Pinned Tweet
திமுக, அதிமுகவின் சிந்தனைக்கு -
2024 தேர்தல் வரை திமுகவும் அதிமுகவும் தங்களுக்கிடையே 80-85% வாக்குகளை வைத்திருந்தார்கள். "மாற்றம்", "அதிருப்தி" என அவர்களைத் தாண்டி வெளியே போகக் கூடிய வாக்குகள் 15-20% மட்டுமே இருந்தன. 2026 பொதுத்தேர்தலில் அவர்கள் கிட்டத்தட்ட 20% வாக்குகளை இழந்து 65% என்று இறங்கி நிற்கிறார்கள்.
ஏன்?
விஜய் மீதான திரைக் கவர்ச்சி,
விஜய் தரப்பின் சோஷியல் மீடியா ஆதிக்கம் + அங்கே செய்த பிரச்சாரம்,
"Career உச்சத்தை விட்டுட்டு வரேன்" என்ற விஜய்க்கு மீடியாவும் சேர்ந்து வளர்த்துவிட்ட "தேவதூதர்" பிம்பம்,
ஒரு பக்கம் பெரியார், இன்னொரு பக்கம் பிராமணர் அரவணைப்பு என எல்லா பக்கமும் கோல் போட்ட விஜய்யின் அணுகுமுறை,
தன் மீதே தவறு இருந்தாலும் மற்றவர் மீது பழி போட்டு அனுதாபம் தேடிய விஜய்யின் காய்நகர்த்தல்கள்,
விஜய்யை எந்த விதத்திலும் expose செய்யாத பிரச்சாரத்தை செய்த திமுக, அதிமுகவின் தண்டமான வியூகங்கள்
- இப்படி விஜய்யை மையமாக வைத்து பல காரணங்கள் சொல்லலாம். அவற்றில் பெரும்பாலும் உண்மையும் உண்டு.
ஆனால், இதெல்லாம் அதிகபட்சம் 20% ஓட்டுகளைத்தான் தவெகவுக்கு பெற்றுத் தந்திருக்கும். அதற்கு மேலும் 15% ஓட்டுகள் கை நழுவியது எப்படி என்பதை திமுகவோ, அதிமுகவோ இன்னமும் புரிந்து கொண்டதாக தெரியவில்லை.
"மயக்கத்தில் ஓட்டு போட்டு விட்டார்கள்", "ரீல்ஸ் தாக்கம்", "வீட்டு குழந்தைகளின் அடம்", "SIR குளறுபடி", "EVM சித்துவேலை", "Flukeல ஜெயிச்சுட்டாங்க" - இப்படித்தான் திமுக, அதிமுக தரப்பில் பேசி வருகிறார்களே தவிர, தங்கள் பக்கம் இருக்கும் அடிப்படையான ஆழமான தவறுகளை ஒப்புக்கொள்ளவோ திருத்திக் கொள்ளவோ இல்லை என்பதுதான் நிதர்சனம்.
திமுகவின் தேர்தல் தோல்விக்கு காரணம் கண்டறியும் குழுக்களை ஸ்டாலின் அமைத்தார். அறிக்கைகளையும் பெற்றுக்கொண்டார். அதன் விளைவாக திமுகவின் உட்கட்சி மாவட்டங்களை அதிகரித்தது மட்டுமே தேர்தல் தோல்விக்கு பிறகு அவர் செய்த ஒரே மாற்றம். அந்த நடவடிக்கை மக்களுக்கு தரும் செய்திதான் என்ன?? அல்லது, அதனால் மக்களுக்கு பலன்தான் என்ன?!
அதிமுகவை எடுத்துக்கொண்டால் - நிர்வாகிகள் சாரைசாரையாக தவெகவுக்கு தாவுகிறார்கள். அது குறித்த பரபரப்பு செய்திகள் தாண்டி, மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க இந்த ஐந்து மாதங்களில் அதிமுக தலைமை எடுத்த நடவடிக்கைகள் ஏதேனும் உண்டா?!
மொத்தத்தில் - இரண்டு பெரிய கட்சிகளும் தங்கள் பக்கம் செய்யவேண்டிய திருத்தங்களை செய்து "இதோ நாங்கள் இன்னின்ன விஷயங்களில் திருந்தியிருக்கிறோம்" என மக்கள் முன் செல்லாவிட்டால், விஜய் படுமோசமான ஆட்சியைத் தந்தாலும் விசில் சின்னத்தின் மீதான வாக்காளர் பாசம் குறையாது. அதுவரை விஜய் காட்டில் மழைதான்!!!
theAnalyst retweeted
Replying to @tn2point0
காக்கா கழுகுன்னு சுத்தி வந்ததுக்கு அப்புறம் ரஜினி மேடையிலே விளக்கம் கொடுத்தார், ஆனா அந்தப்பக்கம் இருந்து எதுவும் வரல. இன்றுவரை தொடர்ந்து அவர் மீது வன்மம் மட்டும் கக்கிட்டு இருக்காங்க.
அதனால் நன்மதிப்பு இருக்க வாய்ப்பே இல்ல.
ரஜினி குறித்து விஜய் "அப்படி உயர்வாக பேசினார், இப்படி பாசிட்டிவ் ஆக பேசினார்" என்பதெல்லாம் விஜய் சார்ந்தவர்கள் விஜய்க்கு கொடுக்கும் elevationதானே தவிர, அதில் உண்மை இருக்குமா என்பது சந்தேகத்துக்குரியது.
அமைச்சர் அருண்ராஜ் விஜய் கட்சியில் சேரும் சமயம் தான் ஒரு ரஜினி ரசிகர் என சொல்லியிருக்கிறார். அவ்வகையில், அவரைப் பார்த்து "ஜெயிலர் 2 பார்த்துவிட்டீர்களா?" என யார் கேட்டாலும் வியப்பல்ல. கேட்டவர் ரஜினி ரசிகராக இருக்கவேண்டும் என அவசியம் இல்லை.
உண்மையான ரஜினி ரசிகர் "காட்டுல காக்கா கழுகு இருந்துச்சாம்"ன்னு வலிந்து திணித்து நக்கலாக பேசி pause விட்டு மைக்கை சுற்றி வட்டம் போட்டிருக்க வாய்ப்பில்லை.
அந்த இமேஜை இப்படிப்பட்ட PR பேச்சுகள் மூலம் உடைக்க முடியாது.
கமல் பிறந்தநாளில் இந்த பதிவு பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.
கல்கி எழுதிய "சிவகாமியின் சபதம்" நாவலில் நாகநந்தி என்கிற புத்த பிக்ஷு, வாதாபி மன்னன் புலிகேசியின் சகோதரர். வாதாபிக்காக காஞ்சியில் சில உளவு வேலைகளையும் சதி வேலைகளையும் செய்வார். அவருக்கு சிவகாமி மீது தீராக் காதல் (அது கதையில் ஒரு திருப்புமுனையாக தெரியவரும்).
புத்த பிக்ஷுவாக இருந்துகொண்டு இப்படி பெண் மீது ஆசையா என்கிற கேள்வியை புலிகேசி வைக்கும்போது நாகநந்தி சொல்வார் - "சிவகாமியிடம் நான் கொண்டிருக்கும் காதலில் தேக தத்துவம் என்பதே கிடையாது. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் நான் ஏற்றுக்கொண்ட பிக்ஷு விரதத்துக்கு சிவகாமியினால் யாதொரு பங்கமும் நேரவில்லை. எனக்கு விடை கொடு. நான் போகிறேன். எங்கேயாவது மனிதர்களுடைய கண் காணாத இடத்துக்கு போகிறேன். அஜந்தாவைப் போன்ற இன்னொரு மலைப் பிரதேசத்தை கண்டுபிடித்து அதற்குள்ளே, உள்ளே, உள்ளே யாரும் எளிதில் வர முடியாத இடத்துக்குப் போய்விடுகிறேன். அங்கே சிவகாமியை நடனம் ஆடச் சொல்லிப் பார்த்துக்கொண்டே என் மிகுதி ஆயுளைக் கழித்துவிடுகிறேன்".
இதை படிக்கும்போது எனக்கு உடனடியாக நினைவுக்கு வந்தது கமலின் "குணா". குணாவுக்கு அபிராமி மீது உள்ள காதல் உடல் இச்சைகளை தாண்டியது. அவனுக்கு அவள் ஆராதிக்கப்பட வேண்டிய தேவதை.
"மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல" என்பது முழுக்க முழுக்க பொருந்தும் காதல் அது. மனிதர்களின் இந்த உலகம் பொருந்தாது என்று மலை மேல் ஒரு குகைக்கு சென்று அபிராமியோடு வாழ நினைப்பான் குணா. அந்தக் காதலை கமல் குணாவாக உருமாறி உருகி உருகி வெளிப்படுத்துவார்.
"தூரத்தில் யாருமற்ற மலைப் பகுதியில் நாங்கள் இருவரும் வாழ்வோம்" என சொன்ன நாகநந்திக்கு சிவகாமி மீது இருந்த காதலும், குணாவுக்கு அபிராமி மீது இருந்த காதலும் ஒரே தராசில் வைக்கக் கூடியதாக எனக்கு தோன்றியது.
"நாகநந்தி-சிவகாமி"தான் "குணா-அபிராமி"க்கு inspiration ஆக இருந்திருக்குமோ என்ற என் எண்ணத்தை வலுப்படுத்திய விஷயங்கள் -
1. "கண்மணி அன்போடு" பாடலில் "சிவகாமியே சிவனில் நீயும் பாதியே" என்ற வரி. சிவனுடைய நடனத்தின் வீரியம் இவ்வுலகம் அறிந்தது. ஆக, நடனத் தாரகை சிவகாமியை குறிக்கும் விதமாக அந்த வரி எழுதப்பட்டிருக்கலாம். அபிராமிக்கான பாடலில் சிவகாமி உட்புகுந்தது "சிவகாமி சபதம்" கதையோடு உள்ள தொடர்பின் வெளிப்பாடுதானே?!
2. "பார்த்த விழி பார்த்தபடி" பாடலில் குணாவின் உடை ஒரு சாமியாரின் உடையை ஒத்திருக்கும். அது, முற்றும் துறந்த நிலைக்கு சென்றும் சிவகாமி மீது மனிதர் உணர முடியாத காதலில் விழுந்த புத்த பிக்ஷுவை உருவகப்படுத்தும் குறியீடாக எனக்கு தெரிந்தது.
குணா திரைப்படத்துக்கும் சிவகாமியின் சபதம் நாவலுக்கும் தொடர்பு உள்ளதாக கமல் ஏதும் சொல்லியிருக்கிறாரா என எனக்கு தெரியவில்லை. கமல் ரசிகர்கள் தெரிந்தால் சொல்லவும்.
மகத்தான திரைக்கலைஞன் கமல் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!!! @ikamalhaasan
2003ல் கமல் தன் படத்துக்கு "சண்டியர்"ன்னு பேர் வச்சப்போ "இதனால் ஜாதிக் கலவரம் வரும்"ன்னு எதிர்த்தாங்க.
இப்போ 2026ல் "சண்டியர்"ன்னு தலைப்பு வச்சாலும் சோஷியல் மீடியா புலிகள் பலர் பொங்குறாங்க.
அப்படின்னா, 23 வருஷம் ஆகியும் இவங்களுக்கு ஜாதியை தாண்டிய மனநிலை வளர்ச்சி ஏற்படவே இல்லையா?!
கோவை பெரியார் அறிவுலகம் நூலகத்தின் நூல்கள் கொள்முதல் முறைகேடு விவகாரத்தில் விஜய் இவ்வளவு வேகவேகமாக அறிக்கை விட என்ன காரணம்?!
இதற்கு முன் எந்த விவகாரத்திலாவது இப்படி வேகமாக அறிக்கை விட்டிருக்கிறாரா?!
முறைகேடு செய்தது திமுக அரசு என்றால் அதை தவெக அரசு ஏன் கண்டுபிடிக்கவில்லை??
எழுத்தாளர் பெருமாள் முருகன் கண்டறிந்து கட்டுரை வெளியிடும் வரை தவெக அரசுக்கே இது குறித்து ஏதும் தெரியாமல் இருந்தது எப்படி?
திமுக அரசு முறைகேடாக கொள்முதல் செய்து வைத்திருந்தது என தவெக தரப்பில் சொல்கிறார்கள். அப்படியே இருந்தாலும், புத்தகங்களை அடுக்கி வைத்து நூலகத்தை திறந்தது தவெக ஆட்சியில்தானே? தகுதியற்ற புத்தகங்களை தணிக்கை செய்யாமல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விட்டது தவெக அரசுதானே? பெருமாள் முருகன் சொல்லாவிட்டால் இந்த புத்தகங்களை தவெக அரசு தொடர்ந்து பயன்பாட்டில் வைத்திருக்கும்தானே? இந்த தவறுக்கு தவெக அரசு பொறுப்பேற்குமா?!
இந்த பதிவில் 👇எதிர்வினையாற்றும் விஜய் ரசிகர்களின் இரண்டு முக்கிய கேள்விகள் -
"உனக்கு உலகப் பொருளாதாரம், இந்திய பொருளாதாரம் தெரியுமா? விலைவாசி உயர்வுக்கும் மாநில ஆட்சிக்கும் என்ன சம்பந்தம்?"
அவர்களுக்கு என் பதில் -
நான் பொருளாதாரத்தில் Zeroவாகவே இருந்துவிட்டுப் போகிறேன். ஆனால், பொருளாதாரப் புலியான உங்க விஜய்ண்ணா தேர்தல் பிரச்சாரத்தின்போது திமுகவைப் பார்த்து "விலைவாசி பிரச்சினைங்கிற அடிப்படை பிரச்சினையையே சரி செய்யலேன்னா அப்புறம் ஆளுங்கட்சின்னு ஒண்ணு எதுக்கு?"ன்னு கேட்டாரே, இப்போ அதே கேள்வி தவெகவுக்கு பொருந்தாதா?!
தஞ்சாவூரில் ஒரு பிரபலமான சைவ ஹோட்டலில் ஏப்ரல் 2026ல் இருந்த விலை நிலவரம் -
மீல்ஸ் - ₹120
வெஜ் பிரியாணி - ₹110
விஜய் ஆட்சிக்கு வந்த ஆறு மாதங்களில் விலை விவரம் -
மீல்ஸ் - ₹150
வெஜ் பிரியாணி - ₹130
அதாவது 18% to 25% விலை உயர்வு.
விலைவாசிக்கான வெற்றி ஆட்சி!!!
இந்த 👇 பதிவில் விஜய் ரசிகர்கள் வைக்கும் அடுத்த அறிவார்ந்த கருத்து - "அவர் ஜனநாயகனுக்கே 6 AM காட்சி வைக்கல".
1. யாருக்கும் வைக்காம தன் படத்துக்கு அப்படி வச்சிருந்தால், கோபப்படாம இருக்கற அளவுக்கு இன்னும் தமிழக மக்களுக்கு சொரணை குறைஞ்சிடல. இது விஜய் Strategistsக்கு தெரியும்.
2. அதையும் மீறி ஜனநாயகனுக்கு 6 AM காட்சி வச்சிருந்தா, "Career உச்சம், அதை தியாகம் பண்ணிட்டேன்னு சொன்னவரு காலை 6 மணி காட்சி தியாகம் பண்ணமாட்டாராமா?"ன்னு மக்கள் கேட்டிருந்தா அசிங்கமா போயிருக்கும் குமாரு.
ரஜினி யாரையாவது சந்திச்சாலே "அது விஜய் மேல வன்மம்"ன்னா...
விஜய் ஆட்சியில் ரஜினியோட ஜெயிலர் 2 ரிலீஸ் ஆகும்போது இப்படி காட்சி நேர சலுகைகள் கொடுக்காம, அதற்கு அடுத்த பண்டிகை ரிலீஸுக்கு கொடுக்கிறாங்கன்னா விஜய்க்கு ரஜினி மேல எவ்வளவு வன்மம் இருக்கணும்?!
தான் எங்கிருந்து வந்தோமோ அந்த சினிமாத்துறைக்கு எக்ஸ்ட்ரா வசூல் கிடைக்காட்டியும் பரவாயில்லை, ரஜினி படம் பெரிய கலெக்ஷன் வாங்கிடக்கூடாதுங்கிற மோசமான எண்ணம் காரணம்னு எடுத்துக்கலாமா?!
ஆனால், இப்படி எந்த சலுகையும் இல்லாமலேயே Industry Hit அடிச்ச ரஜினி Massதான்!!! One man to rule the game...
இந்த பதிவில் வந்து "அக்டோபர் 27ந் தேதிதான் காலை 6 மணி காட்சிக்கு கோரிக்கை வைத்தார்கள்" என அறிவார்த்தமாக பேசுவதாக நினைக்கும் விஜய் ரசிகர்களுக்கு ஒரு தகவல் -
மே 2026ல் விஜய் பதவியேற்ற பின் அவரை தலைமைச்செயலகத்தில் சந்தித்த திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் வைத்த கோரிக்கைகளில் ஒன்று: "திரையரங்குகள் செயல்படும் நேரத்தை தற்போதுள்ள காலை 9 மணி - அதிகாலை 2 மணிக்கு மாற்றாக காலை 6 மணி முதல் அதிகாலை 2 மணி வரை மாற்றியமைக்க வேண்டும்."
ரஜினி யாரையாவது சந்திச்சாலே "அது விஜய் மேல வன்மம்"ன்னா...
விஜய் ஆட்சியில் ரஜினியோட ஜெயிலர் 2 ரிலீஸ் ஆகும்போது இப்படி காட்சி நேர சலுகைகள் கொடுக்காம, அதற்கு அடுத்த பண்டிகை ரிலீஸுக்கு கொடுக்கிறாங்கன்னா விஜய்க்கு ரஜினி மேல எவ்வளவு வன்மம் இருக்கணும்?!
தான் எங்கிருந்து வந்தோமோ அந்த சினிமாத்துறைக்கு எக்ஸ்ட்ரா வசூல் கிடைக்காட்டியும் பரவாயில்லை, ரஜினி படம் பெரிய கலெக்ஷன் வாங்கிடக்கூடாதுங்கிற மோசமான எண்ணம் காரணம்னு எடுத்துக்கலாமா?!
ஆனால், இப்படி எந்த சலுகையும் இல்லாமலேயே Industry Hit அடிச்ச ரஜினி Massதான்!!! One man to rule the game...
ரஜினி யாரையாவது சந்திச்சாலே "அது விஜய் மேல வன்மம்"ன்னா...
விஜய் ஆட்சியில் ரஜினியோட ஜெயிலர் 2 ரிலீஸ் ஆகும்போது இப்படி காட்சி நேர சலுகைகள் கொடுக்காம, அதற்கு அடுத்த பண்டிகை ரிலீஸுக்கு கொடுக்கிறாங்கன்னா விஜய்க்கு ரஜினி மேல எவ்வளவு வன்மம் இருக்கணும்?!
தான் எங்கிருந்து வந்தோமோ அந்த சினிமாத்துறைக்கு எக்ஸ்ட்ரா வசூல் கிடைக்காட்டியும் பரவாயில்லை, ரஜினி படம் பெரிய கலெக்ஷன் வாங்கிடக்கூடாதுங்கிற மோசமான எண்ணம் காரணம்னு எடுத்துக்கலாமா?!
ஆனால், இப்படி எந்த சலுகையும் இல்லாமலேயே Industry Hit அடிச்ச ரஜினி Massதான்!!! One man to rule the game...
விஜய்யின் Road showக்களும் தொடர் நேரலைகளும் பொதுவானவர்களுக்கு சலிப்பு தட்ட ஆரம்பித்துவிட்டது போல.
விஜய் ரசிகர்கள் போல இத்தகைய செய்திகளை உடனுக்குடன் தொடர்பவர்கள் குறைந்து வருவதாக தகவல்.
திறமையின்மையால் ஏற்படும் குறையை, கவர்ச்சியாலும் வசீகரத்தாலும் நீண்ட காலத்திற்கு மறைக்க முடியாது.
ஸ்டாலினை ஏன் late 80sலேயே தளபதின்னு கூப்பிட ஆரம்பிச்சாங்க? அப்போ தளபதின்னு கூப்பிடுற அளவுக்கு என்ன சாதிச்சிருந்தாரு?
"தலைவர்", "ஆண்டவர்" - இதெல்லாம் ரசிகர்கள் கூப்பிட்டது. ஆனால் திமுகவில் இன்றைய தலைவர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் கடந்த காலங்களில் விஜய்யை "தளபதி" என விளித்தது ஏன்? போதாதற்கு "ஸ்டாலின் அரசியல் தளபதி, விஜய் சினிமா தளபதி" என விளக்கம் வேறு.
திமுக போன்ற பெரிய அரசியல் கட்சிகளை சினிமா நட்சத்திரங்களின் புகழை அறுவடை செய்ய நினைக்காமல் அரசியல் செய்யச் சொல்லுங்கள். தமிழ்ச் சமூகம் உருப்படும்.
முன்பு ரஜினியை அரசியல் ரீதியாக வசைபாடிய ஜீவசகாப்தன் ரஜினியை சந்திக்கக் காரணம் ஜீவசகாப்தனின் விஜய் எதிர்ப்பு என்கிறார் இந்த so-called பகுத்தறிவு ஊடகவியலாளர் ரகு. அதிலும் ரஜினிக்கு விஜய் மீது பொறாமை, காழ்ப்புணர்வு என்று வாய்க்கு வந்ததை பேசுகிறார்.
30 வருடங்களுக்கு முன் பொது மேடைகளில் அதிமுகவுக்கு ஆதரவான 1996 தேர்தல் பிரச்சாரங்களில் மனோரமா ஆச்சி ரஜினியை பேசாத பேச்சில்லை. அவ்வளவு தனிமனித தாக்குதல் நடத்தினார். அத்தனை பேச்சுகளையும் புறந்தள்ளி மனோரமாவுக்கு அருணாச்சலம் படத்தில் நடிக்க வாய்ப்பு தந்தவர் ரஜினி.
மனோரமாவின் ஏச்சு பேச்சுகளை ஒதுக்கி அவரை ஏற்க முடிந்த ரஜினிக்கு, ஜீவசகாப்தனை மன்னிப்பதெல்லாம் எம்மாத்திரம்?!
ரஜினியின் ego பற்றி பேசுபவர்கள் விஜய்யின் ego பற்றி வாய் திறக்கமாட்டார்கள். அதுதான் அவர்களது pseudo-பகுத்தறிவு.
Will Rajini support Dhanush's political entry? Is Rajini uncomfortable about CM Vijay's electoral victory? He recently met with Jeeva Sagapthan, a DMK-leaning journalist who praised Jailer 2. Interestingly Jeeva has criticised Rajini for his right-wing affiliation in the past. It felt like Entire DMK ecosystem celebrated Jailer 2 just to spite Vijay. To clarify, I loved Jailer 2 and feel it would have been a huge hit irrespective of this.
On GoalTalk with @tnrags
பரத்...
ரஜினி அரசியலுக்கு வருவதாக இருந்த காலத்தில் அவர் அரசியலுக்கு ஆதரவாக டிஜிட்டல் பிரச்சாரம் செய்ய சில முன்னெடுப்புகள் செய்தேன்.
அவற்றின் ஒரு பகுதியாக இதழியல் சார்ந்த ஒரு ஆலோசனைக்காக பத்திரிக்கையாளர் பரத் அவர்களை வாட்ஸாப்பில் தொடர்பு கொண்டேன் (அவரும் ரஜினி ரசிகர் என்பதால் சில ரஜினி ரசிக நண்பர்கள் மூலம் அவரது தொடர்பு கிடைத்தது). தன்மையாக பதில்கள் தந்தார்.
நேரடியாக சந்திக்க பிப்ரவரி 2020ல் ஓரிரு முறை முயற்சிகள் எடுத்தோம். ஏதோ காரணங்களால் தள்ளிப்போனது. பிறகு கொரோனா வரவும், அதற்கும் பிறகு ரஜினி அரசியல் வருகை இல்லையென்றான பின்னும் அந்த சந்திப்பு நிகழவே இல்லை.
அவ்வப்போது அவரது காணொளிகள் பார்ப்பேன். வேகமாக பேசுவது போல் இருந்தாலும், ஆணித்தரமாக, முடிந்த அளவுக்கு சமநிலையோடு கருத்துகளை வைப்பார்.
ஊடகத்துறையில் பல உயரங்களை தொட்டிருக்கவேண்டியவர், சட்டென்று மறைந்துவிட்டார். அவரது அகால இறப்பு அதிர்ச்சியும் சோகமும் தருகிறது. அவர் ஆன்மா அமைதிகொள்ள என் பிரார்த்தனைகள் 🙏
ஏற்கனவே இங்கே இந்திய தேசிய உணர்வு அதலபாதாளத்தில் இருக்கிறது. அதனை மீட்டெடுக்க காமராஜர் போன்ற தலைவர் யாரும் இல்லை.
இத்தகைய சூழலில் தமிழ்நாட்டுக்கு தனிக் கொடி என்பது தேவையில்லாத ஆணி. ஆபத்தும் கூட.
ஜெயிலர் 2 - விரிவான பதிவு #4
ஜெயிலரின் பலவீனம் என்ன என துருவிக்கொண்டிருந்த கல்பக் குடும்பத்திற்கு, அவர் தப்பு செய்த தன் மகனையே கொல்லும் அளவுக்கு மனோரீதியில் பலமானவர் என தெரிய வருகிறது. அவ்வளவு பலம் இருந்தாலும் அதிலும் ஒரு ஓட்டை இருக்கவேண்டுமே? மகனை கொன்றதை குடும்பத்துக்கே தெரியாமல் ரகசியமாக பாதுகாக்கும் ஓட்டை. அந்த ஓட்டைக்குள் புகுந்து ஜெயிலரின் கோட்டையை தகர்க்க முடிவு செய்கிறது கல்பக் குடும்பம்.
கோவாவிலேயே ஜெயிலர் தன் குடும்பத்தை பாதுகாப்பாக வைத்திருக்கும் ரகசிய இடத்திற்கு போதி கல்பக் செல்கிறான். சமாதானம் பேச வந்ததாக சொல்லும் அவன் வரவு ஜெயிலருக்கு தன் கூடு கலையும் அபாயத்தை உணர்த்துகிறது.
ஜீசஸ் தன் சீடர்களுடனான கடைசி விருந்தில் இப்படி சொன்னாராம் - "உங்களில் ஒருவர் என்னை காட்டிக் கொடுக்கப்போகிறீர்கள்". இதை "Last Supper" என்ற படமாக டாவின்சி வரைந்தது உலகப் பிரபலம். அந்த "Last Supper" படம் தொங்கும் சுவரின் முன்பாக ஜெயிலர் தடுமாறி நிற்க, போதி கல்பக் அவர் இதுநாள்வரை கட்டிக்காத்து வந்த ரகசியத்தை அவரது குடும்பத்தினரிடம் உடைக்கிறான். "Last Supper" சொன்ன செய்தியை நினைவூட்டும் வகையில், ஜெயிலரின் மனைவி அவரை போலீஸ் பிடிக்க வழி செய்கிறார்.
ஜெயிலரின் குடும்பம் கல்பக் குடும்பத்திடம் சிறைப்பட, ஜெயிலர் போலீஸ் ஸ்டேஷன் சிறையில் இருக்கிறார். தனது மற்றுமொரு நட்பான ரோடியின் துணையுடன் சிறையிலிருந்து வெளிவந்து, கல்பக் குடும்பத்திடமிருந்து தன் குடும்பத்தை மீட்க வருகிறார். அந்த இறுதி சந்திப்பில் சில முடிச்சுகள் அவிழ்வதோடு, அதன் பிறகான மோதலில் கல்பக் குடும்பத்தில் காந்தா தவிர அனைவரும் மரிக்கிறார்கள்.
தன் மகனை கொன்றதற்காக ஜெயிலர் சரணடைய, கல்பக் குடும்பத்தின் எஞ்சிய வாரிசாக காந்தா ஜெயிலருடன் அடுத்த கட்ட மோதலை தொடங்க - என அடுத்த பகுதிக்கான Lead உடன் முடிகிறது படம்.
க்ளைமாக்ஸில் சற்றும் எதிர்பாராத வகையில் நான்கு பெண்களின் சாகசத்தை வைத்து வில்லன் கும்பலை நொறுக்குவது சிறப்பு. இரண்டு கவர்ச்சி நடன பாடல்கள் பற்றிய விமர்சனங்களை சமன் செய்யும் விதத்தில் அந்த நான்கு பெண்களின் சண்டைக்காட்சிகள் அமைந்திருந்தன.
ஜெயிலர் 1, ஜெயிலர் 2 என இரண்டு படங்களையும் ஒருசேரப் பார்த்தால் எங்கும் பிசிறு தட்டாத முழுமையான இணைப்பை கொடுத்திருக்கும் நெல்சனை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
ஜெயிலர் 3க்கான Lead இருந்தாலும் அதை ஒரு முழுநீளப் படமாக தரமுடியுமா, எப்படி தருவார் என்கிற "சந்தேகம் கலந்த சுவாரசியமான" கேள்விகளும் எழாமலில்லை.
ஜெயிலர் 1ல் மூன்று குறிப்பிட்ட இடங்களில் நாம் emotional ஆக படத்துடன் மிகவும் பிணைந்துவிடுவோம் - அர்ஜுனை தேடும்போதும் இறந்ததாக தெரியும்போதும் ஜெயிலர் காட்டும் உணர்வுகள், அர்ஜுன் தடம் மாறியவன் என்று தெரிந்த கணத்தில் உடையாமல் உடையும் ஜெயிலரின் உணர்ச்சி, மகனை கொன்றுவிட்டு தன் பாசத்தை மரத்துப்போக அல்லாடும் ஜெயிலரின் நடை. இந்த அளவுக்கு ஆழமாக நம்மை பிணைக்கும் ஜெயிலர் 1 emotions ஜெயிலர் 2வில் இல்லை என்பது ஒரு குறைதான்.
அதே போல், ஜெயிலர் 3 வராது என்றால், ரஜினி படம் சுபமாக முடியாமல் அவர் சிறைக்கு போவதுபோல் முடிவதும் குறைதான். நெல்சன் படமாக dark ஆக ஆரம்பிப்பதோ dark காமெடியுடன் பயணிப்பதோ நமக்கு பிரச்சினை இல்லை, ஆனால் ரஜினி படம் என்றால் light ஆக முடிவது அவசியம்.
குறிப்பிட்ட இந்த குறைகளைக் கடந்து படம் ஆணி அடித்தது போல் மனதில் நிலைத்து நிறைந்து நிற்கக் காரணம் - ரஜினி. நம்மை "ரசனை சிறை"யிலடைத்த அந்த ஜெயிலரைப் பற்றி ஆழமாக பேசாமல் இந்த விரிவான பதிவுத் தொடர் விடுதலை பெறாது.
(அடுத்த பதிவுடன் முடியும்)
ஜெயிலர் 2 - விரிவான பதிவு #3
ஜெயிலருக்கு பயந்து "புரூட்டஸ்" ஆக முடிவு செய்த திலீப்பை, அவனது கூட்டாளியான அமீரை "புரூட்டஸ்" ஆக்கி கொல்கிறான் போதி கல்பக்.
ஜெயிலரின் நண்பன் நரசிம்மாவின் குடும்பத்தை போதி கடத்தி வைக்க, போதியை சந்திக்க அவனது கோவா மாளிகைக்கு செல்கிறார் ஜெயிலர்.
திலீப் சொன்னது போல் "போதி கல்பக்குக்கு மேல் யாரும் இல்லை" என்பது உண்மையில்லை என அறிகிறார் ஜெயிலர். ஆம், போதியின் அப்பா சக்ரி கல்பக் Retire ஆகிவிட்டாலும், அந்த கும்பலின் முகமாக போதி இருந்தாலும், அந்த குடும்பத்தின் Strong Influencer போதியின் அக்கா காந்தா கல்பக் என்பதை ஜெயிலர் குறித்துக் கொள்கிறார்.
சக்ரியின் பிறந்தநாள் விழாவில், ஜெயிலர் வர்மனிடம் இருந்து எடுத்த மூன்று சிலை கன்டெயினர்களை கொடுத்துவிட்டு நரசிம்மா குடும்பத்தை மீட்டுச் செல்வதுதான் டீல். அந்த டீலை கல்பக் குடும்பம் மீறும்போது தனது ஸ்டைலில் சக்ரியை கடத்தி செக் வைக்கிறார் ஜெயிலர். கூடவே கல்பக் குடும்பத்தில் மேலும் சலசலப்பை ஏற்படுத்த காந்தாவுக்கும் ஒரு தூண்டில் வீசுகிறார்.
பிறகு ஒரு மந்திரியின் மத்திசத்தில்தான் சக்ரியை கல்பக் குடும்பத்தால் மீட்க முடிகிறது. நரசிம்மா குடும்பத்தை மீட்டுச் செல்லும் ஜெயிலரை கொல்லும் முயற்சியிலும் படுதோல்வி அடைகிறது கல்பக் குடும்பம்.
சகுனியின் அத்தனை தந்திரங்களையும் முறியடிக்கும் கிருஷ்ணர் போல கல்பக் குடும்பத்தின் வியூகங்களை தவிடுபொடியாக்குகிறார் ஜெயிலர்.
ஆடிப்போய் புலம்பித் தவிக்கும் கல்பக் குடும்பத்திற்கு, ஜெயிலரை வசமாக சிக்கவைக்கும் வலை ஒன்று கிடைக்கிறது.
(தொடரும் - இன்னும் 2 or 3 பதிவுகள்)
நான் தொடர்ந்து தவெகவை விமர்சித்து பதிவுகள் எழுதி வந்தேன். "தவெக மாற்று அல்ல, அதற்கு ஓட்டு போடுவது தவறான முடிவாக இருக்கும்" என்ற என் நிலைப்பாட்டை வலியுறுத்தி தேர்தல் சமயத்தில் தரவுகளுடன் பல பதிவுகள் பதிவிட்டேன்.
அதே நேரம், இந்த கட்சிக்கு ஓட்டு போடுங்கள் என எந்த குறிப்பிட்ட கட்சிக்கும் பிரச்சாரம் செய்யவில்லை.
அப்போது இந்த நபர் 👇 என் பதிவுகளில் வலிய வந்து "திமுக தோக்கணும், உங்க பதிவெல்லாம் விஜய்க்கு விழுற ஒரு ஓட்டைக் கூட தடுக்காது" என எதிர்க்கருத்து வைத்துக்கொண்டே இருந்தார்.
சக ரஜினி ரசிகர் என்ற மரியாதையுடன் அவ்வப்போது அவர் கருத்துக்கு பதிலும் அளித்து வந்தேன்.
பின்னர் ஒரு கட்டத்தில் என்னை "இந்த ஆள் கொத்தடிமை, expose செய்வேன்" என்றும் பதிவிட்டார். Expose செய்யும் அளவுக்கு நான் என்ன செய்தேன் என்று யோசித்தேன்.
எல்லாத்துக்கும் முத்தாய்ப்பாக, தேர்தல் முடிவு வந்ததும், என் முந்தைய தவெக எதிர்ப்பு ட்வீட் ஒன்றை quote செய்து நையாண்டி செய்தார். பல விஜய் ரசிகர்கள் கூட செய்யாத செயல் அது.
அப்படிப்பட்டவர் அடுத்த ஆறே மாதத்தில் ஸ்டாலினை விளித்து ட்வீட் செய்து "எப்படியாவது தவெகவை தோக்கடிங்க" என எழுதும் இந்த பதிவை 👇 பார்க்கும்போது என் மனதில் ஓடுவது -
"காலம் பேசாது. காத்திருந்து பதில் சொல்லும்".
கரூர் சம்பவத்தின் போதே, அவனை புடிச்சி உள்ளே போட்டிருந்தா, இந்நேரம் இந்த பேட்டியெல்லாம் தேவையில்லையே சார் @mkstalin
இன்னும் ஒன்னும் கெட்டுபோகல, வரும் இடைத்தேர்தல்களில், எல்லா கட்சியும் இணைந்து பேசி, அனைத்து தொகுதிகளிலும் பொது வேட்பாளர்களை நிறுத்துங்க! #தவெக என்ற விஷக்கிருமியை தமிழ்நாட்டை விட்டு ஓட ஓட துரத்தி அடிப்போம் 🙌🏻🙌🏻
"தேர்தல் முடிவுக்கு ரஜினி வருத்தம் தெரிவித்தார்" என சீமான் சொல்லியிருக்கிறார். ரஜினி வருத்தப்பட்டது சீமான் கட்சிக்கு கிடைத்த தேர்தல் முடிவு குறித்தா அல்லது ஒட்டுமொத்த தேர்தல் முடிவு குறித்தா என்பது தெளிவாக சொல்லப்படவில்லை.
ஒருவேளை ஒட்டுமொத்த தேர்தல் முடிவுக்காக ரஜினி வருத்தப்பட்டிருந்தால், அதில் என்ன தவறு இருக்கிறது?!
2026 தேர்தலில் 65% வாக்காளர்கள் விஜய் கட்சியை நிராகரித்தவர்கள்; அவர்கள் அனைவரும் தேர்தல் முடிவு குறித்து வருத்தப்படத்தான் செய்தார்கள். அந்த 65%ல் ஒருவராக ரஜினி இருந்தால் என்ன தப்பு?!
"ரஜினி வாழ்த்து தெரிவித்தாரே, பிறகு எப்படி வருத்தம் தெரிவிக்கலாம்" என அடுத்து வராதீர்கள். வாழ்த்து தெரிவிப்பது என்பது தேர்தல் ஜனநாயக முடிவை மதிக்கும் நாகரிகம். ஒருவர் விரும்பிய கட்சி தோற்று வேறொரு கட்சி வென்றாலும், வருத்தத்தை தாண்டி வாழ்த்து தெரிவிப்பது பக்குவமான மனநிலை. ரஜினிக்கு அந்த பக்குவம் இருக்கிறது.
"அன்னைக்கே போட்டிருந்தா.."ன்னு அந்த திமுககாரர் பேசியதை வச்சு "கொலை முயற்சி" ரேஞ்சுக்கு வழக்கு போட்டு உள்ளே தள்றது சரின்னா, Xல இருக்கிற 90% Virtual Warriors உள்ளேதான் இருக்கணும். தமிழ்நாட்டுல இருக்கிற ஜெயில் பத்தாது.
"கரூர் சம்பவத்தில் விஜய்யை கைது செய்திருந்தால், 2026 தேர்தலில் அவர் கட்சி 200+ தொகுதிகள் வென்றிருக்கும்" என்பதெல்லாம் இப்போது வந்த 108ஐ வச்சு பேசும் பேச்சு.
எந்த அரசும் முக்கிய பிரமுகரை கைது செய்யும்போது அதற்கான காரணங்களை பொதுவெளியில் பல்வேறு வகைகளில் வெளியிடும். அந்த காரணங்களில் நியாயம் இருப்பதாக பொதுமக்களுக்கு தெரிந்தால், அனுதாப ஓட்டெல்லாம் விழாது.
ஜெயேந்திரர், வைகோ, ராமதாஸ் - இவர்களை கைது செய்து பல நாட்கள் சிறையில் அடைத்ததால் ஜெயலலிதாவின் அரசியல் வெற்றிகளில் என்ன பாதிப்பு வந்தது?! அந்த கைதுகளுக்கான காரணங்கள் அரசு மற்றும் அதிமுக தரப்பில் ஆணித்தரமாக பொதுமக்களிடையே முன்வைக்கப்பட்டது. இன்னும் சொல்லப்போனால், அந்த கைதுகள் ஜெயலலிதாவின் துணிச்சலின் வெளிப்பாடாக பார்க்கப்பட்டன.
கரூர் சம்பவத்தை பொறுத்தவரை விஜய் தரப்பின் தவறுகளை திமுக சரிவர expose செய்யவில்லை. போலீஸ் உயரதிகாரிகள் மற்றும் IAS அதிகாரிகளை வைத்து மீடியா சந்திப்பில் கொடுத்த தகவல்களை அரசியல் ரீதியாக பரப்பிவிட்டு விஜய்யை கைது செய்திருந்தால், அவருக்கு அனுதாபம் கிட்டியிருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு.
கரூர் சம்பவத்திற்கு பிறகு EPS, அண்ணாமலை, நயினார் விஜய்க்கு கொடுத்த மறைமுக ஆதரவையும், "NDAவில் விஜய் சேரவேண்டும்" என மாநில பிஜேபி தலைவர்கள் கூவிக் கூவி அழைத்ததையும் வைத்து பார்க்கும்போது விஜய் கைதின் பின்விளைவாக வேறு ஒன்று நடந்திருக்கும் என அடித்து சொல்லலாம்.
"இந்த கைது அநீதி, விஜய் அப்பாவி" என அதிமுகவும், பிஜேபியும் திமுகவுக்கு எதிராக முழங்கி விஜய் பக்கம் நின்றிருப்பார்கள். ஒருவேளை அதனால்தான் ஸ்டாலின் அப்படி எந்த கைது நடவடிக்கையும் எடுக்காமல் தவிர்த்தாரா என தெரியவில்லை.
"அன்னைக்கே போட்டிருந்தா.." - இதுக்கு அர்த்தம் கொலைதான்னு எடுத்துக்கிற அளவுக்கு சினிமா ஊறிப்போய் இருக்கு. ஏன், "உள்ளே (ஜெயில்) போட்டிருந்தா.."ன்னு அர்த்தம் வராதா?!
உண்மையில் கரூர் சம்பவத்திற்கு பிறகு விஜய்யை முழுமையாக காபந்து செய்தது திமுக அரசு.
விஜய் கரூரிலிருந்து நீலாங்கரை செல்லும் வரை அவருக்கு ஸ்டாலின் அரசு எந்த தொந்தரவும் தரவில்லை. இரவோடு இரவாக ஸ்டாலின் கரூர் சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்ததால் விஜய் மீதான பழிப்பேச்சு குறைந்தது.
அடுத்து, வீட்டிலேயே உட்கார்ந்துகொண்டு விஜய் சவால் வீடியோ வெளியிட்டபோதும் அவரையோ, அவரது கட்சியின் முக்கிய பிரமுகர்களையோ கைது செய்யாமல் விட்டார் ஸ்டாலின்.
மேலும் "எந்த கட்சி தலைவரும் தன் தொண்டர்கள் உயிர் விடுவதை விரும்பமாட்டார், இதை அரசியலாக்க வேண்டாம்" என விஜய்க்கு வக்காலத்து வாங்காத குறையாக வீடியோ வெளியிட்டார்.
இதை எல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு, இன்று "விஜய்யை கொல்ல திமுக முயற்சித்தது" என பரப்புகிறார்கள்.
உண்மையிலேயே விஜய்க்கு ஆபத்து ஏற்படுத்த நினைத்திருந்தால், அன்று ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்திருந்த திமுக என்ன வேண்டுமானாலும் செய்திருக்கலாம். ஆனால் "என்ன இருந்தாலும் நம்மில் ஒருவர்" என்ற மறைமுக பாசத்துடன்தான் திமுக விஜய்யை அணுகியது.
இந்த அளவுக்கு விஜய்க்கு நேசக்கரம் நீட்டிவிட்டு இன்று "கொலை முயற்சி பழி" சுமப்பது திமுகவுக்கு நல்லதல்ல. இப்படி பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பது திமுகவுக்கு மட்டுமல்ல, சமூக வலைத்தளத்தை வைத்து எப்படி வேண்டுமானாலும் narrative செட் செய்யலாம் என்கிற அபாய அரசியல் சூழலில் சிக்கியிருக்கும் தமிழ்நாட்டுக்கும் நல்லது.




















