நிதன் சிற்றரசு retweeted
பல லட்சங்களோ ஓரிரு கோடிகளோ, கோவை நுலக புத்தகக் கொள்முதல் ஊழலை தமிழ்நாடு அரசு நினைத்தால் ஓரிரு மணி நேரங்களில் வெளிக்கொண்டுவர முடியும். செய்வார்கள் என்று காத்திருப்போம்.
ஆனால் இந்த பிரச்சனையில் கவனப்படுத்தவேண்டிய ஒன்று இப்பிரச்சனையின் தலைப்பு.
1. கோவை புதிய நூலகத்தில் பெரும் ஊழல்'
2. கோவை பெரியார் நூலக புத்தகக் கொள்முதலில் பெரும் முறைகேடு'
3. AI புத்தகங்களால் நிரம்பி வழியும் பெரியார் நூலகம்
4. பெரியார் நூலகத்திற்கு தகுதியற்ற புத்தகங்களை கொள்முதல் செய்தது யார்?
இப்படி எல்லாம் வைத்திருக்க வேண்டிய தலைப்பை எப்படி தலைப்பிட்டிருக்கிறார்கள்.
"கோவை பெரியார் அறிவுலகத்தில் பெரும் ஊழல்" என்று திட்டமிட்டு கட்டமைத்திலுக்கிறார்கள்.
இந்த தலைப்பை திரும்ப திரும்ப பதியவைக்க முனைகிற ஆர்எஸ்எஸ் கூட்டு மனசாட்சிகளின் நுட்பமான முயற்சி இது.
தமிழ்நாட்டின் அனைத்து அறிவுசார் முயற்சிகளின் மீதும் சேற்றை வீச ஒரு பெரும் கூட்டமைப்பே இயங்கி வருகிறது.
இந்த ஆட்சியில் வள்ளுவருக்கும் வள்ளலாருக்கும் திருநீறு இட்டார்கள். இப்போது பெரியார் அறிவுலகத்தை கீழ்மைப்படுத்தும் வேலையில் இறங்கியிருக்கிறார்கள்.
கண்ணுக்கு தெரிந்த தவெக வாயிலாக, நம் கண்களுக்கு அகப்படாதவர்கள் தமிழ்நாட்டை சூறையாடிக் கொண்டிருக்கிறார்கள்.
நிதன் சிற்றரசு retweeted
பெரியார் அறிவுலகத்திற்கு #அகல்_பதிப்பகம் உள்ளிட்ட எந்தெந்த பதிப்பகங்களுக்கு என்றைய தேதியில், யாரால், எந்ததெந்த புத்தகங்கள், எத்தனை எண்ணிக்கை வாங்க ஆணை வழங்கப்பட்டது என்கிற வெள்ளையறிக்கையை தமிழ்நாடு அரசு உடனடியாக வெளியிடவேண்டும்.. @CMOTamilnadu @imrajmohan #பெரியார்_அறிவுலகம்
நிதன் சிற்றரசு retweeted
🪔 க்கு பேமெண்ட் செட்டில் பண்ண ரசீதைக் காட்டுனாலே எல்லாக் கேள்விக்கும் விடை தெரிஞ்சிரும்.
நிதன் சிற்றரசு retweeted
யார் செய்திருந்தாலும் இது கண்டனத்திற்குரியது தான்..
நூலகத்துறையை கையில் வைத்துள்ள அமைச்சர் ராஜ்மோகன் அவர்கள் அகல்விளக்கு பதிப்பகத்திற்கு டெண்டர் வழங்கிய தேதி, நூல் கொள்முதல் செய்யப்பட்ட தேதி ரசீதுகளை செய்தியாளர் சந்திப்பு வைத்து இன்றே வெளியிட வேண்டும்!
யாராக இருந்தாலும், எந்த ஆட்சியில் தவறு நடந்தாலும் அதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
பெரியார் அறிவுலகத்தில் பெரிய ஊழல்
பெருமாள்முருகன் கட்டுரை
#PeriyarArivulagam | #PeriyarKnowledgeCentre |
#Sindhai | #DMK | #TVK | #CMVijay | #Kovai
நிதன் சிற்றரசு retweeted
தமிழுக்கு இதைவிடப் பெரிய அவமானம் இல்லை.
இத்தகைய போலியான நூல்கள் நீண்ட கால அடிப்படையில் மாபெரும் தீங்குகளை விளைவிக்கும். இவற்றை வாசித்து, குறிப்பெடுத்து, அவை பேச்சிலும் எழுத்திலும் ஆய்விலும் இடம்பெற்றால் தமிழின் மானம் கப்பலேறிவிடும். இந்தக் காரியத்தை எவர் செய்திருந்தாலும் அவர்கள் தமிழுக்குத் துரோகம் இழைத்தவர்கள்.
இந்தப் போலி நூல்கள், அனைத்து நூலகங்களில் இருந்தும் உடனடியாகத் திரும்பப் பெறப்பட்டு வீதியில் கொட்டி எரிக்கப்பட வேண்டும். மோசடி செய்த பதிப்பகங்கள் சீல் வைக்கப்பட வேண்டும் என தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.
இந்த மோசடியை அம்பலப்படுத்தியதற்காக எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு நாம் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.
sindhai.com/essays/perumal-m…
நிதன் சிற்றரசு retweeted
எழுத்தாளர் பேராசிரியர் பெருமாள் முருகனின் இந்தக் கட்டுரை அதிர்ச்சியைத் தருகிறது.
கோவை பெரியார் அறிவுலகத்தில் ஆயிரக்கணக்கில் போலிநூல்கள்; பொய்யான தகவல்கள் நிறைந்த புரட்டுப் பக்கங்கள்; யாரும் எழுதாமல், தயாரிக்கப்பட்ட குப்பைகள்.
இந்தக் குப்பைகளை உடனடியாக அகற்றி, வெளிப்படையான விசாரணை நடத்தி, குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
“போலிநூல்களை விநியோகித்துக் கோடிக்கணக்கில் ஊழல் செய்தவர் யார்? இதன் பின்னணியில் இருக்கும் அரசியல் என்ன? யாருக்குப் பணம் போய்ச் சேர்ந்திருக்கிறது? இப்படி இன்னும் எத்தனை எத்தனை நூல்கள் விநியோகிப்பட்டிருக்கின்றன? ஊழலில் ஈடுபட்ட அனைவர் மீதும் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். விசாரணைக் குழு அமைத்து நடைபெற்ற மோசடிகளை மக்கள் பார்வைக்குக் கொண்டுவர வேண்டும். அதற்கு முன் அந்நூல்களை எல்லாம் நூலக அலமாரிகளில் இருந்து அகற்ற வேண்டும்.”
sindhai.com/essays/perumal-m…
நிதன் சிற்றரசு retweeted
எழுத்தாளர் பெருமாள் முருகன் கட்டுரையை அடுத்து கோவை பெரியார் அறிவுலக நூல்கள் குறித்து விவாதங்கள் எழுந்துள்ளன. 'கடந்த தி.மு.க ஆட்சியில்தான் கொள்முதலுக்கான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது' என்று அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
கடந்த தி.மு.க ஆட்சியில் அமைக்கப்பட்டுள்ள சென்னை அண்ணா நூலகம், மதுரை கலைஞர் நூலக நூல்களை நான் பார்வையிட்டுள்ளேன். எல்லாம் முக்கியமான நூல்கள். போட்டித்தேர்வர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் உள்ளிட்டோர் இந்த நூல்களின் மூலம் பலன் பெற்றுள்ளனர். அங்கே இதுபோன்ற டுபாக்கூர் நூல்கள் இல்லாதபோது, புதிதாக திறக்கப்பட்ட கோவை பெரியார் நூலகத்தில் மட்டும் எப்படி இந்த நூல்கள் இடம்பெற்றுள்ளன என்ற கேள்வி எழுகிறது.
நூல்கள் தேர்வுக்குழுவில் இடம்பெற்றுள்ளவர்களும் துறைசார்ந்த நிபுணர்கள். அவர்கள் இப்படியான தவறுகள் செய்ய வாய்ப்பில்லை. அதிகாரிகள் மட்டத்தில் ஏதோ தவறு நடந்திருக்கிறது. அது எந்த ஆட்சியில் நடந்தாலும் காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்
கோவை பெரியார் நூலகத்துக்கு கொள்முதல் செய்யப்பட்ட நூல்கள் மற்றும் பதிப்பகங்களின் பெயர்கள், சம்பந்தப்பட்ட அகல்விளக்கு பதிப்பகத்துக்கு நூல்கள் வாங்குவதற்கான ஆணை, அதைப் பரிந்துரைத்தவர்கள் பெயர் ஆகியவை பொதுவெளியில் வெளியிடப்பட வேண்டும் அல்லது நீதிமன்ற கண்காணிப்பில் ஒரு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும்.
நிதன் சிற்றரசு retweeted
மீனவக் குடும்பங்கள் கண்ணீரில் கதறி அழுதுகொண்டிருக்க, டம்மி CM சொகுசு ஆடம்பரக் கல்யாணத்தில் இருக்கிறார்.
உங்களுக்கு ஒன்று என்றால் உங்கள் விஜய் உங்களுடன் நிற்பேன் என்று சொன்னவர் எங்கே நிற்கிறார் பாருங்கள்!
#TVKFailsTN
நிதன் சிற்றரசு retweeted
#WATCH | "5ம் வகுப்புதான் படிச்சு இருக்கேன்.. முரசொலி படிச்சுதான் இவங்க எல்லாரையும் ஆள் ஆக்குனேன்"
திமுக எம்.பி. கனிமொழியை நேரில் சந்தித்த மதுரையை சேர்ந்த மூத்த திமுக உறுப்பினர் காசி உருக்கம்
#SunNews | #DMK | #Kanimozhi | #Chennai
நிதன் சிற்றரசு retweeted
Life has come full circle for Kasi thatha. Thank you so much for the love and respect you and Durga madam shared with Kasi thatha and all of us sir. An immensely moving moment! Thank you!!! 🖤❤️
வெறும் கொடியேந்தி நிற்பவர்களல்ல; கொள்கையேந்தி வாழ்பவர்கள்தான் தி.மு.க.வினர்! அதற்கு எடுத்துக்காட்டாகத் திகழும் மதிப்பிற்குரிய காசி அவர்களைச் சந்தித்தேன்.
தந்தை பெரியாரின் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு, முரசொலியைத் தனது அரசியல் பாடசாலையாக்கி, சாதி மறுப்புத் திருமணத்தை மனமுவந்து வரவேற்று, பெருமிதத்துடன் கொண்டாடிய அவரது கண்களில் கலைஞரின் சிரிப்பைக் கண்டேன்!
கொள்கைகள் என்பவை மேடைகளில் பேசுவதற்கு மட்டுமல்ல; வாழ்ந்து காட்டுவதற்கும் என்பதை உணர்த்தும் இலட்சக்கணக்கான காசிகளைக் கொண்டது திராவிட முன்னேற்றக் கழகம்!
உழைப்பாலும் தியாகத்தாலும் கழகத்தை வளர்த்தெடுத்த இத்தகைய தொண்டர்களின் வாழ்விலிருந்து, கழகத் தலைவரான நான் உட்பட, தலைமை முதல் கடைக்கோடித் தொண்டர் வரை, மூத்த முன்னோடிகள் முதல் புதிதாகக் களம் காணும் இளைஞர்கள் வரை, அனைவரும் கற்றுக்கொள்ள ஏராளம் இருக்கிறது!
அன்புநிறை காசி அவர்களை வழியனுப்பிய பின்னும், அவருடனான உரையாடல் உள்ளத்தில் தொடர்ந்துகொண்டே இருக்கிறது…
#DMKForever #Udanpirappu @krithika_writes
நிதன் சிற்றரசு retweeted
வெறும் கொடியேந்தி நிற்பவர்களல்ல; கொள்கையேந்தி வாழ்பவர்கள்தான் தி.மு.க.வினர்! அதற்கு எடுத்துக்காட்டாகத் திகழும் மதிப்பிற்குரிய காசி அவர்களைச் சந்தித்தேன்.
தந்தை பெரியாரின் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு, முரசொலியைத் தனது அரசியல் பாடசாலையாக்கி, சாதி மறுப்புத் திருமணத்தை மனமுவந்து வரவேற்று, பெருமிதத்துடன் கொண்டாடிய அவரது கண்களில் கலைஞரின் சிரிப்பைக் கண்டேன்!
கொள்கைகள் என்பவை மேடைகளில் பேசுவதற்கு மட்டுமல்ல; வாழ்ந்து காட்டுவதற்கும் என்பதை உணர்த்தும் இலட்சக்கணக்கான காசிகளைக் கொண்டது திராவிட முன்னேற்றக் கழகம்!
உழைப்பாலும் தியாகத்தாலும் கழகத்தை வளர்த்தெடுத்த இத்தகைய தொண்டர்களின் வாழ்விலிருந்து, கழகத் தலைவரான நான் உட்பட, தலைமை முதல் கடைக்கோடித் தொண்டர் வரை, மூத்த முன்னோடிகள் முதல் புதிதாகக் களம் காணும் இளைஞர்கள் வரை, அனைவரும் கற்றுக்கொள்ள ஏராளம் இருக்கிறது!
அன்புநிறை காசி அவர்களை வழியனுப்பிய பின்னும், அவருடனான உரையாடல் உள்ளத்தில் தொடர்ந்துகொண்டே இருக்கிறது…
#DMKForever #Udanpirappu @krithika_writes
குட்டி ஸ்டோரி..!
2024 ஆந்திரா சட்டமன்ற தேர்தலுக்கு பொறுப்பாளராக நம்ம @manickamtagore தான் நியமிச்சு இருந்தாங்க
158 தொகுதியில் 157 தொகுதி டெபாசிட் போய் 1.72% வாக்கு வாங்கி சாதிச்ச மகான்
2029 தமிழ்நாடு காங் மாநில தலைவராக சாதிக்க வாழ்த்துக்கள்
Details
nitter.cf/ImPrinze/status/207086…?
ஆந்திரப் பிரதேச நகர்ப்புற உள்ளாட்சித் (வாக்குச்சீட்டு முறையில் நடத்தப்பட்ட ) தேர்தலில், நாடாளுமன்ற எதிர்கட்சியான காங்கிரஸ் மொத்தமுள்ள 3942 வார்டுகளில் 72 வார்டுகளில் மட்டுமே போட்டியிட்டுள்ளது..
ஆனால் காங்கிரஸுக்கு கிடைத்தது பூஜ்ஜியம் (0) மட்டுமே!
@manickamtagore சாரே மாஸ் 👌
நிதன் சிற்றரசு retweeted
வரவேற்பு என வாரியணைத்துக் கொண்ட கோவை மக்களுக்கு நன்றி!
பெருமழையாய்ப் பொழிந்த உங்கள் பேரன்பைப் பெரும்பரிசெனப் பெற்று, கோவை மாவட்டத் தி.மு.க. புதிய அலுவலகக் கட்டடப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியுள்ளேன்.
#KovaiVisit @V_Senthilbalaji
நாங்க சிறுத்தைகள் இல்ல சில்லறைகள் என்று நிரூபிக்கிறானுங்க
அட அறிவு கெட்டவனே அரசு மற்றும் தனியார் பள்ளிகள் சார்பில் கல்வி சுற்றுலாவாக அண்ணா நூற்றாண்டு நூலகம், கலைஞர் நூற்றாண்டு நூலகம் எல்லாம் அழைத்து செல்வார்கள்
பெரியார் அறிவுலகம் திறந்துள்ளதால் சில பள்ளிகள் அழைத்து வந்து இருப்பார்கள்
உண்மையில் வெட்கப்பட வேண்டியது நேற்று முதல்வரை பார்க்க ஒரு கல்லூரி மொத்த மாணவர்களை அழைத்து வந்து ரோடு ஷோவுக்கு கூட்டம் கூட்டியது தான்
அதை விமர்சிக்கும் துணிச்சல் உனக்கோ, சோபா சொகுசில் இருப்பவர்களுக்கோ கிடையாது
போங்கடா போய் வருங்கால பிரதமர் வாழ்க சொல்லி இன்னொரு சோபா கிடைக்குமா பாருங்க
ஜெயிலர் - 2 திரைப்பட மூர்த்தியாகவே வாழும் மு.க.ஸ்டாலின்.
இன்று கோவையில் பெரியார் அறிவுலகத்தை பார்வையிட வந்திருக்கின்றார் Ex.MLA.முக.ஸ்டாலின் அவர்கள்.
முக.ஸ்டாலின் அவர்களை காட்சி பொருளாக காட்டுவதற்காக வழக்கம் போல் திமுகவினர் ஆட்களை திரட்டி அழைத்து வந்திருக்கின்றார்கள். அது ஆண்டாண்டு காலமாக நடைபெறும் திமுக'வுடைய பிம்ப அரசியல் தான். ஆனால் ஒரு தனியார் பள்ளி குழந்தைகளையும் அழைத்து வந்து ஆரவாரம் செய்ய வைத்திருக்கின்றார்கள் திமுகவினர்.
திரு மு.க.ஸ்டாலின் அவர்களும் கூட, நமக்கு மாணவர்களெல்லாம் தன்னெழுச்சியாக வந்து வரவேற்பு கொடுக்கிறார்கள் என கருதி கையசைத்துக் கொண்டிருக்கிறார். ஆளுங்கட்சியாக இருந்த பொழுது அரசு பள்ளி மாணவ மாணவிகளை அழைத்து வந்தார்கள் திமுக'வினர். அது அரசு நிகழ்ச்சி என எடுத்துக் கொள்ளலாம். ஆனால் இன்று அரசு பள்ளி மாணவ மாணவிகளை அழைக்க முடியாது என்று தனியார் பள்ளி குழந்தைகளை அழைத்து வந்து மு.க.ஸ்டாலின் அவர்களை காட்சி பொருளாக காட்டி இருக்கின்றார்கள் திமுகவினர்.
இவையெல்லாம் செட்டிங் அரசியல் என தெரியாமலேயே உற்சாகமாக ஜெயிலர்-2 மூர்த்தியாகவே முக.ஸ்டாலின் அவர்கள் கை அசைக்கின்றார்.
இன்னமும் கூட திமுக நிர்வாகிகளால்"தாம் ஏமாற்றப்பட்டு கொண்டிருக்கிறோம்" என்பதை அறியாத வெகுளியாக இருக்கின்றார் திரு முக.ஸ்டாலின் அவர்கள்.
என்னவென்று சொல்வது..! இன்னமும் கூட பட்டும் பாடம் படிக்கவில்லையே..!
குறிப்பு:- இன்று பள்ளி விடுமுறை நாள் இல்லை. ஆனாலும் கூட இன்றைய தினத்தில் அழைத்துவரப்பட்ட அந்த தனியார் பள்ளி மாணவ மாணவியர்கள் யார்.?? அந்த பள்ளி எந்த பள்ளி.?? பள்ளி வேலை நாட்களில் Ex.MLA ஒருத்தரை வரவேற்க குழந்தைகளை கட்டாயப்படுத்தியது தவறு.! எனவே பள்ளிக்கல்வித்துறை அந்த தனியார் பள்ளியின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@CMOTamilnadu @imrajmohan @AadhavArjuna
நிதன் சிற்றரசு retweeted
"தமிழா அறிவு கொள்!
பகுத்தறிவைப் பயன்படுத்து!
அறிவுதான் இறுதியில் வெல்லும்; உறுதியாய் வெல்லும்!" என்று சொன்ன பெரியாரின் #அறிவுலகம்-தான் இன்றும் என்றும் தேவை.
#PeriyarArivulagam #Kovai #Library
நிதன் சிற்றரசு retweeted
தமிழக வெற்றி கழகம் ஒரு வெற்றி பெற்ற பிஜேபி மாடலை தமிழ்நாட்டில் தற்போது பயன்படுத்துகிறார்கள்.
ஏராளமான இன்புளூயன்சர்ர்களுக்கு கொட்டி கொடுத்து எந்நேரமும் வெறுப்பை விதைத்துக் கொண்டே இருக்கிறார்கள்.
அவர்கள் கட்சியினர் எதைச் செய்தாலும் நார்மல் செய்வதற்கும் இந்த படை உதவுகிறது.
மம்மி படம் பார்த்திருப்பீர்கள். அதில் அந்த வில்லனின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஏராள விஷ ஜந்துக்கள் ஏற்படும் யாரையும் கொன்று தீர்த்து விட்டுப் போகும் அல்லவா அதுபோல அவர்கள் எந்த அறமும் நேர்மையும் இல்லாத பணத்திற்காக செயல்படும் பெரும் கூட்டத்தை வைத்திருக்கிறார்கள்.
முதலில் சினிமா துறையை அதன் மூலம் நிர்மூலமாக்கினார்கள். எல்லா படத்திற்கும் நெகட்டிவிட்டி பரப்பி ஓடாமல் செய்தார்கள்.
தற்போது சில படங்கள் ஓடுகிறது என்றால் அவர்களின் பார்வை அரசியல் பக்கம் திரும்பி இருப்பதால்தான்.
இப்போது எல்லா அரசியல் சித்தாந்தங்களையும் ஒழிக்க கிளம்பி விட்டார்கள்.
அடுத்து சர்வாதிகாரத்தை நோக்கி செல்வார்கள். கவனமாக இல்லாவிட்டால் தமிழ்நாட்டு மக்கள் என இனி தமிழ்நாட்டிற்கு வெளியே சென்று சொல்லிக்கொள்ளவே முடியாது.
நிதன் சிற்றரசு retweeted
மாண்புமிகு நிதியமைச்சர் அவர்கள், எனது பதிவில் என்ன குறிப்பிடப்பட்டிருக்கின்றது என்பதையே கருத்தில் கொள்ளாமல், வழக்கம் போல பதிலளிக்க முயன்றிருக்கின்றார்.
இந்த வருடம் அக்டோபர் மாதம் ஜிஎஸ்டி வரி வருவாய் 3% என்ற அளவில் மட்டுமே அதிகரித்துள்ளதை என்னுடைய பதிவிலேயே நான் தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ளேன். அதே வேளையில், இறக்குமதியினால் கிடைக்கும் வரி வருவாயினால்தான் ஒட்டுமொத்த வரி வருவாயில் உயர்வு காணப்படுகிறதே தவிர, மாநிலத்தின் சொந்த உற்பத்தி மூலம் ஈட்டப்படும் வரிவருவாயால் அல்ல என்பதையும் நான் எடுத்துக்காட்டி இருக்கின்றேன். அண்டை மாநிலங்களின் வருவாய் வளர்ச்சியோடு ஒப்பிடும்போது நாம் மிகப்பெரிய அளவில் பின் தங்கியிருக்கிறோம் என்ற உண்மையை ஒப்புக்கொண்டு, மாநிலத்தின் சொந்த உற்பத்தியையும், விற்பனையையும் பெருக்கிப் பொருளாதார மேம்பாட்டிற்கும், வேலை வாய்ப்புக்களுக்கும் வழிவகை காண அரசு முயற்சிக்க வேண்டுமே தவிர, புண்ணுக்குப் புனுகு பூச முயற்சிப்பதில் பயனேதுமில்லை.
தமிழகத்தின் ஜிஎஸ்டி வளர்ச்சி 3.5% ஆக உயர்வு... பழைய ஜிஎஸ்டி விவரங்களை வைத்துப் பேசுகிறார் தங்கம் தென்னரசு என்று அமைச்சர் மரிய வில்சன் விமர்சனம்!
#GST #TamilNadu #MariaWilson #ThangamThennarasu #TamilNaduPolitics #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்
நிதன் சிற்றரசு retweeted
வடசென்னை மக்களின் உணர்வாக நாடாளுமன்றத்தில் ஒலிக்கும் @DrKalanidhiV அவர்களது மகன் V.K.சித்தார்த் - S.ஆஷ்ரயா இணையரின் சுயமரியாதை திருமணத்தைத் தலைமையேற்று நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினோம்!
மணமக்களை வாழ்த்திய அதேவேளையில், தந்தை பெரியார் காலம்தொட்டு, சுயமரியாதை திருமண மேடைகளை அரசியல் - பகுத்தறிவூட்டும் மேடைகளாக மாற்றியதுபோல், கழகத்தினருடனான அரசியல் உரையாடல் நிகழ்ந்தேறியது.
இத்தகைய சுயமரியாதைத் திருமணங்கள் பெருகிட வேண்டும்! வீடுதோறும் மீண்டும் அறிவார்ந்த அரசியல் உரையாடல் நிகழ வேண்டும்!











































