
பேசாததை பேசும் குரல் #TimonNews #தமிழ்நாடு #MKStalin Dravidian stock 🖤❤️
Joined June 2021
- Tweets173K
- Following8.8K
- Followers15.3K
- Likes274K
ᶠⁱʳᵉ𝐓𝐈𝐌𝐎𝐍 🔥 retweeted
அத்தை... ஜான் ஆரோக்கியசாமிக்கு எதிரா தவெக-ல ஆளு சேர்க்குது! 🤣🤣
கட்சியை வழிநடத்த ஒருத்தர் உத்தி (Strategy) வகுக்கிறாராம்... அவரை காலி பண்ண இவங்க ஆளு சேர்க்குறாங்களாம்! 😭😂
தவெக-ல ஆரோக்கியமே இல்ல போலயே... தியேட்டர்ல கூட இந்த அளவுக்கு ட்விஸ்ட் இருக்காதுடா சாமி! 🤣🏃♂️🍿 #TVKPolitics #JohnArokiasamy"
ᶠⁱʳᵉ𝐓𝐈𝐌𝐎𝐍 🔥 retweeted
நாமக்கல் மாவட்ட மகளிர் அணியின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையாற்ற,
வாய்ப்பளித்த மாண்புமிகு கழகத் தலைவர் தளபதி அவர்களுக்கும், மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அண்ணன் உதயநிதி அவர்களுக்கும், மாண்புமிகு கழகத் துணைப் பொதுச்செயலாளர் பாசமிகு அக்கா கனிமொழி ராசாத்தி கருணாநிதி MP அவர்களுக்கும், நெஞ்சார்ந்த நன்றிகள்!
பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பின்மை, சட்டம் ஒழுங்கு சீர்கேடு, விலைவாசி உயர்வு என மக்கள் விரோதப் போக்கைக் கடைப்பிடிக்கும் த.வெ.க. அரசைக் கண்டித்து, நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று எனது கண்டனத்தைப் பதிவு செய்தேன்!
நிகழ்வைச் சிறப்பாக ஒருங்கிணைத்த நாமக்கல் மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் மற்றும் கழகத் உடன்பிறப்புகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்!
என்றும் கழகத் தலைவர் வழியில்…🖤❤️
ᶠⁱʳᵉ𝐓𝐈𝐌𝐎𝐍 🔥 retweeted
மீண்டும் மீண்டுமா??
#TVKFails
#BreakingNews | கைதி தப்பியோட்டம்
சென்னை கொளத்தூரில் போலீஸார் பாதுகாப்பில் இருந்த கைதி தப்பியோட்டம்; புழலில் 8 வயது சிறுமிக்கு பா*யல் தொல்லை கொடுத்ததாக கைதான ஆட்டோ ஓட்டுநர், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் தப்பியோட்டம்
Accused Escape | TN Police | 31 October 2026
#Chennai #Kolathur #NewsTamil24x7
ᶠⁱʳᵉ𝐓𝐈𝐌𝐎𝐍 🔥 retweeted
நாமக்கல் மாவட்ட மகளிர் அணியின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!
தமிழ்நாட்டைத் தலைகீழாக மாற்றிய Dummy CM
#WakeUpVijay
ᶠⁱʳᵉ𝐓𝐈𝐌𝐎𝐍 🔥 retweeted
பாரதிய நியாய சன்ஹிதாவின் பிரிவுகள் 336(4), 340(2) உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வழிவகை உள்ளது.கழகச் சட்டத்துறை, சம்பந்தப்பட்ட காணொலியை வெளியிட்டவர்கள் மீது உரிய ஆதாரங்களுடன்காவல் துறையில் புகார் அளிக்கும்.
@mkstalin
@Udhaystalin
@arivalayam
@DMKITwing
ஊடக அறிக்கைகளின்படி கடந்த 6 மாதங்களில் தவெக நிர்வாகிகள் மீது பல பாலியல் தொடர்பான புகார்கள்/கைதுகள் உள்ளன. உதாரணம்: கன்னியாகுமரி கிறிஸ்டோபர் (கல்லூரி மாணவி தொல்லை), சேலம் மணிகண்டன் (பல பெண்கள் வீடியோ மிரட்டல்). ஒரு செய்தி தளம் 15 குற்றச்சாட்டுகளைப் பட்டியலிட்டுள்ளது. அதிகாரப்பூர்வ ஒற்றை எண்ணிக்கை இல்லை; சிலர் நீக்கப்பட்டனர்.
ᶠⁱʳᵉ𝐓𝐈𝐌𝐎𝐍 🔥 retweeted
Replying to @SiluvaM_
@SiluvaM_ @TimonTheFire @grok கிட்ட தவெக காரன் கடந்த 6 மாசத்துல எத்தனை பேர் அரெஸ்ட் ஆகிருக்கான், என்ன குற்றம், அதுல எத்தனை பேர் பொறுப்புல இருக்கான்னு கேளுங்க தமாசா இருக்கும்
ᶠⁱʳᵉ𝐓𝐈𝐌𝐎𝐍 🔥 retweeted
ஆட்சி என்பது சினிமா படப்பிடிப்பு அல்ல
தவறு நடந்தால் RETAKE கேட்க முடியாது!
சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகிவிட்டது. நிர்வாகம் தடுமாறுகிறது.
ஆனால் விளம்பரத்திற்கும் பில்டப்பிற்கும் மட்டும் பஞ்சமே இல்லை!
திரையில் ஹீரோவாக இருக்கலாம்
ஆட்சியில் நிரூபிக்க வேண்டாமா?
#TVKVijayFails
ᶠⁱʳᵉ𝐓𝐈𝐌𝐎𝐍 🔥 retweeted
சொந்த புத்தியும் இல்லாமல், சொல் புத்தியும் இல்லாமல் சட்டம்-ஒழுங்கைச் சீரழித்துவிட்ட சோப்ளாங்கி த.வெ.க. அரசு!
நாளை @DMKWomensWing நடத்தவுள்ள ஆர்ப்பாட்டம், தறிகெட்டு ஓடும் த.வெ.க. அரசுக்கான Wake-up call!
முதலமைச்சரையும் தூங்கி வழியும் ஆட்சி நிர்வாகத்தையும் எழுப்ப முயற்சிப்போம்! ஆளத் தெரியாத அரசுக்குப் பாடம் புகட்டுவோம்!
#TVKfails
Hi @BalaKri02455000 @TVKJayHQ
கடந்த திமுக ஆட்சியில் 2024 டிசம்பர் மாதம் உங்களுக்கு அளித்த பதிலில் சொன்னபடி, 2025-26 Rural Development துறையின் Operations and Maintenance Deficit Grant Fund (OMDGF) இருந்து ₹10.85 லட்சம் மதிப்பில் உங்கள் தெருவிற்கு நிரந்தர சிமெண்ட் சாலை அமைக்க டெண்டர் விட்டு இறுதி செய்யப்பட்டு உள்ளது
Tender details
PROVIDING CEMENT CONCRETE ROAD TO PONNIYAMMAN KOIL STREET IN MEDAVAKKAM PANCHAYAT
Tender ID 5806/2023/B1, dt. 18.02.2026
Reference No 2026_RDTN_661982_1
டெண்டர் முடிவில் ₹10.64 லட்சம் என்ற அளவில் Bhavani Amman Enterprises தேர்வாகி உள்ளது.
தேர்தல் காரணமாக அப்போது நிதி விடுவித்து இருக்க மாட்டார்கள்
உங்கள் MLA @EcrPSaravanann மற்றும் அமைச்சர் @BussyAnand அவர்களிடம் இதற்கு உரிய நிதி ஒதுக்க சொன்னால் உடனடியக பணிகள் தொடங்கலாம்
அண்ணன் ஆட்சிக்கு வந்த பின் பல டெண்டர் ரத்து செய்யப்படுகிறது. உங்கள் தெருவுக்கான சாலை டெண்டர் ரத்து பட்டியலில் இல்லாமல் இருக்க அருள்மிகு பொன்னியம்மன் அருள் உங்களுக்கு கிடைக்கட்டும்
FYI @UpdatesChennai @Vasisubha1 @PriyankaSmile01 @RaavananDeepak @ScorpionSu58042 @TVKpulse @kaaviyaTVK
மதிப்பிற்குரிய @EcrPSaravanann ஐயா, வணக்கம்! 🙏
நிரந்தர சிமெண்ட் கான்கிரீட் சாலை அமைக்கக் கோரி இன்று (29.10.2026) தங்கள் அலுவலகத்தில் நேரடியாக மனு அளித்துள்ளோம். மேலும், Namma Sholinganallur இணையதளம் மூலமாகவும் புகார் பதிவு செய்துள்ளோம்.
வெறும் "100 மீட்டர் நீளமும் 20 அடி அகலமும்" கொண்ட இந்தச் சாலையைப் பயன்படுத்தும் சுமார் 70 குடும்பங்கள், ஒவ்வொரு மழைக்காலத்திலும் பல ஆண்டுகளாக மிகுந்த சிரமங்களைச் சந்தித்து வருகிறோம்.
தற்போது மழையில்லாத வறண்ட காலமாக இருப்பதால், சாலையை நிரந்தரமாக அமைக்க இதுவே சரியான தருணம். எனவே, தாங்கள் மனுவின் அடிப்படையில் விரைந்து நடவடிக்கை எடுத்து, நிரந்தர சிமெண்ட் கான்கிரீட் சாலை அமைத்துத் தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இந்த நீண்டகாலப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கிடைத்தால், சுமார் 70 குடும்பங்களும் தங்களுக்கு என்றென்றும் நன்றியுடன் இருப்போம்.
தங்களின் விரைவான நடவடிக்கையை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம், ஐயா! 🙏
---
Respected @EcrPSaravanann Sir, greetings! 🙏
Today (29 October 2026), we submitted a physical petition at your office requesting the construction of a permanent cement concrete road. We have also raised an online complaint through the Namma Sholinganallur portal.
Around 70 families using this road, which is just "100 metres long and 20 feet wide", have been facing tremendous hardship during every monsoon for many years.
As the weather is currently dry, this is the ideal time to construct the permanent road. We sincerely request you to take prompt action based on our petition and arrange for the construction of a permanent cement concrete road.
A permanent solution to this long-pending issue would bring great relief to all 70 families, and we would remain forever grateful for your support.
We sincerely look forward to your prompt action, Sir! 🙏
@CMOTamilnadu @BussyAnand
@Tambaram_Corp @DISTRICTCPT
Dear @UpdatesChennai @Vasisubha1 @PriyankaSmile01 @RaavananDeepak @ScorpionSu58042 @TVKpulse @kaaviyaTVK could you please help this request reach maximum? it's just a 100 meter length road.. Thank you in advance!
ஜூலை 3
முதல்வரின் அதிகாரப்பூர்வ X பக்கத்தின் (cmotamilnadu) பதிவு மற்றும் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் (tndiprnews) பதிவு இரண்டிலும் News தமிழ் 24x7 தொலைக்காட்சியின் இயக்குநர் என்றே குறிப்பிட்டுள்ளது
WARNING | அவதூறு பரப்புவோருக்கு எச்சரிக்கை!
நியூஸ் தமிழ் 24x7 சேனலின் இயக்குநர்களாக திரு. சகிலன், திரு. ஐயம்பெருமாள் நாக மாணிக்கம் மற்றும் திரு. குமரன் ஆகியோர் மட்டுமே பதவி வகித்து வருகின்றனர்
தற்போது சமூக ஊடகங்களில் சில விஷமிகள் பிரேம் என்பவரை நியூஸ் தமிழ் 24x7 இயக்குநர் என திட்டமிட்டு அவதூறு பரப்பி வருகின்றனர்
இதுபோன்று நியூஸ் தமிழ் 24x7 மீது பொய்யான வதந்திகளை பரப்பும் நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்
- நியூஸ் தமிழ் 24X7 நிர்வாகம்
#NewsTamil24x7
ᶠⁱʳᵉ𝐓𝐈𝐌𝐎𝐍 🔥 retweeted
5 ஆயிரம் கோடி ரூபாய் மக்கள் பணத்தைக் கொள்ளை அடித்த BLM பிரேம்குமாருக்கும் தூய சக்தி முதலமைச்சருக்கும் என்ன தொடர்பு?
தனியார் கூட்டுறவு நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி மக்கள் முதலீடு செய்த பணத்தை தன்னுடைய சொந்தக் கணக்கிற்கு வரவு வைத்துக் கொண்டதாக பிரேம்குமார் என்பவரை கேரள காவல்துறை கைது செய்துள்ளது.
இந்த பிரேம்குமார் கடந்த ஜூலை மாதம் தான் இங்கிருக்கும் Dummy CM-ஐ சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறார். மேலும், த.வெ.க-வின் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு பிரேம்குமாருக்கு சொந்தமான பேருந்துகள் தான் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.
முக்கியமாக சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்து, நம்பிக்கை வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்பாக ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பிரேம்குமாரின் பேருந்துகளிலேயே அழைத்து வரப்பட்டனர்.
பிரேம்குமாருக்கும் முதலமைச்சருக்கும் இருக்கும் நெருக்கத்தைப் பார்க்கும் போது, அந்த நபருக்கும் - ஆளுங்கட்சிக்கும் இடையே இருக்கும் தொடர்பு என்ன?
அப்படி எந்த “விவகாரமான”தொடர்பும் இல்லை எனில், ஏன் அவசர அவசரமாக, முதலமைச்சரும் - கைது செய்யப்பட்டுள்ள நபரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தமிழ்நாடு காவல்துறை உதவியோடு சமூக வலைத்தள பக்கத்தில் இருந்து அகற்ற வேண்டும்?
MLA-க்களை Purchase செய்வது, Sofa அனுப்புவது, இடைத்தேர்தல்களில் வாரி இறைத்தது என்று த.வெ.க.வின் முறைகேடான அரசியல் செயல்பாடுகளுக்கும் இவருக்கும் தொடர்பு இருக்கிறதா?
இதையெல்லாம் CBI, SFIO, ED போன்ற ஒன்றிய அரசின் தன்னாட்சி அதிகாரம் கொண்ட விசாரணை அமைப்புகள் தலையிட்டு விசாரிக்க வேண்டும் - கைதான பிரேம்குமாருக்கும், த.வெ.க தலைமை முதல் முக்கிய நிர்வாகிகள் வரைக்கும் இருக்கும் தொடர்பை கண்டறிய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
மீண்டும்.. மீண்டுமா..?
மின் கொள்முதலில் மீண்டும் அதிகபட்ச விலையான ₹35 வரை கொடுத்து வாங்க இருக்கிறீர்களா அமைச்சர் @CTR_Nirmalkumar
தமிழ்நாடு அரசின் TANGEDCO மின் கொள்முதல் செய்வதற்கான Short/26-27/RA/89 Reverse Auction இன்று மதியம் 3 மணிக்கு முடிந்து விலை தெரிய வந்துள்ளது
நவம்பர், டிசம்பர், ஜனவரி என 3 மாதங்களுக்கு மின் கொள்முதல் செய்ய ₹10.5 முதல் அதிகபட்சம் ₹35 கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஆனால் நேற்று இதே Reverse Auction ல் குஜராத் மாநிலம் ₹10 குறைவான விலையில் மின் கொள்முதல் செய்ய இருக்கிறது
தமிழ்நாடு அரசு மட்டும் ஏன் கூடுதல் விலை செலுத்த வேண்டும் என்பது புரியவில்லை.
மாண்புமிகு முதல்வர் அவர்கள் இதன் மீது கவனம் செலுத்தி கூடுதல் விலையில் மின் கொள்முதல் செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ᶠⁱʳᵉ𝐓𝐈𝐌𝐎𝐍 🔥 retweeted
பெண்கள், குழந்தைகள், முதியோர் என யாருமே பாதுகாப்பாக இல்லாத மாநிலமாகத் தமிழ்நாட்டை மாற்றிவிட்ட முதலமைச்சர், மக்களின் கவனத்தையும் - ஊடகங்களின் Breaking News-ஐயும் திசைதிருப்ப Roadshow நடத்தலாமா? Raidshow நடத்தலாமா? எனச் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்.
ஊழல் பெருச்சாளிகளை எல்லாம் பேரக் குதிரைகளாக மாற்றி தன் கட்சியில் இணைத்துக் கொண்டிருக்கும் த.வெ.க. எனும் “TN Branch Washing Machine”, தி.மு.க. ஆட்சியின் முன்னாள் அமைச்சர்களை மட்டும் குறிவைத்து நடத்திக் கொண்டிருக்கும் “Vettri Vendetta Politics” திட்டம், வழக்கம் போல் சட்டத்தின் முன் தோற்று, மக்கள் முன் தலைகுனிந்து நிற்கும்!
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலுக்கான ரீல்ஸ் விடியோக்களைத் தயாரிக்கவும் - முதலமைச்சர் மேடையில் punch dialogue என்ற பெயரில் பல modulation-இல் காட்டுக்கத்து கத்தவும் நடத்தப்படும் இந்த ரெய்டுகளைக் கண்டு தி.மு.க.வின் கடைக்கோடிக் தொண்டரின் கால் நகம் கூட அஞ்சாது!
சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, துருப்பிடித்துவிட்ட நிர்வாகம், வாட்டி வதைக்கும் விலைவாசி உயர்வு என மக்களை பாதித்துக் கொண்டிருக்கும் இந்த த.வெ.க. ஆட்சியைக் கண்டு, தமிழ்நாடு மட்டுமல்ல இந்திய நாடே எள்ளி நகைக்கிறது.
இதை எல்லாம் மறைக்க, தி.மு.க.வினருக்கு வாய்ப்பூட்டு போடலாம் என்று நினைக்கிறீர்கள். இனி இன்னும் இன்னும் வேகமாகத் த.வெ.க. அரசின் வண்டவாளங்களைத் தண்டவாளம் ஏற்றுவோம்!
ᶠⁱʳᵉ𝐓𝐈𝐌𝐎𝐍 🔥 retweeted
த.வெ.க. ஆட்சியில் வரலாறு காணாத விலைவாசி உயர்வை அம்பலப்படுத்தியதற்காக #DravidianModel ஆசிரியர் கலையரசன் அவர்கள் சட்டவிரோதமாகக் கைது: த.வெ.க. அரசின் உச்சகட்ட பாசிசம்!
சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் (MIDS) உதவிப் பேராசிரியராக உள்ள முனைவர் கலையரசன் அவர்களை நேற்று அதிகாலை, சீருடை அணியாத காவலர்கள் சட்டவிரோதமாகக் கைது செய்து, வாடகை வாகனத்தில் ஏற்றிச் சென்ற செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளானேன். கைது செய்யப்பட்டவர் சாதாரண நபரோ, குற்றப் பின்னணி கொண்டவரோ இல்லை.
திரு. கலையரசன் அவர்கள் தமிழ்நாட்டின் முதன்மையான ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரியும் பேராசிரியர். இந்தியாவின் தலைசிறந்த பல்கலைக்கழகமான JNU-வில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகமான கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் பதிப்பித்த "The Dravidian Model" நூலின் ஆசிரியர்களில் ஒருவர். ஒன்றிய அரசின் திட்டக்குழுவில் பொறுப்பு வகித்தவர். தமிழ்நாடு அரசின் பொருளாதார ஆய்வறிக்கையைத் தயார் செய்வதில் பங்களித்தவர். எல்லாவற்றுக்கும் மேல், தமிழ்நாடு முதலமைச்சர் தலைவராக இருக்கும் தமிழ்நாடு காலநிலை மாற்ற நிர்வாகக் குழுவின் உறுப்பினராக இப்போதும் இருப்பவர்.
அப்படிப்பட்டவரைத் தெரியாமல் கைது செய்துவிட்டோம் என்று கூறுவது நம்பும்படி இல்லை. செய்யாத குற்றத்திற்காக, அடிப்படை உரிமைகள் அனைத்தையும் மறுத்து, அவரது செல்போனைப் பறித்து, கைது செய்து அலைக்கழித்ததைச் சாதாரணச் செயலாக எவரும் கடந்துபோக முடியாது. குற்றவாளிகளை எல்லாம் கூத்தடிக்க விட்டுவிட்டு, கல்வியாளர்களை அச்சுறுத்திப் பார்ப்பது எவ்வளவு பெரிய அசிங்கம்?
திரு. கலையரசன் அவர்கள் ஏன் கைது செய்யப்பட்டார்? Dravidian Model என்ற பதத்தை முன்வைத்து, திராவிட ஆட்சியால் தமிழ்நாடு அடைந்த வளர்ச்சியை உலகம் முழுவதும் பறைசாற்றியதற்காகவா? த.வெ.க. ஆட்சி அமைந்த பிறகுதான், தமிழ்நாடு இதுவரை சந்தித்திராத விலைவாசி உயர்வைச் சந்தித்துள்ளது என்ற உண்மையைச் சொன்னதற்காகவா?
முட்டாள்களால் நிறைந்த த.வெ.க.வுக்கும் கல்விக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது அனைவரும் அறிந்ததுதான். ஆனால், கல்வியாளர்களைக் கைது செய்து மிரட்டும் அளவுக்கு அறிவின் மீது ஒவ்வாமை கொண்டவர்களாக இவர்கள் நடந்துகொள்வார்கள் என நிச்சயமாக நினைக்கவில்லை. பாசிசத்தில் பா.ஜ.க.வையும் மிஞ்சிவிடுவார்கள் என்பதைத்தான் இந்தக் கைது காட்டுகிறது. முதலமைச்சரின் ஒப்புதலோடும் உயரதிகாரிகளின் அனுமதியோடும்தான் இந்த அத்துமீறல் நடக்கிறதா?
முனைவர் கலையரசன் அவர்கள் எந்தக் கட்சியையும் சார்ந்தவர் அல்ல. கடந்த ஆட்சிக்காலத்திலும், அவர் சுதந்திரமாகத் தன்னுடைய விமர்சனக் கருத்துகளை முன்வைத்திருக்கிறார். ஆனால், இந்தத் தரங்கெட்ட த.வெ.க. ஆட்சியோ, எங்கள் ஆட்சியைப் பற்றியோ நிர்வாகத் தோல்விகளைப் பற்றியோ ஊடகங்களில் உண்மையைப் பேசினால் விளைவுகள் மோசமாக இருக்கும் என்று மிரட்டும் ரவுடி அரசாகச் செயல்பட்டுள்ளது. இப்படிப்பட்ட அரசிற்கு ஆதரவு அளித்துக் கொண்டு இருக்கும் கட்சிகள், இந்த அநியாயத்தைக் கண்டும் காணாமல் இருப்பது ஏன்? இதுதான் இவர்கள் பாசிசத்தை எதிர்த்துக் கேள்வி கேட்கும் அரசியலா?
புகழ்பெற்ற பேராசிரியர் மீது பொய்யான குற்றச்சாட்டைப் புனைந்து, அவரை அலைக்கழித்து, துன்புறுத்திய த.வெ.க. அரசின் பாசிச செயல் கடும் கண்டனத்துக்குரியது. தமிழ்நாடு காவல்துறையும், அதற்குப் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் அவர்களும் முனைவர் கலையரசன் அவர்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்!




































