Pinned Tweet
#1D1MD1SONG தமிழ்திரைப்பட இசையின் வரலாறு, நமது நினைவில் தோன்றும் சில இசையமைப்பாளர்களால் மட்டுமல்ல, நூற்றுக்கணக்கான இசையமைப்பாளர்களின் பங்களிப்பால் ஆனது. 1/2
விருப்பப் பாடலில் ஒன்று. எந்த சூழலுக்காக, இந்த பாடலை உருவாக்கியிருபார்கள்கள் என எண்ணியதுண்டு. கமல், ராஜா & முத்துலிங்கம் கூட்டணியின் சிறந்த பங்களிப்பு. காணொளியாக, வெளியிட்டவர்களுக்கு நன்றி 🙏.
🏃🏃🏃
ராஜா சார் பாட்டை IEM ல கேட்டுருக்கீங்களா? 🎧
Pure bliss ♥️
நார்மல் ஹெட் செட்ல கேக்கதறதுக்கும் IEMல கேக்கறதுக்கும் செம வித்தியாசம் இருக்கு.
நார்மல் ஹெட் செட்ல எல்லா Instruments ம் ஒண்ணா கலந்து கேக்கும். IEM ல வயலின், புல்லாங்குழல், வீணை, தபலா எல்லாமே தனித்தனியா தெளிவா கேட்கும்.
Interlude ல வர்ற counter melody, strings ஓட Background , மெல்லிய தாளம் இதெல்லாம் நார்மல் ஹெட்செட்ல மிஸ் ஆகிடும். IEM ல ஒவ்வொண்ணும் புடிபடும்.
SPB, ஜானகி அம்மா, சித்ரா குரல்ல இருக்குற மூச்சு, உணர்ச்சி, சின்ன சின்ன ஜாலம் எல்லாம் காதுகிட்டயே பாடற மாதிரி இருக்கும்.
80-90s ரெக்கார்டிங்ல Left - right பிரிப்பு அருமையா இருக்கும். எந்த இன்ஸ்ட்ருமென்ட் எங்க இருக்குன்னு Sound stage ம் தெளிவா கேட்கும்.
IEM ல மட்டும் தான் ஒரு பாட்டோட Structure a பிரிஞ்சு மேஞ்சு ரசிக்க முடியும்.
Music Content - FLAC அல்லது WAV format ல் இருந்தால் மட்டுமே இது சாத்தியம்.
2
139
In my memory, I visited one shop daily for nearly a week to ask about an audio cassette; finally, as I entered, the man said, “your movie has come,” and handed it to me. I still possess that cassette.
since am seeing contradicting tweets all the time we, all Tamil music listening people, should come together and decide which is the best song in ANJALI (1990).
1
137
While I was having coffee, I didn’t know what to watch, so I started watching Dorothy (4th round). Every time finding something new. There is an extended flute piece of Naan Thedum sevvanthi poovithu song. @karthiksubbaraj will kill us if we ask him to release that flute piece🚶
To all my dear #Dorlings #DorothyAddicts... ❤️❤️
Come join us in Celebrating the 50th day of #Dorothy in Theatres....
Tomorrow Friday the 13th...
10:30 am Kamala Cinemas
4 pm Ags T.Nagar...
Ticket link below
ticketnew.com/movies/dorothy…
#Dorothy50thDay
1
3
239
Deva... retweeted
கமல்ஹாசன்
எனும் பாட்டுக்காரர்
தனக்காகப் பாடாத பாடல்கள் ❤️
கமல்ஹாசன் என்ற பாட்டுக்காரன் ஒரு பாடகராக அவதாரம் எடுத்து 50 ஆண்டுகளைக் கடந்து விட்டார்.
“ஞாயிறு ஒளிமழையில்” (அந்தரங்கம்) youtube.com/watch?v=rLSmBy55… படத்தில் ஜி.தேவராஜன் இசையில் தொடங்கி சங்கர் கணேஷ், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளடங்கலாக ஏராளம் இசையமைப்பாளர் இசையில் கமல்ஹாசன் பாடியிருக்கிறார். அவற்றில் 99 வீதமானவை தனக்கான படங்களுக்காகவே பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.
“பொன் மானை தேடுதே
என் வீணை பாடுதே
உன் பார்வை தொடுத்தது
எனக்கொரு பூ மாலை
சுகம் தர நடந்தது”
youtube.com/watch?v=Qr3PEIoi…
எதுவித முன்னேற்பாடும் இல்லாமல் அப்படியே ராஜாவின் ஒலிப்பதிவுக் கூடத்துக்குள் வந்த கமல், இளையராஜா வேண்டிக் கேட்க அப்படியே “சுகம் தர நடந்தது" போலப் பாடி விட்டுப் போனார் மு.மேத்தா வரிகளில் நடிகர் மோகனுக்காக, அந்தச் சம்பவம் “ஓ மானே மானே” படத்துக்காக அமைந்தது. கானாபிரபா
இதற்கு முன்பும் இன்னொரு சந்தர்ப்பம் கமல்ஹாசனுக்கு அமைந்திருக்கிறது.
“பொய்யின்றி மெய்யோடு நெய் கொண்டு போனால்
ஐயனை நீ காணலாம்” என்ற ஜேசுதாஸ் பாடல் சரணம் ஐயப்ப்பா படத்தை நினைப்பூட்டி விடும். இந்தப் படத்தின் இசைமைப்பாளர் சந்திரபோஸ் இசையில் “சரணம் ஐயப்பா” படத்தில் “அண்ணா வாடா தம்பி வாடா”
youtube.com/watch?v=MmXkDbGJ…
என்ற பாடலை கமல்ஹாசன் பாடியிருந்தாலும் அது வேறொருவருக்கானதாக அமைந்தது. இதே படத்தில் கமல் கெளரவ வேடத்திலும் தோன்றியிருக்கின்றார்.
கங்கை அமரன் இசையில் தெரு விளக்கு படத்தில் இளையராஜா பாடியது போல, கமல்ஹாசனும் & சைலஜாவோடு இணைந்து
"மதுரைப் பக்கம் என் மச்சான் ஊரு"
youtube.com/watch?v=bJaRXU_e…
பாடியுள்ளார்கள்.
கமல்ஹாசன் என்னும் கலைஞன் தன் நடிப்புத் திறனோடு, ஆடல், பாடல் திறனையும் ஒருங்கே வளர்த்துக் கொண்டவர். முன்னர் ஒருமுறை தொலைக்காட்சிப் பேட்டி ஒன்றில் பாலமுரளிகிருஷ்ணா கூட, கமல் தன்னிடம் சங்கீதம் கற்க வந்ததாகவும், ஒரு சில நாட்களிலேயே அவரின் திறமையைக் கண்டு தான் வியந்ததாகவும் முறையாக இன்னும் பயிற்சி எடுத்திருந்தால் அவரின் பாடும் திறன் இன்னும் உயர்ந்திருக்கும் என்று குறிப்பிட்டிருந்தார்.
குணா பாடல் ஒலிப்பதிவில் கூட இளையராஜா கமலோடு பேசும் போது கமலுக்கு ஹைபிட்சில் பாடும் திறன் இருப்பதைச் சிலாகித்து,
சிங்கார வேலனில் "போட்டு வைத்த காதல் திட்டம்" பாடலைப் பாட வாய்ப்புக் கொடுத்ததைக் குறிப்பிட்டிருந்தார்.
பின்னாளில் “காதலா காதலா” படத்தில் கார்த்திக் ராஜா இசையில் பாடி நடித்த கமல்ஹாசனை, தன் பெரியப்பா மகன் பார்த்தி பாஸ்கர் பாடல் வரிகளில் பவதாரணி, ஸ்வர்ணலதாவுடன் கூட்டுச் சேர்த்துக் கொடுத்த “முத்தே முத்தம்மா” youtube.com/watch?v=ippxU28V…
அட்டகாஷ் ரகம். தனிப்பட்ட ரீதியில் கமல் பாடிய பாடல்களில் உச்சமாக ரசித்துக் கேட்பேன்.
அது போல இதுவரை யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் கமல்ஹாசன் நடித்திருக்காவிட்டாலும், யுவனின் ஆரம்பகால ஆல்பமான “The Blast” இல்
“பூக்கள் எல்லாம்” (பார்த்தி பாஸ்கர் & சுஜாதா வரிகள்)
youtu.be/_RSFyyeXhdk?si=kwqB…
“வா நந்தனே” (அமரர் வாசன் வரிகள்)
youtu.be/S2EjWvQZnZk?si=SWOG…
பதிவை எழுதியவர் கானா பிரபா
அவள் தேவதை (கவி ரவி வரிகள்)
youtu.be/SUSJzyVhF30
போன்ற பாடல்களில் தன் குரலைக் காட்டியிருக்கிறார் கமல்ஹாசன்.
பின்னாளில் புதுப்பேட்டையில் நா.முத்துக்குமார் வரிகளில்
“நெருப்பு வாயில்”
youtube.com/watch?v=nj2_XlOc…
பாடலில் யுவன் இசையில் ருத்ர தாண்டவம் ஆடியிருப்பார் கமல்.
தனிப்பட்ட ஆல்பம் என்று சொல்லும் போது கொரோனா காலத்தில் ஜிப்ரான் இசையில் கமல்ஹாசன் பகிர்ந்த “அறிவும் அன்பும்” பாடல் தொகுதியும் குறிப்பிட வேண்டியது. கானா பிரபா
கமலின் தயாரிப்பு என்று வரும் போது நளதமயந்தி படத்தில் வித்தியாசமான இரண்டு பாடல்கள்
Sudupattadha
youtube.com/watch?v=ydrEqU1y…
Stranded On the Streets
youtube.com/watch?v=LyBGscQM…
ரமேஷ் விநாயகம் இசையில் கமல் பாடியளித்திருந்தார்.
முத்துராமலிங்கம் படத்திற்காக நீண்ட இடைவெளிக்குப் பின் தன் இசையில் கமல்ஹாசனைப் பாட வைத்தார் “தெற்கத்தி சிங்கமடா” இளையராஜா. பெரிதும் திருப்தி தராத படைப்பு அது. இளையராஜாவுக்காக பஞ்சு அருணாசலம் அவர்கள் எழுதிக் கொடுத்த இறுதிப் பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் Happi படத்துக்காக ராஜா மீண்டும் கமலை அழைத்துக் கொடுத்த Zindagi dish youtube.com/watch?v=EYYn9rZv… பொக்கிஷம் எனலாம்.
யாரோ இவன் யாரோ
சொந்தம் யார் தான் இவனோ..
பாசம் உயிர் பாசம் தரும்
யார்தான் இவனோ...
youtu.be/tmQpM3QpnLk?si=-2Rv…
ஐம்பது ஆண்டுகளாகப் பாடிக் கொண்டிருப்பது மட்டுமல்ல இன்றைய Gen Z kids யுகத்திலும் மெய்யழகன் பாடலால் வயது பேதமின்றிக் கட்டிப் போட்டார். மலையாள இசையின் மகோன்னதம் ஜி.தேவராஜன் மாஸ்டர் இசையில் பாட்டுப் பயணத்தைத் தொடங்கியவர் அக் கரையில் இருந்து வந்த கோவிந்த் வசந்தா வழி மெய்யழகன் வழி “போறேன் நான் போறேன்” என்று இன்னொரு பரிமாணத்திலுமாக இரண்டைக் கொடுத்தார்.
பன்முகத் திறமையாளர் நம்மவர் கமல்ஹாசனுக்கு இனிய 72 வது பிறந்த நாள் வாழ்த்துகள்.
கானா பிரபா
07.11.2026
+1
More reasons..
1. அதிகாலை 6 மணி காட்சி தேவைக்காக தயாரிப்பாளர் சங்கம் சொல்லும் காரணம் வேடிக்கையானது.
மற்ற மாநிலங்களில் ஆறு மணிக்கு ரிலீஸ் பண்ணி நெகட்டிவ் விமர்சனம் வந்துடுதாம்! எனவே 6 மணிக்கு சினிமா காட்டணுமாம்!
இது ஒரு லாஜிக் என்றால், இங்கே அதிகாலை 3 மணிக்கே கேட்பார்களா?
ஏன் தமிழ்நாட்டில் ஒரு நாள் முந்தியே ரிலீஸ் பண்ண வேண்டியதுதானே!
அப்படி செய்தால் நெகட்டிவ் ரெவ்யூ வந்து அங்கே ஊத்திக்கும்.
படம் குப்பையாக இருந்தால் யாராலும் காப்பாற்ற முடியாது.
அதிகாலை 6 மணி காட்சி இல்லாமலேயே தமிழ் சினிமா சரித்திரத்திலேயே அதிக வசூலை பெற்ற ஜெயிலர் 2 பெற்றதே!
இப்போதான், 6 மணி காட்சி வந்தாச்சு! இனிமே எல்லா படங்களும் நல்லா ஓடிடுமா?
2. விடுமுறை நாட்களில் மட்டுமா புது படங்கள் ரிலீஸ் பண்ணப்படுது?
சத்யம், ரோகிணி ரீல்ஸ் பார்த்து பெரிய ஆளுமைகள் எல்லாம் அதிகாலை காட்சிக்கு வரிசையில் நிற்பதாக கற்பனை செய்யாதீர்கள்.
சிறு நகரங்களுக்கு சென்று பாருங்கள்.
அதிகாலை காட்சிக்கு போக எத்தனை ஆயிரம் பேர் பள்ளி, கல்லூரியை விட்டுட்டு, ஒரு முழுநாள் கூலியை விட்டுட்டு வராங்கண்னு தெரியும்தானே?
ஆக, சினிமா தயாரிப்பாளர்கள் நலனுக்காகதான் ஒட்டுமொத்த தமிழ்நாடு இயங்கணுமா?
உண்மையில் காட்சி நேரம் 1, 4, 7, 10 என இருந்த போதுதான் சினிமா செழிப்பாக இருந்தது. 2 முதலமைச்சர்கள் சினிமாவில் இருந்து உருவானார்கள்.
3. ஆறு மணி ஷோ ஏற்கனவே இருந்ததுதானே?
அது அண்மையில் வந்த மல்டி ஸ்கிரீன் கலாச்சாரம்தான்! ஏன் அது ரத்தாச்சு?
ஏனெனில் ரசிக கொண்டாட்டத்தில் ஒரு இளைஞனின் உயிர் போச்சு.
பலரின் உயிர்களை பணயம் வச்சுதான் இப்போ கொண்டு வரப்பட்டுள்ளது.
4. அப்புறம் ரெட் ஜெயண்ட் க்காக நான் பேசுறேன்னு சொல்லும் அபத்தம்..
24 மணி நேரமும் சினிமா ஓடினாலும் அவர்களுக்கு லாபம்தானே! ஆனால் ஓடக்கூடாது என்றுதானே நான் சொல்கிறேன்.
ரெட் ஜெயண்ட் சம்பாதிக்கணும்னா திமுக அரசு ஏன் 6 மணி காட்சியை ரத்து செய்யணும்?
கொஞ்சமேனும் அறிவை பயன்படுத்தி யோசிக்கக்கூடாதா?
5. என்னைப் பொறுத்தவரை பால், மின்சாரம் போல சினிமா வாழ்வதற்கான அத்தியாவசியப் பொருள் இல்லை.
எனவே இதில் டிக்கெட் விலையில் கூட அரசின் கட்டுப்பாடு கூடாது. அவரவர் பொருளுக்கு அவரவர் விலை வைத்துக் கொள்ளட்டும்.
ஆனால், "உலக நாடுகளில் எங்கேயும் இல்லாத கேவலமாக அதிகாலையில் மக்கள் தியேட்டர் வாசலில் நிற்கும் கேவலத்தை மட்டுமே நான் எதிர்க்கிறேன்".
இதை யார் ஆதரித்தாலும் நான் எதிர்ப்பேன்.
எந்த சினிமா நட்சத்திரங்களின் பிள்ளைகளோ, அரசியல்வாதிகள், தொழிலதிபர்களின் பிள்ளைகளோ அதிகாலையில் தியேட்டர் வாசலில் குத்தாட்டம் போடலை. கேமிரா முன் நின்று வெறித்தனமாக கத்தலை.
அவர்கள் எல்லோரும் படிக்கிறார்கள். தொழில் செய்கிறார்கள். ஒவ்வொரு நாளும் அவர்களது கனவை நோக்கி நகர்கிறார்கள்.
வீணாக சீரழிந்துப் போவது எல்லாமே எளிய, நடுத்தரக் குடும்பத்து பையன்களும், பெண்களும்தான்..
இவர்களின் கனவை அழித்து, எதிர்காலத்தைக் கெடுத்து, ரசிக வெறிக் கூட்டத்தை வளர்த்துதான் சினிமா தயாரிப்பாளர்கள் வாழணுமா?
நான் பேசுறது பூமரிசம்தான்.
இருக்கட்டும்.
மூன்றே நாட்களில் மொத்த முதலீட்டையும் வாரி அள்ளிட்டு போயிடணும் எனும் பேராசைக்காரர்கள் என்னைவிட மோசமான பூமர்கள்.
அந்த வலையில் உங்கள் பிள்ளைகளை சிக்க விடாதீர்கள்.
I rest my case.
109
Deva... retweeted
தமிழுக்கு இதைவிடப் பெரிய அவமானம் இல்லை.
இத்தகைய போலியான நூல்கள் நீண்ட கால அடிப்படையில் மாபெரும் தீங்குகளை விளைவிக்கும். இவற்றை வாசித்து, குறிப்பெடுத்து, அவை பேச்சிலும் எழுத்திலும் ஆய்விலும் இடம்பெற்றால் தமிழின் மானம் கப்பலேறிவிடும். இந்தக் காரியத்தை எவர் செய்திருந்தாலும் அவர்கள் தமிழுக்குத் துரோகம் இழைத்தவர்கள்.
இந்தப் போலி நூல்கள், அனைத்து நூலகங்களில் இருந்தும் உடனடியாகத் திரும்பப் பெறப்பட்டு வீதியில் கொட்டி எரிக்கப்பட வேண்டும். மோசடி செய்த பதிப்பகங்கள் சீல் வைக்கப்பட வேண்டும் என தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.
இந்த மோசடியை அம்பலப்படுத்தியதற்காக எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு நாம் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.
sindhai.com/essays/perumal-m…
Deva... retweeted
ராஜா தன் முன்னோர்களின் அற்புதங்களை விளக்குகிறார். கற்றோரை கற்றாரே காமுறுவர்.
Humility is not an act.
Deva... retweeted
ஈரா முருகனும் நானும் சேர்ந்து எழுதிய உன்னைப்போல் ஒருவன் படத்தில் ஒரு வசனம். ‘மறதி ஒரு தேசிய வியாதி’.
அந்த மறதி எனக்கும் முருகனுக்கும் வராது என்று நம்பியிருந்த எங்களுக்கு முருகனின் ‘மறதி வியாதி’ அதிர்ச்சிதான். கவலைப்படாதீங்க.. இந்த மறதியோட தேக்கி வச்சிருந்த கோபதாப குரோதங்களும் மறந்துரும். சோகங்களும் கூட என்றேன்.
அது போனா போயிட்டு போறது கூடவே நம்ம சந்தோச நாட்களும் ஜோக்ஸூம் மறந்துபோயிடுமோன்ற பயமாயிருக்கு என்றார் ஈராமு. எல்லாத்தோடயும் சேர்த்து பயமும் மறந்த வீரரா வாழவேண்டியதுதான். இது பெரிய சோகமில்ல முருகன் என்றேன்.
‘ஓ நல்லாருக்கே You are saying I might even forget to forget? என்று கேட்டார். இருவரும் சிரித்தோம். சத்தமாக நான். மனதிற்குள் அவர். முருகனின் கடைசி சோகம் அதுதான். சோகமும் பிரிவும் இனி என்போன்ற நண்பர்களுக்குத்தான்.
நாங்கள் நண்பர்களாக எங்களை ஊக்குவித்தவர் திரு. சுஜாதா ரங்கராஜன். அதுவும் எப்படி? உங்களுக்குப் பிறகு, நீங்கள் விட்ட இடத்தில் தொடங்கக் கூடிய எழுத்தாளரைக் கண்டுபிடித்துவிட்டீர்களா என அவரிடம் கேட்டேன். சுஜாதா தயக்கமில்லாமல் சொன்னார், ‘ஓ ஈரா முருகன்”
சஜாதா புகழ்ந்த அந்த ஈரா முருகன் என் நண்பர். இவர்களை எனக்குத் தெரியும் என்பதே என் பெருமை.
சில பேர் மொழியைக் காதலிப்பார்கள். சிலரை மொழியே காதலிக்கும். ஈரா முருகனின் காதல் ஒருதலைக் காதல் அல்ல.
அன்புடன்,
முருகனின் நண்பன், தமிழின் காதலன்
கமல்ஹாசன்.
யாரெல்லாம் இந்த பாடல் வேண்டும் என கேட்டது? youtu.be/Dy4zl0qlWkg?si=IBWB…. @kanapraba
அடுத்த தேடல். சந்தர்ப்பம் திரைப்படத்தில் பாடல்களை எழுதியது யார் ? @kanapraba @rajabalanm
1
189
Deva... retweeted
டோரத்தி பார்க்கும்போது அக்ஷயா ஞாபகம்தான். ஆகாஷாக இருந்தபோது பார்த்த குட்டி முகமும் பின்னர் பார்த்த நளினத் தோற்றமும், அவளை ஏற்றுக்கொண்ட தாயை வசைபாடிய உறவுகளுக்கும் நம் போன்றோருக்கும் ஒரு நூல் தெளிவாவது கூடியிருக்கும் என்பதுவும் தோன்றிக்கொண்டே இருந்தது.



































