Arunkumar M retweeted
தவெக அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினரும் முன்வைத்துள்ள குதிரை பேர குற்றச்சாட்டு, அலங்கோல ஆட்சியின் அவலங்களை மறைத்து மக்களை திசைதிருப்பும் செயல் – “கத்தி எடுத்தவனுக்கு கத்தியால் தான் வீழ்ச்சி” என்பது போல தவெகவின் தற்குறித் தனமான நிர்வாகமே அதன் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும்.
தமிழக அரசியலில் முதன்முறையாகக் குதிரை பேரத்தை அறிமுகப்படுத்தி, மைனாரிட்டி ஆட்சியை நடத்தி வரும் தவெக, தற்போது குதிரை பேரம் குறித்துப் பேசுவது, சாத்தான் வேதம் ஓதுவதற்கு இணையானது.
தங்களது திறனற்ற நிர்வாகத்தால் பொதுமக்கள், விவசாயிகள், அரசு ஊழியர்கள், தூய்மைப் பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் வேலைவாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கும் இளைஞர்கள் என அனைத்துத் தரப்பினரும் வாழ்வாதாரத்தை இழந்து நிர்கதியான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதைத் திசைதிருப்புவதற்காகவே இந்த குதிரைபேர நாடகத்தை பார்க்க வேண்டியுள்ளது.
ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மை பலம் இல்லாத தவெக, ‘யானை வரும் பின்னே; மணி ஓசை வரும் முன்னே’ என்பது போல, தவெக தலைவர் வருவார் பின்னே, சோபா வரும் முன்னே என ஒவ்வொரு கட்சியின் தலைமை அலுவலகத்திற்கும் சோபாவை அனுப்பி ஆதரவு கோரியதோடு, தவெகவுக்கு எதிராகப் போட்டியிட்டு மக்களின் ஆதரவுடன் வெற்றி பெற்ற மாற்றுக் கட்சி எம்.எல்.ஏ.க்களை தட்டித்தூக்கி ராஜினாமா செய்யவைத்து, அதன் மூலம் ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டு, தற்போது குதிரை பேரம் குறித்து ஒப்பாரி வைப்பது முரண்பாட்டின் உச்சகட்டமாகும்.
அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு; மின்சாரக் கட்டணக் குளறுபடிகள்; அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல்; அரசின் அனைத்துத் துறைகளையும் தனியார்மயமாக்கும் நடவடிக்கைகள்; அரசு நிர்வாகங்களில் ஆளுங்கட்சியினரின் தலையீடு; எம்.எல்.ஏ.க்கள் தொடங்கி அமைச்சர்கள் வரை அரசுப் பணிகளை ஒதுக்குவதற்காக லஞ்சம் கேட்பதாக எழும் புகார்கள்; பொருளாதார வீழ்ச்சி; அண்டை மாநிலங்களை நோக்கிச் செல்லும் தொழில் முதலீடுகள் எனத் தவெக ஆட்சியின் நிர்வாகச் சீர்கேடுகளால் ஒட்டுமொத்த தமிழகமும் இதுவரை இல்லாத அளவிற்கு பின்னடைவைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது.
மேலும், நாள்தோறும் அதிகரித்து வரும் தொடர் படுகொலைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், குழந்தைகள் மாயமாகும் சம்பவங்கள், சிறைக் கைதிகள் தப்பியோடும் நிகழ்வுகள், போதைப்பொருட்களைப் பதுக்கி வைக்கும் ஆளுங்கட்சியினர் என சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கையும், நிர்வாகத் தோல்விகளையும் திசைதிருப்பி மக்களை ஏமாற்றும் நோக்கில், ஆட்சிக்கு எதிராகக் குதிரை பேரம் நடப்பதாகக் கூறி நீலிக்கண்ணீர் வடிக்க வெட்கமாக இல்லையா?
அடுத்தடுத்து வரவுள்ள இடைத்தேர்தல்களை நேர்மையாகச் சந்திக்கத் திராணியற்று, இடைத்தேர்தல் நடைபெறவுள்ள தொகுதிகளுக்கு மட்டும் இப்போதே சென்று, நலத்திட்ட உதவிகள் என்ற பெயரில் "ஊரான் வீட்டு நெய்யில் உங்கள் வீட்டிற்குச் ஸ்வீட் செய்வதும்", அப்பகுதிகளில் உள்ள கல்லூரிகளை மிரட்டி மாணவர்களை அழைத்து வந்து Road Show நடத்துவதும், கேவலத்திலும் கேவலமான அரசியலாகும்.
எனவே, தனது திறனற்ற நிர்வாகத்தை மறைக்கவும், மக்களைத் திசைதிருப்பவும் மேற்கொள்ளும் அற்பத்தனமான இதுபோன்ற முயற்சிகளைக் கைவிட்டு, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகளில் கவனம் செலுத்தி, ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி பாதுகாப்பை உறுதி செய்யாவிட்டால் மக்களே வெகுண்டெழுந்து இந்த மைனாரிட்டி தவெக அரசுக்கு ஜனநாயக ரீதியில் முடிவுரை எழுதுவார்கள்.
@CMOTamilnadu @TVKVijayHQ
#BiggBossTamil10 Title winner? 🏆🎉🗳️
#BiggBoss #BiggBossTamil #BiggBossTamil10 #BiggBoss10Tamil #VijaySethupathi #BiggBossTamilSeason10 #BiggBossSeason10Tamil
32%Dhanya
5%Jason
50%TTF Vasan
14%Shathiga / LakshmiPriya
22 votes • Final results#Muthazhagi ku iruka arivu kuda other dumb contestants ku ila Or favoritism at peaks
#BiggBossTamil10
#BREAKING | கொளத்தூர் த.வெ.க. எம்.எல்.ஏ. வி.எஸ். பாபு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நேற்றுடன் 50 நாட்கள் நிறைவு!
செப்டம்பர் 9-ல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வி.எஸ். பாபுவின் உடல்நிலை குறித்து மர்மமாக உள்ளது!
செப்டம்பர் 22-க்குப் பிறகு வி.எஸ். பாபுவின் உடல்நிலை குறித்த மருத்துவமனை அறிக்கை வெளியாகவில்லை!
வெளிப்படையான நிர்வாகம் தருவதாக சொன்ன விஜய்யின் ஆட்சியில் எம்.எல்.ஏ.-வின் நிலை கூட வெளிப்படையாக இல்லை
- மக்கள் ஆதங்கம்!
#VSBabu | #Tvkfails | #KalaignarSeithigal
Weekend Scorer One & Only #Karishma 💥💥💥🔥🔥🔥
#BiggBoss #BiggBossTamil #BiggBossTamil10 #BiggBoss10Tamil #VijaySethupathi
பந்தல் போட வக்கில்லை இதல பேச்சு பாரு பண்ணையார் தனமா
இதுல்ல இந்த கட்சி பேரியக்கமா
சீக்கிரம் போய் கடைசி காரிய கமிட்டி நடத்துங்க
@niranjan2428 சகோ பாராட்டுக்கள் 👍
#RahulGandhi @RahulGandhi @TNCCITSMDept @antoponniah_off @manickamtagore #Congress #INC
Replying to @niranjan2428
மழையின் காரணமாக கூட்டம் ரத்து செய்யப்படுவதாக தெளிவாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தூக்கத்தில் ஏதாவது கேட்டுவிட்டு ஏதாவது எழுதுவது இதுதான் உங்கள் தர்மமா?
Arunkumar M retweeted
தேனி மாவட்டச் சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பி ஓடியதாக வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன.
வழக்கறிஞர் நியமனத்தில் ஊழல், அரசுக்கு நீதிமன்ற குட்டுகள் என ஏற்கனவே சட்டத்துறை சந்தி சிரிக்க,
மின்வெட்டு, மின் கொள்முதலில் ஊழல் என மின்துறை Fuse பிடுங்கிய நிலையில் இருக்க,
தற்போது சிறைத்துறையும் அந்த List-ல் சேர்ந்துவிட்டது.
மூன்று துறைக்கும் அமைச்சர் ஒருவர் தான் என்பது தான் இதில் Highlight!
எப்போது பார்த்தாலும் “மைக்” வெறி பிடித்து அலைந்து, தூக்கத்தில் கூட “அண்ணாதிமுக புராணம்” பாடிக் கொண்டிருக்கும் @CTR_Nirmalkumar-ன் நிர்வாக லட்சணத்தைக் கண்டு ஊரே கைகொட்டிச் சிரிக்கிறது. வெட்கக்கேடு!
ஏற்கனவே புழல் சிறையில் இருந்து 2 கைதிகள் தப்பி ஓடிய போதே தமிழக சிறைகளின் பாதுகாப்பை உறுதி செய்திருக்க வேண்டும். அதற்கெல்லாம் இந்த அரசுக்கோ, அமைச்சருக்கோ நேரம் இல்லை போலும்!
அது சரி, புழல் ஜெயிலுக்கு Inspection எல்லாம் போனீர்களே @CMOTamilNadu- நீங்கள் ஆய்வு நடத்தியுமா சிறைத்துறை இப்படி இருக்கிறது? நீங்கள் நடத்தியது ஆய்வு தானா? அல்லது, சில பத்திரிகைகளில் வந்த செய்திகளைப் போல ஜோதிடப் பரிகாரமா?
கைதிகள் காவலர்களை தாக்கிவிட்டு தப்பி ஓடும் நிலையில் தான் சிறைச்சாலையே இருக்கிறது என்றால், சாமானிய மக்கள் செல்லும் சாலைகளிலே இந்த திக்குத் தெரியாத ஆட்சியில் எப்படி பாதுகாப்பு இருக்கும்?
அதிகரிக்கும் கொலைகள்,
பெண்களுக்கு எதிரான குற்றங்கள்,
ஆளுங்கட்சி நிர்வாகியின் போதைப்பொருள் புழக்கம்,
தொடர்ந்து மாயமாகும் குழந்தைகள்,
சிறையில் இருந்து கைதிகள் தப்பியோட்டம்,
இவற்றை எல்லாம் தொகுத்து இன்றைய ஆச்சரியக்குறி ஆட்சியாளர்கள் “150 நாள் வெற்றி மலர்” வெளியிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை!
தப்பியோடிய கைதிகளை பிடித்து மீண்டும் சிறையில் அடைப்பதுடன், தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கில் ஒழுங்காக கவனம் செலுத்த வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial
Arunkumar M retweeted
Breaking Bad தொடர்ந்து, தமிழ்நாட்டில் Prison Break-உம் தொடங்கிவிட்டது!
ஜாமினில் வெளிவரும் குற்றவாளிகளைத்தான் கண்காணிப்பதில்லை என்று நினைத்தேன்.
சிறைக்குள் இருக்கும் கைதிகளையும் தப்பிக்க விடும் இலட்சணத்தில்தான் இந்த ஆட்சி இருக்கிறது.
புழல் சிறையில் இருந்து 2 கைதிகள் தப்பி ஓடிய அதிர்ச்சியில் இருந்து நாம் மீள்வதற்குள், தேனி மாவட்டச் சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பியுள்ளனர்.
ஒரேயடியாக இத்தனை கைதிகள் தப்பிப்பது 1995-க்குப் பிறகு இதுதான் முதல்முறை என்கிறார்கள். பாதுகாப்பு ஏற்பாடுகளும், கண்காணிப்பு வசதிகளும் மேம்பட்ட 2026-இல் இப்படி நடப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
வெளியில் இருக்கும் குற்றவாளிகள் சுதந்திரமாகக் குற்றங்களைப் புரிகிறார்கள். உள்ளே இருக்கும் கைதிகளும் தைரியமாகத் தப்பிச் செல்கிறார்கள்.
மொத்தத்தில், ஒன்றுக்கும் உதவாத good for nothing அரசாக இந்த மூடர்கூடத் த.வெ.க. அரசு இருக்கிறது. இவர்கள் மக்களைக் காக்கப் போவதில்லை. மக்களே அவர்களைக் காத்துக் கொள்ள வேண்டிய அவல நிலைக்குத் தமிழ்நாடு சென்றுவிட்டது.
இப்போது ஆசிகவுக்கும் வெட்கமில்லை;
தவெகவுக்கும் வெட்கமில்லை.
@thirumaofficial @VCKofficial_ @vckitwingoffi @VanniTamizhVCK
@TVKVijayHQ @TVKPartyHQ #ACK #TVK
தற்குறிகளின் தலைமையும் தற்குறியா?
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு பெரம்பூர் தொகுதியில் #தவெக #TVK தலைவர் திரு.விஜய் @TVKVijayHQ போட்டியிட திட்டமிட்டுள்ளதாகவும், அந்த தொகுதியிலிருந்து தனது பரப்புரையை தொடங்கவிருப்பதாகவும், ஊடகங்களில் செய்தி வெளியானது. அதற்காக பெரம்பூர் தொகுதியில் விஜய் பரப்புரை வாகனத்தில் சென்று மக்களை சந்திக்கவும், முக்கிய சாலை சந்திப்பு ஒன்றில் 3000 பேர் வரை கூட்டி தெருமுனை பரப்புரை கூட்டம் நடத்துவதற்கும் அனுமதி கேட்டு தவெக சார்பில் தேர்தல் அலுவலரிடம் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
கடந்த திசம்பர் மாதம் இந்திய தேர்தல் ஆணையருக்கு கடிதம் ஒன்றை எழுதினார் நடிகர் விஜய். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக தேர்தல் ஆணையம் நடத்தும் அனைத்துக் கட்சி ஆலோசனை கூட்டங்களுக்கு தவெக நிர்வாகிகளையும் அழைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார். சட்டமன்ற தேர்தலை நடத்துவது செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் அலுவலகம் கொண்டுள்ள 'தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி'. மாநிலத்தின் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களை நடத்துவது கோயம்பேடு எதிரே அலுவலகம் கொண்டுள்ள 'தமிழ்நாடு தேர்தல் ஆணையர்'. நடிகர் விஜயோ தமிழ்நாடு தேர்தல் ஆணையரின் அலுவலக முகவரியை குறிப்பிட்டு, அவருக்கும் அந்த கடிதத்தை அனுப்பியிருந்தார் என்பது தான் வேடிக்கை செய்தி.
இப்போது அதே போன்ற வேடிக்கையான, ஆனால் திட்டமிட்டு விஷமத்தனமான நடவடிக்கையில் நடிகர் விஜய் ஈடுபட்டுள்ளார்.
தனது பெரம்பூர் தெருமுனை தேர்தல் பரப்புரை கூட்டத்துக்கான அனுமதியை திமுகவின் 'காபந்து அரசு' தாமதித்து, மறுத்துவிட்டது என்று நேற்று விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். 'ஜனநாயகத்தின் மீது பாசிசத் தாக்குதல்' என்று அவருக்கு தெரிந்த 'பாயாசத்தை' அவரது தற்குறி தொண்டர்களுக்கு கிண்டியுள்ளார். அவர்களும் தங்கள் தலைவரின் பரப்புரையை திமுக அரசு திட்டமிட்டு தடுத்து வருகிறது. எங்களைப் பார்த்து திமுக அரசு பயந்துவிட்டது என்று இப்போதே வெற்றி மிதப்பில் இருக்கின்றனர்.
'காபந்து அரசு' என்றால் என்னவென்று தவெக தொண்டர்களுக்கு தெரியுமா? மார்ச் 15ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 'தேர்தல் நடத்தை விதிகள்' (Model Code of Conduct) அமலுக்கு வந்துவிட்டன. இதன் பிறகு மாநில அரசினால் எந்தவொரு உத்தரவையோ, நடவடிக்கையோ எடுக்க முடியாது. முழுவதும் இந்திய தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் ஆட்சி நிர்வாகம் மற்றும் காவல்துறை சென்றுவிடும். தலைமை செயலாளர் உள்பட IAS & IPS அதிகாரிகள் தொடங்கி அனைத்து நிலை அரசு அதிகாரிகளும் தேர்தல் ஆணையத்தின் உத்தரவை தான் நடைமுறைப்படுத்த வேண்டும்.
நேற்று மாலை காஞ்சிபுரம், தஞ்சாவூர், பெரம்பலூர் மற்றும் தென்காசி மாவட்டங்களின் காவல் கண்காணிப்பாளர்களை இடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை நடைமுறைபடுத்தும்படி இந்திய தேர்தல் ஆணையத்திடமிருந்து தமிழ்நாடு தலைமை செயலாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதுதான் 'காபந்து அரசு' செயல்பாட்டில் இருக்கும்போது இருக்கும் நடைமுறை. தேர்தல் ஆணையத்தின் உத்தரவிலோ, தேர்தல் நிர்வாக நடைமுறைகளிலோ நடிகர் விஜய் சொல்வது போன்று திமுகவால் தலையிட முடியாது. அப்படி தலையிடுவதை ஒன்றிய பாஜக அரசின் கூலிப்படையாக செயல்படும் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அமைதியாக வேடிக்கை பார்ப்பாரா? மறந்துகூட இந்திய தேர்தல் ஆணையத்தின் மீதோ அதன் அதிகாரிகள் மீதோ எந்தவொரு குற்றச்சாட்டையும் விமர்சனத்தையும் நடிகர் விஜய் வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூரு ஐபிஎல் கிரிக்கெட் கொண்டாட்டத்தின் போது நெரிசலில் மக்கள் இறந்ததையடுத்து, பொது கூட்டங்களை நடத்துவதற்கு உரிய நெறிமுறைகளை வகுத்து தனி சட்டம் கொண்டு வந்தது கர்நாடக அரசு. அரசியல் கட்சி கூட்டங்களை நடத்துவதற்கு உரிய வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும் என்று கோரி தவெக நீதிமன்றத்தை அணுகியது. கர்நாடக அரசு போன்று தமிழ்நாடு அரசும் 5000 பேருக்கும் அதிகமாக கூடும் நிகழ்வுகளுக்கு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை (SOP) வகுத்தது. கரூரில் தனது பரப்புரை கூட்டத்தில் 41 உயிர்கள் பலியான போது, பனையூர் பங்களாவுக்குள் ஓடி பதுங்கிக் கொண்டார் நடிகர் விஜய். அடுத்தடுத்து மக்களை சந்திக்க திராணி இல்லாத நடிகர் விஜய் அதை மறைப்பதற்கும், தற்குறி தொண்டர்களை திசைதிருப்புவதற்கும், நீதிமன்ற வழிகாட்டுதல்படி தமிழ்நாடு அரசு கொண்டுவந்த நடைமுறைகள் மீது குற்றச்சாட்டை வைத்தார். தனது கட்சி கோரிய வழிகாட்டு நடைமுறைகளுக்கு எதிராகவே மீண்டும் உயர் நீதிமன்றம் சென்றார் நடிகர் விஜய். இந்த வழக்கு பிப். 26ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது, 'தமிழக அரசின் வழிகாட்டு விதிகளில் என்ன தவறு? என்று தவெக தரப்பினருக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இதெல்லாம் தவெக தொண்டர்களுக்கு தெரியுமா?
சென்னை மாவட்டத்தின் தேர்தல் அதிகாரி திரு.குமரகுருபரன் IAS அவர்கள் நேற்று காலை ஊடகச் சந்திப்பின்போது, 'அரசியல் கட்சியினர் தங்கள் பொது கூட்டங்கள், பரப்புரை நிகழ்வுகளுக்கு 'Suvidha' இணையதளம் அல்லது மொபைல் செயலி மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும், அதிகாரிகளை நேரில் சந்தித்து முறையிடுவது நடைமுறை அல்ல. குறிப்பிட்ட நிகழ்வு தொடர்பாக காவல்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட அரசு துறையினர் பிறப்பித்த தடையில்லா சான்று (NOC) உள்ளிட்ட ஆவணங்கள் சரியாக இருந்தால் 3-4 மணிநேரத்துக்குள் ஒப்புதல் வழங்கப்படுகிறது. அனுமதி மறுக்கப்பட்டால் அதற்குரிய காரணங்களும் அதே தளத்தில் தரப்படுகிறது' என்று தெளிவாக விளக்கினார். ஆனால் நடிகர் விஜயோ தம்மீது உள்ள தவற்றை மறைக்க, வழக்கம் போல தற்குறி கூட்டத்தை ஏமாற்ற இல்லாத புது கதையை அவிழ்த்துவிட்டார்.
தேர்தல் ஆணைய நடைமுறைக்கு திமுகவை குற்றஞ்சாட்டி நடிகர் விஜய் நடத்திய நாடகம் ஒரு நாள் கூட தாக்குப்பிடிக்கவில்லை.
பெரம்பூர் பரப்புரை நிகழ்வுக்கு தடை ஏற்படுத்த அந்த சாலையில் அரசால் பள்ளம் தோண்டப்பட்டது என்ற விஜயின் குற்றச்சாட்டை மறுத்துள்ள மாவட்ட தேர்தல் அதிகாரி, 'சென்னை குடிநீர் வாரியத்தால் குடிநீர் குழாயில் ஏற்பட்ட திடீர் உடைப்பை சரிசெய்ய மிகக் குறுகிய பரப்பளவில் பழுதுபார்க்கும் பணி' மட்டுமே நடைபெற்றது, வேறு எந்த புதிய பணிகளும் நடக்கவில்லை என்று வீடியோ வெளியிட்டுள்ளார்.
மேலும், பெரம்பூரில் 3000 பேர் கூடும் பரப்புரை கூட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதன் காரணத்தை விரிவாக குறிப்பிட்டு தவெக மாவட்ட செயலாளருக்கு பெரம்பூர் தொகுதியின் தேர்தல் நடத்தும் அதிகாரி அளித்த பதிலின் நகலும் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த நகலில், தவெக தரப்பில் விஜய் பரப்புரைக்கு அனுமதி கோரப்பட்ட முல்லை நகர் சந்திப்பு என்பது சிறிய அளவு பரப்புரைக்கான இடம் என்று தேர்தல் ஆணையத்தால் வகைப்படுத்தப்பட்டுள்ளது. எனவே அந்த இடத்தில் 3000 பேர் கூடுவதற்கு அனுமதி தர இயலாது' என்று அப்பகுதி காவல்துறை அளித்த அறிக்கையின்படி தான் தேர்தல் அதிகாரி அனுமதி மறுத்துள்ளார். மாற்று இடம் ஏதேனும் தந்தால் அவற்றை பரிசீலிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு தொகுதியில் எந்தெந்த இடங்களில் அரசியல் கட்சிகளின் நட்சத்திர பேச்சாளர்கள் வாகன பரப்புரை செய்யலாம், எந்த இடத்தில் ஊர்வலமாக செல்லலாம், தெருமுனை பரப்புரை கூட்டங்களை நடத்தலாம், அந்த இடங்களில் எவ்வளவு பேர் அனுமதிக்கப்படுவர் போன்றவை தேர்தல் ஆணையத்தால் முன்கூட்டியே திட்டமிட்டு அறிவிக்கப்படும். அதனடிப்படையில் தான் அரசியல் கட்சிகள் பரப்புரையை திட்டமிடுவர். ஆனால் தவெக தரப்போ தங்கள் தலைவர் விஜயின் இயலாமையை மறைப்பதற்கு திமுக மீதும், அதிகாரிகள் மீதும் கட்டுக்கதையை அவிழ்த்துவிட்டுள்ளனர்.
கரூர் மாவட்ட கண்காணிப்பாளர் திரு.ஜோஸ் தங்கையா அவர்களை மாற்ற வேண்டும் என்று மார்ச் 16 மதியம் பாஜக அண்ணாமலை பேட்டியளிக்க, அன்று மாலையே கரூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களின் காவல் கண்காணிப்பாளர்களை மாற்றியது தேர்தல் ஆணையம். பாஜக போன்று பொய்யான அரசியல் குற்றச்சாட்டுகளுக்கு அதிகாரிகளை மாற்ற வேண்டும் என்று தவெக @TVKPartyHQ அழுத்தம் கொடுக்கிறது.
தவெக தொண்டர்கள் தற்குறிகளாக இருக்கிறார்கள் என்று பலரும் விமர்சனங்களை வைத்தனர், ஆனால் தலைமையே தற்குறியாக இருப்பது அம்பலமாகியுள்ளது. அரசியலுக்காகவும்
சுய மகிழ்ச்சிக்காகவும் ரசிக கும்பலை தற்குறிகளாக வழிநடத்துவது தமிழ்நாட்டுக்கும் மக்களுக்கும் பேராபத்தாகும்.
- வன்னி அரசு
துணைப்பொதுச்செயலாளர்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
28.3.2026
பத்திரிகையாளர் பிரியவதனா மறைவுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.
தந்தி தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வரும் பத்திரிகையாளர் பிரியவதனா பத்திரிகைத்துறையின் மீது மிகுந்த ஆர்வமுள்ள இளம் பத்திரிகையாளர். இதற்கு முன்னர் வேந்தர் தொலைக்காட்சியிலும் செய்திவாசிப்பாளராக பணியாற்றியுள்ளார்.
நேற்று (21.10.26) பிரியவதனா அகால மரணமடைந்த தகவல் பத்திரிகையாளர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரியவதனா அவர்களை பிரிந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் சக பத்திரிகையாளர்களுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
Based on my posts and interactions analyse my character and name a Tamil movie characters who resembles me the most @grok
Muthazhagi next week :-
Ini avinash Jason eh nambi 10 paisa ku use illa pesama TTF ku Thangachiya join pannira vendiyathu thaan. #BiggBossTamil10
Proper elevation for Trio 💎 💥🔥
#TTFVasan #Dhanya #Karishma 🤗
#BiggBoss #BiggBossTamil #BiggBossTamil10 #BiggBoss10Tamil #VijaySethupathi
Arunkumar M retweeted
அரசு பொறுப்பில் இருக்கும் ஒருவர் இப்படி பேசலாமா?
இப்படி பேசத்தான் @TNDIPRNEWS @imrajmohan இவருக்கு பல லட்சம் அரசு பணம் சம்பளமாக போகிறதா?
அல்லது இவர்தான் அமைச்சர் ராஜ்மோகனை கைக்குள் வைத்திருக்கிறாரா?
அல்லது இவர்தான் DIPRகே தலைமை அதிகாரியா?
DIPRல் அதிகாரிகள் இவரிடதான் கைகட்டி அடிமையாக வேலை பார்க்கிறீர்களா?
RTI கேட்ட தகவலை கொடுக்க வக்கு இல்ல
இதுல வெளிப்படையாக செயல்படுவோம்ன்னு டைலாக் வேற 😂!















