Pinned Tweet
சமூக நீதி மீது நம்பிக்கை உள்ளவர்கள் retweet செய்து Follow செய்தால் மீண்டும் follow செய்வேன்.
anbarasu Stalin retweeted
அரசு கொள்முதல் செய்த 5,000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீண்..! அரவை மில்லுக்கு கொண்டு செல்லாமல் காலம் தாழ்த்தியதாக விவசாயிகள் புகார்..
#Paddy |#Rain |#Issue |#TNGOVT |#PolimerNews
BSC. cS student need help for pay final year Fee. ₹40K to Chennai college Single mother struggled to pay the fee. Last 2 and half year Fee paid by her, but this time not able to pay. Student Sathish. If anyone willing to help, directly pay to college.
@DrSenthil_MDRD
anbarasu Stalin retweeted
10 MIN-ல் 40 KM?..😮 ஒரே சார்ஜில் இவ்ளோ SPEED-ஆ🔥 'எலான் மஸ்க்கே டஃப் தரும் இந்தியன்'
வணிக நிறுவனங்கள், சிறிய வணிகர்கள் பாதிக்கப்படுவார்கள் பெரும்பான்மையாக வணிகம் வீழ்ச்சி அடையும். ஆனால் சிறிய நகரங்களில் வணிகம் துணிக்கடை சூப்பர்மார்கெட் நல்ல வியாபாரம் நடக்கும்
Replying to @Im_kannanj
வெள்ளி சனி ஞாயிறு மற்றும் திங்கள் சென்னையில் உள்ளோர் மற்றும் திருப்பூர் கோயம்புத்தூர் தொழில் உள்ளவர்கள் குடும்பமாக சொந்த ஊருக்கு சென்று விடுவார்கள். நகரங்களில் Diwali வியாபாரம் முடங்கி விடும். Diwali sale will drop.
திமுக உதயநிதிக்கு விபூதி அடிச்சது அன்பில் மகேஷ்... இப்போ திமுக அன்பிலுக்கு விபூதி அடிக்கிறது. திமுக பெயரை நாசம் செய்துவிட்டார்
”அவர் கைதானது பத்தி யாரும் வருத்தப்படாதீங்க.. அன்பில் மகேஷ் ஜெயிலுக்கு போக வேண்டிய ஆள் தான்.. என் மனைவிக்கு பணி மாறுதலுக்கு மட்டும் 7 லட்சம் கொடுத்தேன்.. ஒரு கட்சிக்காரனுக்கே இந்த நிலைமைனா மத்தவங்களுக்கு யோசிச்சு பாருங்க.. இத எங்க வேணா நிரூபிக்க நான் ரெடி”... திண்டுக்கல் சித்தையன்கோட்டை பேரூராட்சி மன்ற திமுக துணை தலைவரின் பகீர் ஆடியோ
#Dindugul | #DMK | #AnbilMahesh | #ViralAudio | #PolimerNews
anbarasu Stalin retweeted
தயவு செஞ்சு இன்ஸ்டா ID வச்சிக்காதீங்க.. சோசியல் மீடியாவுல நிறைய ஆபத்து இருக்கு.. உங்க அம்மாவா சொல்றேன்- மாணவிகளுக்கு அமைச்சர் ஜெகதீஸ்வரி அட்வைஸ்
#Students | #School | #MinisterJegadeshwari | #SocialMedia | #PolimerNews
anbarasu Stalin retweeted
#BREAKING | குழந்தையை கடத்தி ஆந்திராவில் விற்பனை செய்த தவெக நிர்வாகி சந்தோஷ் உள்பட 5 பேர் கைது!
#TVKFails | #Tamilnadu | #kalaignarseithigal
anbarasu Stalin retweeted
சிவகங்கை மாவட்ட காவல்துறை
பத்திரிகை செய்திக்குறிப்பு
மாமன்னர் மருது பாண்டியர்களின் 225-வது குருபூஜை விழா – வாகனத்தில் வந்த நபர்களுக்கு சாலைப் பாதுகாப்பு குறித்த அறிவுறுத்தப்பட்டது.#sivagangaidistrictpolice #SouthZoneTNpol #TNPolice #TamilNaduPolice
anbarasu Stalin retweeted
Look at the intensity of the cyclonic storm near the coasts of Kakinada.
Winds are blowing at a speed of 145 kilometers per hour—a person would be blown away if they tried to stand!
The storm is wreaking havoc across several states.
anbarasu Stalin retweeted
20 அடிக்கும் மேல் உயரும் கடல் அலை... தடுப்புச் சுவரைத் தாண்டி சாலையில் ஆறாக ஓடும் கடல் நீர்...
எல்லா வீட்டுக்குள்ளேயும் தண்ணி போயிருக்கு... எப்படி தூங்குவாங்க.? பாரதியார் நகர் மக்கள் வேதனை
#Tiruvallur | #Chennai | #BharathiyarNagar | #Flood | #Cyclone | #Sea | #PolimerNews
Ration அரிசி நல்லா இருக்கும், ஆனால் வண்டு வந்த நிறம் பழுப்பு கலர் இருந்தால் நல்லா இருக்காது
அட சும்மா இருமா..
தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம்
தாய்மாமன் சீர் திட்டம்
இதுக்கெல்லாம் விஜய் என்ன அவரு ஜோப்ல இருந்தா பணம் எடுத்துக் கொடுக்க முடியும்?
உன்ன மாதிரி ஓட்டு போட்ட முட்டாள்கள் கிட்ட இருந்து புடுங்கி தான் கொடுக்க முடியும்...
இத போய் தவெக தொண்டர்கள் கிட்ட சொன்னா. உன்ன யாரு 100 ரூபாய்க்கு அரிசி வாங்க சொன்னதுன்னு செருப்ப கழட்டி அடிப்பான்...
anbarasu Stalin retweeted
பிம்பமும் உள்ளடக்கமும்:
தமிழ்த் தேசியத்தின் இன்றைய சிக்கலும்...?
தமிழ்த் தேசியம் என்ற பெயரில் பலர் இன்று சமூக ஊடகங்களில் உலா வருகிறார்கள். அவர்களின் முகப்பில் தலைவர் பிரபாகரன் படம் இருக்கும். “தமிழ்த் தேசியம் உயிருள்ளவரை”, “மாவீரர் நினைவைப் போற்றுவோம்”, “தூய தமிழ்த் தேசியவாதி” என்ற மகுட வாசகங்கள் இருக்கும். ஆனால் அவர்களின் பதிவுகளையும் உரையாடல்களையும் படிக்கும்போது வேறு உலகம் தெரியும்.
சாதி இழிவு, பெண் இழிவு, தனிநபர் தாக்குதல், அறிவில்லாத கோபம். இது ஏன் நிகழ்கிறது என்ற கேள்வி இன்று தமிழ்த் தேசியத்தின் முன் நிற்கிறது. இது வெறும் தனிநபர் சிக்கல் அல்ல. இது ஒரு கொள்கை சிக்கல். தமிழ்த் தேசியம் என்பது ஒரு பிம்பமல்ல. அது மொழி, நிலம், வரலாறு, சுயநிர்ணயம் ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்த கொள்கை. அந்தக் கொள்கையைப் பிம்பமாக மாற்றிவிட்டால் அது தன் பொருளை இழக்கும்.
பலர் இன்று தமிழ்த் தேசியம் என்ற சொல்லாடலை உரைத்தபடி அதுபற்றிய தெளிவு இல்லாமல், அது ஒரு பிம்பம் என்று நினைத்துக்கொள்கிறார்கள். தலைவரின் படம் போட்டால் தேசியவாதியாகிவிடுவோம் என்ற எளிய ஓர் குறுட்டு நம்பிக்கை இவர்களிடம் ஒட்டிக்கொண்டுள்ளது . தேசியம் என்பது ஒரு பொறுப்பு என்பதை அவர்கள் உள்வாங்கவில்லை . ஆகவே பிம்பம் மட்டும் இவர்களிடம் இருக்கிறது. ஆனால் புரிதலுடம் கூடிய உள்ளடக்கம் இவர்களிடம் இல்லை.
அடுத்து உணர்ச்சிக் கொந்தளிப்பு. எதற்கெடுத்தாலும் வார்த்தைகளில் தடுமாற்றம், வன்மம், வெட்டுக், குத்து, எழுத்துநடையில் கூட வசை,ஆபாசம் என தொடரும் ஒழுக்கப்பிறழ்நிலை..
போர், இழப்பு, அநீதி ஆகியவற்றின் வலி இன்னும் இவர்களிடம் தீரவில்லை. அந்த வலி கோபமாக மாறுகிறது. கோபம் கொள்கையாக மாறாமல் தனிநபர் தாக்குதலாக வெளிப்படுகிறது உண்மையில் இது ஆபத்தான ஒரு போக்கு..
அடுத்து மிக முக்கியமாக இவர்களிடம் சூழ்ந்துள்ள ஒருவித பற்று. தலைவர், மாவீரர், ஈழம், தமிழ்த்தேசியம், சீமான், நாம்தமிழர் கட்சி, என்ற சொற்கள் அவர்களுக்கு அடையாளம். அந்த அடையாளத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம், எதிர்ப்பை வன்மமாக மாற்றுகிறது.
எதிர்ப்பவரை “துரோகி”, “சாதிவெறியன் ”, “கொல்ஸ்தி”, ”தறுதலை” “பெண் பொறுக்கி” "பைத்தியம்", "தற்குறி" ,"வெண்ணை", "ஈன பிறவிகள்", ”குடிகாறப்பயல்” என்று இழிவுபடுத்துவதே தங்கள் தேசியத்தை நிரூபிக்கும் வழி என்று நினைக்கிறார்கள்.
இது தமிழ்த் தேசியத்துக்கு பேராபத்து மிகுந்த செயல் என்பதை இவர்கள் உணர மறுக்கின்றார்கள், ஏனெனில் மாவீரர்களின் தியாகம் ஒரு தலைமுறையின் இழப்பு. அதைப் பாதுகாப்பது என்பது சாதி இழிவு, பெண் இழிவு, தனிமனித இழிகள் இல்லாமல் வரலாற்றைப் பேசுவது.
ஆகவே, விமர்சனம் வேறு. வன்மம் வேறு. ஒருவரை எதிர்ப்பதற்கு அவரது கொள்கை, செயல்பாடு, அல்லது வரலாற்று நிலைப்பாட்டைப் பேசினால் போதும்.
”....இன்னும் சிலர் சீமான் அவர்களை நேசிக்கின்றார்கள் அவரை ஏற்றுக்கொண்டு அவரின் சித்தாந்தப்பாதையில் பயணிக்கின்றார்கள். ஆனால் சீமான் அவர்களால் நியமிக்கப்பட்டு இன்றும் பொறுப்பில் இருக்கும் நா.த.க கட்சியின் பொறுப்பாளர்களை (சீமானை ஏற்றுகொண்டோம் என சொல்பவர்கள்) இவர்கள் மிகவும் தரம் தாழ்ந்து அநாகரிகமான முறையில் பேசுகின்றார்கள் எழுதுகின்றார்கள். உண்மையில் இவை தவிர்க்கப் படவேண்டும். இச்செயல்கள் அறியாமையின் விளைவா, அல்லது தனிமனித வெறுப்பா என்பதை இதில் சம்பந்தப்பட்டவர்கள் உள்விமர்சனங்கள் மூலம் ஆரோக்கிய உரையாடல்கள் மூலம் இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்...”
இவ்வாறான செயல்களை இவர்கள் நிறுத்தத்தவறினால் அதற்காக இவர்கள் பின்பு கொடுக்கும் விலைகள் இவர்களையே நிர்மூலமாக்கிவிடும். இவர்கள் அப்போது பல கருணாக்களை தம்கண்முன் காண்பார்கள் என்பதை இவர்கள் இப்போது உணரமறுப்பது மிகவும் வேதனையானது.
கூடவே இவர்கள் பேசும்போது ஒருவரது சாதி, இனக்குழுமம், மரபணு, குடும்ப நிலை, அல்லது உடல் நிலையை இழிவாகக் குறிப்பிடத் தேவையில்லை. அப்படிச் செய்வது விமர்சனத்தை வன்மமாக மாற்றுகிறது.
வன்மம் தமிழின உணர்வை வலுப்படுத்தாது. அது அதைப் பிளக்கும். சாதி அரசியலை எதிர்ப்பது வேறு. சாதி அடையாளத்தை இழிவாகப் பயன்படுத்துவது வேறு. பெண்கள், மாற்றுத்திறனாளிகள், அல்லது எந்த சமூகப் பிரிவையும் அவதூறு செய்யும் சொற்கள் தமிழின உணர்வுக்கு எதிரானவை. தமிழ்த் தேசியம் என்பது ஒரு தார்மீக எல்லை. அந்த எல்லையை மீறுவது தேசியத்தின் பெயரில் நடக்கும் துரோகம்.
இந்த நிலை தொடர்ந்தால் தமிழ்த் தேசியம் பிம்பமாக மட்டும் இருக்கும். உள்ளடக்கம் இழந்துவிடும். அதைத் தடுக்க வேண்டிய பொறுப்பு கொள்கை தெளிவுள்ளவர்களிடம் இருக்கிறது. தனிநபர் வன்மத்தைத் தவிர்த்து, கொள்கை எல்லையை மீண்டும் மீண்டும் சொல்வதே வழி.
ஆகவே, தலைவர் வே. பிரபாகரன் அவர்களின் படம் போடுவது தேசியம் அல்ல. தேசியம் என்பது சாதி இழிவு, பெண் இழிவு இல்லாமல் வரலாற்றைப் பாதுகாப்பது. இந்த எல்லையைக் கடைப்பிடிக்காவிட்டால், தமிழ்த் தேசியம் தேசியத்தின் பெயரில் நடக்கும் சாதி அரசியலாக மாறிவிடும். அது தமிழின உணர்வுக்கு எதிரானது. இன்றைய தேவை பிம்பத்தை உள்ளடக்கமாக மாற்றுவது. அதைச் செய்யாவிட்டால் வரலாற்று நினைவும், மாவீரர் தியாகமும், தமிழ்த் தேசியமும் சிதைந்துவிடும். சிந்திக்க வேண்டியது இதுவே. பிம்பம் போதாது. உள்ளடக்கம் தேவை.
- தொல்காப்பியன்
இது ஒரு ஆழமான சிக்கல்..
இவர்களுக்குப் புரியவைப்பது எளிதல்ல...
இன்று பலர் தங்கள் ”முகப்பில்” தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் படம், “தமிழ்த் தேசியம் உயிருள்ளவரை”, “மாவீரர் நினைவு”, “தூய தமிழ்த் தேசியவாதி” போன்ற மகுட வாசகங்களை வைத்துக்கொள்கிறார்கள். ஆனால் அவர்களின் பதிவுகளும் உரையாடல்களும் சாதி இழிவு, பெண் இழிவு, தனிநபர் தாக்குதல், அறிவில்லாத கோபமாக இருக்கின்றன. இது ஏன் நிகழ்கிறது என்று பார்த்தால் மூன்று காரணங்கள் தெரிகின்றன.
முதலாவது, அறியாமை. தமிழ்த் தேசியம் என்றால் என்ன என்ற தெளிவு இல்லாமல், அது ஒரு பிம்பம் என்று நினைத்துக்கொள்கிறார்கள். தலைவர் பிரபாகரன் அவர்களின் படம் போட்டால் தேசியவாதியாகிவிடுவோம் என்ற எளிய நம்பிக்கை.
இங்கே, தேசியம் என்பது மொழி, நிலம், வரலாறு, சுயநிர்ணயம் ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்த கொள்கை என்பதை அவர்கள் படிக்கவில்லை. ஆகவே பிம்பம் மட்டும் இருக்கிறது. உள்ளடக்கம் இல்லை.
இரண்டாவது உணர்ச்சிக் கொந்தளிப்பு. போர், இழப்பு, அநீதி ஆகியவற்றின் வலி இன்னும் தீரவில்லை. அந்த வலி கோபமாக மாறுகிறது. கோபம் கொள்கையாக மாறாமல் தனிநபர் தாக்குதலாக வெளிப்படுகிறது.
மூன்றாவது ஒருவித பற்று. தலைவர், மாவீரர், ஈழம் என்ற சொற்கள் அவர்களுக்கு அடையாளம். அந்த அடையாளத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம், எதிர்ப்பை வன்மமாக மாற்றுகிறது.
எதிர்ப்பவரை “துரோகி”, “சாதி”, “பெண்” என்று இழிவுபடுத்துவதே தங்கள் தேசியத்தை நிரூபிக்கும் வழி என்று நினைக்கிறார்கள்.
இவர்களுக்குப் புரியவைப்பது எளிதல்ல. ஏனெனில் அவர்கள் தங்கள் பிம்பத்தைக் கொள்கையாக நினைத்துக்கொள்கிறார்கள்.
ஆனால் இவர்களுக்கு புரியவைக்க முயன்றால், தனிநபரைத் தாக்காமல் கொள்கையைப் பேச வேண்டும். “தலைவர் வே. பிரபாகரன் அவர்களின் படம் போடுவது தேசியம் அல்ல. அல்லது முக்கிய மாவீரர்களின் நினைவுகள் வரும்போது அவர்களின் படங்களை முகப்பில் தொங்கவிடுவது (உ+ம்) திலீபன் நினைவுநாட்கள்) தேசிய உணர்வு அல்ல. மாறாக, தேசியம் என்பது சாதி இழிவு, பெண் இழிவு இல்லாமல் வரலாற்றைப் பாதுகாப்பது” என்று சொல்லலாம். அவர்களின் பதிவுகளைச் சுட்டிக்காட்டி, “இது விமர்சனமா அல்லது வன்மமா” என்று கேட்கலாம். ஆனால் இதைச் செய்யும்போது அவர்களை இழிவுபடுத்தாமல், தமிழ்த் தேசியத்தின் அடிப்படை எல்லைகளை நினைவூட்ட வேண்டும். இல்லையென்றால் அதுவும் வன்மமாக மாறிவிடும்.
இந்த நிலை தொடர்ந்தால் தமிழ்த் தேசியம் பிம்பமாக மட்டும் இருக்கும். உள்ளடக்கம் இழந்துவிடும். அதைத் தடுக்க வேண்டிய பொறுப்பு கொள்கை தெளிவுள்ளவர்களிடம் இருக்கிறது. தனிநபர் வன்மத்தைத் தவிர்த்து, கொள்கை எல்லையை மீண்டும் மீண்டும் சொல்வதே வழி.
புரிந்தால் சரி..
மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்பழித்தது ஒழித்து விடின்.
(குறள் 280)
anbarasu Stalin retweeted
சமூக ஊடகங்களில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து வரும் தேனி மாவட்ட காவல்துறையினர்.
#Thenidistrict #thenidistrictpolice #SouthZoneTNpol #TNPolice #SocialMediaArrest



















