Vivek Gananathan (@VGananathan) header
Vivek Gananathan (@VGananathan) profile picture

தமிழக வெற்றிக் கழகம்

Joined March 2018
Photo by Vivek Gananathan (@VGananathan)Photo by Vivek Gananathan (@VGananathan)Photo by Vivek Gananathan (@VGananathan)Photo by Vivek Gananathan (@VGananathan)Photo by Vivek Gananathan (@VGananathan)Photo by Vivek Gananathan (@VGananathan)Photo by Vivek Gananathan (@VGananathan)Photo by Vivek Gananathan (@VGananathan)Photo by Vivek Gananathan (@VGananathan)Photo by Vivek Gananathan (@VGananathan)
தமிழ்நாட்டில் சூப்பர் ஸ்டார் பீடம் வணிக வெற்றிகளுக்கான சினிமா அந்தஸ்த்து மட்டுமல்ல. மாறாக அது தமிழ்ச்சுயமரியாதை அரசியலின் தவிர்க்க முடியாத பிரதான அங்கம். MGR-க்காக உருவாக்கப்பட்ட அந்நாற்காலி இன்று விஜய்யிடம் வந்து சேர்ந்திருப்பதின் 100 ஆண்டு வரலாற்றை பேசுகிறது இக்கட்டுரை.
3
18
5
83
45,165
Vivek Gananathan retweeted
முதலமைச்சர் விஜயுடன் பேராசிரியர் கலையரசன் சந்தித்த புகைப்படம் வெளியானது #CMVijay #ProfessorKalaiyarasan #News18Tamilnadu | News18Tamil.com
36
210
4,361
Vivek Gananathan retweeted
CM Vijay | Breaking News | CM-ஐ சந்தித்த பேராசிரியர் கலையரசன்.. வெளியான புகைப்படம்! காவல்துறை தன்னை அலைக்கழித்ததாக கூறிய |நிலையில் கலையரசனை | அழைத்துப் பேசிய முதல்வர் #cmvijay #BreakingNews #News18TamilNadu #TamilNews
1
6
57
4,643
Happy lunch after meeting Annan @CMOTamilnadu ❤️
Breaking News | முதல்வர் விஜயுடன் MIDS பேராசிரியர் கலையரசன் சந்திப்பு #BreakingNews #News18TamilNadu #TamilNews
28
242
19
1,258
76,218
Vivek Gananathan retweeted
Breaking News | முதல்வர் விஜயுடன் MIDS பேராசிரியர் கலையரசன் சந்திப்பு #BreakingNews #News18TamilNadu #TamilNews
5
26
6
137
65,009
3
1
5
81
11,648
MIDS இணைப்பேராசிரியர் கலையரசன் அவர்களின் புகைப்படத்தை போலி வலைதள கணக்கின் மூலம் பயன்படுத்தி ஆபாசமான கமெண்ட்கள் போடப்பட்டிருக்கும் செயல் மிகுந்த கண்டனத்திற்குரியது. இந்த போலிக்கணக்கு மூலமான ஆபாச கமெண்ட் தொடர்பாக காவல்துறை விசாரணைக்கு வந்திருக்கிறார்கள் என்று 28.10.2026 அன்று காலை 5.56க்கு கலையரசன் அவர்கள் எனக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்தார். உடனடியாக, அவரை அழைத்துச் செல்ல வந்திருந்த காவலர்களிடம் முனைவர் கலையரசன் அவர்களை 10 ஆண்டுகாலமாக நன்கு அறிவேன் என்றும், சர்வதேச பல்கலைக்கழகங்களில் அவர் ஆற்றியிருக்கும் பங்களிப்புகள் குறித்தும், தமிழ்நாட்டுக்கான அறிவார்ந்த தளத்தில் அவர் ஆற்றிவரும் பங்களிப்புகள் குறித்தும் முழுமையாக எடுத்துக்கூறி நிச்சயமாக அது போலிக்கணக்காகத்தான் இருக்கும் என்றும், தேவைப்பட்டால் உடனடியாக நான் கிளம்பி வருவதாகவும் தெரிவித்தேன். உடனே அவரை காவல்நிலையம் அழைத்துச் செல்லும் நடவடிக்கையை காவலர்கள் நிறுத்திவிட்டார்கள். ஆனால், காவலர்கள் இறுதி முடிவெடுக்கும் இடத்தில் இல்லாததால் காவல் ஆய்வாளர் அவர்களிடம் இதுதொடர்பாக கூடுதல் தகவல் தெரிவிக்க அழைத்தபோது அவர் அழைப்புகளை எடுக்கவில்லை. இதனால், முனைவர் கலையரசன் சாலையில் காத்திருக்கும் தர்மசங்கடமான சூழல் ஏற்பட்டுவிட்டது. உடனடியாக, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அண்ணன் @imrajmohan அவர்களுக்கு அழைத்து தகவலை பரிமாறி, அவரும் முனைவர் கலையரசன் அவர்களிடம் மிகவும் சங்கடமான இச்சூழ்நிலைக்கு வருத்தம் தெரிவித்தார். எனவே, விலைவாசி உயர்வை குறித்து கலையரசன் அவர்கள் பேசியதற்காக கைது என்பதிலோ, அரசு அச்சுறுத்தல் என்பதிலோ, பொருளாதார அறிஞர் பழிவாங்கல் என்பதிலோ துளியும் உண்மை கிடையாது. உண்மையில், கலையரசன் அவர்கள் திமுக ஆட்சியில் சந்தித்த நெருக்கடிகளும், கொடுமைகளும் அதிகம். அவர் 'திராவிட மாடல்' புத்தகத்தை எழுதுவதற்கான ஆய்வுப்பணியில் இருந்த காலத்திலிருந்து நான் அவரை நன்றிவேன். அதேகாலகட்டத்தில் தமிழ் ஊடக உலகில் முதன்முதலாக 'திராவிட மாதிரி வளர்ச்சி' என்ற ஆவணப்படத்தொடர் நிகழ்ச்சி தயாரிப்பில் நான் ஈடுபட்டிருந்ததால், அப்புத்தகம் வெளிவரும் முன்பிருந்தே, தமிழ்நாட்டின் சமூகப்பொருளாதார வளர்ச்சியின் உண்மையான வரலாற்றை அறிந்துகொள்ளும் ஒத்தக்கருத்துச் சிந்தனை பகிர்வு எனக்கு அவருடன் இருந்துள்ளது. எந்த குடும்பப்பின்புலமும் இல்லாத, தன் அறிவுத்திறனால் மட்டுமே உயர்ந்த முனைவர்.கலையரசனின் அபாரமான ஆய்வுத்திறமையால், விஜயபாஸ்கர் அவர்களுடன் இணைந்து உருவாக்கப்பட்ட 'திராவிட மாடல்' என்கிற புத்தகம் - கருத்தாக்கமும் திமுக ஆட்சியில் கலையரசன் கண்ணுக்கு முன்னால் அப்பட்டமாக திருடப்பட்டது. அவருடைய அறிவும், உழைப்பும் சுரண்டப்பட்டது. இதுதொடர்பாக திமுக ஆட்சிக்காலத்தில் மிகுந்த மன உளைச்சலில் இருந்த கலையரசன் அவர்கள் 'திராவிட மாடல்' புத்தகத்தை பொதுச்சாலையில் வைத்து கொளுத்தப்போகிறேன் என்று சில ஆண்டுகளுக்கு முன்பு, எனக்கு உட்பட பலருக்கும் குறுந்தகவல் அனுப்பியிருந்தார். ஊடக உலகம் இதை நன்கறியும். தவெக ஆட்சி அமைந்த பிறகும் அவரை நான் 3 முறை சந்தித்து விரிவாக பேசியுள்ளேன். தேர்ந்த பொருளியல் கல்வியாளரான முனைவர் கலையரசனுக்கு 2026 தேர்தலில் தமிழ்நாட்டில் நடந்தது உலகம் முழுவதும் நடைபெற்றுவரும் Gen Z கிளர்ச்சியின் தமிழ் ஜனநாயக உள்வாங்கல் என்பதில் ஆழமான சமூக பொருளியல் அரசியல் புரிதலும், நுட்பமும் உண்டு. எனவே, அவர் தவெக ஆட்சிக்கு எதிரான மனநிலையில் கருத்துக்களை பகிர்ந்துகொண்டார் என்பதிலோ, தவெக ஆட்சிக்கு எதிரான மனநிலையில் அரசை விமர்சித்தார் என்பதிலேயே முதலில் எந்த அடிப்படையும் கிடையாது. விலைவாசி ஏற்றம் குறித்து அவரது அக்கறை, அறிவார்ந்த பங்களிப்புகளால் தமிழ்நாட்டை வளப்படுத்த வேண்டும் என்கிற அவரது உத்வேகத்தின் ஒருபகுதி. அவ்வளவே. அதை வெற்றிக்கழக அரசு நன்கு உணர்ந்துள்ளது. என்றாலும் காவல்துறை அவரிடம் நடந்துகொண்ட விதத்தால் சான்றோண்மைமிக்க ஒரு முனைவருக்கு ஏற்பட்ட வருத்தம் நிச்சயம் புரிந்துகொள்ளத்தக்கது. அதற்காக மீண்டும் ஒருமுறை அவரிடம் அனைவரின் சார்பாகவும் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறோம். கலையரசன் அவர்கள் டிஜிபி அவர்களுக்கு எழுதியிருக்கும் கடிதம் முழுக்க முழுக்க அவருடைய தனிமனித உரிமை சார்ந்தது. அது அரசுக்கு எதிரானது அல்ல. வெற்றிக்கழக அரசு அவரது புகாருக்கு ஆதரவாக உள்ளது. அவருடைய உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து, அந்தப்புகாரின் மீது தீவிரமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் அரசும், கட்சியும் பொறுப்புகொண்டிருக்கிறது. 1/2
57
103
47
225
63,467
திமுகவால் பலநூறுகோடிகளுக்கு விளம்பரம் செய்துகொள்ளப்பட்ட 'திராவிட மாடல்' என்ற கருத்தாக்கத்தின் உண்மையான கர்த்தாவான கலையரசன், அந்த கருத்தாக்கத்தை கடந்து செல்லவேண்டிய இடம் வந்துவிட்டது என்று வெளிப்படையாக ஆங்கில முன்னணி நாளிதழ்களில் கட்டுரையே எழுதிவிட்டார். ஆனால், மறுமுனையில் அறிவுத்திருட்டை சந்தித்த கலையரசன் மீண்டும் மீண்டும் திமுக வட்டாரத்தால் ஒடுக்கப்பட்டார் என்பதே உண்மை. எனவே, இன்று கலையரசன் ' ஒட்டுமொத்த தமிழினத்தின் முன்னேற்றம் மீது அக்கறைகொண்ட, கட்சி எல்லைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு அறிவுச்சொத்து'. தமிழக வெற்றிக்கழகம் இதை நன்கு உணர்ந்துள்ளது. மேலும், அமைச்சர் ராஜ்மோகன் அவர்கள் பல்லாவரம் எம்.எல்.ஏ காமாட்சி அவர்களிடம் இதுகுறித்து உரையாடியதில் இருந்து இப்புகாருக்கும், எம்.எல்.ஏ காமாட்சி அலுவலகத்துக்கும் எந்தத்தொடர்பும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. எனவே, ஊழல் நடிகர் அன்பில் மகேஸ் கைதுசெய்யப்பட்டிருக்கும் நேரத்தில் நடந்திருக்கும் இந்த சர்ச்சை பல்வேறுவிதமான கேள்விகளை எழுப்புகிறது. பள்ளிக்குழந்தைகளின் உயிரை கொச்சைப்படுத்தி நாட்டைச் சுரண்டிய ஊழல்வாதியின் கைதை சகஜப்படுத்துவதற்கான (normalise) திட்டத்தோடு சிலரால் செய்யப்பட்ட அரங்கேற்றமா? இந்த போலிக்கணக்கு எப்போது தொடங்கப்பட்டது? இணையப்பொதுவெளியில் இருக்கும் கலையரசனின் படம் அதில் எப்போது சேர்க்கப்பட்டது? போலிப்புகார் மூலம் இத்தகைய தூண்டுதல் மேற்கொள்ளப்பட்டதா? என்பதைக்குறித்தும், போலிக்கணக்கின் IP addres உள்ளிட்ட இதர விவரங்கள் குறித்தும் முறையான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, தமிழ்நாட்டு ஊடகங்களும் - ஜனநாயக சக்திகளும் இவ்விவகாரம் குறித்து உண்மை நிலையை அறிந்து கருத்து தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். - விவேக் கணநாதன், தமிழக வெற்றிக்கழகம்
25
18
9
54
26,859
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி. சாலை என்கிற வெற்றிச் சாலையில் வெற்றித் தலைவர் தலைமையில் வெற்றிக் கொள்கைத் திருவிழா என்ற பெயரில் நம் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு (27.10.2024) நடைபெற்றது. இலட்சக்கணக்கானோர் திரண்ட இந்த மாநாடு வரலாறாகவும், தமிழக அரசியலின் வழித்தடத்தையே மாற்றியும், மக்கள் விரோத, ஊழல் சக்திகளை விரட்டி ஆட்சி மாற்றத்திற்கு அடித்தளமாகவும், தமிழ்நாட்டு மக்களை முன்னேற்றப் பாதையில் பயணிக்கவும், வெற்றித் தலைவரின் ஆளுமையை தமிழ் கூறும் நல்லுலகிற்கு பறைசாற்றிய வெற்றித் திருவிழாவாகவும் நடந்தேறியது. 100 அடி உயர கொடிக்கம்பத்தில் கழகக் கொடியேற்றி, ஐம்பெரும் கொள்கைத் தலைவர்களை முன்னிறுத்தி ,லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு மத்தியில் பேசிய வெற்றித் தலைவர் , அன்று மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை மாண்புமிகு முதலமைச்சராக இன்று நிறைவேற்றி வருகிறார், தோழமைக் கட்சிகளை அரவணைத்துச் செல்கிறார், கொள்கை எதிரி & அரசியல் எதிரிகளுக்கு எதிரான நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார். தமிழக மக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் அக்கறை காட்டி தூயசக்தியாக திகழ்கிறார். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற கோட்பாட்டுடன் தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக, மனசாட்சியுள்ள மக்களாட்சி நடத்தி வரும் மாண்புமிகு முதலமைச்சர் வெற்றித் தலைவர் அவர்களின் வெற்றிப் பயணம் என்றென்றும் தொடரும், வெற்றித் தமிழகம் நோக்கிய இலக்கு வெல்லும் !
38
1,409
16
4,626
47,115
Vivek Gananathan retweeted
இன்றைய நாள் அக்டோபர் 27 தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் மட்டுமல்ல, இந்திய அரசியல் வரலாற்றிலும் மிக முக்கியமான நாள். மாண்புமிகு தமிழக முதலமைச்சர் நமது வெற்றி தலைவர் அண்ணன் தலைமையில்... இரண்டு வருடங்களுக்கு முன் 2024 இதே அக்டோபர் 27 ஆம் நாளில் தான், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி. சாலை என்கிற வெற்றிச் சாலையில் தமிழக வெற்றி கழகத்தின் பிரம்மாண்டமான முதல் மாநாட்டை, வெற்றிக் கொள்கைத் திருவிழாவாக நடத்தினோம். 100 அடி உயர கொடிக்கம்பத்தில் முதல் முறையாக நமது கழகக் கொடியை, லட்சக்கணக்கான இளைஞர்களின் ஆர்ப்பரிப்புக்கு இடையே ஏற்றி வைத்தார் நமது வெற்றி தலைவர். ஒரு நடிகர் என்ன செய்து விடப் போகிறார்? அவரிடம் என்ன கொள்கை பிடிப்பு இருக்கப் போகிறது? என புற்றீசலாய் புறப்பட்ட விமர்சனங்களை எல்லாம் புயல் காற்றாய் ஊதித் தள்ளியது வி. சாலை மாநாடும், மாநாட்டில் நமது வெற்றி தலைவர் அண்ணன் அவர்களின் முதல் உரையும்.l "இது தாறுமாறாய் ஆடுகிற ஆட்டம் அல்ல... தத்துவத்துடன் ஆடுகிற ஆட்டம்" என்று நமது தமிழக வெற்றி கழகத்தின் அரசியல் பாதையை மிக தெளிவாக வரையறுத்து வெளியிட்டார் நமது வெற்றி தலைவர். லட்சக்கணக்கான கழகத் தோழர்களும், பொதுமக்களும் தன்னெழுச்சியாக கலந்து கொண்ட முதல் மாநாட்டில் தொடங்கிய நமது அரசியல் பயணம் வெற்றிச் சாலையில் என்றைக்கும் தொடர்ந்து பயணிக்கும்! பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற தத்துவத்தின் வழியில் தமிழ்நாட்டுக்காக தொடர்ந்து உழைப்போம்! கொள்கை தலைவர்களின் வழிகாட்டலில், மாண்புமிகு முதலமைச்சர் தமிழக வெற்றி கழக தலைவர் அண்ணன் அவர்களுடைய தலைமையில்... ஆட்சி மாற்றத்தையும் அரசியல் மாற்றத்தையும் ஏற்படுத்திய நமது வெற்றிப் பயணம் மக்களுக்காக என்றைக்கும் தொடரும்! @TVKVijayHQ | @TVKPartyHQ | @TVKHQITWingOffl | @BussyAnand #தமிழகவெற்றிக்கழகம் #TVK
36
927
7
4,784
37,910
Vivek Gananathan retweeted
"பள்ளியில் பயிலும் குழந்தைகள் பாதுகாப்பில் பணம் பார்த்த கேவலமான கும்பல்.. தி.மு.கவிற்கு பேசுவதற்கு அருகதையே கிடையாது..." குழந்தைகளுக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை நாங்கள் வசூல் செய்வோம் என சான்றிதழ் வழங்க 4,000க்கும் மேற்பட்ட பள்ளிகளில் புரோக்கரை வைத்து கோடிக்கணக்கில் பணத்தை வசூல் செய்ததால் தற்போது மாட்டிக்கொண்டுள்ளார்கள் - அன்பில் மகேஷ் மீதான வழக்கு குறித்து அமைச்சர் விளக்கம் #Chennai | #MinisterNirmalkumar | #DMK | #AnbilMaheshPoyyamozhi | #MKStalin | #PolimerNews
54
668
22
2,415
87,324
Vivek Gananathan retweeted
This is a major miss from Union Power Ministry, Article says Rajasthan is spending ₹46.09 per unit power. This has raised serious questions about national demand forecasting and resource adequacy planning by Union government. Since individual States have limited visibility of nationwide power demand and generation availability, unlike central power-sector institutions. The Union Power Ministry needs to examine why such demand–supply gaps were not anticipated and planned in advance. Atleast now Union Power Ministry should plan on national-level forecasting and better coordination with states which could help States avoid such prohibitively expensive power in future. timesofindia.indiatimes.com/…
86
512
29
1,714
108,376
25
493
5
1,361
17,158
Vivek Gananathan retweeted
1.5°C இலக்கிற்கு வாய்ப்பில்லை ஐ.நா வெளியிட்ட புதிய அறிக்கை #UN | #UNEP | #HeatWave
5
73
11,568
Vivek Gananathan retweeted
காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு, காவலர் நினைவுச் சின்னம் முன்பாக மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தி, பணியின்போது உயிரிழந்த காவலர்களின் குடும்பங்களுக்கு ரூ.5.96 கோடி காப்பீட்டுத் தொகைக்கான ஆணைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் வழங்கினார். #CMJosephVijay‌
18
345
3
1,119
28,606
Vivek Gananathan retweeted
அரசியல் மேடைகள் தந்தை பெரியார் காலத்தில் பகுத்தறிவைக் கற்பிக்கும் பள்ளிகளாக இருந்தன; அறிஞர் அண்ணா காலத்தில் அரசியல் அறிவை வளர்க்கும் பல்கலைக்கழகங்களாக இருந்தன. ஆனால், அண்ணாவிற்குப் பிறகு தி.மு.க., அரசியல் மேடைகள் தனிநபர் தாக்குதல் மேடைகளாக மாறின; அதுவும் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இயங்கும் தி.மு.க-வின் தற்போதைய மேடைகள், ஆபாசப் பேச்சுக்கள் - அசிங்கமான வார்த்தைகள் - அவதூறு கருத்துக்களை மட்டுமே பரப்பிக் கொண்டிருக்கும் அருவருப்பான மேடைகளாக மாறிவிட்டன. அதுவும், 2026 சட்டமன்றத் தேர்தலில் தோற்று வீட்டில் முடங்கி இருக்கும் தி.மு.க., தன் ஆற்றாமையை, காழ்ப்புணர்வை தன் ஒவ்வொரு நடவடிக்கையிலும் வெளிப்படுத்துகிறது. அவற்றில் சமூக ஊடகங்கள் மற்றும் அரசியல் மேடைகளை தி.மு.க-விற்கு எதிரணியில் இருக்கும் அரசியல் கட்சிகளை, அரசியல் கட்சிகளின் தலைவர்களை தனிப்பட்ட முறையில் ஆபாசமாகத் தாக்கும் களங்கம் சூழ்ந்த களமாகப் பயன்படுத்தி வருகிறது. அந்தவகையில், சென்னையில் நடைபெற்ற தி.மு.க மகளிரணி மற்றும் மகளிர் தொண்டரணி சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பெண் பேச்சாளர் ஒருவர் , தமிழ்நாட்டு மக்களால் மிகப்பெரிய நம்பிக்கையுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் திரு.சி.ஜோசப் விஜய் அவர்களை மிகவும் தரக்குறைவான முறையில் விமர்சனம் செய்கிறார். அதை மேடையில் இருக்கும் சென்னை மாநகர மேயர் என்ற பொறுப்பான பதவியில் இருக்கும் மேயர் பிரியா அவர்கள் கைகொட்டி சிரித்து ரசித்துக் கொண்டிருக்கிறார். தி.மு.க-வின் நாடாளுமன்ற குழுத் தலைவராகவும் தி.மு.க-வின் துணைப் பொதுச் செயலாளராகவும் உள்ள திருமதி.கனிமொழி ராஜாத்தி கருணாநிதி அவர்கள் தலைகுனிந்து மௌனமாக இருக்கிறார். அவர் அந்தப் பேச்சாளரைக் கண்டிக்காதது ஒருபுறம் என்றால், மறுபுறம் சொந்தக் கட்சியினர் பேசும் பேச்சுக்களை கேட்க முடியாமல் திருமதி.கனிமொழி அவர்களே தலைகுனிந்து கூனிக்குறுகும் அளவுக்குத்தான் இன்றைய தி.மு.க மேடைகளின் தராதரம் இருக்கிறது. இதற்கு வன்மையான கண்டனத்தைத் தெரிவிக்கிறேன். மேலும், உடனடியாக, சட்டப்படியான முறைகளில், தி.மு.க-வின் இதுபோன்ற அநாகரீக செயல்கள் தடுக்கப்பட வேண்டும் என்பதையும் அழுத்தமாக வலியுறுத்துகிறேன். அப்போதுதான் ஜனநாயகமும் ஆரோக்கியமான அரசியலும் வலுப்பெறும். அதனால், தி.மு.க மேடையில் அநாகரீக முறையில் பேசிய அந்தப் பெண் பேச்சாளர் மீது சட்டப்படியான நடவடிக்கை உடனடியாக எடுக்கப்பட வேண்டும். நாகரீக அரசியல், பண்பான அரசியல் என்று வெறும் வார்த்தைகளில் மட்டும் பேசிக் கொண்டிருக்கும் தி.மு.க தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இவற்றை எல்லாம் கண்டிக்காமல் வழக்கம்போல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். அல்லது "அவரே இதுபோன்ற கொச்சையான பேச்சுக்களை கேட்டு ரசித்து ஊக்கப்படுத்திக் கொண்டிருக்கிறாரா?" என்ற கேள்விக்கு அவர்தான் பதில் சொல்ல வேண்டும். ஆனால், இதுபோன்ற அவதூறுகளால், ஆபாசப் பேச்சுக்களால் தமிழ்நாட்டின் புதிய நம்பிக்கையாக உருவாகி உள்ள தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் திரு.சி.ஜோசப் விஜய் அவர்களின் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தி மறைத்துவிட முடியாது. ஆனால், தி.மு.க-வின் இதுபோன்ற ஆபாச நடவடிக்கைளால், அந்தக் கட்சியும் அதன் தலைமையும் தமிழ்நாட்டு மக்களின் உள்ளங்களில் இல்லங்களில் இருந்து முற்றிலுமாகத் துடைத்தெறியப்படும் என்பது உறுதி! ஒரு காலத்தில் அழகிய தமிழின் அடுக்குமொழிகளால் கட்சியை வளர்த்த தி.மு.க-வினர் இன்றைக்கு அசிங்கமான பேச்சுக்கள், ஆபாசமான வாக்கியங்கள், கொச்சையான வார்த்தைகளுக்குள் முடங்கிப்போய் கிடக்கின்றனர். அவர்களை முறைப்படுத்தி கட்சியை வளர்க்கும் வழி தெரியாமல் அந்தக் கட்சியின் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களும் திசை தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார். தந்தை பெரியாரின் பகுத்தறிவு - சுயமரியாதை - சமூகநீதிக் கருத்துக்களையும் பேரறிஞர் அண்ணா அவர்கள் அரசியலுக்கு வகுத்துக் கொடுத்த கடமை - கண்ணியம் - கட்டுப்பாடு என்ற இலக்கணத்தையும் மறந்துவிட்ட தி.மு.க-வினர்... அவர்களுடைய இதுபோன்ற அவதூறுகளையும் ஆபாசப் பேச்சுக்களையும் கடந்துதான் அண்ணன் திரு.சி.ஜோசப் விஜய் அவர்கள் தமிழ்நாட்டு அரசியல் களத்திலும் தமிழக மக்களின் மனங்களிலும் நிரந்தர வெற்றியைப் பெற்றுள்ளார்; இனியும் பெற்றுக் கொண்டே இருக்கப்போகிறார் என்பதையாவது மறக்காமல் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
14
966
30
2,969
51,133
Vivek Gananathan retweeted
மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியின் வளர்ச்சிக்காகவும், மேம்பாட்டிற்காகவும் புதிய திட்டங்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு #CMJosephVijay‌
14
681
11
2,037
66,860
Vivek Gananathan retweeted
தாராபுரம் சட்டமன்றத் தொகுதியின் வளர்ச்சிக்காகவும், மேம்பாட்டிற்காகவும் புதிய திட்டங்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு #CMJosephVijay‌
36
805
10
2,517
55,426
Rowdytime Runner! சென்னையில் அதிகனமழை பொழிந்துள்ளது. தனது தொகுதியான திருவல்லிக்கேணி – சேப்பாக்கம் மக்களை நேரில் சென்று பார்க்காமல், பண்ணையார் வீட்டு மகன் ரீபோஸ்ட்நிதி துபாய் பயணம் மேற்கொள்கிறார். சட்டமன்றத்தில் தனது தொகுதி மக்களுக்காகப் பேசத் துப்புக்கெட்டு ஓட்டமெடுக்கிறார் என்றால், இப்போதும் ஓட்டமெடுக்கிறார் ஓட்டநிதி! ஆபாசநிதியோ உல்லாசப் பயணம் செல்ல, ஆபாசநிதியின் ஆஸ்தான அடிவருடியின் உத்தரவின்படி, Generational Abusers ஓட்டநிதியின் பழைய காணொளியை எடுத்து, அவர் தொகுதிக்குச் சென்றதாகப் பரப்பி வருகின்றனர். இப்படிப் பொய்த் தகவல்களைப் பரப்பி அரசியல் பிழைப்பு நடத்துவதற்கு யோசனை சொல்லிவிட்டு, அடுத்தவர்கள் தகவலைச் சரிபார்க்கவில்லை எனக் கோமாளித்தனம் செய்யும் சர்க்கஸ் கூடாரம்தான் திமுக! இரவு முழுவதும் தவெக அரசு செயல்படவில்லை என ஒப்பாரி வைத்து ஓலமிட்ட ஓட்டநிதியின் துப்புக்கெட்ட Generational Abusers, காலையில் மழைநீர் வடிந்ததற்குத் திமுகதான் காரணம் என வெட்கங்கெட்டுத் தங்களது Dummy Daddy-யின் வழியில் தப்பாமல் Credit Stealing செய்கின்றனர். ஒருபுறம் பொறை போட்டு வளர்க்கும் Generational Abusers Credit Stealing செய்ய, மறுபுறம் ஓட்டநிதி துபாய்க்கு ஓட, வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார் Sweet Uncle. நன்றாக ஓய்வெடுங்கள், Uncle!
130
1,417
57
3,365
114,777
Vivek Gananathan retweeted
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு மண்டல அளவிலான கண்காணிப்பு அலுவலர்கள், வட்டார துணை ஆணையர்கள், மண்டல அலுவலர்கள், ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் ஆகியவற்றில் பொதுமக்கள்தொடர்பு கொண்டு தங்களது புகார்களைத் தெரிவிக்கலாம். #CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @imrajmohan | 1/2
1
53
2
108
9,267
அதிகார கொட்டாரத்தை இளைஞர் கிளர்ச்சிக்கு அஞ்சி, தன் சொந்தத்தந்தை பெயரில் வைக்கப்பட்ட திட்டத்தின் பெயரை திருத்தியெழுத வைத்து, தங்கள் கொள்கைத்தலைவரின் பெயரைச் சூட்ட வைத்த உண்மையான சுயமரியாதை பட்டாளத்தின் வரலாற்றுச் சின்னம் கோவை பெரியார் அறிவுலகம் என்று சரித்திரத்தில் எழுதப்படும்!
பெரியார் அறிவுலகம் - தமிழ் ஜனநாயகனின் சாதனை! கோவை பெரியார் அறிவுலகத்தை மாண்புமிகு தமிழ்நாட்டின் முதலமைச்சர் அண்ணன் விஜய் அவர்கள் இன்று திறந்து வைத்திருக்கிறார். 20ம் நூற்றாண்டின் மாபெரும் கலகக்காரரின் பெயரில் அமைந்துள்ள இவ்வளாகம் 2026ம் ஆண்டு தேர்தல் முடிவுகளை வென்றெடுத்த சாமானிய இளைஞர் பட்டாள அணிதிரட்சியின் முதல் வெற்றிச்சின்னம். சாதி, மத எல்லைகளுக்கு அப்பால் இளைஞர்களும், பெண்களும் அணிதிரண்டு வென்றுகாட்டிய சமத்துவ கிளர்ச்சியின் அறிவுச்சின்னம். ஏன்? பெரியார் பெயரில் அறிவுலகம் அமைக்க வேண்டும் என்பதோ, பெரியார் பெயரில் நூலகம் அமைக்க வேண்டும் என்பதோ ஸ்டாலினுக்கோ - ஸ்டாலின் குடும்பத்துக்கோ துளியும் எண்ணம் கிடையாது. கலைஞர் நூற்றாண்டை ஒட்டி திமுக அரசு அமைந்ததும் அறிவிக்கப்பட்ட கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை, மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகம் அறிவிப்புகளின் அடிப்படையில் 2024 ஜூலை 15ம் தேதி கலைஞர் நூற்றாண்டு நூலகம் மதுரையில் திறக்கப்பட்டது. இந்த நூலகம் திறப்பதற்கான ஏற்பாடுகள் தொடங்கியிருந்த நேரத்தில், ஜூன் 27, 2024 அன்று சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் திருச்சி, கோவையிலும் கலைஞர் பெயரில் நூலகம் அமைக்கப்படும் என்று அறிவிப்பை வெளியிட்டார் ஸ்டாலின். ஆனால், நவம்பர் 6, 2024 அன்று கோவையில் கலைஞர் நூலகத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா நடக்கிறபோது, மேடையில் அதனுடைய பெயரை மாற்றி 'சென்னையில் அண்ணா நூலகம், மதுரையில் கலைஞர் நூலகம் ஏற்கனவே இருக்கிறது. எனவே, கோவையில் பெரியார் பெயரில் இந்த நூலகம் அமையும்' என்று மாற்றி அறிவித்துவிட்டார் ஸ்டாலின். அப்போதும் பெரியார் அறிவுலகம் என அறிவிக்கவில்லை! நவம்பர் 6 அந்த மேடையில் அறிவிப்பு செய்கிற வரை, பெரியார் பெயரில் நூலகம் அல்லது அறிவுலகம் அமைக்கும் எந்தத்தகவலும் வெளியில் சொல்லப்படவில்லை. இன்னும் சொல்லப்போனால், நவம்பர் 6 அடிக்கல் நாட்டுவதற்கு முதல்நாள், நவம்பர் 5, 2024 அன்று அன்றைய திமுக அரசின் சார்பில் வெளியிடப்பட்ட முதலமைச்சரின் கோவை பயணத்திட்டம் குறித்த அறிவிப்பில் கூட 'கலைஞர் நூலகம்' அடிக்கல் நாட்டுவிழாவில் கலந்துகொள்கிறார் என்று தான் செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டது. ஆனால், அடிக்கல் நாட்டும் மேடையில் திடீரென்று எப்படி இந்த பெரியார் பாசம் பொத்துக்கொண்டு வந்தது? உண்மையில் ஸ்டாலின் அரசுக்கு பெரியார் மீது பற்று இருந்திருந்தால், 2022 செப்டம்பர் மாதம் திராவிடர் கழகத்தின் சார்பில் மானமிகு ஆசிரியர் வீரமணி அவர்கள், திருச்சியில் பெரியார் உலகம் அடிக்கல் நாட்டுவிழா நடந்தபோது அதில் கலந்துகொண்டு அடிக்கல் திறந்த ஸ்டாலின், தமிழ்நாடு அரசின் சார்பிலும் 'பெரியார் அறிவுலகம்' திறக்கப்படும் என அறிவித்திருக்க வேண்டும். ஏன் அறிவிக்கவில்லை? 2024 ஜூன் மாதம் 27ம் தேதி 110 விதியின் கீழ் 'கலைஞர் நூலகம்' அமைக்கப்படும் என்று சட்டசபையில் அறிவித்தபோது பெரியார் மீது வராத பாசம், நவம்பர் 6 விழா மேடையில் எப்படி வந்தது? செப்டம்பர் 29, 2024 அன்று ஜோசியக்காரர்கள் குறித்து கொடுத்த தேதியில் தன் மகனுக்கு துணை முதல்வர் பதவி கொடுத்து அழகுபார்ப்பதற்கு 10 நாள் முன்பு பெரியார் பிறந்தநாள் கொண்டாடப்பட்டபோது வராத பெரியார் பாசம் நவம்பர் 6 விழா மேடையில் எப்படி வந்தது? எப்படி வந்தது என்றால் அக்டோபர் 27, 2024 விக்கிரவாண்டி மாநாட்டில் அண்ணன் விஜய் அவர்கள் அடித்த அடிக்குப் பிறகு வந்தது. விக்கிரவாண்டி மாநாட்டில் 'பெரியார் - அண்ணா பெயரை பயன்படுத்தி ஒரு குடும்பம் அடிக்கும் கொள்ளை' என்று நங்கு நங்கு என்று மண்டையில் கொட்டிய பிறகு வந்தது! 'தவெக ஆட்சி அமைத்தால் அனைத்துத் தலைவர்களின் பெயரிலும் திட்டங்களுக்கு பெயர் சூட்டப்படும்' என அந்த மாநாட்டுப்பேருரையில் அண்ணன் விஜய் வாளைச்சுழற்றிய பிறகு வந்தது! விக்கிரவாண்டி மாநாடு நிகழ்த்திய தாக்கமும், அதில் கிளர்ந்தெழுந்த இளைஞர்களின் 'குடும்பச் சுரண்டலுக்கு எதிரான' ஆவேச உத்வேகமும் தந்த அச்சத்தால் வந்தது! அக்டோபர் 27 விக்கிரவாண்டி மாநாடு நடந்து முடிந்த ஒருவார காலத்தில் நவம்பர் 6 அன்று தான் கோவையில் அடிக்கல் நாட்டுவிழா நடந்தது. நவம்பர் 6 கோவை நூலக அடிக்கல் நாட்டுவிழாவிற்கு பிறகும் கூட, திருச்சியில் அமைவதாக அறிவிக்கப்பட்டிருந்த நூலகத்திற்கு அரசாணை வெளியிட்டபோதும், டெண்டர் கோரப்பட்ட போதும், மார்ச் 21,2025 அன்று அடிக்கல் நாட்டியபோதும் 'கலைஞர் நூலகம்' என்றுதான் பெயரிட்டிருந்தது ஸ்டாலின் அரசு. அதன்பிறகு, ஏப்ரல் 2, 2025 அன்று திருச்சி நூலகத்திற்கு காமராஜர் பெயர் சூட்டப்படும் என பெயரை மாற்றினார் ஸ்டாலின். நெல்லையில் காயிதே மில்லத் பெயரில் நூலகம் அமைக்கப்படும் என்று டிசம்பர், 2025ல் அறிவிக்கப்பட்டது. இந்த பெயர் மாற்றங்கள் மற்ற தலைவர்களின் மீதுள்ள மதிப்பால் செய்யப்பட்ட மாற்றங்கள் கிடையாது!
16
337
1
940
18,287