயல்களைத்தான் எதிர்த்தது. மக்கள் தேர்ந்தெடுத்த சட்டமன்றத்தின் தீர்மானங்களை முடக்கும்போது கேள்வி கேட்போம். மாநில உரிமையை மறுக்கும்போது எதிர்ப்போம். ஆனால் அரசியலமைப்புச் சட்டம் காட்டும் பாதையில் நீதி கேட்க வேண்டிய நேரம் வந்தால், அதே சட்டத்தின் வழியே கம்பீரமாகச் செல்வோம். எதிர்ப்பு என்பது கதவை மூடுவது அல்ல; அநீதிக்கு எதிராக எல்லாக் கதவுகளையும் தட்டுவது. தைரியம் என்பது சட்டத்தை மீறுவது அல்ல; சட்டத்தின் வழியே அதிகாரத்தைப் பொறுப்பேற்கச் செய்வது. எழுபத்தைந்து ஆண்டுகளைத் தாண்டியும் தி.மு.க. கம்பீரமாக நிற்பதற்குக் காரணம் இதுதான். எதிர்ப்போம் — ஆனால் அரசியலமைப்பை மதித்து எதிர்ப்போம். போராடுவோம் — ஆனால் ஜனநாயகத்தின் எல்லைக்குள் போராடுவோம். மக்கள் உரிமைக்காகக் குரல் கொடுப்போம் — ஆனால் கோழைத்தனமான மௌனத்தில் ஒளியமாட்டோம். கவர்னரை எதிர்ப்போம்; அவர் அரசியலமைப்பின் வரம்பை மீறும்போது. கவர்னரைச் சந்திப்போம்; அரசியலமைப்பின் வழியில் மக்களின் நியாயத்தை வலியுறுத்தும்போது. இதுதான் தி.மு.க. இது சரணாகதி அல்ல — சட்டத்தின் வழியே நடத்தப்படும் கம்பீரமான ஜனநாயகப் போராட்டம். @arivalayam @DMKITwing @dmk_youthwing @TVKVijayHQ @TVKHQITWingOffl @sunnewstamil @Kalaignarnews
"சில மாதங்களுக்கு முன்பு உதயநிதி பேசிய வீடியோவை பார்த்தேன்..அன்று ஆளுநரை Who are you-னு கேட்டாரு..ஆனால் இன்று லோக்பவனை சுற்றி சுற்றி வருகிறார்"..எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியை தாக்கிப் பேசிய அமைச்சர் ராஜ்மோகன் #Rajmohan | #UdhayanidhiStalin | #Puthiyathalaimuraitv | Puthiya thalaimurai
3
13
43
1,517
Mylai Velu retweeted
#WATCH | “நீதிமன்றத்திற்கு போனதால்தான் FIR பதிவு செய்துள்ளார்கள்.. 116 நாட்களா தூங்கிட்டு இருந்தாரா முதலமைச்சர்?” கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளித்த பிறகு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பேட்டி #SunNews | #UdhayanidhiStalin | #ArulVignesh
32
897
11
2,123
76,147
Mylai Velu retweeted
உங்க அண்ணன், உங்க தாய்மாமன் என டயலாக் பேசும் முதலமைச்சருக்கு நான்கு மாதங்களுக்கு முன்பே மாவட்ட ஆட்சியர் புகார் கொடுத்தது தெரியுமா, தெரியாதா? தேசிய மகளிர் ஆணையமும், உயர்நீதிமன்ற நீதிபதியும் தலையிட்ட பின்னர்தான் ஒரு மாவட்ட ஆட்சியரின் புகாரே பதியப்படும் என்றால் தமிழ்நாட்டில் நடப்பது ஆட்சியா, இல்லை வேறெதுவுமா? போடாத கமெண்டுக்காக, பேராசிரியரின் முகவரியைத் தேடிக் கண்டுபிடித்து அதிகாலையில் கடத்திச் செல்லத் தெரிந்த காவல்துறைக்கு, முதலமைச்சர் விஜய் அவர்களின் பொடனிக்குப் பின்னாலேயே இருந்துகொண்டு தவறிழைத்த MLA-வைக் கைது செய்யத் தெரியவில்லையா? கூட்டுப் பாலியல் வன்கொடுமைப் புகாரில் சிக்கிய ஸ்ரீவைகுண்டம் MLA மீதும், மைதானத்தில் போதை மாத்திரை நசுக்கிய அமைச்சர் மீதும் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் த.வெ.க.வில் மற்றவர்களுக்கு பயம் இருந்திருக்கும். மாறாக, என்ன செய்தாலும் நாம் காப்பாற்றப்படுவோம், புகார் அளித்த பெண்களைத்தான் கட்சியில் இருந்து நீக்குவார்கள் என்ற மோசமான முன்னுதாரணங்களை முதலமைச்சர் விஜய் அனுமதித்துவிட்டார். அந்த தைரியத்தில்தான் ஒட்டுமொத்த மாவட்டத்தின் தலைமைப் பொறுப்பை வகிக்கும் அதிகாரியிடமே எல்லை மீறியிருக்கிறார் த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர். 'த.வெ.க. பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும்' என்று சொல்லி ஆட்சிக்கு வந்தார்கள். இன்று, த.வெ.க.வினரின் தொல்லையில் இருந்து பாதுகாப்பு தேடிப் பெண்கள் ஓடும் நிலைக்குத் தமிழ்நாடு தள்ளப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது. இந்த வழக்கிலாவது உறுதியான நடவடிக்கை எடுத்தால்தான் இப்படியான சம்பவங்களை எதிர்காலத்தில் தடுக்க முடியும். நான்கு மாதகாலமாக ஒரு குற்றவாளியைப் பாதுகாக்க எல்லா வழிகளையும் பயன்படுத்திய மாநில அரசு - இப்படிப்பட்ட MLA-வை அழைத்து “தீபாவளி பரிசு” கொடுத்த முதலமைச்சரின் தலைமையில் உள்ள மாநில அரசு இனி இந்த வழக்கை விசாரிப்பது சரியாக இருக்காது. எனவே, மாநில அரசு தாமாகவே இந்த வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும். சட்டமன்ற உறுப்பினரின் ஒழுங்கீனம் குறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்த பின்பும் நடவடிக்கை எடுக்காமல் மூடிமறைத்த தலைமைச் செயலாளர் மீதும், மாவட்ட ஆட்சியருக்கு அழுத்தம் தந்த அமைச்சர்கள் மீதும் நடவடிக்கை பாய வேண்டும். கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும். #TVKFails #Arrest_ArulVignesh
393
4,081
135
9,142
265,373
Mylai Velu retweeted
ஆளுங்கட்சியைச் சேர்ந்த MLA-வின் ஒழுங்கீனமான செயல் குறித்து மாவட்ட ஆட்சியர் முறையாகப் புகார் அளித்திருக்கும் செய்தி 'தி இந்து' நாளேட்டில் இன்று வெளியாகியிருக்கிறது. இத்தகைய ஒரு சம்பவம் நடைபெற்றதாக பல வாரங்களுக்கு முன்பு செய்திகள் வெளிவரத் தொடங்கியபோதே, முதலமைச்சரும் தலைமைச் செயலாளரும் மாவட்ட ஆட்சியரை அழைத்துப் பேசி இருக்க வேண்டும். அவருக்கு உறுதுணையாக அரசு இருக்கும் என்ற நம்பிக்கையை அளித்திருக்க வேண்டும். தவறிழைத்த சட்டமன்ற உறுப்பினரைக் கண்டித்து, சட்டநடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். பெண்களின் பாதுகாப்பிற்கும், ஆட்சி மாண்பிற்கும் முக்கியத்துவம் அளிக்கும் எந்த ஒரு அரசும் இதைத்தான் செய்திருக்கும். ஆனால், தன் கட்சி சட்டமன்ற உறுப்பினரையும் தன் மைனாரிட்டி அரசையும் காப்பாற்றினால் போதும் என்ற நோக்கத்தில் இவர்கள் இந்த சம்பவத்தை மறைக்க அனைத்து வகைகளிலும் முயற்சித்ததால்தான், பாதிக்கப்பட்ட பெண் அலுவலர் முறையாகப் புகார் அளிக்கவே இத்தனை நாட்கள் ஆகியிருக்கின்றன. ஒரு மாவட்ட ஆட்சியருக்கே இந்த நிலைமை என்றால் தமிழ்நாட்டில் வாழும் சராசரிப் பெண்களின் நிலை எப்படி இருக்கும் என்ற கேள்வி கவலை அளிக்கிறது. இதில், பதவிக்கு மாரடிக்கும் சில கட்சித் தலைவர்கள் பாதிக்கப்பட்டவரின் பக்கம் நிற்காமல், MLA பாவம் என்று முட்டு கொடுத்தது கேவலத்தின் உச்சம். பல்வேறு வகைகளிலும் இந்த சம்பவம் அரசின் கவனத்திற்கு வந்த பிறகும், இந்த அரசு நடவடிக்கை எடுக்காமல் நீதிமன்றத்திலும் பொய் சொல்கிறார்கள் என்பது கடும் கண்டனத்துக்குரியது. பாலியல் குற்றங்களிலும், போதைப் பொருள் கடத்தலிலும், கொள்ளைச் சம்பவங்களிலும் த.வெ.க.வினர்தான் அதிகம் ஈடுபடுகிறார்கள் என நாங்கள் தொடர்ந்து சொல்லி வருவது ஒவ்வொரு நாளும் உண்மையாகி வருகிறது. இனியும் தாமதிக்காமல், கள்ளக்குறிச்சி த.வெ.க. சட்டமன்ற உறுப்பினரைக் கைது செய்து விசாரிக்க வேண்டும்.
400
3,779
172
7,306
277,464
ஆடிக்காற்றிலும் நகராத அம்மிக்கல்லாக நடிக்கும் முதல்வரோ?🤔 தன் இயக்கத்தில் உள்ள ஒரு சட்டமன்ற உறுப்பினரை சுற்றி இவ்வளவு பெரிய குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. அது உண்மையா, பொய்யா என்பதை முறையான விசாரணை நடத்தி சொல்லவேண்டிய அரசின் தலைமை பொறுப்பில் உள்ள @TVKVijayHQ மட்டுமே உண்டு. ஆடிக்காற்று அடித்தால் அம்மிக்கல்லும் நகரும் என்பார்கள். நீதிமன்றம் கேள்வி கேட்கிறது, மகளிர் ஆணையம் விசாரணை கோருகிறது, அரசியல் கட்சிகளும் மகளிர்,ஆணையமும், அமைப்புகளும் குரல் கொடுக்கின்றன. ஆனால், இதுவரை ஆட்சியின் முதல்வர் பேசாமல் இருப்பது ஏன் என்ற கேள்வியை இப்போது மக்கள் எழுப்ப ஆரம்பித்து விட்டார்கள் என்பதை நடிகர் உணருகிறாரா?l நல்ல மழை பெய்தால் எல்லோரும் பாதுகாப்பான இடம் தேடுவார்கள். ஆனால் இங்கே கேள்விகள் மழையாகப் பொழியும்போது, உண்மையை வெளிக்கொணர வேண்டிய முதலமைச்சர் மௌனமாய் அசையாமல் நிற்பது ஏன்? முதல்வரே,உங்கள் தலைமையில் இயங்குகிற அரசின் நிர்வாக ஆட்சியர் பாதுகாப்பு குறித்து சந்தேகம் எழுந்தால், அது சாதாரண அரசியல் விவகாரம் அல்ல.முறையாக விசாரிக்கப்பட வேண்டும். ஆதாரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்; எந்த அழுத்தமும் இல்லாமல் விசாரணை நடக்க வேண்டும்; உண்மை மக்களிடம் சொல்லப்பட வேண்டும். திரையில் பெண்களைப் போற்றிப் பேசுவது போல நடிப்பது வேறு. ஆட்சியில் ஒரு பெண்ணின் கண்ணியத்துக்காக உறுதியாக நிற்பது வேறு. மௌனம் நீண்டால், அது பதிலாகத் தெரியாது; பொறுப்பிலிருந்து விலகுவதாகத்தான் மக்கள் நினைப்பார்கள் என்பதை மறவாதீர்.... @arivalayam @DMKITwing @dmk_youthwing @TVKHQITWingOffl @Kalaignarnews @sunnewstamil
2
11
21
673
மௌனம் களையட்டுமே😀😀 என்ன செய்யப்போகிறது மதசார்பற்ற @TVKVijayHQ அரசு.... “ஒரு மதத்தின் வெற்றி; மற்றொரு மதத்தின் தோல்வி” என கருதும் கூட்டத்தில் சிக்காமல், கூட்டத்தின் அழுத்தம், தேர்தல் கணக்கு அல்லது மதவாதக் கோஷங்களின் அடிப்படையில் சிக்காமல், திருப்பரங்குன்றம் போன்ற பன்மத வரலாற்றைக் கொண்ட இடங்களில் உண்மைகள், ஆதாரங்கள், பாரம்பரியம், பொது அமைதி ஆகியவற்றின் அடிப்படையில் செயல்பட்டு பன்முக தன்மை கொண்ட மதச்சார்பின்மை கொண்ட தமிழ்நாடு என்பதை @mkstalin திராவிட மாடல் அரசை போல, நிரூபிக்குமா? இல்லையென்றால்... வெளிச்சம் தரக்கூடிய தீபம்,மதங்களுக்கிடையே இருளையும்,அச்சத்தையும்,சந்தேகத்தையும் மக்களிடையே எழுப்புமா? @arivalayam @DMKITwing @dmk_youthwing #திருப்பரங்குன்றம் @TVKHQITWingOffl
1
6
22
565
Mylai Velu retweeted
மீனவச் சொந்தங்கள் அனைவருக்கும் கடலளவு அன்போடு #WorldFisheriesDay வாழ்த்துகள்! தமிழர் வரலாற்றிலும் பண்பாட்டிலும் நெய்தல் நில நாயகர்களான மீனவ மக்களுக்குத் தனிச்சிறப்பான இடம் உண்டு. அத்தகைய மீனவ மக்களுக்காக நமது #DravidianModel ஆட்சியில் மீன்பிடித் தடைக்கால நிவாரணத் தொகை உயர்வு, புதிய மீன்பிடித் துறைமுகங்கள், தூண்டில் வளைவுகள், எரிபொருள் மானியம் என எண்ணற்ற திட்டங்களைச் செயல்படுத்தினோம். ஆனால், தற்போதைய த.வெ.க. அரசோ ஜோதிடரின் பேச்சைக் கேட்டுக் கொண்டு பட்டினப்பாக்கத்தில்தான் தலைமைச் செயலகம் கட்டுவோம் என மீனவர்களின் பாரம்பரிய வாழ்விடத்தை அழிக்கத் துடிக்கிறது. திரையில் மீனவராக நடித்து ஏமாற்றிய முதலமைச்சருக்கு மீனவர்களின் உண்மையான போராட்டக் குணம் பற்றித் தெரியவில்லை. மீனவர்களின் பாதுகாப்பு, பாரம்பரிய மீன்பிடி உரிமை, மீனவக் குடும்பங்களின் கல்வி மற்றும் பொருளாதார மேம்பாடு ஆகியவற்றுக்காகத் தி.மு.க. தொடர்ந்து குரல் கொடுக்கும்! அவர்களின் போராட்டத்தில் உடன் நிற்கும்! அலைகளோடு போராடி, தமது உயிரைப் பணயம் வைத்து உணவளிக்கும் மீனவ மக்களின் துணிவையும் உழைப்பையும் போற்றுவோம்!
113
894
17
2,031
78,503
Mylai Velu retweeted
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தி.மு.க. அரசு கடுமையாகப் போராடி, தமிழ்நாட்டின் அமைதியையும் மதநல்லிணக்கத்தையும் நிலைநாட்டியது. த.வெ.க. அரசு அடுத்தகட்டமாக என்ன சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளது என்பதை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் விளக்க வேண்டும்.
Thiruparankundram case: SC permits lighting of a lamp at Deepathoon in Thiruparankundram on Nov 24, 2026.
794
1,460
193
4,092
562,987
ஆழ்ந்த இரங்கல்கள்.... திமுகவில் மாவட்டச் செயலாளராக இருந்து, அந்தப் பகுதியில் இயக்கத்தின் வேர்களை வலுப்படுத்தப் பாடுபட்ட உடன்பிறப்புகளில் ஒருவர். அரசியல் பயணத்தில் பின்னாளில் இயக்கத்தில் இருந்து மாறி வேறு பாதைகளில் பயணித்து இருந்தாலும், இயக்கத்திற்காக அவர் செய்த உழைப்பும் பங்களிப்பும் மறக்க முடியாதவை. அவர் மாவட்டசெயலாளராக இயக்கத்தில் பணியாற்றியபோது பழகிய நினைவுகளோடும், இயக்க உணர்வோடும் அவரை இழந்து துயருறும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், அரசியல் தோழர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். @arivalayam @DMKITwing @dmk_youthwing #VSBabumla
3
18
1
98
5,616
சீர்குலைந்த நிர்வாகம்…. மாற்றம் தெரிய ஆரம்பித்திருக்கிறதோ!!!!!! திறனற்ற @TVKVijayHQ அரசு மனதில் கொள்ள வேண்டும். பேருந்து என்பது கணக்குப் புத்தகத்தில் இருக்கும் ஒரு வாகனம் அல்ல; மாணவனின் கல்விப் பயணம், தொழிலாளியின் அன்றாட வருமானம், பெண்களின் பாதுகாப்பான பயணம், மருத்துவமனைக்குச் செல்லும் முதியவரின் நம்பிக்கை. டீசல் கட்டணத்தைச் செலுத்த முடியாமல் மாநகரப் பேருந்துகளின் இயக்கமே பாதிக்கப்படும் நிலை வந்தால், அது ஒரு சாதாரண நிர்வாகக் குறைபாடு அல்ல; மக்களின் அன்றாட வாழ்க்கையை முடக்கும் அபாய தோல்வி. நிர்வாக திறமை இன்மையால் மக்களின் பயணம் நிறுத்தப்படக் கூடாது. ஒரு பேருந்து நின்றால், ஆயிரம் குடும்பங்களின் நேரமும் நம்பிக்கையும் நின்றுவிடும் என்பதை மட்டும் இந்த அரசு மறந்துவிடக்கூடாது. @arivalayam @DMKITwing @dmk_youthwing @TVKHQITWingOffl
2
52
2
95
4,016
இன்று பகுதி செயலாளர்,மாநகராட்சி மன்ற தலைவருமான அண்ணாநகர் ராமலிங்கம் அவர்களின் இல்ல திருமண வரவேற்பு விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினேன். @arivalayam
1
5
24
1,103
இதுதான் தோனி🔥 அமைதியாக உழைத்தால், உலகமே உங்கள் பெயரை ஆரவாரமாகச் சொல்லும். இளைஞர்களே, தோனியிடம் கற்றுக்கொள்ள வேண்டியது திறமை மட்டும் அல்ல. வாழ்க்கையில் சிக்கல் வந்தால் பதறாமல் இருங்கள். வாய்ப்பு வந்தால் தைரியமாக முடிவு எடுங்கள். வெற்றி கிடைத்தால் தலைக்கேற விடாதீர்கள்; தோல்வி வந்தால் மனம் தளராதீர்கள். அமைதியாக உழைத்து, சரியான நேரத்தில் சாதித்துக் காட்டுபவர்கள்தான் என்றும் மக்கள் மனதில் நிற்பார்கள். தோனி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு எடுத்தாலும், அவரது பெயரை மக்கள் அவ்வளவு எளிதில் ஓய்வு பெற விடமாட்டார்கள். அவர் அடித்த சிக்ஸர்களுக்காக மட்டும் அல்ல; மிகுந்த அழுத்தத்திலும் பதற்றப்படாமல் நிதானமாக முடிவு எடுத்த மனிதர் என்பதற்காகத்தான் தோனிக்கு இந்த அளவு அன்பும் புகழும். வெற்றி வந்தால் அணியின் பெயரைச் சொல்வார்; தோல்வி வந்தால் பொறுப்பைத் தானே ஏற்றுக் கொள்வார். அதுதான் உண்மையான தலைமை. எதிர்கால தலைமுறைகளுக்கு ...... திறமையைத் தேடுங்கள்; திடநம்பிக்கையைத் தாங்குங்கள். தோல்வி தடுத்தாலும் தலைநிமிர்ந்து தாண்டுங்கள். சத்தமாகப் பேசாதீர்கள்; சாதித்துவிட்டு பேசுங்கள். @arivalayam @DMKITwing @dmk_youthwing #Dhoni #confidence #Motivation
16
58
778
இதுதான் நடிகர் அரசின் அட்டவணையா? “தூய சக்தி” என்ற பெயரில் தினமும் தி.மு.க.வைப் பற்றி ஒப்பாரி வைப்பது ஏன்? பயம் இருந்தால் பதற்றம் வரும்; பதற்றம் வந்தால் கதறல் வரும். காலை ஒப்பாரி, மதியம் அவதூறு, மாலை நாடகம் - இதுதான் நடிகர் அரசின் நிர்வாக அட்டவணையா? - தி.மு.க சென்னை தென்மேற்கு மாவட்டச் செயலாளர் மயிலை வேலு விமர்சனம்! #MylaiVelu #DMK #TVKFails #TVKVijayFails #KalaignarSeithigal
3
37
91
1,294
பயம்....பயம்....பயம்....😀 “தூய சக்தி” என்ற பெயரில் தினமும் திமுகவைப் பற்றி ஒப்பாரி வைப்பது ஏன்? பயம் இருந்தால் பதற்றம் வரும்; பதற்றம் வந்தால் கதறல் வரும்! போதும் உங்கள் நடிப்பு.மக்கள் உங்கள் reels ஆட்சி படத்தை பார்த்து கேலி கிண்டல் செய்வது தெரிகிறதா?😀 காலை ஒப்பாரி, மதியம் அவதூறு, மாலை நாடகம்—இதுதான் நடிகர் அரசின் @TVKHQITWingOffl நிர்வாக அட்டவணையா? @arivalayam @DMKITwing @dmk_youthwing
ஊருக்கு ஊர் ஒப்பாரி வைத்து புலம்பித் தள்ளும் தீயசக்தியின் தலைமை மீண்டும் மீண்டும் அவதூறுகளை அள்ளி வீசி, கத்திக் கதறினாலும் மக்கள் மன்றத்தில் ஒருபோதும் எடுபடாது .
4
22
68
997
இன்று தலைவரோடு ஒரு click 🔥❤️. @arivalayam
8
31
1
341
2,350
இன்று மயிலை மேற்கு பகுதி 123 வது வட்ட துணை செயலாளர் தேனை பார்த்திபன் அவர்களது மகள் திருமணத்தை கழகத்தலைவர் அவர்கள் தனது இல்லத்தில் நடத்தி வைத்து வாழ்த்தினார். @arivalayam @DMKITwing @dmk_youthwing @DMKWomensWing
2
34
3
289
6,122
இன்று மயிலை மேற்கு பகுதி 123 வது வட்ட துணை செயலாளர் தேனை பார்த்திபன் அவர்களது இல்ல திருமண வரவேற்பு விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினேன். @arivalayam @DMKITwing @dmk_youthwing
8
48
827
இன்று தென் மேற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. @arivalayam @dmk_youthwing @DMKITwing
5
42
822