திமுகவில் அதிகாரப்பூர்வமாக இணைந்து கழகப்பணியாற்றத் தொடங்கி ஏறக்குறைய 7 ஆண்டுகள் ஆகின்றன. 2022ல் தொடங்கி தஞ்சை மாவட்ட ஐடி விங் துணை அமைப்பாளராகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். Teenage-இல் தொடங்கிய என் கழகப்பணி ஏதோ தற்செயலாக அமைந்தது அல்ல.
2006-ஆம் ஆண்டு எனது பள்ளிப் பருவத்தில் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் தேர்தல் பரப்புரைப் பேச்சுகளைக் கேட்டபோதுதான், திராவிட இயக்கத்தின் மீது எனக்கொரு ஈர்ப்பு ஏற்பட்டது. தந்தை பெரியாரைப் பற்றியும் பேரறிஞர் அண்ணாவைப் பற்றியும் திராவிடத்தைப் பற்றியும் முழுமையாகத் தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற தேடல் எனக்குள் உருவானது. ஆனால், திராவிடம் என்பது எனது ரத்தத்திலேயே ஊறியுள்ளது என்பதையும், என் தேடலுக்கான விடைகள் உங்களிடமும் இருக்கிறது என்பதையும் உங்களின் தொடர்ச்சியான கழகப் பணிகளைப் பார்த்த பிறகே நான் முழுமையாக உணர்ந்துகொண்டேன்.
எனினும், அந்த காலகட்டத்தில் நீங்கள் அரசியல் பணிகளில் எப்போதும் தீவிரமாக இருந்ததால், என்னால் உங்களுடன் அதிக நேரம் செலவிட முடியவில்லை. இருப்பினும், உங்களின் அரசியல் பணிகளையும், திராவிட இயக்கத்திற்காக நீங்கள் ஆற்றி வரும் பங்களிப்பு, உங்கள் கொள்கைப் பிடிப்புகளையும் பார்த்துப் பார்த்துதான் எனக்குள்ளும் அரசியல் ஆர்வம் துளிர்விட்டது. ஒரு கடைக்கோடி கிராமத்தில் பிறந்து, திராவிட முன்னேற்றக் கழகத்தில் சாதாரண அரசியல் தொண்டனாகத் பயணத்தைத் தொடங்கி, கடின உழைப்பு, விசுவாசம் மற்றும் அறிவாற்றலால், நாட்டின் உயரிய அதிகார மையமான நாடாளுமன்றத்தில் ஒலித்த குரலாக நீங்கள் உயர்ந்தது சாதாரணமானதல்ல.
நாடாளுமன்றத்தில் இடஒதுக்கீடு, பட்ஜெட், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, நீட் தேர்வு, தேசப்பற்று எனப் பல்வேறு தளங்களில் நீங்கள் முன்வைத்த விவாதங்கள் மிகச்சிறப்பானவை. நாடாளுமன்ற உறுப்பினராக முதன்முறையாகச் சென்றாலும், அவையை நடத்தும் தலைவர் இருக்கையில் (Chairperson) நீங்கள் அமர்ந்து வழிநடத்திய தருணம் எங்களைப் போன்றவர்களுக்குப் பெருமையின் உச்சம்.
1993-ல் நகர மாணவரணி துணை அமைப்பாளர்
1996-ல் நகர அமைப்பாளர்
2001-ல் கிளைச் செயலாளர்
2008- ல் பொதுக்குழு உறுப்பினர்
2014-ல் மாநில சிறுபான்மையினர் அணி துணைச்செயலாளர்
2018 ல்- மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணைச்செயலாளர்
எனப் பல பொறுப்புகளைக் கடந்து
2022 முதல் இன்று வரை அயலக அணிச் செயலாளராகவும், கழகத்தின் பல முக்கிய முடிவுகள் எடுக்க அமைக்கப்பெற்ற குழுக்களிலும் தொடர்ந்து இடம்பெறும் வகையில் உயர்ந்துள்ளது எங்களைப் போன்ற இளம் அரசியல் ஆர்வலர்களுக்கு மாபெரும் உந்துசக்தியாகும். அரசியலில் நீங்கள் கடந்து வந்த பாதைகளையும், கொள்கை அர்ப்பணிப்பையும் காணும்போது உங்களைப் போன்றே உழைக் வேண்டும், உயர வேண்டும் என்ற ஆர்வத்தை உருவாக்குகிறது. எங்களைப் போன்றவர்களுக்கு 'வினையூக்கி' நீங்கள்.
நம் கழகத் தலைவர் @mkstalin மற்றும் இளந்தலைவர் @Udhaystalin ஆகியோரின் மிகுந்த நம்பிக்கைக்குரியவராகச் செயல்படும் உங்களின் இந்த அரசியல் பயணம், என்னைப் போன்ற பலருக்கும் மிகச்சிறந்த வழிகாட்டுதலாக அமைந்துள்ளது.
இன்று லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு ஓர் உந்துசக்தியாக உருவெடுத்துள்ள நீங்கள், மென்மேலும் பல உயரங்களை எட்ட வேண்டும். என்றும் உங்கள் வழியில் பயணிப்பதில் பெருமிதம் கொள்கிறேன்.
பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல்
மண்புக்கு மாய்வது மன்
பிறந்தநாள் வாழ்த்துகள் மாமா!
@pudugaiabdulla ♥️
Khader retweeted
மாண்புமிகு முதலமைச்சர் @actorvijay மாலை 6:00 மணிக்கு மேல்!
Disclaimer: We can also pay you in the same currency.
#TVK #TVKVijay
பாஜகவுக்கு இம்முறை கிடைத்திருப்பது கவர்ச்சிகரமான அடிமை!
thenewsminute.com/news/how-b…
ஏதாவது நூதன விளக்கத்துடன் வருவார் ‘ஆந்திரா மகள்’ @Keerthana4VNR
இல்லையென்றால்.. ஒரு உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தி ரூ.2 லட்சம் கோடி முதலீடு ஈர்ப்பு ‘வெற்றி வடை’-யை பார்க்கலாம். அதுவும் இல்லன்னா இந்த செய்தியை மடைமாற்ற ஏதாவது ஒரு கைது நடக்கும். இன்னிக்கு வாகா தலைமைத் தற்குறி Roadshow வேற அமைஞ்சிருக்கு..
Khader retweeted
சிறைவாசிகளால் நடத்தப்படும் பெட்ரோல் நிலையங்களை மூடிவிட்டு தனியாரிடம் கமிஷன் டீல் பேசுகிறாரா அமைச்சர் கலெக்சன் குமார்?
முன்னாள் அமைச்சர் ரகுபதி அறிக்கை
சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கைக் ஒழுங்குபடுத்த காவல்துறையை பயன்படுத்தாமல், பந்தோபஸ்துக்கும்-இனிப்பு வழங்குவதை தடுப்பதற்கும் பயன்படுத்தினால் கொலைகளும்-கொள்ளைகளும் பெருகாமல் என்ன செய்யும்?
சட்டம், சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை முன்னாள் அமைச்சர் ரகுபதி அறிக்கை.
2021-2026 திராவிட மாடல் ஆட்சியில் இந்தியாவிலேயே சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை தமிழ்நாட்டில்தான் சிறப்பாகச் செயல்படும் துறையாக முதலிடம் பெற்றுத் திகழ்ந்தது.சிறைச்சாலைகள் வெறும் தண்டனைக் கூடங்களாக மட்டுமின்றி, கைதிகள் திருந்தி வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்திடவும், அங்கு இருக்கக்கூடிய தண்டனை சிறைவாசிகள் தங்கள் குடும்பத்தை காப்பாற்றிக் கொள்வதற்கு பொருளாதாரத்தை ஈட்டுவதற்கும் பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டன.
அந்தவகையில்தான் கைதிகளால் நடத்தப்படும் சில்லறை பெட்ரோல் வணிக விற்பனை நிலையங்களும் சிறைத்துறையால் செயல்படுத்தப்பட்டன. சிறையில் தயாரிக்கப்படும் பொருட்களை விற்பதற்க ‘பிரிசன் பஜார்’ என்கிற விற்பனை நிலையங்களும் சிறைத்துறை நிர்வாகத்தால் உருவாக்கப்பட்டன.
சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை மூலம் ஒரு சிறைவாசி மாதம் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 7 ஆயிரத்து 500 ரூபாய் முதல் 12000 வரை வருமானம் ஈட்டி தன்னுடைய குடும்பத்திற்கு அனுப்பக்கூடிய ஒரு சூழ்நிலை உருவானது. குடும்பத் தலைவன் சிறையில் இருந்தாலும் அந்தக் குடும்பம் பொருளாதாரத்தில் பாதிக்கப்படாதபடி சிறைத்துறை நிர்வாகம் தந்த வேலை வாய்ப்புகள் மூலமாக அவர்கள் வருவாயை ஈட்டி தங்கள் குடும்பத்தை காப்பாற்றுவதற்கு வசதியாக அது அமைந்தது.
சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறையில் நடைபெற்ற விற்பனை நிலையங்கள் தமிழகத்திலேயே மிகச்சிறந்தவையாக கோடிக்கணக்கான ரூபாய் லாபத்தை ஈட்டி தருகின்ற விற்பனை நிலையங்களாக விளங்கின. பெட்ரோல் நிலையங்கள் ஆண்டுக்கு சுமார் 13 கோடி ரூபாயும், பிரிசன் பஜார் ஆண்டு கோடியும் வருவாய் ஈட்டி தமிழக அரசு மற்றும் சிறைத்துறை நிர்வாகத்திற்கும் சிறைவாசிகளுக்கும் நல்ல வருவாயை உருவாக்கித் தந்தன.
சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை சார்பில் நடைபெற்ற விற்பனை நிலையங்கள் மற்ற தனியார் நடத்துகின்ற பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு போட்டியாக, வசூலிலும், வருவாயிலும் மிகச் சிறப்பாகச் செயல்பட்டன. இதெல்லாம் இன்றைய சிறைத்துறை அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமாரின் கண்ணை உறுத்தியிருக்கிறது.
இன்றைக்கு தமிழக வெற்றிக்கழக ஆட்சியில் சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை மூலம் நடைபெற்று வருகின்ற பெட்ரோல் சில்லறை விற்பனை நிலையங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதற்கு ஒரு முயற்சி நடப்பதாக தகவல் கசிந்து இருக்கிறது. அதன் முதல் கட்டமாக தமிழகத்தில் மத்திய சிறைசலைகள் மூலமாக நடத்தப்பட்ட பெட்ரோல் விற்பனை நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு இருக்கிறது. அங்கே இறைச்சி மற்றும் சிறைதுறை மூலம் தயாரிக்க பட்ட போன்ற பொருட்கள் விற்கப்பட்ட விற்பனை நிலையமும் மூடப்பட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து ஒன்றன் பின் ஒன்றாக மற்றவற்றையும் மூடி கடைசியாக அவற்றையெல்லாம் தனியாருக்கு தாரை வாக்கின்ற அந்த மகத்துவமான பணியை செய்யப் போகிற அரசாக த.வெ.க அரசு இருக்கப்போகிறது. எனவே மக்களுக்கு கிடைக்க வேண்டிய வருவாயை தனியாருக்கு தாரைவார்த்து அதில் கமிஷன் அடிப்பதில் ஒரு கணக்கு ஓடிக் கொண்டிருக்கிறது.
‘மக்கள் பணத்தை தொடமாட்டோம்’ என்று வீராவேசமாக பேசுவார்கள். ஆனால் கண்ணுக்குத் தெரியாத இடத்தில் கமிஷன் அடிக்கிறார்கள். இதுதான் தவெக அரசின் தாரக மந்திரமாக இருக்கிறது.
எந்தத் துறையிலும் அரசுக்கு கிடைக்க வேண்டிய வருவாயை தனியாருக்கு தாரை வார்ப்பதிலேயே தனிக்கவனம் செலுத்துகின்ற அரசாக தமிழக வெற்றிக் கழக அரசு இருக்கிறது.
இந்த டம்மி அரசாங்கம் விலைவாசி உயர்வை பற்றி கவலைப்படவில்லை. சட்டம் ஒழுங்கு குறித்து கவலைப்படவில்லை. இப்படி எதைப் பற்றியும் கவலைப்படாமல் வரப்போகிற இடைத்தேர்தலுக்கு என்ன செய்து நம்மை காப்பாற்றிக் கொள்ள முடியுமா என்று அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
நம்முடைய பொதுவுடமை தோழர்கள் இன்றைக்கு சிறைத்தறையினுடைய கட்டுப்பாட்டில் இயங்கி வருகிற அந்த பொருட்கள் விற்பனை நிலையங்கள் தனியாருக்கு தாரைவார்க்க படுவதை வரவேற்கப் போகின்றார்களா? அல்லது ஆதரிக்க போகின்றார்களா? அல்லது அனைத்து பிரிசன் பஜார்களும் தனியாருக்கு செல்வதை வரவேற்கப் போகின்றார்களா?
கைதிகள் தப்பிச் செல்கிறார்கள் என்ற வாதத்தை சாக்காக வைத்து தனியார்மயமாக்குகிறார் கலெக்சன் குமார்.
சட்டத்துறையில் ஆடு மேய்ப்பவருக்கு அரசு வழக்கறிஞர் பதவி, மின்சாரத்துறையில் ஒரு யூனிட் மின்சாரம் 41 ரூபாய்க்கு கொள்முதல், இப்பொழுது சிறைத்துறையில் தனியாருடன் லாபி அமைத்து அவர்களிடம் கலெக்சன் போடுகிறாரா என்று மக்கள் கேள்வி கேட்பார்களா இல்லையா?
எதைப்பற்றியும் கவலைப்படாமல் ரீல்ஸ் மூலமாக ஆட்சி நடத்தி விடலாம், ரீல்ஸ் மூலமாக மக்களை ஏமாற்றி விடலாம். பொய்யான வதந்திகளை பரப்பிவிடலாம் அதன் மூலம் மக்களை ஏமாற்றி விடலாம் என்று தொடர்ந்து தப்பு கணக்கு போட்டுக்கொண்டு இந்த அரசு இந்த தமிழக மக்களை வாட்டி வதைத்து கொண்டிருக்கின்றது.
தலைவர் தளபதி திராவிட மாடல் ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி இன்றைக்கு விழா நடத்துகிறார்கள். திமுக ஆட்சியில் கொண்டு வந்த புதிய பேருந்து நிலையம் திறப்புவிழா காண்கிறது என புதுக்கோட்டையில் திமுகவினர் இனிப்பு வழங்கினால் அதைத் தடுக்கிறார்கள் காவல்துறையினர்.
சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கைக் ஒழுங்குபடுத்த காவல்துறையை பயன்படுத்தாமல், பந்தோபஸ்துக்கும்-இனிப்பு வழங்குவதை தடுப்பதற்கும் பயன்படுத்தினால் கொலைகளும்-கொள்ளைகளும் பெருகாமல் என்ன செய்யும்?
முந்தைய ஆட்சியின் திட்டங்களுக்கு துவக்க விழாக்களை நடத்திவிட்டுச் செல்கிற ரீல்ஸ் ஆட்சியாக தான் இந்த தவெக ஆட்சி இருக்கிறது. வெறும் ரீல்ஸ் மூலமாகவே ஐந்தாண்டு காலத்தையும் ஓட்டிவிடலாம் என்று கருதும் தவெக ஆட்சிக்கு நிச்சயமாக ஐந்து தொகுதி இடை தேர்தலிலும் தக்க பாடத்தை மக்கள் புகட்டுவார்கள்.
Khader retweeted
காலையில் கடந்து வந்த இரு செய்திகள்:
1) GST வருவாய் வளர்ச்சியில் தேசிய சராசரிக்கும் கீழே த.வெ.க. ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சி புதைக்கப்பட்டிருக்கிறது.
2) தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய 1,614 கோடி ரூபாய் கொரிய முதலீடுகள் த.வெ.க. அரசின் அலட்சியத்தால் ஆந்திராவுக்குச் சென்றுவிட்டன. முதலீடுகளை ஈர்த்து தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்த @Guidance_TN அமைப்பே இந்த ஆட்சியில் தனிநபர்களின் ego-வுக்கு காவு கொடுக்கப்பட்டுவிட்டது.
எல்லாத் துறைகளிலும் இவ்வளவு வேகமாக Reverse Gear-இல் செல்வது எப்படி என இவர்களிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும்.
இதுவெல்லாம் என்னவென்றே புரியாத, தெரியாத நம் முதலமைச்சரோ இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிகளில் கையசைத்து show காட்டக் கிளம்பிவிட்டார்.
Brace for tough times. Tamil Nadu is doomed under the TVK government.
#TVKfails #KIA #Hyundai #AndhraPradesh #Automobiles @nidhi_sharma
பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவின் முதன்மையான மாநிலங்களில் ஒன்றாக இருந்த தமிழ்நாடு தவெக ஆட்சியில் தொடர்ந்து சரிவைச் சந்தித்துக் கொண்டிருப்பது கவலை அளிக்கிற்து.
அக்டோபர் மாத ஜிஎஸ்டி வரி வருவாயில்,கேரளா 23%, ஆந்திரா 24%, கர்நாடகா 18%, தெலுங்கானா 14% என அண்டை மாநிலங்கள் இரட்டை இலக்கத்தில் வளர, தமிழ்நாடு வெறும் 3% வளர்ச்சியோடு பின்தங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் இறக்குமதி செய்யப்படும் சில முக்கிய பொருட்களில் இருந்து பெறப்படும் வரியால், மாநிலத்தின் மொத்த வரிவருவாயில் ஓரளவு உயர்வு காணப்பட்டாலும், நமது சொந்த உற்பத்தியின் மூலம் ஈட்டப்படும் வரி வருவாய் குறைந்தே வருகின்றது. இது மாநிலத்தில் நிலவும் ஒட்டுமொத்த பொருளாதார தேக்க நிலையின் அளவீடாகக் கருதப்படவேண்டியது என்பதனை தவெக அரசிற்குச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
எனவே, இறக்குமதி ஆகும் பொருட்களின் மீதான வருவாயை மட்டும் நம்பியிராமல், நமது சொந்த உற்பத்தியினைப் பெருக்கி வெளிமாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் விற்பனையை அதிகரிக்கவும், அதன் வாயிலாக தமிழ்நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதாரத்தையும் நமது இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளையும் உயர்த்துவதற்குமான வழிவகைகளை தவெக அரசு உடனடியாகக் காண வேண்டுமெனவும் வலியுறுத்துகின்றேன்.
It is concerning that Tamil Nadu, once among India’s leading states in economic growth, continues to witness a decline under the TVK government.
In October’s GST revenue, neighbouring states recorded double digit growth, with Kerala at 23%, Andhra Pradesh at 24%, Karnataka at 18%, and Telangana at 14%, while Tamil Nadu lagged behind with just 3% growth.
Although taxes collected on certain key goods imported into Tamil Nadu have contributed to a modest increase in the state’s overall tax revenue, revenue generated from our own production continues to decline. I wish to point out to the TVK government that this must be viewed as an indicator of the broader economic stagnation prevailing in the state.
I therefore urge the TVK government to take immediate steps to increase domestic production and expand sales to other states and overseas markets, instead of relying solely on revenue from imported goods. This is essential to strengthen Tamil Nadu’s overall economy and create more employment opportunities for our young people.
Khader retweeted
பெண்கள், குழந்தைகளின் குறைந்தபட்ச பாதுகாப்பைக் கூட உறுதி செய்ய முடியாத இந்த Dummy CM.. தமிழ்நாட்டுக்கு எதுக்கு?
#WakeUpVijay
Khader retweeted
‘Tamil Brahmin ‘backdoor’ takeover attempt of the Tata Group’
Coomi Kapoor, a respected veteran journalist, writes of a “Tamil Brahmin backdoor takeover” of the 150-year-old, quintessentially #Parsi business house, #TataSons, “without purchasing a single share”.
She also questions the #RBI’s “unorthodox” decision on listing and describes the Maharashtra Charity Commissioner’s move as an “insidious” attempt, invoking a “hastily” drafted and legally “ambiguous” amendment to the Act. #TataTrusts #NoelTata #Chandrasekaran #Jaishankar #Tamil #CoomiKapoor #Tata
Khader retweeted
ஓடி வருகிறான் உதயசூரியன் 🌅 Remix Version | இசைமுரசு நாகூர் ஹனிஃபா | #DMK | #RisingSun | @arivalayam | @mkstalin
Ketrundha.. Naangaley kuduthurpomey!
தி.மு.கவினர் கொடுப்பதற்காக வைத்திருந்த லட்டை தட்டோடு எடுத்துச் சென்ற காவல்துறையினர்…
புதுக்கோட்டையில் நாளை புதிய பேருந்து நிலையம் மற்றும் உள்விளையாட்டு அரங்கத்தை முதலமைச்சர் விஜய் திறந்து வைக்கவுள்ள நிலையில், இரண்டு திட்டங்களும் தி.மு.க ஆட்சியில் கொண்டு வரப்பட்டவை எனக் கூறி தி.மு.கவினர் பட்டாசு வெடித்து, இனிப்புகளை வழங்கிய போது பறிமுதல் செய்த காவல்துறையினர்
#Pudukottai | #DMK | #Laddu | #Police | #PolimerNews
Khader retweeted
தவெக முழுவதும் பாலியல் பொறுக்கிகள்!
வாய் திறக்காத தவெக பெண் MLA-க்கள்.
@Keerthana4VNR @jagadeshwarioff
Khader retweeted
உங்க வீட்டு பெண்களுக்கு அநீதி நடந்தாலும் settlement தான் பேசுவீங்களா CM sir?
#WakeUpVijay
Khader retweeted
Hey @AadhavArjuna , since you are obsessed with the wings of our party,
Here's a list of the wings of your party!
அந்தநாளில் மரபுப்படி லங்கோடு, பட்டாபட்டி அணிந்து வரவேண்டுமா? என்று பக்கத்து டேபிளில் இரண்டு அரசு அதிகாரிகள் சந்தேகம் கேட்கின்றனர்..
இந்த வேலைவெட்டி இல்லாத அரசுக்கு வேறு வேலை இல்லையா? இந்த மாதிரி உருப்படாத உத்தரவுகள் எல்லாம் தேவைதானா?
#NewsUpdate | தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலர்களும் வாரத்தில் ஒருநாள் வேட்டி சட்டை அணிய வேண்டும்.. அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு!
#SunNews | #Vijay | #Rajmohan
இந்தியா கூட்டணியின் பேரணி டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடக்கிறதே. மம்தா, அகிலேஷ் எல்லாம் கலந்து கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் இருந்த தவெக சார்பில் பீஜே டல்பத்தி கலந்து கொண்டிருக்கிறாரா?
மனு போட்டு ஒப்புதல் கிடைக்கவில்லையா? இல்லை வழக்கம்போல யூடியூபர் ராஜ்மோகன் போயிருக்கிறாரா?
Khader retweeted
#தமிழ்நாடு நாள் ஜூலை 18 மட்டுமே!
நவம்பர் 1 எல்லைப் போராட்டத் தியாகிகள் நாள்! வரலாற்றை மாற்ற வேண்டாம். தமிழ்நாட்டின் தனித்துவத்தை மழுங்கடிக்க வேண்டாம்!
நவம்பர் 1-ஆம் நாளைத் ‘தமிழ்நாடு நாள்’ எனக் குறிப்பிட்டு ஆட்சியாளர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
நவம்பர் 1 கொண்டாட்டத்திற்கு உரிய நாளா? நிச்சயமாக ஆம். ஆனால், தமிழ்நாட்டின் மொழி, இன, பண்பாட்டு அடையாளத்தைப் போற்றும் தனித்துவமான ‘தமிழ்நாடு நாள்’ அதுதானா? என்பதே அடிப்படையான கேள்வி.
இது வெறும் தேதியைப் பற்றிய விவாதமல்ல. தமிழ்நாட்டின் வரலாற்றையும் பண்பாட்டு அடையாளத்தையும் எவ்வாறு புரிந்துகொள்கிறோம், எதிர்காலத் தலைமுறைக்கு எத்தகைய வரலாற்று உணர்வைக் கடத்துகிறோம் என்பதற்கான விவாதம்.
இந்திய விடுதலைக்குப் பின்னர் மொழிவாரி மாநிலங்களுக்கான கோரிக்கைகள் வலுப்பெற்றன. தனி ஆந்திர மாநிலத்திற்காக உண்ணாவிரதம் இருந்து 1952 டிசம்பர் 15-ஆம் நாள் பொட்டி ஸ்ரீராமுலு உயிர்நீத்தார். தொடர்ந்து எழுந்த போராட்டங்களால் 1953 இல் ஆந்திர மாநிலம் உருவானது. 1956 நவம்பர் 1ஆம் நாள் மொழிவாரி மாநில மறுசீரமைப்பு நடைமுறைக்கு வந்தது.
இதனால் சென்னை மாநிலத்தின் எல்லைகள் மறுவரையறை செய்யப்பட்டன. ஆந்திரம், கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களின் எல்லைகள் புதிய வடிவம் பெற்றன.
'வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகம்’ என்று தொல்காப்பியச் சிறப்புப் பாயிரம் போற்றிய தமிழ்மொழியின் வரலாற்றுப் பரப்பையும், 1956 இல் வரையறுக்கப்பட்ட அரசியல் எல்லைகளையும் ஒன்றாகக் கருதிவிட முடியாது.
மொழிவாரி மறுசீரமைப்பின்போது தமிழர்கள் உரிமை கோரிய சில பகுதிகள் தமிழ்நாட்டுடன் இணையவில்லை. அதேவேளையில் கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழர்கள் வாழ்ந்த பகுதிகள் பெரும் போராட்டங்களுக்குப் பின்னர் தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட்டன.
இந்த எல்லைப் போராட்டங்கள் வெறும் நிலப்பரப்புக்கானவை அல்ல. மொழியுரிமை, அடையாளம், மக்களின் விருப்பம் ஆகியவற்றுக்கான போராட்டங்கள். உயிர்நீத்தவர்களையும், சிறை சென்றவர்களையும், வாழ்நாளை அர்ப்பணித்தவர்களையும் நன்றியுடன் நினைவுகூர வேண்டிய வரலாற்றுச் சிறப்புமிக்க நாள்தான் நவம்பர் 1 எல்லைப் போராட்டத் தியாகிகள் நாள்.
அண்டை மாநில மக்களின் மொழியுரிமையை மதிப்பதும் நமது மொழியுரிமையை நிலைநாட்டுவதும் ஒன்றுக்கொன்று முரணானவை அல்ல.
ஆனால், மொழிவாரி மாநிலங்களின் எல்லைகள் மறுவரையறை செய்யப்பட்ட நாளும், ‘தமிழ்நாடு’ என்ற பெயருக்காகத் தமிழர்கள் மேற்கொண்ட நீண்ட போராட்டம் வெற்றி பெற்ற நாளும் ஒன்றா?
நிச்சயமாக இல்லை.
தமிழ்நாடு என்ற பெயர் நமக்கு எளிதாகக் கிடைத்துவிடவில்லை.
‘மெட்ராஸ் ஸ்டேட்’ என்ற பெயரை மாற்றித் தமிழர்களின் மொழிக்கும் பண்பாட்டிற்கும் உரிய ‘தமிழ்நாடு’ என்ற பெயரைச் சூட்ட வேண்டும் என்று தமிழறிஞர்களும் அரசியல் இயக்கங்களும் போராடின.
அந்தக் கோரிக்கைக்காக 1956 ஆம் ஆண்டு 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து அக்டோபர் 13-ஆம் நாள் உயிர்நீத்தார் தியாகி சங்கரலிங்கனார். ம.பொ.சிவஞானம் உள்ளிட்ட தமிழுணர்வாளர்களும் பல்வேறு இயக்கங்களும் இக்கோரிக்கையைத் தொடர்ந்து முன்னெடுத்தனர்.
அந்த நீண்ட போராட்டத்தின் வரலாற்றுத் திருப்புமுனையாக, *1967 ஜூலை 18-ஆம் நாள் பேரறிஞர் அண்ணா தலைமையிலான சட்டப்பேரவை, சென்னை மாநிலத்தின் பெயரைத் ‘தமிழ்நாடு’ என்று மாற்றுவதற்கான தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றியது.* தொடர்ந்து சட்ட நடைமுறைகள் நிறைவேறி, 1969 ஜனவரி 14 முதல் ‘தமிழ்நாடு’ என்ற பெயர் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்தது.
ஜூலை 18 ஒரு கட்சியின் ஆட்சிச் சாதனையை மட்டும் குறிக்கும் நாளல்ல. சங்கரலிங்கனாரின் உயிர்த்தியாகத்திற்கும், தமிழறிஞர்களின் போராட்டத்திற்கும், தமிழ் மக்களின் மொழி உணர்விற்கும், பேரறிஞர் அண்ணாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க அரசியல் முன்னெடுப்பிற்கும் கிடைத்த அங்கீகாரத்தின் நாள்.
தமிழ்நாடு என்ற பெயரைத் தமிழர்கள் தங்கள் அரசியல் அடையாளமாக நிலைநிறுத்திய வரலாற்றுப் பெருமிதத்தின் நாள் ஜூலை 18.
இந்த வேறுபாட்டை உணர்ந்துதான் 2021 அக்டோபரில் பேராசிரியர் சாலமன் பாப்பையா தலைமையிலான தமிழறிஞர்களும் மொழி, பண்பாட்டு ஆர்வலர்களும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களைச் சந்தித்து, ஜூலை 18-ஐத் தமிழ்நாடு நாளாக அறிவிக்க வலியுறுத்தினர்.
அது ஒரு கட்சிக்கான கோரிக்கை அல்ல; தமிழ்நாட்டின் தனித்துவமான வரலாற்று அடையாளத்தைப் பாதுகாக்க முன்வைக்கப்பட்ட பண்பாட்டுக் கோரிக்கை.
அதனை ஏற்று, 2021 அக்டோபர் 30-ஆம் நாள் ஜூலை 18 தமிழ்நாடு நாளாகக் கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
அதேவேளையில், நவம்பர் 1 ஐ எல்லைப் போராட்டத் தியாகிகள் நாளாக நினைவுகூர்ந்து, அப்போது வாழ்ந்த 110 எல்லைப் போராட்ட வீரர்களுக்குத் தலா ஒரு லட்சம் ரூபாய் பொற்கிழி வழங்கவும் அறிவிக்கப்பட்டு, அவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
ஜூலை 18-ஐத் தமிழ்நாடு நாளாக அறிவித்தது நவம்பர் 1-இன் வரலாற்றை மறுப்பதற்கல்ல. இரு நாட்களின் தனித்துவமான வரலாற்று முக்கியத்துவத்தையும் போற்றுவதற்காகத்தான்.
இந்நிலையில், மீண்டும் நவம்பர் 1-ஐயும் தமிழ்நாடு நாள் என்று கொண்டாடுவது எந்த வகையில் பொருத்தமானது?
இரண்டு நாட்களையும் கொண்டாடுவதில் கருத்து வேறுபாடில்லை. ஆனால், வெவ்வேறு வரலாற்று நிகழ்வுகளை ஒரே பெயரில் கொண்டாடும்போது அவற்றின் தனித்துவம் மங்கிவிடும்.
மொழிவாரி மாநில மறுசீரமைப்பின் வரலாறு ஒன்று. தமிழ்நாடு என்ற பெயரைப் பெற்ற உரிமைப் போராட்டத்தின் வரலாறு மற்றொன்று.
பேரறிஞர் அண்ணா தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் பெயர் மாற்றத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்பதற்காக, அந்த வரலாற்றை ஒரு கட்சியின் வெற்றியாக மட்டும் குறுக்கிவிடக் கூடாது. அரசியல் வேறுபாடுகளுக்காக அதன் முக்கியத்துவத்தைக் குறைப்பதும் சரியல்ல.
பேரறிஞர் அண்ணாவின் வரலாற்றுச் சாதனை ஒரு கட்சியின் வரலாற்றில் இடம்பெற்றிருக்கலாம்; ஆனால் ‘தமிழ்நாடு’ என்ற பெயர் தமிழ் மக்கள் அனைவருக்கும் சொந்தமானது.
இதனை அரசியல் போட்டிக்குள் அடக்குவது தமிழ்நாட்டின் பொதுவான பண்பாட்டு நினைவிற்கு நியாயம் செய்வதாகாது.
தமிழ்நாட்டின் தனித்துவத்தை மழுங்கடிக்க வேண்டுமென்றே இத்தகைய முடிவுகள் எடுக்கப்படுகின்றன என்று ஆதாரமின்றிக் குற்றஞ்சாட்ட வேண்டியதில்லை. ஆனால், அவற்றால் ஏற்படக்கூடிய பண்பாட்டு விளைவுகள் குறித்து எச்சரிப்பது நமது கடமை.
மொழியின் அடையாளம் வெறும் பெயர்ப்பலகையில் இருப்பதல்ல. அதன் பின்னால் வரலாறும் தியாகமும் மக்களின் உரிமை உணர்வும் இருக்கின்றன. அவற்றை அடுத்த தலைமுறை தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
எனவே, நமது கோரிக்கை எளிமையானது.உறுதியானது.
நவம்பர் 1 — மொழிவாரி மாநில மறுசீரமைப்பையும் எல்லைப் போராட்டத் தியாகிகளையும் நினைவுகூரும் நாள்.
ஜூலை 18 — தமிழ்நாட்டின் மொழி, வரலாறு, பண்பாடு, தனித்துவமான அரசியல் அடையாளம் ஆகியவற்றைப் போற்றும் தமிழ்நாடு நாள்.
இது ஒரு கட்சியை ஆதரிப்பதற்கோ மற்றொரு கட்சியை எதிர்ப்பதற்கோ அல்ல; தமிழ்நாட்டின் வரலாற்று அடையாளத்தைப் பாதுகாப்பதற்கான நிலைப்பாடு.
தமிழ்நாட்டின் பெயருக்காக உயிர்நீத்த சங்கரலிங்கனாரையும், போராடிய தமிழுணர்வாளர்களையும், பெயர் மாற்றத் தீர்மானத்தை நிறைவேற்றிய பேரறிஞர் அண்ணாவையும் நினைவுகூரும் நாளை உரிய இடத்தில் நிலைநிறுத்துவோம்.
நவம்பர் 1-ஐப் போற்றுவோம்; ஜூலை 18-இன் தனித்துவத்தை விட்டுக்கொடுக்க மாட்டோம்!
வரலாற்றை அரசியலுக்காக மாற்ற வேண்டாம். தமிழ்நாட்டின் தனித்துவத்தை மழுங்கடிக்க வேண்டாம்!
*தமிழ்நாடு நாள் — ஜூலை 18 மட்டுமே!*
*தமிழ்நாடு வாழ்க! தமிழ் வாழ்க!*
Khader retweeted
மீண்டும் மீண்டுமா??
#TVKFails
#BreakingNews | கைதி தப்பியோட்டம்
சென்னை கொளத்தூரில் போலீஸார் பாதுகாப்பில் இருந்த கைதி தப்பியோட்டம்; புழலில் 8 வயது சிறுமிக்கு பா*யல் தொல்லை கொடுத்ததாக கைதான ஆட்டோ ஓட்டுநர், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் தப்பியோட்டம்
Accused Escape | TN Police | 31 October 2026
#Chennai #Kolathur #NewsTamil24x7
Khader retweeted
கைதிகளைத் தப்பிக்காம பிடிச்சு வெக்க துப்பில்லாத சோப்ளாங்கிங்க. ட்வீட்ட தூக்கிட்டு வந்துட்டானுங்க...
#TVK
Khader retweeted
இந்த சோப்ளாங்கி ஆட்சியில் புழல், தேனியைத் தொடர்ந்து கோவை மத்தியச் சிறையில் இருந்தும் ஒரு கைதி தப்பிச் சென்றுள்ளார்.
அடுத்து பாளையம்கோட்டையா? சேலமா? எனக் கைதிகள் inky pinky ponky போட்டுத் தப்பிச் செல்லும் அளவுக்கு Dummy முதலமைச்சரின் ஆட்சி லட்சணம் இருக்கிறது.
தோல்வி பயத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளுக்கு முதலமைச்சர் ஓடுகிறார்.
மறுபுறம் கைதிகளோ, இது கையாலாகாத அரசு என தெரிந்து கொண்டு சிறையில் இருந்து ஓட்டம் எடுக்கின்றனர்.
இனி பணியிடமாற்றம், சஸ்பெண்ட் செய்யவேண்டும் என்றால் முதலமைச்சர் தன்னைத் தானே தான் செய்துகொள்ள வேண்டும்.
'மெத்' அரசின் மெத்தனப் போக்கால் தமிழ்நாட்டு மக்களின் பாதுகாப்பு தொடர்ந்து கேள்விக்குறி ஆகி வருவதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
#LawAndOrder #Coimbatore #TVKFails





























