Vivek Gananathan (@VGananathan) header
Vivek Gananathan (@VGananathan) profile picture

தமிழக வெற்றிக் கழகம்

Joined March 2018
Photo by Vivek Gananathan (@VGananathan)Photo by Vivek Gananathan (@VGananathan)Photo by Vivek Gananathan (@VGananathan)Photo by Vivek Gananathan (@VGananathan)Photo by Vivek Gananathan (@VGananathan)Photo by Vivek Gananathan (@VGananathan)Photo by Vivek Gananathan (@VGananathan)Photo by Vivek Gananathan (@VGananathan)Photo by Vivek Gananathan (@VGananathan)
Vivek Gananathan retweeted
முதலமைச்சர் விஜயுடன் பேராசிரியர் கலையரசன் சந்தித்த புகைப்படம் வெளியானது #CMVijay #ProfessorKalaiyarasan #News18Tamilnadu | News18Tamil.com
1
94
2
612
11,753
Vivek Gananathan retweeted
CM Vijay | Breaking News | CM-ஐ சந்தித்த பேராசிரியர் கலையரசன்.. வெளியான புகைப்படம்! காவல்துறை தன்னை அலைக்கழித்ததாக கூறிய |நிலையில் கலையரசனை | அழைத்துப் பேசிய முதல்வர் #cmvijay #BreakingNews #News18TamilNadu #TamilNews
1
14
122
11,454
Vivek Gananathan retweeted
Breaking News | முதல்வர் விஜயுடன் MIDS பேராசிரியர் கலையரசன் சந்திப்பு #BreakingNews #News18TamilNadu #TamilNews
5
26
6
137
65,397
3
1
5
82
11,898
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி. சாலை என்கிற வெற்றிச் சாலையில் வெற்றித் தலைவர் தலைமையில் வெற்றிக் கொள்கைத் திருவிழா என்ற பெயரில் நம் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு (27.10.2024) நடைபெற்றது. இலட்சக்கணக்கானோர் திரண்ட இந்த மாநாடு வரலாறாகவும், தமிழக அரசியலின் வழித்தடத்தையே மாற்றியும், மக்கள் விரோத, ஊழல் சக்திகளை விரட்டி ஆட்சி மாற்றத்திற்கு அடித்தளமாகவும், தமிழ்நாட்டு மக்களை முன்னேற்றப் பாதையில் பயணிக்கவும், வெற்றித் தலைவரின் ஆளுமையை தமிழ் கூறும் நல்லுலகிற்கு பறைசாற்றிய வெற்றித் திருவிழாவாகவும் நடந்தேறியது. 100 அடி உயர கொடிக்கம்பத்தில் கழகக் கொடியேற்றி, ஐம்பெரும் கொள்கைத் தலைவர்களை முன்னிறுத்தி ,லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு மத்தியில் பேசிய வெற்றித் தலைவர் , அன்று மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை மாண்புமிகு முதலமைச்சராக இன்று நிறைவேற்றி வருகிறார், தோழமைக் கட்சிகளை அரவணைத்துச் செல்கிறார், கொள்கை எதிரி & அரசியல் எதிரிகளுக்கு எதிரான நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார். தமிழக மக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் அக்கறை காட்டி தூயசக்தியாக திகழ்கிறார். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற கோட்பாட்டுடன் தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக, மனசாட்சியுள்ள மக்களாட்சி நடத்தி வரும் மாண்புமிகு முதலமைச்சர் வெற்றித் தலைவர் அவர்களின் வெற்றிப் பயணம் என்றென்றும் தொடரும், வெற்றித் தமிழகம் நோக்கிய இலக்கு வெல்லும் !
38
1,409
16
4,628
47,135
Vivek Gananathan retweeted
இன்றைய நாள் அக்டோபர் 27 தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் மட்டுமல்ல, இந்திய அரசியல் வரலாற்றிலும் மிக முக்கியமான நாள். மாண்புமிகு தமிழக முதலமைச்சர் நமது வெற்றி தலைவர் அண்ணன் தலைமையில்... இரண்டு வருடங்களுக்கு முன் 2024 இதே அக்டோபர் 27 ஆம் நாளில் தான், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி. சாலை என்கிற வெற்றிச் சாலையில் தமிழக வெற்றி கழகத்தின் பிரம்மாண்டமான முதல் மாநாட்டை, வெற்றிக் கொள்கைத் திருவிழாவாக நடத்தினோம். 100 அடி உயர கொடிக்கம்பத்தில் முதல் முறையாக நமது கழகக் கொடியை, லட்சக்கணக்கான இளைஞர்களின் ஆர்ப்பரிப்புக்கு இடையே ஏற்றி வைத்தார் நமது வெற்றி தலைவர். ஒரு நடிகர் என்ன செய்து விடப் போகிறார்? அவரிடம் என்ன கொள்கை பிடிப்பு இருக்கப் போகிறது? என புற்றீசலாய் புறப்பட்ட விமர்சனங்களை எல்லாம் புயல் காற்றாய் ஊதித் தள்ளியது வி. சாலை மாநாடும், மாநாட்டில் நமது வெற்றி தலைவர் அண்ணன் அவர்களின் முதல் உரையும்.l "இது தாறுமாறாய் ஆடுகிற ஆட்டம் அல்ல... தத்துவத்துடன் ஆடுகிற ஆட்டம்" என்று நமது தமிழக வெற்றி கழகத்தின் அரசியல் பாதையை மிக தெளிவாக வரையறுத்து வெளியிட்டார் நமது வெற்றி தலைவர். லட்சக்கணக்கான கழகத் தோழர்களும், பொதுமக்களும் தன்னெழுச்சியாக கலந்து கொண்ட முதல் மாநாட்டில் தொடங்கிய நமது அரசியல் பயணம் வெற்றிச் சாலையில் என்றைக்கும் தொடர்ந்து பயணிக்கும்! பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற தத்துவத்தின் வழியில் தமிழ்நாட்டுக்காக தொடர்ந்து உழைப்போம்! கொள்கை தலைவர்களின் வழிகாட்டலில், மாண்புமிகு முதலமைச்சர் தமிழக வெற்றி கழக தலைவர் அண்ணன் அவர்களுடைய தலைமையில்... ஆட்சி மாற்றத்தையும் அரசியல் மாற்றத்தையும் ஏற்படுத்திய நமது வெற்றிப் பயணம் மக்களுக்காக என்றைக்கும் தொடரும்! @TVKVijayHQ | @TVKPartyHQ | @TVKHQITWingOffl | @BussyAnand #தமிழகவெற்றிக்கழகம் #TVK
36
927
7
4,784
37,918
Vivek Gananathan retweeted
"பள்ளியில் பயிலும் குழந்தைகள் பாதுகாப்பில் பணம் பார்த்த கேவலமான கும்பல்.. தி.மு.கவிற்கு பேசுவதற்கு அருகதையே கிடையாது..." குழந்தைகளுக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை நாங்கள் வசூல் செய்வோம் என சான்றிதழ் வழங்க 4,000க்கும் மேற்பட்ட பள்ளிகளில் புரோக்கரை வைத்து கோடிக்கணக்கில் பணத்தை வசூல் செய்ததால் தற்போது மாட்டிக்கொண்டுள்ளார்கள் - அன்பில் மகேஷ் மீதான வழக்கு குறித்து அமைச்சர் விளக்கம் #Chennai | #MinisterNirmalkumar | #DMK | #AnbilMaheshPoyyamozhi | #MKStalin | #PolimerNews
54
668
22
2,415
87,332
Vivek Gananathan retweeted
This is a major miss from Union Power Ministry, Article says Rajasthan is spending ₹46.09 per unit power. This has raised serious questions about national demand forecasting and resource adequacy planning by Union government. Since individual States have limited visibility of nationwide power demand and generation availability, unlike central power-sector institutions. The Union Power Ministry needs to examine why such demand–supply gaps were not anticipated and planned in advance. Atleast now Union Power Ministry should plan on national-level forecasting and better coordination with states which could help States avoid such prohibitively expensive power in future. timesofindia.indiatimes.com/…
86
512
29
1,714
108,392
25
493
5
1,361
17,162
Vivek Gananathan retweeted
1.5°C இலக்கிற்கு வாய்ப்பில்லை ஐ.நா வெளியிட்ட புதிய அறிக்கை #UN | #UNEP | #HeatWave
5
73
11,568
Vivek Gananathan retweeted
காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு, காவலர் நினைவுச் சின்னம் முன்பாக மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தி, பணியின்போது உயிரிழந்த காவலர்களின் குடும்பங்களுக்கு ரூ.5.96 கோடி காப்பீட்டுத் தொகைக்கான ஆணைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் வழங்கினார். #CMJosephVijay‌
18
345
3
1,119
28,618
Vivek Gananathan retweeted
அரசியல் மேடைகள் தந்தை பெரியார் காலத்தில் பகுத்தறிவைக் கற்பிக்கும் பள்ளிகளாக இருந்தன; அறிஞர் அண்ணா காலத்தில் அரசியல் அறிவை வளர்க்கும் பல்கலைக்கழகங்களாக இருந்தன. ஆனால், அண்ணாவிற்குப் பிறகு தி.மு.க., அரசியல் மேடைகள் தனிநபர் தாக்குதல் மேடைகளாக மாறின; அதுவும் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இயங்கும் தி.மு.க-வின் தற்போதைய மேடைகள், ஆபாசப் பேச்சுக்கள் - அசிங்கமான வார்த்தைகள் - அவதூறு கருத்துக்களை மட்டுமே பரப்பிக் கொண்டிருக்கும் அருவருப்பான மேடைகளாக மாறிவிட்டன. அதுவும், 2026 சட்டமன்றத் தேர்தலில் தோற்று வீட்டில் முடங்கி இருக்கும் தி.மு.க., தன் ஆற்றாமையை, காழ்ப்புணர்வை தன் ஒவ்வொரு நடவடிக்கையிலும் வெளிப்படுத்துகிறது. அவற்றில் சமூக ஊடகங்கள் மற்றும் அரசியல் மேடைகளை தி.மு.க-விற்கு எதிரணியில் இருக்கும் அரசியல் கட்சிகளை, அரசியல் கட்சிகளின் தலைவர்களை தனிப்பட்ட முறையில் ஆபாசமாகத் தாக்கும் களங்கம் சூழ்ந்த களமாகப் பயன்படுத்தி வருகிறது. அந்தவகையில், சென்னையில் நடைபெற்ற தி.மு.க மகளிரணி மற்றும் மகளிர் தொண்டரணி சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பெண் பேச்சாளர் ஒருவர் , தமிழ்நாட்டு மக்களால் மிகப்பெரிய நம்பிக்கையுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் திரு.சி.ஜோசப் விஜய் அவர்களை மிகவும் தரக்குறைவான முறையில் விமர்சனம் செய்கிறார். அதை மேடையில் இருக்கும் சென்னை மாநகர மேயர் என்ற பொறுப்பான பதவியில் இருக்கும் மேயர் பிரியா அவர்கள் கைகொட்டி சிரித்து ரசித்துக் கொண்டிருக்கிறார். தி.மு.க-வின் நாடாளுமன்ற குழுத் தலைவராகவும் தி.மு.க-வின் துணைப் பொதுச் செயலாளராகவும் உள்ள திருமதி.கனிமொழி ராஜாத்தி கருணாநிதி அவர்கள் தலைகுனிந்து மௌனமாக இருக்கிறார். அவர் அந்தப் பேச்சாளரைக் கண்டிக்காதது ஒருபுறம் என்றால், மறுபுறம் சொந்தக் கட்சியினர் பேசும் பேச்சுக்களை கேட்க முடியாமல் திருமதி.கனிமொழி அவர்களே தலைகுனிந்து கூனிக்குறுகும் அளவுக்குத்தான் இன்றைய தி.மு.க மேடைகளின் தராதரம் இருக்கிறது. இதற்கு வன்மையான கண்டனத்தைத் தெரிவிக்கிறேன். மேலும், உடனடியாக, சட்டப்படியான முறைகளில், தி.மு.க-வின் இதுபோன்ற அநாகரீக செயல்கள் தடுக்கப்பட வேண்டும் என்பதையும் அழுத்தமாக வலியுறுத்துகிறேன். அப்போதுதான் ஜனநாயகமும் ஆரோக்கியமான அரசியலும் வலுப்பெறும். அதனால், தி.மு.க மேடையில் அநாகரீக முறையில் பேசிய அந்தப் பெண் பேச்சாளர் மீது சட்டப்படியான நடவடிக்கை உடனடியாக எடுக்கப்பட வேண்டும். நாகரீக அரசியல், பண்பான அரசியல் என்று வெறும் வார்த்தைகளில் மட்டும் பேசிக் கொண்டிருக்கும் தி.மு.க தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இவற்றை எல்லாம் கண்டிக்காமல் வழக்கம்போல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். அல்லது "அவரே இதுபோன்ற கொச்சையான பேச்சுக்களை கேட்டு ரசித்து ஊக்கப்படுத்திக் கொண்டிருக்கிறாரா?" என்ற கேள்விக்கு அவர்தான் பதில் சொல்ல வேண்டும். ஆனால், இதுபோன்ற அவதூறுகளால், ஆபாசப் பேச்சுக்களால் தமிழ்நாட்டின் புதிய நம்பிக்கையாக உருவாகி உள்ள தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் திரு.சி.ஜோசப் விஜய் அவர்களின் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தி மறைத்துவிட முடியாது. ஆனால், தி.மு.க-வின் இதுபோன்ற ஆபாச நடவடிக்கைளால், அந்தக் கட்சியும் அதன் தலைமையும் தமிழ்நாட்டு மக்களின் உள்ளங்களில் இல்லங்களில் இருந்து முற்றிலுமாகத் துடைத்தெறியப்படும் என்பது உறுதி! ஒரு காலத்தில் அழகிய தமிழின் அடுக்குமொழிகளால் கட்சியை வளர்த்த தி.மு.க-வினர் இன்றைக்கு அசிங்கமான பேச்சுக்கள், ஆபாசமான வாக்கியங்கள், கொச்சையான வார்த்தைகளுக்குள் முடங்கிப்போய் கிடக்கின்றனர். அவர்களை முறைப்படுத்தி கட்சியை வளர்க்கும் வழி தெரியாமல் அந்தக் கட்சியின் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களும் திசை தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார். தந்தை பெரியாரின் பகுத்தறிவு - சுயமரியாதை - சமூகநீதிக் கருத்துக்களையும் பேரறிஞர் அண்ணா அவர்கள் அரசியலுக்கு வகுத்துக் கொடுத்த கடமை - கண்ணியம் - கட்டுப்பாடு என்ற இலக்கணத்தையும் மறந்துவிட்ட தி.மு.க-வினர்... அவர்களுடைய இதுபோன்ற அவதூறுகளையும் ஆபாசப் பேச்சுக்களையும் கடந்துதான் அண்ணன் திரு.சி.ஜோசப் விஜய் அவர்கள் தமிழ்நாட்டு அரசியல் களத்திலும் தமிழக மக்களின் மனங்களிலும் நிரந்தர வெற்றியைப் பெற்றுள்ளார்; இனியும் பெற்றுக் கொண்டே இருக்கப்போகிறார் என்பதையாவது மறக்காமல் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
14
966
30
2,969
51,143
Vivek Gananathan retweeted
மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியின் வளர்ச்சிக்காகவும், மேம்பாட்டிற்காகவும் புதிய திட்டங்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு #CMJosephVijay‌
14
681
11
2,038
66,877
Vivek Gananathan retweeted
தாராபுரம் சட்டமன்றத் தொகுதியின் வளர்ச்சிக்காகவும், மேம்பாட்டிற்காகவும் புதிய திட்டங்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு #CMJosephVijay‌
36
805
10
2,517
55,439
Rowdytime Runner! சென்னையில் அதிகனமழை பொழிந்துள்ளது. தனது தொகுதியான திருவல்லிக்கேணி – சேப்பாக்கம் மக்களை நேரில் சென்று பார்க்காமல், பண்ணையார் வீட்டு மகன் ரீபோஸ்ட்நிதி துபாய் பயணம் மேற்கொள்கிறார். சட்டமன்றத்தில் தனது தொகுதி மக்களுக்காகப் பேசத் துப்புக்கெட்டு ஓட்டமெடுக்கிறார் என்றால், இப்போதும் ஓட்டமெடுக்கிறார் ஓட்டநிதி! ஆபாசநிதியோ உல்லாசப் பயணம் செல்ல, ஆபாசநிதியின் ஆஸ்தான அடிவருடியின் உத்தரவின்படி, Generational Abusers ஓட்டநிதியின் பழைய காணொளியை எடுத்து, அவர் தொகுதிக்குச் சென்றதாகப் பரப்பி வருகின்றனர். இப்படிப் பொய்த் தகவல்களைப் பரப்பி அரசியல் பிழைப்பு நடத்துவதற்கு யோசனை சொல்லிவிட்டு, அடுத்தவர்கள் தகவலைச் சரிபார்க்கவில்லை எனக் கோமாளித்தனம் செய்யும் சர்க்கஸ் கூடாரம்தான் திமுக! இரவு முழுவதும் தவெக அரசு செயல்படவில்லை என ஒப்பாரி வைத்து ஓலமிட்ட ஓட்டநிதியின் துப்புக்கெட்ட Generational Abusers, காலையில் மழைநீர் வடிந்ததற்குத் திமுகதான் காரணம் என வெட்கங்கெட்டுத் தங்களது Dummy Daddy-யின் வழியில் தப்பாமல் Credit Stealing செய்கின்றனர். ஒருபுறம் பொறை போட்டு வளர்க்கும் Generational Abusers Credit Stealing செய்ய, மறுபுறம் ஓட்டநிதி துபாய்க்கு ஓட, வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார் Sweet Uncle. நன்றாக ஓய்வெடுங்கள், Uncle!
130
1,417
57
3,365
114,779
Vivek Gananathan retweeted
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு மண்டல அளவிலான கண்காணிப்பு அலுவலர்கள், வட்டார துணை ஆணையர்கள், மண்டல அலுவலர்கள், ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் ஆகியவற்றில் பொதுமக்கள்தொடர்பு கொண்டு தங்களது புகார்களைத் தெரிவிக்கலாம். #CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @imrajmohan | 1/2
1
53
2
108
9,267
அதிகார கொட்டாரத்தை இளைஞர் கிளர்ச்சிக்கு அஞ்சி, தன் சொந்தத்தந்தை பெயரில் வைக்கப்பட்ட திட்டத்தின் பெயரை திருத்தியெழுத வைத்து, தங்கள் கொள்கைத்தலைவரின் பெயரைச் சூட்ட வைத்த உண்மையான சுயமரியாதை பட்டாளத்தின் வரலாற்றுச் சின்னம் கோவை பெரியார் அறிவுலகம் என்று சரித்திரத்தில் எழுதப்படும்!
பெரியார் அறிவுலகம் - தமிழ் ஜனநாயகனின் சாதனை! கோவை பெரியார் அறிவுலகத்தை மாண்புமிகு தமிழ்நாட்டின் முதலமைச்சர் அண்ணன் விஜய் அவர்கள் இன்று திறந்து வைத்திருக்கிறார். 20ம் நூற்றாண்டின் மாபெரும் கலகக்காரரின் பெயரில் அமைந்துள்ள இவ்வளாகம் 2026ம் ஆண்டு தேர்தல் முடிவுகளை வென்றெடுத்த சாமானிய இளைஞர் பட்டாள அணிதிரட்சியின் முதல் வெற்றிச்சின்னம். சாதி, மத எல்லைகளுக்கு அப்பால் இளைஞர்களும், பெண்களும் அணிதிரண்டு வென்றுகாட்டிய சமத்துவ கிளர்ச்சியின் அறிவுச்சின்னம். ஏன்? பெரியார் பெயரில் அறிவுலகம் அமைக்க வேண்டும் என்பதோ, பெரியார் பெயரில் நூலகம் அமைக்க வேண்டும் என்பதோ ஸ்டாலினுக்கோ - ஸ்டாலின் குடும்பத்துக்கோ துளியும் எண்ணம் கிடையாது. கலைஞர் நூற்றாண்டை ஒட்டி திமுக அரசு அமைந்ததும் அறிவிக்கப்பட்ட கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை, மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகம் அறிவிப்புகளின் அடிப்படையில் 2024 ஜூலை 15ம் தேதி கலைஞர் நூற்றாண்டு நூலகம் மதுரையில் திறக்கப்பட்டது. இந்த நூலகம் திறப்பதற்கான ஏற்பாடுகள் தொடங்கியிருந்த நேரத்தில், ஜூன் 27, 2024 அன்று சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் திருச்சி, கோவையிலும் கலைஞர் பெயரில் நூலகம் அமைக்கப்படும் என்று அறிவிப்பை வெளியிட்டார் ஸ்டாலின். ஆனால், நவம்பர் 6, 2024 அன்று கோவையில் கலைஞர் நூலகத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா நடக்கிறபோது, மேடையில் அதனுடைய பெயரை மாற்றி 'சென்னையில் அண்ணா நூலகம், மதுரையில் கலைஞர் நூலகம் ஏற்கனவே இருக்கிறது. எனவே, கோவையில் பெரியார் பெயரில் இந்த நூலகம் அமையும்' என்று மாற்றி அறிவித்துவிட்டார் ஸ்டாலின். அப்போதும் பெரியார் அறிவுலகம் என அறிவிக்கவில்லை! நவம்பர் 6 அந்த மேடையில் அறிவிப்பு செய்கிற வரை, பெரியார் பெயரில் நூலகம் அல்லது அறிவுலகம் அமைக்கும் எந்தத்தகவலும் வெளியில் சொல்லப்படவில்லை. இன்னும் சொல்லப்போனால், நவம்பர் 6 அடிக்கல் நாட்டுவதற்கு முதல்நாள், நவம்பர் 5, 2024 அன்று அன்றைய திமுக அரசின் சார்பில் வெளியிடப்பட்ட முதலமைச்சரின் கோவை பயணத்திட்டம் குறித்த அறிவிப்பில் கூட 'கலைஞர் நூலகம்' அடிக்கல் நாட்டுவிழாவில் கலந்துகொள்கிறார் என்று தான் செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டது. ஆனால், அடிக்கல் நாட்டும் மேடையில் திடீரென்று எப்படி இந்த பெரியார் பாசம் பொத்துக்கொண்டு வந்தது? உண்மையில் ஸ்டாலின் அரசுக்கு பெரியார் மீது பற்று இருந்திருந்தால், 2022 செப்டம்பர் மாதம் திராவிடர் கழகத்தின் சார்பில் மானமிகு ஆசிரியர் வீரமணி அவர்கள், திருச்சியில் பெரியார் உலகம் அடிக்கல் நாட்டுவிழா நடந்தபோது அதில் கலந்துகொண்டு அடிக்கல் திறந்த ஸ்டாலின், தமிழ்நாடு அரசின் சார்பிலும் 'பெரியார் அறிவுலகம்' திறக்கப்படும் என அறிவித்திருக்க வேண்டும். ஏன் அறிவிக்கவில்லை? 2024 ஜூன் மாதம் 27ம் தேதி 110 விதியின் கீழ் 'கலைஞர் நூலகம்' அமைக்கப்படும் என்று சட்டசபையில் அறிவித்தபோது பெரியார் மீது வராத பாசம், நவம்பர் 6 விழா மேடையில் எப்படி வந்தது? செப்டம்பர் 29, 2024 அன்று ஜோசியக்காரர்கள் குறித்து கொடுத்த தேதியில் தன் மகனுக்கு துணை முதல்வர் பதவி கொடுத்து அழகுபார்ப்பதற்கு 10 நாள் முன்பு பெரியார் பிறந்தநாள் கொண்டாடப்பட்டபோது வராத பெரியார் பாசம் நவம்பர் 6 விழா மேடையில் எப்படி வந்தது? எப்படி வந்தது என்றால் அக்டோபர் 27, 2024 விக்கிரவாண்டி மாநாட்டில் அண்ணன் விஜய் அவர்கள் அடித்த அடிக்குப் பிறகு வந்தது. விக்கிரவாண்டி மாநாட்டில் 'பெரியார் - அண்ணா பெயரை பயன்படுத்தி ஒரு குடும்பம் அடிக்கும் கொள்ளை' என்று நங்கு நங்கு என்று மண்டையில் கொட்டிய பிறகு வந்தது! 'தவெக ஆட்சி அமைத்தால் அனைத்துத் தலைவர்களின் பெயரிலும் திட்டங்களுக்கு பெயர் சூட்டப்படும்' என அந்த மாநாட்டுப்பேருரையில் அண்ணன் விஜய் வாளைச்சுழற்றிய பிறகு வந்தது! விக்கிரவாண்டி மாநாடு நிகழ்த்திய தாக்கமும், அதில் கிளர்ந்தெழுந்த இளைஞர்களின் 'குடும்பச் சுரண்டலுக்கு எதிரான' ஆவேச உத்வேகமும் தந்த அச்சத்தால் வந்தது! அக்டோபர் 27 விக்கிரவாண்டி மாநாடு நடந்து முடிந்த ஒருவார காலத்தில் நவம்பர் 6 அன்று தான் கோவையில் அடிக்கல் நாட்டுவிழா நடந்தது. நவம்பர் 6 கோவை நூலக அடிக்கல் நாட்டுவிழாவிற்கு பிறகும் கூட, திருச்சியில் அமைவதாக அறிவிக்கப்பட்டிருந்த நூலகத்திற்கு அரசாணை வெளியிட்டபோதும், டெண்டர் கோரப்பட்ட போதும், மார்ச் 21,2025 அன்று அடிக்கல் நாட்டியபோதும் 'கலைஞர் நூலகம்' என்றுதான் பெயரிட்டிருந்தது ஸ்டாலின் அரசு. அதன்பிறகு, ஏப்ரல் 2, 2025 அன்று திருச்சி நூலகத்திற்கு காமராஜர் பெயர் சூட்டப்படும் என பெயரை மாற்றினார் ஸ்டாலின். நெல்லையில் காயிதே மில்லத் பெயரில் நூலகம் அமைக்கப்படும் என்று டிசம்பர், 2025ல் அறிவிக்கப்பட்டது. இந்த பெயர் மாற்றங்கள் மற்ற தலைவர்களின் மீதுள்ள மதிப்பால் செய்யப்பட்ட மாற்றங்கள் கிடையாது!
16
337
1
941
18,288
Vivek Gananathan retweeted
தமிழ்நாட்டின் எஸ்.ஐ.ஆர்: ஜனநாயகப் படுகொலையின் முதல் குற்றவாளி தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்! அம்பலமாகும் உண்மைகள்! மாநில உரிமைகள் என்றால், டெல்லியில் பதுங்குவது... தமிழ்நாட்டில் பாய்வது... எதிர்கட்சியாக இருக்கும்போது ஒரு பேச்சு; ஆளும் கட்சியாக இருக்கும்போது மற்றொரு பேச்சு. 70 ஆண்டுகளாக தேர்தல் அரசியலில் இருக்கும் தி.மு.க-வின் அரசியல் 'டிராமா'க்கள், காலம் காலமாகத் தமிழகத்தில் இப்படித்தான் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. எஸ்.ஐ.ஆர்.(Special Intensive Revision SIR) முறைகேடுகளை எதிர்த்து நாடே கொந்தளித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், கள்ள மௌனம் காத்துக் கொண்டிருக்கும் தி.மு.க, 'எஸ்.ஐ.ஆர் டிராமா'-வை புதிதாக அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது. எஸ்.ஐ.ஆர் பணிகள் தமிழ்நாட்டில் நடைபெறும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்தநாளில் இருந்து, தி.மு.க-வின் செயல்பாடுகளை கவனித்தவர்களால் தி.மு.க-வின் திருட்டு 'டிராமா'-வை எளிதாகவே புரிந்து கொள்ள முடியும். எஸ்.ஐ.ஆர்-ஐ ஆரம்பத்தில் ஒவ்வொரு கட்டத்திலும் எதிர்ப்பதுபோல் காட்டிய தி.மு.க, மெல்ல மெல்ல தேர்தல் ஆணையத்தோடும் ஒன்றியத்தில் ஆட்சி செய்யும் பாரதிய ஜனதா கட்சியோடும் ரகசிய தி.மு.க கூட்டணியை அமைத்துக் கொண்டது. அந்தக் கூட்டணி முழுமை பெற்றதையடுத்து, தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர் பணிகள் முழுவதும் தி.மு.க-வின் கட்டுப்பாட்டிலேயே நடைபெற்றது. எஸ்.ஐ.ஆர் என்பது இந்தியத் தேர்தல் ஆணையத்தால், ஒன்றிய பா.ஜ.க அரசில் நடைமுறைப்படுத்தப்பட்டாலும், தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீதியிலும்... ஒவ்வொரு தெருவிலும்... ஒவ்வொரு சந்துகளிலும் அதை முழுமையாக நடைமுறைப்படுத்தியது தி.மு.க.தான். இதை யாராலும் மறுக்க முடியுமா? தி.மு.க தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களால் மறுக்க முடியுமா? 2025 அக்டோபர் 27-ஆம் தேதி முதல் 2026 பிப்ரவரி 23-ஆம் தேதி வரை எஸ்.ஐ.ஆர் பணி நடந்த காலம் முழுவதும், தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவர் தி.மு.க தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள்தான். ஒவ்வொரு வாக்குச்சாவடியின் 'ஓட்டு ஜாபிதா'வும் தி.மு.க-வின் கிளைச் செயலாளர், ஒன்றியச் செயலாளர்களிடம்தான் இருந்தன. களத்தில் பணியாற்றிய அரசு அதிகாரிகள்(BLO) அனைவரும் மாநில அரசின் ஊழியர்களாக இருந்தாலும், வாக்காளர் பட்டியல் போய்ச் சேர்ந்தது திமுக ஒன்றியச் செயலாளர்கள் மற்றும் கிளைச் செயலாளர்களின் கைகளுக்குத்தான்! எந்த அதிகாரி... எந்த வாக்குச்சாவடிக்கு நியமிக்கப்பட வேண்டும் என்பதைத்கூட தி.மு.க மாவட்டச் செயலாளர்களும், அந்தந்த மாவட்டங்களில் அன்றைக்கு அமைச்சர்களாக இருந்தவர்களுமே முடிவு செய்தனர். அதோடு, 70 ஆண்டுகள் தேர்தல் அனுபவமும் கள்ள ஓட்டுக்கள் போடுவதில் கின்னஸ் சாதனையை மிஞ்சிய சாதனையைப் படைத்துள்ள தி.மு-க இதற்காக, 7 லட்சம் பேரை களத்தில் இறக்கியது. அவர்கள் அத்தனை பேரும் தி.மு.க நிர்வாகிகள், தி.மு.க ஆதரவாளர்கள். இவர்களில், 75 ஆயிரத்து 32 BLA2-க்கள், 5 லட்சத்து 50,000 வாக்குச்சாவடிக் குழு உறுப்பினர்கள் (BLC), 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி டிஜிட்டல் முகவர்கள் (BDA) என்று வேலைகளைப் பிரித்துக் கொடுத்து, ஒரு ஜனநாயகப் படுகொலைக்கு கூலியாட்களாக அவர்களை நியமித்து, தங்கள் ஊழல் பணத்தில் கோடிக்கணக்கில் செலவும் செய்தது. அந்தக் கூலியாட்கள்தான் முழுமையாக எஸ்.ஐ.ஆர் பணிகளை மேற்கொண்டனர். "உங்கள் வாக்குகள் பறிபோகாது. தி.மு.க முகவர்கள் உங்கள் வீடுகளுக்கே வந்து உங்கள் விபரங்களைப் பெற்றுக் கொள்வார்கள்" என்று தி.மு.க தலைவரும் அன்றைக்கு முதலமைச்சராக இருந்த திரு.மு.க.ஸ்டாலின் அவர்களும் இதைப் பெருமையாகப் பேசினார். அன்றைக்கு எதிர்கட்சித் தலைவராக இருந்த அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலாளர் திரு.எடப்பாடி பழனிசாமி அவர்களே, "எஸ்.ஐ.ஆர் வேலைகளை தேர்தல் ஆணையத்திற்காக தி.மு.க தான் செய்கிறது. தி.மு.க கட்டுப்பாட்டில்தான் எஸ்.ஐ.ஆர் வேலைகள் நடக்கின்றன" என்று குற்றம்சாட்டினார். ஆனால், எஸ்.ஐ.ஆர் என்ற அறிவிப்பு தமிழ்நாட்டிற்கு கூட அல்ல... பீகார் மாநிலத்தில் நடந்தபோதே, தமிழக வெற்றி கழகம் அதைக் கடுமையாக எதிர்த்தது. தொடர்ந்து எஸ்.ஐ.ஆர் நடைமுறைகள் வந்தபோதும், அதில் குளறுபடிகள் வந்தபோதும், முதற்கட்டமாக 97 லட்சத்திற்கும் அதிகமாக வாக்காளர்கள் நீக்கப்பட்டபோதும்... தமிழக வெற்றிக் கழகம் கடுமையாக எதிர்த்தது. அறிக்கைகள் விட்டு எதிர்ப்புத் தெரிவித்தது மட்டுமல்ல.. உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்களை அமர்த்தி எஸ்.ஐ.ஆரை ரத்து செய்ய வேண்டும் என்று வழக்கு நடத்தியது தமிழக வெற்றிக் கழகம். ஆனால், எஸ்.ஐ.ஆர் வந்தபோதும், அதன் நடைமுறைகள் தொடங்கியபோதும் எதிர்த்த தி.மு.க, எஸ்.ஐ.ஆர்-ல் முதற்கட்டமாக 97 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள்... ஏறத்தாழ ஒருகோடி பேர் நீக்கப்பட்ட நேரத்தில் ஒரு அறிக்கைகூட வெளியிட்டு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. அதன்பிறகு, இரண்டாவது கட்ட நடைமுறையில், சுமார் 27 லட்சம் வாக்காளர்கள் மட்டும் மீண்டும் சேர்க்கப்பட்டனர். இறுதியாக, 74 லட்சம் வாக்காளர்கள் தமிழ்நாட்டின் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர். 6.4 கோடியாக இருந்த தமிழ்நாட்டு வாக்காளர்களின் எண்ணிக்கை 5.7 கோடியாகச் சுருங்கியது. இதில், தமிழக மக்களின் புதிய நம்பிக்கையாக தோன்றியிருந்த தமிழக வெற்றிக் கழகத்திற்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிப்பார்கள் என்று கருதப்பட்ட, 30 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் - பெண்கள் குறிவைத்து நீக்கப்பட்டிருந்தனர். மாற்றத்தை விரும்பிய தமிழ்நாட்டின் புதிய தலைமுறையினரின் உரிமை பறிக்கப்பட்டிருந்தது. ஜனநாயகத்தின் வலிமையை அழித்தொழிக்கும் இந்த வேலையை தி.மு.க-வே தலைமையேற்று நடத்தியது. அந்த மமதையில்தான், 21.2.2026 அன்று மதுரையில் நடைபெற்ற திமுக தென் மண்டல வாக்குச்சாவடிக் குழு உறுப்பினர்களுக்கான ‘என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி’ பயிற்சி மாநாட்டில் பேசிய திமுக தலைவர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள், “சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகள் (S.I.R.) மூலம் பல்வேறு மாநிலங்களில் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். ஆனால், தமிழ்நாட்டில் யாருடைய வாக்குகளையும் நீக்க விடாமல், பம்பரமாக உழைத்த இயக்கம் திமுக. வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் வெற்றியை உறுதி செய்யப் போவது எஸ்.ஐ.ஆர் பணிகளை மேற்கொண்ட தி.மு.க-வின் BLA, BLC, BDA என பணியாற்றிய 7 லட்சம் பேர்தான்” என்று பேசினார். அதோடு நிற்கவில்லை, தேர்தல் ஆணையம் மற்றும் அரசு இயந்திரத்தில் இருந்து வாக்காளர் குறித்த தரவுகளைத் திருடிக் கொண்ட, தி.மு.க-வின் 'பென்' நிறுவனம், தேர்தல் நாளான்று வாக்களித்தவர்களை 'டிராக்' செய்யும் புதிய செயலி(App) ஒன்றையும் உருவாக்கியது. "தங்கள் ஆதரவு வாக்குகளை எல்லாம் காப்பாற்றிக் கொண்டு, தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவான வாக்குகளை எல்லாம் எஸ்.ஐ.ஆர் மூலம் நீக்கிவிட்டோம்; இனி நம் வெற்றியை யாரும் தடுக்க முடியாது" என்ற அகங்காரத்தில் இருந்தது தி.மு.க! அது உண்மையும்கூட. அப்படி நடந்ததால்தான் தமிழ்நாடு முழுவதும் இளைஞர்கள், பெண்கள், வயதானவர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், விவசாயிகள், மீனவர்கள், தொழிலாளர்கள் என அனைத்துத் தரப்பினரும் தமிழக வெற்றிக் கழகத்தை ஆதரித்து ஒரு மகத்தான வாக்குப் புரட்சிக்கு தயாராக இருந்தபோதும், 108 தொகுதிகளில் மட்டுமே தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றது. எஸ்.ஐ.ஆர் இல்லாமல் இருந்திருந்தால் தமிழக வெற்றிக் கழகம் 160 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருக்கும். தி.மு.க சட்டமன்றத்தில் பிரதான எதிர்கட்சி என்ற இடத்தைக்கூட பெற்றிருக்காது. இப்படி, இந்தியாவின் தனித்துவமான ஜனநாயகத்தைப் படுகொலை செய்த பழியில் பங்கேற்றுவிட்டு, இன்றைக்கு முதலைக் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார் தி.மு.க தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள். அவர் நடத்திக் கொண்டிருக்கும் 'டிராமா'-வையும் தி.மு.க-வையும் இனி தமிழ்நாட்டு மக்கள் மன்னிக்கமாட்டார்கள்; ஜனநாயக சக்திகளும் ஆதரிக்காது. இனிவரும் எந்தத் தேர்தலிலும் தி.மு.க வெல்லாது. ஜனநாயகத்தைப் படுகொலை செய்யும் பழியில் பங்கெடுத்த தி.மு.க-வை மொத்தமாக தமிழ்நாட்டு மக்கள் ஜனநாயகத் தேர்தல் களத்தில் இருந்து அப்புறப்படுத்தினார்கள்; இனியும் அப்புறப்படுத்துவார்கள். அதற்கு உதாரணம்தான், 6 மாதங்களுக்கு முன்பு 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று அகங்காரத்துடன் பேசிக் கொண்டிருந்த தி.மு.க தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை, அண்மையில் மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் இரண்டாம் இடம் பெற்றதையே பெருமையாகப் பேசி விளம்பரம் செய்யும் அவல நிலைக்கு தமிழ்நாட்டு மக்கள் தள்ளினர். இது ஜனநாயகப் படுகொலையை நிகழ்த்திய தி.மு.க-விற்கும், அதன் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் மக்கள் அளித்த ஜனநாயகத் தீர்ப்பு! உரிய நேரத்தில், எஸ்.ஐ.ஆர் பணிகளில் தி.மு.க செய்த சதிவேலைகளை முழுமையாக ஆதரங்களுடன் அம்பலப்படுத்துவோம். தமிழக வெற்றிக் கழகம் என்றும் ஜனநாயகத்திற்கு எதிராக, விதிமுறைகளுக்கு மாறாக நடைபெறும் எஸ்.ஐ.ஆர் - ஐ எதிர்க்கும். முழுமையாக தமிழ்நாட்டு வாக்காளர்களின் ஜனநாயக உரிமையைக் காக்கும்!
7
766
45
1,807
38,519
திமுக தோல்விக்கு ஊழல், சட்டம் ஒழுங்கு சீரழிவு, பெண்களைப் பற்றி தவறாகப் பேசிய பேச்சுகள் மற்றும் கூட்டணிக் கட்சிகளை நடத்திய விதம்தான் காரணம்! 21.2.2026 அன்று மதுரையில் நடைபெற்ற திமுக தென் மண்டல வாக்குச்சாவடிக் குழு உறுப்பினர்களுக்கான ‘என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி’ பயிற்சி மாநாட்டில் பேசிய திமுக தலைவர் அண்ணன் மு.க. ஸ்டாலின் அவர்கள், “சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகள் (S.I.R.) மூலம் பல்வேறு மாநிலங்களில் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். ஆனால், தமிழ்நாட்டில் யாருடைய வாக்குகளையும் நீக்க விடாமல், பம்பரமாக உழைத்த இயக்கம் திமுக. தமிழ்நாடு முழுவதும், திமுக சார்பில் நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி நிலை முகவர்களான BLA2-க்களைச் சந்தித்து வருகிறேன். திமுக சார்பில் 75,032 BLA2-க்கள், 5,50,000 வாக்குச்சாவடிக் குழு உறுப்பினர்கள் (BLC), 75,032 வாக்குச்சாவடி டிஜிட்டல் முகவர்கள் (BDA) உள்ளனர். வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் வெற்றியை உறுதி செய்யப் போவது இந்த 7 லட்சம் பேர்தான்” என்றார். ஆனால், 2026 சட்டமன்றத் தேர்தலிலும் தற்போது நடைபெற்ற இடைத்தேர்தல்களிலும் மக்கள் திமுகவை முற்றிலுமாகப் புறக்கணித்துத் தோல்வியைத் தந்தவுடன், இப்போது எஸ்.ஐ.ஆர். மூலம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதே தங்களது தோல்விக்குக் காரணம் என்று திமுகவின் செய்தித் தொடர்பாளர்கள் பேசி வருகின்றனர். தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் எவ்வாறு நடைபெற்றன என்பதற்கு, அன்றைய முதலமைச்சராக இருந்த அண்ணன் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களே மதுரைக் கூட்டத்தில் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துவிட்டார். தேர்தலுக்கு முன்னால் "வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளைச் சிறப்பாக முடித்துவிட்டோம், எந்தப் பிரச்சனையும் இல்லை" என்று கூறிவிட்டு, தேர்தல் முடிந்து மக்கள் தீர்ப்பு எதிராக வந்த பிறகு மட்டும் வாக்காளர் திருத்தப் பணி மீது பழியைப் போடுவது என்ன வகையான அரசியல்? குடியரசுத் தலைவர் அவர்களிடம் அளிக்கப்பட்ட மனுவின் 4-வது கோரிக்கையில் கூட, எங்கு வாக்குத் திருட்டிற்கான திட்டவட்டமான ஆதாரங்கள் (Conclusive evidence of vote chori) சமர்ப்பிக்கப்பட்டுள்ளதோ, அந்த மாநிலங்களின் தேர்தல்களை மட்டுமே ரத்து செய்யக் கோரப்பட்டுள்ளது! மேற்கு வங்கத்தில் அப்போதைய முதலமைச்சர் மம்தா பானர்ஜி எஸ்.ஐ.ஆரைச் செயல்படுத்த மறுத்தபோதிலும், ‘ஊடுருவல்காரர்கள்’ என்ற பெயரைப் பயன்படுத்தி வலுக்கட்டாயமாகப் பல லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். அதேபோல அசாமிலும் பீகாரிலும் முறைகேடுகள் நடைபெற்றன; மகாராஷ்டிரா மற்றும் ஹரியானாவில் வேறு வகையான வாக்குத் திருட்டு நடைபெற்றுள்ளது! ஆனால், தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி ஆகிய இடங்களில் எஸ்.ஐ.ஆர். தொடர்பாக எந்தப் புகாரும் இல்லை. வரலாறு காணாத ஊழல், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, பெண்களுக்கு எதிரான தவறான பேச்சுகள், கூட்டணிக் கட்சிகளை அவமதித்து தான் திமுகவின் உண்மையான தோல்விக்குக் காரணம்! இப்போதுகூட எஸ்.ஐ.ஆரை எதிர்ப்பதாக திமுக செய்தித் தொடர்பாளர்கள் பேசி வருகிறார்களே தவிர, தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலகக் கோரி நடைபெறும் போராட்டத்தில் திமுக எம்பிக்கள் பங்கேற்கவில்லை. தமிழ்நாட்டில் உள்ள இடதுசாரிக் கட்சிகள், விசிக, மதிமுக ஆகிய கட்சிகளின் தலைவர்கள் டெல்லிப் போராட்டத்தில் கலந்துகொண்டு கைதானார்கள். ஆனால், திமுக சார்பில் ஒரு எம்பி கூட பங்கேற்கவில்லை. இதற்கு என்ன காரணம்? எஸ்.ஐ.ஆருக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றால் பாஜகவை பகைத்துக்கொள்ள நேரிடும் என்ற அச்சம்தான் இதற்குக் காரணம். தமிழ்நாட்டின் நலன், ஜனநாயகம், மதச்சார்பின்மை ஆகியவற்றில் திமுகவுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால், தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலகக் கோரி நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும். மாறாக, தமிழ்நாட்டில் வாக்காளர்கள் நீக்கப்படுவதைத் தடுத்துவிட்டதாகப் பேசிவிட்டு, இப்போது வாக்காளர்கள் நீக்கப்பட்டதே திமுகவின் தோல்விக்குக் காரணம் என்று கூறுவதை மக்கள் ஏற்க மாட்டார்கள்.
177
407
48
783
112,895
தெய்வப் புலவர் திருவள்ளுவர், ஓங்குபுகழ் தமிழுக்கும் ஒட்டுமொத்த உலகத் தமிழர்களுக்கும் பொதுவானவர். அத்தகைய பெருமானுக்குக் காவி வர்ணம் பூசி, ஒரு குறுகிய வட்டத்திற்குள் சுருக்கும் பாஜகவின் முயற்சிகள், அறத்திற்கு எதிரானவை, கண்டனத்திற்கு உரியவை. தமிழ் மண்ணுக்கு என்றே ஓர் அழிக்க முடியாத அறம் இருக்கிறது. பொங்கு தமிழுக்கும் பொங்கு தமிழர்க்கும் இன்னலும் தீதும் விளைவிப்பது போல நடந்துகொண்டால் என்னவாகும் என்பதை உலகமே அறியும். இனிவரும் காலங்களிலும் இத்தகைய செயல்களில் ஈடுபடுவோரைத் தமிழக மக்கள் எப்போதும் போல அறவே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ? இன்றும் என்றும் தமிழக வெற்றிக் கழகம், தமிழுக்கும் தமிழர்க்கும் அரணாக நிற்பதை ஓர் அறம் சார்ந்த நிலைப்பாடாகவே கொண்டிருக்கும் என்பதை உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
86
672
37
2,107
74,230