Ramesh (@Rameshkrperd) header
Ramesh (@Rameshkrperd) profile picture

தமிழன். Tamil is my identity. Humanity must prevail! Belongs to the Dravidian Stock. #StopHindiImposition

ஈரோடு-தமிழ்நாடு-இந்தியஒன்றியம்
Joined May 2015
Photo by Ramesh (@Rameshkrperd)Photo by Ramesh (@Rameshkrperd)Photo by Ramesh (@Rameshkrperd)Photo by Ramesh (@Rameshkrperd)Photo by Ramesh (@Rameshkrperd)Photo by Ramesh (@Rameshkrperd)Photo by Ramesh (@Rameshkrperd)Photo by Ramesh (@Rameshkrperd)Photo by Ramesh (@Rameshkrperd)Photo by Ramesh (@Rameshkrperd)
Replying to @manickamtagore
@manickamtagore ப்ரோ,மிக மிக தப்பு பயன்படுத்த கூடாத, #பெண்களை குறிப்பாக அக்காமார்களை #அவதூரக சித்தரித்து நீங்கள் பேசியது மிகவும் வன்மையாக #கண்டிக்கதக்கது. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவருக்கு #உகுந்த_பேச்சு_அல்ல. பொதுவெளியில் #மன்னிப்பு_கேளுங்கள் பொறுப்பாக பேச கற்றுக்கொள்ளுங்கள்.
4
38
110
4,358
Ramesh retweeted
On this day in 1949, India adopted a remarkably progressive Constitution that guaranteed equality and laid the foundation for social justice in a society riddled with centuries of inequalities. Babasaheb Dr. B.R. Ambedkar envisioned our Constitution as a living document, evolving with the changing needs and aspirations of society. After 75 years of our constitutional journey, a comprehensive review is imperative to make India truly federal. It was with this objective that our #DravidianModel Government constituted the High-Level Committee on Union-State Relations headed by retired Supreme Court Justice Kurian Joseph. Though the present rulers have chosen to disband the Committee, the DMK’s crusade for State autonomy and genuine federalism will continue. On this #ConstitutionDay, let us resolve to protect the progressive ideals of our Constitution and further strengthen its federal character.
100
838
16
2,334
42,467
As the DGP was not available, the IG(General)received the representation and assured that the DGP would look into the matter and that appropriate action would be taken. The LOP thereafter met the press and explained the representation.@mkstalin @Udhaystalin @arivalayam @DMKITwing
17
37
1,277
Ramesh retweeted
நீ என்ன ஒழுங்கான்னு எம்.எல்.ஏ. திருப்பி கேப்பார்னு விஜய்க்கு பயம் -எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி #TVK #TVKVijay‌ #KallakurichiMLA #SPARK
101
1,755
122
4,756
321,993
Ramesh retweeted
உங்க அண்ணன், உங்க தாய்மாமன் என டயலாக் பேசும் முதலமைச்சருக்கு நான்கு மாதங்களுக்கு முன்பே மாவட்ட ஆட்சியர் புகார் கொடுத்தது தெரியுமா, தெரியாதா? தேசிய மகளிர் ஆணையமும், உயர்நீதிமன்ற நீதிபதியும் தலையிட்ட பின்னர்தான் ஒரு மாவட்ட ஆட்சியரின் புகாரே பதியப்படும் என்றால் தமிழ்நாட்டில் நடப்பது ஆட்சியா, இல்லை வேறெதுவுமா? போடாத கமெண்டுக்காக, பேராசிரியரின் முகவரியைத் தேடிக் கண்டுபிடித்து அதிகாலையில் கடத்திச் செல்லத் தெரிந்த காவல்துறைக்கு, முதலமைச்சர் விஜய் அவர்களின் பொடனிக்குப் பின்னாலேயே இருந்துகொண்டு தவறிழைத்த MLA-வைக் கைது செய்யத் தெரியவில்லையா? கூட்டுப் பாலியல் வன்கொடுமைப் புகாரில் சிக்கிய ஸ்ரீவைகுண்டம் MLA மீதும், மைதானத்தில் போதை மாத்திரை நசுக்கிய அமைச்சர் மீதும் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் த.வெ.க.வில் மற்றவர்களுக்கு பயம் இருந்திருக்கும். மாறாக, என்ன செய்தாலும் நாம் காப்பாற்றப்படுவோம், புகார் அளித்த பெண்களைத்தான் கட்சியில் இருந்து நீக்குவார்கள் என்ற மோசமான முன்னுதாரணங்களை முதலமைச்சர் விஜய் அனுமதித்துவிட்டார். அந்த தைரியத்தில்தான் ஒட்டுமொத்த மாவட்டத்தின் தலைமைப் பொறுப்பை வகிக்கும் அதிகாரியிடமே எல்லை மீறியிருக்கிறார் த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர். 'த.வெ.க. பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும்' என்று சொல்லி ஆட்சிக்கு வந்தார்கள். இன்று, த.வெ.க.வினரின் தொல்லையில் இருந்து பாதுகாப்பு தேடிப் பெண்கள் ஓடும் நிலைக்குத் தமிழ்நாடு தள்ளப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது. இந்த வழக்கிலாவது உறுதியான நடவடிக்கை எடுத்தால்தான் இப்படியான சம்பவங்களை எதிர்காலத்தில் தடுக்க முடியும். நான்கு மாதகாலமாக ஒரு குற்றவாளியைப் பாதுகாக்க எல்லா வழிகளையும் பயன்படுத்திய மாநில அரசு - இப்படிப்பட்ட MLA-வை அழைத்து “தீபாவளி பரிசு” கொடுத்த முதலமைச்சரின் தலைமையில் உள்ள மாநில அரசு இனி இந்த வழக்கை விசாரிப்பது சரியாக இருக்காது. எனவே, மாநில அரசு தாமாகவே இந்த வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும். சட்டமன்ற உறுப்பினரின் ஒழுங்கீனம் குறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்த பின்பும் நடவடிக்கை எடுக்காமல் மூடிமறைத்த தலைமைச் செயலாளர் மீதும், மாவட்ட ஆட்சியருக்கு அழுத்தம் தந்த அமைச்சர்கள் மீதும் நடவடிக்கை பாய வேண்டும். கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும். #TVKFails #Arrest_ArulVignesh
393
4,079
135
9,140
265,326
Documentation of GTS in TN. Page 41 to 46 உயரமான குன்றில் தர்கா, சர்வே தூணும், உயரம் குறைந்த குன்றில் தீபத்தூணும் இருப்பதை படம் காட்டுகிறது. இத்தோடு கலவர தீபத்தின் சோலி முடிஞ்சது. கையிலிருந்த இந்த ஆவணத்தை SC-யில் ஏன் தாக்கல் செய்யவில்லை? தவெக அரசு பதில் சொல்லவேண்டும். ia903103.us.archive.org/20/i…
16
128
1
255
5,098
தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ், மாவட்ட ஆட்சியரிடம் ஒழுங்கீனமாக நடந்துகொண்டதாகச் செய்திகள் வெளியானபோதே, இதுகுறித்து விசாரித்து, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தேன். அன்று என்னையும், பிற அரசியல் தலைவர்களையும், தி.மு.க.வையும் கேள்வி கேட்டவர்களும், பெண்களின் பாதுகாப்பு குறித்துப் பேசுவதைக்கூட அரசியல் செய்வதாகக் குற்றம்சாட்டியவர்களும் இன்று என்ன சொல்லப் போகிறார்கள்? ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினருக்கு எதிராகத் துணிச்சலுடன் காவல்துறையில் புகார் அளித்து, பணியிடங்களில் அத்துமீறல்களைச் சகித்துக்கொண்டிருக்கும் அத்தனை பெண்களுக்கும் முன்னுதாரணமாகத் திகழும் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரை மனதாரப் பாராட்டுகிறேன். இத்தனை நாட்களாகியும் தனது கட்சி சட்டமன்ற உறுப்பினர் மீது நடவடிக்கை எடுக்காத முதலமைச்சர் @TVKVijayHQ , இனியாவது நடவடிக்கை எடுப்பாரா? அல்லது பெண்களின் பாதுகாப்பைவிட, இத்தகைய கீழ்த்தரமான குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள தனது கட்சிக்காரரைப் பாதுகாப்பதுதான் முக்கியம் என்ற நிலைப்பாட்டிலேயே தொடர்வாரா? தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம். இப்போதாவது நடவடிக்கை எடுக்கப்படுமா?
152
1,299
44
3,283
56,977
NOT EVEN A WOMAN DISTRICT COLLECTOR IS SAFE UNDER CM VIJAY’S TVK RULE! 🚨 When a sitting District Collector, the administrative head of an entire district, is allegedly subjected to obscene messages, intimidation, and even house trespass by a ruling TVK MLA, what message does that send to every woman in Tamil Nadu? If a District Collector has to fight for basic dignity and safety inside the system, no ordinary woman can trust the hollow slogans of this TVK regime. Article by @the_hindu 🔗: thehindu.com/news/national/t…
14
250
8
468
8,027
கள்ளக்குறிச்சி எம் எல் ஏ பெண் கலெக்டருக்கு வக்கிர மெசேஜ் அனுப்பிய விசயத்தை விமர்சித்தவர்களை நோக்கி “வாட்ஸ் அப் வதந்தியை” வைத்து பேசுவீர்களா? அதற்கு என்ன ஆதாரம்? எனக் கேட்டார் அமைச்சர் நிர்மல் குமார். தற்போது கலெக்டரே புகார் அளித்து இருக்கிறார். தன்னைப் பற்றிய வாட்ஸ் அப் வதந்தியை அவரே உண்மை என்று நம்பி கலெக்டர் புகார் அளித்து இருக்கிறார் போலும்!!
6
222
3
457
6,382
தமிழ்நாட்டில் ஒரு மாவட்ட ஆட்சியருக்கே பாதுகாப்பில்லாத அவலத்தை ஏற்படுத்திய டம்மி பதவி விலக வேண்டும்! ஒரு மாவட்ட ஆட்சியருக்கே பாதுகாப்பு இல்லாத இந்தத் 'டம்மி' தவெக ஆட்சியில், சாமானியப் பெண்களின் பாதுகாப்பு எப்படி இருக்கும்? அதிகார மமதையும், மௌன நாடகமும் சேர்ந்து தமிழ்நாட்டின் நிர்வாகத்தையும் மரியாதையையும் சீரழித்துக் கொண்டிருக்கின்றன! இதற்கு முழு முதல் காரணம், சொந்தக் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் மீதும் நிர்வாகிகள் மீதும் தொடர்ச்சியாகப் பெண்கள் பாதுகாப்பு மற்றும் அத்துமீறல் குற்றச்சாட்டுகள் எழும்போதும், தன் பதவி மற்றும் நாற்காலியை காப்பாற்றிக் கொள்ள வாய்மூடி மௌனம் சாதித்த தவெக கட்சியின் தலைவரும், டம்மி முதல்வருமான விஜய் தான். தமிழ்நாட்டிற்கும் தமிழ்நாட்டுப் பெண்களுக்கும் ஏற்பட்ட இந்த அவமானத்திற்கு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும்!
31
485
25
851
10,424
ஜால்ரா போடுறதுல ரெண்டு பேருக்கு நடுவுல தான் போட்டியே
26
870
18
3,479
108,888
Ramesh retweeted
கழகத் தலைவர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களை சமூக நீதிக்கான அகில இந்திய கூட்டமைப்பி'ன் ஒருங்கிணைப்பாளர் மூத்த வழக்கறிஞர் பி. வில்சன். எம்.பி., அவர்கள் தலைமையில் அகில இந்திய சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புஒருங்கிணைப்புக் குழு நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களை, இன்று (23.11.2026) காலை 11 மணியளவில், அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் , 'சமூக நீதிக்கான அகில இந்திய கூட்டமைப்பி'ன் (All India Federation for Social Justice) ஒருங்கிணைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினரும், மூத்த வழக்கறிஞருமான பி. வில்சன் அவர்கள் தலைமையில், “அகில இந்திய சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு ஒருங்கிணைப்புக் குழு”வின் (All India Caste Census Coordination Committee) பிரதிநிதிகள் குழு, நேரில் சந்தித்து, ஓபிசி (OBC) பிரிவினருக்கான சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு கோரிக்கைக்கும் - 28.11.2026 அன்று ராம்லீலா மைதானத்தில் நடைபெறவுள்ள போராட்டத்திற்கும் ஆதரவு கோரி, கோரிக்கை மனு அளித்தனர். கழகத் தலைவர் அவர்களை நேரல் சந்தித்த ஒருங்கிணைப்புக் குழுவினர் விவரம் பின்வருமாறு : பேராசிரியர் சூரஜ் மண்டல், டெல்லி பல்கலைக்கழகம் (பி. பி. மண்டல் அவர்களின் பேரன்) திரு. ஸ்ரீனிவாஸ் கௌட், முன்னாள் அமைச்சர், தெலங்கானா திரு. ஜே. என்ஜீரப்பா – கர்நாடக மாநில OBC கூட்டமைப்பு. திரு. ரத்ன சபாபதி – இதர பிற்படுத்தப்பட்டோர் உரிமைகளுக்கான கட்சி (Party for the Rights of OBCs). திரு. உமேஷ் கொர்ரம் – சகல் OBC மஹாமோர்ச்சா, நாக்பூர். முனைவர் ஜி. கிரண் குமார் – அகில இந்திய OBC மாணவர் சங்கத்தின் தேசியத் தலைவர். திரு. சந்தோஷ் யாதவ் – வழக்கறிஞர், லக்னோ உயர்நீதிமன்றம்; சமூக சேத்னா அறக்கட்டளை (NYAS) மாநிலச் செயலாளர். திரு. மகேந்திர குமார் மண்டல் – வழக்கறிஞர், லக்னோ உயர்நீதிமன்றம்; சமூக சேத்னா அறக்கட்டளை (NYAS) பொதுச் செயலாளர். திரு. சஷாங்க் ரத்னூ – உச்சநீதிமன்ற வழக்கறிஞர். திரு. ராகேஷ் தத்தா – அகில இந்திய OBC மாணவர் சங்கம். திரு. ரஜினிகாந்த் கவுட் – அகில இந்திய OBC மாணவர் சங்கம். திரு. பி. ஜெயந்த் யாதவ் – அகில இந்திய OBC மாணவர் சங்கம்.
4
114
4
312
9,913
Ramesh retweeted
கண்ணீர் விடும் விவசாயிகளைக் கண்டும் காணாமல் இருக்கும் த.வெ.க. அரசு கைவிட நினைத்தாலும், தி.மு.க. அமைதியாக இருக்காது. வேளாண் பெருங்குடி மக்களின் குரலைக் கேட்டு அவர்களது கண்ணீரைத் துடைப்பதற்கான தீர்வுகளைப் பெற்றுத்தர, வரும் 25-ஆம் தேதி முதல் டெல்டா மாவட்டங்களுக்கு வருகிறது, “காவிரி விவசாயிகள் கருத்து கேட்புக் குழு”. விவசாயத் தோழர்களே… நம்பிக்கையுடன் வாருங்கள். உங்களது கோரிக்கைகளை அரசிடம் வலுவாக எடுத்து வைத்து, நீதி கேட்போம்! #DeltaFarmers #CauveryIssue #MetturDam #Mekedatu
#JUSTIN தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை அருகே தண்ணீரின்றி கருகும் நெற்பயிர்கள் ஏக்கருக்கு 45 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்தது வீணாகும் நிலையில், உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை #Thanjavur #Ammapettai #PaddyFields #News18Tamilnadu | News18Tamil.com
111
829
26
1,574
46,068
Ramesh retweeted
மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அவர்கள் கடந்த 1.11.2026 அன்று தமிழ்நாடு நாளை முன்னிட்டு, எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழ்நாடு இயல் இசை நாடகமன்ற தலைவர் பொறுப்பிற்கு ரூ. 5 கோடி ஒருவர் கொடுக்க முன்வந்ததாகவும், அவரை தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தின் தலைவர் திரு. லயோலா மணி அவர்கள் தன்னிடம் அழைத்து வந்ததாகவும், தனது உரையில் பேசியிருந்தார். இதனைத் தொடர்ந்து தி.மு.க. சார்பில் சட்டத்துறை இணைச் செயலாளரும், எழும்பூர் சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான இ. பரந்தாமன் அவர்கள் 2.11.2026 அன்று லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் அவர்களுக்கு புகார் மனு அளித்திருந்தார். அதன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க ஏதுவாக லஞ்ச ஒழிப்பு சட்டம் 1988ன்படி வழக்குத் தொடர அனுமதி வேண்டி இன்று (23.11.2026) திரு. இ. பரந்தாமன் அவர்கள் மேதகு தமிழ்நாடு ஆளுநர் அவர்களுக்கும், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் அவர்களுக்கும் தனித்தனியே கடிதம் எழுதியுள்ளார். அதன் விவரம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. கடிதத்தின் தமிழாக்கம் வருமாறு : தேதி: 23.11.2026 பெறுநர்: மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், ராஜ்பவன், சென்னை - 600 022. மதிப்பிற்குரிய மாண்புமிகு ஆளுநர் அவர்களே, பொருள்: பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை மாண்புமிகு அமைச்சர் திரு. A. ராஜ்மோகன் அவர்களுக்கு எதிராக, ஊழல் தடுப்புச் சட்டம், 1988-ன் பிரிவுகள் 8 மற்றும் 12 (மற்றும் மாற்றுப் பிரிவாக பிரிவு 7A) ஆகியவற்றின் கீழான குற்றங்களை — பாரதிய நியாய சன்ஹிதா, 2023-ன் பிரிவுகள் 45, 46, 49 மற்றும் 61(2) ஆகியவற்றுடன் சேர்த்து வாசித்து — விசாரிப்பதற்கும் புலனாய்வு செய்வதற்கும் ஊழல் தடுப்புச் சட்டம், 1988-ன் பிரிவு 17A-ன் கீழ் முன் அனுமதி கோருதல் — இந்த மனுவை தகுதிவாய்ந்த அதிகாரியிடம் சமர்ப்பித்தல், சுதந்திரமான பரிசீலனையை உறுதி செய்தல் மற்றும் இவ்விவகாரத்தில் முடிவெடுக்கும் எந்தவொரு நிலையிலிருந்தும் அமைச்சரை விலக்கி வைத்தல் தொடர்பானது. பார்வை: 1. 02.11.2026 தேதியிட்ட எனது புகார், லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு இயக்குநர் (DVAC), சென்னை அவர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டது. 2. ஊழல் தடுப்புச் சட்டம் வழக்குகளுக்கான மாண்புமிகு சிறப்பு நீதிமன்றம், சென்னையில் 2026-ஆம் ஆண்டின் குற்றவியல் இதர மனு எண் (Crl. M.P. No. of 2026)-ஆகத் தாக்கல் செய்யத் தயாரிக்கப்பட்ட பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, 2023-ன் பிரிவு 223-ன் கீழான புகார். நான் ஒரு வழக்கறிஞர் மற்றும் தமிழ்நாடு சட்டமன்றத்தின் முன்னாள் உறுப்பினர் ஆவேன். தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் தலைவர் பதவிக்கு நியமனம் செய்வது தொடர்பாக ரூ.5 கோடி வழங்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து, பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை மாண்புமிகு அமைச்சர் திரு. A. ராஜ்மோகன் அவர்கள் பகிரங்கமாகத் தெரிவித்த கருத்துகளால் வெளிப்பட்டுள்ள தீவிரமான குற்றச்சாட்டுகள் மீது சுதந்திரமான விசாரணை மற்றும் புலனாய்வு நடத்துவதற்குத் தகுந்த தலையீட்டையும், ஊழல் தடுப்புச் சட்டம், 1988-ன் (இனி "ஊழல் தடுப்புச் சட்டம்" எனக் குறிப்பிடப்படும்) பிரிவு 17A-ன் கீழ் முன் அனுமதியையும் கோரி, பொது நலன் கருதி இந்த மனுவை மாண்புமிகு ஆளுநர் அவர்களின் முன்பாகப் பணிவுடன் சமர்ப்பிக்கிறேன். எண். A1105, அட்லாண்டிக் சீப்ரோஸ் அபார்ட்மென்ட், மாண்டியத் சாலை (ரெட் கிராஸ் சாலை), எழும்பூர், சென்னை - 600 008. கைபேசி: 99406 66269. 1. 01.11.2026 அன்று, சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியக அரங்கில் நடைபெற்ற தமிழ்நாடு நாள் கொண்டாட்டங்களின் போது, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் ஊடக உறுப்பினர்கள் முன்னிலையில், பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை மாண்புமிகு அமைச்சர் திரு. A. ராஜ்மோகன் அவர்கள், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் தலைவர் பதவியைப் பெறுவதற்கு ஈடாக ஒரு நபர் தனக்கு ரூ.5 கோடி தொகை வழங்க முன்வந்ததாகப் பகிரங்கமாகத் தெரிவித்தார் என்பதைப் பணிவுடன் சமர்ப்பிக்கிறேன். 2. தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் திரு. A. லயோலா மணி மூலம் இந்த முன்மொழிவு தெரிவிக்கப்பட்டதாகவும், தனது பதிலையும் அதே இடைத்தரகர் மூலமாகவே தெரிவித்ததாகவும் அமைச்சர் மேலும் கூறினார். இந்தக் கூறப்படும் முன்மொழிவு குறித்து திரு. லயோலா மணிக்கு மட்டுமே தெரியும் என்றும், அதுவரை வேறு யாரிடமும் இந்த விவகாரத்தைத் தாம் வெளியிடவில்லை என்றும் அவர் குறிப்பாகக் கூறினார். இருப்பினும், அந்த முன்மொழிவைச் செய்ததாகக் கூறப்படும் நபரின் அடையாளத்தை வெளியிடுவதை அவர் வேண்டுமென்றே தவிர்த்தார். 3. 05.10.2026 அன்றோ அல்லது அதை ஒட்டிய நாட்களிலோ தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் தலைவர் பதவி வேறொரு நபருக்கு வழங்கப்பட்டது என்பது சுட்டிக்காட்டத்தக்கதாகும். 4. அமைச்சரின் கருத்துகள் காணொலியாகப் பதிவு செய்யப்பட்டு, ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டுச் செய்தியாக வெளியிடப்பட்டன; மேலும் அன்றே பொதுவெளியிலும் கிடைக்கச் செய்யப்பட்டன. கூறப்படும் இந்த முன்மொழிவு, அதில் சம்பந்தப்பட்ட நபர்கள், அந்த முன்மொழிவு தெரிவிக்கப்பட்ட இடைத்தரகர் மற்றும் அந்த நியமனத்தைச் சூழ்ந்திருந்த சூழ்நிலைகள் குறித்துச் சுதந்திரமான புலனாய்வு நடத்துவதற்கு அவசியமான முக்கிய ஆவணமாக/சான்றாக அக்கருத்துகள் அமைந்துள்ளன. 5. மேலே கூறப்பட்ட பகிரங்கக் கருத்துகள், ஓர் அரசு ஊழியருக்கு முறையற்ற பலனை வழங்குவதாகவோ அல்லது வாக்குறுதி அளிப்பதாகவோ உள்ள குற்றங்கள் நடந்திருப்பதை முதல் பார்வையிலேயே வெளிப்படுத்துகின்றன; இது ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 8-ஐ ஈர்க்கிறது என்பதை நான் சமர்ப்பிக்கிறேன். 6. அந்த முன்மொழிவையும் அமைச்சரின் பதிலையும் தெரிவித்ததாகக் கூறப்படும் இடைத்தரகரான திரு. A. லயோலா மணியின் பங்கு, ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 12 மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா, 2023-ன் தொடர்புடைய விதிகளின் அடிப்படையில் — சம்பந்தப்பட்ட குற்றங்களின் கூறுகள் நிறுவப்படும் இடங்களில் பிரிவு 61(2)-ன் கீழான கிரிமினல் சதித்திட்டம் உட்பட — புலனாய்வு செய்யப்பட வேண்டும். மேலும், பொதுக் கடமையை முறையற்ற முறையில் ஆற்றுவதற்குத் தூண்டுவதற்காகவோ அல்லது எளிதாக்குவதற்காகவோ எந்தவொரு நபராவது முறையற்ற பலனைக் கோரியது அல்லது ஏற்றுக்கொண்டது தொடர்பாக வெளிப்படும் ஆதாரங்களைப் பொறுத்து, ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 7A-வும் ஆய்வு செய்யப்பட வேண்டியிருக்கலாம். 7. ரூ.5 கோடி வழங்க முன்வந்ததாகக் கூறப்படும் நபரின் அடையாளம், அந்த முன்மொழிவின் துல்லியமான தன்மை, பரிமாறப்பட்ட தகவல்கள், இடைத்தரகரின் பங்கு மற்றும் வேறு எந்த நபர்களின் ஈடுபாடு ஆகியவற்றை நேர்மையான, சுதந்திரமான மற்றும் விரிவான புலனாய்வு மூலமாக மட்டுமே நிறுவ முடியும். 8. குற்றச்சாட்டுகளின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, இது தொடர்பாக முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்து தகுந்த புலனாய்வு நடத்துமாறு கோரி, 02.11.2026 தேதியிட்ட எழுத்துப்பூர்வப் புகாரை சென்னை லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு இயக்குநரிடம் நான் சமர்ப்பித்தேன் என்பதை மரியாதையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இருப்பினும், எனக்குத் தெரிந்த வரையில், எந்தவொரு முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்படவில்லை; மேலும் புகார் மீது எடுக்கப்பட்ட எந்த நடவடிக்கையும் எனக்குத் தெரிவிக்கப்படவில்லை. 9. இத்தகைய சூழ்நிலையில், சட்டத்திற்கு ஏற்ப உரிய சட்ட நடவடிக்கை கோரி, ஊழல் தடுப்புச் சட்டம் வழக்குகளுக்கான மாண்புமிகு சிறப்பு நீதிமன்றம், சென்னையை அணுக உத்தேசித்து, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, 2023-ன் பிரிவு 223-ன் கீழ் ஒரு புகாரையும் நான் தயார் செய்துள்ளேன். மாண்புமிகு ஆளுநர் அவர்களின் கனிவான பரிசீலனைக்காக அப்புகாரின் நகல் இணைக்கப்பட்டுள்ளது. 10. குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள நபர் தமிழ்நாடு அரசில் பதவி வகிக்கும் அமைச்சராக உள்ளார் என்பதைக் கருத்தில் கொண்டு, அவருக்கு எதிராக விசாரணை அல்லது புலனாய்வு மேற்கொள்வதற்கு முன்பு, சட்ட விதி பொருந்தும் அளவிற்கு ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 17A-ன் கீழ் முன் அனுமதி பெறுவதற்கான தேவை பரிசீலிக்கப்பட வேண்டும் என்பதை மரியாதையுடன் சமர்ப்பிக்கிறேன். 11. முறையற்ற பலனை வழங்குதல், வாக்குறுதி அளித்தல் மற்றும் எளிதாக்குதல் தொடர்பான குற்றச்சாட்டுகள், அமைச்சர் தமது அதிகாரப்பூர்வப் பணிகளை ஆற்றுவதில் செய்த எந்தவொரு பரிந்துரையுடனோ அல்லது எடுத்த முடிவிற்கு உட்பட்டோ அவசியம் தொடர்புடையவை அல்ல என்பதே எனது குறிப்பிட்ட வாதமாக இருந்தபோதிலும், நடைமுறை அல்லது சட்டப்பூர்வத் தேவை எதுவும் விடுபடாமல் இருப்பதை உறுதி செய்ய மிகுந்த முன்னெச்சரிக்கையாக இந்த மனுவைச் சமர்ப்பிக்கிறேன். 12. எனவே, பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை மாண்புமிகு அமைச்சர் திரு. A. ராஜ்மோகன் மற்றும் இதில் தொடர்புடையதாகக் கண்டறியப்படக்கூடிய பிற நபர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் மீது தகுந்த விசாரணை மற்றும் புலனாய்வு நடத்துவதற்கு, சட்டப்படி தேவைப்படக்கூடிய வகையில் ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 17A-ன் கீழ் முன் அனுமதியை பரிசீலித்து வழங்குமாறு, இந்த விவகாரத்தைத் தகுதிவாய்ந்த அதிகாரியின் முன்பாகக் கொண்டு செல்லுமாறு மாண்புமிகு ஆளுநர் அவர்களைப் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். 13. அமைச்சரைப் பொறுத்தவரை, இந்த விவகாரத்தில் தகுதிவாய்ந்த அதிகாரியாக விளங்கும் மாண்புமிகு ஆளுநர் அவர்களின் முன்பாக இந்த மனு சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும், சட்டத்திற்கு ஏற்பத் தேவையான ஆலோசனை, பரிசீலனை மற்றும் தகுந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட வேண்டும் என்றும் மிகவும் பணிவுடன் சமர்ப்பிக்கிறேன். 14. இந்தப் புகாரின் அடிப்படைப் பொருளாக உள்ள நிகழ்வுகளில் அமைச்சர் தாமே நேரடியாகப் பங்கேற்றவர் மற்றும் முக்கிய சாட்சியாக உள்ளார் என்பதை மாண்புமிகு ஆளுநர் அவர்களின் கவனத்திற்குக் குறிப்பாகக் கொண்டு வருகிறேன். அவரது சொந்தப் பகிரங்கக் கருத்தின் அடிப்படையிலேயே இந்தக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன; மேலும் தொடர்புடைய உண்மைகள், தகவல்கள் மற்றும் முன்மொழிவு செய்ததாகக் கூறப்படும் நபரின் அடையாளம் ஆகியவை தமக்கு மட்டுமே தெரிந்தவை என்று கூறப்படுகிறது. அதைவிட முக்கியமாக, செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை அமைச்சரின் துறையின் கீழ் வருகிறது. 01.11.2026 தேதியிட்ட அமைச்சரின் உரையின் அதிகாரப்பூர்வ காணொலிப் பதிவுகள் மற்றும் அசல் பதிவுகள் அத்துறையிடம் இருப்பதாகத் தெரிகிறது; அவை தற்போதைய விவகாரத்தில் கணிசமான மற்றும் முக்கியமான உறுதிப்படுத்தும் சான்றுகளாக அமைகின்றன. 15. இத்தகைய சூழ்நிலையில், இந்த மனு மீதான பரிசீலனை, செயலாக்கம், ஆய்வு அல்லது முடிவெடுத்தல், முன் அனுமதி வழங்குதல், அல்லது தொடர்புடைய சான்றுகளைப் பாதுகாத்தல் மற்றும் சமர்ப்பித்தல் ஆகியவற்றில் அமைச்சர் எந்தவொரு கட்டுப்பாட்டையோ, செல்வாக்கையோ அல்லது அதிகாரத்தையோ செலுத்த அனுமதிப்பது, நலன் முரண்பாடு குறித்த தீவிரமான அச்சத்தை ஏற்படுத்தும்; மேலும் நடவடிக்கையின் நேர்மை மற்றும் சுதந்திரத்தைச் சமரசம் செய்யக்கூடும். 16. எனவே, அமைச்சர் திரு. A. ராஜ்மோகன் அவர்களை இவ்விவகாரம் தொடர்பான எந்தவொரு பரிசீலனை, ஆலோசனை, நிர்வாகச் செயலாக்கம் அல்லது முடிவெடுத்தலில் இருந்தும் குறிப்பாக விலக்கி வைக்குமாறும், அவரது தரப்பிலிருந்து எந்தவொரு தலையீடும், செல்வாக்கும் அல்லது பங்கேற்பும் இன்றி, தகுதிவாய்ந்த அரசியலமைப்பு மற்றும் சட்டப்பூர்வ அதிகாரிகளால் இவ்விவகாரம் சுதந்திரமாகக் கையாளப்பட வேண்டும் என்றும் மாண்புமிகு ஆளுநர் அவர்களைப் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். 17. செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறையால் பராமரிக்கப்படும் தொடர்புடைய அதிகாரப்பூர்வ ஆவணங்கள் மற்றும் மின்னணுச் சான்றுகள், குற்றச்சாட்டுகளில் சம்பந்தப்பட்ட நபரான அமைச்சரின் கட்டுப்பாட்டிற்கோ செல்வாக்கிற்கோ உட்படுத்தப்படாமல், சுதந்திரமாகப் பாதுகாக்கப்படுவதையும் பராமரிக்கப்படுவதையும் உறுதி செய்யத் தகுந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட வேண்டும் என்றும் மேலும் கேட்டுக்கொள்கிறேன். ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 17A(1)-ன் இரண்டாவது வரம்பு விதியின்படி, முன் அனுமதி கோரிக்கை மீதான முடிவைத் தெரிவிக்க மூன்று மாத கால அவகாசம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது; எழுத்துப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட வேண்டிய காரணங்களுக்காக மேலும் ஒரு மாத காலத்திற்கு அதை நீட்டிக்கலாம் என்பதைப் பணிவுடன் சமர்ப்பிக்கிறேன். 18. குற்றச்சாட்டுகளின் தன்மை மற்றும் காலப்போக்கில் முக்கியமான மின்னணுச் சான்றுகள் காணாமல் போகவோ, மாற்றப்படவோ அல்லது அணுக முடியாததாகவோ மாறும் வாய்ப்பைக் கருத்தில் கொண்டு, சட்டப்பூர்வ காலத்திற்குள் இவ்விவகாரம் விரைவாகப் பரிசீலிக்கப்படுவதை உறுதி செய்யுமாறு மாண்புமிகு ஆளுநர் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன். அசல் அதிகாரப்பூர்வக் காணொலிப் பதிவு முக்கியமான சான்றாகும் என்பதையும், சம்பந்தப்பட்ட அமைச்சரின் ஈடுபாடோ கட்டுப்பாடோ இன்றி, உடனடியாகவும் சுதந்திரமாகவும் அதன் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்பதையும் நான் குறிப்பாக வலியுறுத்துகிறேன். மேலே கூறப்பட்ட உண்மைகள் மற்றும் சூழ்நிலைகளின் அடிப்படையில், மாண்புமிகு ஆளுநர் அவர்கள் பின்வருவனவற்றைச் செய்யுமாறு மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்: 1. இந்த மனுவைப் பதிவில் எடுத்துக்கொண்டு, பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை மாண்புமிகு அமைச்சர் திரு. A. ராஜ்மோகன் தொடர்பாக, ஊழல் தடுப்புச் சட்டம், 1988-ன் பிரிவு 17A-ன் கீழ் முன் அனுமதி பெறுவதற்கான பரிசீலனைக்காகத் தகுதிவாய்ந்த அதிகாரியின் முன்பாக இதைக் கொண்டு செல்ல வேண்டும். 2. குற்றச்சாட்டுகள் மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து நபர்களின் ஈடுபாடு குறித்து லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத் துறை தகுந்த விசாரணை மற்றும் புலனாய்வு நடத்துவதற்கு ஏதுவாக, சட்டப்படி பொருந்தக்கூடிய வகையில் ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 17A-ன் கீழ் தேவையான முன் அனுமதியைப் பரிசீலித்து வழங்க வேண்டும். 3. நடவடிக்கைகளின் சுதந்திரம், நடுநிலைமை மற்றும் நேர்மையைப் பாதுகாக்கும் பொருட்டு, நிகழ்வுகள் மற்றும் குற்றச்சாட்டுகளுடன் நேரடியாகத் தொடர்புடைய நபரான அமைச்சர், இவ்விவகாரத்தில் எந்தவொரு பரிசீலனை, ஆலோசனை, நிர்வாகச் செயலாக்கம் அல்லது முடிவெடுத்தலில் இருந்தும் விலக்கி வைக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். 4. 01.11.2026 தேதியிட்ட அமைச்சரின் உரையின் அசல் மற்றும் திருத்தப்படாத காணொலிப் பதிவுடன், தொடர்புடைய அனைத்து மின்னணுத் தகவல்கள், அழைப்புப் பதிவுகள் மற்றும் பிற ஆவண மற்றும் டிஜிட்டல் சான்றுகளையும் — குறிப்பாகச் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறையால் பராமரிக்கப்படுபவற்றை — உடனடியாகப் பாதுகாத்துப் பராமரிக்கத் தகுந்த சுதந்திரமான அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். 5. இவ்விவகாரம் சுதந்திரமாகவும் விரைவாகவும் பரிசீலிக்கப்படுவதையும், முன் அனுமதி குறித்த முடிவு ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 17A-ன் கீழ் நிர்ணயிக்கப்பட்ட சட்டப்பூர்வ காலத்திற்குள் தெரிவிக்கப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும். 6. ரூ.5 கோடி வழங்கப்பட்டதாகக் கூறப்படும் முன்மொழிவு, அந்த முன்மொழிவைச் செய்த நபரின் அடையாளம், இடைத்தரகரின் பங்கு மற்றும் வேறு எந்த நபர்களின் ஈடுபாடு ஆகியவை குறித்து, சட்டத்திற்கு முற்றிலும் இணங்க நடுநிலையான புலனாய்வு நடத்தத் தேவையான மேலதிக உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும் அல்லது தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். 7. அமைச்சரின் சொந்தப் பகிரங்கக் கருத்துகளால் வெளிப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள், பொது நிர்வாகத்தின் நேர்மை மற்றும் பொதுப் பதவிகளின் புனிதத்தன்மை தொடர்பானவை என்பதை நான் சமர்ப்பிக்கிறேன். எனவே, பரந்த பொது நலன் கருதி இவ்விவகாரம் குறித்துச் சுதந்திரமான புலனாய்வு அவசியமாகும். மாண்புமிகு ஆளுநர் அவர்கள் தலையிட்டு, சட்டப்பூர்வ மற்றும் அரசியலமைப்புத் தேவைகளுக்கு ஏற்ப இவ்விவகாரம் நேர்மையாகவும், சுதந்திரமாகவும் கையாளப்படுவதை உறுதி செய்வார்கள் என்று நம்புகிறேன். மாண்புமிகு ஆளுநர் அவர்களுக்கு நன்றி, தங்கள் உண்மையுள்ள, 23/11/26 (இ. பரந்தாமன்) இணைப்புகள்: 1. 02.11.2026 தேதியிட்ட புகாரின் நகல், லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு இயக்குநரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. 2. ஊழல் தடுப்புச் சட்டம் வழக்குகளுக்கான மாண்புமிகு சிறப்பு நீதிமன்றம், சென்னையில் 2026-ஆம் ஆண்டின் குற்றவியல் இதர மனு எண் (Crl. M.P. No. of 2026)-ஆகத் தாக்கல் செய்ய உத்தேசித்துள்ள பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, 2023-ன் பிரிவு 223-ன் கீழான புகாரின் நகல். 3. 01.11.2026 தேதியிட்ட அமைச்சரின் உரையின் பொதுவெளியில் கிடைக்கும் காணொலிப் பதிவின் நகல் / இணைப்பு. நகல்: 1. தலைமைச் செயலாளர், தமிழ்நாடு அரசு, தலைமைச் செயலகம், புனித ஜார்ஜ் கோட்டை, சென்னை - 600 009 — தகவல் மற்றும் சட்டத்திற்கு ஏற்பத் தேவையான நடவடிக்கைக்காக. 2. இயக்குநர், லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத் துறை, எண். 293, M.K.N. சாலை, ஆலந்தூர், சென்னை - 600 016. 3. திருவாளர்கள் ஏ. சரவணன், புகார்தாரரின் வழக்கறிஞர், எண். 102/7, திருப்தி அபார்ட்மென்ட்ஸ், 1-வது தளம், பி பிளாக், மார்ஷல்ஸ் சாலை, எழும்பூர், சென்னை - 600 008.
54
489
11
1,332
122,707
Ramesh retweeted
திராவிட இயக்கத்தின் அறிவுப் பெட்டகம் முரசொலி மாறன் அவர்களின் நினைவு நாள்: தலைவர் கலைஞரால் ஆளாக்கப்பட்டு, அவரது அன்பையும் அசைக்க முடியாத நம்பிக்கையையும் பெற்றவர் முரசொலி மாறன் அவர்கள். கலைஞரின் கண்ணசைவுக்கேற்பத் தலைநகர் டெல்லியில் கழகத்தின் அரசியல் நகர்வுகளைத் திறம்பட மேற்கொண்டு அவரது மனசாட்சி என்று பெயரெடுத்தவர். ஒன்றிய அமைச்சராக இந்தியாவுக்கே பெருமை தேடித் தந்த அறிவுக்கூர்மைக்குச் சொந்தக்காரர். அத்தானாக என் மேல் அன்பு காட்டி, என் மிசா சிறைவாசத்தின்போதும் உடனிருந்து, அரசியல் பயணத்திலும் ஆலோசனைகளைக் கூறி நெறிப்படுத்தியவர் மாறன் அவர்கள். மாநில உரிமைகளை மீட்டெடுக்க நாம் அமைத்த உயர்மட்டக் குழு கலைக்கப்பட்டு இருக்கும் இன்றைய அரசியல் சூழலில், மாறன் அவர்கள் பேருழைப்பைச் செலுத்தி எழுதிய மாநில சுயாட்சி எனும் நூலை நாம் அனைவரும் மீள்வாசிப்புக்கு உட்படுத்த வேண்டும். தாம் ஆற்றிய உரைகளாலும், இயற்றிய நூல்களாலும், தீட்டிய வரலாறுகளாலும், இறுதி வரை இறுகப் பற்றிக் கொண்ட கொள்கைகளாலும் நம் இயக்கத்தின் அறிவுப் பெட்டகமாகத் திகழ்ந்த முரசொலி மாறன் அவர்களின் பங்களிப்புகளை நன்றியோடு இந்நாளில் நினைவு கூர்கிறேன்.
85
998
10
3,393
106,505
சீராய்வு மனு என்பது நீதிமன்றம் சார்ந்த நடவடிக்கை. மக்கள் மன்றத்தில் நம் நடவடிக்கை என்ன? தமிழகமே ஒன்றுபட்டு நிற்கவேண்டிய பிரச்சனை இது. இன்று மாலை 4 மணி- அண்ணாசாலை சிம்சன் அருகில் தவறாமல் பங்கேற்பீர்.
49
125
5
306
4,621
Ramesh retweeted
தந்தை பெரியாரின் எழுத்துகள், தமிழ்நாட்டின் சமூக வரலாற்றையே மாற்றிய பகுத்தறிவுச் சிந்தனைகள்! வரலாற்றை மறப்பதும் மறுப்பதும், நாம் போராடிப் பெற்ற உரிமைகளை இழக்கக் காரணமாகிவிடும்! ஒரு நூற்றாண்டின் சிந்தனைகளை அடுத்த தலைமுறைக்கு அறிமுகப்படுத்தும் வகையில், தந்தை பெரியாரின் #குடிஅரசு இதழின் முழுத் தொகுப்பை வெளியிட்டுள்ள அருமைச் சகோதரர் கோவை இராமகிருட்டிணன் அவர்களுக்கும் த.பெ.தி.க. இயக்கத் தோழர்களுக்கும் வாழ்த்துகள்! @tpdk2020 @kuratpdk
74
847
10
1,744
44,556
காங்கேயம் நகர்மன்ற தலைவர் சூர்ய பிரகாஷ் தற்குறி ஆனார் என்ற பத்திரிகைகள் தலைப்பு செய்தியாக போடுகின்றன‌‌. இந்த சூர்ய பிரகாஷ் பரம்பரை கட்சாக்காரனா என்றால் இல்லை.. இவன் தந்தை அதிமுக கிளைச்செயலாளராம். காங்கேயம் நகர்மன்றத்தை குறிவைத்து உள்ளாட்சி தேர்தலுக்கு முன் திமுகவில் நுழைந்து சீட்டு வாங்கி விடுகிறான்.நகர்மன்ற உறுப்பினரும் ஆகி விடுகிறான். காங்கயத்தில் 18 வார்டுகள் உள்ள நிலையில், திமுக 10, காங்கிரஸ் 1, அதிமுக 4, சுயேச்சை 3 வார்டுகளை கைப்பற்றின. இந்நிலையில், ஒரு வார்டில் மட்டும் வென்ற காங்கிரஸ் கட்சிக்கு, திமுக கூட்டணி சார்பில் நகராட்சித் தலைவர் பதவி ஒதுக்கப்பட்டது. அக்கட்சி சார்பில் 10-வது வார்டு உறுப்பினராக வெற்றிபெற்ற ஹேமலதா, நகராட்சித் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். காங்கயம் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சித் தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் நடந்தது. இதில் ஹேமலதா வேட்பு மனுதாக்கல் செய்த நிலையில், அவரை எதிர்த்து திமுகவை சேர்ந்த 1-வது வார்டு உறுப்பினர் சூர்யபிரகாஷ் வேட்பு மனுதாக்கல் செய்தார். இதில், ஹேமலதாவை உறுப்பினர்கள் முன்மொழியாததால், அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. சூர்யபிரகாஷ் போட்டியின்றி தலைவராக தேர்வு செய்யப்பட்டார். பணத்தை வைத்து கவுன்சிலர்களை விலை பேசி தலைமை அறிவித்த வேட்பாளருக்கு எதிராக வென்றவன்தான் சூரிய பிரகாஷ். தமிழ்நாடு முழுவதும் கூட்டணிக்கு ஒதுக்கப்பட்ட பதவிகளில் வென்றவர்கள் உடனே ராஜினாமா செய்ய வேண்டும் என்று தலைவர் அறிவித்தும் ஏன் இவன் ராஜினாமா செய்யவில்லை? ராஜினாமா செய்யாவிட்டால் கட்சியிலிருந்து ஏன் நீக்கவில்லை.. பணம் இருந்தால் அறிவாலயம் வரை விலைக்கு வாங்கலாம் என்ற பழைய நிலைதான் சூரிய பிரகாஷ் போன்றவர்கள் பதவிக்கு வர முடிகிறது. வந்தான் வந்த வேலையை முடித்தான். ஆட்சி மாறியது ஆளும் கட்சியில் சேர்ந்து பணம் சம்பாதிக்க போய்விட்டான். கட்சிக்கு விசுவாசமானவர்களை வளர்க்காமல் கட்சியை வளர்க்க முடியாது. காசு வாங்கினால் கருங்காலிகளை தான் வளர்க்க முடியும். இனியாவது அறிவாலயமும், மாவட்ட நிர்வாகங்களும் திருந்துமா? @mkstalin @Udhaystalin
12
68
2
268
13,188
#WATCH | "போலி சாமியாரை பார்த்திருப்போம்.. ஆனால் போலி பெரியாரிஸ்ட், போலி முதலமைச்சரை இப்போதுதான் பார்க்கிறோம்.." -பெரியாரின் குடி அரசு இதழ் முழுத் தொகுப்பு நூல் வெளியிட்டு நிகழ்ச்சியில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு #SunNews | #UdhayanidhiStalin | #PeriyarBook
47
409
12
1,258
53,325
Ramesh retweeted
#LIVE: குடிஅரசு இதழ் முழுத் தொகுப்பு வெளியீட்டு விழாவில் சிறப்புரை youtube.com/live/C5N9714OjAE…
40
467
8
1,007
55,282