Actor Vijay Fans (@Actor_Vijay) profile picture
Chennai, India
Joined April 2010
Photo by Actor Vijay Fans (@Actor_Vijay)Photo by Actor Vijay Fans (@Actor_Vijay)Photo by Actor Vijay Fans (@Actor_Vijay)Photo by Actor Vijay Fans (@Actor_Vijay)Photo by Actor Vijay Fans (@Actor_Vijay)Photo by Actor Vijay Fans (@Actor_Vijay)
Meendum meendum sandhippom ❤️
97
2,633
3
12,290
146,719
Actor Vijay Fans retweeted
தேசியத்தையும், தெய்வீகத்தையும் தனது இரு கண்களாகப் போற்றி வாழ்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் பிறந்த நாள் மற்றும் குருபூஜை நாளில், அவரது நாட்டுப்பற்றையும், தியாகத்தையும், சமூகநீதிக்கான பங்களிப்பையும் போற்றி வணங்குகிறேன். வீரம் செறிந்த தனது பேச்சாற்றலால், நாட்டு மக்களிடையே சுதந்திரக் கனலை மூட்டிய தெய்வீகத் திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் கொள்கைகளைத் தீவிரமாகப் பரப்பி, இந்திய தேசிய இராணுவத்திற்கு ஆதரவைத் திரட்டி, நாட்டின் விடுதலைக்காகப் போராடினார். சாதி, மத எல்லைகளைக் கடந்து மனிதநேயத்தை மட்டுமே தனது மூச்சாகக் கொண்டு வாழ்ந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் இலட்சியப் பாதையில் தொடர்ந்து பயணிப்போம்! #CMJosephVijay‌
34
1,363
26
5,267
55,895
முத்துராமலிங்க தேவரின் குருபூஜை & ஜெயந்தி விழா... தேவர் சிலைக்கு மாலை அணிவித்து முதலமைச்சர் விஜய் மரியாதை
1
88
1
444
5,738
Actor Vijay Fans retweeted
District wise IT wing ID’s Re - launch date will Be Announced in #TVKITWING ID @BussyAnand @Jagadishbliss
232
845
36
2,405
62,540
Actor Vijay Fans retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (29.10.2026) தலைமைச் செயலகத்தில், மூன்றாவது அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. #CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @imrajmohan |
2
104
3
421
27,207
Actor Vijay Fans retweeted
திமுகவின் இரட்டை நிலைப்பாடு ! தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளுக்குத் தேவையான ஒப்பந்தப் பணியாளர்களை Outsourcing முறையில் தேர்வு செய்து வழங்க, தமிழக அரசின் கீழ் இயங்கும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனமான OMCL நியமிக்கப்பட்டுள்ளது. தவெக அரசு எதைச் செய்தாலும், “இதை நாங்கள்தான் செய்தோம்” என்று Credit Steal செய்து Sticker ஒட்டிக்கொள்ளும் Senior Generational Abuser தலைமையிலான திமுகவினர், இது தவெக அரசு செய்தது எனப் போலிக் கொந்தளிப்பில் குதிக்கின்றனர். ஆனால், திமுக ஆட்சிக் காலத்திலேயே OMCL நிறுவனம் மூலம் அரசு அலுவலகங்களுக்கு Outsourcing முறையில் பணியாளர்கள் நியமிக்கப்பட்ட நடைமுறை அமலில் இருந்ததை வசதியாக மறைத்துவிட்டு, இன்று உத்தமர்கள் வேடம் கட்டுகின்றனர் ஊழல் இலக்கியத்தின் வாரிசுகள்! திமுக ஆட்சிக் காலத்தில் OMCL நிறுவனம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்களை அரசுத் துறைகளுக்கு Outsourcing முறையில் வழங்கியுள்ளது. அன்றைய நிதித்துறையின் உத்தரவின்படி, அரசுத் துறைகளின் பல்வேறு பதவிகளுக்கு Outsourcing முறையில் பணியாளர்களை நியமிப்பதற்கான நிலையான விலை ஒப்பந்தம் (Standard Rate Contract) இறுதி செய்யப்பட்டது. இதன் முதற்கட்டமாகச் சென்னை மற்றும் பிற மண்டலங்களைச் சேர்ந்த 21 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டன. தங்கள் ஆட்சிக் காலத்திலேயே நடைமுறையில் இருந்த ஒரு முறையை மறைத்துவிட்டு, அரசியல் காழ்ப்பில் அவதூறு பரப்பி அரற்றிக் கொண்டிருக்கும் சித்தரஞ்சன் சாலை மூர்த்தியின் கூடாரமே! Shoulder-ஐ இறக்கு ! அதேநேரத்தில், இளைஞர்களின் எதிர்காலத்தை முன்னிறுத்திச் செயல்படும் தவெக அரசு, மின் பகிர்மானக் கழகத்தில் 8,000 பணியிடங்களைத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நேரடி நியமனம் மூலம் நிரப்ப அரசாணை வெளியிட்டுள்ளது. இளைஞர்களின் எதிர்கால நலனில் அக்கறை கொண்டு செயல்படும் அரசே தவெக அரசு !
26
592
6
1,407
23,887
Actor Vijay Fans retweeted
நேற்று (28.10.2026) கிண்டி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற விழாவில், மாற்றுத்திறனாளி திரு. வீ. தினேஷ் அவர்கள் வேலைவாய்ப்பு கோரி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவை உடனடியாகப் பரிசீலனை செய்து, இன்று (29.10.2026) அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் வாயிலாக, திருவொற்றியூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் Workshop Assistant பணிக்கான நியமன ஆணையைத் தனது கரங்களால் வழங்கியுள்ளார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் ! ஒரு சாமானிய மாற்றுத்திறனாளியின் கோரிக்கைக்குச் செவிசாய்த்து, அவரது வாழ்க்கையில் நம்பிக்கையை விதைத்திருக்கிறார் முதல்வர் !
31
1,040
31
3,609
109,754
Actor Vijay Fans retweeted
55
568
13
1,709
47,964
Actor Vijay Fans retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் வெற்றித் அவர்கள் தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற மூன்றாவது அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டவை குறித்து மாண்புமிகு மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி டி. ஆர். நிர்மல்குமார் அவர்கள் செய்தியாளர்களிடம் விளக்கினார்.
13
215
1
549
9,399
Actor Vijay Fans retweeted
VIDEO | Chennai: Tamil Nadu CM C. Joseph Vijay hands over workshop assistant appointment order to a person with disability after reviewing job request. (Source: Third Party) (Full video available on PTI Videos - ptivideos.com)
3
15
55
8,331
Actor Vijay Fans retweeted
Another short term tender for peak hours opened today, since the price quoted is not feasible we are rejecting the bid and this tender will be cancelled
55
334
28
1,090
88,539
Actor Vijay Fans retweeted
2026 ஜூலை 3 ஆம் தேதி அன்று "நியூஸ் தமிழ் 24×7 தொலைக்காட்சியின் தலைவர் திரு. பி. சகிலன், இயக்குநர்கள் திரு. ஆர். பிரேம் குமார், திரு. சித்தேஷ்வர் பிரதீப்குமார் நாயர் ஆகியோர் சந்தித்துப் பேசினர்" என்ற செய்தி பகிரங்கமாகத்தானே பகிரப்பட்டு உள்ளது. இதில் எங்கிருந்து தனிநபரை சந்தித்ததாகக் கதை விடுகிறார் தமிழக எடுபடாதக் கட்சியின் தலைவராக இருப்பவர்?. இன்னும்கூட அந்தப் பதிவு இருப்பதை யார் மறைத்ததாம்?. மக்கள் பணத்தைக் கொள்ளை அடித்து மாட்டிக்கொண்டு கம்பி எண்ணும் கழகத்தினர் போல இல்லை எங்கள் வெற்றித் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் என்பது தமிழக மக்களுக்கு நன்றாகத் தெரியும். தீயசக்தியின் ஊழல்கள் வரிசை கட்டி அம்பலமாவதால் அச்சத்தில் உறைந்து அடிப்படையற்ற உளறல்களை ஆரம்பித்துள்ளனர் முன் ஜாமீன் முன்னேற்றக் கழகமாக இருந்து கம்பி எண்ணும் கழகமாக மாறியவர்கள். தங்கள் மங்குனித்தனமான திசைத்திருப்பல்களால் தீயசக்தியினர் மக்கள் மத்தியில் மேலும் மேலும் மதிப்பிழக்கத் தொடங்கி உள்ளனர். எனவே, அவல அரசியலின் அடுத்த வாரிசுகளும் அவதூறு அரசியலின் அடுத்த வாரிசுகளும் ஆபாச அரசியலின் அடுத்த வாரிசுகளும் இனியாவது அடக்கி வாசித்தல் நல்லது.
78
616
28
1,542
66,628
Actor Vijay Fans retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் வெற்றித் தலைவர் அவர்கள் சென்னையில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை – 2026, மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நிறைவு விழாவில் கலந்து கொண்டு, பதக்கப் பட்டியலில் முதல் மூன்று இடங்களை வென்ற மாவட்டங்களுக்குக் கோப்பைகளையும், ஜப்பானில் நடைபெற்ற 5-வது ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வென்ற 9 வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத்தொகைக்கான காசோலைகளையும் வழங்கினார். மேலும், விளையாட்டு வீரர்கள் மேம்பாட்டு உதவித்தொகை திட்டத்தையும் மாண்புமிகு முதலமைச்சர் வெற்றித் தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
12
451
1
1,496
12,312
Actor Vijay Fans retweeted
"நான் தான் லியோ.. லியோ தாஸ்.." பரிசு வாங்கிய பின் மேடையிலேயே மாணவி செய்த செயல்.. முதல்வர் விஜய் கொடுத்த ரியாக்‌ஷன் என்ன தெரியுமா? #Chennai | #CMVijay | #Sports | #CMTrophy | #CMTrophy2026 | #DreamOlympic | #AadhavArjuna | #PolimerNews
3
404
10
3,120
166,704
Actor Vijay Fans retweeted
நேற்று முறையீடு - இன்று பணி..! வேலை வாய்ப்பு கேட்டு மனு அளித்த வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி இளைஞர் .. திருவொற்றியூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் Workshop Assistant பணிக்கான பணிநியமன ஆணையினை 24 மணி நேரத்தில் வழங்கினார் முதலமைச்சர் விஜய்.. #CMVijay | #Employment | #Petition | #PolimerNews
15
418
21
1,495
105,444
Actor Vijay Fans retweeted
He is truly concerned about the needy and his swift work only tells us why he shifted to politics. More than superstardom, more than money, he truly wants to help the public @TVKVijayHQ ❤️👌
7
318
2
1,605
19,637
Actor Vijay Fans retweeted
தேதியை சரியாகப் பார்க்கவும் ! முதல்வர் மாறினால் முதல்வரின் அதிகாரப்பூர்வப் பக்கமும் மாறும் என்ற வரையில் தான் தெளிவு இருக்கிறதா ?
கொஞ்சம் கூட கூச்சமே இல்ல @actorvijay
7
196
1
667
21,050
பெண்களின் தொழில்முனைவோர் கனவுகளுக்கு நம்பிக்கையூட்டி, பொருளாதாரச் சுதந்திரத்தை நோக்கிய அவர்களின் பயணத்திற்கு வலுசேர்க்கும் வகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் வழிகாட்டுதலின்படி, விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் இன்று (29.10.2026) “வெற்றி மகளிர்” தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தைத் தொடங்கி வைத்து, தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் (TIIC) சார்பில், 7 பயனாளிகளுக்கு ரூ.4.21 கோடி மதிப்பிலான கடனுதவி மற்றும் மானியத்திற்கான ஆணைகளை வழங்கினேன். மேலும், மகளிர் திட்டத்தின் சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.7 லட்சம் மதிப்பிலான சமுதாய முதலீட்டு நிதி வழங்கப்பட்டது. தொடர்ந்து, மகளிர் தொழில்முனைவோர்களுடன் கலந்துரையாடி, அவர்களின் தொழில் வளர்ச்சி குறித்த கருத்துகளையும் தேவைகளையும் கேட்டறிந்தேன். #CMJosephVijay #TamilNadu
7
59
252
3,262
Actor Vijay Fans retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (29.10.2026) தலைமைச் செயலகத்தில், மூன்றாவது அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. The Hon’ble Chief Minister of Tamil Nadu, Thiru.C.Joseph Vijay, chaired the third Cabinet meeting held at the Secretariat today (29.10.2026). #CMJosephVijay‌
36
676
1
3,062
71,982
Actor Vijay Fans retweeted
முதலமைச்சர் கோப்பை 2026 நிறைவு விழாவில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் The Hon’ble Chief Minister of Tamil Nadu at the Closing Ceremony of the Chief Minister’s Trophy 2026 #CMJosephVijay‌
43
1,822
28
8,891
106,842
Actor Vijay Fans retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (29.10.2026) சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை 2026 நிறைவு விழாவில், மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் 142 தங்கம், 97 வெள்ளி, 80 வெண்கலப் பதக்கங்களோடு முதலிடத்தைப் பிடித்த சென்னை மாவட்டத்திற்கும், 64 தங்கம், 43 வெள்ளி, 36 வெண்கலப் பதக்கங்களோடு இரண்டாம் இடத்தைப் பிடித்த செங்கல்பட்டு மாவட்டத்திற்கும், 27 தங்கம், 37 வெள்ளி, 54 வெண்கலப் பதக்கங்களோடு மூன்றாம் இடத்தைப் பிடித்த கோயம்புத்தூர் மாவட்டத்திற்கும் கோப்பைகளை வழங்கி, விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளைப் பாராட்டினார். மேலும், ஜப்பானில் நடைபெற்ற 5-வது ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 9 வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத்தொகையாக 6 கோடியே 85 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார். The Hon’ble Chief Minister of Tamil Nadu, Thiru.C.Joseph Vijay, presented trophies to Chennai District, which secured first place in the State-Level Sports Competitions with 142 gold, 97 silver and 80 bronze medals; Chengalpattu District, which secured second place with 64 gold, 43 silver and 36 bronze medals; and Coimbatore District, which secured third place with 27 gold, 37 silver and 54 bronze medals, and felicitated the sportspersons at the closing ceremony of the Chief Minister’s Trophy 2026, held at the Jawaharlal Nehru Indoor Stadium, Chennai, today (29.10.2026). Further, the Hon’ble Chief Minister presented cheques totalling Rs.6.85 crore as high incentive awards to 9 sportspersons from Tamil Nadu who won medals at the 5th Asian Para Games held in Japan. #CMJosephVijay
6
360
2
1,647
28,986