revathi suresh retweeted
இதுவரை எந்த முதலமைச்சரும் செய்ததில்லை.....
விஜய் சாரை நினைத்து ரொம்ப பெருமையாக இருக்கிறது
-டைரக்டர் விக்ரமன் சார் ❤️
revathi suresh retweeted
நேற்று மறைந்த சதா மாஸ்டரைப் பற்றி இந்த வார ஆரம்பத்திலும் நினைத்திருத்திருந்தேன். அவரின் சிறிய தந்தை கோவர்த்தனம் தூண்டுகோலாக இருந்தார்.
காரணம், தேனிசைத் தென்றல் தேவா குறித்த ஒரு பதிவை எழுத இருந்தேன். அதில் நாயகன் கோவர்த்தனம் அவர்கள் தான்.
தேனிசைத் தென்றல் தேவாவுக்கு இசை ஒருங்கமைப்பாளராக கோவர்த்தனம் மாஸ்டர் இருந்த போது, ஒரு அருமையான வாய்ப்பும் அவருக்கு வாய்த்திருக்கிறது. தேவா இசையில் “நாடு அதை நாடு" என்ற திரைப்படத்தின் முகப்புப் பாடலைப் பாடியவர் வேறு யாருமல்ல, கோவர்த்தனம் அவர்கள் தான்.
படத்தின் முகப்போட்டத்தில் பாருங்கள்
youtube.com/watch?v=p5yLUYUB…
“கங்கை நதியோரம் ராமன் நடந்தான்"
“வரப் பிரசாதம்” படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலை இளையராஜா ரசிகர்கள் மறக்க மாட்டார்கள்.
படத்தி இசையமைப்பாளர் கோவர்த்தன் என்றாலும், அன்னக்கிளி படத்துக்கு முன்பே இசை ஆர்.கோவர்த்தன், உதவி ராஜா என்று முகப்பு எழுத்தோட்டத்தில் இளையராஜாவை அடையாளப்படுத்திய திரைப்படம்.
அன்னக்கிளி 1976 ஆம் ஆண்டு மே மாதம், அதே ஆண்டு ஏப்ரலில் வரப்பிரசாதம் வெளிவந்தது.
கோவர்த்தனம் அவர்களது மூத்த சகோதரர் ஆர்.சுதர்சனம். சதா (சதானந்தம்) அவர்களது தந்தை.
கோவர்த்தனம் மாஸ்டர் புகழ் பூத்த பாடல்களை வழங்கி இருக்கிறார். குறிப்பாக “நாதஸ்வர ஓசையிலே தேவன் வந்து பாடுகின்றான்”, அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி” ஆகியவை.
எடுத்த எடுப்பிலேயே முதல்படம் ‘ஜாதகம் திரைப்படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளிலும் இசையமைக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.
பிரபல பின்னணிப் பாடகர் பி.பி.ஸ்ரீநிவாஸை இவர்தான் தமிழில் முதன்முதலில் அறிமுகப்படுத்தினார்.
பிரபல இசையமைப்பாளர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி, இளையராஜா, விஜயபாஸ்கர், சந்திரபோஸ், தேவா என பல இசையமைப்பாளர்களுக்கு உறுதுணையாக இருந்துள்ளார் கோவர்த்தனம்.
விபத்தினால் செவித்திறனை இழந்தவர். சேலத்தில் தன் இறுதிக் காலத்தைக் கழித்த இவரின் சிரம ஜீனத்தை அப்போது குமுதம் கட்டுரையாக வெளியிட்டது.
ஜெயலலிதா முதல்வராக இருந்த போது இவருக்கு 10 லட்சரூபாய் நிதிஉதவி செய்து இருக்கிறார்.
இப்படியாக அமைந்த கோவர்த்தனம் அவர்களின் இறுதிக் காலம் சோகமானது. ஆனால் அவர் தன்னம்பிக்கையூட்டும் பாடலொன்றை இசையமைத்திருக்கிறார். அது நம் போன்ற பலருக்கு உரப்பூட்டும் பாடல் இதுதான் கலைஞனின் வாழ்க்கை.
பொற்சிலை திரைப்படத்தில் இடம்பெற்ற அந்தப் பாடல் இதுதான்
நாளை பொழுது உந்தன் நல்ல பொழுதாகுமென்று
நம்பிக்கை கொள்வாயடா
இறைவன் நம்பிக்கை தருவானடா
youtube.com/watch?v=meIERs1L…
கானா பிரபா
30.10.2026
revathi suresh retweeted
AVM நிறுவனத்தின் முகப்பு இசையை வழங்கி இருந்தவர் இசையமைப்பாளர் ஆர்.சுதர்சனம் (இன்று மறைந்த சதா மாஸ்டரின் தந்தை) என்பது குறிப்பிடத்தக்கது
revathi suresh retweeted
கரடியே காரி துப்பிய தருணம்.. பேசுறது யாரு உத்தமன் நாம் டம்ளர் கட்சிகாரனா?
இதெல்லாம் பார்ட்னர்ஷிப் இல்லாதப்ப பேசினது இப்போ பார்ட்னர்ஷிப்ல இருக்கானுங்க பேச மாட்டாங்க நம்ம டம்ளர் கட்சி😄
revathi suresh retweeted
சதா மாஸ்டருக்கு கிட்டார் வாங்கிக் கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மானின் அப்பா
இன்று மறைந்த சதா மாஸ்டர் ஒரு சமயம் தன் அண்ணனிடம் பழுதுபார்க்க வந்த கிட்டாரை எடுத்து வசிக்கப் பார்த்ததும், கிட்டார் உரிமையாளர் இதொன்றும் விளையாட்டுப் பொருள் அல்ல என்று கண்டிப்பாகச் சொல்லவும், தானும் கிட்டார் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற முனைப்பு வந்ததாக, சுபஶ்ரீ தணிகாசலம் நிகழ்த்தும் QFR 700 நிகழ்வில் பகிர்ந்திருக்கிறார்.
சதா மாஸ்டரின் தந்தை பிரபல இசையமைப்பாளர் சுதர்சனம் மாஸ்டரிடம் உதவி இசையமைப்பாளராக இருந்த ஆர்.கே.சேகர் தான் கிட்டார் ஒன்றை வாங்கி, கிட்டார் பழக அனுப்பினாராம்.
சமீபத்தில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தையின் ஐம்பதாவது நினைவாண்டு நிகழ்விலும் இவர் கலந்து கொண்டார்.
இவர் தன்ராஜ் மாஸ்டரிடம் கிட்டார் பயில ஆரம்பித்த பின்னர் இணைந்து கொண்டவர் இளையராஜா.
மெல்லிசை உலகின் ஆளுமை ராம்ஜி Ramjhi Issai Mazhalai அவர்கள் சில வருடங்களுக்கு முன் பகிர்ந்த ஃபேஸ்புக் பகிர்வில், 1968 ஆம் ஆண்டில் தன்னுடைய சகோதரர் ஷான் சந்திரசேகர் உருவாக்கிய BLUERICKS இசைக்குழுவில் சதானந்தம் அவர்கள் r Lead Guitarist ஆக இயங்கியதைக் குறிப்பிட்டிருக்கிறார்.
இவரோடு இணைந்து கிட்டார் வாத்திய விற்பன்னராக இருந்தவர் ராதா விஜயன் (நடிகர் எம்.கே.ராதாவின் புதல்வர்). அவரும் QFR 700 இல் கலந்து கொண்டவர்.
இவர்களோடு ராம்ஜி ட்ரம்ஸ் வாத்தியத்தைக் கவனித்துக் கொண்டார்.
சதா என்ற சதானந்தம் அவர்கள் முதன்முதலில் படத்துக்காக கிட்டார் வாசித்தது ஜெயகாந்தனின் “யாருக்காக அழுதான்” படத்தில் ராம்ஜியின் சகோதரர் எஸ்.வி.ரமணனின் இசையில் தான்.
எஸ்.வி.ரமணன் அனிருத்தின் தாத்தா.
அந்தப் படம் வெளிவந்தது 1966 இல். இந்த ஆண்டோடு 60 ஆண்டுகள் சதா அவர்களது இசைப் பயணம் ஆரம்பித்து.
இதில் 45 ஆண்டுகள் இசைஞானி இளையராஜாவின் பாசறையில்.
சமீபத்தில் வாவ் தமிழா பேட்டியில் உலகம் சுற்றும் புகழ் பூத்த கிட்டார் வாத்தியக் கலைஞர் பிரசன்னாவிடம், நீங்கள் வியந்து பார்த்த கிட்டார் வாத்தியக்காரர் யார் என்று கேட்டதும், அவர் பதில் சொல்வதற்குள், இவர் யாராவது மேற்கத்தேய வாத்தியக் கலைஞரைச் சொல்வார் என்று பார்த்தால் அவர் குறிப்பிட்டவர்
“சதா மாஸ்டர்” ❤️🙏
கானா பிரபா
29.10.2026
revathi suresh retweeted
இதுக்கு தான் வழக்கு போட்டது.. சீன் போட்டுட்டு வழக்கு போட்டதும் ஐயோ அம்மா என்ன விட்ருங்கனு கெஞ்சிருக்கான்..
சட்டம் கடமையை செய்ய போதுனு தெரிஞ்சி bail கு அலையுறான்😂

















