Layola Mani (@LayolaMani) header
Layola Mani (@LayolaMani) profile picture

I AM A SOCIOLOGIST|தலைவர்,தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்| கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர்|தமிழக வெற்றிக் கழகம்|

Joined November 2022
Photo by Layola Mani (@LayolaMani)Photo by Layola Mani (@LayolaMani)Photo by Layola Mani (@LayolaMani)Photo by Layola Mani (@LayolaMani)Photo by Layola Mani (@LayolaMani)Photo by Layola Mani (@LayolaMani)Photo by Layola Mani (@LayolaMani)Photo by Layola Mani (@LayolaMani)Photo by Layola Mani (@LayolaMani)Photo by Layola Mani (@LayolaMani)
வீட்டுக்கு வீடு விஜய்! தமிழ்நாட்டுக்காக விஜய்!
253
3,307
60
11,325
271,821
முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு ஐயா அவர்களின் பிறந்த நாளை குழந்தைகள் தினமாகக் கொண்டாடும் இந்நன்னாளில், வெள்ளை மனம் கொண்ட தங்கங்கள்! இல்லத்தில் எப்போதும் அன்பை விதைக்கும் செல்வங்கள்! கொஞ்சலோடு துள்ளி விளையாடும் வைரங்கள்! இலக்கை அடையப் போராடும் நட்சத்திரங்கள்! பாசம் மாறாத பெற்றோரின் திறந்த புத்தகங்கள்! குழந்தைகள்தான் வருங்கால நம் நாட்டின் சிங்கங்கள்! மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் ஜோசப் விஜய் அவர்களின் ஆசியுடன், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக, கள்ளம் கபடமற்ற பேச்சாலும்,புன்னகையாலும் நிறைந்து வாழும் பேரன்புச் செல்லங்களுக்கு இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!
2
97
599
8,273
பெரம்பூர் சட்டமன்ற அலுவலகத்தில் நூலகத்தை திறந்து வைத்த முதலமைச்சர் விஜய்க்கு, ''தமிழர் தலைவர்'' புத்தகத்தை பரிசளித்த பாடநூல் கழகத் தலைவர் லயோலா மணி Perambur | MLA Office | Library #Newstamil24x7 #CMVijay #TVK
1
8
35
2,221
#பெரம்பூர்_சட்டமன்ற அலுவலகத்தில் நூலகத்தை திறந்து வைத்த #முதலமைச்சர் #விஜய்க்கு, ''தமிழர் தலைவர்'' புத்தகத்தை பரிசளித்த பாடநூல் கழகத் தலைவர் #லயோலாமணி @LoyolaMani @CMOTamilnadu
5
9
440
TEXTBOOK CHIEF SPEAKS! Textbook Corporation Chief Loyola Mani attended the Urdu Day event at Madras University! Speaking at the function led by Minister B. Viswanathan, he shared how Chief Minister @TVKVijayHQ and the TVK government are standing strong like a wall to protect our state's unity from all bad forces. CC - @LoyolaMani
10
1
33
1,688
இன்று 10.11.2026 (செவ்வாய்க்கிழமை) கடந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில், மாண்புமிகு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் திரு. சீ. ரமேஷ் அவர்கள் பேசுகையில், “முன்பெல்லாம் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் லயோலா மணி அவர்கள் போன் செய்து பேசினால் அன்பாக நலம் விசாரிப்பார். ஆனால், தற்போது எங்கு பார்த்தாலும், ‘எனது துறைக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.58 லட்சம் நிலுவைத் தொகையை எப்போது வழங்குவீர்கள்?’ என்று கேட்கிறார். பல்வேறு துறைகளில் நிலுவைத் தொகைகள் கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் வழங்கப்படாமல் இருந்துள்ளன. கடந்த திமுக ஆட்சிக் காலத்தில், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்திற்கு இந்து சமய அறநிலையத் துறை சார்பில் வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகையும் வழங்கப்படாமல் உள்ளது” என்று சட்டமன்றத்தில் அமைச்சர் ரமேஷ் அவர்கள் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் என்ற முறையில் மாண்புமிகு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் திரு. சீ. ரமேஷ் @RameshOffcl அவர்களை இன்று (10.11.2026, செவ்வாய்க் கிழமை) நேரில் சந்தித்து, செப்டம்பர் 2023 முதல் நவம்பர் 2025 வரை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் 9 வது தளத்தில் இந்து சமய அறநிலையத் துறை அலுவலகம் வாடகைக்கு இருந்துள்ளார்கள். அதன் வாடகை தொகை செலுத்தாமல் நிலுவையில் உள்ளது. அதனை செலுத்துமாறு நேரில் சந்தித்து கோரிக்கை கடிதம் வழங்கினேன். தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய வாடகை நிலுவைத் தொகையை ஓரிரு நாட்களில் வழங்கி விடுவதாக அமைச்சர் ரமேஷ் அவர்கள் உறுதிபட தெரிவித்தார்.
11
110
681
15,028
News Update || நிலுவைத்தொகை வழங்க கோரிக்கை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்திற்கு வழங்க வேண்டிய ரூ.58 லட்சம் நிலுவை தொகையை விரைந்து வழங்குமாறு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷிடம், பாடநூல் கழகத்தலைவர் லயோலா மணி கடிதம் மூலம் கோரிக்கை PendingDues | TamilNaduNews #TamilNadu #TextbookCorporation #HRCEDepartment
10
1
30
2,226
இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துகள் 🙏🏻❤️💛❤️🙏🏻
30
98
1
1,262
10,401
Layola Mani retweeted
மக்கள் மனங்களில் புதிய நம்பிக்கையையும், புத்துணர்வையும், மகிழ்ச்சியையும் மலரச் செய்யும் தீபாவளித் திருநாளில், அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்! இருள் நீங்கி ஒளி பிறக்கும் நாளாகவும், தீமைகள் அழிந்து நன்மைகள் பெருகும் வெற்றித் திருநாளாகவும் கொண்டாடப்படும் தீபாவளிப் பண்டிகையைப் பாதுகாப்போடும், மிகுந்த உற்சாகத்தோடும் கொண்டாடி, அளவற்ற அன்பையும், மகிழ்ச்சியையும் அனைவருடனும் பகிர்ந்து கொள்வோம். இல்லங்கள்தோறும் ஆனந்தம் பெருகி, அனைவரின் வாழ்விலும் புது நம்பிக்கை பிறந்து, உற்சாகம் பொங்கிப் பெருகும் நாளாக இத்திருநாள் அமையட்டும்! #CMJosephVijay
582
5,475
256
20,191
562,969
News Update | “சட்டத்தின் முன் தண்டிக்கப்படுவர்” கோயம்புத்தூர் பெரியார் அறிவுலகத்தில் நடந்திருப்பது திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியில் நடந்த மாபெரும் ஊழல் மோசடி அடுத்த தலைமுறையை உருவாக்கும் நூலகங்களை இந்த லாப வெறிக்கு இரையாக்கியவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தி தவெக அரசு தண்டிக்கும் - தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக தலைவர் லயோலாமணி பதிவு Periyar Arivulagam | Books Scam | 06 November 2026 #LoyolaMani #TVK #NewsTamil24x7
21
17
2
61
2,669
கோயம்புத்தூர் பெரியார் அறிவுலகத்தில் நடந்திருப்பது திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியில் நடந்த மாபெரும் ஊழல் மோசடி. இதற்கான ஆதாரங்கள் குவிந்து கிடக்கின்றன என்கிற தகவல் வருகிறது. அறிவைத் தேடி வரும் எளிய மாணவர்கள், மாணவிகள், ஆசிரியர்கள், வாசகர்கள் ஆகியோரின் நம்பிக்கையைச் சிதைக்கும் பெரும் துரோகம். ஆறு மாத காலத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி திரு.ச. ஜோசப் விஜய் அவர்களின் ஆட்சி ஊழலுக்கு எதிரான வலிமை மிக்க போரை நடத்தி வருகிறது. பெரியாரின் பெயரைப் பயன்படுத்தி ஊழல் செய்த செயல் அதிர்ச்சியைத் தருகிறது. பெரியாரின் பெயரைப் பயன்படுத்த திமுகவிற்கு இனி எந்த அருகதையும் இல்லை. பெரிதும் மதிக்கும் எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்கள் இந்த ஊழலை அம்பலப்படுத்தியதற்காக அவருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்த தலைமுறையை உருவாக்கும் நூலகங்களை இந்த லாப வெறிக்கு இரையாக்கியவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்க தமிழக வெற்றிக் கழக அரசு உறுதிபூண்டுள்ளது. அரசாங்கம் இதனைச் செய்து காட்டும்.
153
560
14
1,655
26,723
Layola Mani retweeted
மண், மொழி, மானம் காத்தவர்களே நாங்கள்தான்; தமிழ் மொழியைக் கண்டுபிடித்ததே நாங்கள்தான்; தமிழ் மொழியியலின் மூளையே நாங்கள்தான்; தமிழ் இலக்கியக் கடலை எங்கள் சட்டைப் பையில் அடக்கி வைத்திருக்கும் அதிகாரம் பெற்றவர்களே நாங்கள்தான்; தமிழே நாங்கள்தான் என்று ஊரை ஏமாற்றுவதற்காக உரக்கக் கூவும் கூட்டமே எப்போதும் ஊழல் கூட்டமாக இருக்கும் என்பதற்கு உதாரணம், ஊழலின் ஊற்றுக்கண்ணான தி.மு.க.தான் என்பது ஊரறிய வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பெரியார் அறிவுலகம் உள்ளிட்ட புதிய நூலகங்களுக்கான நூல் பரிந்துரைக் குழு அமைக்கப்பட்டு, கடந்த தி.மு.க. ஆட்சியில் 5.11.2025 தேதியிட்ட அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. அக்குழுவில் நவீன இலக்கியங்கள் மற்றும் திறனாய்வு நூல்களைப் பரிந்துரைக்கும் குழுவில் இடம்பெற்றிருந்த பேராசிரியர் திரு.பெருமாள் முருகன் அவர்களே, பெரியார் அறிவுலகத்திற்கு நூல் கொள்முதல் செய்யப்பட்டதில் ஊழல் நடந்துள்ளதை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளார். ஊழலின் ஊற்றுக்கண்ணைக் கண்டறிந்துள்ள அவரைப் பாராட்டியே ஆக வேண்டும். நாம் அரசியலுக்கு வந்தபோதே பெரியார் பெயரை வைத்துக் கொள்ளை அடித்து வருவது தி.மு.க.தான் என்று பகிரங்கமாக நமது மாநாட்டிலேயே அறிவித்தோம். ஊழலின் ஊற்றுக்கண்ணே தி.மு.க.தான் என்பதையும் இன்று வரை நாம் மட்டுமே சமரசமின்றிச் சொல்லி வருகிறோம். எப்போதும் தி.மு.க. பற்றி நாம் சொல்வது உண்மைதான் என்பதைத் தி.மு.க.வே மெய்ப்பித்து உள்ளது. அதற்கான இப்போதைய உதாரணமாக, கோவை பெரியார் அறிவுலகத்தில் நடந்துள்ள புத்தகக் கொள்முதல் ஊழலே சாட்சியாகி உள்ளது. தி.மு.க. கொஞ்சம் வித்தியாசமாக ஊழல் செய்து, கோவை பெரியார் அறிவுலகத்தையே ஊழல் உலகமாக மாற்றியிருக்கிறது. ஊழல் இலக்கியம் படைப்பதில் தி.மு.க. உயர் ரகம்தான் என்பதும் தெரிய வந்துள்ளது. பெரியார் அறிவுலகத்தைப் பார்த்துப் பார்த்துக் கட்டியதாகத் தம்பட்டம் அடித்துக்கொண்ட தி.மு.க. தலைமை, இப்படி நூல்கள் கொள்முதல் செய்வதிலும் பார்த்துப் பார்த்து, தரமற்ற நூல்களாகப் பரிந்துரை செய்து ஊழல் செய்துள்ளதை உலகமே பார்த்துக் கைகொட்டிச் சிரிக்கிறது. கடந்த தி.மு.க. ஆட்சியில்தான் எத்தனை எத்தனை ஊழல்கள் நடந்துள்ளன! நகராட்சித் துறையில் ஊழல்! டாஸ்மாக்கில் ஊழல்! டெண்டர்களில் ஊழல்! ஒவ்வொரு துறையிலும் ஊழலோ ஊழல் எனத் தங்களுக்காக ஒரு மிகப் பெரிய ஊழல் உலகத்தையே உருவாக்கியதுதான் தி.மு.க. என்பது அடுத்தடுத்து அம்பலமாகி வருகிறது. இந்த ஊழல்களின் வரிசையில், நம் வீட்டுப் பிள்ளைகள் மற்றும் மாணவர்களின் நலன் சார்ந்த பள்ளிக் கல்வித் துறையில் ஊழல் நடந்துள்ளதும் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டதும் உலகறிந்த செய்தியே. ஆனால், அதன் தொடர்ச்சியாக இப்போது நம் பிள்ளைகளும் மாணவர்களும் பயன்படுத்தக் கட்டப்பட்ட அறிவுலக நூலகம் சார்ந்தும் ஊழலா? தி.மு.க.வின் வரலாறு தெரிந்தவர்களுக்கு இது ஒன்றும் அதிர்ச்சிக்கு உரியதன்று. ஆனால், அனைத்தும் மக்கள் பணம் என்பதால்தான் நம் மனம் பதைபதைக்கிறது. மக்களின் வாழ்வை நேரடியாகப் பாதிக்கின்ற வகையில் தொடர்ந்து ஊழல் செய்வதையே வழக்கமாகக் கொண்டுள்ள தி.மு.க.வைத் தமிழ்நாட்டின் வருங்காலத் தலைமுறையும் மன்னிக்கவே மன்னிக்காது. தமிழ்நாட்டுக் குடும்பங்களும் இனி தி.மு.க.வை அப்புறப்படுத்தாமல் விடமாட்டார்கள். பெரியார் பெயரை வைத்துக் கொள்ளை அடிப்பதையும் ஊழல் செய்வதையும் தமிழை வைத்துக் கொள்ளை அடிப்பதையும் ஊழல் செய்வதையும் ஒரு வரலாறாகவே நிகழ்த்தி வரும் தி.மு.க., மக்கள் மன்றத்தில் இனி நிமிரவே முடியாமல் நிரந்தரமாகத் தலைகுனிந்து நிற்கப் போவது உறுதி.
737
6,096
319
15,659
1,012,635
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தலைவர் தளபதி அவர்களின் அறிவுறுத்தலின் படி, மாண்புமிகு அமைச்சர்,கழகப் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் ஐயா அவர்களின் ஆலோசனைப் படி (01.10.2026, வியாழக்கிழமை), சென்னை சோழிங்கநல்லூர் தொகுதியில், சென்னை புறநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான அருமை அண்ணன் திரு. ECR. சரவணன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் மற்றும் 1,000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினேன். இந்நிகழ்வைச் சிறப்பாக ஏற்பாடு செய்த கழக நிர்வாகிகள், அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்து கொள்கிறேன்.
4
81
391
4,579
மாண்புமிகு முதல்வர் தலைவர் தளபதி அவர்களின் பொற்கரங்களால் பரிசு பெறவுள்ள 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளில் தொகுதிகள் வாரியாக அதிக மதிப்பெண் பெற்ற மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.
29
399
1
2,542
24,262
News Update || அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் முரசு புயல் காரணமாக சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில், பாடநூல் கழகத் தலைமை அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு பாடநூல் & கல்வியியல் பணிகள் கழக தலைவர் லயோலா மணி ஆய்வு மேற்கொண்டார் கட்டிட வளாகத்தைச் சுற்றியுள்ள மரங்கள் ஏதேனும் ஆபத்தான நிலையில் இருந்தால், அது குறித்து உடனடியாக மாநகராட்சி நிர்வாகத்திற்குத் தகவல் தெரிவிக்குமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் LoyolaMani | SafetyInspection #ChennaiRains #CycloneAlert #TamilNaduTextbookCorporation
7
1
19
1,511
கனமழையிலும் களத்தில் இறங்கி ஆய்வு ! சென்னையில் பெய்து வரும் கனமழையைத் தொடர்ந்து, தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் @LoyolaMani அவர்கள் அலுவலக வளாகத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டார். ஆபத்தான நிலையில் உள்ள மரங்கள் குறித்து உடனடியாக மாநகராட்சி நிர்வாகத்திற்குத் தகவல் தெரிவிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். #CMJosephVijay‌
21
41
538
Layola Mani retweeted
Loyola Mani Speech | CM-ஏன் TVK-னு பெயர் வைத்தார்..? - காரணத்தை உடைத்த லயோலா மணி | TVK #LoyolaMani #tvk #cmvijay #newsfeed #Puthiyathalaimuraitv
14
16
4
105
12,259
Layola Mani retweeted
#NEWSUPDATE || பள்ளிகளில் லயோலா மணி நேரில் ஆய்வு.. உறுதியளித்த அமைச்சர் ராஜ்மோகன் #MinisterRajMohan | #LoyolaMani | #PolimerNews
6
30
363
10,069
News Update | உறுதியளித்த அமைச்சர்.. வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு பள்ளி வளாகம், கட்டிடங்கள் & வகுப்பறைகளின் நிலையை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த பாடநூல் கழகத் தலைவர் லயோலா மணி பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை & மதிய உணவின் தரத்தை ஆய்வு செய்து நிறை, குறைகளை மாணவர்களிடம் கேட்டறிந்தேன் - லயோலா மணி தான் மேற்கொண்ட ஆய்வின் அறிக்கையை அமைச்சர் ராஜ்மோகனிடம் வழங்கியதாகவும், கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் என உறுதியளித்ததாகவும் தெரிவிப்பு Government School | Rain Precaution | 31 October 2026 #MinisterRajmohan #LoyolaMani #NewsTamil24x7
6
1
18
3,475
மாணவர்களின் நலன் மீது மிகுந்த அக்கறையுள்ள அன்புள்ளம் கொண்ட மாண்புமிகு முதல்வர் தலைவர் தளபதி அவர்களுக்கும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களுக்கும் மிக்க நன்றி 🙏
News Update | உறுதியளித்த அமைச்சர்.. வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு பள்ளி வளாகம், கட்டிடங்கள் & வகுப்பறைகளின் நிலையை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த பாடநூல் கழகத் தலைவர் லயோலா மணி பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை & மதிய உணவின் தரத்தை ஆய்வு செய்து நிறை, குறைகளை மாணவர்களிடம் கேட்டறிந்தேன் - லயோலா மணி தான் மேற்கொண்ட ஆய்வின் அறிக்கையை அமைச்சர் ராஜ்மோகனிடம் வழங்கியதாகவும், கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் என உறுதியளித்ததாகவும் தெரிவிப்பு Government School | Rain Precaution | 31 October 2026 #MinisterRajmohan #LoyolaMani #NewsTamil24x7
4
34
214
3,273