Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) header
Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) profile picture

Welcome to the Official Twitter account of @ikamalhaasan's MAKKAL NEEDHI MAIAM party.

Chennai, India
Joined February 2018
Photo by Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial)Photo by Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial)Photo by Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial)Photo by Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial)Photo by Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial)Photo by Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial)Photo by Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial)Photo by Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial)Photo by Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial)Photo by Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial)
மக்கள் நீதி மய்யம் தலைவர், மாநிலங்களவை உறுப்பினர் திரு.கமல் ஹாசன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். @ikamalhaasan #KamalHaasan #HBDKamalHaasan #CelebratingKamalHaasan #MNM_KamalHaasan #மய்யம்_கமல்ஹாசன்
9
75
3
163
2,225
Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் retweeted
இன்று 72-ஆவது பிறந்தநாள் காணும், இந்தியத் திரையுலகில் தனது தனித்துவமான கலைத்திறத்தாலும், புதுமையான படைப்பாற்றலாலும் முத்திரை பதித்து, அரசியல் களத்தில் மக்கள் நலச் சிந்தனைகளை முன்னிறுத்தி வரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர், மாநிலங்களவை உறுப்பினர், உலகநாயகன், பத்மஸ்ரீ திரு. கமல்ஹாசன் @ikamalhaasan அவர்களுக்கு எனது இதயம் கனிந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் அவர்கள் நீண்ட ஆயுளுடனும், நிறைந்த உடல்நலத்துடனும், மாறாத கலைத்துடிப்புடனும் பல்லாண்டு வாழ்ந்து, தொடர்ந்து பல சாதனைகள் படைக்க எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். @maiamofficial
1
29
1
86
759
Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் retweeted
இந்தியத் திரைவானில் தன் அசாத்திய கலை ஆளுமையாலும் புத்தாக்கச் சிந்தனைகளாலும் உலகளவில் தமிழ்நாட்டின் பெருமையை உயர்த்திய கலைஞானி, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர், மதிப்பிற்குரிய திரு. @ikamalhaasan அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! கலையுலகிலும், பொதுவாழ்விலும் சளைக்காத ஆற்றலோடு தொடர்ந்து இயங்கும் தாங்கள், நல்ல உடல்நலத்தோடும் நீடித்த ஆயுளோடும் பணிகளைத் தொடர மனதார வாழ்த்துகிறேன்!
4
123
3
442
2,762
Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் retweeted
മലയാളികളുടെ സ്വന്തം ഉലകനായകന് പിറന്നാൾ ആശംസകൾ. You are an extraordinary talent who continues to delight and thrill us just as much today as you did back then. In every single film of yours, there is always something unforgettable that stands the test of time. Keralam has never viewed you as a guest; you have always belonged to our homes, our cinema, and our shared cultural conscience. Wishing dear Kamal Haasan good health, happiness, and many more decades of unyielding creative fire. @ikamalhaasan #HBDKamalHaasan #VDSatheesan
2
130
3
633
4,726
Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் retweeted
மக்கள் நீதி மையத்தின் தலைவர் அண்ணன் @ikamalhaasan அவர்களுக்கு எமது இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். உலகெங்கும் வாழும் தமிழ்மக்களின் நல்வாழ்த்துகளுடன் நிறைவாழ்வு பெற்று நீடூழி வாழ-நூறாண்டு காண எமது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். #HBDKamalHaasan #MNM_KamalHaasan
142
13
580
10,265
Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் retweeted
உலகப் புகழ்பெற்ற நடிகர்களான Marlon Brando, Robert de Nero, AL Pacino ஆகியோருக்கு நிகராகத் தமிழ்த் திரையுலகில் நட்சத்திரமாய் ஜொலிப்பவர், என் சிறுவயதிலிருந்தே அவரது ரசிகனாய், மூன்றாம் பிறை, சலங்கை ஒலி, அன்பே சிவம் உள்ளிட்ட அற்புதமான படங்களின் நாயகனாகவும், திரைத்துறையின் துருவ நட்சத்திரமாய், சகலகலா வல்லவனாய் திகழும் அவர், மக்கள் நீதி மய்யம் என்ற இயக்கத்தைத் தொடங்கி மக்கள் தொண்டாற்றுவதில் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட அரசியல்வாதியாகவும் விளங்கும், எனது சக நாடாளுமன்ற உறுப்பினர் மரியாதைக்குரிய உலகநாயகன் திரு. கமல்ஹாசன் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தெரிவித்து மகிழ்கிறேன். அவரது நீண்ட ஆயுளுக்கும், தொடர்ச்சியான சமூகப் பங்களிப்புக்கும் எனது மனப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அன்புடன் துரை வைகோ நாடாளுமன்ற உறுப்பினர் (திருச்சி) மறுமலர்ச்சி திமுக 07.11.2026 #DuraiVaiko #HBDKamalHaasan #MNM @ikamalhaasan
5
78
2
255
2,048
Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் retweeted
Birthday greetings to Shri Kamal Haasan ji, Rajya Sabha MP from Tamil Nadu. May you be blessed with good health and long life. தமிழ்நாட்டின், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர் திரு கமல் ஹாசன் எம்.பி. அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். தாங்கள் நல்ல உடல் நலமும், நீண்ட ஆயுளும் பெற வாழ்த்துகிறேன். @ikamalhaasan
1
67
3
190
2,094
Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் retweeted
மிகச் சிறந்த திரைக் கலைஞரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான, நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் பத்மபூஷன், செவாலியே திரு. கமல்ஹாசன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். திடமான உடல் நலத்தோடு மக்கள் பணி, திரைப் பணி இரண்டிலும் மேன்மேலும் சிறக்க அன்போடு வாழ்த்துகிறோம்! @TVKVijayHQ | @TVKPartyHQ | @TVKHQITWingOffl | @BussyAnand #தமிழகவெற்றிக்கழகம் #TVK
9
191
2
1,098
10,607
Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் retweeted
ஐந்து வயதில் திரைத்துறையில் அடியெடுத்து வைத்து, இன்றுவரை தீராத கலைத்தாகத்தோடு வாழும் கலைஞன்! எத்தனை சாதனைகள் படைத்தாலும், அடுத்ததாக என்ன புதுமையைப் படைக்கலாம் என்று தேடிக்கொண்டே இருக்கும் பசி அடங்காப் படைப்பாளி! தன் நடிப்பால் பாத்திரங்களுக்கு உயிரூட்டி, தன் படைப்புகளால் தமிழ்த்திரையின் எல்லைகளை விரிவாக்கி, கலை சிறக்கத் திரையுலகில் ஆட்சி செய்யும் கலைவேந்தன்! கலையின் நுட்பங்களை அறிந்து ஒவ்வொரு படைப்பிலும் திரைக்கலைக்குப் புதுப் பாதை திறக்கும் கலைஞானி!   தமிழ்த்திரையின் பெருமையை உலக அரங்கில் உயர்த்தி, தனது நடிப்பால் மொழிகளைக் கடந்து மக்களின் உள்ளங்களை வென்ற உலக நாயகன்!   பார்போற்றும் பறம்பை மண்ணின் மைந்தன், தமிழ்த்திரையுலகின் பெருமை, அன்பிற்கினிய அண்ணன் கமல்ஹாசன் அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள்! @ikamalhaasan அண்ணனின் நடிப்பில் புதிதாக உருவாகி வரும் ‘சண்டியர்’ திரைப்படம் மக்களின் பேராதரவைப் பெற்று மாபெரும் வெற்றியடைய அண்ணனுக்கும், படக்குழுவினருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்! அன்பு அண்ணன் அவர்கள் எல்லா நலமும் வளமும் பெற்று, மங்காப் புகழுடனும் மாபெரும் வெற்றிகளுடனும் வாழ்க! உங்கள் கலைத்தாகம் இன்னும் பல புதுப் படைப்புகளாய் மலர்க! வாழ்த்துகள்! அன்பின் நெகிழ்வோடு, சீமான்
25
296
5
1,178
15,247
Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் retweeted
மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், தமிழ்த் திரையுலகில் தனக்கெனத் தனி முத்திரை பதித்தவரும், நடிப்பு, இயக்கம், திரைக்கதை, தயாரிப்பு எனப் பன்முகத் திறமையால் இந்தியத் திரையுலகில் தனித்துவமான இடத்தைப் பெற்றவருமான உலகநாயகன் திரு. @ikamalhaasan எம்.பி., அவர்களின் பிறந்தநாள் இன்று. புதுமையான சிந்தனைகள், துணிச்சலான கதாபாத்திரத் தேர்வுகள், கலை மீதான அர்ப்பணிப்பு ஆகியவற்றால் பல தலைமுறை ரசிகர்களின் பாராட்டைப் பெற்றவர். திரைப்படக் கலைக்கும் இந்தியத் திரையுலகின் வளர்ச்சிக்கும் அவர் ஆற்றிய பங்களிப்பு என்றும் போற்றத்தக்கது. கலைப் பயணம் மேலும் சிறக்கவும், நல்ல உடல்நலத்துடனும் நீண்ட ஆயுளுடனும் மக்கள் பணியிலும் கலைப் பணியிலும் தொடர்ந்து சாதிக்கவும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் ! @maiamofficial
2
82
1
222
1,331
Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் retweeted
மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினரும், இந்தியத் திரையுலகின் தலைசிறந்த கலைஞர்களில் ஒருவருமான திரு @ikamalhaasan அவர்களுக்கு, எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். திரு. கமல்ஹாசன் அவர்கள், நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும், தனது கலைப் பணிகளும், மக்கள் பணிகளும் தொடர்ந்து மேற்கொள்ள, இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
16
278
9
1,487
42,965
Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் retweeted
மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவரும், எனது நண்பருமான மாநிலங்களவை உறுப்பினர் கமல்ஹாசனன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். திரையுலகில் ஏராளமான சாதனைகளை படைத்துள்ள உலக நாயகன், நூறாண்டு நோயில்லா நிறைவாழ்வு வாழ்ந்து பொதுவாழ்விலும் சாதனைகளை படைக்க வாழ்த்துகிறேன்.! @ikamalhaasan
5
140
5
473
6,616
Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் retweeted
இன்று பிறந்தநாள் காணும் இந்தியத் திரையுலகின் தலைசிறந்த நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினருமான திரு. @ikamalhaasan MP அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் நல்ல உடல் ஆரோக்கியத்துடன், நீண்ட ஆயுளுடன், தொடர்ந்து பொதுவாழ்விலும் கலைத்துறையிலும் சிறப்பாகப் பணியாற்றிட எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
7
117
3
366
2,658
Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் retweeted
இந்திய சினிமாவின் சிறந்த திரை நட்சத்திரமும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான திரு. @ikamalhaasan அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். தாங்கள் நீண்ட ஆயுளுடனும், பூரண உடல் நலத்துடனும் கலைத்துறையிலும், மக்கள் பணிகளிலும் தொடர்ந்து சேவை ஆற்றிட இறைவனை வேண்டுகிறேன்.
9
62
5
250
2,869
Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் retweeted
தனது பன்முக கலைச் செயல்பாடுகளால் இந்தியத் திரையுலகிற்கே பெருமை சேர்த்துவரும் மாநிலங்களவை உறுப்பினரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான திரு. @ikamalhaasan அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! அவரது கலைப்பயணமும் மக்கள் பணியும் மேன்மேலும் சிறக்க விழைகிறேன்.
14
243
5
967
8,906
Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் retweeted
Warm birthday wishes to my dear friend Kamal Haasan! A truly gifted artist, @ikamalhaasan has enriched Indian cinema in countless ways, winning hearts across languages and cultures. Beyond his brilliance as an actor and filmmaker, I deeply respect his commitment to secularism, humanism and progressive values. He has always had a special affection for Kerala, and that makes our bond even more special. Wishing him good health, happiness and many more wonderful years ahead. May he continue to inspire us through his art and politics.
14
338
10
1,728
15,918
Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் retweeted
திரையுலகில் கலைமொழியைச் செழுமைப்படுத்தியும், அரசியலில் தமிழ்மொழியின் மாண்பு, மாநில உரிமைகள் உள்ளிட்டவற்றுக்காகத் தமது கருத்தாற்றலை வெளிப்படுத்தியும் வரும் அன்புச் சகோதரர், மாநிலங்களவை உறுப்பினர், @maiamofficial-இன் தலைவர் கலைஞானி திரு. @ikamalhaasan அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! கலையை நேசிப்பதிலும், கருத்துகளைப் பரிமாறுவதிலும் என்றும் இளமை குன்றாத தாங்கள், கலைப்பயணத்தில் மேலும் பல சாதனைகளைப் படைக்கவும், அறிவார்ந்த சிந்தனைகளாலும் அரசியல் செயல்பாடுகளாலும் சமூகத்திற்குச் சிறந்த பங்களிப்புகளை வழங்கவும் வாழ்த்துகிறேன்!
79
948
15
4,293
58,927
கோவையில் சமீபத்தில் திறக்கப்பட்ட பெரியார் அறிவுலகத்திற்க்காக கொள்முதல் செய்யப்பட்ட போலியான நூல்களால் "தமிழுக்கு அவமானம்". மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் @ikamalhaasan அவர்கள் கண்டனம். #KamalHaasan #MakkalNeedhiMaiam #KamalHaasan_MP #PeriyarArivulagam
தமிழுக்கு இதைவிடப் பெரிய அவமானம் இல்லை. இத்தகைய போலியான நூல்கள் நீண்ட கால அடிப்படையில் மாபெரும் தீங்குகளை விளைவிக்கும். இவற்றை வாசித்து, குறிப்பெடுத்து, அவை பேச்சிலும் எழுத்திலும் ஆய்விலும் இடம்பெற்றால் தமிழின் மானம் கப்பலேறிவிடும். இந்தக் காரியத்தை எவர் செய்திருந்தாலும் அவர்கள் தமிழுக்குத் துரோகம் இழைத்தவர்கள். இந்தப் போலி நூல்கள், அனைத்து நூலகங்களில் இருந்தும் உடனடியாகத் திரும்பப் பெறப்பட்டு வீதியில் கொட்டி எரிக்கப்பட வேண்டும். மோசடி செய்த பதிப்பகங்கள் சீல் வைக்கப்பட வேண்டும் என தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறேன். இந்த மோசடியை அம்பலப்படுத்தியதற்காக எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு நாம் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். sindhai.com/essays/perumal-m…
3
54
2
117
3,611
Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் retweeted
தமிழுக்கு இதைவிடப் பெரிய அவமானம் இல்லை. இத்தகைய போலியான நூல்கள் நீண்ட கால அடிப்படையில் மாபெரும் தீங்குகளை விளைவிக்கும். இவற்றை வாசித்து, குறிப்பெடுத்து, அவை பேச்சிலும் எழுத்திலும் ஆய்விலும் இடம்பெற்றால் தமிழின் மானம் கப்பலேறிவிடும். இந்தக் காரியத்தை எவர் செய்திருந்தாலும் அவர்கள் தமிழுக்குத் துரோகம் இழைத்தவர்கள். இந்தப் போலி நூல்கள், அனைத்து நூலகங்களில் இருந்தும் உடனடியாகத் திரும்பப் பெறப்பட்டு வீதியில் கொட்டி எரிக்கப்பட வேண்டும். மோசடி செய்த பதிப்பகங்கள் சீல் வைக்கப்பட வேண்டும் என தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறேன். இந்த மோசடியை அம்பலப்படுத்தியதற்காக எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு நாம் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். sindhai.com/essays/perumal-m…
414
2,276
138
9,305
845,586
தலைமை நிலையத்தில் தலைவர் பிறந்தநாள் விழா! நலப்பணிகள் செய்து மக்களோடு கொண்டாட்டம்!! அன்புடையீர், மனிதநேய மாண்பு, சமூக அக்கறை, தொலைநோக்குச் சிந்தனை, அறிவுச் செழுமை, அரசியல் ஞானம், கலைத் திறமையால் தமிழ்ச் சமூகத்துக்கே பெருமை சேர்க்கும் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல் ஹாசன் @ikamalhaasan அவர்களின் பிறந்தநாளை (நவம்பர் 7) 07-11-2026 முதல் ஒருமாதத்திற்கு தமிழ்நாடு முழுவதும் விமரிசையாகக் கொண்டாடுவோம். சென்னை மண்டலம் சார்பாக நவம்பர் 7, சனிக்கிழமையன்று காலை 9.30 மணியளவில் தலைமை நிலையத்தில் தலைவரின் பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடவுள்ளோம். சென்னை மற்றும் அருகிலுள்ள மாவட்டங்களில் உள்ள நிர்வாகிகள், உறுப்பினர்கள் அனைவரும் குடும்பத்தோடு பங்கேற்க விழா சிறப்புடன் நடக்கவிருக்கிறது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் அனைத்து நிர்வாகிகளும் நமது கட்சி அலுவலகங்களில் கொடியேற்றி மருத்துவ முகாம்கள், மரம் நடுதல், இரத்ததானம் - உடல்உறுப்புதான முகாம்கள், கல்வி உபகரணங்கள், கல்வி உதவித்தொகை வழங்குதல், விளையாட்டுப் போட்டிகள் நடத்துதல், மாற்றுத்திறனாளிகளை ஊக்கப்படுத்துதல், வறியோருக்கு உதவுதல் போன்ற மக்கள் நலப்பணிகளை மேற்கொண்டும்; பொதுக்கூட்டங்கள், தெருமுனைக் கூட்டங்கள் நடத்தியும்; கொள்கை விளக்கச் சுவரொட்டிகள், சுவர் விளம்பரங்கள் மூலமும் தலைவர் அவர்களின் பிறந்த நாளைக் கொண்டாடவிருக்கிறார்கள் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக்கொள்கிறோம். பண்டிகை தினம் நெருங்குவதைக் கருத்தில்கொண்டு, வெளியூரிலுள்ள நிர்வாகிகள் தன்னைச் சந்திப்பதற்குச் சென்னை வருவதைத் தவிர்த்து அவரவர் தொகுதியில் மக்களோடு மக்களாக நின்று நலப்பணிகளை மேற்கொள்வதில் கவனம் செலுத்துமாறு தலைவர் அவர்கள் அன்புக்கட்டளையிட்டுள்ளார். களப்பணிகள் மற்றும் மக்கள் நலப்பணிகளின் வாயிலாக தலைவரின் அன்பை மக்களிடம் கொண்டுசேர்ப்போம். ஆ. அருணாச்சலம் M.A., B.L., @Arunachalam_Adv பொதுச்செயலாளர் - மக்கள் நீதி மய்யம். #KamalHaasan #HBDKamalHaasan #CelebratingKamalHaasan #MNM_KamalHaasan #மய்யம்_கமல்ஹாசன்
6
80
3
169
4,023