Kartheee (@24thCS) header
Kartheee (@24thCS) profile picture

Scribbling my thoughts and my knowledge

Joined February 2022
NNN - DAY 08 #RoomInRome (2010) 🔞 தீப ஒளித் திருநாளன்று குதூகலமாக இருக்க அட்டகாசமான படம்… ஒரு இரவு ரோம் நகர ஹோட்டல் அறையில் சந்திக்கும் இரண்டு பெண்கள், உடல் ஈர்ப்பில் தொடங்கி காதல், ரகசியங்கள், உணர்வுகள் என ஒருவருக்கொருவர் நெருக்கமாகும் கதைக்களம்.. miss பண்ணாம பாருங்க…😉😉😉
NNN- Day 07 #Love (2015) 🔞🔞🔞 படத்தில் அதீத காமத்தை எதிர்பார்க்கும் நபர்களுக்கான படம்… காதல், காமம், பொறாமை, பிரிவு என ஒரு இளைஞனின் தீவிரமான காதல் வாழ்க்கையையும் கட்டுப்பாடற்ற பாலியல் உறவுகளையும் வெளிப்படையாகச் சொல்லும் படம்.. அப்புறம் என்ன வேட்டை தான்..
3
26
1,252
Kartheee retweeted
Oru periya request @TamilanParthib1 anna ku Anna Road la High Beam potu vandi otranga City kulla and Village kulla idhanala travel pandrathu kastama irukku Basic ah oru overtake eppadi pannanum nu theriyala Thappana indicator potu vandi otranga So licence kodukurathukku 👇🏻👇🏻
2
6
5
279
#TheDreamers (2003)🔞🔞 படம் எப்படியிருக்கும் சொல்றதைவிட படமா பாருங்க மக்கா! இன்பமாய் இருக்கும் 😌😌 அது என்ன இரண்டு காதலனா கேக்காதீங்க... ஒன்னு Lover… இன்னொன்று நாயகியின் Twin Brother-ஆம் 🏃🏻‍♂️‍➡️🏃🏻‍♂️‍➡️ யோசிக்கவே சங்கடமாத்தான் இருக்கு.. NNN விரதம் கடைபிடிப்பவர்கள் இந்தப் பக்கம் வேண்டாம்…
3
2
20
1,650
Kartheee retweeted
கமல்ஹாசனைக் கேள்வி கேட்கும் முன், சமூகத்தைப் பற்றிய கேள்விகளை உங்களிடமே கேட்டுக்கொள்ளுங்கள்! கமல்ஹாசன் தனது அடுத்த திரைப்படத்திற்கு 'சண்டியர்' என்று பெயர் வைத்ததற்காக அவரைக் குறிவைத்துக் குரைத்துக் கொண்டிருக்கும் அனைவருக்கும் ஒரு கேள்வி! 2003-ஆம் ஆண்டில், 2004-ல் வெளியான விருமாண்டி திரைப்படத்திற்கு முதலில் 'சண்டியர்' என்றுதான் பெயர் சூட்டப்பட்டது. அப்போது புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எதிர்ப்புத் தெரிவித்தார். அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதாவைச் சந்தித்த பிறகு, சமூகப் பதற்றம் ஏற்படக்கூடும் என்ற சூழலைக் கருத்தில் கொண்டு கமல்ஹாசன் அந்தத் தலைப்பை மாற்ற ஒப்புக்கொண்டார். பின்னர் அந்தத் திரைப்படம் 'விருமாண்டி' என்ற பெயரில் வெளியானது. இப்போது 2026. இருபத்துமூன்று ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால் சாதியப் பாகுபாடு தொடர்பான சமூகப் பிரச்சினைகள் முடிவுக்கு வந்துவிட்டனவா? தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) தரவுகளின்படி, தமிழ்நாட்டில் பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கு எதிராகப் பதிவான வன்கொடுமை வழக்குகள்: 2005 – 1,219 வழக்குகள். 2015 – 1,761 வழக்குகள். 2020 – 1,297 வழக்குகள். 2021 – 1,416 வழக்குகள். 2022 – 1,828 வழக்குகள். 2023 – 1,969 வழக்குகள்.cvmc.in 2022 டிசம்பரில் புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் பட்டியலின மக்கள் பயன்படுத்திய குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. 2025 ஜனவரியிலும் அந்த வழக்கின் விசாரணை மற்றும் குற்றப்பத்திரிகை தொடர்பாகப் பெரும் சர்ச்சை தொடர்ந்தது. India Today+1 இத்தனை ஆண்டுகளுக்குப் '"பிறகும் சாதியப் பாகுபாடு குறித்த பிரச்சினைகள் சமூகத்தில் தொடர்ந்து விவாதிக்கப்படுகின்றன. இத்தகைய சூழலில், ஒரு திரைப்படத்தின் தலைப்பை மட்டும் வைத்து அதன் நோக்கத்தையும் உள்ளடக்கத்தையும் முன்கூட்டியே தீர்மானிப்பது எந்த வகையில் நியாயம்? கமல்ஹாசன் "அன்பே சிவம்" போன்ற திரைப்படங்களையும் கொடுத்திருக்கிறார். அவருடைய படைப்புலகத்தை ஒரு குறிப்பிட்ட திரைப்படத்தின் தலைப்பை மட்டும் வைத்து மதிப்பிட முடியுமா? இன்னும் திரைப்படத்தின் கதை, கதாபாத்திரங்கள், அவற்றின் சமூகப் பின்னணி, இயக்குநரின் நோக்கம் என எதுவுமே தெரியாத நிலையில், எதற்காக இந்த அவசரமான தீர்ப்புகள்? ஒரு திரைப்படத்தின் தலைப்பு அதன் முழுமையான கருத்தியலாகிவிடாது. ஒரு படைப்பின் நோக்கத்தைப் புரிந்துகொள்ளாமல் அதற்கு எதிராகப் போர்க்கொடி தூக்குவது விமர்சனமல்ல. 2003-இல் ஒரு தலைப்பை மாற்ற வேண்டிய சூழல் உருவாக்கப்பட்டது. 2026-இலும் அதே மனநிலையில்தான் நாம் இருக்க வேண்டுமா? இருபத்துமூன்று ஆண்டுகளில் மாறியிருக்க வேண்டியது ஒரு திரைப்படத்தின் தலைப்பு மட்டும்தானா? அல்லது சமூகத்தின் சிந்தனையும் முதிர்ச்சியடைந்திருக்க வேண்டுமா? கமல்ஹாசனுக்கு அறிவுரை வழங்குவதற்கு முன்பு, ஒரு படைப்பை அதன் முழுமையான உள்ளடக்கத்தின் அடிப்படையில் அணுகும் பக்குவத்தை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். திரைப்படத்தைப் பார்க்காமல் தீர்ப்பளிக்காதீர்கள். கதாபாத்திரங்களைப் புரிந்துகொள்ளாமல் இயக்குநரின் நோக்கத்தைத் தீர்மானிக்காதீர்கள். சமூகப் பிரச்சினைகள் மீது உண்மையான அக்கறை இருந்தால், அவற்றைத் தீர்ப்பதற்கான அரசியல், நிர்வாக மற்றும் சமூகப் பொறுப்புகளைப் பற்றிப் பேசுங்கள். ஒரு திரைப்படத்தின் தலைப்பைச் சுற்றியே உங்கள் அரசியலைச் சுருக்கிவிடாதீர்கள். கலைஞரின் படைப்புச் சுதந்திரம், சமூகத்தின் விமர்சன உரிமை, இரண்டுமே ஜனநாயகத்தில் முக்கியமானவை. ஆனால் விமர்சனம் என்பது படைப்பைப் புரிந்துகொண்ட பிறகுதான் தொடங்க வேண்டும்! @RKFI @ikamalhaasan
1
35
3
93
5,302
அகல் விளக்கு பதிப்பகம் திடீரென்று தமிழ் மக்களின் முன்னால் அறிவு விளக்கை ஏற்றி வைத்திருக்கிறது! மக்கள் எல்லாவற்றையும் மறந்துவிட்டு நூல்களைப் பற்றி பேசுகிறார்கள். 'நூல்களைப்' பற்றி பேசவேண்டும் என்பதுதான் என் ஆசை! கோவை, திருச்சி உள்ளிட்ட சிறப்பு நூலகங்களின் நூல் பரிந்துரை குழுவில் பெருமாள் முருகனைப் போல நானும் உறுப்பினராக இருந்தேன். சுமார் 135 பேர் உறுப்பினர்களாக இருந்து நூல்களைப் பரிந்துரைத்தோம். எல்லாமே வெளிப்படையாக நடந்தன. பரிந்துரைக்கான நூல்கள் கூகுள் ஷீட்டில் அனுப்பப்படும். அதில் பரிந்துரையைக் குறிப்பிட வேண்டும். எல்லாமே இணையத்தில் உள்ளன. எல்லாரும் பார்க்கலாம். நாங்கள் பரிந்துரை செய்த நூல்களின் பட்டியலில் திரிஷா விஜய் என்பவர் எழுதிய நூல் உட்பட அகல் விளக்கு பதிப்பகம் வெளியிட்டதாக பெருமாள் முருகன் குறிப்பிட்டிருக்கும் எந்த நூல்களும் வரவில்லை. நான், கடிதம், கவிதை, நாடகம், கட்டுரை ஆகிய பிரிவுகளில் நூல்களைப் பரிந்துரை செய்தேன். திரிஷா விஜய் நூல் கட்டுரை நூல் என்பதால் என்னிடம் வந்திருக்கும். ஆனால் அப்படி எதுவும் வரவில்லை. நாங்கள் பரிந்துரை செய்த நூல்களின் பட்டியல் எங்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளன. அதை நான் வெளியிடவும் தயாராக இருக்கிறேன். என்னைப் போலவே மற்ற பரிந்துரை உறுப்பினர்களுக்கும் அவரவர் பரிந்துரைத்த நூல்களின் பட்டியல் அனுப்பப்பட்டு இருக்கும். எனவே நூல் பரிந்துரை உறுப்பினர்களின் பட்டியலை வாங்கிப் பார்த்தாலேயே அகல் விளக்கு பதிப்பகத்தின் போலி நூல்கள் முன்பே பரிந்துரை செய்யப்பட்டு, கொள்முதல் செய்யப்பட்டனவா என்பது தெரிந்துவிடும். பரிந்துரைக்கப்பட்ட நூல்களை அப்படியே வாங்கவும் முடியாது. பரிந்துரைக்கப்பட்ட நூல்களை, நூல் தேர்வுக் குழு தேர்வு செய்யும். பின்னர் இறுதி படுத்தப்பட்ட நூல்களை கொள்முதல் குழு விலையை குறைத்துப் பேசி வாங்கும். இதை உயர்நிலைக் குழு கண்காணிக்கும். எனவே தவறு அதிகாரிகள் மட்டத்தில் நடந்திருக்கிறது என்பது தெளிவு. நூல்களைப் பரிந்துரை செய்த பணிக்காக எங்களுக்கு குறைந்த பட்ச மதிப்பூதியம் இந்த செப்டம்பர் மாதம் தான் வழங்கப்பட்டது. எப்போதுமே அரசு துறைகள் சார்ந்த பணிகளுக்கு நிதி எப்போது விடுவிக்கப் படுகிறதோ அப்போது தான் எல்லாவற்றுக்கும் கணக்கு நேர் செய்யப்படும். ஆனால் அகல் விளக்கு பதிப்பக போலி நூல்களுக்கு மட்டும் நூல் கொள்முதல் அரசாணையைப் போட்ட உடனே எப்படி கொடுத்திருக்க முடியும் என்ற கேள்வி எழுகிறது. பெரியார் அறிவுலக இறுதிகட்ட பணிகள் கடந்த சில மாதங்களில் தான் நடைபெற்று திறக்கப்பட்டது. எனவே நடந்த முறைகேட்டை AI இல்லாத உண்மையான அரசாணை மற்றும் கடிதங்களின் ஆதாரங்களோடு வெளியிட்டு எல்லாருக்கும் தெளிவு படுத்த வேண்டும். குற்றம் சாட்டிவிட்டு கடந்து போகக் கூடாது. பெருமாள் முருகன் கட்டுரையை அரசியல் ஆதாயத்துக்காக மட்டும் பயன்படுத்தாமல், அவர் சொல்வதைப் போல குழு விசாரணை அமைக்க முன்வரவேண்டும். பெருமாள் முருகன் குறிப்பிடும் நூலாசிரியர் பெயர்களில் நூல்களை எழுதி வெளியிடும் எண்ணம் கடந்த ஆண்டு இறுதியிலேயே அகல் விளக்கு பதிப்பகத்துக்கு தோன்றியிருக்குமா என்ற எண்ணம் தான் எல்லாவற்றுக்கும் மேலாக எனக்குள்ளே எழுகிறது! -அழகிய பெரியவன்
36
309
19
698
31,211
#NooruKodiVaanavil - Below Average ⭐️ ⭐️ (2/5) OTT: Zee5 Language: Tamil நாயகன் Harish Kalyan, தான் வேலை பார்க்கும் சேனலில் புரமோஷன் வாங்கி பெரிய ஆளாக வேண்டும் என்ற ஆசையில் இருக்கிறார். அதற்காக கோவாவில் இருக்கும் அவர்களின் சேனலை பெரிய அளவில் கொண்டு செல்ல ஒரு நிகழ்ச்சி நடத்தத் திட்டமிடுகிறார். அதற்கு Anchor தேடும்போது, நாயகி Siddhi Idnani சரியான தேர்வாக இருப்பார் என்று நினைத்து அவரை அணுகுகிறார். ஆனால் நாயகி மறுக்க, அதற்குப் பிறகு நடக்கும் Love, Emotional, Drama தான் இந்தப் படம். படம் தொடங்கும்போதே இப்படித்தான் கதை நகரும் என்ற ஒரு Guess வந்துவிடுகிறது. நாம் நினைத்தது போலவே எந்தவிதமான திருப்பமும் இல்லாமல் நேர்கோட்டில் பயணித்து முடிகிறது. பார்க்கும் நமக்கும் எந்தவிதமான சுவாரஸ்யத்தையும் கொடுக்கவில்லை. Harish Kalyan அழகாக இருக்கிறார், Siddhi Idnani Cute-ஆக இருக்கிறார் என்று எவ்வளவு நேரம்தான் ஒரே விஷயத்தைத் திரும்பத் திரும்பக் காட்டிக்கொண்டே இருப்பார்கள்? முடியல சாரே! முதல் ஒரு மணி நேரம் வரை ஓரளவுக்கு ஓகே. அதற்குப் பிறகு AVPL! இந்தப் படத்தை நேரடியாக OTT-யில் வெளியிடுவதுதான் சரியாக இருக்கும் என்று தயாரிப்பாளர் முடிவு செய்ததாகச் சொன்னார்கள். அது ஏன் என்பதைப் படம் பார்த்த பிறகுதான் புரிந்துகொள்ள முடிகிறது. siddhi idnani உதடை உரசும் காட்சிகள் சிறிய அளவில் எட்டி பார்க்கும்.. நேர விரயம்
3
4
15
4,883
NNN- Day 06 #Nymphomaniac Vol 1 & 2 🔞🔞 சொர்க்கத்தை பார்க்கணுமா டே இந்த படத்தை பார்த்துட்டு வாங்க… பாலியல் ஆசைக்கு அடிமையான ஒரு பெண்ணின் கட்டுப்பாடற்ற தேடல்கள், உறவுகள் மற்றும் வாழ்க்கைப் போராட்டம் பற்றிய கதை.. பாருங்க கிசாவா இருக்கும்….
NNN - Day 05 #Rome 🔞🔞 (2005) | 2 Seasons சண்டைக்கு சண்டை, சமாச்சாரத்துக்கு சமாச்சாரம் என எல்லாமே தூக்கலாக இருக்கும்.. இரண்டு சீசன்கள் மட்டும்தான்… தாராளமாக Binge Watch போடலாம். கண்டிப்பாக முயற்சி செய்து பாருங்க குதுகலத்துக்கு பஞ்சம் இருக்காது..
9
23
1
193
16,533
Kartheee retweeted
ShivFlix - Scene Detailed Review Blockbuster Scene 🔥🔥🔥 Please book tickets ✅✅ [MILD SPOILERS AHEAD] கதை எப்படி சொன்னாலும் Spoilers வந்துவிடும். சுருக்கமாகச் சொன்னால் Police Suriya vs Serial Killer Naslen தான் படமே! உண்மையிலேயே வித்தியாசமான கதைக்களம். இன்பராஜ் கதாபாத்திரத்தில் சூர்யா புகுந்து விளையாடியிருக்கிறார். Mass ஹீரோக்கள் அவ்வளவு எளிதில் ஒத்துக்கொள்ளாத மாதிரியான ஒரு கதாபாத்திரத்தையும் கதைக்களத்தையும் தேர்ந்தெடுத்ததற்கே பாராட்டுகள். POSITIVES ❤️ ✅ இந்தப் படத்தின் மிகப்பெரிய பலமே Second Half தான். முதல் பாதியில் ஆங்காங்கே சில Lags இருந்தாலும், Second Half ஆரம்பித்த பிறகு படம் வேறொரு Level-க்கு செல்கிறது. ✅ சூர்யாவின் Performance பற்றி சொல்லவே வேண்டாம். இன்பராஜ் கதாபாத்திரத்தில் ஒவ்வொரு இடத்திலும் தனக்கான முத்திரையைப் பதித்திருக்கிறார். இந்த வருடத்தில் சூர்யாவின் மூன்று படங்கள் வெளியானாலும், என்னைப் பொறுத்தவரை இதுதான் Number One. ✅ நஸ்ரியாவின் Performance-ம் Action Sequences-ம் சிறப்பு. Supporting Characters-ல் ஆனந்தராஜ், ராஜ்பிரியன் மற்றும் அந்த இன்னொரு Police Character, Nazriya அப்பா character என எல்லோருமே நன்றாக நடித்திருக்கிறார்கள். ✅ படத்தில் Dark Comedy நிறைய இடங்களில் Work ஆகியிருக்கிறது. சூர்யாவுக்கு இருக்கும் ஒரு பிரச்சினையை வைத்து வரும் காமெடி காட்சிகள் பல இடங்களில் சிரிக்க வைக்கின்றன. ✅ Second Half-ல் வரும் Investigation Sequences மிகவும் engaging. குறிப்பாக Naslen - Suriya First Face-off, நஸ்ரியாவின் Action Scenes, Climax Fight என நிறைய Theatre Moments இருக்கின்றன. ✅ Sushin Shyam-ன் Music மற்றும் BGM படத்திற்கு மிகப்பெரிய பலம். ஒரு காட்சியின் Mood-ஐ அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதில் BGM-ன் பங்கு முக்கியம். அந்த வேலையை அட்டகாசமாகச் செய்திருக்கிறார். ✅ 2 Special cameos 🔥❤️ NEGATIVES 👎 ❌ முதல் பாதியில் ஆங்காங்கே சில Lags இருக்கின்றன. ❌ சில Logic Issues இருக்கத்தான் செய்கின்றன. முடிந்தவரை Logic வைக்க முயற்சி செய்திருக்கிறார்கள். இருந்தாலும் சில இடங்களில் கேள்விகள் எழுகின்றன. Note: Commercial Entertainer-ல் நான் பெரிதாக Logic தேடுவதில்லை. அதனால் இந்த விஷயங்களைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. TARGET AUDIENCE 🎯 கருப்பு மாதிரியான படங்களை ரசிக்கும் Regular Mass Audience-க்கு இந்தப் படம் எந்த அளவுக்குப் போய்ச் சேரும் என்பது கொஞ்சம் சந்தேகம்தான். ஆனால் Crime Thriller, Drama மற்றும் Entertainer விரும்புபவர்கள் கண்டிப்பாகப் பார்க்கலாம். VERDICT ❤️ நிறைய Dark Comedy, Engaging Investigation, நல்ல Performances, Theatre-ல் கொண்டாடக்கூடிய Mass Moments என ஒரு முழுமையான Entertainer-ஆகக் கொடுத்திருக்கிறார்கள். நேர்த்தியான திரைக்கதையுடன் படத்தை இயக்கிய Jithu Madhavan-க்கு வாழ்த்துகள். இசையமைப்பாளர் Sushin Shyam-க்கும் ஸ்பெஷல் பாராட்டுகள். மீண்டும் ஒரு Hat-trick வெற்றியைப் பதிவு செய்திருக்கும் சூர்யாவுக்கு வாழ்த்துகள்! இந்த தீபாவளி உண்மையிலேயே சீன் தீபாவளிதான்! 🔥
10
33
1
140
10,157
தமிழுக்கு இதைவிடப் பெரிய அவமானம் இல்லை. இத்தகைய போலியான நூல்கள் நீண்ட கால அடிப்படையில் மாபெரும் தீங்குகளை விளைவிக்கும். இவற்றை வாசித்து, குறிப்பெடுத்து, அவை பேச்சிலும் எழுத்திலும் ஆய்விலும் இடம்பெற்றால் தமிழின் மானம் கப்பலேறிவிடும். இந்தக் காரியத்தை எவர் செய்திருந்தாலும் அவர்கள் தமிழுக்குத் துரோகம் இழைத்தவர்கள். இந்தப் போலி நூல்கள், அனைத்து நூலகங்களில் இருந்தும் உடனடியாகத் திரும்பப் பெறப்பட்டு வீதியில் கொட்டி எரிக்கப்பட வேண்டும். மோசடி செய்த பதிப்பகங்கள் சீல் வைக்கப்பட வேண்டும் என தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறேன். இந்த மோசடியை அம்பலப்படுத்தியதற்காக எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு நாம் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். sindhai.com/essays/perumal-m…
442
2,385
140
9,977
912,975
#Scene - Fresh Film In Tamil Cinema✅ Crime Thriller Comedy தான் படத்தோட கதை. இப்படி ஒரு கேரக்டர் பண்றதுக்கு #Suriya க்கு ஒரு guts வேணும். Underplay பண்ணி Class ah நடிச்சிருக்கார்🔥 Nasriya character superb👌. suriya nasriya combo perfect ah work ஆகியிருக்கு😍 Jithu Mathavan Writing & Execution பக்காவா பண்ணியிருக்கார். Sushin Shyam ஓட மியூசிக் படத்துக்கு perfect ah set ஆகியிருக்கு. Mass Scenes க்கு நல்ல Elevation. Comedy 1st Half la விட 2nd Half ல நிறய work ஆச்சு. Cameo also good. Nasriya Fight Scene Post Interval Scene ல perfect theatre moment🔥 Nalsen Character 1st Half ல neat ah ஆரம்பிச்சது but முடியும்போது ரொம்ப Flat ah usual ஆன character ah feel ஆகிடுச்சு. Vinoth😆Character Super😜 Anandharaj Scenes எல்லாம் நல்லா இருந்தது. Raj Priyan & Lal Characters Ok. 1st Half & 2nd Half Middle la படத்துல Lags இருக்கு. Story 2nd la completely predictable. Climax ரொம்ப usual template but presentation was good. Overall Blockbuster படத்துக்கு தேவையான அனைத்து அம்சங்களும் படத்துல இருக்கு. But Expectations high ah வேண்டாம்🙌
2
54
1
330
22,887
#Scene - Good Watch ⭐️ ⭐️ ⭐️ ✨ (3.5/5) #Karuppu Blockbuster, #VAS Super Hit என வெற்றிப் படங்களைக் கொடுத்துக் கொண்டிருக்கும் நேரத்தில், இப்படியொரு வித்தியாசமான கதைக்களத்தைத் தேர்ந்தெடுத்து நடிக்க யாருக்குத்தான் Guts இருக்கும். அந்தத் துணிச்சலுக்காகவே #Suriya அண்ணாவைப் பாராட்டலாம். First Half Review-லேயே படத்தைப் பற்றி நிறைய சொல்லியாச்சு. Quote-ல இருக்கு, பார்த்துக்கோங்க. Second Half எனக்கு நல்லாவே பிடிச்சிருந்தது. குறிப்பாக, ராஜ்பிரியனின் Cringe Comedy அதிகம் இல்லாதது இந்தப் பாதிக்குப் பெரிய பலம். #SushinShyam-ன் BGM அடிபொலி Second Half-ல் தனியாகத் தெரிகிறது. 🔥 ஆனால், Serial Killer-க்கான Backstory என்ன? அவர் ஏன் இப்படியானார்? என்பதற்கான தெளிவான விளக்கம் இல்லாதது ஒரு குறை. மேலும், மலையாளப் படங்களில் சகஜமாகக் காட்டப்படுவதைப் போல சரக்கு, தம், பவுடர் எனப் பல விஷயங்களை காட்சிகள் வழியாகக் கடத்திச் செல்கிறார்கள். அந்த விஷயங்களைத் தவிர்த்திருக்கலாம். மொத்தத்தில், வித்தியாசமான முயற்சி.Good Watch 👍
#Scene - Good 🤝 Okyish First Half followed by Good second Half… #Theone Delivers again… Hatrick Hit loading for suriya.. detail Review soon..
6
40
1
144
11,980
NNN - Day 05 #Rome 🔞🔞 (2005) | 2 Seasons சண்டைக்கு சண்டை, சமாச்சாரத்துக்கு சமாச்சாரம் என எல்லாமே தூக்கலாக இருக்கும்.. இரண்டு சீசன்கள் மட்டும்தான்… தாராளமாக Binge Watch போடலாம். கண்டிப்பாக முயற்சி செய்து பாருங்க குதுகலத்துக்கு பஞ்சம் இருக்காது..
NNN- Day 04 #Aserbianfilm (2010) 🔞🔞 ஒரு மர்மமான படப்பிடிப்பில் தொடங்கும் பயணம், பாலியல் சுரண்டல், வன்முறை, மனதை உலுக்கும் கொடூரங்கள் என அடுத்து அடுத்த நடக்கும் சம்பவங்கள் தான் இந்த படம்…. தம்பியின் வேட்டைக்கான எல்லா அம்சங்களும் பொருத்தமா இருக்கும் மக்கா …😌😌
7
16
1
124
21,138
NNN- Day 04 #Aserbianfilm (2010) 🔞🔞 ஒரு மர்மமான படப்பிடிப்பில் தொடங்கும் பயணம், பாலியல் சுரண்டல், வன்முறை, மனதை உலுக்கும் கொடூரங்கள் என அடுத்து அடுத்த நடக்கும் சம்பவங்கள் தான் இந்த படம்…. தம்பியின் வேட்டைக்கான எல்லா அம்சங்களும் பொருத்தமா இருக்கும் மக்கா …😌😌
NNN- Day 03 #unfaithful (2002) 🔞 புருஷன விட்டு புடிச்சவன் கூட சம்பவம் பண்ணுற படம்.. சமாச்சாரம் மட்டும் இல்ல படமாவே அருமையான படம் 👌🏻👌🏻 இரவு பொழுதில் இன்பமாய் இருக்க நல்ல தேர்வு…
4
3
1
33
11,133
NNN- Day 03 #unfaithful (2002) 🔞 புருஷன விட்டு புடிச்சவன் கூட சம்பவம் பண்ணுற படம்.. சமாச்சாரம் மட்டும் இல்ல படமாவே அருமையான படம் 👌🏻👌🏻 இரவு பொழுதில் இன்பமாய் இருக்க நல்ல தேர்வு…
NNN – Day 02 #TheHandmaiden 🔞 கத்திரிக்கோல் சண்டையை அப்படி ஒரு கலைநயத்துடன் எடுத்திருப்பாரு இந்த படத்தின் இயக்குநர்.. சமாச்சாரம் ஒரு பக்கம் இருந்தாலும், மங்காத்தா படம் கணக்கா கிளைமாக்ஸ் ட்விஸ்ட் மிரட்டலா இருக்கும்.. தனிமையில் துள்ளிக் குதிக்க அட்டகாசமான படம்… prime video ல இருக்கு…
10
17
1
151
16,486
Kartheee retweeted
Never After Dark [2026] வித்தியாசமான Japanese Horror படம்! ஒரு வீட்டோட ஓனர், அவங்க வசிக்கிற பங்களால 'வாய்பிளந்த நிலைல' ஒரு ஆவி நடமாட்டம் இருக்கறத பார்க்கறாங்க. அதை விரட்ட ஒரு பேய்-ஓட்டுற Mediumஅ வரவெச்சு தொரத்தி விட try பன்றாங்க. Totally a different attempt! Telegram Link✅
3
7
40
2,825
Kartheee retweeted
காலையில் கடந்து வந்த இரு செய்திகள்: 1) GST வருவாய் வளர்ச்சியில் தேசிய சராசரிக்கும் கீழே த.வெ.க. ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சி புதைக்கப்பட்டிருக்கிறது. 2) தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய 1,614 கோடி ரூபாய் கொரிய முதலீடுகள் த.வெ.க. அரசின் அலட்சியத்தால் ஆந்திராவுக்குச் சென்றுவிட்டன. முதலீடுகளை ஈர்த்து தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்த @Guidance_TN அமைப்பே இந்த ஆட்சியில் தனிநபர்களின் ego-வுக்கு காவு கொடுக்கப்பட்டுவிட்டது. எல்லாத் துறைகளிலும் இவ்வளவு வேகமாக Reverse Gear-இல் செல்வது எப்படி என இவர்களிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும். இதுவெல்லாம் என்னவென்றே புரியாத, தெரியாத நம் முதலமைச்சரோ இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிகளில் கையசைத்து show காட்டக் கிளம்பிவிட்டார். Brace for tough times. Tamil Nadu is doomed under the TVK government. #TVKfails #KIA #Hyundai #AndhraPradesh #Automobiles @nidhi_sharma
பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவின் முதன்மையான மாநிலங்களில் ஒன்றாக இருந்த தமிழ்நாடு தவெக ஆட்சியில் தொடர்ந்து சரிவைச் சந்தித்துக் கொண்டிருப்பது கவலை அளிக்கிற்து. அக்டோபர் மாத ஜிஎஸ்டி வரி வருவாயில்,கேரளா 23%, ஆந்திரா 24%, கர்நாடகா 18%, தெலுங்கானா 14% என அண்டை மாநிலங்கள் இரட்டை இலக்கத்தில் வளர, தமிழ்நாடு வெறும் 3% வளர்ச்சியோடு பின்தங்கியுள்ளது. தமிழ்நாட்டில் இறக்குமதி செய்யப்படும் சில முக்கிய பொருட்களில் இருந்து பெறப்படும் வரியால், மாநிலத்தின் மொத்த வரிவருவாயில் ஓரளவு உயர்வு காணப்பட்டாலும், நமது சொந்த உற்பத்தியின் மூலம் ஈட்டப்படும் வரி வருவாய் குறைந்தே வருகின்றது. இது மாநிலத்தில் நிலவும் ஒட்டுமொத்த பொருளாதார தேக்க நிலையின் அளவீடாகக் கருதப்படவேண்டியது என்பதனை தவெக அரசிற்குச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். எனவே, இறக்குமதி ஆகும் பொருட்களின் மீதான வருவாயை மட்டும் நம்பியிராமல், நமது சொந்த உற்பத்தியினைப் பெருக்கி வெளிமாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் விற்பனையை அதிகரிக்கவும், அதன் வாயிலாக தமிழ்நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதாரத்தையும் நமது இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளையும் உயர்த்துவதற்குமான வழிவகைகளை தவெக அரசு உடனடியாகக் காண வேண்டுமெனவும் வலியுறுத்துகின்றேன். It is concerning that Tamil Nadu, once among India’s leading states in economic growth, continues to witness a decline under the TVK government. In October’s GST revenue, neighbouring states recorded double digit growth, with Kerala at 23%, Andhra Pradesh at 24%, Karnataka at 18%, and Telangana at 14%, while Tamil Nadu lagged behind with just 3% growth. Although taxes collected on certain key goods imported into Tamil Nadu have contributed to a modest increase in the state’s overall tax revenue, revenue generated from our own production continues to decline. I wish to point out to the TVK government that this must be viewed as an indicator of the broader economic stagnation prevailing in the state. I therefore urge the TVK government to take immediate steps to increase domestic production and expand sales to other states and overseas markets, instead of relying solely on revenue from imported goods. This is essential to strengthen Tamil Nadu’s overall economy and create more employment opportunities for our young people.
232
2,190
83
4,217
270,515
Kartheee retweeted
ShivFlix - Gajab Raat - Review சமீபத்தில் Netflix-ல் தமிழ் டப்பிங்கில் வெளியான படம். ஒரு பெண்ணைக் கொலை செய்ய ஒரு கும்பல் துரத்துகிறது. அவர்களிடமிருந்து தப்பிக்கும் அந்தப் பெண்ணை ஹீரோ ஹாஸ்பிடலில் சேர்க்கிறார். அங்கிருந்தும் அவரைக் கொலை செய்ய ஒரு கும்பல் முயற்சி செய்கிறது. அந்தப் பெண்ணை ஹீரோ காப்பாற்றினாரா இல்லையா என்பதுதான் கதை. கதையாகப் பார்த்தால் நல்ல Plot தான். ஆனால் Screenplay ஏனோ தானோவென்று செல்கிறது. Logic என்று பார்த்தால் ஒரு கிராம் கூட இல்லை. தமிழ் டப்பிங்கில் எக்கச்சக்கமான கெட்ட வார்த்தைகள் வேறு. ஹீரோ நல்லவரா, கெட்டவரா என்பது இயக்குநருக்கும் திரைக்கதை எழுத்தாளருக்குமே வெளிச்சம். ஊரில் உள்ள அத்தனை அயோக்கியத்தனங்களையும் செய்பவராம். ஆனால் ஒரே நொடியில் ஹீரோயின் அந்தப் பெண்ணின் Backstory-யைக் கேட்டதும் அவருக்கு உதவ முன்வருவாராம். இந்த 80s காலத்து கதைகளை எப்போது முடிக்கப் போகிறார்களோ தெரியவில்லை. மற்றபடி படம் இரண்டு மணி நேரம்தான். ஓரளவுக்குப் பரபரப்பாகச் செல்கிறது. ஆனால் எந்த இலக்கை நோக்கிச் செல்கிறது என்றே தெரியாததால் பெரிதாக ஈர்க்கவில்லை. வேறு வேலை இல்லை, Free-ஆக இருந்தால் ஒருமுறை முயற்சி செய்து பார்க்கலாம். Definitely an Average Watch!
7
6
27
2,655
Kartheee retweeted
#தமிழ்நாடு நாள் ஜூலை 18 மட்டுமே! நவம்பர் 1 எல்லைப் போராட்டத் தியாகிகள் நாள்! வரலாற்றை மாற்ற வேண்டாம். தமிழ்நாட்டின் தனித்துவத்தை மழுங்கடிக்க வேண்டாம்! நவம்பர் 1-ஆம் நாளைத் ‘தமிழ்நாடு நாள்’ எனக் குறிப்பிட்டு ஆட்சியாளர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். நவம்பர் 1 கொண்டாட்டத்திற்கு உரிய நாளா? நிச்சயமாக ஆம். ஆனால், தமிழ்நாட்டின் மொழி, இன, பண்பாட்டு அடையாளத்தைப் போற்றும் தனித்துவமான ‘தமிழ்நாடு நாள்’ அதுதானா? என்பதே அடிப்படையான கேள்வி. இது வெறும் தேதியைப் பற்றிய விவாதமல்ல. தமிழ்நாட்டின் வரலாற்றையும் பண்பாட்டு அடையாளத்தையும் எவ்வாறு புரிந்துகொள்கிறோம், எதிர்காலத் தலைமுறைக்கு எத்தகைய வரலாற்று உணர்வைக் கடத்துகிறோம் என்பதற்கான விவாதம். இந்திய விடுதலைக்குப் பின்னர் மொழிவாரி மாநிலங்களுக்கான கோரிக்கைகள் வலுப்பெற்றன. தனி ஆந்திர மாநிலத்திற்காக உண்ணாவிரதம் இருந்து 1952 டிசம்பர் 15-ஆம் நாள் பொட்டி ஸ்ரீராமுலு உயிர்நீத்தார். தொடர்ந்து எழுந்த போராட்டங்களால் 1953 இல் ஆந்திர மாநிலம் உருவானது. 1956 நவம்பர் 1ஆம் நாள் மொழிவாரி மாநில மறுசீரமைப்பு நடைமுறைக்கு வந்தது. இதனால் சென்னை மாநிலத்தின் எல்லைகள் மறுவரையறை செய்யப்பட்டன. ஆந்திரம், கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களின் எல்லைகள் புதிய வடிவம் பெற்றன. 'வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகம்’ என்று தொல்காப்பியச் சிறப்புப் பாயிரம் போற்றிய தமிழ்மொழியின் வரலாற்றுப் பரப்பையும், 1956 இல் வரையறுக்கப்பட்ட அரசியல் எல்லைகளையும் ஒன்றாகக் கருதிவிட முடியாது. மொழிவாரி மறுசீரமைப்பின்போது தமிழர்கள் உரிமை கோரிய சில பகுதிகள் தமிழ்நாட்டுடன் இணையவில்லை. அதேவேளையில் கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழர்கள் வாழ்ந்த பகுதிகள் பெரும் போராட்டங்களுக்குப் பின்னர் தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட்டன. இந்த எல்லைப் போராட்டங்கள் வெறும் நிலப்பரப்புக்கானவை அல்ல. மொழியுரிமை, அடையாளம், மக்களின் விருப்பம் ஆகியவற்றுக்கான போராட்டங்கள். உயிர்நீத்தவர்களையும், சிறை சென்றவர்களையும், வாழ்நாளை அர்ப்பணித்தவர்களையும் நன்றியுடன் நினைவுகூர வேண்டிய வரலாற்றுச் சிறப்புமிக்க நாள்தான் நவம்பர் 1 எல்லைப் போராட்டத் தியாகிகள் நாள். அண்டை மாநில மக்களின் மொழியுரிமையை மதிப்பதும் நமது மொழியுரிமையை நிலைநாட்டுவதும் ஒன்றுக்கொன்று முரணானவை அல்ல. ஆனால், மொழிவாரி மாநிலங்களின் எல்லைகள் மறுவரையறை செய்யப்பட்ட நாளும், ‘தமிழ்நாடு’ என்ற பெயருக்காகத் தமிழர்கள் மேற்கொண்ட நீண்ட போராட்டம் வெற்றி பெற்ற நாளும் ஒன்றா? நிச்சயமாக இல்லை. தமிழ்நாடு என்ற பெயர் நமக்கு எளிதாகக் கிடைத்துவிடவில்லை. ‘மெட்ராஸ் ஸ்டேட்’ என்ற பெயரை மாற்றித் தமிழர்களின் மொழிக்கும் பண்பாட்டிற்கும் உரிய ‘தமிழ்நாடு’ என்ற பெயரைச் சூட்ட வேண்டும் என்று தமிழறிஞர்களும் அரசியல் இயக்கங்களும் போராடின. அந்தக் கோரிக்கைக்காக 1956 ஆம் ஆண்டு 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து அக்டோபர் 13-ஆம் நாள் உயிர்நீத்தார் தியாகி சங்கரலிங்கனார். ம.பொ.சிவஞானம் உள்ளிட்ட தமிழுணர்வாளர்களும் பல்வேறு இயக்கங்களும் இக்கோரிக்கையைத் தொடர்ந்து முன்னெடுத்தனர். அந்த நீண்ட போராட்டத்தின் வரலாற்றுத் திருப்புமுனையாக, *1967 ஜூலை 18-ஆம் நாள் பேரறிஞர் அண்ணா தலைமையிலான சட்டப்பேரவை, சென்னை மாநிலத்தின் பெயரைத் ‘தமிழ்நாடு’ என்று மாற்றுவதற்கான தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றியது.* தொடர்ந்து சட்ட நடைமுறைகள் நிறைவேறி, 1969 ஜனவரி 14 முதல் ‘தமிழ்நாடு’ என்ற பெயர் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்தது. ஜூலை 18 ஒரு கட்சியின் ஆட்சிச் சாதனையை மட்டும் குறிக்கும் நாளல்ல. சங்கரலிங்கனாரின் உயிர்த்தியாகத்திற்கும், தமிழறிஞர்களின் போராட்டத்திற்கும், தமிழ் மக்களின் மொழி உணர்விற்கும், பேரறிஞர் அண்ணாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க அரசியல் முன்னெடுப்பிற்கும் கிடைத்த அங்கீகாரத்தின் நாள். தமிழ்நாடு என்ற பெயரைத் தமிழர்கள் தங்கள் அரசியல் அடையாளமாக நிலைநிறுத்திய வரலாற்றுப் பெருமிதத்தின் நாள் ஜூலை 18. இந்த வேறுபாட்டை உணர்ந்துதான் 2021 அக்டோபரில் பேராசிரியர் சாலமன் பாப்பையா தலைமையிலான தமிழறிஞர்களும் மொழி, பண்பாட்டு ஆர்வலர்களும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களைச் சந்தித்து, ஜூலை 18-ஐத் தமிழ்நாடு நாளாக அறிவிக்க வலியுறுத்தினர். அது ஒரு கட்சிக்கான கோரிக்கை அல்ல; தமிழ்நாட்டின் தனித்துவமான வரலாற்று அடையாளத்தைப் பாதுகாக்க முன்வைக்கப்பட்ட பண்பாட்டுக் கோரிக்கை. அதனை ஏற்று, 2021 அக்டோபர் 30-ஆம் நாள் ஜூலை 18 தமிழ்நாடு நாளாகக் கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதேவேளையில், நவம்பர் 1 ஐ எல்லைப் போராட்டத் தியாகிகள் நாளாக நினைவுகூர்ந்து, அப்போது வாழ்ந்த 110 எல்லைப் போராட்ட வீரர்களுக்குத் தலா ஒரு லட்சம் ரூபாய் பொற்கிழி வழங்கவும் அறிவிக்கப்பட்டு, அவர்கள் கௌரவிக்கப்பட்டனர். ஜூலை 18-ஐத் தமிழ்நாடு நாளாக அறிவித்தது நவம்பர் 1-இன் வரலாற்றை மறுப்பதற்கல்ல. இரு நாட்களின் தனித்துவமான வரலாற்று முக்கியத்துவத்தையும் போற்றுவதற்காகத்தான். இந்நிலையில், மீண்டும் நவம்பர் 1-ஐயும் தமிழ்நாடு நாள் என்று கொண்டாடுவது எந்த வகையில் பொருத்தமானது? இரண்டு நாட்களையும் கொண்டாடுவதில் கருத்து வேறுபாடில்லை. ஆனால், வெவ்வேறு வரலாற்று நிகழ்வுகளை ஒரே பெயரில் கொண்டாடும்போது அவற்றின் தனித்துவம் மங்கிவிடும். மொழிவாரி மாநில மறுசீரமைப்பின் வரலாறு ஒன்று. தமிழ்நாடு என்ற பெயரைப் பெற்ற உரிமைப் போராட்டத்தின் வரலாறு மற்றொன்று. பேரறிஞர் அண்ணா தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் பெயர் மாற்றத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்பதற்காக, அந்த வரலாற்றை ஒரு கட்சியின் வெற்றியாக மட்டும் குறுக்கிவிடக் கூடாது. அரசியல் வேறுபாடுகளுக்காக அதன் முக்கியத்துவத்தைக் குறைப்பதும் சரியல்ல. பேரறிஞர் அண்ணாவின் வரலாற்றுச் சாதனை ஒரு கட்சியின் வரலாற்றில் இடம்பெற்றிருக்கலாம்; ஆனால் ‘தமிழ்நாடு’ என்ற பெயர் தமிழ் மக்கள் அனைவருக்கும் சொந்தமானது. இதனை அரசியல் போட்டிக்குள் அடக்குவது தமிழ்நாட்டின் பொதுவான பண்பாட்டு நினைவிற்கு நியாயம் செய்வதாகாது. தமிழ்நாட்டின் தனித்துவத்தை மழுங்கடிக்க வேண்டுமென்றே இத்தகைய முடிவுகள் எடுக்கப்படுகின்றன என்று ஆதாரமின்றிக் குற்றஞ்சாட்ட வேண்டியதில்லை. ஆனால், அவற்றால் ஏற்படக்கூடிய பண்பாட்டு விளைவுகள் குறித்து எச்சரிப்பது நமது கடமை. மொழியின் அடையாளம் வெறும் பெயர்ப்பலகையில் இருப்பதல்ல. அதன் பின்னால் வரலாறும் தியாகமும் மக்களின் உரிமை உணர்வும் இருக்கின்றன. அவற்றை அடுத்த தலைமுறை தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். எனவே, நமது கோரிக்கை எளிமையானது.உறுதியானது. நவம்பர் 1 — மொழிவாரி மாநில மறுசீரமைப்பையும் எல்லைப் போராட்டத் தியாகிகளையும் நினைவுகூரும் நாள். ஜூலை 18 — தமிழ்நாட்டின் மொழி, வரலாறு, பண்பாடு, தனித்துவமான அரசியல் அடையாளம் ஆகியவற்றைப் போற்றும் தமிழ்நாடு நாள். இது ஒரு கட்சியை ஆதரிப்பதற்கோ மற்றொரு கட்சியை எதிர்ப்பதற்கோ அல்ல; தமிழ்நாட்டின் வரலாற்று அடையாளத்தைப் பாதுகாப்பதற்கான நிலைப்பாடு. தமிழ்நாட்டின் பெயருக்காக உயிர்நீத்த சங்கரலிங்கனாரையும், போராடிய தமிழுணர்வாளர்களையும், பெயர் மாற்றத் தீர்மானத்தை நிறைவேற்றிய பேரறிஞர் அண்ணாவையும் நினைவுகூரும் நாளை உரிய இடத்தில் நிலைநிறுத்துவோம். நவம்பர் 1-ஐப் போற்றுவோம்; ஜூலை 18-இன் தனித்துவத்தை விட்டுக்கொடுக்க மாட்டோம்! வரலாற்றை அரசியலுக்காக மாற்ற வேண்டாம். தமிழ்நாட்டின் தனித்துவத்தை மழுங்கடிக்க வேண்டாம்! *தமிழ்நாடு நாள் — ஜூலை 18 மட்டுமே!* *தமிழ்நாடு வாழ்க! தமிழ் வாழ்க!*
217
684
123
1,373
166,957
அப்செஷன் (2026) - ரிவ்யூ தமிழ் ❌ , ஜியோ ஹாட்ஸ்டார் ⭐⭐⭐.5/5 பாக்ஸ் ஆபிஸில் எதிர்பாராத வகையில் ஹிட் அடித்த சைக்கலாஜிகல் ஹாரர் படம்.. கூட வேலை பார்க்கும் பெண்ணை காதலிப்பதை சொல்ல முடியாமல் தவிக்கும் ஹீரோ.. காதலிக்கு கிப்ட் வாங்க கடைக்கு போகும் ஹீரோ அங்க வித்தியாசமான ஒரு பொருளை பார்க்கிறார். அதை வாங்கி கையில் வைச்சுட்டு நீங்க எது நினைச்சாலும் நடக்கும் என்று அதில் எழுதி இருக்கிறது. காதலை சொல்ல தைரியம் இல்லாமல் தான் காதலிக்கும் பெண் தன்னை உயிருக்கு உயிராக காதலிக்க வேண்டும் என்று அந்த பொருளிடம் விளையாட்டுத் தனமாக கேட்க அதற்கு பின்பு நடக்கும் சம்பவங்கள் தான் படம்.. சிம்பிளான கான்செப்ட் அதை பக்காவா எக்ஸிகியூட் பண்ணி இருக்காங்க. அதற்கு ஏற்றது போல நடிகர்களும் அமைந்து விட்டது. அதிலும் ஹீரோயின் நல்லா நடிப்பு... அந்த பேய் மாதிரி சிரிப்பு தான் ஹைலைட்.. ரெஸ்ட்ரான்ட் சீன் க்ளிப் ஏற்கனவே நெறய சுத்திகிட்டு இருக்கு.. அப்பாவியான மூஞ்சி ஹீரோவுக்கு.. கடைசில ஹீரோ கேரக்டர் மேல பரிதாபம் தான் வருகிறது அதுவே அந்த கதாபாத்திரத்தின் பலம்.. ஜம்ப் ஸ்கேர் இல்லாமல் சைக்கலாஜிகல் வகையிலான ஹாரர் இது.. ஆனா அந்த கார் சீன்ல மெரட்டி விட்டானுக.. ஹாரர் பட விரும்பிகள் கட்டாயம் பார்க்கலாம்..
5
12
1
75
11,198
#Akka 🔞 - sumaar ⭐️ ⭐️ ✨ (2.25/5) OTT: Netflix Tamil dub: ✅ மூன்று வருஷம் Hype-க்கு கடைசியில் கிடைத்தது ஏமாற்றம் தான்…😷 கீர்த்தி அக்கா என்னவோ கும்முன்னு தான் இருக்காங்க. ஆனா, சீரிஸ் தான் சப்புன்னு இருக்கு. 🤦🏻‍♂️🤦🏻‍♂️ கதைக்களம் நடக்கும் காலக்கட்டம் மட்டும் பழசு இல்லை, இந்தத் தொடரின் கதையும் பழசு தான். வழக்கமான பழிக்குப் பழி வாங்கும் கதைக்களம். என்னென்னவோ பேசுறாங்க, நமக்குத்தான் எதுவுமே விளங்க மாட்டேங்குது. நிறைய பேர் இறக்கிறாங்க, ஆனா எந்தக் காட்சியிலும் எமோஷனலான கனெக்ட் சுத்தமா இல்லை. கீர்த்தி அக்காவை விட Pooja Mohanraj தான் இந்தத் தொடருக்காக அதிகம் மெனக்கெட்டிருக்காங்க. அவங்கள நாயகியா போட்டிருக்கலாம்… கீர்த்தி அக்காவின் இடுப்புக்கு மட்டும் தனியா நிறைய ஷாட்ஸ் வச்சிருக்காங்க போல Radha Apte-க்கு சொல்ற அளவுக்கு இந்தத் தொடர் இல்லை. ஆபாசமான வார்த்தைகள், கொடூரமான காட்சிகள், கவர்ச்சியான காட்சிகள் என அனைத்தும் நிறையவே இருக்கு. அதனால் தனிமையில் பார்ப்பது நல்லது part 2 lead எதுக்கு தேவை இல்லாத ஆணி ..
#Akka ஆண்கள் அதிகம் நிறைந்த ஒரு Series-ஐ பார்த்துவிட்டு, இப்போது பெண்கள் அதிகம் நிறைந்த Series-ஐப் பார்க்கும்போது ஒரு மாதிரி நல்லாதான் இருக்கு 😅 கவர்ச்சி, புனிதமான வார்த்தைகளில் கொட்டிக் கிடக்குது. 😂 முதல் எபிசோடை மோசம் இல்லாமல் கொண்டு போயிருக்காங்க… இன்னும் 4 எபிசோடுகள் இருக்கு. எல்லாத்தையும் முடிச்சிட்டு வருவோம் 🤝
6
9
2
68
24,287