Prabhakaran Kamaraj retweeted
தமிழ்நாடு நாள் வாழ்த்துகள்!
( நவம்பர் 01, 2026 | ஐப்பசி 15 )
உலகெங்கும் பரவி வாழும் என் உயிருக்கினிய தாய்த்தமிழ் உறவுகளுக்கு அன்பு வணக்கம்..!
உலகின் முதல் மொழியான தமிழ்மொழியை தாய்மொழியாக கொண்ட தொல்குடியான நம் தமிழினத்தின் தாயக நிலப்பரப்பு, தமிழ்நாடு என்கிற வரையறுக்கப்பட்ட நிலப்பரப்பாக மட்டும் இல்லாமல், தமிழர்கள் என்ற தனித்த தேசிய இனம் நிலைத்து வாழும் நிலப்பகுதியாகவும் இருந்து வருகிறது. தனக்கென தனித்த இலக்கண செறிவுமிக்க இலக்கியம், தொன்றுதொட்ட வரலாறு, கலை, பண்பாடு என வாழ்வியல் விழுமியங்கள் அத்தனையும் கொண்டு தமிழர் என்கின்ற தேசிய இனம் வரலாற்றுத் தொடர்ச்சியோடு இந்த நிலப்பரப்பில் வாழ்ந்து மற்ற தேசிய இனங்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்கின்றது.
இந்திய ஒன்றிய அரசு 1956ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தை மொழிவாரியாக பிரித்த நாளான ஐப்பசி 16 (01.11.1956) ஆம் நாள்தான் தமிழ்நாடு என்கின்ற நமது தாயக நிலம் சட்டப்படி வரையறுக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட திருநாளாகும். அதன்படி, சென்னை மாகாணத்திலிருந்த மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகள் பேசிய பகுதிகளைக் கொண்டு, கேரளா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா மாநிலங்கள் உருவாயின. இந்த உருவாக்கத்தின் போது தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளும் பக்கத்து மாநிலங்களுக்குத் தாரைவார்க்கப்பட்டு விட்டன. தொன்றுதொட்ட நம் வரலாறு நமக்கு வரையறுத்த தமிழக எல்லைகளை மீட்கும் போராட்டத்தில் எண்ணற்ற எல்லை மீட்புப் போராளிகள் உயிர்நீத்தனர். குமரித்தந்தை தாத்தா மார்சல் நேசமணி, வடவெல்லை காவலர் தாத்தா மா.பொ.சிவஞானம்தொடங்கி தெற்கெல்லை – வடக்கெல்லை காத்த போராளிகளின் தன்னலமற்ற ஈகம் காரணமாகப் பறிக்கப்பட்ட தமிழர் எல்லை பகுதிகளில் பெரும்பகுதி மீட்கப்பட்டது. தமிழ்நாடு, தமிழகம், தமிழர் தேயம் எனும் சொல்லாடல்கள் மூலம் முதுபெரும் காலத்திலேயே தமிழர் தாயகம் பெருமையோடு அழைக்கப்பட்டதையும் பழந்தமிழ் இலக்கியங்கள் நமக்கு அறியத் தருகின்றன.
சென்னை மாகாணத்திற்கு ‘தமிழ்நாடு’ எனப்பெயரிடக் கோரி, தனி நபராக பெருந்தமிழர் ஈகி தாத்தா சங்கரலிங்கனார் அவர்கள் 76 நாட்கள் சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டம் மேற்கொண்டு கோரிக்கை நிறைவேற்றப்படாமலே இறந்தார். அவருடைய ஈகம் ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவாக, அதன்பின் சென்னை மாகாண முதல்வராக இருந்த பேரறிஞர் அண்ணா அவர்கள் கடந்த 1968 ஆம் ஆண்டு தமிழர்கள் வாழ்ந்த சென்னை மாகாணப்பகுதியின் பெயரை ‘தமிழ்நாடு’ எனப் பழந்தமிழ் இலக்கியத்தில் உள்ளபடி மீண்டும் மாற்றினார்.
ஆங்கிலேயர் ஆட்சியில் நிர்வாக வசதிக்காக மெட்ராஸ் மாகாணம் என மற்ற தேசிய இனங்கள் வாழும் நிலப்பரப்போடு சேர்த்து நிர்வகிக்கப்பட்ட நம் தாய்நிலம் அவற்றிலிருந்து விடுபட்டு தமிழ்நாடு எனத் தனித்த பெருநிலமாக உருவெடுத்த நாளான ஐப்பசி 16 (01.11.1956) ஆம் நாளினை ‘தமிழ்நாடு நாளாக’ அறிவிக்க வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்களின் நீண்ட கால கோரிக்கையாகும். நாம் தமிழர் கட்சியும், தமிழ் அறிஞர் பெருமக்களுக்கும், தமிழ்த்தேசிய உணர்வாளர்களும் ஐப்பசி 16 (01.11.1956) ஆம் நாளினை தமிழ்நாடு நாள் என அறிவித்திட வேண்டுமென தொடர்ந்து குரல் எழுப்பி வந்தனர். அதன் விளைவாக கடந்த 2019ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசால் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி 15 (01.11.2019) ஆம் நாள் தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டது. பின்னர் வந்த திமுக அரசு தமிழ்நாடாய் மீண்டும் உருவெடுத்த நாளை விடுத்து, தமிழ்நாடு என மீண்டும் பெயர் வைத்த நாளை தமிழ்நாடு நாளாகக் கொண்டாடப்படும் என நம்முடைய கடுமையான எதிர்ப்பினையும் மீறி வலிந்து திணித்தது. அதையே தற்போதையே தவெக அரசும் அப்படியே தொடர்வதுதான் பெருங்கொடுமை.
தமிழ்த்தேசிய அரசியல் புத்தெழுச்சிப் பெற்று, புரட்சிகர அரசியல் மாற்றம் தமிழ் மண்ணில் ஏற்படும் நாளில் தமிழ்நாடு நாள் குழப்பநிலை துடைத்து எறியப்படும். உயிரினும் மேலான நமது தாயக நிலம் இந்திய ஒன்றிய அரசால் தனித்த மொழிவழி மாநிலமாக அங்கீகரிக்கப்பட்ட நாளையே தமிழ்நாடு நாளாக போற்றிக்கொண்டாடிட வேண்டியது ஒவ்வொரு தமிழரின் இனமானக்கடமையாகும். வழக்கம்போல இந்த ஆண்டும் நாம் தமிழர் கட்சி, ஐப்பசி 15 (01.11.2026) ஆம் நாளையே தமிழ்நாடு நாளாக தமிழ்நாடு முழுவதும் பேரெழுச்சியாகக் கொண்டாடவிருக்கின்றது.
ஆகவே, என் உயிருக்கினிய தம்பி தங்கைகள், தாய்த்தமிழ் உறவுகள் அனைவரும், தமிழர் தாய் நிலம், தமிழ்நாடாக உருப்பெற்ற ஐப்பசி 15 (01.11.2026) தமிழ்நாடு நாள் அன்று, தத்தம் பகுதியில் நம்முடைய மூவேந்தர்களின் இலட்சினைகளை பொறித்த தமிழ்நாட்டுக்கொடியை சிறு கொடிகளாக அச்சிட்டு கொடுத்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி, எல்லை மீட்புப் போராளிகளுக்கு மலர்வணக்கம் செலுத்தி பேரெழுச்சிமிக்கத் திருவிழாவாகக் கொண்டாடுவோம்!
அதோடு, நம்முடைய தாத்தா புரட்சிப்பாவலர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள், “மணக்க வரும் தென்றலிலே, குளிரா இல்லை? தோப்பில் நிழலா இல்லை! தணிப்பரிதாம் துன்பமிது தமிழகத்தின் தமிழ்த் தெருவில் தமிழ்தான் இல்லை”என்று வருந்திப்பாடி 70 ஆண்டுகளைக் கடந்தும், அதைவிட மோசமான அவலநிலை இன்றும் நீடிப்பதுதான் வரலாற்றுப் பெருந்துயரம். தமிழ்நாட்டில் தமிழ்த்தாய்க்கு நிகழ்ந்துவரும் அப்பேரவலத்தை, பெருந்துயரைத் துடைத்து, ‘எங்கும் தமிழ், எதிலும் தமிழ்’ என்ற நிலையை உருவாக்கிட தமிழ்நாடு நாள் அன்று, என்னுடைய உயிருக்கினிய உறவுகள், அன்புத்தம்பி தங்கைகள், அருகில் உள்ள சிறு கடைகள், வணிக நிறுவனங்கள் அனைத்திலும் தாய்த்தமிழில் பெயர்பலகை வைக்க அன்புடன் கோரிக்கை வைப்போம்.
தமிழ்நாடு முழுவதிலும் 234 சட்டமன்றத்தொகுதிகளிலும் வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர்ப்பலகை, அறிவிப்பு பலகை வைப்பதற்கான கோரிக்கையை துண்டறிக்கையில் அச்சடித்து அருகில் உள்ள அனைத்து கடைகளிலும் வழங்குவோம். அதனை நாம் பிறந்த பெருமைமிக்க தமிழ்ப்பேரினத்திற்கான இனமான கடமையாக எண்ணி தமிழ்நாடு நாளில் செயல்படுத்துவோம் என்று கூறிக்கொண்டு,
உங்கள் அனைவருக்கும் அன்பு நிறைந்த ‘தமிழ்நாடு நாள்’ வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பெரிதும் மகிழ்கிறேன்.
புரட்சி வாழ்த்துகளுடன்,
- சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
அரசியல்ல ஜெயிக்கிறோம் தோக்குறோம் அதெல்லாம் விடுங்க மக்கள் என்ன வேண்டுமானாலும் நினைச்சிட்டு போகட்டும் பிரச்சினை இல்லை...ஆனா நாம பிறவி கடன்னு ஒன்னு இருக்குல அதான் அண்ணன் சீமான் நேற்றும் செய்தார் இன்றும் செய்கிறார் நாளையும் செய்வார்...
Prabhakaran Kamaraj retweeted
இராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே உள்ள மணிமுத்தாறு நீர்நிலைப் பகுதிகளில் சுற்றுச்சூழல் சீர்கேடுகளை ஏற்படுத்தும் விதமாக கொட்டப்பட்டுள்ள நெகிழி மற்றும் திடக்கழிவுகளை அகற்றுவதற்கு, நாம் தமிழர் கட்சி சார்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் அனுமதி பெற்று, இன்று ஐப்பசி 10ஆம் நாள் 27-10-2026 தூர்வாரும் பணிகளைத் தொடங்கி வைத்தபோது,
ஒரு கிலோ அரிசி 1000 ரூபாய்க்கு விக்கனும் அப்பதான் புரியும் நம்முடைய அருமை என்னானு!!!...அவன் ஒரு ஆளு மயிருனு அவனுக்கு ஓட்டு போட்டு கூட சேந்து நம்ப தாலியையும் அறுக்குறான்ங்க... இதெல்லாம் பத்தாது இன்னும் நல்லா கதறுங்க குண்டில பாம் வெடிச்ச மாதிரி இன்னும் நல்லா கதறனும்...
Prabhakaran Kamaraj retweeted
#NTK_RestoringRivers
இயற்கையான நீர்வழிகள் சுருங்குவதும், அடைபடுவதும் மழைநீர் வெளியேற்றத்தைப் பாதிக்கின்றது. ஏற்கனவே, பெருமழையின் போது ஆற்றோரங்கரை குடியிருப்புகளில் மழைநீர் புகுந்துள்ளது. எனவே, பேரிடர் ஏற்படும் முன்பே நீர்வழிகளை மீட்டெடுத்து, அறிவியல் அடிப்படையிலான வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
@NTKEnvWing
Prabhakaran Kamaraj retweeted
அன்னைத்தமிழ் நிலம் அந்நிய ஆதிக்கத்தின் கீழ் அடிமைபட்டு விடக்கூடாது என்பதற்காக வீரம் செறிந்த விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்து, இழந்த நிலத்தை மீட்டெடுத்த எங்கள் வீரப்பெரும்பாட்டியார் வேலுநாச்சியார் அவர்களின் வீரமிகு வெற்றித்தளபதிகளாகத் திகழ்ந்தவர்கள் எங்கள் பாட்டன்கள் பெரிய மருதுவும், சிறிய மருதுவும்.
பிறகு நம்முடைய பாட்டியார் வேலுநாச்சியார் ஓய்வை நாடியபோது, இந்நாட்டைப் பாதுகாக்க மருது இருவரை விட்டால் வேறு எவர் இருக்கிறார் என்று பெருநம்பிக்கையுடன் மக்களிடத்திலே எடுத்துரைத்து, அவர்களிடத்திலே நாட்டை ஒப்படைத்துவிட்டுச் சென்றார்கள். சிவகங்கைச்சீமையின் காளையார்கோயிலைக் களமாகக் கொண்டு வேளாண்மைக்கு முக்கியத்துவம் கொடுத்து வீரப்பெரும்பாட்டன்கள் மாமன்னர்கள் மருதிருவர்கள் நடத்திய ஆகச்சிறந்த ஆட்சியில் ஏரும், போரும் சிறந்தோங்கியது எனவும், 200 ஆண்டுகளுக்கு முன்பே உலகின் மிகச் சுவையான ஆரஞ்சு பழங்கள் விளைவிக்கப்பட்டன என்பதும் வரலாறு!
ஆங்கிலேயர்களுக்கு எதிரான ஜம்புத்தீவு பிரகடனத்திலே எங்கள் பாட்டன் சிறிய மருது "எவனுக்கு ஐரோப்பிய இரத்தம் ஓடவில்லையோ, அவனெல்லாம் என்னோடு போருக்கு வா!" என்று அறைகூவல் விடுத்து, படையை நடத்தி போகும்போது விடுதலை உணர்வோடு உழைக்கும் உழவர் குடிமக்கள் பலரும் படையில் திரண்டு பெரும்படையாக உருவெடுத்ததனால் தான் 150 நாட்கள் இடைவிடாமல் வீரப்போரிட்டுள்ளனர்.
இறுதியில் துரோகத்தால் வீழ்த்தப்பட்டு, கைது செய்யப்பட்டபோது, மண்டியிட மறுத்து தூக்குக் கயிற்றைத் துணிந்து ஏற்றவர்கள் எங்கள் மருதிருவர்கள்! "அடிமை வாழ்வினும் உரிமைச்சாவு மேலானது!", "சரணடைந்து வாழ்வதை விடச் சண்டையிட்டுச் சாவதே மேலானது!" என்று தான் எம்மின முன்னோர்களின் வரலாற்று வழித்தடங்கள் எங்களுக்குக் கற்பிக்கின்றன. அதே வழியில் தான் எங்கள் தலைவரும் கிளர்ந்தெழுந்து எம்மின விடுதலைக்குப் புரட்சி செய்தார். அதனால் தான் "ஒரே இரத்தம்! அதே வீரம்!" என்று நாங்கள் முழங்குகிறோம்!
இன்று எங்கள் நிலமெங்கும் மலை வளம், நில வளம், மணல் வளம், நீர் வளம், கனிம வளம் என அனைத்தும் கண்முன்னே களவு போய்க்கொண்டு இருக்கிறது. இந்த நிலத்தைக் காக்க எங்கள் முன்னோர்கள் செய்த உயிரீகங்கள் வீணாகாமல் இருக்க, களத்தில் நின்று போராடி மீட்டு அடுத்தத் தலைமுறைக்குப் பாதுகாப்பாகக் கையளிப்போம் என்கிற உறுதியை வீரப்பெரும்பாட்டன்களின் நினைவைப் போற்றுகின்ற இந்நாளில் ஏற்போம்.
உலகத்தமிழ் மக்களின் உணர்வோடு இணைந்து நம் வீரப்பெரும்பாட்டன்கள் மருது பாண்டியருக்கு நம்முடைய வீரவணக்கத்தைச் செலுத்துவோம்!
வீரப்பெரும்பாட்டன்கள் மருது பாண்டியர் வீரப்புகழ் போற்றுவோம்!
நாம் தமிழர்!
Prabhakaran Kamaraj retweeted
முதல்வர் விஜய் குறித்துப் பேசிய நயினார் நாகேந்திரனின் பேச்சை ஆய்வுசெய்து வருவதாகக் கூறியிருக்கிறார் அமைச்சர் ரமேஷ்.
சிரமம் புரிகிறது!
'பாகுபலி' படத்தில் காளகேயர்கள் பேசிய மொழியில் நயினார் நாகேந்திரன் விஜய்யை விமர்சித்துவிட்டதால், நடவடிக்கை எடுக்க முடியாது திணறி வருகிறது காவல்துறை; முழுமையானப் பொருள் புரியாது, இரண்டு மாதங்களாகப் பேச்சை ஆய்வுசெய்து வருகிறது உளவுத்துறை.
ஆகவே, பாகுபலியாலும், பல்வாள்தேவனாலும் கொல்லப்படாது காளகேயர்கள் இனத்தில் எவராவது மிச்சமிருந்தால் நயினாரின் பேச்சை தமிழில் மொழிபெயர்த்துக் கூறி, அவர் மீது வழக்குத் தொடர உதவ வேண்டுமென காளகேயப் பெருமக்களைத் தாழ்மையோடு கேட்டுக் கொள்கிறோம்.
Prabhakaran Kamaraj retweeted
அரசியல் பழிவாங்கும் நோக்கோடு பொய் வழக்குப் புனைந்து தங்கை கார்த்திகா உள்ளிட்ட நாம் தமிழர் உறவுகளைக் கைதுசெய்திருப்பது தவெக அரசின் கீழ்த்தரமான அரசியல்! அதிகாரம் நிலையானதல்ல எந்த ஆட்சியும் நிரந்தரமானதல்ல! இந்த ஆட்சியும், அதிகாரமும் வீழும் நாள் வெகுதொலைவில் இல்லை!
@CMOTamilnadu @TVKVijayHQ
தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிட்ட தங்கை கார்த்திகாவையும், அவரது கணவர் முருகசந்திரகுமார் உள்ளிட்ட 7 நாம் தமிழர் உறவுகளை பொய் வழக்கில் அரசியல் பழிவாங்கும் நோக்கோடு கைதுசெய்திருக்கும் தவெக அரசின் செயலை மிகக் கடுமையாகக் கண்டிக்கிறேன். தேர்தல் கால வழக்குக்குக் கைது நடவடிக்கை மேற்கொண்டு சிறைப்படுத்துவது பாசிசத்தின் உச்சம்.
தாராபுரம் இடைத்தேர்தலின் கடைசிநாள் பரப்புரைக்கு நாம் தமிழர் கட்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டதனால் விஜய் சாலைவலம் சென்ற வழியில், தங்கை கார்த்திகா நாம் தமிழர் உறவுகளோடு போராட்டம் நடத்தினார் என்கிற காரணத்திற்காகக் குறிவைத்து, இப்போது கைதுசெய்து பழிவாங்கத் துடிப்பது கீழ்த்தரமான அரசியல் இல்லையா? இந்த இழிவான அரசியலைச் செய்வதற்குத்தான் தூய சக்தி என மேடைதோறும் சுயதம்பட்டம் அடித்தீர்களா முதல்வர் விஜய் அவர்களே?
மாநிலம் முழுமைக்கும் சட்டம் ஒழுங்கும், பொது அமைதியும் மொத்தமாகச் சீர்குலைந்துப் போயிருக்கும் தற்காலச் சூழலில், அவற்றைச் சரிசெய்ய காவல்துறையைப் பயன்படுத்தத் துப்பில்லாத முதல்வர் விஜய், அரசியல் பழிவாங்கலுக்காகப் பொய்யாக வழக்கைப் புனைந்து தங்கை கார்த்திகாவைக் கைதுசெய்வதெல்லாம் மிகக் கேவலமான அரசியல் இல்லையா?
நாகையில் சொந்தக்கட்சி நிர்வாகி 100 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் போருளைக் கடத்த முற்பட்டபோது, அதனை முன்கூட்டியே கண்டறிந்து கைதுசெய்ய வக்கில்லாத தவெக அரசின் காவல்துறை, ஆளுங்கட்சியின் ஏவல் படையாகச் செயல்பட்டு அரசியல் பழிவாங்கலுக்குத் துணைநிற்குமென்றால், இதுதான் மாற்று அரசியலா? கட்சியின் பெண் நிர்வாகியிடம் பாலியல் தொந்தரவு செய்த இராணிப்பேட்டை மாவட்டச் செயலாளர் விஜய் மோகன் மீது பாயாத கைதுநடவடிக்கை, செய்தியாளர்களைத் தாக்கிய சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் கபில் மீது பாயாத கைது நடவடிக்கை, திருவைகுண்டத்தில் பெண்ணைக் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்வதற்குச் சூத்திரதாரியாகச் செயல்பட்ட சட்டமன்ற உறுப்பினர் சரவணன் மீது பாயாத கைதுநடவடிக்கை, அறவழியில் போராடிய தங்கை கார்த்திகா உள்ளிட்ட நாம் தமிழர் உறவுகள் ஏழு பேர் மீது பாயுமென்றால், நடப்பது மக்களுக்கான ஆட்சியா?
திராவிடக்கட்சிகள் முந்தைய ஆட்சிக்காலங்களில் செய்த அதே தவறுகளைத்தான் தவெக அரசும் செய்யுமென்றால், இது நல்லாட்சியா? கேடுகெட்ட காட்டாட்சி! அதிகாரத்திமிரிலும், பதவி தரும் மமதையிலும், புகழ்போதையிலும் முதல்வர் விஜய் இன்றைக்கு மனம்போன போக்கில் ஆட்டம் போடுவாரென்றால், இதேபோல ஆட்டம்போட்ட ஆட்சியாளர்கள் எல்லாம் என்ன ஆனார்கள்? எனக் கொஞ்சம் வரலாற்றைப் பின்னோக்கிப் பார்த்துத் தெரிந்துக் கொள்ளட்டும். ‘நிரந்தர முதல்வரே!’ என உங்கள் கட்சியினர் புகழ்கிறார்கள் என்பதற்காக, இந்த ஆட்சியும், அதிகாரமும் நிலையானது எனும் முடிவுக்கு வந்துவிட்டீர்களா முதல்வர் விஜய் அவர்களே!
உங்கள் அடக்குமுறைக்கும், ஒடுக்குமுறைக்கும் என்னுடைய தம்பி, தங்கைகள் பயந்து ஒதுங்கிவிடுவார்கள் என நினைத்தீர்களா? ஐயா கருணாநிதிக்கும், அம்மையார் ஜெயலலிதாவுக்கும் நீங்கள் பயந்து நடுங்கிய காலத்திலேயே எதிர்த்து நின்று அரசியல் செய்து, சண்டையிட்டவர்கள் நாங்கள். வழக்கு இல்லையென்றால், விடியாது கிழக்கு என்று சொல்லித்தான் என்னுடைய பிள்ளைகளை நாளும் வளர்த்திருக்கிறேன். கரூர் பேரவலத்தின்போது ஒரு மாத காலம் வழக்குக்கும், கைதுக்கும் பயந்துகொண்டு நீங்களும், உங்கள் கட்சியின் மொத்த நிர்வாகிகளும் ஓடி ஒளிந்து கொண்டீர்களே, அப்படி எந்நாளும் என்னுடைய தம்பி, தங்கைகள் ஓடி ஒளிந்தது இல்லை. உங்கள் அடக்குமுறைகளால் எங்கள் மனவலிமையை அணுவளவுகூட அசைத்துப் பார்த்திட முடியாது. ஐந்து மாதகால ஆட்சியிலேயே ஆயிரத்தெட்டு நிர்வாகச்சீர்கேடுகளும், குளறுபடிகளும், குழப்பங்களும் தலைவிரித்தாடி, ஆட்சி நிர்வாகம் தறிகெட்டுப்போய், சகித்துக் கொள்ள இயலாது மக்கள் வீதிக்கு வந்துப் போராடுகையில், அவற்றைச் சரிசெய்ய முயற்சி எடுக்காத தரங்கெட்ட தவெக அரசு, அரசியல் பழிவாங்கலுக்காகத் தன்னுடைய கவனத்தைச் செலுத்துமென்றால், இந்த ஆட்சியும், அதிகாரமும் வீழும் நாள் வெகுதொலைவில் இல்லை.
பொய் வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள தங்கை கார்த்திகா, அவருடைய கணவர் முருக சந்திரகுமார் உள்ளிட்ட நாம் தமிழர் உறவுகள் அனைவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டுமென தவெக அரசை வலியுறுத்துகிறேன். இல்லையெனில், அதற்கான எதிர்விளைவுகளை உறுதியாகச் சந்திக்க நேரிடுமென எச்சரிக்கிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
Prabhakaran Kamaraj retweeted
சென்னையில் ரயிலில் இருந்து ராஜபாளையம் சென்று கொண்டிருந்த மாநில ஒருங்கிணைப்பாளர் இசை மதிவாணன் அவர்களை நடுஇரவில் விருதுநகரில் ரயிலிலிருந்து இறக்கி கைது செய்திருக்கிறது தவெக அரசு..
அதிகார மமதையில் ஆடும் இந்த ஆட்டத்திற்கு முடிவு கட்டும் நாள் வெகு தொலைவில் இல்லை..
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அண்ணா ♥️ @Saattaidurai
Prabhakaran Kamaraj retweeted
தமிழ்நாட்டு அரசு மருத்துவர்களுக்கு சேர வேண்டிய 151 முதுநிலை மருத்துவ இடங்களை ஒன்றிய ஒதுக்கீட்டிற்கு தாரைவார்த்துட்டு, அதில் 50% மீள கிடைக்கும் என்ற தீர்ப்பை தவெக அரசு வெற்றி என்று கொண்டாடுவது வெட்கக்கேடானது!
@CMOTamilnadu @TVKVijayHQ
தமிழ்நாட்டு அரசு மருத்துவர்களுக்கு சேர வேண்டிய 151 முதுநிலை மருத்துவ இடங்களை ஒன்றிய ஒதுக்கீட்டிற்கு வழங்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தவெக அரசு வலுவான வாதங்களை எடுத்து வைக்கத்தவறி, இடங்களை பறிகொடுத்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது. உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு சார்பாக முன்நின்று வாதங்களை முன்வைக்கக்கூட தவறியுள்ளது தமிழ்நாட்டின் உரிமையைத் தாரைவார்க்கும் பெருங்கொடுமையாகும்.
தமிழ்நாட்டிலுள்ள அரசு மருத்துவக்கல்லூரிகளில் முதுநிலை மருத்துவப் படிப்பிற்கு மொத்தம் 415 இடங்கள் உள்ளன. அவற்றில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு, முதுநிலை மற்றும் பல்நோக்கு சிறப்பு மருத்துவப் படிப்புகளில் வழங்கப்பட்டு வந்த 50% இடஒதுக்கீடானது, நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர், இந்திய ஒன்றிய அரசால் தொடுக்கப்பட்ட வழக்கின் காரணமாக, கடந்த 2017ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலம் நீக்கப்பட்டது. அதனை எதிர்த்து, 2018ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் சார்பில் இந்திய மருத்துவ கழகத்திற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. நீண்டகால சட்டப்போராட்டத்தின் விளைவாக, கடந்த 2020ஆம் ஆண்டு அரசு மருத்துவர்களுக்கு 50% ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பினை உச்சநீதிமன்றம் வழங்கியது. அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு அரசாணை எண் 462ஐ பிறப்பித்து, முதுகலை மருத்துவ படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50% இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தியது. ஓய்வு பெறும் வரை அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டிய கட்டுப்பாட்டில் உள்ள அரசு மருத்துவர்களுக்கான இடஒதுக்கீடு என்பது வெறும் கல்வி வாய்ப்பு அல்ல; அது மாநிலத்தின் பொது சுகாதார கட்டமைப்பை பாதுகாக்கும் உயர்நோக்கு கொள்கையாகும்.
ஆனால், நடப்பு கல்வியாண்டிற்கான முதுநிலை மருத்துவப் படிப்புச் சேர்க்கையில், அரசு மருத்துவர்களுக்காக ஒதுக்கப்பட்ட 219 இடங்களில், நிரப்பப்படாத 151 இடங்களை அனைத்திந்திய ஒதுக்கீட்டிற்கு மாற்ற, கடந்த 29.05.2026 அன்று உச்சநீதிமன்றம் இட்ட உத்தரவினால், தமிழ்நாடு அரசு மருத்துவர்களின் உயர்கல்வி உரிமை மீண்டும் பறிக்கப்பட்டது. தவெக அரசின் அலட்சியத்தால் 151 மருத்துவ இடங்கள் பறிபோவதை கடுமையாக கண்டித்து கடந்த 03.06.2026 அன்று அறிக்கை வெளியிட்டதோடு, நீட் மதிப்பெண் வரம்பு குறைப்புக்காக தமிழ்நாட்டில் நூற்றுக்கணக்கான அரசு மருத்துவர்கள் காத்திருக்கும் சூழலில், இந்திய ஒன்றிய அரசு மாநில அரசுக்கு சொந்தமான உயர் மருத்துவ இடங்களை நீதிமன்றத்தின் மூலம் பறிக்கும் சூழ்ச்சியை தமிழ்நாடு அரசு சட்டப்போராட்டம் நடத்தி தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தேன். ஆனால் அதன் பிறகும் திறமையான மூத்த வழக்கறிஞர்களை நியமித்து, வழக்கினை திறம்பட தவெக அரசு நடத்தாதன் விளைவே தற்போது மீண்டும் தனது தீர்ப்பினை உச்சநீதிமன்றம் உறுதி செய்ய முதன்மைக்காரணமாகும்.
கடந்த சில ஆண்டுகளாக இந்திய மருத்துவ ஆலோசனைக் குழு (MCC) மருத்துவக் கலந்தாய்வு நீட் மதிப்பெண் வரம்பினை (NEET cut-off percentile) தொடர்ந்து குறைத்து வந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளில் அது முற்றிலுமாக (Zero percentile) குறைக்கப்பட்டது. ஆனால் இந்திய மருத்துவ ஆலோசனைக் குழு இந்த ஆண்டு திட்டமிட்டு நீட் மதிப்பெண் (cut-off) குறைப்பு அறிவிப்பை வேண்டுமென்றே வெளியிடாமல் தாமதப்படுத்தி, அனைத்திந்திய இரண்டாம் சுற்று கலந்தாய்வையும் நீட்டித்தது. அதன் மூலம் தமிழ்நாட்டில் காலியாக உள்ள சேவை இடங்களை இந்திய ஒதுக்கீட்டில் சேர்க்க முயன்று, அதனை உச்சநீதிமன்ற வழக்கின் மூலம் சாதித்தது. அதனை தனது வாதத்தில் சுட்டிக்காட்டி தமிழ்நாடு அரசு மருத்துவர்களுக்கு கிடைக்க வேண்டிய இடங்களை முழுமையாக மீண்டும் திருப்பித்தர வேண்டும் என்ற உத்தரவை தமிழ்நாடு அரசு பெற்றிருக்க வேண்டும். அதனை விடுத்து, ஒருவேளை இரண்டாம் சுற்று கலந்தாய்வும் முடிந்து, நீட் மதிப்பெண் வரம்பினைக் குறைக்க நேரிட்டால், அப்போது 50% இடங்களை அதாவது 151 இல் பாதி இடங்களை மாநில அரசு ஒதுக்கீட்டிற்கு தர வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஏதோ மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுபோல அமைச்சர் அருண்ராஜ் கொண்டாடுவது வெட்கக்கேடானது. இதுதான் தவெக அரசு தமிழ்நாட்டு உரிமைகளைக் காக்கும் முறையா?
உண்மையில் தமிழ்நாட்டு மருத்துவர்களுக்கு சேர வேண்டிய 151 இடங்கள் பறிபோயுள்ளது. அதில் பாதி, அதாவது 151 இடங்களில் நிரம்பியதுபோக, மீதமுள்ள இடங்களில் பாதி இடங்கள், அதுவும் நீட் மதிப்பெண்ணைக் குறைக்க நேரிட்டால் மட்டுமே கிடைக்கும் சாத்தியம் உள்ளது. ஆனால், NEET SS cut-off குறைப்பு பொதுவாக மூன்றாம் சுற்று கலந்தாய்வின் போது அறிவிக்கப்படுவதால், அதற்குள் இந்த 151 இடங்களில் பெரும்பாலானவை அரசு சாரா (Non-Service) மருத்துவர்களால் நிரப்பப்பட்டிருக்கும். எனவே, அவை உச்சநீதிமன்றம் 75 இடங்களை ஒப்படைக்க உத்தரவிட்டிருந்தாலும், அதுகூட மீண்டும் கிடைக்கும் வாய்ப்பு மிகமிக குறைவே. தமிழ்நாட்டின் உரிமையை இழந்துள்ளோம் என்பதைக் கூட அறியாமல், அதனை ஏதோ பெரிய சாதனை போல தவெக அரசு கொண்டாடுவதுதான் மிகுந்த வேதனைக்குரியதாகும். 151 உயர் சிறப்பு மருத்துவ இடங்களை இழப்பது என்பது வெறும் அரசு மருத்துவர்களுக்கான இழப்பு மட்டுமல்ல; எதிர்காலத்தில் தமிழக மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய 151 உயர்சிறப்பு அரசு மருத்துவர்களை இழப்பதாகும்.
ஆகவே, தமிழ்நாடு அரசு உடனடியாக உச்சநீதி மன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்து, நம்முடைய அரசு மருத்துவர்களின் உயர் மருத்துவப் படிப்பிற்கான இட ஒதுக்கீட்டை பாதுகாக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
நமது கடையில் எந்த மொபைல் வாங்கினாலும் நிச்சய பரிசு உண்டு..
#kpmobilesariyalur #kpmobiles #mobiles #tn61 #ariyalur
























