ЯК retweeted
நாம் தமிழர் கட்சி - இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த நகரத் தலைவர் அன்புத்தம்பி கண்ணன் அவர்கள் உயிரிழந்துவிட்டார் என்ற துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.
மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் போராடிவரும் நாம் தமிழர் கட்சி எனும் புரட்சிகர அரசியல் பெரும்படையில் தன்னை இணைத்துக்கொண்டு, களப்பணியாற்றி வந்த கண்ணன் அவர்கள் நம்மை விட்டு பிரிந்திருப்பது பெருந்துயரத்தை அளிக்கிறது.
தம்பியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
தம்பி கண்ணன் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!
பால் டப்பாவின் உண்மையான காதலை உதாசினப்படுத்திய முட்டக் கண்ணன்😢
உண்மையான காதலுக்கு என்றும் அழிவில்லை🫶✊🙏❤️
#SIRfraudpaarisaalan
ЯК retweeted
மதுக்கடையை மூடக்கோரினால் மக்களைக் கைது செய்வதா? கார்குடி அரசு மதுபானக் கடையை உடனடியாக நிரந்தரமாக மூட வேண்டும்!
@CMOTamilnadu @TVKVijayHQ
அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகேயுள்ள கார்குடி ஊராட்சி, பாண்டிபஜார் கடைத்தெருவில் இயங்கிவரும் அரசு மதுபானக் கடை எண் 6457-ஐ நிரந்தரமாக மூடக்கோரி மக்கள் தொடர்ந்து போராடியும், அவர்களது நியாயமான கோரிக்கையை நிறைவேற்றாமல் தமிழ்நாடு அரசு இழுத்தடித்து வருவது வன்மையான கண்டனத்திற்குரியது.
மக்கள் வசிக்கும் குடியிருப்புகளுக்கு நடுவில், காய்கறிச் சந்தை, கோவிலுக்கு அருகில் மதுக்கடையைத் திறந்து வைத்திருப்பது ஏன்? அத்தியாவசியப் பொருட்களை வாங்க வரும் மக்களும், சாலையில் பயணிப்போரும் மதுக்கடையால் ஏற்படும் இடையூறுகளைச் சகித்துக்கொண்டுதான் மக்கள் வாழ வேண்டுமா? மக்கள் வாழும் இடத்தில் மதுக்கடையை வைத்துவிட்டு, அவர்கள் அமைதியாக வாழ வேண்டும் என்று கேட்டால் அதுவே அரசுக்குக் குற்றமாகிவிடுகிறதா? மக்களுக்காக அரசு நடத்துகிறீர்களா? மதுக்கடை நடத்துவதற்காக மக்களை ஆளுகிறீர்களா? இக்கடையை மூடுவது தொடர்பாக அரசு சார்பில் மூன்று முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, மூன்று முறை கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது. மூன்று காலக்கெடுக்கள் முடிந்தும் கடை அதே இடத்தில் இயங்குகிறது என்றால், அரசின் வாக்குறுதிக்கு என்ன மதிப்பு? அதிகாரிகள் அளித்த உறுதிமொழிக்கு யார் பொறுப்பு? கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாத நிர்வாகத்திற்கு, மக்களிடம் மீண்டும் கால அவகாசம் கேட்க என்ன தகுதி இருக்கிறது?
பேச்சுவார்த்தை என்பது பிரச்சினைக்குத் தீர்வுகாணவா? போராடும் மக்களைக் கலைத்துவிட்டு மதுவிற்பனையைத் தொடரவா? மூன்று முறை ஏமாற்றப்பட்ட பிறகும் மக்கள் மௌனமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறதா அரசு? கடையை மூடக்கோரி கடந்த 18.10.2026 அன்று காலை 10 மணியளவில் போராடிய பொதுமக்கள் 80 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இன்று (16.11.2026) அனைத்துக் கட்சிகள் சார்பிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ள நிலையில், கார்குடி மக்களின் ஒன்றுபட்ட எதிர்ப்புக்குப் பிறகும் மதுக்கடையைத் தொடர்ந்து நடத்துவதில் அரசு காட்டும் பிடிவாதம் எதற்காக? மக்களின் நிம்மதியைவிட மதுவிற்பனை வருவாய்தான் மேலானதா? அரசு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் போராடும் மக்களை கைது செய்வது என்ன நியாயம்? மது விற்பனைக்கு அரசின் பாதுகாப்பு! அதை எதிர்க்கும் மக்களுக்குக் கைது நடவடிக்கையா? இதுதான் மக்கள் நல ஆட்சியின் இலக்கணமா? வெட்கக்கேடு!
எனவே, தமிழ்நாடு அரசும் அரியலூர் மாவட்ட நிர்வாகமும் இனியும் காலம் கடத்தாமல், கார்குடி ஊராட்சி, பாண்டிபஜார் கடைத்தெருவில் இயங்கிவரும் அரசு மதுபானக் கடை எண் 6457-ஐ நிரந்தரமாக மூடுவதற்கான உத்தரவை உடனடியாக வெளியிட்டு நடைமுறைப்படுத்த வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
கழுத்து இறுக்கப்பட்டதற்கான
அடையாளம் கண்டுபிடிப்பு
மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் உயிரிழந்த லாரி டிரைவர் பாலகிருஷ்ணனின் பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி தகவல். இடது தோள்பட்டை, நெற்றி, கைவிரல்கள், கழுத்து, வயிற்றில் சிராய்ப்பு காயம். கழுத்தில் இறுக்கப்பட்டதற்கான அடையாளம், ரத்தக்கட்டுக் காயங்கள். கழுத்தின் வலதுபுறம் ஊசி குத்தியதுபோன்ற 3 அடையாளங்கள். மூளை, நுரையீரலில் சிறிய ரத்தக்கசிவு. நுரையீரலில் வீக்கம் இருந்ததாக ரிப்போர்ட்டில் திடுக்கிடும் தகவல்கள்
#madurai #Chekkanoorani #police #thanthitv
45
மதுரை காவல்நிலைய மரணம்... 3வது நாளாக உடலை வாங்க மறுத்து நீதி கேட்டு மகன் மற்றும் உறவினர்கள் மறியல்! - குண்டுக்கட்டாக கைது செய்த காவல்துறை!
Checkanurani | Custodial | Madurai | Protest
#CBCID #NewsTamil24x7 #TamilNews
ЯК retweeted
I've followed Annan Seeman since 2017 because he stood apart from the corrupt political system. His uncompromising stance never changed, even as people around him did. Proud to have chosen this political path when most of TN hadn't realised its potential.
ЯК retweeted
துயரச்செய்தி😭
விளவங்கோடு தொகுதி மாநில ஒருங்கிணைப்பாளர் பிரவீணா சந்திரன் அவர்களின் சகோதரர் மாநில மருத்துவ பாசறை ஒருங்கிணைப்பாளரும், களப்பணியாளருமான பிரவேஷ் சந்திரன் அவர்கள் இன்று மாலை நம்மை விட்டு பிரிந்தார்,
கணவர் இறந்த துக்கம் தாங்காமல் அவரது மனைவியும் நம்மை விட்டு...
ЯК retweeted
குற்றவாளிகளின் கூடாரம் தவெக !
முழுக்காணொளி :
நகைகடை வழக்கில் மறைக்கப்படும் உண்மை
youtu.be/lWu-ZYikZxs
சென்னை கோயம்பேட்டில் நட்சத்திர ஹோட்டலில் புகுந்து இளம் பெண்ணை பாலியல் தொல்லை கொடுத்ததாக தவெக மாவட்ட நிர்வாகிகள் இரண்டு பேர் கைது அரும்பாக்கம் அனைத்து மகளிர் போலீசார் நடவடிக்கை.
சென்னை கோயம்பேடு பிரபல நட்சத்திர விடுதியில் 30 வயதான இளம் பெண் வரவேற்பாளராக பணிபுரிந்து வருகிறார் கடந்த வாரம் பணியில் இருந்த போது அங்கு வந்த இரண்டு பேர் மது போதையில் இளம் பெண்ணை தவறான உறவுக்கு அழைத்துள்ளனர் இதனால் அதிர்ச்சி அடைந்த இளம் பெண் அவர்களின் பிடியிலிருந்து தப்பமுனைந்துள்ளார் மது போதையில் இருந்த இரண்டு பேரும் பெண்ணின் உடையை கிழிக்க முயன்றுள்ளனர்
மேலும் பெண்ணின் மர்ம உறுப்புகளை தொட்டு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர் இதுகுறித்து இளம் பெண் அரும்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் நட்சத்திர விடுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர் அதில் இருவரும் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது .
அடுத்து நேற்று இருவரையும் பிடித்து விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது நட்சத்திர ஹோட்டலில் பணிபுரிந்த இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் அரும்பாக்கம் பகுதியை சேர்ந்த தவெக பிரமுகர்கள் பிரபுகுமார்,மற்றும் பாலாஜி, என்பது தெரிய வந்தது மேலும் பிரபு குமார், சென்னை மத்திய மேற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினராகவும் பாலாஜி சென்னை மத்திய மேற்கு மாவட்ட இளைஞரணி தலைவராகவும் தமிழக வெற்றி கழகத்தின் பொறுப்புகளில் இருப்பதும் தெரியவந்துள்ளது இதனைத் தொடர்ந்து இருவரையும் நேற்று கைது செய்த போலீசார் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர் .
கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு நடந்த இச்சம்பவம் புகார் கொடுத்தும் போலீசார் நடவடிக்கை எடுக்காமல் அலைக்கழித்து வந்ததாக கூறப்படுகிறது இந்த நிலையில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை வைத்து ஒரு வாரத்திற்கு பின்பு அரும்பாக்கம் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்திருப்பது குறிப்பிடத்தக்கது
@TVKVijayHQ
ЯК retweeted
கண்ணீர் வணக்கம்!
ஈழத்தாயகத்தின் மூத்த அரசியல் தலைவரும், இலங்கை நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும், தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தொடக்கக்காலம் தொட்டு தமிழின விடுதலைக்காகத் தன்னை அர்ப்பணித்துப் போராடியவருமான பெருமதிப்பிற்குரிய ஐயா ம.க. சிவாஜிலிங்கம் அவர்கள் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார் என்ற துயரச்செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும் ஆற்றொணாத் துயரமும் அடைந்தேன்.
தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் பிறந்த வீரமிகு வல்வெட்டித்துறை மண்ணில் பிறந்து, இளம்வயதிலேயே தமிழீழ விடுதலை இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டு, தமிழினத்தின் விடுதலைக்காகப் போராட்ட வாழ்வைத் தேர்ந்தெடுத்தவர் ஐயா சிவாஜிலிங்கம் அவர்கள். தமிழீழ விடுதலை இயக்கத்தின் தொடக்கக்காலப் போராளியாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராக, வடக்கு மாகாண சபை உறுப்பினராக, வல்வெட்டித்துறை நகரசபைத் தலைவராக எனப் பல்வேறு பொறுப்புகளை வகித்தபோதும், பதவிகளைக் கடந்து தமிழின விடுதலையே தனது வாழ்வின் இலட்சியமாகக் கொண்டு இறுதிமூச்சுவரை பயணித்த பெருந்தகை அவர்.
தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் மீது அளவற்ற பற்றும் பெருமதிப்பும் கொண்டிருந்த ஐயா சிவாஜிலிங்கம் அவர்கள், தேசியத்தலைவரின் தமிழீழ விடுதலை இலட்சியத்திற்கு உறுதுணையாக நின்றவர். தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கான அரசியல் ஆதரவையும், தமிழினத்தின் தன்னாட்சி உரிமைக்கான குரலையும் எந்தச் சூழலிலும் கைவிடாதவர். எத்தனை அடக்குமுறைகள் வந்தாலும், எத்தனை அச்சுறுத்தல்கள் எழுந்தாலும், தமிழினத்தின் உரிமைக்காக உரக்கக் குரலெழுப்புவதிலிருந்து ஒருபோதும் பின்வாங்காத பெருந்துணிச்சலுக்குச் சொந்தக்காரர்.
குறிப்பாக, 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இனப்பேரழிவுக்குப் பின்னர், ஈழத்தாயகமே அச்சத்திலும் அடக்குமுறையிலும் உறைந்திருந்த காலத்தில், தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் நினைவுகளை அழித்தொழிக்க முயன்றவர்களுக்கு எதிராகத் துணிந்து நின்றவர் ஐயா சிவாஜிலிங்கம் அவர்கள். மாவீரர் நாள் நினைவேந்தல்கள், முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல்கள், ஈழத்தமிழர்களின் உரிமைப் போராட்டங்கள் என எதற்கும் அஞ்சாது முன்னின்று களமாடியவர். விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றை அழித்துவிடலாம் என்று நினைத்தவர்களுக்கு, அதை நினைவுகூர்ந்து காப்பதும் ஒரு போராட்டம்தான் என்பதைத் தன் வாழ்வால் உணர்த்தியவர்!
எல்லாவற்றிற்கும் மேலாக, நமது தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களை ஈன்றெடுத்த அன்னை பார்வதி அம்மையார் அவர்கள் உடல்நலிவுற்று மருத்துவச் சிகிச்சைக்காகத் தவித்தபோது, அவருக்கு உரிய மருத்துவம் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஐயா சிவாஜிலிங்கம் அவர்கள் மேற்கொண்ட விடாமுயற்சிகள் எவராலும் மறக்கவியலாதவை. அன்னையார் தமிழகத்திற்கு வந்து சிகிச்சை பெறுவதற்காகப் பல்வேறு தடைகளையும் அரசியல் நெருக்கடிகளையும் எதிர்கொண்டு தொடர்ந்து போராடியதோடு, இறுதிக்காலத்தில் அவரை அன்போடும் அக்கறையோடும் கவனித்துக்கொண்ட அவரது மனிதநேயப் பேருள்ளம் என்றும் போற்றுதலுக்குரியது.
தமிழீழ விடுதலைக்காக மட்டுமின்றி, உலகெங்கும் வாழும் தமிழர்களின் நலனுக்காகவும் அக்கறைகொண்டு செயல்பட்ட ஐயா அவர்கள், நாம் தமிழர் கட்சியின் மீதும் அதன் கொள்கை இலட்சியங்களின் மீதும் மிகுந்த அன்பும் அக்கறையும் கொண்டிருந்தவர். தமிழ்த்தேசிய அரசியல் தமிழகத்தில் வலுப்பெற வேண்டும் என்பதில் பெருவிருப்பம் கொண்டிருந்தவர். என் மீதும் தனிப்பட்ட முறையில் மிகுந்த அன்பையும் பாசத்தையும் அக்கறையையும் கொண்டிருந்தவர். அரசியல் உறவையும் கடந்து ஓர் அன்புமிகு மூத்த உறவாக அவர் காட்டிய நேசமும், என் மீது கொண்டிருந்த அக்கறையும் என் நெஞ்சில் என்றென்றும் நிலைத்திருக்கும்.
ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக, ஓர் அரசியல் தலைவராக, ஒரு விடுதலைப் போராட்ட வீரராக மட்டுமல்ல; தமிழீழ விடுதலை எனும் உயரிய இலட்சியத்தை இறுதிமூச்சுவரை இதயத்தில் சுமந்த தமிழினத்தின் உண்மையான பற்றாளராக வரலாற்றில் என்றும் நிலைத்திருப்பார் ஐயா சிவாஜிலிங்கம் அவர்கள்!
தமிழினத்தின் விடுதலைக்காகத் தனது வாழ்நாளையே அர்ப்பணித்துப் போராடிய பெருமதிப்பிற்குரிய ஐயா சிவாஜிலிங்கம் அவர்களின் மறைவால் பெருந்துயருற்றுள்ள அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், ஈழத்தாயக மக்கள் மற்றும் உலகெங்கும் வாழும் தமிழ்த்தேசிய உறவுகள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொண்டு, அவருக்கு எனது கண்ணீர் வணக்கத்தைச் செலுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
ЯК retweeted
வண்டி தீப்பிடுச்சு எரிஞ்சிருச்சிருச்சுனு புகார் கொடுத்தவர் காவல்நிலைய கழிப்பறையில் தூக்கு போட்டு தற்கொலை பண்ணிகிட்டாராம்...
ஒரு குடும்பத்தையே செதச்சுட்டானுங்க 😤
சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவுசெய வேண்டும்...
பொட்டு மாமா ஆட்சியில் கேடுகெட்ட ஆட்சி 💦💦💦
ЯК retweeted
தவெக ஆட்சியில் தொடரும் காவல் நிலைய மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பது எப்போது? முதலமைச்சர் விஜய் பாரவுந்து ஓட்டுநர் பாலகிருஷ்ணன் மரணத்திற்கு மன்னிப்பு கேட்கப்போகிறாரா? நீதிப்பெற்றுத்தரப்போகிறாரா?
@CMOTamilnadu @TVKVijayHQ
மதுரை மாவட்டம் செக்கானூரணி காவல் நிலையத்திற்கு விசாரணைக்காகச் சென்ற தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாரவுந்து ஓட்டுநர் பாலகிருஷ்ணன் அவர்கள் காவல் நிலையத்திற்குள்ளேயே மர்மமான முறையில் உயிரிழந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியையும் மிகுந்த வேதனையையும் அளிக்கிறது.
விசாரணைக்காக காவல்நிலையம் சென்ற எளிய மனிதர் உயிரோடு வீடு திரும்ப முடியாத கொடுமை நிகழ்ந்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.
காவல் நிலையம் என்பது மக்களின் குறைகளைத் தீர்க்கும் இடமாக இருக்க வேண்டுமே தவிர, அவர்களின் உயிரைப் பறிக்கும் இடமாக மாறிவிடக்கூடாது! மக்களின் உயிரைப் பாதுகாக்க முடியாத காவல்துறையால் சட்டம்-ஒழுங்கை எப்படிப் பாதுகாக்க முடியும்?
தான் ஓட்டிச் சென்ற வாகனம் தீப்பிடித்து எரிந்தது தொடர்பான விசாரணைக்காகக் காவல் நிலையம் சென்ற பாலகிருஷ்ணன் அவர்கள், காவல் நிலையக் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகக் காவல்துறை கூறுவது பல்வேறு ஐயங்களை எழுப்புகிறது. விசாரணைக்குச் சென்றவரை இரவு முழுவதும் காவல் நிலையத்தில் தங்க வைத்தது ஏன்? காவல்துறையின் கண்காணிப்பில் இருந்த ஒருவர் காவல் நிலையத்திற்குள்ளேயே உயிரிழக்கும் அளவிற்கு என்ன நடந்தது? அவரது உயிரைப் பாதுகாக்கத் தவறியது யார்? இக்கேள்விகளுக்கெல்லாம் தமிழக அரசு பதில் அளிக்க வேண்டாமா?
கடந்த திமுக ஆட்சியில் திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் காவல்துறையினரால் கொல்லப்பட்டபோது, அவரது தாயாரிடம் அன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மன்னிப்புக் கேட்டதை விமர்சித்து, அஜித்குமார் குடும்பத்திடம் மன்னிப்புக் கேட்டால் மட்டும் போதுமா? என்று கேள்வி எழுப்பி 'Sorry வேண்டாம்; நீதி வேண்டும்' என்ற இன்றைய முதலமைச்சர் விஜய் அவர்கள், இன்று தம்முடைய ஆட்சியில் காவல் நிலையத்திற்குள்ளேயே ஓர் உயிர் பறிபோயிருப்பதற்கு என்ன பதில் சொல்லப்போகிறார்? பாலகிருஷ்ணன் மரணத்திற்கு
என்ன நீதியை பெற்றுத்தரப்போகிறார்?
எதிர்க்கட்சியாக இருந்தபோது தான் கேட்ட கேள்விகளுக்கு, ஆளுங்கட்சியாக வந்த பிறகு பதில் சொல்ல வேண்டிய கடமை தனக்கு இருக்கிறது என்பதை முதலமைச்சர் விஜய் அவர்கள் மறந்துவிடக்கூடாது! அன்று கேட்ட நீதி, இன்று ஆட்சிக்கு வந்ததும் மறந்துபோகலாமா? ஆட்சி மாறினாலும் காவல் நிலைய மரணங்கள் மட்டும் மாறாமல் தொடர்வதுதான் நீங்கள் சொன்ன ஆட்சி மாற்றமா?
ஒவ்வொரு நாளும் வெவ்வேறு குற்றங்களில் சிக்கும் தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் அறிவுரையோடு அனுப்பிவைக்கும் முதலமைச்சர் விஜய் அவர்கள், இந்தக் காவல் நிலைய மரணத்திற்கு காரணமான காவலர்களைப் பணியிடை நீக்கம் செய்ததோடு கடமை முடிந்துவிட்டதாகக் கருதக்கூடாது. பாலகிருஷ்ணன் காவல் நிலைய மரண வழக்கு விசாரணை எவ்வித அரசியல் தலையீடுமின்றி நேர்மையாகவும் வெளிப்படையாகவும் நடைபெற வேண்டும். காவல் நிலையக் கண்காணிப்பு பதிவுகள் முழுமையாகப் பாதுகாக்கப்படுவதோடு, நீதித்துறை விசாரணையின் மூலம் பாலகிருஷ்ணன் மரணத்தில் உள்ள அனைத்து ஐயங்களுக்கும் விடை காணப்பட்டு அவரது குடும்பத்தினருக்கு உண்மை தெரியப்படுத்தப்பட வேண்டும். குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கிடைப்பதை உறுதி செய்து, நீதி நிலைநாட்டப்பட வேண்டும்.
மேலும், குடும்பத்தின் வாழ்வாதாரமாக விளங்கிய பாலகிருஷ்ணனை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசு உரிய துயர்துடைப்பு நிதி வழங்குவதோடு, குடும்பத்தில் தகுதியுள்ள ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
ЯК retweeted
கள் பற்றி மேலும் பல ஓலாக்கள் விடும் பாரி 😂😂
#TVK_BootLicker_PaariSaalan
#SIRFraudPaariSaalan
ЯК retweeted
விஜய் பேச்சை கேட்காத விஜயபாலாஜி | டெல்லிக்கு சென்ற கள்ளக்குறிச்சி பிரச்சனை | வெடிக்கும் மேகதாட் அணை
youtu.be/wY0qLTBlzpo






























