Sridhar Subramaniam (@sridharfc) header
Sridhar Subramaniam (@sridharfc) profile picture

Writer, Thinker, Feminist, Political Philosopher, Human Rights Advocate, Atheist

India
Joined July 2009
Photo by Sridhar Subramaniam (@sridharfc)Photo by Sridhar Subramaniam (@sridharfc)Photo by Sridhar Subramaniam (@sridharfc)Photo by Sridhar Subramaniam (@sridharfc)Photo by Sridhar Subramaniam (@sridharfc)Photo by Sridhar Subramaniam (@sridharfc)Photo by Sridhar Subramaniam (@sridharfc)Photo by Sridhar Subramaniam (@sridharfc)
உலகின் ஆகப்பழைய வழிபாட்டுத்தலம் எது? காசியா? ராமேஸ்வரமா? அல்லது ஆப்பிரிக்காவின் பழைய கோவில் ஏதாவதா? சேப்பியன் ஹிஸ்டரி சேனல் பேசும் இன்றைய டாபிக். youtu.be/BBQvFmGacAo
154
மானுடத்தின் அதி ஆரம்ப கால கண்டுபிடிப்பு. மிக முக்கியமான ஒன்றாகவும் இருக்கிறது. மனிதர்களை இதர விலங்குகளிடமிருந்து வித்தியாசப்படுத்திக் காட்டிய முதல் விஷயம் இது. அது என்ன? youtu.be/XpJKFDOJbXU
1
268
பெண்களுக்காகவே வடிவமைக்கப்பட்ட “அறிவியல் அம்மா — Science for Moms” பயிற்சிப் பட்டறையில் கலந்துகொள்ளுங்கள்! Scan the QR Code to Register!
1
872
பத்தாவது அவதாரம் நேற்றோடு முடிவுக்கு வந்தது. ஆனால் உலகம் இன்னமும் அழியாததால் பதினோராவது அவதாரம் பற்றி ஏதாவது குறிப்புகள் புராணங்களில் உள்ளனவா என்று பண்டிதர்கள் தீவிர ஆராய்ச்சி.
24
48
3
230
12,649
ஊழலை ஒழித்தல் ================== . நடந்து வரும் தவெக ஆட்சி குறித்து சிலாகித்துப் பேசுபவர்கள் அனைவருமே விதிவிலக்கில்லாமல் சொல்வது, இந்த ஆட்சி ஊழல் ஒழிப்பில் உறுதியாக இருக்கிறது என்பதுதான். முதல்வர் எதுவும் வாங்குவதில்லை, அமைச்சர்கள் கூட வாங்கக் கூடாது என்பதில் கண்டிப்பாக இருக்கிறார், என்றெல்லாம் எழுதுகிறார்கள். சிகரம் வைத்தாற்ப்போல சமஸ் கூட இதனை சிலாகித்து ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார். என்னைப் பொருத்தவரை, 'ஊழலை ஒழிப்போம்' என்று சொல்வது உள்ளதிலேயே மிக எளிதான, எளிமையான செயல். அரசியல்வாதியாக தன் கேரியரைத் துவக்க முனையும் எல்லாருமே சொல்வதுதான். ஐந்தாம் வகுப்புப் படிக்கும் ஒரு மாணவன் கூட இதை சொல்வான். அப்படி சொல்பவர்களிடம் நாம் கேட்க வேண்டியதெல்லாம் இதுதான்: 'எப்படி ஒழிக்கப் போகிறீர்கள்?' இந்தக் கேள்விதான் அறிவார்ந்த சிந்தனையாளரையும், அறிவுச்சோம்பேறியையும் வித்தியாசப்படுத்திக் காட்டும். இதைப் புரிந்து கொள்ள சில உதாரணங்கள் தருகிறேன்: ஒரு அரசியல்வாதி 'தமிழ் நாட்டில் வேலையின்மையே இல்லாமல் ஆக்குவேன்.' என்று சொல்கிறார். உங்கள் கேள்வி என்னவாக இருக்கும்? 'அதை எப்படி சாத்தியப்படுத்துவீர்கள்?' என்பதுதானே? இன்னொரு அரசியல்வாதி 'தமிழ் நாட்டில் சாதி என்ற சொல்லையே வேறோடு பிடுங்கி எறிவேன்,' என்கிறார். உங்கள் கேள்வி என்னவாக இருக்கும்? மேலே சொன்ன அதேதானே? எப்படி என்பதன் பதில், தெளிவான திட்டங்கள் மற்றும் கொள்கை வடிவங்கள். இவைதான் ஒரு அரசின் மற்றும் ஆட்சியாளரின் கொள்கைத் தெளிவையும், அறிவுக் கூர்மையையும் காட்டும். 'ஊழலை ஒழிப்போம்' என்பது கோஷம் மட்டும்தான். 'ஊழலை படிப்படியாக குறைப்போம்,' என்பது நடைமுறை சாத்தியம் கொண்ட இலக்கு. அதை எப்படி செய்யலாம்? தொழில் நுட்பங்களை பயன்படுத்தலாம். அரசு காண்டிராக்டுகளை அணுகும் ப்ராசஸ்களை மாற்றலாம். ப்ரோட்டோகால்களை வலுப்படுத்தலாம். குடும்பக் கட்டுப்பாடு விஷயத்தில் செய்ததைப் போல பரவலான பிரச்சாரங்களை முன்னெடுக்கலாம். பாஸ்போர்ட் மேலாண்மையில் செய்தது போல தனியார் நிறுவனங்களின் உதவியை நாடலாம். டிசிஎஸ், டாடா, எல் & டி போன்ற நிறுவனங்களுடன் தொழில்நுட்ப ஆலோசனைகள் பெறலாம். சமூகவியல் துறையில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வரும் அசோகா, விப்ரோ யூனிவர்சிடிகளிடம் இருந்து தரவுகளையும் முறைமைகளையும் பெறலாம். ஒவ்வொரு துறையிலும் ஊழல் ஒவ்வொரு விதமாக பரிணாமம் கொள்கிறது. எனவே One Size Fits All அணுகுமுறை வேலைக்காகாது. ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வொரு பிரத்தியேக அணுகுமுறை மற்றும் திட்ட வடிவம் தேவைப்படும். இவற்றை முதலில் கொள்கை வடிவாக ஆவணப்படுத்த வேண்டும். துறை சார்ந்த நிபுணர்களைக் கொண்ட கமிட்டிகளை வைத்து அந்த வடிவங்கள் draft வடிவில் கொண்டு வரப்பட்டு பொது விவாதத்துக்கு உட்படுத்தப்பட வேண்டும். அவற்றின் சாதக பாதகங்களை ஆய்வு செய்து திருத்தங்கள் செய்து பின்னர் சோதனை முறையில் ஓரிரு அலுவலகங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு விளைவுகளை சோதித்து, பின்னர் பரவலாக அமல்படுத்தப்பட வேண்டும். செய்வதற்கு இப்படிப் பல்வேறு விஷயங்கள் இருக்கின்றன. கடந்த 100 நாட்களில் தவெக அரசிடம் இருந்து எந்தெந்தத் துறை சார்ந்து எத்தனை draft கொள்கை வடிவங்கள் பதிப்பிக்கப்பட்டுள்ளன? எத்தனை திட்ட வடிவங்கள் விவாதத்துக்கு சட்டசபையில் முன்வைக்கப்பட்டுள்ளன? எத்தனை நிபுணர் குழு கொண்ட கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன? தொழில்நுட்பக் கலந்தாலோசனைக்கு ஐடி அல்லது பிற நிறுவனங்களுடன் எத்தனை புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருக்கின்றன? ஊழலை ஒழிக்க ஆக்கபூர்வமாகவும் அறிவுபூர்வமாகவும் முனையும் அரசு, அறிவுத் தெளிவு கொண்ட அரசு இதையெல்லாம் செய்திருக்க வேண்டும். குறைந்த பட்சம் இவற்றைக் கொள்கை அளவில் அறிவித்திருக்க வேண்டும். 2014ல் தேர்தல் மேடைகளில் 'Na main khavunga, Na main khaane dunga,' என்று பிரதமர் மோடி கோஷமிட்டார். 'நானும் சாப்பிட மாட்டேன், வேறு யாரையும் சாப்பிடவும் விட மாட்டேன்,' என்பது இதன் அர்த்தம். அதே மாதிரி ஒரு கோஷத்தைத்தான் முதல்வர் விஜய் மேடைப் பேச்சுகளில் முழங்குகிறார். தனிப்பட்ட முறையில் அது நிஜமாகவும் இருக்கலாம். தனிப்பட்ட முறையில் அரசு காண்டிராக்டுகளுக்கு பலன் பெறாதவராகவே கூட அவர் இருக்கக் கூடும். ஆனால் அரசு இயந்திர அளவில் ஊழலை ஒழிக்க அது மட்டுமே போதாது. தெளிவான, வெளிப்படையான கொள்கை வடிவங்கள், துறை சார் திட்டங்கள், நிபுணர்களின் ஆலோசனைகள், அரசு-தனியார் பார்ட்னர்ஷிப்புகள், பரவலான பிரச்சாரங்கள், இலக்குகள் என்று பல்வேறு முனைப்புகள் தேவைப்படும். We need clear design and implementation plan. அப்படி எதுவும் கையில் இல்லாமல் சும்மா பேசிக்கொண்டே இருப்பது பற்றி என்னிடம் இரண்டு பார்வைகள் இருக்கின்றன: 1. அரசு நிர்வாகம் குறித்து எந்தத் தெளிவும் இல்லாத, தெளிவு பெற இயலாத அறிவுச் சோம்பேறித்தனம். (An intellectual laziness.) அல்லது, 2. 'ஊழலை ஒழிப்பு' என்பதை பிம்பக் கட்டமைப்புக்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்வதுதான் நோக்கம். (Anti-corruption is an image-building tool only.) இந்த இரண்டில் தவெக ஆட்சி எந்த வகை என்பதுதான் நாம் விவாதம் செய்ய வேண்டியது. - ஸ்ரீதர் சுப்ரமணியம்
30
65
1
226
9,980
I'm a Proud 'Dimagi Naxal'! 💪
1
5
669
பல்வேறு நலம் விரும்பிகள் மூலம் பெறப்பட்ட நிதியை வைத்து 'கடவுள் எனும் ஸ்பைடர்மேன்' தற்போது இலவசமாக வழங்கப்படுகிறது. சுமார் 1000 பிரதிகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. (கூரியர் கட்டணம் உண்டு.) உங்கள் பிரதிக்கு முந்துங்கள். (நன்கொடையாளர்களுக்கு நன்றிகள்.)
10
14
24
2,184
கணவன் மனைவி இரண்டு பேரும் வேலைக்குப் போய்க் கொண்டு அதன் காரணமாக குழந்தை பெற்றுக் கொள்வதைத் தொடர்ந்து தள்ளிப் போடுவது பேசுபொருளாக இருக்கிறது. இதனை DINK என்று குறிக்கிறார்கள். (Dual Income, No Kids) இந்த DINK பற்றிய ஒரு சேப்பியன் உரையாடல்: youtu.be/DbI4R0wKMWM?si=rfi8…
3
642
கிறித்துவம் பற்றி நேற்று எழுதிய பதிவில் ஒரு இந்துத்துவர் வந்து 'அதை எழுதியதுடன் கூடவே, இந்து மதம் மட்டும்தான் சாத்வீகமான மதம் என்றும் ஒரு வரி எழுதி இருக்கலாம்,' என்று அங்கலாய்த்துக் கொண்டார். இந்து மதம் குறித்த முழுமையான தெளிவு இருப்பதால் அப்படிச் சொல்ல மனம் வரவில்லை. தலித் ஒடுக்குமுறைகள், சூத்திரர்களுக்கெதிரான கொடுமைகள், பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகள் என்று கடந்த 3,000 ஆண்டுகளாக இந்து மதம் அரங்கேற்றிய வன்முறைகள் ஏராளம். குறிப்பாக தலித்துகளுக்கு எதிரான ஒடுக்குமுறை என்பது வரலாறு காணாத குரூரம். அதற்கு இந்து மதத்தின், புனித நூல்களின் அங்கீகாரம் முழுமையாக இருந்திருக்கிறது. பகவத் கீதையிலேயே கிருஷ்ணர் தலித்துகளை அவலமான சொற்களில் வருணிக்கிறார். தலித் ஒடுக்குமுறை என்பது கறுப்பின அடிமை முறைமையை விட பன்மடங்கு மோசமானது என்பதைத்தான் என் புத்தகம் ஆதாரங்களுடன் பேசுகிறது. சூத்திரர்கள் எதிர்கொண்ட கொடுமைகள் பற்றிப் பேசுகிறது. இன்றுமே பெண்கள் மற்றும் தலித்துகளுக்கு எதிரான குற்றங்களில் பெரும்பான்மையானவை இந்து மதத்தின் புனித நூல்களின் தாக்கத்தால் அரங்கேறுபவைதான். இன்றளவும் நிலவும் பிராமண உயர்வுவாதம் ஏற்படுத்தும் சமத்துவமின்மை குறித்துப் பேசுகிறது. அந்த உயர்வுவாத பிராமணர்கள் இந்துத்துவ இயக்கங்களுக்கு ஆதரவு கொடுத்து அவர்களை அதிகார மையத்தில் வைத்து தேசத்தின் செக்யூலர் கட்டமைப்பைக் குலைக்கிறார்கள். இந்த மதம் அமைதியைப் பேணும் மதம், அந்த மதம் அமைதியைப் பேணும் மதம் என்று பீற்றிக் கொள்வது பற்றி ரிக்கி ஜெர்வாய்ஸ் ஒன்று சொல்வார். ஒரு மதத்தின் உண்மையான தன்மையைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் அந்த மதத்தின் அடிப்படைவாதிகளின் நடத்தையைப் பார்த்தால் தெரிந்து விடும். 'Because the fundamentalists of the religion of peace will be extremely peaceful!' என்பார். ஒரு மதத்தின் அடிப்படையான போதனைகளை முழுமையாகப் பின்பற்ற முனைபவர்கள்தான் அடிப்படைவாதிகள் எனப்படுபவர்கள். இஸ்லாத்தின் அடிப்படைவாதிகள் ஆஃப்கானில், ஈரானில் இருக்கிறார்கள். இந்து மதத்தின் அடிப்படைவாதிகள் இந்து மகா சபா, பஜ்ரங் தளங்களில் இருக்கிறார்கள். கிறித்துவத்தின் அடிப்படைவாதிகள் அமெரிக்க பைபிள் பெல்ட் மாநிலங்களில், ஐரோப்பிய நியோ நாஜி இயக்கங்களில் இருக்கிறார்கள். யூத மதத்தின் அடிப்படைவாதிகள் இஸ்ரேலின் மதவாத ஜியோனிசக் கட்சி, யூத சக்தி போன்ற கட்சிகளில் இருக்கிறார்கள். இவர்கள்தான் தத்தமது மதங்களின் போதனைகளை முழுமையாகப் பின்பற்ற முயன்று கொண்டிருப்பவர்கள்! இந்த லிஸ்டில் உள்ள எந்த மூஞ்சியிலாவது உங்களுக்கு 'சாத்வீகம்' தென்படுகிறதா? - ஸ்ரீதர் சுப்ரமணியம்
21
29
4
84
4,988
கிறித்துவம் பேசும் மொழி =========================== . 'கிறித்துவம் எனக்குக் கற்றுக் கொடுத்த மொழி அன்பு மொழி, அமைதி மொழி, இரக்கத்தின் மொழி,' என்று அமைச்சர் மரிய வில்சன் பேசி இருக்கிறார். இதற்கு பதில் பதிவு எழுதிய ஒருவர் 'அனைத்து மதங்களுமே அன்பையே போதிக்கின்றன. இதில் என்ன ஸ்பெஷல்' என்று எழுதி இருக்கிறார். அனைத்து மதங்களும் அன்பையே போதிக்கின்றன என்பது குறித்து விரிவாக என் 'கடவுள் எனும் ஸ்பைடர்மேன்' புத்தகத்தில் அலசுகிறேன். உலகில் எந்த மதமும் அன்பையோ, இரக்கத்தையோ முக்கியமாக பேசுவதல்ல. எந்த மதம் என்பதைப் பொறுத்து அவற்றின் நோக்கம் சரணாகதி, கட்டுப்பாடு, அல்லது பின்பற்றல் போன்றவைதான். இங்கே பேசுபொருள் கிறித்தவம் என்பதால் அதை இங்கே எடுத்துக் கொள்கிறேன். பழைய ஏற்பாடு முழுவதும் பார்த்தால் எங்குமே அன்போ, இரக்கமோ தென்படாது. ரத்தக்களரி மட்டுமே தெரியும். கொலைகள், கொள்ளைகள், வன்புணர்வுகள், இன ஒழிப்புக் குரல்கள் என்றுதான் விரவி இருக்கும். லோகேஷ் கனகராஜ் படமெல்லாம் டிஸ்னி லெவல்தான் எனும் ரேஞ்சுக்கு அதில் வன்முறை இருக்கிறது. புதிய ஏற்பாட்டில் கொஞ்சமே கொஞ்சம் மேம்பட்டுக் காணப்படும். (குறிப்பாக இயேசுவின் மலைப்பிரசங்கம்) ஆனால் அந்த பாகத்திலும் பல வன்முறைகள் உள்ளன. இயேசுவின் ரத்தம் பாவங்களில் இருந்து மீட்கும் என்பதில் தென்படும் குரல் 'பாவத்துக்கு மன்னிப்பு உயிர்ப்பலியில்தான்' என்பதில் இருக்கும் வன்முறை நிறைய கிறித்துவர்களுக்குப் புரிந்ததே இல்லை என்பது ஆச்சரியமான விஷயம். தவிர நரகம் பற்றிய நடுநடுங்க வைக்கும் விவரணைகள் கடவுளின் இரக்கம் மற்றும் கருணை குறித்த பார்வையைக் கேள்விக்குள்ளாக்கும். மருத்துவத்திலும், நவீனக் கல்வியிலும் கிறித்துவர்களின் பங்களிப்பு அபாரமானது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அதற்கு கிறித்துவம்தான் காரணம் என்பதுதான் நாம் கேள்வி கேட்க வேண்டியது. அப்படியெல்லாம் இல்லை. அவற்றை முன்னெடுத்தவர்கள் கிறித்துவர்கள் என்பதினால் கிறித்துவத்துக்குதான் அந்த கிரெடிட் போக வேண்டும் என்று சொன்னால் வேறு வாதத்தை நாம் எடுக்க வேண்டி இருக்கும். பொது யுகம் நான்காம் நூற்றாண்டில் துவங்கி சுமார் 18ம் நூற்றாண்டு வரை உலகெங்கும் கிறித்துவம் போட்ட ஆட்டம் வரலாறு காணாதது. ஐரோப்பா, தென் அமெரிக்கா, வட அமெரிக்கா, ஆஃப்ரிக்கா என்று கண்டம் கண்டமாக கொத்துக் கொத்தாக மக்கள் கொலையுண்டனர். பண்டைய வழிபாட்டுத் தலங்கள் இரக்கமே இல்லாமல் அழித்துப் போடப்பட்டன. பண்டைய கணக்கற்ற அளவிலான பண்டைய புத்தகங்கள் கொளுத்திப் போடப்பட்டன. இவை எல்லாவற்றையும் முன்னின்று நடத்தியது கிறித்துவமும், முக்கியமாக கத்தோலிக்க சபையும்தான். உலகில் அதிகளவில் மக்களைக் கொன்று போட்ட இயக்கங்களைப் பட்டியலிட்டால் முதலிடத்துக்கு உண்டான போட்டியில் கிறித்துவமும் கம்யூனிசமும் முண்டியடிக்கும். இரண்டாம் உலகப்போரில் யூதர்கள் அழிபடுவதற்கு ஹி**ர் முன்னெடுத்த முயற்சிகளுக்கும் கிறித்துவமே காரணம். அதையும் ஹி**ரே விளக்கி இருக்கிறார். ப்ராடஸ்டண்ட் மதத்தை தோற்றுவித்த மார்ட்டின் லூதர் யூதர்களுக்கு எதிராக எழுதிய புத்தகமே ஹி**ருக்குக் கிடைத்த ஊக்கம் என்பதை புத்தக மேற்கோள்களுடன் என் புத்தகம் விளக்குகிறது. கல்வி, மருத்துவமனைகளுக்கான கிரெடிட்டை கிறித்துவத்துக்குக் கொடுக்க வேண்டும் என்றால் 14 நூற்றாண்டுகளாக நடந்த இனப்படுகொலைகள், குரூரங்கள், கலாச்சார ஒழிப்புகளுக்கான கிரெடிட்டை யாருக்குக் கொடுக்கலாம்? எனவே, நீங்கள் இரக்கமாக இருக்க வேண்டும், அன்பாக இருக்க வேண்டும் என்று விரும்பினால் அப்படி இருந்து கொள்ளுங்கள். ஆனால் அதற்குண்டான கிரெடிட்டை எந்த மதத்துக்கும் தூக்கிக் கொடுக்க முனையாதீர்கள். இரக்கமாக, அன்பாக, மனித நேயமாக, மனித உரிமைகளை மதித்து நாம் நடப்பதெல்லாமே நவீன சிந்தனைகளின் தாக்கம்தான். எந்தப் பண்டைய மதத்தின் போதனையும் அல்ல. - ஸ்ரீதர் சுப்ரமணியம் | கடவுள் எனும் ஸ்பைடர்மேன் | ஸ்ரீதர் சுப்ரமண்யம் | கட்டுரை | யாவரும் பப்ளிஷர்ஸ் | 90424 61472 |
4
15
2
56
5,040
அமைச்சர் மரீ வில்சன் பட்ஜெட் தாக்கல் செய்ய சட்டமன்றம் வருகையில் கையில் ஜெப மாலையுடன் வந்தார் என்பது பேசுபொருளாகி இருக்கிறது. குறிப்பாக இந்துத்துவர்கள் இதனை சுட்டிக் காட்டி விமர்சித்து வருகிறார்கள். 'அதில் ஏதும் தவறில்லை, அது அவர் நம்பிக்கைதானே,' என்று திருமாவளவன் பேசி இருக்கிறார். 'நாளை நிர்மலா சீதாராமன் ராமர் சிலையுடன் பட்ஜெட் ஃபைலை எடுத்துக் கொண்டு நாடாளுமன்றம் வந்தாலும் இதையே சொல்வீர்களா?' என்று மருத்துவர் ஷர்மிளா கேட்டிருக்கிறார். அதுதான் முக்கியமான கேள்வி. பொதுவெளியில் தங்கள் நம்பிக்கையை வெளிப்படுத்தும் இந்துத்துவ அரசியல்வாதிகளின் அணுகுமுறை கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகிறது. கண்டிப்பாக ஆக வேண்டியதுதான். அதே விமர்சனம் கிறித்துவ, முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும் பொருந்தும். பொருந்த வேண்டும். ஜெபமாலையோ, ராமர் சிலையோ, அவை வீட்டோடு இருக்க வேண்டும்; அரசாங்க கட்டமைப்புகளுக்குள் நுழையக் கூடாது என்பதுதான் செக்யூலரிசத்தின் அடிப்படைக் கோட்பாடு. அதனைத் தொடர்ந்து மீறி வருவதால்தான் பாஜக கடும் விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறது. மோடியும் அந்த விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறார். அமைச்சர் மரீ வில்சனின் ஜெபமாலை அவர் வீட்டோடு இருக்கும் வரையில் அவர் நம்பிக்கை என்பது அவரின் உரிமை. போலவே, அந்த நம்பிக்கைகளை அரசுக் கட்டிடத்துக்குள் கொண்டு வரக் கூடாது என்பது அவர் கடமை. அப்படி செய்ததன் மூலம் தன் செக்யூலரிசக் கடமையை மீறி இருக்கிறார். கண்டனங்கள். - ஸ்ரீதர் சுப்ரமணியம்
26
143
13
610
88,735
கருத்துரிமை பற்றி நான் எழுதும் போதெல்லாம் 'அவதூறுகளுக்கும் கருத்துரிமை உண்டா?' என்று கேட்பார்கள். 'ஆமாம் உண்டு,' என்பதுதான் அப்போதெல்லாம் என் பதிலாக இருந்தது. எப்போதும் இருக்கும். ஆனால் அப்போதெல்லாம் அந்த பதிலால் கோபப்பட்டவர்களுக்கு அதன் அர்த்தம் இன்றைக்குப் புரிந்திருக்கும் என்று நம்புகிறேன். விஜய்-திரிஷா குறித்து உதயநிதி (இலைமறையாகப்) பேசியது என்பது தனி மனித அவதூறு. அவரது சீனியாரிட்டி லெவலுக்கு கொஞ்சம் கீழ்த்தரமானதும் கூட. வெற்றிகொண்டான், தீப்பொறி ஆறுமுகம் போன்றோர் லெவலுக்கான பேச்சு அது. ஆனால் அதற்குக் கைது என்பது படு மோசமான நடவடிக்கை. கருத்துரிமையில் அவதூறு உரிமையும் இருக்கும். இருந்தாக வேண்டும். உதயநிதி பேசியதற்கு முதல்வர் விஜய் ஒரு கண்டனம் தெரிவித்து முடித்திருக்கலாம். அல்லது தன் வாயில் பர்மனண்டாக ஒரு கொழுக்கட்டை அடைபட்டிருக்கிறது என்றால், தனது ரசிக அமைச்சர்கள் யாரையாவது கண்டிக்க வைத்திருக்கலாம். ஆனால் அடாவடித்தனமாக கைது செய்திருக்கிறார்கள். இந்தக் கைதில் முதல்வருக்கு தொடர்பு இல்லாத பட்சத்தில் விஜய் இதில் உடனடியாகத் தலையிட்டு விளக்கம் அளிக்க வேண்டும். அப்படி செய்யாத பட்சத்தில் அவரது சம்மதத்துடனேயே இது நடந்ததாக கருத வேண்டி இருக்கும். அது விஜய் குறித்த மோசமான பிம்பத்தையே உருவாக்கும். கருத்துகளுக்கு பதில் எதிர்க் கருத்துகள்தான் வர வேண்டும். எதிர்க் கருத்துகள் எதுவும் இல்லாத பட்சத்தில் கருத்துகளுக்கு பதிலாக கண்டனங்கள் வரலாம். அதற்கு மீறி எதுவும் வரக்கூடாது. அது ஜனநாயகத்துக்கும் மனித உரிமைகளுக்கும் எதிரானது. திமுகவினருக்கு இது இப்போதாவது புரிந்திருக்கும் என்று நம்புகிறேன். தமிழ்நாட்டு அரசுக்கு கண்டனங்கள்.
5
4
28
2,685
வங்காள எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் 19 ஆண்டுகளுக்குப் பின் கோல்கத்தா திரும்பி இருக்கிறார். இது ஒரு முக்கியத்துவம் வாய்ந்த சம்பவமாக பார்க்கப்படுகிறது. பங்களாதேஷில் பிறந்தவர் தஸ்லிமா. முஸ்லிம் சமூகத்தில் பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகள் குறித்துத் தொடர்ந்து எழுதி வந்தவர். பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது வங்காள இந்துக்களுக்கு எதிராக நடந்த கலவரங்கள் குறித்து அவர் எழுதிய லஜ்ஜா (வெட்கம்) எனும் நாவல் பெரும் அலைகளைக் கிளப்பியது. விளைவு, முல்லாக்கள் ஃபத்வாக்கள் வீச, அவர் உயிருக்கே ஆபத்து நேர்ந்தது. டாக்காவில் இருந்து தப்பித்து இந்தியா வந்தார். இங்கும் உள்நாட்டு முஸ்லிம்கள் அவரை விடவில்லை. போகுமிடமெல்லாம் பிரச்சினைகள் ஏற்பட்டன. ஹைதராபாத்தில் நடந்த ஒரு புத்தக வெளியீட்டு நிகழ்வில் முஸ்லிம் குழு ஒன்று அரங்குக்குள் நுழைந்து நிகழ்வைக் கலைத்துப் போட்டார்கள் மேடையில் அமர்ந்திருந்த நஸ்ரின் மீது செருப்புகள் வீசப்பட்டன. 2007ல் அவருக்கு எதிராக கோல்கத்தாவைச் சேர்ந்த சில முஸ்லிம் இயக்கங்கள் விடுத்த போராட்டக் குரல் மூலம் பெரும் கலவரம் அரங்கேறியது. விளைவு, அவர் கோல்கத்தாவை விட்டு வெளியேற நேர்ந்தது. முஸ்லிம் இயக்கங்களின் வன்முறைக்கு பயந்து திரிணாமுல் அரசு அவரை மேற்கு வங்கத்துக்குள் அனுமதிக்கவே இல்லை. இப்போது நடந்த ஆட்சி மாற்றம் நஸ்ரின் வாழ்விலும் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. முதல்வர் சுவேந்து அதிகாரி அவரை நேரடியாக வரவேற்று, அவர் பாதுகாப்புக்கு அரசு உறுதி அளிக்கும் என்று உத்திரவாதம் அளித்துள்ளார். 'கண்களில் கண்ணீரும், உள்ளத்தில் அன்பும் பெருக்கெடுக்க என் நகருக்குள் நுழைகிறேன்,' என்று நஸ்ரின் பேசி இருக்கிறார். தஸ்லிமா நஸ்ரின் குறித்து நான் தொடர்ந்து எழுதி வந்திருக்கிறேன். அவருக்குக் கிடைத்த ஒவ்வொரு எதிர்ப்பும், நடந்த கலவரங்களும் முஸ்லிம்களுக்கு எதிரான பெரும் கருத்தியலை மேற்கு வங்கத்தில் விதைத்தன. அந்த ஒவ்வொரு விதைகளையும் இந்துத்துவம் அறுவடை செய்து பலன் பெற்றது. எனக்கே கூட தொண்ணூறுகளில் ஒரு இந்துத்துவ சிந்தனையாளர் ஒருவர் மூலம்தான் தஸ்லிமா குறித்த அறிமுகம் கிடைத்தது. அவர் மூலம்தான் லஜ்ஜாவின் ஆங்கிலப் பதிப்பைப் பெற்றுப் படித்தேன். எனவே, இப்போது சுவேந்து அதிகாரி காட்டி இருப்பது தஸ்லிமாவின் இலக்கியத்துக்கான மரியாதை அல்ல; அவர் மூலம் கிடைத்த வங்காள பாஜக பெற்ற அரசியல் பலன்களுக்கு பதில் மொய் வைத்திருக்கிறார். அவ்வளவுதான். இனி கோல்கத்தா தெருக்களில் கறுப்புப் பூனைகளின் படையுடன் தஸ்லிமா கெத்தாக நடந்து செல்வார். அது மேற்கு வங்க முஸ்லிம் சமூகத்துக்கு விடுக்கப்படும் சிறப்பு சேதியாக இருக்கும். அந்தப் பூனைகளையும் மீறி தஸ்லிமா மீது ஏதாவது தாக்குதல் நடந்து தொலைத்து விட்டால், அது பெரும் கலவரத்தை அங்கே உருவாக்கும். அதையும் சுவேந்து அற்புதமாக பயன்படுத்திக் கொள்வார். Heads I win. Tails you loseதான். அரசியல் கணக்குகள் ஒரு புறம் இருக்க, இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக தஸ்லிமாவைப் பின்தொடர்பவன் மற்றும் கருத்து சுதந்திர ஆர்வலன் போன்றவை காரணமாக அவருக்குக் கிடைத்த இந்த வெற்றிக்கு மகிழ்ச்சி கொள்கிறேன். வாழ்த்துகள் தஸ்லிமா. Welcome back to your city. Have a great time. - ஸ்ரீதர் சுப்ரமணியம்
1
1
6
866
அண்ணா நூற்றாண்டு நூலகம் அண்ணா ஏஐ கிளப் என்று ஒன்றை நடத்துகிறது. அவர்களுடன் இப்போது சேப்பியனும் இணைகிறது. ஏஐ குறித்த எங்களின் முதல் பயிற்சிப் பட்டறை இந்த ஞாயிறு நூலகத்தில் நடக்கிறது. நேரமும் ஆர்வமும் உள்ளவர்கள் பங்கேற்கலாம்.
1
3
409