S K retweeted
தேர்தல் ஆணையத்துக்கு எதிரான வழக்கு: விசிகவும் இணைந்தது
இந்தியத் தேர்தல் ஆணையம் மற்றும் தேர்தல் ஆணையர்களுக்கு எதிராக திரு.ராகுல் காந்தி மற்றும் நான் உள்ளிட்ட 12 தலைவர்கள் இணைந்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளோம் 15 ஆம் நாள் இந்த மனு விசாரணைக்கு வரலாம் எனத் தெரிகிறது.
S K retweeted
எவன் கிட்டேயும் துண்டு போட்டு பேரம் பேச வேண்டிய அவசியம் இல்லை விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு இல்லை ,
எங்கள் கூட்டணி வேணாம் எங்களிடம் ஓட்டு வங்கி இல்லை என்றால் யாரும் கூட்டணிக்கு அழைக்க வேண்டாம் 💯,
இன்றும் என்றும் சனாதன எதிர்ப்பில் முழு முனைப்புடன் இருக்கும் ஒரே கட்சி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மட்டுமே,
எங்களுக்கு வாக்கு அரசியல் இல்லை என்றால் தேர்தலை புறக்கணிப்போம் எங்களுக்கு எந்த அவசியமும் இல்லை யாரிடமும் போய் பதவி கேட்க வேண்டிய அவசியம் இல்லை,
நாங்கள் என்றும் மக்களுடன் தான் பயணிக்க போறோம் எங்க அதிகாரம் முழுக்க முழுக்க மக்களுக்கு மட்டும்,
இன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மீது அவதூறு செய்யும் நாய்கள் எல்லாம் dmk கூட்டணியில் இருந்தால் எல்லா துளைகளையும் மூடு கொண்டு இருப்பானுங்க 💯💯,
ஆயிரம் என்ன அதற்க்கு மேல் அவதூறு பரப்பினாலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இல்லாமல் அரசியல் இல்லை,
என்றும் அறிவர் ஆசான் @thirumaofficial அவர்களின் வழியில்
#நாங்களே_மைய்யம்
#VCK
#Thirumavalavan
@VanniTamizhVCK
@VckBalaji
@WriterRavikumar
@sinthanaivck
S K retweeted
புதுதில்லியில் உச்சநீதிமன்றத்தை நோக்கி பேரணியாக சென்றோம்!
எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி அவர்களின் தலைமையில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனும் கோரிக்கையை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அவர்களை சந்தித்து முன்வைக்க கெனாட் பிளேஸ் எனுமிடத்திலிருந்து உச்சநீதிமன்றம் வரையில் பேரணியாக சென்றோம்.
ஆங்காங்கே காவல்துறையின் கடுமையான நெருக்கடிகளையும் தடைகளையும் மீறி உச்சநீதிமன்றம் வரையில் பேரணியாக சென்று மனு அளித்தோம்.
S K retweeted
புதுதில்லியில் உச்சநீதிமன்றத்தை நோக்கி பேரணியாக சென்றோம்!
எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி அவர்களின் தலைமையில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனும் கோரிக்கையை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அவர்களை சந்தித்து முன்வைக்க கெனாட் பிளேஸ் எனுமிடத்திலிருந்து உச்சநீதிமன்றம் வரையில் பேரணியாக சென்றோம்.
ஆங்காங்கே காவல்துறையின் கடுமையான நெருக்கடிகளையும் தடைகளையும் மீறி உச்சநீதிமன்றம் வரையில் பேரணியாக சென்று மனு அளித்தோம்.
RT @thirumaofficial: தில்லி விமானநிலையத்தில் @RahulGandhi அவர்களைச் சந்தித்தோம்.
இன்று சென்னையில் நடைபெறவுள்ள மாணவர்கள் சந்திப்பில் பங்கே…
S K retweeted
இதுக்கு என்ன முட்டு வைத்து இருக்கானுங்க ன்னு தெரில உடன்பிறப்புகளும் பெண் உடன்பிறப்புகளும்
சில போலி பெண் புரட்சியாளர்கள்,
நீங்க வேணும்ன்னா பாரேன் யாரும் வாய திறக்க போவது இல்லை 💯
@mkstalin என்ன 🤮
#DMK_FAILS
S K retweeted
ஒன்னும் சொல்றதுக்கு இல்ல 😂😂😂😂😂
#GandhiJayanti
@burnitwithblue
@Danieljoshua_15
@Periambed15
@Vigilante_kjd
@mohan_selvaraj
@Nakkeeranj93771
@Sivaa_Comrade
@AmbigaVel
@iamKalaivanii
@AthiOfficial
@Lenin9444295316
@Rajstee3
S K retweeted
மாநகராட்சிகளில் தூய்மைப் பணியைத் தனியார் மயமாக்குவதைக் கைவிட வேண்டும்!
'தங்க மோதிரம் திட்டத்தை' மறுபரிசீலனை செய்ய வேண்டும்!
சட்டப் பேரவைக்கான மரபையும் முதலமைச்சருக்கான மாண்பையும் பேணிப் பாதுகாத்திட வேண்டும்!
தமிழ்நாடு அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள்!
--------------------------------
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாநகராட்சிகளிலும் தூய்மைப் பணிகளைத் தனியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் ஒப்படைப்பதற்குத் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் நிலைப்பாடு அதிர்ச்சி அளிக்கிறது. கடந்த ஆட்சியில் சென்னை மாநகராட்சியில் ஓரிரு மண்டலங்களில் மட்டும் அத்தகைய முயற்சி மேற்கொள்ளப்பட்ட போது அதனை எதிர்த்து விசிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் போராடின. பின்னர் அந்த நடவடிக்கை கைவிடப்பட்டது. தற்போது தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநகராட்சிகளிலும் இந்த நடவடிக்கையை விரிவுபடுத்துவது ஏற்புடையதல்ல. தமது உயிரைப் பணயம் வைத்து இந்தப் பணிகளில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளர்களின் நலன்களுக்கு எதிரான இந்நடவடிக்கையை உடனே கைவிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.
அடுத்து, அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 'ஒரு கிராம் தங்க மோதிரம்' வழங்கும் திட்டம் தொடங்கவிருப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தவெக'வின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையிலான இந்தத் திட்டத்துக்காக ஒவ்வொரு ஆண்டும் 755 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது 56 சதவீத குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில் நடக்கின்றன. எஞ்சிய 44 சதவீதம் தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன. தனியார் மருத்துவமனைகளில் சாதாரண பிரசவத்துக்குக்கூட ரூ.50 ஆயிரம் முதல்
ரூ. ஒரு இலட்சம் வரையில் வசூலிக்கின்றனர். சிசேரியன் என்னும் அறுவை மூலம் நடக்கும் பிறப்பு எனில் இரண்டரை லட்சம் ரூபாய் வரை கட்டணம் வசூல் செய்கின்றனர். கட்டணம் அதிகம் என்றாலும், ஏழை எளிய குடும்பத்தினர் கூட தாய்-சேய் பாதுகாப்புக் கருதி தனியார் மருத்துவமனைகளையே நாடுகின்றனர்.
இந்நிலையில், தங்க மோதிரம் வழங்குவதற்காக செலவு செய்யும் இந்த 755 கோடி ரூபாயைக் கொண்டு அரசு மருத்துவமனைகள் ஒவ்வொன்றிலும் தனியார் மருத்துவமனைகளைப்போல அனைத்து உயரிய வசதிகளையும் கொண்ட 'பிரசவ வார்டுகளை' உருவாக்குவதோடு, தேவையான மருத்துவப் பணியாளர்களையும் நியமிப்பது அனைத்துத் தரப்பினருக்கும் பயன் அளிப்பதாக அமையும்.
மேலும், இத்திட்டத்தின் மூலம் பிறந்த குழந்தைக்கு போடப்படும் தங்க மோதிரம் ஒரு சில மாதங்களிலேயே அக்குழந்தைகளின் கைகளுக்குப் பொருந்தாமலும் போய்விடும். எனவே, தமிழ்நாடு அரசு இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
மேலும், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்குப் பதிலளித்துப் பேசிய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், மேனாள் முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி வாய்ப்பு இழந்ததை ஏளனம் செய்யும் வகையில் பேசியிருப்பது 'முதலமைச்சர்' என்னும் பொறுப்புக்குரிய மாண்புக்கு உகந்தது அல்ல என்பதைச் சுட்டிக் காட்ட விரும்புகிறோம். கட்சி மேடைகளில் பேசும்போதுகூட தவிர்க்க வேண்டிய ஒன்றை, சட்டப்பேரவையில் பேசாமல் தவிர்த்திருக்க வேண்டும்.
இனிவரும் காலங்களில் சட்டப்பேரவைக்கான மரபையும் முதலமைச்சர் என்னும் மகத்தான பதவிக்குரிய உயரிய மாண்பையும் பேணிப் பாதுகாத்திட வேண்டுமென மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
இவண்:
தொல். திருமாவளவன்,
நிறுவனர் - தலைவர்,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.
S K retweeted
டெல்லியில் இன்று நடைபெற்ற இந்தியா கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தில் விசிக சார்பில் உரையாற்றினேன். எனது உரையின் இறுதியில் பின்வரும் நடவடிக்கைகளை எடுக்குமாறு இந்தியா கூட்டணியைக் கேட்டுக்கொண்டேன்.
INDIA கூட்டணி பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்:
1. குற்றஞ்சாட்டப்பட்ட சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்றும், அவர் கைது செய்யப்பட வேண்டும் என்றும் கோர வேண்டும்.
2. தற்போது நடைபெற்று வரும் SIR நடவடிக்கையை உடனடியாக நிறுத்தக் கோர வேண்டும்.
3. பெயர்கள் நீக்கப்பட்ட வாக்காளர்களின் சமூகவாரியான விவரங்களை வெளியிடக் கோர வேண்டும்.
4. நீக்கப்பட்ட 13 கோடி வாக்காளர்களின் பெயர்களையும் மீண்டும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கக் கோர வேண்டும்.
5. வாக்களிக்கும் உரிமையை அடிப்படை உரிமையாக்கக் கோர வேண்டும்.
6. திரு. ஞானேஷ் குமாரை தலைமைத் தேர்தல் ஆணையராக நியமித்ததற்காக பிரதமரும் உள்துறை அமைச்சரும் மன்னிப்புக் கோர வேண்டும் எனக் கோர வேண்டும்.
7. தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் இதர தேர்தல் ஆணையர்கள் சட்டம், 2023-ஐ திரும்பப் பெறக் கோர வேண்டும்.
8. ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக நாடு தழுவிய போராட்டத்தை அறிவிக்க வேண்டும்.
நன்றி.
முனைவர் தொல்காப்பியன் திருமாவளவன்,
நிறுவனர் – தலைவர்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
இணைப்பு ஆங்கில உரையின் நகல்:
S K retweeted
கர்நாடக முதல்வரின் தில்லிப் பயணம்:
____________________________
மேகதாது அணை கட்டும் முயற்சியை முறியடிக்க
அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்!
தமிழ்நாடு அரசுக்கு விசிக வேண்டுகோள்!
___________________________________
கர்நாடக முதல்வர் திரு. டி.கே. சிவகுமார் அவர்கள் நேற்றுஅண்மையில் (செப்டம்பர் 28) புதுடெல்லியில் ஒன்றிய அரசின் நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர். பாட்டீலைச் சந்தித்துள்ளார். அப்போது மேகதாது உள்ளிட்ட கர்நாடகாவின் நீர்த்திட்டங்களுக்கு அனுமதி மற்றும் நிதியளிப்பது ஆகியவற்றை விரைவுப்படுத்த வேண்டுமென கோரியுள்ளார்.
குறிப்பாக, மேகதாது சமநிலை நீர்த்தேக்கம் மற்றும் குடிநீர்த் திட்டத்திற்குரிய புதிய விரிவான திட்ட அறிக்கையை (DPR) ஒப்படைத்து, அதன் இணக்க அறிக்கையின் மதிப்பீட்டை விரைவுப்படுத்தவும் வலியுறுத்தியுள்ளார்.
கர்நாடக முதலமைச்சரின் இந்த நடவடிக்கைகள், தமிழ்நாட்டின் நீர் உரிமைக்கு எதிராக மேகதாது அணையைக் கட்டி முடித்திட வேண்டும் என்கிற தீவிரத்தன்மையினை வெளிப்படுத்துகிறது.
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு, உச்சநீதிமன்றத் தீர்ப்பு மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகள் ஆகியவற்றை புறந்தள்ளிவிட்டு, தமிழ்நாட்டிற்குக் கிடைக்க வேண்டிய காவிரி நீரை வழங்காமல் கர்நாடக ஆட்சியாளர்கள் காலம் காலமாய் வஞ்சிப்பது தொடர்கிறது. அத்துடன், ஒன்றியத்தில்
ஆட்சி அதிகாரத்திலிருக்கும் எந்த ஒரு அரசாக இருந்தாலும் இதற்கான தீர்வைத் தேடாமல் இவற்றை வேடிக்கை பார்ப்பதிலும், தமிழ்நாட்டிற்கான உரிமையை நீர்த்துப்போகச்
செய்வதிலும் கவனமாக செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், மேகதாது அணையைக் கட்டும்நிலை உருவானால் தமிழ்நாட்டின் எதிர்காலம் இருள் சூழ்ந்ததாக மாறும். நெல் உற்பத்தி வெகுவாகப் பாதிக்கப்படும். டெல்டா மண்டலம் பாலைவனமாகும். தமிழினத்தின் வாழ்வாதாரம் பாழகும். ஆகவே, கர்நாடக அரசின் இம்முயற்சிகளை முறியடிக்க வேண்டிய பொறுப்பு தமிழ்நாட்டு மக்களுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் உள்ளது.
இத்தகைய சூழலில் தமிழ்நாடு அரசு உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி இது தொடர்பாக விவாதித்து மேகதாது அணை கட்டும் முயற்சியை முறியடிக்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.
இவண்:
தொல்.திருமாவளவன்,
நிறுவனர்-தலைவர்,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.
S K retweeted
புதுதில்லியில் நடந்த இந்தியா கூட்டணி தலைவர்களின் கலந்தாய்வுக் கூட்டத்திற்குப் பின்னர் நடந்த செய்தியாளர் சந்திப்பு.
#IndiaBlocMeeting @PMOIndia
S K retweeted
கடலூர் சி.கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினேன்!
S K retweeted
கடலூர் சி.கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினேன்!
S K retweeted
கடலூர் சி.கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி ஆற்றிய உரை...
S K retweeted
ஒரே ஆசிய விளையாட்டுத் தொடரில் 3 பதக்கங்கள் - இந்திய வீரர் குல்வீர் சிங் சாதனை
#GulveerSingh #AsianGames2026 #IndianAthletics #Athletics #India #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்
S K retweeted
Vithya Ramraj's Unforgettable Asian Games Campaign. 🇮🇳👑
🥇 Women's 4x400m Relay.
🥈 Mixed 4x400m Relay.
🥉 Women's 400m Hurdles.
S K retweeted
நெல்லை கவின் கொலைவழக்கில் குற்றம் சாற்றப்பட்ட சுர்ஜித்தின் (ஏ1) பெற்றோர் சரவணன்(ஏ2) கிருஷ்ணகுமாரி(ஏ3) ஆகியோர் மீதான 'குற்றச்சாற்று அறிக்கையை' மதுரை உயர்நீதிமன்றம் 'ரத்து' செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. விசாரணைக்குப் பின்னர் ஆதாரங்கள் இல்லையென விடுதலை செய்வது தான் நீதிமன்றத்துக்குள்ள அதிகாரம். குற்றவிசாரணை தொடங்குவதற்கு முன்னரே குற்ற அறிக்கையை 'ரத்து' செய்வது 'தவறான முன்மாதிரி' ஆகும்.
கவின் கொலைவழக்கில் கைது செய்யப்பட்ட சரவணன் பிணையில் (ஜாமீனில்) வெளியே வந்ததும் இன்னொரு கொலைவழக்கில் கூலிப்படையினரோடு தொடர்பிருப்பதாக மீண்டும் கைது செய்யப்பட்டிருப்பவர் என்பது குறிப்பிடத் தக்கது.
இத்தகைய பின்னணி கொண்ட ஒருவரையும் அவரது மனைவியையையும் குற்றமற்றவர்கள் என்கிற தோற்றத்தை உருவாக்கும் வகையில் உயர்நீதிமன்ற நடவடிக்கை அமைந்துள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு அரசு இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்திட ஆவன செய்ய வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.












