கோயில் மசூதி தர்கா சர்ச் தொடர்பான வழக்குகள் கடவுள் நம்பிக்கை சம்மந்தப்பட்டது.ஏதோ ஒரு வகையில் தீர்ப்பு வந்துவிடும்.
கடவுள் நேரில் வந்து வாதாடப் போவதில்லை.
ஆனால் ஈஷா சாஸ்த்ரா போன்றவைகள் கடவுளுக்கும் மேலானவர்கள் ஏன் கடவுளையே படைத்தவர்களின் சொத்து விவகாரம்.அதெல்லாம் அப்படித்தான்.
மீண்டும் ஒரு டிஆர்ஐ ரெய்டு.
முதல்வரின் காவல்துறை முதல்வருக்கு பாதுகாப்பு தரும் பணியை மட்டுமே செய்கிறதா?
1
157
இரத்தினவேலு வசந்தா.. retweeted
#BREAKING | தமிழ்நாட்டில் அதிகரிக்கும் கடத்தல் சம்பவம் - தொடரும் DRI ரெய்டு நடவடிக்கை
#SunNews | #DRI | #TamilNadu
இரத்தினவேலு வசந்தா.. retweeted
தினம்தோறும் நடக்கும் குற்றச் சம்பவங்கள் பொதுமக்களை நடுங்க வைக்கின்றன; முதலமைச்சரோ வீக் எண்டு விடுமுறையில் தூங்கிக் கொண்டிருக்கிறார்.
இரத்தினவேலு வசந்தா.. retweeted
தேசிய மகளிர் ஆணையமே டி.ஜி.பி.க்கு கடிதம் எழுதுற அளவுக்கு நிலைமை போயிருச்சுன்னா, தமிழ்நாட்டுல பெண்களுக்குப் பாதுகாப்பே சுத்தமா இல்லைங்கிறது இதுல இருந்தே நல்லாத் தெரியுது.
மேடையில மட்டும் 'பெண்கள் பாதுகாப்பு, பெண்கள் பாதுகாப்பு'ன்னு சவுண்டு விடுற முதலமைச்சர், நிஜத்துல எந்தப் பாதுகாப்பையும் கொடுக்குற மாதிரி தெரியல. ஏற்கனவே ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ. தப்பு பண்ணப்பவும் எந்த நடவடிக்கையும் எடுக்கல; இப்போ கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. மேலயும் எந்த நடவடிக்கையும் எடுக்கல. மக்களைப் பாதுகாக்குறதை விட்டுட்டு, தன் முதலமைச்சர் பதவியைக் காப்பாத்திக்கிறதுல மட்டும்தான் அவர் குறியா இருக்காரு.
தினமும் நடக்குற பெண்களுக்கு எதிரான குற்றங்கள்ல த.வெ.க. காரங்களே சம்பந்தப்பட்டிருக்காங்க. ரயில்ல ஒரு பெண் கொலை செய்யப்பட்ட விஷயத்தையும் இந்த டம்மி அரசு கண்டுக்கவே இல்லை. இப்படி ஆட்சி நிர்வாகம் சீர்கெட்டுப் போயிருக்குறதாலதான், தேசிய மகளிர் ஆணையம் ஒரே வாரத்துல ரெண்டு தடவை கடிதம் எழுதியிருக்கு.
எதுக்கும் நடவடிக்கை எடுக்காத இந்த டம்மி CM , இனியாவது இதுக்கெல்லாம் வாய் திறப்பாறான்னு பாப்போம்.
இரத்தினவேலு வசந்தா.. retweeted
#WATCH | "இன்று வரை காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை" - நீதிபதி விக்டோரியா கவுரி
#SunNews | #VictoriaGowri | #Madurai
இரத்தினவேலு வசந்தா.. retweeted
உயர் நீதி மன்ற நீதியரசர் விக்டோரியா கெளரி அவர்கள், தவெக அரசு, பெண் கலெக்டருக்கு தவறான குறுஞ்செய்தி அனுப்பிய தவெக எம்எல்ஏ மீது என்ன நடவடிக்கை எடுத்தது என கேள்வி கேட்கிறார்?
இப்போதும் காது கேக்காது mode இல் மட்டுமே செயல்படுமா தவெக அரசு?
இரத்தினவேலு வசந்தா.. retweeted
ஐய்யயோ தற்குறிங்க நீதிபதியே கடிக்க ஆரம்பிடுச்சிங்க 😂😂
Blastu Blastu 🔥🔥🔥
நீதிபதியின் கேள்வி என்னன்ன எதற்காக இன்னும் அந்த MLA மீது காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதே கேள்வி?
இரத்தினவேலு வசந்தா.. retweeted
தந்தை பெரியாரையும் புரட்சியாளர் அம்பேத்கரையும் பெயருக்குக் கொள்கைத் தலைவர்களாக அறிவித்துவிட்டு, ஜோசியக்காரரை உண்மையான கொள்கைத் தலைவராகக் கொண்டு செயல்படுகிறது ஆளும் த.வெ.க.!
“ஆறு மாசம், எல்லாமே நாசம்” எனத் தமிழ்நாட்டைப் பாழ்படுத்திக் கொண்டிருக்கும் த.வெ.க., அரசியல் பிணி மட்டுமல்ல; அதுவொரு சமூகப் பிணி!
எனவே,
“தமிழா! விழிப்புணர்வு கொள்!”
“தமிழா! இனஉணர்வு கொள்!”
“மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு!”
என்ற தந்தை பெரியாரின் முழக்கங்களை மீண்டும் மக்களிடம் எடுத்துச் செல்வது காலத்தின் கட்டாயத் தேவை!
@tpdk2020 @kuratpdk
இரத்தினவேலு வசந்தா.. retweeted
ஒரு பெண் அணிலுக்கு அவங்க விஜய் அண்ணன் பண்ற அரசியல் புரிஞ்சி போச்சு போல
நல்ல மாற்றம் தான் 🔥🔥
மறுசீராய்வு மனு போட்ட மாதிரியும் இருக்கனும்
உச்ச நீதிமன்றம் விசாரிக்காத மாதிரியும் இருக்கனும்.
ஆர்எஸ்எஸ் தந்திரக்கார சட்ட அமைச்சர் நிர்மல் குமாரின் நரித்தந்திரம்.
முதல்வர் விஜய் என்ன செய்யப் போகிறார்...ஒருவேளை தனக்கும் குருநானக் பிறந்தநாள் விடுமுறை என்று பனையூரிலேயே நாளை படுத்து தூங்கும் போகிறாரா?
சங்கி நிர்மல் குமார் தமிழ்நாட்டில் மதக் கலவரத்தை ஆரம்பிக்கப் போகிறாரா?
Justice Arvind Kumar and Justice Vipul M Pancholi who heard the Thiruparankundram case are not sitting tomorrow, Review Petition filed by the Tamil Nadu Government cannot be heard tomorrow even if either side makes a mention for urgent listing of the plea.
November 24, Tuesday is a holiday for SC on the occasion of Guru Nanak’s birthday. Karthigai Deepam is also on Tuesday.
Either side can move SC only on Wednesday.
இரத்தினவேலு வசந்தா.. retweeted
மாவட்ட ஆட்சியரான பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு த.வெ.க எம்.எல்.ஏ ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரம் தொடர்பாக டி.ஜி.பி.க்கு கடிதம் எழுதி விசாரணை விவரம் கோரிய தேசிய மகளிர் ஆணையம் மீண்டும் ஒரு முறை டி.ஜி.பி.க்கு கடிதம் அனுப்பியிருப்பது தமிழ்நாட்டின் ஆட்சி நிர்வாக சீர்கேட்டை வெட்டவெளிச்சமாக்கியிருக்கிறது.
நாகர்கோயில் ரயில்வே சந்திப்பில் நின்ற ரயிலில், பாலியல் கொடூரத்தால் கொலைக்குள்ளாகி அழுகிய நிலையில் கிடந்த பெண் பற்றிய பத்திரிகை செய்தியை அடிப்படையாகக் கொண்டு, தேசிய மகளிர் ஆணையம், தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. இது தொடர்பாக, ஆணையத்தின் தலைவர் திருமதி. விஜயா ரஹத்கர் அவர்கள் தமிழ்நாடு டி.ஜி.பி.க்கு கடிதம் எழுதி, 7 நாட்களுக்குள் இது தொடர்பான முழுமையான நடவடிக்கை அறிக்கையை அனுப்பக் கோரியுள்ளார்.
பெண்கள் பாதுகாப்பில் எந்தவித சமரசத்திற்கும் இடமில்லை என்பதை தேசிய மகளிர் ஆணையத் தலைவரின் கடிதம் உறுதிபடத் தெரிவித்துள்ளது.
அடுத்தடுத்து இரண்டு முறை டி.ஜி.பி.க்கு தேசிய மகளிர் ஆணையம் நிபந்தனைக் கடிதம் அனுப்பியிருப்பதன் மூலம், காவல்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் விஜய் அவர்களின் நிர்வாகத் திறனற்ற ஆட்சியின் அலங்கோலத்தையும் தமிழ்நாட்டில் பெண்களுக்குத் துளியும் பாதுகாப்பில்லாத நிலையையும் வெட்டவெளிச்சமாக்கியுள்ளது.
இரத்தினவேலு வசந்தா.. retweeted
ஏப்ரல் 14, பெரியார் கேரளா வருகிறார். மகாராஜா டெல்லிக்கு செல்லும் பொழுது, வழியில் ஈரோட்டில் பெரியார் வீட்டில் தங்கி இருந்த நன்றி கடனுக்காக, பெரியாருக்கு கேரளத்தில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்படுகிறது. அதை கண்ட கேரளா மக்களுக்கு இதுவே பெரியாரின் முதல் அறிமுகமாக இருக்கிறது. பெரியார் அந்த உபசரிப்பை மறுக்க, பெரியாரின் மேல் மக்களுக்கு மதிப்பு வருகிறது. தலைவர்கள் அனைவரும் சிறையில் இருக்க, போராட்டத்தின் மொத்த பொறுப்பும் பெரியாருக்கு வருகிறது. யார் எங்கே போராட வேண்டும், யார் எங்கே தங்க வேண்டும், போராட்டத்திற்கான நிதி திரட்டல், செலவினங்கள் என்று அனைத்தும் பெரியாரின் தோள்களுக்கு வருகிறது. இதற்கிடையில் தினமும் பொது கூட்டங்கள் பேசவேண்டும்.
மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்ட பெரியாரின் பேச்சுக்கள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெறுகிறது. போராட்டத்தை கண்காணிக்கும் காவல்துறை அறிக்கைகளும், பத்திரிகைகளும், நாள் தவறாது பெரியாரின் பேச்சை கேட்க கூடும் மக்கள் கூட்டத்தை பதிவு செய்ய தவறவில்லை. கடவுளுக்கு அடுத்தபடியாக பெரும் மதிப்பு வைத்திருந்த தங்கள் மகாராஜாவை பெரியார் விமர்சிப்பது அவர்களுக்கு பெரும் வியப்பும் ஆச்சர்யத்தையும் கொடுத்தது. போராட்டத்திற்கு ஆட்கள் குறைந்ததால் (பலரும் கைது செய்யப்பட்ட நிலையில்), காந்தியின் கட்டளையை மீறி, தமிழ்நாடு ஆர்வலர்களுக்கு அழைப்பு விடுகிறார். பலரும் கலந்து கொள்கிறார்கள். அதில் முக்கியமாக இரண்டு பெண்கள் அடக்கம்.
கள்ளுக்கடை மறியலை நிறுத்த கோரி காந்தியிடம் கேட்ட பொழுது, 'அது என் கைகளில் இல்லை. ஈரோட்டில் இரண்டு பெண்களிடம் இருக்கிறது' என்று எந்த பெண்களை சொன்னாரோ, அதே நாகம்மை மற்றும் கண்ணம்மாள். வைக்கோம் போராட்டத்தில் கலந்து கொண்ட முதல் பெண்கள் அவர்கள் தான். பின்பு மற்ற தலைவர்களின் மனைவி கலந்து கொள்கிறார்கள். போராட்டத்தில் பெண்கள் பங்கு பெற பெரியார் அழைப்பு விடுக்க, இளைஞர் தன்னார்வ சங்கதின் தலைவரின் மனைவி நூற்றுக்கும் மேற்பட்டவர்களுடன் கலந்து கொள்கிறார். பெண் போராட்டக்காரர்களின் எண்ணிக்கை உயர, இனி பெண் போராட்டக்காரர்களை ஆண்கள் போல நடத்த காவல்துறை உத்தரவிடுகிறது.
ஏப்ரல் 29 அன்று 15 நாட்களுக்கு பொது கூட்டங்களில் பேச பெரியாருக்கு தடை விதிக்கப்படுகிறது. பின்பு வைக்கோம் நுழைய தடை விதிக்கப்படுகிறது. தடையை மீறுவேன் என்று வைக்கத்தில் இருந்தே பெரியார் அறிவித்தார். மே 22 பெரியாருக்கு ஒரு மாத காலம் சிறைத்தண்டனை வழங்கப்படுகிறது. ஜூன் 21 விடுதலையாகும் பெரியார் நேரே வைக்கோம் செல்கிறார். ஒரு மாதகாலத்திற்குள்ளாக ஜூலை 16 மீண்டும் கைது செய்யப்படுகிறார். இந்த முறை 4 மாதங்களுக்கு. அதுவும் கடுங்காவல் தண்டனை. மற்ற தோழர்கள் அரசியல் கைதிகள் என்றால், பெரியாரோ கிரிமினல் குற்றவாளி. அங்கே தான் அவருக்கு சிறை உடையும், கால்களுக்கு இரும்பு விலங்குகள் பூட்டப்படுகிறது.
நான்கு மாத கால சிறை தண்டனை என்ற போதும் ஆகஸ்ட் 30 அன்றே விடுதலை செய்யப்படுகிறார். மகாராஜாவின் திடீர் மரணத்தை அடுத்து, போராட்டத்தை மூன்று நாட்களுக்கு ஒத்தி வைத்தால் கைதிகளை விடுதலை செய்கிறோம் என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில், வைக்கோம் போராட்ட கைதிகள் விடுதலை செய்யப்படுகிறார்கள்.
இறுதியாக நவம்பர் 29 1925 அன்று, போராட்டம் துவங்கி 20 மாதங்கள் கழித்து, கோவிலின் மூன்று தெருக்கள் அனைத்து பொது மக்களுக்காகவும் திறந்துவிடபட்டது.
பி.கு.கள்:
1. 20 மாத கால போராட்ட நாட்களில் பெரியார் 7 முறை வைக்கோம் சென்றிருக்கிறார். மொத்தம் 141 நாட்களில், 67 நாட்கள் போராட்டத்திலும் 74 நாட்கள் சிறையிலும் இருந்திருக்கிறார்.
2. பெரியார் தலைமையில் நடந்த முதல் போராட்டம் வைக்கோம் போராட்டம்.
3. The Cambridge Companion of Periyar நூல் தொகுப்பில் இருந்து எடுக்கப்பட்ட குறிப்புகள்
Courtesy : Sumathi Vijayakumar via fb post
2/2
இரத்தினவேலு வசந்தா.. retweeted
'ஹிந்துக்களின் ராஜ்யம்' என்ற புகழ் பெற்ற திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கு விவேகானந்தர் வைத்த பெயர் 'மனநோயாளிகள் புகலிடம்'. இந்தியாவில் வேறு எங்கேயும் விட திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் தான் ஜாதி கெட்டிப்பட்டு கிடந்தது. தீண்டத்தக்கவர்கள் மட்டுமல்ல, பார்க்ககூடாத, அணுகக்கூடாத ஜாதி மக்கள் இருந்தது அந்த சமஸ்தானத்தில் தான். வரலாறில் பெரிய ஈடுபாடு இல்லாத பலரும், இன்றும் கூட வைக்கோம் போராட்டம் கோவில் நுழைவு போராட்டம் என்று தான் நினைத்து கொண்டிருக்கிறார்கள். வைக்கோம் கோவில் நுழைவு போராட்டம் இல்லை. கோவலை சுற்றி இருந்த தெருக்களில் நடக்கும் உரிமை போராட்டம். வைக்கோம் போராட்டம் காங்கிரஸின் வெற்றியா அல்லது பெரியாரின் வெற்றியா என்ற கேள்விக்கு பதில் சொல்வது மிக கடினம். ஏனென்றால் போராட்டம் நடந்த பொழுது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்தவர் பெரியார்.
1918ல் இருந்து தொடர்ந்து வைக்கோம் கோவில் தெருவில் இருக்கும் தடையை எதிர்த்து போராட குரல் கொடுத்து கொண்டே இருந்த 'ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன யோஜனா'வை சேர்ந்த T.K.மாதவன், 1921ல் காந்தியை சந்திக்கிறார். கோவிலை சுற்றி நடக்க சத்யாகிரஹ போராட்டத்தை முன்னெடுக்க அனுமதி கேட்கிறார். 1923ல் இந்திய அளவில் தீண்டாமையை ஒழிக்கும் குழுவை அமைகிறது காங்கிரஸ். அதன் படி அந்தந்த பகுதியில் இருக்கும் காங்கிரஸ்காரர்கள் , தீண்டாமையை ஒழிக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும்.
ஜனவரி 1924ல் தீண்டாமை ஒழிப்பு குழு கேரளாவில் துவங்கப்படுகிறது. அதனை அடுத்து வைக்கோம் போராட்டம் 30 மார்ச் துவங்குகிறது. அனைத்து ஜாதியை சேர்ந்த ஆர்வலர்களும் கலந்து கொள்கிறார்கள். காந்தியின் அறிவுரைப்படி இரண்டு நீண்ட நடைப்பயணங்கள் மேற்கொள்ளப்படுகிறது. இரண்டுமே இறுதியில் மஹாராணி பிரதிநிதியிடம் பொது இடங்களில் நிலவும் தீண்டாமையை நீக்க வலியுறுத்தும் நினைவு சின்னம் கொடுக்கப்படுகிறது. அது நிராகரிக்கப்பட்ட பொழுதும், மக்களிடையே பெரும் செல்வாக்கை பெறுகிறது.
போராட்டம் அமைதியான முறையில் துவங்குகிறது. துவங்கியதும் போராட்டத்தை ஒருங்கிணைத்த தலைவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். பல்வேறு இடங்களில் இருந்தும் மக்கள் கலந்து கொள்கிறார்கள். கூலிப்படைகளை வைத்து போராட்டக்காரர்கள் தாக்கப்படுகிறார்கள். அவர்கள் கண்களில் எலும்பிச்சை பிழியப்படுகிறது. காவல்துறை எதையும் கண்டுகொள்ளவில்லை. தலைவர்கள் அனைவரும் கைது செய்யப்படுகிறார்கள். போராட்டம் ஒரு பெரும் தடைக்கு தயாராகி கொண்டிருக்கிறது.
போராட்டம் தடை ஆவதற்கு திருவிதாங்கூர் சமஸ்தானம் மட்டும் காரணமில்லை. மறைமுகமாக காந்தியடிகளும் காரணமாக இருக்கிறார். போராட்டத்திற்கு காந்தி மூன்று விதிகளை விதிக்கிறார்:
1. ஹிந்துக்களை தவிர வேறு மதத்தை சேர்ந்தவர்கள் பங்கு பெற கூடாது.
2. உள்ளூர் மக்களை தவிர வேறு யாரும் பங்கு பெற கூடாது
3. உண்ணா விரதம் இருக்க கூடாது. ஏனென்றால் அது மேல் வர்ணத்தாரை இந்த போராட்டம் வெற்றிபெற கட்டாயப்படுத்துவது போல ஆகிவிடும். அவர்களை கட்டாயப்படுத்தாமல் சம்மதம் வாங்க வேண்டும்
இந்த கட்டளைகளால் வேறு வழியின்றி போராட்டம் நிறைவுரையை எழுத்துவங்கும் நேரம், தந்தை பெரியார் காங்கிரஸ் மாவட்ட மாநாட்டிற்காக குளித்தலைக்கு கிளம்பிக் கொண்டிருக்கிறார். ஏப்ரல் 4, நீலகண்டன் நம்பூதிரிபாட் பெரியாருக்கு போராட்டத்தில் கலந்து கொள்ள முதல் தந்தி கொடுக்கிறார். 'உடனே வர வேண்டுமா? மாநாடு முடிந்ததும் வருகிறேன்' என்று பதில் அளிக்கிறார் பெரியார். ஏப்ரல் 6, ஜார்ஜ் ஜோசப் அழைக்க, அவருக்கும் அதே பதிலை தருகிறார். ஏப்ரல் 12 மீண்டும் பெரியாரின் தேவையை வலியுறுத்தி நம்பூதிரிபாட் தந்தி கொடுக்க, நிலைமையை உணர்ந்து பெரியார் கிளம்புகிறார்.
தமிழ்நாடு காங்கிரஸில் ராஜாஜி முதற்கொண்டு பெரும் தலைவர்கள் இருக்கையில், பெரியாருக்கு மட்டும் ஏன் மீண்டும் மீண்டும் அழைப்பு வர வேண்டும்? ஜாதியை குறித்தும், தீண்டாமையை குறித்தும் வேறு எந்த தலைவர்களை விடவும் பெரியார் பேசிக் கொண்டிருந்தது, கேரளா தலைவர்களின் காதுகள் வரை எட்டி இருக்கிறது. இந்த போராட்டத்தை முன்னெடுத்து நடத்த இவர் தான் சரியான ஆள் என்பதற்கு அது ஒன்றே போதுமானதாக இருந்தது.
1/2
இரத்தினவேலு வசந்தா.. retweeted
We broke this FIRST
Savukku Media exposed the issues in GUIDANCE as early as 30.10.2026.
இரத்தினவேலு வசந்தா.. retweeted
``MLA ஆபாச மெசேஜ்.. கலெக்டர் கணவர் புகார் கொடுத்தும் ஆக்ஷன் இல்ல’’ - ஐகோர்ட் பெண் நீதிபதி ஆவேசம்
#kallakurichiissue #kallakurichicollectorissue #justicevictoriagowri

















