தலைவா சதீஷ் retweeted
தாலி கட்டப் போகும் கடைசி நேரத்தில் அந்தக் கல்யாணத்தைத் தடுத்து நிறுத்தினார் அப்துல் கலாம்.
அந்தக் கல்யாணப் பெண்ணின் பெயர் சரஸ்வதி.
"எப்போது நடந்தது இது ?
எதற்காக அந்தக் கல்யாணத்தை நிறுத்தினார் அப்துல் கலாம் ?"
அது அப்துல் கலாம் ஜனாதிபதியாக இருந்த காலம்.
அப்போது உயர் அதிகாரியாக திருச்சியில் பணி புரிந்து வந்த கலியமூர்த்தி ஐ.பி.எஸ்.க்கு ஃபோன் வந்தது அப்துல் கலாமிடமிருந்து.
"சொல்லுங்க சார்" என்று பணிவுடன் சொன்னார் கலியமூர்த்தி.
கலாம் சொன்னார்
அடுத்த நாள் நடக்க இருக்கும் ஒரு பெண்ணின் கல்யாணத்தை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என.
காரணம்
அந்த பெண்ணின் வயது 16.
பிளஸ் டூ படித்துக் கொண்டிருக்கிறாள்.
மாப்பிள்ளைக்கு வயது 47.
இரண்டாவது கல்யாணம்.
சொந்த மாமன்.
கலாம் தொடர்ந்தார் :
"கட்டாயக் கல்யாணம். அந்தப் பெண்ணுக்கு அதில இஷ்டம் இல்ல. அதை எப்படியாவது தடுத்து நிறுத்திடுங்க. அப்புறம்
அந்தப் பொண்ணு மேல் படிப்பு படிக்கணும்னு ஆசைப்படுது.
அதுக்கு வேண்டிய ஏற்பாடுகளை..."
"அதை நாங்க பாத்துக்கிறோம் சார்" என்றார் கலியமூர்த்தி.
"பொண்ணுக்கு எந்த ஊர் சார் ?"
ஊர் பெயரைச் சொன்னார் கலாம். துறையூருக்கு பக்கத்தில் ஒரு கிராமம் அது.
அடுத்த நிமிடமே கலியமூர்த்தி தனது காரில் துறையூரை நோக்கி விரைந்தார். ஏற்கனவே முசிறி காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு ஃபோன் செய்து ஸ்பாட்டுக்கு வரச் சொல்லி விட்டார்.
கலாம் சொன்னபடியே அந்தக் கல்யாணம் தடுத்து நிறுத்தப்பட்டது.
அழுதழுது வீங்கிய முகத்தோடு இருந்த பிளஸ் டூ சரஸ்வதி நன்றி சொன்னாள். "சரியான நேரத்தில வந்து கல்யாணத்தை நிறுத்தினதுக்கு ரொம்ப ரொம்ப தாங்க்ஸ் சார்."
"நல்லதும்மா, தொடர்ந்து என்ன படிக்கணும்னு ஆசைப்படறேன்னு சொல்லு. அதற்கான ஏற்பாடு பண்றோம்."
சொன்னாள். கவனமாகக்
குறித்துக் கொண்டார் கலியமூர்த்தி.
"ஓகே, நாங்க புறப்படறோம்.
ஆனா...
அதுக்கு முன்னால ஒரு சந்தேகம்."
"என்ன சார் ?"
"உனக்காக இவ்வளவு தூரம் அக்கறை எடுத்து நம்ம ஜனாதிபதியே எங்கிட்டே பேசினாரே. அவருக்கு யாரும்மா இந்தத் தகவலைச் சொன்னது ?"
"நான்தான் சார்."
ஷாக் ஆகிப் போனார் கலியமூர்த்தி.
"எப்படீம்மா ?"
ஒரு சில ஆண்டுகளுக்கு முன் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஒரு கருத்தரங்கம். அதற்கு அப்துல் கலாம் வந்திருந்தார். அப்போது அவர் ஜனாதிபதி ஆகவில்லை.
அந்தக் கூட்டத்திற்கு இந்தப் பெண் சரஸ்வதியும் போயிருந்தாள்.
பேசி முடித்து விட்டு கலாம் சொன்னார் : "உங்களில் யாராவது ஏதாவது கேள்விகள் கேட்க விரும்பினால் கேட்கலாம்.
Only Four Students..."
கேள்வி கேட்ட நான்கு பேரில் ஒருவர் இந்தப் பெண்.
கூட்டம் முடிந்து புறப்படும்போது கேள்வி கேட்ட நால்வரையும் தனியாக அழைத்துப் பாராட்டினார் கலாம். "இந்தாங்க என்னோட விசிட்டிங் கார்டு. அவசியம் ஏற்பட்டால் தொடர்பு கொள்ளலாம்."
அந்தக் கார்டில் அப்துல் கலாமின் மெயில் ஐடி, ஃபோன் நம்பர் இருந்தன.
எப்படியோ அதைப் பத்திரமாக பாதுகாத்து வைத்திருந்தாள் இந்தப் பெண். அதுதான் இந்த ஆபத்துக் காலத்தில் அவளுக்கு உதவியிருக்கிறது.
இதைக் கேட்ட கலியமூர்த்தி ஆச்சரியப்பட்டு போகிறார்.
அந்தப் பெண்ணின் மேற்படிப்புக்கு தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுத்திருக்கிறார்.
அத்துடன் அந்த விஷயத்தை மறந்தும் விட்டார்.
காலம்தான் எவ்வளவு விரைவாக ஓடுகிறது ?
இந்தச் சம்பவம் நடந்து ஒரு சில ஆண்டுகளுக்குப் பின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவுக்குப் போயிருந்தாராம் கலியமூர்த்தி.
அவர் மேடையில் பேசி முடித்த பின் ஒரு இளம் பெண் அவசரம் அவசரமாக மூச்சு வாங்க மேடைக்கு ஓடி வந்து மைக்கைப் பிடித்தாளாம்.
யார் இந்தப் பெண் ?
எங்கோ பார்த்தது போல இருக்கிறதே !
கலங்கிய கண்களோடு மேடையில் நின்ற அந்தப் பெண், குரல் தழுதழுக்கச் சொன்னாளாம். "நல்ல வேளை. எனக்கு இங்கே பேச வாய்ப்பு கிடைத்தது. இல்லாவிட்டால் இத்தனை பேர் மத்தியில் நன்றி சொல்லும் ஒரு நல்ல வாய்ப்பை நான் இழந்திருப்பேன்."
யாருக்கு நன்றி சொல்ல போகிறாள் இந்தப் பெண்? எதுவும் புரியாமல் அமர்ந்திருக்கிறார் கலியமூர்த்தி ஐ.பி.எஸ்.
"கலியமூர்த்தி சார். நான் இங்கே அமெரிக்காவில் ஸாஃப்ட்வேர் கம்பெனியில் வேலையில் இருக்கிறேன்.
மூன்றரை லட்சம் ரூபாய் சம்பளம். என் கணவருக்கு நான்கு லட்சம். சந்தோஷமாக இருக்கிறோம்.
நான் யார் என்று உங்களுக்குத் தெரிகிறதா ?"
"தெரியவில்லை" என்று சொல்லியிருக்கிறார் கலியமூர்த்தி.
அந்தப் பெண் கண்களில் நீரோடு தழுதழுத்த குரலில் சொல்கிறாள் :
"ஒரு காலத்தில் பால்ய விவாகத்திலிருந்து உங்களால் காப்பாற்றப்பட்டவள்.
படிக்க வைக்கப்பட்டவள்.
நான்தான் துறையூர் சரஸ்வதி."
இதை சற்றும் எதிர்பாராத கலியமூர்த்தி சந்தோஷத்தில் கண் கலங்கிப் போகிறார்.
தொடர்ச்சி படிக்கவும்
தலைவா சதீஷ் retweeted
தொடர்ச்சி படிக்கவும்
"உங்களுக்கும் நன்றி.
உங்களுக்கு தூண்டுகோலாக இருந்து என் வாழ்வில் ஒளியேற்றிய அப்துல் கலாம் ஐயாவுக்கும் நன்றி."
சொல்ல வந்ததைச் சொல்லி முடித்து விட்ட நிறைவோடு, மேடையை விட்டு இறங்கிப் போகிறாள் அந்தப் பெண்.
ஆச்சரியம்தான்.
அப்படியும் ஒரு காலம் இருந்திருக்கிறது.
தமிழ்நாட்டில் ஒரு சாதாரண குக்கிராமத்தில் உள்ள ஒரு சாமானியப் பெண் ஜனாதிபதியோடு சகஜமாகப் பேச முடிந்திருக்கிறது.
தான் நினைத்ததை சாதிக்க முடிந்திருக்கிறது.
ஆம்.
அது ஒரு அழகிய கலாம் காலம்.
#படித்தது.
தலைவா சதீஷ் retweeted
"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்ற முழக்கத்துடன்
தமிழக மக்களின் நம்பிக்கையையும் பேரன்பையும் பெற்று,
தேர்தல் களத்தில்
வரலாற்றுச் சாதனை படைத்து, மனசாட்சியுள்ள மக்களாட்சி அமைத்து,
மக்களுக்கான நலத்திட்டங்களை
வழங்கி தமிழ்நாட்டை வெற்றிப் பாதையில் அழைத்து செல்லும்
நல்லாட்சியின் தூயசக்தியான மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
வெற்றித் தலைவர் அவர்களின் பிறந்தநாளையொட்டி தலைமைச் செயலகத்தில் இன்று அவரை சந்தித்து வாழ்த்தும் ஆசியும் பெற்ற பெருமையான தருணம்.
#HBDCMJosephVijay
@CMOTamilnadu
@TVKVijayHQ
@TVKPartyHQ @TVKHQITWingOffl #TamilagaVettriKazhagam
#SelfConfidence – at Egmore Nungambakkam, India
தலைவா சதீஷ் retweeted
மனசாட்சியுள்ள
மக்களாட்சி அமைத்து,
மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி,
எளியவர்களுக்கும்
அதிகாரமளித்து,
தமிழ்நாட்டை
வெற்றிப் பாதையில்
அழைத்துச் செல்லும்
என் பாசத்திற்குரிய
மான்புமிகு தமிழ்நாடு
முதலமைச்சர் வெற்றித்தலைவர் அவர்களுக்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
என்றென்றும் உங்கள் வழியில்
என்றென்றும் உங்கள் விசுவாசி
#HBDCMJosephVijay
@CMOTamilnadu
@TVKVijayHQ
@TVKPartyHQ @TVKHQITWingOffl #TamilagaVettriKazhagam
#SelfConfidence – at Mylapore Tiruvallike, India
தலைவா சதீஷ் retweeted
விஜய் தாமு
விஜய் பிரபு
விஜய் பாலாஜி
விஜய் பார்த்திபன்
விஜய் சரவணன்
விஜய் அன்பன்
விஜய் மோகன்
விஜய ராஜ்
விஜய் வெங்கடேஷ்
விஜய் நிரஞ்சன் மற்றும்
இன்னும் பல லட்சம் பேர்
இவர்கள் தான் தவெகவின் பலம்,இவர்கள் இங்கே இருந்தார்கள்,இருக்கிறார்கள்,இருப்பார்கள். ஆனால் பவர் இருக்கும் போது வரும் விஜய...see more
தலைவா சதீஷ் retweeted
ஆட்டிசம் குழந்தை என்பதால் விட்டு சென்ற அம்மா.. ‘எனக்கு பிறகு என் மகளை யார்?’ கலங்க வைத்த தந்தை.. நெகிழ்ச்சி
More Details: tamil.oneindia.com/televisio…
#TamizhaTamizha #Autism #Father #Offbeat #Oneindia #OITamil
தலைவா சதீஷ் retweeted
8 மாதங்களாக குண்டும் குழியுமாக இருந்த நொச்சி குப்பம் சாலையை இரவோடு இரவாக சரி செய்த தவெக சட்டமன்ற உறுப்பினர் வெங்கட்ரமணன் 👏👏👏
தலைவா சதீஷ் retweeted
சிறுவயதில் நான் நாள் முழுவதும் டெஸ்ட் கிரிக்கெட் பார்த்த ஞாபகம் வருகிறது.
இன்று அதே ஆர்வத்தோடு பல வீடுகளில் குழந்தைகள்கூட சட்டசபை நிகழ்வுகளை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
இது 'பிக் பாஸ்' நிகழ்ச்சியாக மாறுவதும், அல்லது வருங்காலத் தலைமுறைக்கு ஒரு நல்ல அரசியல் பாடமாக அமைவதும் அந்தச் சபையின் கையில்தான் இருக்கிறது.
வாழ்த்துகள்.
#TNAssembly #TamilNadu #TamilPolitics #TNGovt
தலைவா சதீஷ் retweeted
எங்கள் மயிலாப்பூர் தொகுதியின்
முதல் முறை அமைச்சர் ஆகும் எங்கள் அண்ணண். மாண்புமிகு.P. வெங்கடரமனன் பள்ளி கல்வித் துறை அமைச்சர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்🫂💪🙏❤️ #TVKVijay #Vijay
தலைவா சதீஷ் retweeted
பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வில் வெற்றி பெற்றுள்ள மாணவச் செல்வங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும். வெற்றிக்குப் பிறகான அடுத்தக் கட்டம் நோக்கிச் செல்லும் நீங்கள் உயர்ந்த லட்சியத்துடன் முன்னேற வேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறேன்.
தேர்வில் வெற்றி வாய்ப்பை இழந்தவர்கள் மனம் தளர வேண்டாம். வெற்றிக் கோட்டைத் தொட உள்ள நிலையில் இருக்கின்றீர்கள். மீண்டும் திட்டமிட்டு உழைத்தால் வெற்றி உங்கள் வசமாவது உறுதி. உங்களுடைய வெற்றிக்கும் முன்கூட்டியே என் வாழ்த்துகள்.
உழைத்துக்கொண்டே இருப்போம். வெற்றி பெற்றுக்கொண்டே இருப்போம்.
அனைவருக்கும் மீண்டும் வாழ்த்துகள்.
@TVKVijayHQ @TVKPartyHQ @TVKHQITWingOffl #TamilagaVettriKazhagam #SelfConfidence
தலைவா சதீஷ் retweeted
தமிழ்நாட்டில் வெற்றித் தலைவர்
அவர்கள் தலைமையில் மனசாட்சியுள்ள மக்களாட்சி அமைய விசில் புரட்சி மூலம் தீர்ப்பு வழங்கிய மக்களுக்கும், வெற்றித் தலைவர் அவர்கள் நல்லாசியுடன்
பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் என்னை வெற்றி பெற வைத்த மகத்தான மயிலாப்பூர்
சட்டமன்றத் தொகுதி மக்கள் அனைவருக்கும் இதயங்கனிந்த
நன்றி நன்றி நன்றி
மயிலாப்பூரில் கழகத்தின் வெற்றிக்காக உழைத்த கழகத்தின் பகுதி,வட்ட,பாக நிர்வாகிகள் மற்றும் பாக முகவர்கள் அனைவருக்கும் என் இதய நன்றிகள்.
@TVKVijayHQ @TVKPartyHQ @TVKHQITWingOffl #TamilagaVettriKazhagam
#SelfConfidence #TVKforTN
தலைவா சதீஷ் retweeted
வெற்றித் தலைவர் நல்லாசியுடன்
மயிலை தொகுதியில் விசில் சின்னத்திற்கு வாக்கு கேட்டு கழக நிர்வாகிகள் & கழகத் தோழர்கள் இன்று நடத்திய இருசக்கர வாகள ஊர்வலத்தில் பங்கேற்றேன்.
மயிலாப்பூர் மக்களுடன் நிற்போம்.
மக்கள் விரோத ஆட்சியை விரட்டுவோம்.
நமது சின்னம் விசில்
வெற்றிச் சின்னம் விசில்
தமிழக மக்கள் சின்னம் விசில்
வெற்றித் தலைவரின்
ஆட்சி அமைய வாக்களிப்பீர்
விசில் சின்னத்திற்கு
@TVKPartyHQ
@TVKHQITWingOffl
#Mylapore4tvk
#Mylapore4whistle
#Mylapore4Venkataramanan
#Voteforwhistle
தலைவா சதீஷ் retweeted
தமிழ்நாட்டிற்கான தொலைநோக்குத் திட்டங்களுடன் கூடிய, மக்களின் தேர்தல் அறிக்கையை வெற்றித் தலைவர் அவர்கள் வெளியிட்டதைத் தொடர்ந்து, தேர்தல் அறிக்கையில் உள்ள மக்கள் நலத்திட்டங்கள் பற்றி, மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கழக நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் ஏற்பாடு செய்திருந்த தெருமுனைப் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றி , வாக்கு சேகரித்தேன். கூட்டத்தில் தாய்மார்கள் திரளாக பங்கேற்று விசில் சின்னத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.
நமது சின்னம் விசில்
வெற்றிச் சின்னம் விசில்
தமிழக மக்கள் சின்னம் விசில்
வெற்றித் தலைவரின்
ஆட்சி அமைய வாக்களிப்பீர்
விசில் சின்னத்திற்கு
@TVKPartyHQ
@TVKHQITWingOffl
#TVKManifesto2026
#Mylapore4tvk
#Mylapore4whistle
#Mylapore4Venkataramanan
#Voteforwhistle
தலைவா சதீஷ் retweeted
தமிழகத்தின் அனைத்து தரப்பு மக்களின் நலன்களுக்காக வாக்குறுதிகள் அளித்து, அதனை உறுதியாக நிறைவேற்றவுள்ள தமிழக மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர்
நம் வெற்றித் தலைவரின்
நல்லாசியுடன் மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மந்தைவெளி சந்தை தண்டுமாரியம்மன் கோவில் சந்திப்பு பகுதிகளில் கழகத் தோழர்களுடன் வீதிவீதியாக சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தேன்.
நமது சின்னம் விசில்
வெற்றிச் சின்னம் விசில்
தமிழக மக்கள் சின்னம் விசில்
வெற்றித் தலைவரின்
ஆட்சி அமைய வாக்களிப்பீர்
விசில் சின்னத்திற்கு
@TVKVijayHQ @TVKPartyHQ @TVKHQITWingOffl
#Selfconfidence
#Mylapore4tvk
#Mylapore4whistle
#Mylapore4Venkataramanan
#Voteforwhistle
தலைவா சதீஷ் retweeted
அரசியலமைப்பு சட்டத்தின் வழியாக அனைவருக்கும் சம உரிமை கிடைக்க தமது வாழ்நாள் முழுவதும் போராடிய நம் கொள்கைத் தலைவர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளையொட்டி இன்று சென்னையில் உள்ள அண்ணல் அம்பேத்கர் அவர்களின் மணிமண்டபத்திற்கு கழக நிர்வாகிகளுடன் ஊர்வலமாக சென்று, அங்குள்ள அவரது திருவுருவப் படத்திற்கும், திருவுருவச் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்.
அனைவருக்கும் சம உரிமை சமவாய்ப்பு கிடைத்திட அண்ணல் அம்பேத்கர் அவர்கள் காட்டிய வழியில் வெற்றித் தலைவர் தலைமையில் தமிழகத்தில் மக்கள் விரும்பும் மக்களாட்சி அமைய உறுதி ஏற்போம்.
@TVKVijayHQ @TVKPartyHQ @TVKHQITWingOffl
#Selfconfidence
#Mylapore4tvk
#Mylapore4whistle
#Mylapore4Venkataramanan
#Voteforwhistle
தலைவா சதீஷ் retweeted
தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றித் தலைவர் நல்லாசியுடன் மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 126 வட்டப்பகுதியில் இன்று கழகத் தோழர்களுடன் பொதுமக்களை சந்தித்து விசில் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தேன். வீதிக்கு வீதி மட்டுமல்ல வீட்டுக்கு வீடு விசில் சின்னத்திற்கு மக்கள் பெரும் ஆதரவு தெரிவித்தனர்.
நமது சின்னம் விசில்
வெற்றிச் சின்னம் விசில்
தமிழக மக்கள் சின்னம் விசில்
வெற்றித் தலைவரின்
ஆட்சி அமைய வாக்களிப்பீர்
விசில் சின்னத்திற்கு
@TVKVijayHQ @TVKPartyHQ @TVKHQITWingOffl
#Selfconfidence
#mylaporetvkcandidate
#Voteforwhistle
தலைவா சதீஷ் retweeted
தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றித் தலைவர் திரு.விஜய் அவர்களின் நல்லாசியுடன்,
கழகப் பொதுச் செயலாளர் அன்புச் சகோதரர் திரு. ஆனந்த் அவர்களின் நல்வாழ்த்துகளுடன்,
சென்னை தெற்கு மாவட்டம் சார்பில் மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதியில்
சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் திரு.கே.வி.தாமு அவர்கள் ஏற்பாட்டில்
நடைபெற்ற கழகக் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்று பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும், கால்பந்து வீராங்கனைகளுக்கு காலணிகளையும் வழங்கினேன். விழாவில் கழக துணைப் பொதுச் செயலாளா திரு.ராஜ்மோகன், கழக கொள்கைப் பரப்பு இணை செயலாளர் திரு. லயோலா மணி அவர்கள்,
மயிலை பகுதிச் செயலாளர்கள் M.பிரசாந்த், S.சதீஷ், மாவட்ட துணை செயலாளர் S. முருகன், வட்டச் செயலாளர்கள், அனைத்து அணிகளின் நிர்வாகிகள் மற்றும் கழகத் தோழர்கள் திரளாக பங்கேற்றனர்.
@TVKVijayHQ @TVKPartyHQ @TVKHQITWingOffl @TVKHQ_Chennai #TamilagaVettriKazhagam #Selfconfidence




































