
தமிழன்❤️!! #NTK #BelongsToTamilianStock #நாம்தமிழர்கட்சி
Joined April 2017
- Tweets595K
- Following2.7K
- Followers1.3K
- Likes585K
LOVELY SADEESH..♡ retweeted
55 நாட்களில் 47 தமிழ்நாட்டு மீனவர்கள் கைது; சிங்கள இனவெறி கொடுமையினை தடுக்க கச்சத்தீவை மீட்பது எப்போது?
இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் கற்பிட்டி கடற்பரப்பு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையால் நேற்று (05.08.2025) கைது செய்யப்பட்டிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.
தமிழ்நாட்டில் மீன்பிடி தடைகாலம் முடிந்து மீன்பிடிக்கச் சென்ற கடந்த 55 நாட்களில் 47 தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை இனவெறி கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பல லட்சம் மதிப்பிலான அவர்களின் விசைப்படகுகளும் பறிக்கப்பட்டுள்ளது. இந்திய ஒன்றிய மற்றும் தமிழ்நாடு அரசுகளின் கையாலாகாத்தனமே, தமிழ் மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் இனவெறி அடக்குமுறைகள் தொடர்வதற்கான முதன்மைக் காரணமாகும்.
திமுக ஆட்சிக்கு வந்தது முதல் இலங்கை கடற்படையால் தமிழ் மீனவர்கள் கைது செய்யப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு 159 மீனவர்களும் - 19 படகுகளும், 2022 ஆம் ஆண்டு 237 மீனவர்களும் - 34 படகுகளும், 2023 ஆம் ஆண்டு 240 மீனவர்களும் - 35 படகுகளும், உச்சமாக 2024 ஆம் ஆண்டு 530 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டு, அவர்களின் 71 படகுகளும் பறிக்கப்பட்டன. நடப்பு 2025 ஆம் ஆண்டில் கடந்த ஜனவரி மாதம் 64 மீனவர்களும், பிப்ரவரி மாதம் 60 மீனவர்களும், மார்ச் மாதம் 14 மீனவர்களும், ஜூன் மாதம் 8 மீனவர்களும், ஜூலை மாதம் 25 மீனவர்களும் ஆக மொத்தம் 167 மீனவர்களும் அவர்களின் 24 படகுகளும் இலங்கை அரசால் பறிக்கப்பட்டுள்ளன. தற்போது இராமேஸ்வரத்தை சேர்ந்த 14 மாணவர்கள் மீண்டும் இலங்கை இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஐந்து ஆண்டுகளில் இலங்கை கடற்படையால் மொத்தமாக 1300 க்கும் மேற்பட்ட மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது, மீனவர்கள் நிம்மதியாக மீன்பிடிக்கவே முடியாத அளவிற்கு அவர்களது வாழ்வினை அழித்தொழிக்கும் கொடுஞ்செயலாகும்.
ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டில் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் தமிழ்நாடு அரசால் அமல்படுத்தப்படுகிறது. ஆனால், தமிழ்நாட்டு மீனவர்களுக்கு மட்டும் இலங்கை இனவெறி கடற்படையினாரால் வருடம் முழுவதுமே மீன் பிடி தடைக்காலமாய் தொடரும் கொடுமை அரங்கேறுகிறது.
இரண்டு மாத மீன்பிடி தடை காலத்தின்போது மீனவர் குடும்பங்களுக்கு உதவித்தொகை தரும் அரசு, இலங்கை கடற்படையால் தமிழ்நாட்டு மீனவப்பெருமக்கள் மீன்பிடிக்க முடியாமல் ஒவ்வொரு நாளும் நிலவும் தடைக்கு உதவித்தொகை வழங்க முடியுமா?
இலங்கை கடற்படையால் படகுகள் பறிக்கப்படுவதை தடுக்க திறனற்ற அரசு,
படகுக்கு எரிபொருள் மானியம் கொடுப்பதால் என்ன பயன்?
வெற்றுச் சலுகை தருவது மக்களை அடிமையாக்கும் சிந்தனை; உரிமையை பெற்றுத் தருவதுதான் விடுதலைக்கான சிந்தனை! எம் மீனவச் சொந்தங்களின் மீன்பிடிக்கும் வாழ்வாதார உரிமையை பறித்துவிட்டு, அரசு எத்தனை சலுகைகள் கொடுத்தாலும் அவை ஒருபோதும் மீனவ மக்களுக்கு நிரந்தர தீர்வாக அமையாது!!
ஆகவே, இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு தமிழர்களை அழித்தொழிக்கும் இலங்கையை இனியும் நட்பு நாடென கூறுவதை விடுத்து, தமிழ்நாட்டு மீனவர்களை கைது செய்வதை தடுக்க கட்சத்தீவை திரும்பப் பெற்று நிரந்தர தீர்வினை காண வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
தமிழ்நாட்டு முதல்வர் ஐயா ஸ்டாலின் அவர்கள் வழக்கம்போல கைது செய்யப்பட்ட தமிழ் மீனவர்களை மீட்க, ஒன்றிய அரசிற்கு வெறும் கடிதம் மட்டுமே எழுதுவதை கைவிட்டு, உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள கட்சத்தீவு வழக்கினை விரைவுப்படுத்தி,
ஐம்பதாண்டு காலமாய் கொடுத்து வரும் வாக்குறுதியை இனியாவது நிறைவேற்ற வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
@CMOTamilnadu @mkstalin
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
LOVELY SADEESH..♡ retweeted
உத்தரகண்ட் நிலச்சரிவு பெருவெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை விரைந்து மீட்க வேண்டும்!
உத்தரகண்ட் மாநிலம், உத்தரகாசி மாவட்டத்தில், அமைந்துள்ள தாராலி கிராமத்தில் மேக வெடிப்புக் காரணமாக ஏற்பட்ட திடீர் நிலச்சரிவு மற்றும் பெருவெள்ளம் காரணமாக, மக்களின் குடியிருப்பு பகுதிகள் முழுவதுமாக அடித்துச் செல்லப்பட்டு பலர் உயிரிழந்துள்ள பெருந்துயர நிகழ்வு பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையையும் அளிக்கிறது. மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த இராணுவ வீரர்கள் உட்பட மேலும் பலர் பெருவெள்ளத்தில் சிக்கிக் காணாமல் போயுள்ள செய்தி சொல்லொணா துயரத்தைத் தருகின்றது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கின்றேன்.
தாராலி கிராமத்திற்கு அருகில் உத்தரகாசி - ஹர்ஷில் தேசிய நெடுஞ்சாலை அமைப்பதற்காக அப்பகுதியிலிருந்த 10000 தேவதாரு மரங்களை (ஊசியிலை மரங்கள்) அரசு வெட்டியதே பேரழிவை ஏற்படுத்தியுள்ள நிலச்சரிவு ஏற்பட முதன்மைக் காரணமெனக் கூறப்படுகிறது. வளர்ச்சி, முன்னேற்றம் என்ற பெயரில் நம்முடைய பாதுகாப்பு அரண்களாக விளங்கும் மலைகள், காடுகள், மரங்கள், நீர் வழிப்பாதைகள் உள்ளிட்ட இயற்கை வளங்களை அழிப்பது எத்தகைய பேராபத்தை ஏற்படுத்துகிறது என்பதை, இனியாவது நாட்டை ஆளும் ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.
மக்கள் வசதியாக வாழ்வதைக் காட்டிலும் பாதுகாப்பாக வாழ்வது மிக முக்கியம். மக்கள் வாழத்தகுதியற்ற இடமாக மாறவிட்ட பிறகு, மரங்களை வெட்டி, கோடிகளைக் கொட்டி அமைத்த நெடுஞ்சாலையால் யாருக்கு என்ன பயன்? என்ற கேள்விக்கு எவரிடத்தில் பதிலுண்டு?
ஆகவே, இனி வரும் காலங்களில் உயிர்கள் வாழ உகந்த நிலமாக நாம் வாழும் பூமியை அடுத்த தலைமுறையிடம் கையளிப்பதுதான் ஆகச்சிறந்த வளர்ச்சி என்பதை உணர்ந்து, தொழில் வளர்ச்சி, நாட்டின் முன்னேற்றம் என்ற பெயரில் இயற்கை வளங்களை அழித்தொழிப்பதை இனியாவது ஒன்றிய-மாநில அரசுகள் கைவிட வேண்டுமென வலியுறுத்துகிறேன். உத்தரகாசி மலைச்சரிவு – பெருவெள்ளப் பேரழிவில் சிக்கியுள்ள மக்களைக் காக்க மீட்புப்பணிகளை விரைவுபடுத்த வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
Rescue the People Trapped in the Uttarakhand Landslide and Flood Disaster Immediately!
The sudden landslide and massive floods caused by a cloudburst in Tharali village, located in Uttarkashi district of Uttarakhand, have completely swept away residential areas, resulting in a tragic loss of lives. This devastating incident has deeply shocked and saddened me. The news that many, including army personnel involved in rescue operations, are missing in the flood adds to the unbearable grief. I extend my heartfelt condolences to the families of those who lost their lives and share in their sorrow.
It is being reported that the felling of 10,000 deodar trees (pine species) near Tharali village for the construction of the Uttarkashi–Harsil national highway is the primary reason behind this catastrophic landslide. In the name of development and progress, the destruction of our natural defenses — mountains, forests, trees, and waterways — is leading to grave disasters. It is high time the ruling authorities of this country realized the irreversible damage this causes.
More than living comfortably, it is crucial that people live safely. After turning a place uninhabitable for people, what use is a highway built by felling forests and spending crores of rupees? Who can truly answer this question?
Therefore, I strongly urge both the Union and State governments to abandon their practice of destroying natural resources in the name of industrial growth and national progress. True development lies in preserving the earth as a livable space for future generations. I appeal for immediate acceleration of rescue operations to save those who are still trapped in the Uttarkashi landslide and flood disaster.
LOVELY SADEESH..♡ retweeted
பணி நிரந்தரம் கோரியும், தனியார்மயமாக்கலுக்கு எதிராகவும் பெருநகர சென்னை மாநகராட்சி தலைமையகத்தின் வெளியே போராடி வரும் தூய்மைப் பணியாளர்களின் அறவழிப்போராட்டத்தினைக் காவல்துறையை ஏவி கலைக்கும் விதமான நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்கிற தகவல் வெளிவரும் நிலையில், களத்தில் போராட்டக்காரர்களுக்கு அரணாக நாம் தமிழர் கட்சி நிற்கும் என்று தமிழ்நாடு அரசுக்கும், அதன் காவல்துறைக்கும் தெரிவித்துக்கொள்கிறோம்.
@mkstalin @PriyarajanDMK @Subramanian_ma @supriyasahuias @TThenarasu @MMathiventhan @chennaicorp @chennaipolice_
எவ்வித இடையூறுமின்றி அமைதி வழியில் போராடும் தூய்மைப்பணியாளர்களின் அடிப்படைக் கோரிக்கையினைக் கூட கேட்டறிந்து செயல்படுத்த முன்வராமல், அவர்களின் போராட்டத்தினை கலைத்திட அரசு முனையுமானால் குப்பைக்கழிவுகளால் நிரம்பி வழிவது தலைநகரம் மட்டுமல்ல, இந்த ஆட்சியாளர்களின் எண்ணமும் செயலும் தான். எவ்வித எதேச்சாதிகாரப் போக்கினையும் பின்பற்றிடாமல், தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கையை ஏற்று அவர்களுக்கானப் பணி நிரந்தரம் மற்றும் இதர கோரிக்கைகள் குறித்த நடவடிக்கைகளைக் காலம் தாழ்த்தாது முன்னெடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன். அதற்கு மாறான அரசின் கொடுங்கோன்மைப் போக்கு எதுவாயினும் போராடும் மக்களோடு சேர்ந்து, நாம் தமிழர் கட்சியும் பெரும் அளவிலானத் தொடர் போராட்டங்களை முன்னெடுக்கும் என்றும் எச்சரிக்கிறேன்.
LOVELY SADEESH..♡ retweeted
சென்னையில் தொடர்ந்து 4வது நாளாக உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபடும் தூய்மைப்பணியாளர்களின் கோரிக்கைக்கு தமிழ்நாடு அரசு உடனடியாக செவிசாய்த்திட வேண்டும். நாம் தமிழர் கட்சி சார்பாக என் தலைமையில் வரும் ஆடி 25 ஆம் நாள் (10-08-2025) இச்சிக்கலையொட்டி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவித்திருக்கும் நிலையில், தூய்மைப் பணியாளர்களின் இவ்வறவழிப் போராட்டத்தின் கோரிக்கைகளைத் தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
@mkstalin @PriyarajanDMK @Subramanian_ma @supriyasahuias @TThenarasu @MMathiventhan @chennaicorp
அடிப்படைப் பணி நிரந்தரம் கோரியும் தனியார்மயமாக்கலுக்கு எதிராகவும் பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகத்திற்கு வெளியே தூய்மைப் பணியாளர்கள் தொடர்ச்சியாக உண்ணாநிலைப் போராட்டம் நடத்தி வருகின்றனர். பேரிடர் காலங்கள் முதல் பண்டிகை நாட்கள் வரையில் பொதுச்சமூகம் ஏற்படுத்தக்கூடிய குப்பைக்கழிவுகளை அகற்றி, பொது சுகாதார ஒழுங்கில் பெரும் பங்காற்றிடும் தூய்மைப் பணியாளர்கள் இதுநாள் வரையில் கையுறைகள், முகமூடிகள், ஓய்வறைகள் போன்ற அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் தற்காலிகப் பணியாளர்களாகவே பணியாற்றி வந்துள்ளனர். 15-20 ஆண்டுகாலம் பணியாற்றிய ஊழியர்களையும் பணிநீக்கம் செய்யும் சென்னை மாநகராட்சியின் கொடுங்கோன்மை போக்கு கடும் கண்டனத்திற்குரியது. நீதிமன்ற வழக்கு நிலுவையில் இருக்கும்போது இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது சட்டத்திற்கு மாறானது என்ற அடிப்படை கூடத் தெரியாமல் தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருவது பேரவலமாகும். பணியாளர்களின் உரிமையை நேரடியாக ஒருபுறம் மறுத்தும், மற்றொருபுறம் சென்னை மாநகராட்சியின் 5 மற்றும் 6வது மண்டலங்களில் குப்பை மேலாண்மையைத் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைத்த நிலையிலும் தமிழ்நாடு அரசின் செயல்திறனற்ற ஆட்சிமுறை வெட்டவெளிச்சமாகியுள்ளது. இதனால், ஆதிக்குடிகள் உள்ளிட்ட பின்தங்கிய சமூகத்தைச் சேர்ந்த 2000 பேர் வேலை இழப்பு மற்றும் குறைந்த ஊதியம் ஆகியவற்றை எதிர்கொள்ளவிருக்கிறார்கள்.
2021ல் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, தனியார்மயமாக்கலை எதிர்த்துக் கடிதம் எழுதிய முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தற்போது தூய்மைப் பணியாளர்களின் நலனுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். சமூகநீதி அரசு என்று போலிப் பிம்பத்தினை உருவாக்கிடத் துடிக்கும் ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான திமுக அரசு ஏழை எளிய, சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்குத் தொடர்ந்து அநீதி இழைத்து வருகின்றது. இனியாவது தமிழ்நாடு அரசு தன்னுடைய நாடகங்களை நிறுத்திவிட்டு உண்மையில் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டும். தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்திற்கு செவிமடுத்துத் தனியார்மயமாக்கலை தடுத்திடவும், அவர்களைப் பணி நிரந்தரம் செய்திடவும், அவர்களுக்கு இதர அரசுப்பணிக்கான ஊதியப் பயன்களை உரிய முறையில் வழங்கிடவும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன்.
LOVELY SADEESH..♡ retweeted
நாம் தமிழர் கட்சியின் உழவர் பாசறை நடத்தும்
மலையேறி மாடு மேய்க்கும் போராட்டம்
மேய்ப்பவர்:
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர் | நாம் தமிழர் கட்சி
நாள்:
ஆடி 18 | 03-08-2025 காலை 10 மணியளவில்
இடம்:
அடப்பாறை, தேனி
LOVELY SADEESH..♡ retweeted
நீரின்றி அமையாது உலகு என்பது போல் காடு இன்றி அமையாது நீர்!
அதேபோல் ஆடு மாடுகள் இன்றி அமையாது காடு!
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
LOVELY SADEESH..♡ retweeted
கேரளா மக்களுக்கு தெரிகிறது நம் நாட்டு மாட்டு சாணத்தின் அருமை. ஆனால் இங்குள்ளவர்கள் ரசாயனத்தை உரங்களை பயன்படுத்துகிறார்கள்.
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
LOVELY SADEESH..♡ retweeted
தாலியை அறுத்து எறியுங்கள் என்று சொன்ன ராமசாமியின் கொள்கையை திமுக மதுபானம் விற்று மக்களின் தாலியை அறுத்து கடைபிடிக்கிறது
ஈழத்தில் எங்களை குண்டு போட்டுக் கொன்றார்கள் அது இனப்படுகொலை
தமிழ்நாட்டில் மது விற்று மக்களை கொள்வதும் இனப்படுகொலை தான்
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
LOVELY SADEESH..♡ retweeted
மேய்ச்சல் நிலம் என்பது எங்கள் உரிமை!
இந்த அதிகாரம் நிரந்தரம் என்று நினைக்காதீர்கள்.
இந்த அதிகாரம் ஒரு நாள் எங்களிடம் வரும்போது எந்த தடையும் இல்லாமல் மலைகளில் மாடுகள் மேய்ப்போம்
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
LOVELY SADEESH..♡ retweeted
ஓட்டை குறிவைப்பவர்கள் நாட்டை பற்றி கவலைப்பட மாட்டார்கள்.
காடு, மலை, நீர், மரம் இதைப் பற்றி எல்லாம் தெரியாமல் எனக்கு வாக்கு செலுத்தி பயனில்லை
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
LOVELY SADEESH..♡ retweeted
இந்த மக்களுக்கு யாருமே இல்லை என்று நினைக்க கூடாது அவர்களுக்கு துணையாக எப்போதும் நாங்கள் இருப்போம்
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
LOVELY SADEESH..♡ retweeted
வளமான மண் என்கிறார்கள், ஆடு மாடு கழிவுகள் இல்லாமல் வளமான மண் எப்படி வரும்
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
LOVELY SADEESH..♡ retweeted
நான் செய்வதை விட அதுச் சிறந்த அரசியல் எதுவும் கிடையாது
மற்றவர்கள் செய்தி அரசியல் செய்வார்கள்.
நாங்கள் மக்கள் அரசியல் செய்கிறோம்.
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
LOVELY SADEESH..♡ retweeted
மாடுகளை மேய்க்க மாற்று இடம் தருகிறோம் என்று இப்போது சொல்கிறார்கள்.
மாற்றிய இடத்தை தந்துவிட்ட பிறகு தானே தடை போட்டிருக்க வேண்டும்
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
LOVELY SADEESH..♡ retweeted
எந்த இடத்துல மாடு மேய்ப்பவரை அடிச்சி விரட்டுனாங்களோ அதே இடத்தில் இன்று செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் தேனி போடி -அடவுப்பாறை - முந்தல், மலைப்பகுதில் மலையேறி மாடு மேய்க்கும் போராட்டம் நடைபெற்றது
LOVELY SADEESH..♡ retweeted
"பயம் என்பது எங்கள் தமிழர் பரம்பரைக்கே கிடையாது"
அனைத்துயிர் அரசியல் காவலன் அண்ணன் சீமான் 😍
LOVELY SADEESH..♡ retweeted
வீரப்பெரும்பாட்டன் குணாளன் நாடார்,
வீரப்பெரும்பாட்டன் கருப்பன் சேர்வை,
வீரப்பெரும்பாட்டன் தீரன் சின்னமலை
ஆகியோருக்கு நேத்து நடைபெற்ற அண்ணன் சீமான் தலைமையிலான மாடு மேய்க்கும் போராட்டத்தில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது
LOVELY SADEESH..♡ retweeted
மலையேறி மாடு மேய்க்கும்
போராட்டம்!
"மேய்ச்சல் நிலம் என்பது எங்கள் உரிமை!" என்ற முழக்கத்தோடு, ஆடி 18ஆம் நாள் (03-08-2025) காலை 10 மணியளவில் தேனி மாவட்டம், அடப்பாறையில் நாம் தமிழர் கட்சியின் உழவர் பாசறை முன்னெடுத்த, மலையேறி மாடு மேய்க்கும் போராட்டம், தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் #சீமான் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
youtu.be/rfyEHq3mulE
youtu.be/xR6NvwX2XYc
youtu.be/5PsG8gKmEgA
youtu.be/X09IjcBOHaM
LOVELY SADEESH..♡ retweeted
அறிக்கை: ஈழச்சொந்தங்களை இழிவுப்படுத்தும் கிங்டம் திரைப்படத்தை திரையிடுவதை நிறுத்தாவிட்டால், திரையரங்கை முற்றுகையிட்டு தடுத்து நிறுத்துவோம்!
-சீமான் எச்சரிக்கை | நாம் தமிழர் கட்சி
அண்மையில் வெளியாகியிருக்கும் கிங்டம் திரைப்படத்தில் ஈழச்சொந்தங்களைக் குற்றப்பரம்பரைபோல, மிகத் தவறாகச் சித்தரிக்கும் வகையிலான காட்சியமைப்புகள் இடம்பெற்றிருக்கிற செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன். கருத்துச்சுதந்திரம் எனும் பெயரில், தமிழ்த்தேசிய இனத்தின் வரலாற்றை எப்படி வேண்டுமானாலும் திரித்து, தவறாகச் சித்தரிக்கலாம் என எண்ணுவதை ஒருநாளும் அனுமதிக்க முடியாது. ஈழத்தமிழர்கள் மலையகத்தமிழர்களை ஒடுக்கினார்களென அத்திரைப்படத்தில் காட்டப்படுவது வரலாற்றுத்திரிபு; மிகப்பெரும் மோசடித்தனம். வரலாற்றில் ஒருநாளும் நடந்திராத ஒன்றை நடந்ததாகக் காட்டி, ஈழச்சொந்தங்களை மிக மோசமாகச் சித்தரிக்கும் இப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
தமிழ்த்தேசிய இனத்தின் ஆன்ம விருப்பமான தமிழீழச் சோசலிசக் குடியரசை அடைவதற்கு இரத்தம் சிந்தி, உடல் உறுப்புகளைச் சிதையக் கொடுத்து, உயிரை விலையாகக் கொடுத்து, உயிரீந்த மாவீரர்களின் ஒப்பற்ற வீரவரலாறே தமிழீழ விடுதலைப் போராட்டமாகும். உலகின் எந்த இயக்கத்தினுடைய விடுதலைப் போராட்டத்திலும் இல்லாத வகையில் கண்ணியத்தையும், ஒழுக்கத்தையும், அறநெறியையும் பின்பற்றி, போரியல் விதிகளையும், மாண்புகளையும் கடைப்பிடித்து, மரபுப்போர் புரிந்தவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள். போர் முடியும் கடைசித் தருவாயில்கூட, பழிவாங்கும் நோக்கோடு, சிங்கள மக்களை அழிக்க முற்படாது, அவர்களது குடியிருப்புகள் மீது தாக்குதல் நிகழ்த்த முனையாது, இறுதிவரை அறம்சார்ந்து நின்ற வீரமறவர்கள் விடுதலைப்புலிகள். சிங்கள இராணுவமானது, தமிழர்களது குடியிருப்புகள், வழிபாட்டுத்தலங்கள், மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள் என தமிழ் மக்கள் வாழ்விடங்களின் மீது வான்வழித்தாக்குதல் தொடுத்தது; தடைசெய்யப்பட்ட நச்சுக்குண்டுகளையும், கொத்துக் குண்டுகளையும் வீசி, தமிழின மக்களைப் பச்சைப்படுகொலை செய்தது. பல்லாயிரக்கணக்கான தமிழ்ப்பெண்களைப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி, தமிழர் நிலங்களை அபகரித்து, தமிழர் தேசத்தை சுடுகாடாக்கி, இனவெறியின் கோரத்தாண்டவத்தைக் கட்டவிழ்த்துவிட்டது சிங்கள அரசு. எவ்விதப் போர் நெறிமுறையையும் பின்பற்றாது, இனஅழிப்பு நோக்கில் செய்யப்பட்ட அத்தாக்குதல்களின் மூலம், ஏறக்குறைய 2 இலட்சம் மக்களை மொத்தமாய் கொன்றுகுவித்தது சிங்கள இனவாத அரசும், அதன் இராணுவமும்.
ஈழப்போர் முடிந்து 15 ஆண்டுகளைக் கடந்தும், தமிழினத்தின் கோர இனப்படுகொலைக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை. ஐ.நா. மன்றமும், சர்வதேச அரங்கும் தமிழர்களுக்கு எவ்விதத் தீர்வையும் பெற்றுத் தர முன்வரவில்லை. இனப்படுகொலை செய்திட்ட சிங்கள ஆட்சியாளர்கள் மீது தலையீடற்ற பன்னாட்டு போர்க்குற்ற விசாரணை நடத்தக்கோரியும், ஈழச்சொந்தங்களிடம் தனிநாடாகப் பிரிந்து செல்வதற்கான ஒரு பொதுவாக்கெடுப்பை நடத்தக் கோரியுமாக பன்னாட்டு மன்றத்தில் நீதிகேட்டு, தமிழின மக்கள் இன்றளவும் போராடிக் கொண்டிருக்கிறோம். எம்மினத்துக்கு இழைக்கப்பட்ட கொடும் அநீதியை, எம்மினத்தின் இனப்படுகொலையை உலகரங்கில் எடுத்துரைத்து, எமது தரப்பு நியாயங்களை மற்ற தேசிய இனங்களுக்கு மெல்ல மெல்லக் கடத்திக் கொண்டிருக்கும் இவ்வேளையில், எம்மினத்தின் மாண்பையும், ஈழச்சொந்தங்களின் வலியையும் இழிவுப்படுத்தும் வகையிலான காட்சிகளைக் கொண்டுள்ள கிங்டம் திரைப்படத்தை தமிழ் மண்ணில் ஒருபோதும் ஏற்க முடியாது. தமிழ்த்தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களையும், மாவீரர் தெய்வங்களான விடுதலைப்புலிகளையும், எம்மினத்தின் வீரம்செறிந்த விடுதலைப்போராட்டத்தையும், எங்கள் தொப்புள்கொடி உறவுகளான ஈழச்சொந்தங்களையும் கொச்சைப்படுத்தும் எதுவொன்றையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது.
ஆகவே, ஈழச்சொந்தங்களை இழிவுப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட கிங்டம் திரைப்படத்தை தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும்வகையில் தமிழ்நாட்டின் திரையரங்குகளில் திரையிடுவதை முற்றாக நிறுத்த வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். அதனைச் செய்யத் தவறும்பட்சத்தில், திரையரங்குகளை முற்றுகையிட்டு, அத்திரைப்படத்தைத் தடுத்து நிறுத்துவோமென எச்சரிக்கிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி













