Valarmeyyarivaan @ Visuvaa Viswanaath (@Journalist_Vish) header
Valarmeyyarivaan @ Visuvaa Viswanaath (@Journalist_Vish) profile picture

News Editor : Tamil Oodagam Magazine & Tamil Oodagam Digital Network

Chennai
Joined August 2010
தமிழ் ஊடகம் ; தனித்துவமான தமிழ் ஊடகம் பணிகளுக்கு நீங்களும் ஆதரவு தரலாம் வங்கிக் கணக்கு விவரம் : Tamil Oodagam Current Account Number : 1200 36 75 79 25 Canara Bank, Edayar Palayam Branch, Coimbatore. IFSC : CNRB0005634 SWIFT : CNRBINBBFD GPay, PayTM, PhonePe - 8012271745 Viswanaath T M Razorpay link in the comment box
1
1
5
2,123
இராகு – கேது பெயர்ச்சி 2026! வாக்கியப் பஞ்சாங்கம் – 13 நவம்பர் 2026 திருக்கணிதப் பஞ்சாங்கம் – 5 டிசம்பர் 2026 ராகு பெயர்ச்சி என்றாலே பயப்பட வேண்டியதில்லை. கேது பெயர்ச்சி என்றாலே இழப்புகள் ஏற்படும் என்று கருத வேண்டியதுமில்லை. ஒரு கிரகத்தின் பெயர்ச்சி என்பது பாரம்பரிய ஜோதிடத்தில் ஒரு காலகட்டத்தின் மாற்றத்தைக் குறிக்கும். அந்த மாற்றத்தை எவ்வாறு அணுகுகிறோம், நமது வாழ்க்கைத் திட்டங்களை எவ்வாறு அமைத்துக்கொள்கிறோம் என்பதே முக்கியம். பொருளாதாரத்தில் திட்டமிடல், தொழிலில் திறன் வளர்ப்பு, குடும்பத்தில் புரிதல், கல்வியில் தொடர்ச்சியான முயற்சி, உடல்நலத்தில் ஒழுங்கு – இவையே வாழ்க்கையை முன்னேற்றும் நடைமுறை வழிகள். சோதிடம் அச்சத்தை விதைக்காமல், சிந்தனையைத் தூண்ட வேண்டும். தமிழ் ஊடகம் | நாளும் கோளும் தமிழ் ஊடகம் ; தனித்துவமான தமிழ் ஊடகம் விரிவாக வாசிக்க இந்த இணைப்பை அழுத்துங்கள் : tamiloodagam.com/rahu-ketu-p…
56
#BREAKING_NEWS திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு - நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடுவதற்குத் தடை. - ஊர்வலங்கள் மற்றும் பொதுக்கூட்டங்களுக்குத் தடை. - போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்குக் கட்டுப்பாடு. - ஆயுதங்கள் எடுத்துச் செல்வதற்குத் தடை. - குறிப்பிட்ட பகுதியில் மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துதல். - பதற்றத்தை ஏற்படுத்தக்கூடிய செயல்களுக்குத் தடை. tamiloodagam dot com 23/11/26
1
88
சிவாஜிலிங்கம் மறைவுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய தொல்.திருமாவளவன் "தனிப்பட்ட முறையில் தமக்கு மாபெரும் இழப்பு என உருக்கம்" செம்மணி புதைகுழி குறித்த ராஜ் சோமதேவாவின் அறிக்கைக்கு நீதிமன்றத்தில் கடும் எதிர்ப்பு மாவீரர் நாளுக்கான சிறப்பு ஏற்பாடுகள் இலங்கையில் இவ்வாரம் சிறப்பு தொகுப்பு #LankaFiles #TNTVTamilOodagam காணொலி இணைப்பு : youtu.be/1nCphpNg3rY
75
கராத்தே மணி மரணத்தை முன்கூட்டியே கணித்தாரா ரஜினிகாந்த்? ஒருகாலத்தில் இளைஞர்களின் முன்னுதாரணமாகத் திகழ்ந்த கராத்தே மணி, திரையுலகில் நுழைந்த பிறகு சந்தித்த மாற்றங்கள் என்ன? ரஜினிக்கும் அவருக்கும் இடையே ஏற்பட்ட மோதல், பின்னர் மலர்ந்த நட்பு, கராத்தே மணியின் வாழ்க்கையில் ஏற்பட்ட வீழ்ச்சி எனப் பல சுவாரசியமான பின்னணிகள்! பத்திரிகையாளர் நாச்சி. செல்வராஜ் எழுதும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொடர் -11 விரிவாக வாசிக்க இந்த இணைப்பை அழுத்துங்கள் : tamiloodagam.com/rajini-pred…
1
151
திருப்பரங்குன்றத்தில் நாளை தீபத்திருவிழா! மேல்முறையீட்டு மனு மீது இன்று விசாரணை இல்லை! உச்சநீதிமன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பு என்ன சொல்கிறது? இடைக்கால உத்தரவால் எழுந்த ஐயங்களும் விவாதங்களும் என்னென்ன? தமிழ்நாடு அரசின் நிலை என்ன?! -தமிழ் ஊடகம் ஆசிரியர் குழுவின் விரிவான ஆய்வுக் கட்டுரையை வாசிக்க இந்த இணைப்பை அழுத்துங்கள் : tamiloodagam.com/thiruparank…
1
1
88
🚨 இனி காவல் நிலையத்திற்குச் செல்லாமலேயே புகார் அளித்து ஆன்லைனில் CSR பெறலாம்! தமிழ்நாடு காவல்துறையின் புதிய e-CSR திட்டம் பொதுமக்களுக்கு என்னென்ன நன்மைகளை வழங்குகிறது? யார் வேண்டுமானாலும் யார் மீதும் புகார் அளிக்க முடியுமா? புகார் அளித்தவுடன் CSR கிடைத்துவிட்டால் அது உண்மையான புகார் என்று அர்த்தமா? CSR-க்கும் FIR-க்கும் என்ன வித்தியாசம்? படித்துப் பாருங்கள். விழிப்புணர்வைப் பகிருங்கள்! படிக்க இந்த இணைப்பை அழுத்துங்கள் : tamiloodagam.com/tn-police-o…
1
97
#BREAKING | கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. மீதான புகார்: பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரியிடம் மீண்டும் விசாரிக்க நீதிமன்றம் அறிவுறுத்தல் “பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு அந்த எம்.எல்.ஏ. ஆபாசக் குறுஞ்செய்திகளை அனுப்பினார் என்பது உங்களுக்கு எப்படித் தெரியும்? அதற்கு உங்களிடம் உள்ள நேரடியான ஆதாரம் என்ன? செய்தித்தாள் செய்திகளின் அடிப்படையில் நீங்கள் நடவடிக்கை எடுக்கலாம். ஆனால், என்னால் அப்படிச் செய்ய முடியாது. ஓர் ஐ.ஏ.எஸ். அதிகாரியால் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முடியாதா? மாவட்ட ஆட்சியர் புகார் அளிக்காத நிலையில், காவல்துறை எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்? -நீதிபதி வி.லட்சுமி நாராயணன் கேள்வி கள்ளக்குறிச்சி தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் சி. அருள் விக்னேஷ், பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு ஆபாசமான குறுஞ்செய்திகளை அனுப்பியதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக, தமிழக காவல்துறை வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் ஆர். திரிசூலி சென்னை உயர் நீதிமன்றத்தில் குற்றவியல் ரிட் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி வி. லட்சுமிநாராயணன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ஆர். ஜான் சத்யன் ஆஜராகி, சம்பந்தப்பட்ட பெண் ஐஏஎஸ் அதிகாரி, இந்த விவகாரம் தொடர்பாக தலைமைச் செயலரிடமோ அல்லது வேறு எந்த அதிகாரியிடமோ புகார் அளிக்கவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதையடுத்து, மனுதாரர் தரப்பு வழக்கறிஞரிடம் நீதிபதி பல்வேறு கேள்விகளை எழுப்பினார். “சம்பந்தப்பட்ட எம்எல்ஏ, பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு ஆபாசமான குறுஞ்செய்திகளை அனுப்பினார் என்பதை நீங்கள் எவ்வாறு அறிந்துகொண்டீர்கள்? அதற்கு உங்களிடம் உள்ள உறுதியான ஆதாரம் என்ன? செய்தித்தாள் செய்திகளின் அடிப்படையில் நீங்கள் நடவடிக்கை எடுக்கலாம். ஆனால், என்னால் அவ்வாறு செய்ய முடியாது. ஓர் ஐஏஎஸ் அதிகாரியால் தன்னைத்தானே பாதுகாத்துக்கொள்ள முடியாதா? மாவட்ட ஆட்சியர் புகார் அளிக்காத நிலையில், காவல்துறை எவ்வாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?” என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். இதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பெண் ஐஏஎஸ் அதிகாரியிடமும் தலைமைச் செயலரிடமும் மீண்டும் ஒருமுறை விசாரித்து, நாளை நீதிமன்றத்தில் தெரிவிக்குமாறு தமிழக அரசின் தலைமை வழக்கறிஞருக்கு நீதிபதி வி. லட்சுமிநாராயணன் அறிவுறுத்தினார். இதையடுத்து, வழக்கின் விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது. தமிழ் ஊடகம் ; தனித்துவமான தமிழ் ஊடகம் tamiloodagam dot com #கள்ளக்குறிச்சிஎம்எல்ஏ #குறுந்தகவல்
7
11
663
அதனால் அரசியல் பேசுகிறேன்... | தொடர் – 4 1920இல் நீதிக்கட்சி ஆட்சியைப் பிடித்தது எப்படி? பனகல் அரசரின் ஆட்சி, 1923 தேர்தல், காங்கிரஸின் புறக்கணிப்பு... அன்றைய சென்னை மாகாண அரசியலின் சுவாரசியமான வரலாறு! பத்திரிகையாளர் ஜோதி நரசிம்மன் எழுதும் அரசியல் வரலாற்றுத் தொடர். வாசிக்க இந்த இணைப்பை அழுத்துங்கள் : tamiloodagam.com/neethikatch…
3
2
122
திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு அவசரமாக மேல்முறையீடு செய்தது ஏன்? அடுத்தகட்ட விசாரணையில் தனது நிலைப்பாட்டைத் தெரிவித்து, இருதரப்பினருக்கும் ஏற்ற தீர்வை அரசு உருவாக்கியிருக்கலாமே? மத நல்லிணக்கமா? அரசியல் அழுத்தமா? விரிவாக வாசிக்க இந்த இணைப்பை அழுத்துங்கள் : tamiloodagam.com/thiruparank…
1
117
அம்பாசமுத்திரத்தில் மாவீரர் நாள் நிகழ்ச்சிக்காக ரூ.20 லட்சம் நிதி திரட்டும் நாம் தமிழர் கட்சி! இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ள சீமான், அதே தொகுதியில் மாவீரர் நாள் நிகழ்ச்சியை நடத்துவதன் அரசியல் பின்னணி என்ன? விரிவாக வாசிக்க இந்த இணைப்பை அழுத்துங்கள் : tamiloodagam.com/ambasamudra…
16
8
1
9
1,839
கள்ளக்குறிச்சி பெண் மாவட்ட ஆட்சியருக்கு பாலியல் குறுந்தகவல் அனுப்பியதாக எழுந்த புகார் தற்போது உயர்நீதிமன்ற நீதிபதி விக்டோரியா கவுரி வரை விவாதிக்கப்பட்டுள்ளது. ஒரு மாவட்ட ஆட்சியருக்கே பணியிடப் பாதுகாப்பு குறித்த கேள்வி எழுந்தால், சாதாரணப் பெண் அரசு ஊழியர்களின் நிலை என்ன? விரிவாக வாசிக்க இந்த இணைப்பை அழுத்துங்கள் : tamiloodagam.com/kallakurich…
1
165
சமஸ்கிருதம் ஒரு குறிப்பிட்ட சாதிக்குச் சொந்தமானதா?! ஆய்வுகள் என்ன சொல்கின்றன?! #tamil #Sanskrit #tamiloodagam #TNTVTamilOodagam #Valarmeyyarivaan #VishwaaViswanaath
2
4
243
கொளத்தூர் இடைத்தேர்தலில் மு.க.ஸ்டாலின் மீண்டும் போட்டியிடுவாரா? துர்கா ஸ்டாலின் அதற்கு அழுத்தம் தருகிறாரா? கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு திமுகவில் ஏற்பட்டுள்ள அதிகாரப் போட்டிகள், மூத்த நிர்வாகிகளின் அதிருப்தி, உதயநிதியின் அரசியல் வளர்ச்சி, கிச்சன் கேபினட்டின் ஆதிக்கம் என திமுகவின் உள்கட்சி அரசியலை அலசுகிறார் பத்திரிகையாளர் நாச்சி செல்வராஜ். விரிவாக வாசிக்க இந்த இணைப்பை அழுத்துங்கள் : tamiloodagam.com/kolathur-by…
2
2
465
ரோஹிங்கியா இனப்படுகொ*லை வழக்கில் மியான்மர் அரசைப் பொறுப்பாக்கிய சர்வதேச நீதிமன்றத்தின் வரலாற்றுத் தீர்ப்பை ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் வரவேற்றுள்ளார். விரிவான செய்திகளை வாசிக்க இந்த இணைப்பை அழுத்துங்கள் : tamiloodagam.com/rohingya-ge…
3
2
172
#BREAKING_NEWS திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி அளித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இருப்பினும், ஒருமுறை நடவடிக்கையாக, நவம்பர் 24ஆம் தேதி கார்த்திகை தீபத் திருநாளன்று தீபத்தூணில் விளக்கேற்ற உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அதேவேளையில், இந்த அனுமதியைத் தீபத்தூணில் விளக்கேற்றும் வழக்கமான உரிமை அல்லது மரபுக்கு உச்சநீதிமன்றம் அளித்த இறுதி அங்கீகாரமாகக் கருதக்கூடாது என்றும் தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், தீபம் ஏற்றுவதற்காக தேவஸ்தானத்தால் அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் மட்டுமே அங்கு செல்ல அனுமதிக்கப்பட வேண்டும் என்றும், பொதுமக்கள் அங்கு செல்ல அனுமதியில்லை என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்யவும், தேவைப்பட்டால் மத்திய தொழில்துறைப் பாதுகாப்புப் படையினரான CISF வீரர்களைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. -#தமிழ்_ஊடகம்
146
இலங்கை வடக்கு, கிழக்கில் நவம்பர் 27 மாவீரர் நாள் நினைவேந்தலுக்கான ஏற்பாடுகள் தொடங்கின. மாவீரர் துயிலும் இல்லங்களைச் சீரமைத்து தூய்மைப்படுத்தும் பணிகளில் பொதுமக்களும் உறவினர்களும் ஈடுபட்டுள்ளனர். விரிவான செய்திகளை வாசிக்க இந்த இணைப்பை அழுத்துங்கள் : tamiloodagam.com/maaveerar-n…
6
11
213
டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகையாளர் அருண் ராமின் Facebook பதிவு இந்தியாவில் முடக்கப்பட்டது ஏன்? @CMOTamilnadu @TVKVijayHQ @imrajmohan @rajakumaari தவெக IT Wing புகாரின் அடிப்படையில்தான் இந்த நடவடிக்கையா? அல்லது META-வின் புதிய தானியங்கி உள்ளடக்கக் கட்டுப்பாட்டு நடைமுறையா? பிரதமர் மோடி தொடர்பான பதிவுகள் மற்றும் தமிழ் ஊடகத்தின் அனுபவங்களையும் இணைத்து ஆராயும் சிறப்புக் கட்டுரை. விரிவாக வாசிக்க இந்த இணைப்பை அழுத்துங்கள் : tamiloodagam.com/arun-ram-fa…
1
105
தமிழகப் பொது நூலகங்களுக்கான நூல் கொள்முதலில் முறைகேடு புகார்கள்! உயர்நீதிமன்ற விசாரணையில் எழுந்துள்ள கேள்விகள் என்ன? நிதித்துறை அதிகாரிகளின் பங்கு என்ன? அப்போதைய நிதித்துறைச் செயலர் உதயசந்திரன் ஐஏஎஸ் விளக்கமளிக்க வேண்டிய கேள்விகள் என்ன? ஆவணங்களின் அடிப்படையில் ஒரு பார்வை. விரிவாக வாசிக்க இந்த இணைப்பை அழுத்துங்கள் :tamiloodagam.com/library-boo…
1
16
1
22
1,047
செத்த வாய மூடிட்டு சும்மா இருங்களேண்டா... இவனுக வேற... 😁 #முன்னாள்அமைச்சர்மூர்த்தி #தமிழ்ஊடகம்
1
204