2 அமைச்சர் பதவிக்காக ஓவர்நைட்ல கூட்டணி மாறுன traitor நான் இல்லன்னு பதில் சொன்னா மூஞ்ச எங்க வச்சிப்பார்
ஞாபகம் வருகிறதா?
2026 சட்டமன்றத் தேர்தலில் வெறும் ஒத்த தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றுத் தத்தளிக்கும் உங்கள் பரிதாப நிலையை மறைக்கப் பார்க்கிறீர்களே அண்ணன் @NainarBJP!
கூட்டணி நேர்மையைப் பற்றியும், அரசியல் நாகரிகத்தைப் பற்றியும் நீங்களெல்லாம் பாடம் எடுப்பதுதான் இந்த நூற்றாண்டின் ஆகச்சிறந்த நகைச்சுவை!
மாண்புமிகு அம்மையார் ஜெயலலிதா அவர்கள் உயிரோடு இருந்தவரை அதிமுகவில் இருந்துகொண்டு, 2014 மக்களவைத் தேர்தலின்போது " மோடியா, லேடியா?" என்று அதிமுக முன்னெடுத்த பரப்புரையில் அங்கம் வகித்த அதே நயினார் நாகேந்திரன்தானே நீங்கள்? அம்மையார் மறைந்த பிறகு 2017-ல் பாஜகவில் தஞ்சமடைந்து, அன்று எந்தத் தலைமைக்கு எதிராகப் பரப்புரை செய்தீர்களோ இன்று அதே மோடிக்கும் அமித் ஷாவுக்கும் துதி பாடிக்கொண்டிருக்கும் உங்களுக்கு, பிறரை விமர்சிக்க என்ன தகுதி இருக்கிறது அண்ணா?
பிறர் முதுகைப் பார்க்கும் முன்பு உங்கள் முதுகில் இருக்கும் கறைகள் உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா அண்ணா? 2024 நாடாளுமன்றத் தேர்தலின்போது தாம்பரம் ரயில் நிலையத்தில் உங்கள் விடுதி மேலாளர் உள்ளிட்ட மூவரிடமிருந்து ₹4 கோடி ரொக்கம் கட்டுக்கட்டாகப் பிடிபட்டதே, அந்த வழக்கில் இதுவரை ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை? பாஜகவில் இருப்பதால்தான் வருமான வரித்துறையும், அமலாக்கத்துறையும் உங்கள் பக்கம் எட்டிக்கூடப் பார்க்காமல் அமைதி காக்கின்றனவா? அதுமட்டுமா, பொதுவெளியில் நாகரிகமின்றி பெண்களைக் குறித்துத் தரக்குறைவாகப் பேசி அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கியதும் தமிழக மக்களுக்கு நன்றாகவே ஞாபகம் இருக்கிறது அண்ணா!
அன்று அதிமுக கூட்டணியால் "பல இரவுகளைத் தூக்கமின்றி கழித்தேன்" என்று வாஜ்பாயே நொந்து போன வரலாறும், 1999-ல் "என் வாழ்நாளில் இனி பாஜகவுடன் கூட்டணியே கிடையாது" என்று ஜெயலலிதா சபதம் போட்டுவிட்டு, 2004-ல் மீண்டும் உங்களுடன் சேர்ந்ததால், அதிமுக அனைத்துத் தொகுதிகளிலும் மண்ணைக் கவ்விய கதையும் உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? 2019 நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டும் தமிழ்நாட்டில் ஒரு இடத்தில்கூட வெற்றி பெறாமல் பாஜக 'பூஜ்ஜியம்' வாங்கியதும், கூட்டணிக் கட்சிகளையே விமர்சித்து உறவை முறித்துவிட்டுப் பின்னர் வேறு வழியில்லாமல் நீங்கள் மீண்டும் அதே வாசலில் போய் பிச்சை எடுத்ததும் தமிழக மக்களுக்கு நன்றாகவே ஞாபகம் இருக்கிறது!
ஜனநாயகத்தை மதிப்பதாகப் பேசும் நீங்கள், கடந்த 12 ஆண்டுகால மோடி - அமித் ஷா ஆட்சியில் அமலாக்கத்துறை (ED), சிபிஐ, வருமான வரித்துறை ஆகியவற்றை ஏவிவிட்டும், எம்.எல்.ஏ-க்களை கோடிக்கணக்கில் விலைக்கு வாங்கியும் மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், கோவா எனப் பல மாநிலங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளைக் கவிழ்த்த 'ஆபரேஷன் தாமரை' ஜனநாயகப் படுகொலையை வசதியாக மறந்துவிட்டீர்களா? அதுமட்டுமா, மீண்டும் தொகுதி மறுவரையறை மசோதாவை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாமல் நாடு முழுவதும் உள்ள மாநிலக் கட்சிகளிடமும், தமிழ்நாட்டில் திமுகவிடமும் ஆதரவுக்காகக் கையேந்திப் பிச்சை எடுத்துக் கொண்டிருப்பதை நாடே பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது.
தமிழ்நாட்டிற்குத் தர வேண்டிய நிதியை மறுத்து, மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதி தராமல் இழுத்தடித்து, இந்தியைத் திணித்துத் தமிழ்நாட்டைத் தொடர்ந்து வஞ்சித்து வரும் டெல்லி எஜமானர்களின் குரலாக ஒலிப்பதை விட்டுவிட்டு, முதலில் கடந்த 12 வருஷத்துல இந்த மக்களுக்கு என்ன கொண்டு வந்திருக்கீங்க என்று பதில் சொல்லுங்கள் அண்ணா! சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி சில்லறைப் பணவீக்கம் 6.09 சதவீதமாகவும், உணவுப் பணவீக்கம் 8.94 சதவீதமாகவும், மொத்த விலைப் பணவீக்கம் 12.29 சதவீதமாகவும் எகிறி நிற்கிறது. சமையல் எரிவாயு சிலிண்டர் முதல் அரிசி, பருப்பு, எண்ணெய், காய்கறி, பெட்ரோல் என ஒட்டுமொத்த அத்தியாவசியப் பொருட்களின் விலையும் விண்ணைத் தொட்டதால், இன்று சாதாரண ஏழை, நடுத்தர மக்கள் சமையலறைக்குள் நுழைந்தாலே கண்ணீர் வடிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டார்கள்! கார்ப்பரேட் முதலாளிகளுக்கு லட்சக்கணக்கில் கடனைத் தள்ளுபடி செய்துவிட்டு, நாட்டிற்கே சோறு போடும் விவசாயிகளுக்குக் குறைந்தபட்ச ஆதார விலையைக் கூடத் தராமல் வயிற்றில் அடித்த உங்களுக்கு, மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளைத் திசைதிருப்பிப் பேச எந்தத் தகுதியும் இல்லை!
உங்கள் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளைப் போலவே உங்கள் பேச்சும் 'வாட்ஸ்அப் பார்வர்ட்' அளவிற்குக்கூட உண்மையில்லாத வெறும் வெற்றுப் பிரசாரம் என்பதைத் தமிழ்நாட்டு மக்கள் எப்போதோ புரிந்துகொண்டுவிட்டார்கள் அண்ணா - இனியாவது இந்த அரைத்த மாவையே அரைப்பதை நிறுத்திவிட்டுக் கண்ணாடியைப் பாருங்கள்!
#TNCongress
121
#BREAKING | அணு ஆயுதப் போருக்கு எதிராக கூட்டு அமைதிப் பிரகடனம் வெளியிட்ட ரஷ்யா, சீனா, அமெரிக்கா!
#SunNews | #RussiaChinaUSA | #NuclearWar
212




